Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னன் இராவணன் புஷ்பக விமானத்தை நிறுத்திய இடம் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Rawanagala_00.jpg
மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புஷ்பக விமானம் ஒன்று இருந்தாக கூறப்பட்டுள்ளது.

 

சீதையை மறைத்து வைத்த இடம் எனக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

சீதா எலிய கோயில் தற்போது இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். சீதையை கடத்தி வர பயன்படுத்திய புஷ்பக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிப்பாடு செய்து வருகின்றனர்.

 

மஸ்கெலியா, மவுசாகலை நீர்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் மலைக்கு அருகில் மவுசாகலை நய்சா தோட்டத்தின் கீடன் பிரிவில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பிலான கற்பாறையாக இந்த இடம் காணப்படுகிறது.

 

அந்த கற்பாறையில் சில அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை மன்னன் இராவணனின் புஷ்பக விமானத்தின் சில்லுகளின் தடங்கள் என தோட்டத் தொழிலாளர்கள் நம்புகின்றனர்.

 

மட்டமான இந்த கற்பாறைக்கு அருகில் தடாகம் ஒன்றும் காணப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் இந்த தடாகம் பெயரிதாக காணப்பட்டதாகவும் அது பராமரிக்கப்படாத காரணத்தினால், சிறியதாக மாறியுள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

மன்னன் இராவணனின் புஷ்பக விமானம் பாத ரசத்தினால் இயங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த கற்பாறை சிவனொளி பாத மலைக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ravanan_plane_001.jpg

ravanan_plane_002.jpg

ravanan_plane_003.jpg

ravanan_plane_004.jpg

ravanan_plane_005.jpg

ravanan_plane_006.jpg

ravanan_plane_007.jpg

ravanan_plane_008.jpg

ravanan_plane_009.jpg

ravanan_plane_010.jpg

Rawanagala_1.jpg

Rawanagala_2.jpg

Rawanagala_3.jpg

http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmszD.html

  • கருத்துக்கள உறவுகள்

ravanan_plane_003.jpg

 

ravanan_plane_004.jpg

 

ஆமா...... புஷ்பக விமானத்தின் ரயர், "சடன் பிரேக்" அடித்த அடையாளமெல்லாம் துல்லியமாக தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சநாள் போக இராவண(ன்) பிரித் ஓதிய 'தகவல்' வெளியிடப்படும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

தார் றோட்டுப்போல் தெரிகிறது. அந்தக் காலத்திலேயே இருந்த தார் றோட்டின் பெருமைபற்றி எழுத வால்மூகி முனிவர் மறந்துவிட்டாரே....  :o

  • கருத்துக்கள உறவுகள்

தார் றோட்டுப்போல் தெரிகிறது. அந்தக் காலத்திலேயே இருந்த தார் றோட்டின் பெருமைபற்றி எழுத வால்மூகி முனிவர் மறந்துவிட்டாரே....  :o

 

தேர் றோட்டுத்தான் பின்னர் மருவி தார் றோட்டானது.  ஆக தமிழ்ப் பெயரைத்தான் ஆங்கிலேயன் தனதாக்கியிருக்கிறான்.  

 

அதுசரி!  அனுமான் து}க்கிக் கொண்டு வந்து வைத்த சஞ்சீவினி மலை எங்கிருக்கிறது என்று யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.  சாகா மருந்து மரம் அங்கிருக்கிறது.

 

புலியப்பற்றி நாவல் எழுதினால் மட்டும் ஆகா ஓகோ.. இது ஈகாவா?!

 

இது தார் ரோட்டில்லை.. கருங்கல்லு!!

அப்படியே புஸ்பாவின் வாகனத்தின் தொழில்நுட்பத்தினையும் வெளியிட்டால் தமிழன் தான் விமானத்தினையும் முதலில் கண்டு பிடித்தவன் என்று எடுத்து விடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே புஸ்பாவின் வாகனத்தின் தொழில்நுட்பத்தினையும் வெளியிட்டால் தமிழன் தான் விமானத்தினையும் முதலில் கண்டு பிடித்தவன் என்று எடுத்து விடலாம்...

 

இதிலென்ன சந்தேகம் 'விமானம்' என்ற சொல் தமிழகராதில் தொன்றுதொட்டு உள்ளது. 'Aeroplane' என்ற சொல்லே ஆங்கில அகராதியில் 19ம் நூற்றாண்டின் பின்புதான் நுழைந்ததாக பள்ளிக்கூடத்திலே வாத்தியார் சொன்னது ஞாபகமுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே புஸ்பாவின் வாகனத்தின் தொழில்நுட்பத்தினையும் வெளியிட்டால் தமிழன் தான் விமானத்தினையும் முதலில் கண்டு பிடித்தவன் என்று எடுத்து விடலாம்...

 

 

அப்படியே

இராவணணன் விட்ட

சலம் தான் நீரோடையாகவும்

மலம் தான் மலையாகவும் :o  :o என வரலாற்றை எழுதி முடிக்கவேண்டியது தான்.. :lol:  :D

அப்படியே

இராவணணன் விட்ட

சலம் தான் நீரோடையாகவும்

மலம் தான் மலையாகவும் :o  :o என வரலாற்றை எழுதி முடிக்கவேண்டியது தான்.. :lol:  :D

சிவன் அடிச்ச சலத்தைதான் பூசைக்கு பிறகு கோயில்களில் ஐயர்மார் தீர்த்தம் (பிரசாதம்) எண்டு குடுக்கிறவை.  :D
சிவன் அடிச்சால் சலம் தீர்த்தமாகலாம். ராவணன் சலம் அடிச்சால் நீரோடை ஆகக்கூடாதா என்ன?  :lol:

கருப்பு  பெட்டி  பக்கத்து  கல்லு  கும்பலுக்குள்  கிடந்தது  எடுக்கபட்டது நாளையை  செய்தி  :D

அப்போ ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்ததெல்லாம் பொய்யா? இதே போலத்தான் முதன் முதலில் மரக்கறி எண்ணையில் டீசல் வாகனத்தை புலிகள் இயக்கினார்கள். இப்போ (Bio Diesel) பையோ டீசல் என்ற பெயரில் முழு உலகுமே மரக்கறி எண்ணையில் இயக்குகின்றார்கள்

நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
இது ஒரு முக்கியமான விடயம் ......
எளிதாக இதை அசட்டை செய்ய முடியாது!
 
இதை ஏற்றுகொள்ள முடியாத ஒரு கற்பனையாகவே இருக்கிறது.
இதை ஏற்றுகொள்ளாத இடத்தில் மொத்த ராமாயணமே கற்பனை என்பதுதான் உண்மை.
 
இந்த விமானம் இல்லை என்றால் சீதையை இராவணன் விமானத்தில் கடத்தி வந்தது ....
பின்பு நடந்த போர் எல்லாம் வெறும் கற்பனை.
 
இதை உதாசீனபடுத்தும் எத்தனை பேர் இராமயணத்தை உதாசீனபடுத்த தயாராக இருக்கிறார்கள் ???
 
ஆங்கங்கே இருக்கும் சில அடையாளங்களை வைத்துகொண்டு சும்மா கட்டுகைதகதைகளை கட்டிவிடுவதை 
எமது முன்னையவர்கள் செய்தார்கள் என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
கோணமலையில் இருக்கும் இராவணன் வெட்டு தற்போதைய இயந்திரங்களால் வெட்டுவதென்றால் குறைந்தது ஒருவாரம் பிடிக்கும்.
ஆனால் இராவணன் சும்மா வாளால் கீறிவிட்டான்.
 
நாம் பயத்தில்தான் மதத்தை நம்பினோம் .... பயம் எமக்கு எதிர் கேள்விகளை உருவாக ஒருபோதும் இடம் அளிக்கவில்லை.
தவிர புறநிலை சிந்தனை என்பது எமக்கு தோன்ற காரணமும் இருக்கவில்லை. எமது வாழ்வு என்பது ஒரு குறுகிய எல்லைக்குள் சிக்குண்டு இருந்தது.
அடுத்த தலைமுறை அப்படியானது இல்லை.....
இந்த இடைவெளி பலருக்கு புரியவில்லை. கேள்விகள் எழுந்தால் எமது மொத்த மதமும் பித்தலாட்டம் ஆகிவிடும் 
மதம் மாயம் ஆகிவிடும். 
அதன் முன்பு நாம் எமது மதத்தில் இருக்கும் பித்தலாட்டங்களை கைவிட்டு விட வேண்டும்.
இல்லாதுபோனால் நாம் போலிகளைத்தான் உருவாக்க முடியும்!
  • கருத்துக்கள உறவுகள்

kodikkarai10.jpg  Ramar+paadham.jpg

 

 

 

புஷ்பக விமானம் தரையில் சிறிது ஓடித்தான் மேலெழும்புமா? அது ஏன் இலங்கையில் மட்டும் அந்த தடம் இருக்கின்றது? தமிழ்நாட்டிலும் அதற்கான தடம் இருக்க வேண்டுமல்லவா? புஷ்பக விமானம் இந்தியாவைல் எங்குமே இறங்கவில்லையா? இராமர் அப்படியே பரலோகம் போயிருப்பாரோ?

வேதாரண்யம் மற்றும் ராமேசுவரத்தில் ராமர் பாதம் மட்டுமே இருக்கிறது, ஒருவேளை ராமர் சீதையை மீட்டு வந்து ராமேசுவரம் தீவு வந்தவுடன் புஷ்பக விமானத்திலிருந்து சீதையை இருகைகளாலும் ஏந்தி குதித்துவிட்டதால் அந்த பாதம் தரையில் ஆழ பதிந்திருக்குமோ..?

 

ஒரே குழப்பம்..! :o

அன்ரிகீத்ரா பொறிமுறை 2300 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட 30 சில்லுகளைக்கொண்ட வானசாஸ்திர ஆய்வு உபகரணம். இந்த 30 சில்லுகளும் கைக்கடிகாரத்தின் சில்லுகள் போன்று உலோகதினால் ஆனவை.
 
அறிவென்பது அண்மையது அல்ல! 
 
 
102695641-03-01.jpg?$re-story-hero$
 
 
 
image009.jpg
 
 
 
 
 
மேலதிக விபரம்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Read the book Chariot of the Gods by EricVonDaniken.

 

It looks like the Nazca lines In Peru plateau 

 

(apologise for writting in English as Tamil font is not working)

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களுக்கு தெரிஞ்சது இரண்டு தான்..

 

1. வேண்டியதை.. ஆராய்வுக்கு இடமின்றி ஏற்றுக் கொள்வது.

 

2. வேண்டாததை.. ஆராய்வுக்கு இடமின்றி மறுத்துக் கொள்வது.

 

இதில்.. ஆராய்வு அவசியம். 

 

இன்றைய விமானப் பொறிமுறைகளின் முன்னோடி.. ஓவியர் லியனாவோ டார்வின்சி.. என்று அறிகிறோம். அவர் விமானத்தை வடிவமைக்கவோ... பறக்க விடவோ இல்லை. ஓவியத்தில் மனிதன் பறக்க முடியும் என்று கற்பனை செய்தார். அதனை வைத்து  எம்மவர்கள் என்றால்.. அவன் சுத்தப் பைத்தியம் என்றுவிட்டு கிடந்திருப்பார்கள். வெள்ளைக்காரன் ஆராய்ந்து விமானம் கண்டுபிடிச்சு.. இன்று அதை வைச்சு உலகையே ஆளுறாங்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே புஸ்பாவின் வாகனத்தின் தொழில்நுட்பத்தினையும் வெளியிட்டால் தமிழன் தான் விமானத்தினையும் முதலில் கண்டு பிடித்தவன் என்று எடுத்து விடலாம்...

இப்ப யாருண்ணே புஸ்பாவை வச்சிருக்கா :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நம்ப மாட்டேன் காரணம், இது உண்மையாக இருந்தால் நாங்கள் எல்லாம் இவ்வளவு காலம் தாழ்த்தி அசைலம் அடிச்சு இருக்க மட்டோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நல்லகாலம் பிரமிட் இன்னும் அழியாமல் இருக்குது. இல்லாட்டி அதுக்கும் நாலு நக்கல் கதை வந்திருக்கும்.... :lol:
இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் இப்படியான பிரமிட்டை உருவாக்க முடியுமா என ஆய்வாளர்கள் வியக்கின்றார்களாம். :icon_idea:  :D

எதைச் சொன்னாலும் நம்புவோர் உள்ளவரை இதுவும் நடக்கும். உண்மையில் ராமாயணம் சொல்லும் லங்கா தீவு இன்றைய இலங்கை தான் என்பதற்கு ஆதாரம் கிடையாது. 

 

பாருங்கள் வான்மீகி ராமாயணத்தில் லங்கா தீவு என்பது இந்தியாவின் தென்மேற்கில் இருப்பதாகவும், பல தீவுகள் தொடர்ந்து இருப்பதில் மத்தியில் மூன்று மலைகளோடு ஒரு தீவு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அப்படி பார்த்தால் லங்கா தீவு என்பது மாலைதீவு என்பதே சரி..  அதுவும் வாலி, சுக்கிரீவன் ஆண்ட நாடு இன்றைய கேரளத்தின் பம்பை பகுதி எனவும் அங்கிருந்தே லங்கா தீவுக்கு போனதாகவும் வட இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அறிஞர் ஆய்வு செய்து எழுதியிருந்தார், எல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. லங்கா என்ற பெயரில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்தில் பல தீவுகள் உள்ளன. ஆஸ்டோரோனேசிய மொழியில் லங்கா என்றாலே தீவு தானாம்.. 

 

சங்க கால இலக்கியங்கள் அதனால் தான் இலங்கையை ஈழம் என்றே எழுதி வந்திருக்கின்றது. எப்போது இலங்கை என்ற பெயரை அது பெற்றது , தெரியவில்லை... 

 

வாங்கோ நாம் எல்லோரும் மாலைதீவில் புஷ்பக விமானம் இருந்ததா என தேடுவோம்... 

  • கருத்துக்கள உறவுகள்

கோணேஸ்வரம்.. எங்க மாலைதீவுக் கரையிலையா இருக்குது. அதுதான் புளொட் அதைப் பிடிக்கப் போனதோ என்னவோ..?!  :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.