Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்குரிய குணங்கள் என்ன..?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13டை கூட்ட வாற 4ம் நம்பர் சரியில்லையெண்டுறாங்கள் ...உண்மையோ?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் முதல்பாதிக்குத்தான் பிறந்த திகதி எண் செல்லுபடியாகும். :D பிறகாலத்திற்கு (தோராயமாக ஒரு 30க்குப் பின்) கூட்டு எண்தான் செல்லுபடியாகும்.

1,4,7 எண்கள் அலைச்சல் பிடிச்ச எண்கள்.. :unsure: சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். கடின பிரயர்த்தனம் செய்துதான் பலவற்றை சாதிக்க வேண்டி இருக்கும். கூட்டு எண் 4 இல் உள்ளவர்கள் பிற்காலத்தில் அலைந்து திரிவதையும் கண்டிருக்கிறேன். :o

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் முதல்பாதிக்குத்தான் பிறந்த திகதி எண் செல்லுபடியாகும். :D பிறகாலத்திற்கு (தோராயமாக ஒரு 30க்குப் பின்) கூட்டு எண்தான் செல்லுபடியாகும்.

1,4,7 எண்கள் அலைச்சல் பிடிச்ச எண்கள்.. :unsure: சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். கடின பிரயர்த்தனம் செய்துதான் பலவற்றை சாதிக்க வேண்டி இருக்கும். கூட்டு எண் 4 இல் உள்ளவர்கள் பிற்காலத்தில் அலைந்து திரிவதையும் கண்டிருக்கிறேன். :o

 

அதே

30.09.1963

 

3

4.... :(

  • கருத்துக்கள உறவுகள்

அதே

30.09.1963

 

3

4.... :(

 

இதை தவிர்க்ககதான் உங்கள் பெயரை 4 க்கு நட்பான இலக்கத்தில் மாற்ற வேண்டும். அதுமட்டுமல்ல அப்பெயர்  vibration  கூடியதாக இருக்க வேண்டும். பெயர் ஒரு பவர்ஃபுல் சாமன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர் பக்கெண்டு பெயரை மாத்துங்கோ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் முதல்பாதிக்குத்தான் பிறந்த திகதி எண் செல்லுபடியாகும். :D பிறகாலத்திற்கு (தோராயமாக ஒரு 30க்குப் பின்) கூட்டு எண்தான் செல்லுபடியாகும்.

1,4,7 எண்கள் அலைச்சல் பிடிச்ச எண்கள்.. :unsure: சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். கடின பிரயர்த்தனம் செய்துதான் பலவற்றை சாதிக்க வேண்டி இருக்கும். கூட்டு எண் 4 இல் உள்ளவர்கள் பிற்காலத்தில் அலைந்து திரிவதையும் கண்டிருக்கிறேன். :o

 

ஈழத் தமிழர்கள் அத்தனைபேருடைய கூட்டு எண்களும் 4லாஆஆஆஆஆஆ. அடக் கடவுளே ! :o  :o  

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா

பி.தி 26

கூ.எண் =8

ராசி-கும்பம் இங்க என்ன பிரச்சனை எண்டா எல்லா இடத்திலும் ராசா சனி தான்.ஒரு பக்கத்தாலயும் நான் தப்பி ஓடேலாது.

அட போங்கப்பா

பி.தி 26

கூ.எண் =8

ராசி-கும்பம் இங்க என்ன பிரச்சனை எண்டா எல்லா இடத்திலும் ராசா சனி தான்.ஒரு பக்கத்தாலயும் நான் தப்பி ஓடேலாது.

 

முன் நம்பரும் 8 பின் நம்பரும் 8 ஆஆஆஆ?   :wub:  :)  சொல்லி வேலையில்லை :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பிறந்த எண்ணும் கூட்டெண்ணும் 5........பெயர் எண் 1லை வருது...ஆராவது சாத்திரம் சொல்லுங்கோப்பா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

முன் நம்பரும் 8 பின் நம்பரும் 8 ஆஆஆஆ?   :wub:  :)  சொல்லி வேலையில்லை :lol::icon_idea:

 

 

இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்

சொன்னால் உசாராகிவிடுவார் என்பதால்

சொல்லாமல்

இனி  நான் தள்ளி  நிற்கும் முடிவை எடுத்துவிட்டேன்.... :lol:  :D

என்ரை பிறந்த எண்ணும் கூட்டெண்ணும் 5........பெயர் எண் 1லை வருது...ஆராவது சாத்திரம் சொல்லுங்கோப்பா.... :D

 

http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89712:D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எண் ஐந்து 5
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!

எண் ஐந்தைப் பற்றிய எண் ஜோதிடம்!

------------------------------------------------------------

எண் 5 புதனுக்கு உரியது. இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள்.

இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும். வாழ்க்கையில் வெற்றியாளனாகவும், புகழ் மிக்கவர்களாகவும் வலம் வருவார்கள்.

5, 14, 23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்த எண்ணிற்கு உரியவர்கள். பிறப்பு எண் 5 வந்தாலும் சரி அல்லது கூட்டல் எண் (விதி எண்) 5 வந்தாலும் சரி, அவர்களுக்கு இந்தக் குணாதிசயங்கள் இருக்கும்.

மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். இன்றைய விஞ்ஞான உலகத்தின் பல சாதனைகள் எல்லாம் பெரும்பாலும் இந்த எண்ணிற்கு உரியவர்களால் ஏற்பட்டதுதான்.

இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள். சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும். அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும்.

இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். அதில் நுழைந்து, தங்களுடைய ஆற்றலைக் காட்டினால் ஆதீதப் பொருள் குவியும் அல்லது அதிக அளவில் செல்வம் சேரும். அதனால்தான் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போன்றது என்று சொல்லப்படுகிறது.

இந்த எண்காரர்களின் வீக்னெஸ் என்ன? வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள். மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்கள், பொதுவாகத் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பிரபலமடைவார்கள்

ஐந்தாம் எண்ணில் பெயரை உடையவர்கள், அல்லது பெயரை உடைய நிறுவனங்கள் மற்றவர்களை ஈர்க்கும்படியாக இருக்கும். அதன் காரணமாகவே வெற்றிபெற நினைக்கும் பலர் இந்த எண்ணில் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள். தோல்வி என்பது இருக்காது. இருந்தாலும், வாங்கிய அடியை மறந்துவிட்டு, எழுந்து போராடி, வெற்றியடைவார்கள்.

மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள்

மனைவியாக வருபவளும், இவர்களுடைய இந்த குணத்தை அறிந்துகொண்டு, இவர்களுக்குத் தகுந்தமாதிரி விதம் விதமாகப் பணிவிடை செய்ய வேண்டும். முக்கியமாக இவர்களை விதம் விதமாகக் கொஞ்சி உறவாட வேண்டும்:-)))

She has to display her affection in different ways and She has to retain his affection by cooking tasty dishes, and impress him with changes in her personality.

தொழில் அல்லது வியாபாரத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். நிறைய சம்பாதிப்பார்கள். நிறைய செலவும் செய்வார்கள்.

ஐந்தாம் எண்ணில் பிறந்ததோடு மட்டும் அல்லாமல், ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றும் இருந்தால், அதீதப் பணம், பெயர், புகழ் என்று எல்லாவற்றையும் தேடிப்பிடிப்பார்கள். புதிய யுக்திகளை உபயோகித்து வழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். போற்றக்கூடிய, நினைவில் வைக்கக்கூடிய, பல செயல்களைச் செய்வார்கள்

இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள். அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள்.

5, 14, 23 ஆகிய தேதிகளும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இவர்களுக்கு உகந்த நாட்களாகும். Light grey, white, Light shades ஆகிய நிறங்கள் உகந்த நிறங்களாகும். இருட்டான நிறங்களை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிறந்த கல் பச்சை நிறக்கல் - மரகதம் emerald

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள்

கவியரசர் கண்ணதாசன் மொழியில் இவர்களைப் பற்றிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்:

"என்னைத் தெரியுமா..... ?

என்னைத் தெரியுமா..

நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்

ரசிகன் என்னைத் தெரியுமா..

உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்

கவிஞன் என்னைத் தெரியுமா..

ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்

நல்ல ரசிகன் நல்ல ரசிகன்

உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்

நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து

அன்பில் வாழ்பவன்

ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..

வாழ்வை சோலையாக்கலாம்..

இந்தக் காலம் உதவி செய்ய

இங்கு யாரும் உறவு கொள்ள

அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை

அளந்து பார்க்கலாம்

இசையிலே மிதக்கலாம்

எதையுமே மறக்கலாம்

( என்னை )"

 

இதென்ன  குமாரசாமியண்ணை  தனக்குக்கேட்டால்

என்னைப்பற்றி  போடுகிறீர்கள்...?? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள். 

கவனமா இருக்கவேணும் போலை இருக்கே.. :o:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை பிறந்த எண்ணும் கூட்டெண்ணும் 5........பெயர் எண் 1லை வருது...ஆராவது சாத்திரம் சொல்லுங்கோப்பா.... :D

 

பெயர் கூட்டு எண்: 1

பலன்கள்

பெயர் எண்:  1

பெயர் எண் கூட்டுத்தொகை :  10

10ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் கண்ணியமும், கீர்த்தியும் உடையவர்கள். வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட மாற்றங்கள் ஏற்படும். எளிதாகப் பிரபலம் அடைவர். எனவே, இவர்களுடைய நடவடிக்கைகள் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. ஒருநாளும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.

பெயர் எண் கூட்டுத்தொகை :  19

19ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து மேன்மை அடைந்துகொண்டே இருக்கும். பதவி, கௌரவம், மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் எல்லாம் அதிகரித்துக்கொண்டே போகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வயோதிகத்திலும் இளைஞர்களைப் போலச் சுறுசுறுப்பாக இருப்பர். இவர்களுடைய நேர்மையே இவர்களுக்கு வெற்றி அளிக்கும்.

பெயர் எண் கூட்டுத்தொகை :  28

28ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் போட்டியும் சிரமமும் அதிகரிக்கும். வாழ்க்கையைத் திரும்பத் திரும்பத் தொடங்க நேரும். பலர் மிக வேகமாக முன்னேறுவர்; ஆனால், கடைசியில் எல்லாவற்றையும் இழக்க நேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடனை வசூலிப்பது கடினம். கஷ்டப்பட்டுச் சேர்த்த பொருள்களையெல்லாம் எதிர்பாராமல் இழக்கநேரும்.

பெயர் எண் கூட்டுத்தொகை :  37

37ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் வசீகரத்தையும், காதலில் வெற்றியையும் பெறுவர். தங்களுடைய அந்தஸ்திற்கு மேற்பட்டவர்களால் விரும்பப்படுவர். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் அதிக உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் முன்னேற்றம், வியாபாரத்தில் அதிர்ஷ்டம். பலவித முயற்சிகளால் பொருள் சேர்க்கை. கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். கவர்ச்சியான நடை, உடை, பாவனைகளும், வாக்குச் சாதுர்யமும் உண்டாக்கும்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 46

46ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களும் அரசாளும் பதவிக்கு உயர வாய்ப்பு உண்டு. வயது ஏற, ஏற செல்வமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். இவர்களுடைய நடவடிக்கைகளில் நேர்மை இருக்க வேண்டியது அவசியம்.

 பெயர் எண் கூட்டுத்தொகை : 55

பெயர் கூட்டு எண் 55 ஆனால் ஒருவர் அறிவினால் பிரமிக்கச் செய்து எல்லோரையும் வெற்றி கொள்ளுவார். இவர்கள் அறிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். மேதா விலாசம் உண்டாகும். அறிவு மின்னல்போல ஒளிவீசும். சரியான வழியில் பயன்படுத்தப்படாவிட்டால், இவர்களுடைய அறிவு இவர்களுக்கே எதிரியாகிவிடக்கூடும்.

 பெயர் எண் கூட்டுத்தொகை : 64

64 என்னும் எண் சம அளவில் நண்பர்களையும், எதிரிகளையும் உண்டு பண்ணக்கூடியது. வாழ்க்கையில் எதிர்ப்பு இருக்கும். அதிக மனவலிமையையும், சாமர்த்தியத்தையும், அறிவையும் தரும். செயற்கரிய செயல்கள் புரியச் செய்து கீர்த்தியை உண்டாக்கும். பெரிய அரசாங்கப் பதவிகள் தரும். அனைவரும் பிரமித்து வணங்கும் படியான பதவியையும் தரும். இந்த எண்காரர்களுக்கு வலிமைமிக்க வாக்கு உண்டாகும்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 73

பெயர் கூட்டு எண் 73 ஆனால் மனோசக்திகள் பலமடையும். புகழும், செல்வமும், அதிகாரமும் படிப்படியாக உயரும். சுக வாழ்க்கையே குறிக்கோளாக இருக்கும். ரகசியமாகக் காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்களாக இருப்பர். அரசு ஆதரவு உண்டு. போகவஸ்துகள் நிறைய உண்டாகும். நேர்மை இல்லாவிட்டால் புகழ்மங்கும். தெய்வ பக்தியுடன் சுத்தமான இதயமும், மேன்மையான எண்ணங்களும் இருந்தால் சாந்தியுடன் பிரபுவாக வாழ்வர்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 82

82 என்னும் எண் சக்தி வாய்ந்தது. சாதாரண மனிதனையும் சக்ரவர்த்தி ஆக்கக்கூடியது. இந்த எண்ணுக்குரியவர்கள் கடுமையான உழைப்பாலும், கடமை தவறாத பண்பாலும் மேன்மை அடைவர். பெரும் புகழை அடைவர். காதலில் சிக்கல் ஏற்படும். பிடிவாதம் அதிகமாக இருக்கும். கண்களில் காந்த சக்தி உண்டாகும்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 91

91 என்றும் என் வைராக்கியத்தையும், அதிக சஞ்சாரத்தையும் குறிக்கிறது. இவர்கள் அதிகமாகப் பயணம் செய்வர். படகு மற்றும் கப்பல் மூலம் செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் சேரும். சுகமான வாழ்க்கை அமையும்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 100

100 என்னும் எண் முயற்சிகளில் வெற்றியைத் தரக்கூடியது. ஆனால், வாழ்க்கையில் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படாது. பணம் நிறைய இருக்கும். முக்கியமான சம்பவங்கள் இல்லாத நீண்ட சுக வாழ்க்கை அமையும். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்த திகதி 0 இதற்கு பலன் ஒன்றும் இல்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்த திகதி 0 இதற்கு பலன் ஒன்றும் இல்லையா ? 

Chicken-or-Egg.png

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் எல்லாம் 4 ..... இசை, Justin, who else?

ஆனால் ஒன்று மட்டும் ஒன்று மட்டும் நிச்சயம் most of the engineers are number 4....

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாலே...!  :)

3 இற்கு அப்படியே 80% பொருந்துதே

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்ர அண்ணாரும் ஒரே நம்பர் :D

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் எல்லாம் 4 ..... இசை, Justin, who else?

ஆனால் ஒன்று மட்டும் ஒன்று மட்டும் நிச்சயம் most of the engineers are number 4....

 

எங்களையும் இந்தக் குரூப்பில சேர்த்துக்குங்க.. ஏனென்றால் இரண்டு எண்களில் ஒன்று நான்கு. நான்கின் ஆதிக்கம் தான் அதிகம்.

 

சாஸ்திரம் சம்பிரதாயத்தை நம்புவதில்லை என்றாலும்.. இது அவ்வளவும் நன்கே பொருந்தி வருகிறது. மிச்சம் பொருந்தல்ல. முயற்சி செய்யும் போது உயர்ச்சியும்.. முயற்சி இன்றிய போது வீழ்ச்சியும் வருகிறது. அதற்கு நம்பர் காரணம் அல்ல. நாங்க தான் காரணம். :lol::):icon_idea:

 

 

பல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது!

 

13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். இவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
அழுபவர் அழுவதும் ....
சிரிப்பவர் சிரிப்பதும் ....
விதிவழி வருவதில்லை.
 
ஒருவருக்கேன்றே உள்ளதையெல்லாம் .....
சாத்திரம் தருவதில்லை.
 
மஹிந்த மாமாவை பார்த்த பின்னுமா ?
இதை நம்புறீங்க ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.