Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு ஆணும், "ஷேவ்" எடுக்கும் போது, கவனிக்க வேண்டியவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Protect-Your-Skin-with-Best-Shaving-Crea

ஒவ்வொரு ஆணும்.. தெரிந்து கொள்ள வேண்டிய,  "ஷேவிங்" பற்றிய விஷயங்கள்!!!

பெண்கள் எப்படி தங்களை அழகாக வெளிக்காட்ட புருவங்களை ட்ரிம் செய்தல், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றுகிறோர்களோ, அதேப் போல் ஆண்கள் தங்களின் அழகை அதிகரித்துக்காட்ட, ஷேவிங் செய்வார்கள். ஆனால் சில ஆண்களுக்கு எப்படி சரியான முறையில் ஷேவிங் செய்வதென்றே தெரியாது. இதனால் பலரும் ஷேவிங் செய்த பின்னர் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஷேவிங் மூலம் 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

ஆண்கள் பொதுவாக ஷேவிங் செய்யும் போது ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதன்படி நடந்தால், ஷேவிங் செய்த பின்னர் முகம் மென்மையாகவும், பிரச்சனையின்றியும் இருக்கும். இங்கு சரியான வழியில் ஷேவிங் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறுங்கள்.

ஷேவிங் க்ரீம் தீர்ந்துவிட்டதா? கவலையவிடுங்க...

சுடுநீரில் முகத்தை கழுவவும்
ஷேவிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரில் கழுவி, துணியால் துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளிவந்துவிடும்.

ஷேவிங் ஜெல்
பின் ஷேவிங் ஜெல்லை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஷேவிங் க்ரீம் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, ஷேவிங் செய்யும் போது முடி எளிமையாக வெளிவரவும் உதவும். ஒருவேளை உங்களுக்கு தாடி அதிகம் இருந்தால், ஷேவிங் க்ரீமை அதிகம் தடவி ஊற வையுங்கள்.

ஷேவிங்..
அடுத்து ஷேவிங் மிஷின் கொண்டு, வளைவுகள் அதிகம் உள்ள இடங்களில் ஷேவிங் செய்யாமல், முதலில் மேடு பள்ளங்கள் இல்லாத கன்னங்களில் ஷேவிங் செய்ய வேண்டும், இதனால் கடினமான இடங்களில் உள்ள முடி ஷேவிங் க்ரீம்மில் நன்கு ஊறி, ஷேவிங் செய்யும் போது பின் ஈஸியாக வந்துவிடும். இதனால் சருமத்தில் எவ்வித வெட்டுக் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.
 
ஷேவிங்கிற்கு பிறகு.....
ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங்க்கிற்கு பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தடவி, சருமத்தில் ஈரப்பசையூட்டினால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். முக்கியமாக நீங்கள் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ்வில் ஆல்கஹால் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆல்கஹால் கலந்த பொருட்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.

கற்றாழை ஜெல்
முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி, சிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்... நன்றி வன்னியன். :) 
 
எனக்கு மெசினால்... ஷேவ் எடுத்தால், ஷேவ் எடுத்த திருப்தி இராது.
கிறீம் பூசி, வில்கின்சன் பிளேடால் ஷேவ் எடுப்பது தான் பிடிக்கும்.
அத்துடன், ஒவ்வொரு நாளும்.... கிளீன் ஷேவ் எடுப்பேன்.sbathroom_grooming_shaving_100-100.gif?w
என்னை... முகத்தில், முடியுடன் ஒரு நாளும் காணவில்லை என்று...

வேலை இடத்தில் சொல்லிக் கொள்வதை கேட்க... எனக்கு பெருமையாக இருக்கும். :D

வேலை இடத்து பெண்கள்..... எனது கன்னம் மிருதுவாக, முடி குத்தாமல்... இருக்கின்றது என்று தடவிப் பார்ப்பார்கள். அதற்காகவே.... தினமும், ஷேவ் எடுப்பேன். :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான் திங்கள், புதன், சனிகளில்  மட்டும். கண்ணுக்கு முன்னால் கை எட்டும் தூரத்தில் எது கிடக்குதோ (சோப், ஷாம்பு, கிறீம்) அதை கையாலேயே தேய்த்து விட்டு  big ரேசரால் (ஒன்று அல்லது இரு பிளேட்) அழகாக மழித்து விடுவேன். அதன் பின் தோயுறது. எந்த லோஷனும் பாவிப்பதில்லை....!  :)

காட்டுவாழ்க்கை வாழ்ந்த எங்களுக்கு இந்த ஆடம்பரம் எதற்கு. நானும் உங்கள் வகை தான். கிரீம், ஆப்டர் ஷேவ் கைகெட்டிய இடத்தில் இருந்தால் போடுவேன். அதுவும் என் மனுசிக்கு அந்த மணம் பிடிக்காது என்பதால் வார விடுமுறையில் எதுவும் போடுவது இல்லை.

பொருளாதார தடைக்குள் வாழ்ந்த போது, பனம் பழம் தடவி குளிச்ச எனக்கு இதுகள் ஒரு தேவை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முகச்சவரம் செய்து 20வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அவ்வப்போது தாடியை தடவுவதிலும் ஒரு தனிச்சுகம் உண்டு.  :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் குளிக்கும் இடத்திலேயே நாலைந்து தரம் எடுத்து போட்டு எறியிறது வைத்திருக்கிறேன்.

குளிக்கும் போது ஒரு இழுவை.

நான் முகச்சவரம் செய்து 20வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அவ்வப்போது தாடியை தடவுவதிலும் ஒரு தனிச்சுகம் உண்டு.  :)

சிலருக்கு தாடி வைத்திருப்பது நன்றாக இருக்கும்.

தாடி இல்லாமல் பார்க்க முடியாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"கற்றாழை ஜெல்
முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்."

இது சரியான தகவல், நான் சேவ் செய்தபின் கத்தாளையை முகத்தில் தடவிடுவேன், நல்ல வழு வழுப்பாக தோலிருக்கும்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முகச்சவரம் செய்து 20வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அவ்வப்போது தாடியை தடவுவதிலும் ஒரு தனிச்சுகம் உண்டு.  :)

சவரம் செய்து... 20 வருடங்களுக்கு மேல் என்றால்....

ஒசாமா பின்லாடனின், தாடியை... விட உங்களுக்கு மிக நீளமாக இருக்குமே..... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கற்றாழை ஜெல்

முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்."

இது சரியான தகவல், நான் சேவ் செய்தபின் கத்தாளையை முகத்தில் தடவிடுவேன், நல்ல வழு வழுப்பாக தோலிருக்கும்

107790_Etienne-Aigner-Statement-After-Sh
 
நாங்கள், ஜேர்மனியில்... கத்தாளைக்கு எங்கை போறது உடையார்.

நான், ஷேவ் எடுத்த பின்... மேலே உள்ள After Schave Lottion பாவிப்பேன்.

வாசமும்... அந்த மாதிரி சுண்டி இழுக்கும், அந்த வாசம் நாள் முழுக்க புத்துணர்ச்சியை தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒவ்வொரு நாளும் 'சவரம்' பண்ண வேண்டியிருக்கும்!

அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வதுண்டு...அட... ஒரு ஆணாய்ப் பிறந்து எவ்வளவெல்லாம் கஷ்படவேண்டியிருக்கு.. எண்டு..! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒவ்வொரு நாளும் 'சவரம்' பண்ண வேண்டியிருக்கும்!

அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வதுண்டு...அட... ஒரு ஆணாய்ப் பிறந்து எவ்வளவெல்லாம் கஷ்படவேண்டியிருக்கு.. எண்டு..! :o

பெண்ணாய் பிறந்தால், நாள் முழுக்க அடிக்கடி.... மேக்கப் போட வேண்டியிருக்கும், புங்கை.

அதனை விட.. காலையில் மட்டும் மூன்று நிமிடம் செலவழித்து... சவரம் எடுப்பது, எவ்வளவோ மேல். :D

இப்ப நானும் தினமும் சேவ் எடுக்கும் ரகம் தான் .முன்னர் தாடி விட்டிருந்தேன் .

பெரிதாக நேரம் செலவழிக்காமல் இரண்டு நிமிடங்களில் சட்டு புட்டேன்று அலுவலை முடித்துவிடுவன்.ஒன்றிரண்டு மயிர்கள் தப்பியும் விடும் .அதனால் இடைக்கிடை மனைவியார் அழகாக எடுத்துவிடுவார்  :icon_mrgreen:

நானும் தினமும் ஷேவிங் செய்கின்றனான். கிறீமை தடவி விட்டு உடனேயே ஷேவ் செய்து விடுவேன். 4 அல்லது 5 பிளேட்கள் உள்ள ரேசரால் மழித்தால் தான் திருப்தியாக இருக்கும்

அது சரி,  'முக்கியமான' இடங்களை ஷேவ் செய்ய இலகுவான வழிகள் இருக்கா? மனுசருக்கு வெறுபேத்தும் விடயம் இதுதான்.. எவ்வளவு கஷடப்பட வேண்டி இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

அது சரி,  'முக்கியமான' இடங்களை ஷேவ் செய்ய இலகுவான வழிகள் இருக்கா? மனுசருக்கு வெறுபேத்தும் விடயம் இதுதான்.. எவ்வளவு கஷடப்பட வேண்டி இருக்கும்

கமக்கட்டு, ஷேவ் எடுப்பதில் பிரச்சினை இல்லை.

ஆனால்... மற்ற இடம் ஷேவ் எடுக்கப் போகும் போது தான், இரத்தக் களரியாகி... வாழ்க்கையே வெறுத்துப் போகும். :D  :lol:

நான் பொதுவாக ரெசார் பாவித்து மழிப்பது இல்லை. கிழமைக்கு ஒருகால் அல்லது இரண்டு தரம் ஹேர் ட்ரிம்மர் (Hair trimmer) மூலம் ஜீரோ சைஸ்ல் கட் பண்ணி விடுவன். எனவே கிரீம், அப்டெர் ஷேவ் பிரச்சினை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு இன்னமும் மீசை முளைக்கவில்லை.
செவ் எடுக்கும் அனுபவம் இல்லை 

இருக்கிறவர்கள் வைத்திருக்கிறார்கள் இல்லாதவர்கள் வரைஞ்சுக்கிறார்கள்

மூலம் :- வடிவேலு

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாக நான் பாவிப்பது இந்தவகை..

பிறந்தநாள் பரிசாக மக்கள் வாங்கித்தந்தார்கள்..

philips_rq1145_32_d1305283761185_A_13534

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வருடங்களாக நான் பாவிப்பது இந்தவகை..

பிறந்தநாள் பரிசாக மக்கள் வாங்கித்தந்தார்கள்..

philips_rq1145_32_d1305283761185_A_13534

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

.. #14ம் நம்பரிலை எழுதினவர் தெரியாத்தனமாய் வாயை விட்டுட்டார்.... :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாக நான் பாவிப்பது இந்தவகை..

பிறந்தநாள் பரிசாக மக்கள் வாங்கித்தந்தார்கள்..

philips_rq1145_32_d1305283761185_A_13534

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

விசுகு எனக்கும் இப்படி ஒன்று பாவிக்கலாம் என்று பிள்ளைகளிடம் சொன்னேன்.

இது பாவித்தால் முகம் கறுப்பாகி விடுமாம்.இப்பவே அப்படி இப்படி இன்னும் கறுப்பாக போறீங்களோ என்றார்கள் அத்துடன் விட்டு விட்டேன்.

நாங்கள் இப்பவும் இது தான்.. ஈழப்பிரியன்! 

ஞாபகமிருக்கோ? :lol:

old-3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை ஆரம்பத்தில் நானும் இது தான் பாவித்தேன்.இழுத்துப் போட்டு எறிவது கொஞ்சம் சுலபமாக இருந்ததால் அதையே பழகிவிட்டேன்.

அடுத்தது எனக்கு மயிர் அவ்வளவு அடர்த்தி கிடையாது.

எனது மகன் இப்போதும் நீங்கள் பாவிக்கிற மாதிரி தான் வைத்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

விசுகரைப் போல, எல்லாருக்கும்.... அந்தப் பாக்கியம் கிடைக்காது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
இப்போதெல்லாம் பெண்களின் பதிவுகளும் பின்னூட்டங்களும் யாழில் குறைந்துவிட்டதுபோல் தெரிகிறது!. :(
 
ஆண்கள் அவர்களது உரிமைகளை உதாசீனம் செய்கிறார்களா...?  :o
 
அன்றி இந்த மஞ்சள்நிற எழுத்து வரிகள் அதிகமாகி அவர்களைத் தயங்கச் செய்கிறதோ..??  smiley5907.gif  
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.