Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை போல கிழக்கையும் இந்தியா கவனிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

a190d0c5c55e47989780076fe383c025.jpg

வடமாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று  இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம்  மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடினார்.
 
இதற்கான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
 
இந்த சந்திப்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும்  வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கட்சியின் பிரதித் தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர்  கலந்துகொண்டனர். 
 
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஆட்சி சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
 
அத்துடன் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் விவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 
 
மேலும் வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு இந்திய அரசு எவ்வாறான உதவிகளை மேற்கொண்டு வருகின்றதோ அதேபோல கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும்  இந்திய அரசு உதவிகளை மேற்கொள்ளும்  என அவர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=290843907408824147

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தை தானே.... சவூதி அரேபியா கவனிக்குது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தை தானே.... சவூதி அரேபியா கவனிக்குது. :lol:

அதுதானே....கிழக்கை பாகிஸ்தானும் சவுதியும் கவனிக்கும்.....கிழக்கின் முதலமைச்சர் எதிர்த்து அறிக்கை விடப்ப்போகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தை தானே.... சவூதி அரேபியா கவனிக்குது. :lol:

முஸ்லீம்களாலும் இஸ்லாமிய நாடுகளாலும் செய்யப்படும் எந்த உதவியும் தமிழ்மக்களுக்காகச் செய்யப்படுவதில்லை.  அப்படியிருக்க தமிழ்சிறீ ஏன் கிழக்குத் தமிழர்களை அவர்களிடம் தள்ளிவிடப் பார்க்கிறீர்கள்.  இதைத்தான் அப்பட்டமான பிரதேச வாதமென்பது.

தற்போது கிழக்கும் வருங்காலத்தில் வடக்கும் அல்லாவின் பூமி அதன் பின் எலோருக்கும் சவுதியின் உதவி கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் இந்தியாவும் வல்லரசாகுமோ இல்லையோ, ஈழத்தில் வல்லரசாகி விட்டது. அது ஈழத்தில் யாழ்பாணத்தையும் மட்டக்களப்பையும் சேர்த்தும் வைக்கும் பிரித்தும் வைக்கும். :(  

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் இந்தியாவும் வல்லரசாகுமோ இல்லையோ, ஈழத்தில் வல்லரசாகி விட்டது. அது ஈழத்தில் யாழ்பாணத்தையும் மட்டக்களப்பையும் சேர்த்தும் வைக்கும் பிரித்தும் வைக்கும். :(  

இது ஒரு பரீட்சார்த்த முயற்சியோ....

ம்ம்ம்

பூனைக்கு விளையாட்டு

எலிக்கு உயிர் வேதனை..... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களாலும் இஸ்லாமிய நாடுகளாலும் செய்யப்படும் எந்த உதவியும் தமிழ்மக்களுக்காகச் செய்யப்படுவதில்லை.  அப்படியிருக்க தமிழ்சிறீ ஏன் கிழக்குத் தமிழர்களை அவர்களிடம் தள்ளிவிடப் பார்க்கிறீர்கள்.  இதைத்தான் அப்பட்டமான பிரதேச வாதமென்பது.

நான்... சிரித்துக் கொண்டு எழுதிய கருத்தை... கரு ஏன்... சீரியசாக, எடுத்தார் என்று தெரியவில்லை. :lol: 

கரு சீரியசாக எடுத்து கருத்து எழுதிய படியால்... எனது சீரியசான பதில். :)

கிழக்கு மாகாணத்தை பிரநிநிதிப்படுத்தும் சம்பந்தன் கூட, அங்கு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் படி இந்தியாவை இதுவரை கேட்டதில்லை. அப்படியிருக்க அங்குள்ள முஸ்லீம்கள் தான்... சுஷ்மா சுவராஜ் இடம் கேட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் இதுவரை அவர்களுக்கு, முஸ்லீம் நாடுகளால் வழங்கப் பட்ட உதவியில் எத்தனை சதவீதத்தை அங்குள்ள தமிழ்ப் பகுதிகளுக்கு செலவிட்டு உள்ளார்கள், என்பதை தெரிவிப்பீர்களா?

போரினால்.... அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்று தெரிந்தும், முஸ்லீம்கள் தமிழனுக்கு கிடைக்கும் சிறு உதவிகளைக் கூட தட்டிப் பறிப்பதில், வல்லவர்கள் என்பது உங்களுக்கு இன்னும் தெரியாதது ஆச்சரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

f-poverty1_0_0_0.jpg

crowdedTrain.jpg

1.jpg

இவற்றை தொலைநோக்குகாட்டி  சற்றலைட் வசதி இல்லமால் நேரடியாகவே பார்க்கலாம் ....
இந்தியா வடக்கைப்போல இவற்றையும் ஒருக்கால் கவனித்தால் நல்லம். 
 
ஒரு  விடுதலைப் போராட்டத்தை நடத்தும் எந்த இனத்திற்கும் பாதிப்புக்கள் அழிவுகள் வருவது இயற்கை. ஆனால் அந்த அழிவுகள் பாதிப்புகளை முழுவதுமான நீங்கள் பொறுப்பேற்று கொள்ளுங்கள். ஆனால் அந்த உங்களை தியாகம்செய்து நீங்கள் நடத்தும் போராட்டத்தினால் ஏதாவது சிறிய நன்மை கிடைத்தாலும் அதில் சரிபாதி பங்கு எமக்கு தரவேண்டும் என்பது முஸ்லீம்களின் நீண்ட கால நிலைப்பாடு. அதில் இருந்து அவர்கள் என்றும் மாறப் போவதில்லை.

எமது குடிபெயர்வு கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய சகோதரர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவியது உண்மை. ஆரம்பகாலங்களில் அனைத்து இயக்கங்களிலும் இஸ்லாமிய சகோதரர்கள் இருந்தார்கள். எமது சந்தேகங்கள் அவர்களை விரட்டியடித்தது. மட்டக்களப்பில் இவர்கள் இஸ்லாம் இல்லாத தமிழர்களிற்கு புரிந்த கொடுமைகள் மன்னிக்கமுடியாதவை. அதேபோன்று பள்ளிவாசல் படுகொலை, யாழ் வெளியேற்றமும் மன்னிக்கமுடியாதவை. 
 
இருவருமே தப்பு செய்திருக்கின்றோம். எமக்கிடையில் இனிமேலாவது ஒரு புரிந்துணர்வு வரவேண்டும். அரசியலில் கூட்டமைப்பு விட்டுக்கொடுத்ததால் நேசக்கரத்தை நீட்டியுள்ளது. நடக்கப்போவது நலமாக இருக்க எதிர்பார்ப்போம். பழையவற்றை மறந்து தமிழராக ஒண்றிணைவோம்.
 
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கருத்துக்கள் வேண்டாமே. இஸ்லாமிய சகோதரர்களும் யாழ்.கொம்மில் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை வைப்பது என்பது எமது கைகளில்தான் உள்ளது.
 
திரிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் திரி திசைமாறியதால் எழுத நேர்ந்தது.
 
ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு. சகோதரர்களிற்கிடையே மன்னித்தது விட்டுக்கொடுத்தல் அவசியம். இடைவெளி அதிகம் அதனைக் குறைக்க எம் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம்.

ஜீவன் முஸ்லீம்கள் வெளியேற்றம், முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தமிழ் மக்கள் தமிழர்கள் சார்ந்ந பல அமைப்புகள்   கண்டித்து அந்த தவறை ஒப்பு கொண்டனர். ஏன் விடுதலை புலிகளே ஒரு காலத்தில் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தம் கூட தெரிவித்தார்கள்.

ஆனால் எந்த முஸ்லீம் அமைப்போ அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோ   கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு முஸ்லீம்களால் இழைக்கபட்ட கொடுமைகள் படுகொலைகள்  பற்றி பேச கூட தயாராக இல்லை என்பது தான் ஜதார்த்தம்.

கொழும்பிலும், மலையகத்திலும் இருக்கிற தமிழ் சனங்களை வடக்கில் குடியேற்ற வேண்டும், அது தான் எங்கட மக்கள் தொகை வடக்கில் வீழாமல் இருக்க உதவும், இல்லை என்றால் கிழக்கு போல வடக்கிலும் முஸ்லிம் முதலமைச்சர் தான் விரைவில் வருவார் பாருங்கோவேன். 

...

ஏன் இலங்கை அரசும்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் எமது மக்கள் மைத்திரிக்கு வாக்களித்து ஒரு மாற்றத்தை உருவாக்கவில்லையா? இவர்கள் எமது சகோதரர்கள் இங்கு சுயகௌரவம் பார்க்கக்கூடாது. ஒற்றுமை இப்போது இருவருக்கும் அவசியமானது. மறப்போம் மன்னிப்போம்.

இது வாஸ்தவ மான கருத்து. முஸ்லீம்கள் கிழக்கு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மறந்து அவர்களுடன் நட்புறவை பேணும்வகை நடந்து கொள்ளவேண்டும் என்பது.  அதை விட்டு அவர்கள் அப்பாவிகள் எதுவும் செய்யவில்லை. தமிழர்கள் தான் அவகளுக்கு கொடுமை புரிந்தார்கள் என்று சிலர் புருடா விடுவதை விட்டு இந்த ஜதார்த்தத்தை உணர்ந்து கடந்த காலங்களில்  அவர்கள் தமிழ் மக்களுக்கு  செய்த கொடுமைகளை மறந்து நட்புறவுடன் இருப்போம் என்று கூறினால் அது சரியான கருத்து.

கொழும்பிலும், மலையகத்திலும் இருக்கிற தமிழ் சனங்களை வடக்கில் குடியேற்ற வேண்டும், அது தான் எங்கட மக்கள் தொகை வடக்கில் வீழாமல் இருக்க உதவும், இல்லை என்றால் கிழக்கு போல வடக்கிலும் முஸ்லிம் முதலமைச்சர் தான் விரைவில் வருவார் பாருங்கோவேன். 

இல்லை ஆனந்த வர்மன்.
 
மலைநாட்டு தமிழர்களின் தாயகம் மலைநாடுதான். இவர்கள் தாமாகவே (அரச உதவி கிடையாது) வட கிழக்கில் குடியேறினால் தப்பு எதுவுமில்லை. ஆனால் குடிபெயர்வு அவர்களால் எடுக்கப்பட்ட முடிவாக இருத்தல் அவசியம். சம்பூர் அகதிகளை கிளிநொச்சியில் குடியேற்றினால் ஏற்றுக் கொள்வார்களா? மலைநாட்டு தமிழர்கள் தமது சொந்த இடத்தில் சகல உரிமைகளுடனும் வசதிகளுடனும் வாழ வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த வர்மன் (அருமையான பெயர்),

புலத்தில் இருப்போரில் பாதிப்பேர் ஊருக்குப்போய் குடியேறினாலே போதுமே :)

கொழும்பிலும், மலையகத்திலும் இருக்கிற தமிழ் சனங்களை வடக்கில் குடியேற்ற வேண்டும், அது தான் எங்கட மக்கள் தொகை வடக்கில் வீழாமல் இருக்க உதவும், இல்லை என்றால் கிழக்கு போல வடக்கிலும் முஸ்லிம் முதலமைச்சர் தான் விரைவில் வருவார் பாருங்கோவேன். 

போறா போக்கில அப்படியே மண்ணையும் அள்ளிக்கொண்டு போங்கோ என்று அடுத்த பதிவு வரும்போல .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலும், மலையகத்திலும் இருக்கிற தமிழ் சனங்களை வடக்கில் குடியேற்ற வேண்டும், அது தான் எங்கட மக்கள் தொகை வடக்கில் வீழாமல் இருக்க உதவும், இல்லை என்றால் கிழக்கு போல வடக்கிலும் முஸ்லிம் முதலமைச்சர் தான் விரைவில் வருவார் பாருங்கோவேன். 

சிங்களவனோடு வாழலாம், யாழ் தமிழர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.

ஆனந்த வர்மன் (அருமையான பெயர்),

புலத்தில் இருப்போரில் பாதிப்பேர் ஊருக்குப்போய் குடியேறினாலே போதுமே :)

welcome கோஷான்

:D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கொழும்பான்.

ஒரு யாழ்பாணத்தவனாக உங்கள் கூற்றை 100% ஆமோதிக்கிறேன். இதே போல சோனியோட வாழலாம் ஆனால் யாழ்#%%யோட வாழ முடியாது என்று பல கிழக்குச் சகோத்கர்கள் கூற கேடிருக்கிறேன்.

அதுதான் உண்மையும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு இன்னும் பல ஊர்களைச் சொல்லி தமிழர் ஒற்றுமைக்கு குழிதோண்டுபவர்கள்.... ஒருமுறை நாங்களும் தமிழர்கள்தானா என்று தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்வதும் நல்லது.  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை ஒற்றுமை என்று கூறி எத்தனை காலம்தான் யாழ் அல்லாத தமிழர்களின் முதுகில் சவாரி செய்யப் போகிறோம்?

எதிர்கேள்வி கேட்டால் - நீந்தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவீர்கள் :)

அதெப்படி ஆனையிறவுக்கு மேல பிறந்த்ஹவர்களுக்கு மட்டும் , சுத்த தமிழர் என்று ஐ எஸ் ஐ முத்திரை ஏதும் பிறப்பிலே குத்தப்படுகிறாதா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த வர்மன் (அருமையான பெயர்),

புலத்தில் இருப்போரில் பாதிப்பேர் ஊருக்குப்போய் குடியேறினாலே போதுமே :)

1%கூட வராது. நல்லூர் திருவிழா டூரிஸ்ட்டுகளை வைத்து, எந்தக் கணக்கும் போட முடியாது.

உண்மை தான் கட்டாயப் படுத்தி யாரையும் எங்கும் குடியேற்றக் கூடாது, ஆனால் வன்னியில் ஏற்கனவே மலையகத் தமிழர்கள் பலர் குடியேறி வன்னி மக்களோடு ஒன்றாகிவிட்டனர். அதனால் மலையகத்தில் இருந்து குடியேற விரும்புவோருக்கு வன்னியில் காணி நிலங்களை அளித்து குடியேற்ற ஊக்குவிப்பதில் ஒரு பிழையும் இல்லை. நிச்சயம் யாழ்ப்பாணத்தில் போய் குடியேற இயலாது. நானே ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றாலும், எனக்கு யாழ்ப்பாணத் தமிழர்களது செயல்கள் பிடிப்பதில்லை. அவர்கள் நடந்து கொள்ளும் விதமும், தற்பெருமை பேசுவதும் ஆக இருப்பது தான். என் வீட்டிலே இது தான் நடக்கும் அப்பா, அம்மா ஓரளவு பரவாயில்லை. ஆனால் மற்ற உற்றார் உறவினர், ஒரு தலைமுறைக்கு முந்தைய ஆட்கள் விட்டால் யாழ்ப்பாணத்தில் தான் மின்சாரமே கண்டுபிடித்தது போல பெருமை பேசுவார்கள், இதைக் கேட்டு கேட்டு எனக்கே காது புளித்தது தான் மிச்சம். கொழும்புத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களோடு பழகி இருக்கின்றேன். யாரும் இப்படி தற்பெருமை பேசுவதில்லை. 

வெளிநாடுகளில் இருப்போர் இனி போய் வன்னியிலோ வடக்கிலோ வாழ்வார்கள் என நான் நினைக்கவில்லை. பலருக்கும் வெளிநாட்டு சுக வாழ்வை விட்டுவிட்டு யூதர்கள் போல தாயகம் திரும்ப மனம் இல்லை என்பதே உண்மை. அதிலும் இந்த தலைமுறைக்கு இலங்கை பற்றி எந்தவொரு பிரக்ஞையும் இல்லை. ஒருவர் இருவர் விதிவிலக்கு.. 

இலங்கைக்குள்ளே வாழ்கின்ற தமிழர்கள் ஒரு மாகாணத்திலாவது பெரும்பான்மையாக இருக்க வேண்டும். அதிலும் வன்னியில் பல லட்சம் நிலங்கள் சும்மா தான் கிடக்கின்றன, எப்போ கிழவன் சாவான் திண்ணை கிடைக்கும் என சிங்கள அரசு காத்திருக்கின்றது. ஆக யாழ்ப்பாணத்தில் இருப்போரும், இலங்கையின் மலையகம் உட்பட அனைத்து இடங்களில் இருக்கும் தமிழர்களுக்கு வன்னியில் காணி நிலங்களை வழங்க தமிழ் சமூகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மலையகத்தில் பலருக்கும் வன்னியில் குறிப்பாக வவுனியாவில் வாழ விருப்பம் உண்டு. ஏற்கனவே பலர் அங்கே போய் குடியேறிவிட்டதால் மேலும் பலருக்கும் இந்த விருப்பம் உண்டு. ஆனால் இலங்கை அரசின் தடைகள், வடக்கின் சமூகத்தின் நிலைப்பாடுகள் போன்றவை இவற்றை தடுக்கின்றன. 33 ஆண்டுகால யுத்தம் மட்டும் நடைபெறாவிட்டு இருந்தால் இன்றைக்கு வடக்கில் 30 லட்சம் தமிழர்களுக்கு மேல் இருந்திருப்பார்கள், 1977-களில் வந்தது போன்றே பல மலையகத் தமிழரும் குடியேறி இருப்பார்கள். 

எனது அப்பா, அந்தக் காலக் கட்டத்தில் உள்ளூர் விதானையின் துணையோடு பல மலையகத் தமிழருக்கு காணி வாங்கிக் கொடுத்திருந்தார் என சொல்லுவார். பலரும் இன்றைகு வன்னியில் தான் இருக்கின்றார்கள்.. 

புலத்தில் இருந்து 1 % கூட வந்து குடியேற மாட்டார்கள் என்பது தான் எனது எண்ணமும். இந்தியாவில் இருக்கிறவர்களுக்கு திரும்பி போக நிறைய விருப்பம் உண்டு, இந்தியாவிலே கலியாணம் செய்து கொண்டு வாழ்வோருக்கு விருப்பம் இல்லை. எனக்கும் வன்னிக்குப் போய் வாழ விருப்பம் நிறைய உள்ளது.. 

ஒற்றுமை ஒற்றுமை என்று கூறி எத்தனை காலம்தான் யாழ் அல்லாத தமிழர்களின் முதுகில் சவாரி செய்யப் போகிறோம்?

எதிர்கேள்வி கேட்டால் - நீந்தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவீர்கள் :)

அதெப்படி ஆனையிறவுக்கு மேல பிறந்த்ஹவர்களுக்கு மட்டும் , சுத்த தமிழர் என்று ஐ எஸ் ஐ முத்திரை ஏதும் பிறப்பிலே குத்தப்படுகிறாதா? :)

ஆனை இறவுக்கு மேல் பிறந்தவர்கள் கதைப்பது உண்மையில் தமிழ் தானா என்ற சந்தேகமே எனக்கு எழும்.. சென்னை, மதுரையில் வாழ்ந்த காலத்தில் என்னுடைய அம்மமா, அம்மப்பா கதைக்கிற தமிழைக் கேட்டு இதென்ன மலையாளமா :blink: என்பார்கள் அங்கிருப்போர். ஆனால் வன்னி, கொழும்பு, மலையகம் இங்கிருந்து வந்தவர்கள் பேசும் தமிழைப் பார்த்து அப்படி யாரும் கேட்பதில்லை. ஆக ஆனையிறவுக்கு கீழே இருப்போர் தான் சுத்த தமிழர் என நான் நினைக்கினேன்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானே ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றாலும், எனக்கு யாழ்ப்பாணத் தமிழர்களது செயல்கள் பிடிப்பதில்லை. 

ஆனை இறவுக்கு மேல் பிறந்தவர்கள் கதைப்பது உண்மையில் தமிழ் தானா என்ற சந்தேகமே எனக்கு எழும்.. சென்னை, மதுரையில் வாழ்ந்த காலத்தில் என்னுடைய அம்மமா, அம்மப்பா கதைக்கிற தமிழைக் கேட்டு இதென்ன மலையாளமா :blink: என்பார்கள் அங்கிருப்போர். ஆனால் வன்னி, கொழும்பு, மலையகம் இங்கிருந்து வந்தவர்கள் பேசும் தமிழைப் பார்த்து அப்படி யாரும் கேட்பதில்லை. ஆக ஆனையிறவுக்கு கீழே இருப்போர் தான் சுத்த தமிழர் என நான் நினைக்கினேன்.  :lol:

ஆனந்த வர்மன் அவர்களே! தமிழில் 36 வகையான பிரிவுகள் இருப்பதாச் சொல்கிரார்கள். அதிகமாகவும் இருக்கலாம் .இவற்றுள் எந்தத் தமிழை நீங்கள் தமிழ் என்று ஏற்றுக்கொள்வீர்கள். காய்க்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்பது அறிந்து அனுபவத்தில் சொல்லப்பட்ட முது மொழி. அறிவுபூர்வமான செயற்பாடுகள் பற்றி யாழில் தெரிவித்திருக்கும் நீங்கள், உங்கள் பிறந்த மண்ணான யாழைக் கேவலப்படுத்த வேண்டாமே.. பிழை எனத் தெரிந்தால் அதனை நிந்திப்பதை விட்டுச் சரிப்படுத்த உங்கள் எழுத்தைப் பயன்படுத்தித் தாய்மண்ணைத் தூய்மைப்படுத்த முயலலாமே.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.