Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி வருகையுடன் இந்திய- இலங்கை உறவில் புதிய ஆரம்பம்! - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

இது நாங்கள் முன்பே சிலாகித்ததுதான்.

87 இல் பிரபா இந்திய மேலாண்மைக்கு சலாம் போட்டிருந்தா - அவரும், நாமும் நாடும் - இப்போ இருப்பதை விட ரொம்ப நல்லா இருந்திருப்போம்.

இதில் உங்களுக்கு விளங்காத சூத்திரம் ஏதுமில்லை.

விரண்ட வாதம் செய்யவில்லை ......

உங்களை அப்படி தூண்டிவிடவும் எண்ணவில்லை.

எனது கருத்தாக மட்டும் பாருங்கள். (அது சரியாக இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை)

நான் முன்பே சொன்னேன் 1984-1985 இலேயே இந்தியா புளொட்டை புலிகளை அகற்ற நடவடிக்கையில்

இறங்கிவிட்டது.

பிரபாகரன் சலாம் போட்டிருந்தால்......?

அவர்களின் திட்டம் இலகுவாகி இருக்கும்.

சலாம் போடுவதால் சாதித்திருக்க முடியும் என்றால்.

புளொட்டும் புலிகளும் தமது வளர்ச்சி பற்றி சிந்தித்திருக்க கூடாது.

மற்ற சோம்பேறிகள் போல் பங்களதேஸ் போல் இந்தியா வந்து எல்லாம் சேயும் என்றுவிட்டு

சொறி சிரங்கு வளர்க்கும் பண்ணையாக இளைஞர்களை உருவாக்கி கொண்டு இருந்திருக்க வேண்டும்.

1985 தே ரொம்ப லேட்.

1987இல் நிட்சயமாக முடிந்திருக்காது.

பார்பான்கள் அவளவு நல்லவர்கள் கிடையாது.

  • Replies 60
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. புலிகள் தம் வளர்ச்சி பற்றி நினைத்திருக்க கூடாது. ஒரு மரபுவழி ராணுவம், கடற்புலிகள், வான் புலிகள், தனியரசு, இதை நீண்ட நோக்கில் இந்தியா ( பார்பன ஆதிக்கத்துட்பட்ட இந்தியா) விட்டுவைக்கும் என்று எண்ணியது நம் மடமை. அர்ஜூனுக்கு எப்போதே சொல்லி விளங்க படுத்தி விட்டார்கள்.

பிரபாவுக்கும் சொன்னார்கள். அவர் இவர்களையும் ஏய்த்து விளையாடலாம் எண்டு நினைத்தார். யு ஏ ஈ டீம் இந்தியாவுடன் விளையாடப் போவது போல. ஆனால் 1000:1 தான் odds. தெரிந்தும் போனார். முதல் ஓவர்களில் இவர் வெல்லுமாப் போல போக்கு காட்டிவிட்டு கடைசியில் பின்னி எடுத்து விட்டார்கள்.

1000:1 ரிஸ்க் எல்லாம் விளையாட்டில் எடுக்கலாம். வாழ்க்கையில் கூடாது. பொதுவாழ்வில், இனத்தின் எதிர்காலமே எம் கையில் தங்கி இருக்கும் போது, கூடவே கூடாது.

தமிழர் சனத்தொகை 40 லட்சம். 87 இல் திலீபனின் மரண காலத்தில், யோகி சொன்னார் -35 லட்சம் தமிழர் இறந்தாலும் தனிநாடுவரை போராடுவோம்.

இது கொள்கை உறுதிதான், ஆனால் அது தனிநபர்களுக்கு சரி. சாதாரண மக்கள் இந்த மனநிலையில் ஒரு போதும் இருந்ததில்லை.

ஈற்றில் இந்த கொள்கை உறுதி ( all or nothing suicide strategy ) ஒட்டு மொத்த அழிவில் கொண்டு வந்து விட்டது.

அவர்கள் கொள்கை படி கடைசி வரை போராடி இறந்து போய் விட்டார்கள். ஆனாலும் எஞ்சியவர்கள் வாழணுமே?

தொடர்ந்தும் all or nothing suicide strategy யில் போகாமல், வேறு வழியில்தான் போக வேண்டும்.

இந்த விடயங்கள் கூட வெறும் கறுப்பு வெள்ளையாக நடக்கவில்லை .

இந்திய வெளியுறவு கொள்கை ஒரு பிலாப்பால் மாதிரி ஒட்டினால் விடாது .எவ்வளவு காலமாக கழட்டிவிட முயன்றாலும் இன்று வரை ஒட்டிகொண்டே இருக்கு .

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல மாட்டார்கள் தாங்கள் என்ன செய்யபோகின்றார்கள் என்றும் சொல்லமாட்டார்கள் .இதற்குள் தான் எங்கள் அரசியல் செய்யவேண்டி இருந்தது .

இலங்கை -இந்திய ஒப்பந்தம் முறிவடைந்து ராஜீவின் கொலையுடன் இந்தியாவில் வந்த ஸ்திரமற்றஆட்சி தொடர்ந்ததால் சற்று விலகி இருந்தது மாதிரி இருந்தது .இந்த காலகட்டம் தான் புலிகளின் உச்ச கட்ட போராட்டம் .

திரும்ப காங்கிரஸ் ஆட்சி வர வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது .

இனி வேதாளம் இறங்காது என்றுதான் நம்புகின்றேன் .அது கொங்கிரஸ் என்றாலும் பிஜெபி என்றாலும் இதற்குள் எங்கள் அரசியல் சாமார்த்தியம் இருக்கு .

சம்பந்தன் சுமந்திரன் அதை சரிவர செய்வார்கள் என்றுதான் நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்
தாங்கள் என்ன செய்யபோகின்றார்கள் என்றும் சொல்லமாட்டார்கள் 

10172742_971901409488659_335994446734201

விவாதம் என்று பார்க்கும்போது .....
உங்களுடைய கருத்தை நான் பாராட்டுகிறேன்.
Best Argument
 
அதற்காக உண்மை பேசி வாழ்ந்ததால் ....... அரிசந்திரன் எவளவு  கஸ்ற்றபட்டார் பாருங்கள்.
ஆகவே யாரும் உண்மை  பேசி வாழ எத்தநிக்காதீர்கள்  என்று பாட புத்தகத்தில் 
மற்ற வேண்டும் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்.
 
நிமிர்ந்து நின்று வாழ்வதுதான் வாழ்க்கை.
 
இலங்கை அடிமை படுத்துகிறது என்று ஆயுதம் எடுத்துவிட்டு 
இந்தியாவிடம் அடிமைகள் ஆவதில் என்ன வேறுபாடு பெரிதாக இருக்க போகிறது ? 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயங்கள் கூட வெறும் கறுப்பு வெள்ளையாக நடக்கவில்லை .

இந்திய வெளியுறவு கொள்கை ஒரு பிலாப்பால் மாதிரி ஒட்டினால் விடாது .எவ்வளவு காலமாக கழட்டிவிட முயன்றாலும் இன்று வரை ஒட்டிகொண்டே இருக்கு .

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல மாட்டார்கள் தாங்கள் என்ன செய்யபோகின்றார்கள் என்றும் சொல்லமாட்டார்கள் .இதற்குள் தான் எங்கள் அரசியல் செய்யவேண்டி இருந்தது .

இலங்கை -இந்திய ஒப்பந்தம் முறிவடைந்து ராஜீவின் கொலையுடன் இந்தியாவில் வந்த ஸ்திரமற்றஆட்சி தொடர்ந்ததால் சற்று விலகி இருந்தது மாதிரி இருந்தது .இந்த காலகட்டம் தான் புலிகளின் உச்ச கட்ட போராட்டம் .

திரும்ப காங்கிரஸ் ஆட்சி வர வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது .

இனி வேதாளம் இறங்காது என்றுதான் நம்புகின்றேன் .அது கொங்கிரஸ் என்றாலும் பிஜெபி என்றாலும் இதற்குள் எங்கள் அரசியல் சாமார்த்தியம் இருக்கு .

சம்பந்தன் சுமந்திரன் அதை சரிவர செய்வார்கள் என்றுதான் நம்புகின்றேன் .

காங்கிரஸ் ஒரு பித்தாலாட்ட கட்சி 
நேரு குடும்பத்தில் இருக்கும் ஒருவரை தூக்கி தலைமயில் வைத்துவிட்டு 
பிரதமரில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்குபோட்ட பஞ்சயாத்து தலைவர் வரை ஊழல் செய்வது.
இதை தவிர வேறு எதையும் காங்கிரஸ் செய்ததில்லை 
மேலை நாடுகளுக்கு காங்கிரஸ் என்றால் அதுதான் கொள்ளை பிரியம்.
 
பிஜேபி இந்திய நலன் சார்ந்து எப்போதும் சிந்திக்கிறது 
அயல் நாடுகளுடனான உறவு மேம்பட எப்போதும் எத்தணிக்கிறது.
தனது பலத்தை கட்டி எழுப்புவதிலும் முன்னுரிமை கொடுக்கிறது (அணு ஆயுத பரீட்சை)
வாஜ்பாய் பாகிஸ்தானுடன் பேச்சில் ஈடுபட்டார் ..... பஸ்ஸில் பாகிஸ்தான் போனார்.
தமிழரை பகைப்பது இந்தியாவிற்கு கேடு என்பதை புரிந்தே புலிகள் விடயத்திலும் 
மிதப்பு போக்கில் இருந்தார்கள்.
தவிர ஜோர்ஜ் பெர்னாண்டோ போனறவர்கள் ஆதரவு புலிகளுக்கு இருந்தது.
 
சம்மந்தன் சுமந்திரன் போன்றவர்கள் ஒட்டுண்ணிகள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு பலமான தலைமை உருவாகினால் பிஜேபி அவர்கள் பக்கம்தான் நிற்கும்.
ஆனாலும் வெளிவிவகார அரசியல் காய் நகர்வை உளவுத்துறை செய்துவருவதால் 
கட்சிமாற்றம் பாரிய மாற்றத்தை உண்டுபண்ண முடியாது. 
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

அரிச்சந்திரன் கதை - ஒரு கதை. அதன் பால் ஈர்க்கப்பட்ட காந்தியால் கூட அதன் வழி வாழ முடியவில்லை.

இந்த உலகம் ஒரு கேடு கெட்ட இடம். இங்கே வல்லான் வகுத்ததே சட்டம். தந்தைகளே பிள்ளைகளை பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட்டால் மட்டுமே, ஒரு வேளை உணவு உண்ணலாம் எனும் நிலையில் பலர் இவ்வுலகில் வாழ்கிறார்கள்.

எதிர்க்க வலுவின்றி, அடங்கிப் போவது என்பது சில சமயங்களில் கட்டாயம் ஆகிறது. தொடர்ந்தும் எம் இருப்பை தக்க வைப்பதற்க்கான உத்தியும் ஆகுறது. அஞ்சுவதற்க்கு அஞ்சாமை பேதமை என்பது போல.

நாம் ஒரு சிறிய, இல்லை மிகச்சிறிய இனம். எம்மை விட பலம் பொருந்திய எதிரியோடு தம் பிடிச்சு போராடினோம். அதைவிட பெரிய சக்தி போரை நிறுத்தச் சொன்ன போது நாம் நிறுத்தி இருக்க வேண்டும்.

இலங்கையில் யாரும், சிங்களவர்களோ தமிழர்களோ இந்தியாவின் பிடிக்கு வெளியே இல்லை. இதை புரிந்து கொண்ட ஜேஆர், ரணில் தக்கன பிழைக்கிறார்கள். புரியாமல் பிரபா,மகிந்த அடி வாங்கினார்கள்.

மோடி பிக்குகளை குனிந்து கும்பிடுவதே ஒரு பக்கா நாடகம். சகல வகைகளிலும் இலங்கையை இந்த்ஹியாவின் கிடுக்கி பிடிக்குள் கொணர்ந்தாயிற்று.

இப்போ மேலோட்டமாக பிக்குகளை கும்பிட்டு ஒரு டிராமா. இதை விளங்காமல் மோடியை இலங்கையின் அடிமை என்கிறார்கள் பலர். மோடியின் அரசியல் வழியை தெரிந்த யாரும் இப்படி சொல்ல மாட்டார்கள்.

இலங்கையிடம் அடிமை பட்டால், எம் இன அடையாளம் தனித்துவம், சுயமரியாதை பறிபோகும்.

இந்தியாவிடம் அப்படியில்லை. ஒரு நவகாலனித்துவ அடிமைகளாய் இருக்க வேண்டி இருக்கும். இப்போ சிங்களவ்ர்கள் இருப்பது போல.

எமது, நிலத்தை, மேல்போக்கு சுயமரியாதையை, அடையாளத்தை பாதுகாத்த படி, ஆனால் அடிமைகளாய் இருந்திருப்போம்.

மெய்யான சுதந்திரம் என்பது, ஒரு பத்து நாடுகளால்மட்டுமே அனுபவிக்கப் படுகிறது. ஏனையவை எல்லாம் எதோ ஒரு பெரிய நாட்டின் அடிமைகளாகவே இருக்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை 70 லிருந்து ஒரே இலங்கை கொள்கை தான் இந்தியாவிடம்.

1) இலங்கையை தம் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது

2) இதற்க்கு இலங்கையின் ஜேவிபி கிளர்சியை, மலையக தமிழர் எண்ணிக்கையை அல்லது இன முரணை பயன் படுத்துவது

3) தமிழரும், சிங்களவரும் இந்தியாவை நம்பி மட்டுமே வாழ முடியும் என்ற இக்கட்டை ஏற்படுத்துவது

4) தனித்தமிழ் ஈழம் அமையக் கூடாது. ஏனென்றால் இதை வைத்து மிரட்டித்தான் இலங்கையை பணிய வைக்க முடியும். ஈழம் அமைந்தால். இலங்கை மீதான இந்தியாவின் பிடி போய்விடும். இலங்கை காலத்துக்கும் காலை சுற்றிய பாம்பாய் போய்விடும்.

இதுதான் இந்திய இலங்கை கொள்கை. யார் வந்தாலும் இந்த அடிப்படை மாறாது. மோடி இதை கொஞ்சம் எஜமான் தோரணையில் செய்கிறார். அவ்வளவே.

70,80,90 களில் இருந்த இலங்கை சார்பான‌ கொள்கை தற்சமயம் இல்லை ( அல்லது அதன் ஒரிஜினல் ரூபத்தில் இல்லை ).
 
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இந்தியா ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை ஆசுவாசப் படுத்தியிருக்கிறது. பெரும் ஆபத்தும் அதைவிட பெருந்தொகையான பாதுகாப்புச் செலவும் அதுபோல் சர்வதேச அரசியலில் ஏற்பட இருந்த சுழலும் தணிக்கப்பட்டிருக்கிறது.
 
இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டதே இந்தியாவின் பழைய அரசியல் கொள்கைக்கு கிடைத்த தோல்விதான். அதே கொள்கையை திரும்பவும் தூசு தட்டி எடுப்பார்களா ? 
 
அதைவிட இப்போது ஏற்பட்டுள்ள இந்திய அமெரிக்க நட்பு இலங்கை சார்பான இந்தியக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
 
இலங்கை சார்பாக இருநாடுகளும் முரன்படா நிலை ஒன்றிலேயே நகர்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க ஆதரவு அவசியம். அதே நேரம் அமெரிக்கவிற்கு இந்து சமுத்திர பாதுகாப்பு சம்பந்தமான வேலைத்திட்டம் ஒன்று இருக்கிறது. இந்த வேலைத்திட்டத்தில் இலங்கையும் ஒரு புள்ளி. 
 
ஆகவே அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு இந்தியா வளைந்து கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கும் நன்மைதான். தனது தனித்துவமான இலங்கைக் கொள்கைக்காக இந்தியா அமெரிக்கவுடன் பகைக்கப் போவதில்லை. இலங்கையை விட வேறுபல நன்மைகள் அமெரிக்காவல் வர இருக்கும் போது எதற்கு இதில் பிரச்சனை என்று இந்தியா நினைக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. புலிகள் தம் வளர்ச்சி பற்றி நினைத்திருக்க கூடாது. ஒரு மரபுவழி ராணுவம், கடற்புலிகள், வான் புலிகள், தனியரசு, இதை நீண்ட நோக்கில் இந்தியா ( பார்பன ஆதிக்கத்துட்பட்ட இந்தியா) விட்டுவைக்கும் என்று எண்ணியது நம் மடமை. அர்ஜூனுக்கு எப்போதே சொல்லி விளங்க படுத்தி விட்டார்கள்.

பிரபாவுக்கும் சொன்னார்கள். அவர் இவர்களையும் ஏய்த்து விளையாடலாம் எண்டு நினைத்தார். யு ஏ ஈ டீம் இந்தியாவுடன் விளையாடப் போவது போல. ஆனால் 1000:1 தான் odds. தெரிந்தும் போனார். முதல் ஓவர்களில் இவர் வெல்லுமாப் போல போக்கு காட்டிவிட்டு கடைசியில் பின்னி எடுத்து விட்டார்கள்.

1000:1 ரிஸ்க் எல்லாம் விளையாட்டில் எடுக்கலாம். வாழ்க்கையில் கூடாது. பொதுவாழ்வில், இனத்தின் எதிர்காலமே எம் கையில் தங்கி இருக்கும் போது, கூடவே கூடாது.

தமிழர் சனத்தொகை 40 லட்சம். 87 இல் திலீபனின் மரண காலத்தில், யோகி சொன்னார் -35 லட்சம் தமிழர் இறந்தாலும் தனிநாடுவரை போராடுவோம்.

இது கொள்கை உறுதிதான், ஆனால் அது தனிநபர்களுக்கு சரி. சாதாரண மக்கள் இந்த மனநிலையில் ஒரு போதும் இருந்ததில்லை.

ஈற்றில் இந்த கொள்கை உறுதி ( all or nothing suicide strategy ) ஒட்டு மொத்த அழிவில் கொண்டு வந்து விட்டது.

அவர்கள் கொள்கை படி கடைசி வரை போராடி இறந்து போய் விட்டார்கள். ஆனாலும் எஞ்சியவர்கள் வாழணுமே?

தொடர்ந்தும் all or nothing suicide strategy யில் போகாமல், வேறு வழியில்தான் போக வேண்டும்.

அதற்காக போராளிகளை மட்டம்தட்டமுடியாது .....முடிந்தவரை போராடினார்கள்....இனி மாகாணசபையை வைத்து முன்னேறுவோம்....இவ்வளவு இழப்பிற்க்கு பின்பும் கிடைத்தது மாகாணசபை தான் என தொடருவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

என்னே ஒரு வாதப் பிரதிவாதங்கள்... புல்லரிக்கிறது!!. இங்கே பிரபாகரன் தலைமையைச் சாடுபவர்கள், பிரபாகரனுக்குப் பதிலாக அன்று தலமையை ஏற்றிருந்தால்..... இன்று ஈழத்தமிழர்கள் வானில், அதற்கும் மேலாகப் பறந்துகொண்டிருப்பார்களே. நினைக்கவே இனிக்கிறது.  :D

வெண்ணை திரண்டு வந்தபோதெல்லாம் தாழி உடைந்த கதைகளையும், தாழி உடையக் குறுகிய மனம்கொண்ட சில தமிழர்களின் பங்கு அங்கு இருந்த கதைகளையும் கறையான் அரித்துவட்டதே. :(  

  • கருத்துக்கள உறவுகள்

10403059_828605247192779_376972649670258

ஆனால் கமரூன் இவர்களை சந்தித்ததால் தமிழர் வாழ்வில் ஏதாவது முன்னேர்றம் ஏற்பட்டதா என்று கேடால் இல்லை என்பதே பதில், ஆனால் மோடியின் சந்திப்புடன் ஓரளவுக்கு ஆவது ஏதாவது மாற்றம் வரும் போல் உள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசவன்னியன்.என்னால் படங்களை நேரடியாக இணைக்க முடியவில்லை???? மோடியின் வருகையுடன் தமிழருக்கு அழிவுதான் வரும்.தமிழர் பிரதேசம் எங்கும் இராமர் கோயில் வந்தால் ஆச்சரியமில்லை.இப்பலே பல வீடுகளில் குரங்குப்படம் தொங்குகிறது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே மருதனா மடத்தில் ஒரு மிகப்பெரும் அனுமார் சிலையுள்ளது.

இந்து சமயத்தை இறுகப்பற்றுவதுதான் எமக்கு அரசியல் உரிமையை பெற்றுத்தருமெண்டால் - அதைச் செய்வதில் ஒரு தப்புமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குத் தெரிய யாழ்ப்பாணத்தில் ஒரு பெருமாள் கோவிலும்(உரிமையாளர் இந்திய வமசாவளி)வல்லிபுரத்தில் ஒரு ஆழ்வார் கோவிலும்தான் இருந்தது.இப்போது அணமைக்காலத்தில் ஒரு பெரிய அனுமார் சிலையுடன் கூடிய அனுமார் கோவில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.ஆண்டாடாண்டு காலமாக அம்மன்வழிபாடும்,முருகன் வழிபாடும்,சிவன் வழிபாடும், வைரவர்இகாளி போன்ற சிறுதெய்வ வழிபாடும்தான் இருந்து வந்தது.திருஞானசம்பந்தரும்,சுந்தரரும்,அருணகிரியும: சிவனையும முருகனையும்தான் பாடினார்களே ஒழிய இடையில் வட இந்தியாவில் இருந்து கொண்டு வந்து தமிழர்ளிடத்தில் திணிக்கப்பட்ட பிள்ளையாரை க் கூட இல்லை.சம்பந்தர் இராவணன் மேலது நீறு என்றே பாடினார்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மனே வடக்குத்தாணுங்கோ - மதுரவீரன், கறுப்பண்ண சாமி, குமார தெய்வம், பத்தினி இவைதான் தமிழர் தெய்வங்கள். ஆனால் இவை யாழில் வழக்கொழிந்து 500 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

யாழில் இப்போ இருக்கும் பெயர்சொல்லும் கோவில்கள் எல்லாம் வடக்கத்தேய ஆகம முறைப்படி அமைந்ததே. இதில் கூட அனுமாரும், ராமரும் வந்தால் ஒன்றும் குறைஞ்சிடாது.

பொன்னாலை கிருஸ்ணன் கோயிலை விட்டுட்டீங்களே? பிரபா தன் "வீரத்தை" முதன்முதலில் காட்டிய இடம் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலை மறந்து விட்டேன்.அம்மன் வடக்கா????ஆத்தா,அம்மாள்,அம்பாள், மகாமாரி,கருமாரி,கண்ணகி அம்மன் .என்று உறவு முறை கூறும் தெய்வங்கள் வடக்கல்ல. தெய்வயானை ,வரலட்சுமி,பாக்கியலட்சுமி, போன்றவை வடக்கில் வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் இதை புரிந்து கொள்ள பல ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போக வேண்டும். தாயாதி வழிபாடு எம்சமூகத்தில் இருந்தது - முத்துமாரி, கருமாரி இப்படி - ஆனால் அவை காவல் அல்லது குல தெய்வங்கள் என்ற ரீதியிலேயே இருந்தன.

சிவனின் ( வடக்கத்தையான் :) ) மனைவி பார்வதி, அப்புறம் முப்பெரும்தேவிஸ், சக்தி,காளி இவை எல்லாம் வடக்குத் தெய்வங்களே.

காலப்போக்கில் கவுண்ட மணி செந்தில் காமெடி போல "அதுதான் இது" என்று சொல்லி, சகல பெண் தெய்வங்களையும் ஒரு அம்மன் எனும் உருவில் கொண்டு வந்து விட்டோம்.

ஆக இப்போ யாழ்பாணத்தவராகிய நாம் கும்பிடும் எந்த தெய்வமும் 100% தமிழ் தெய்வம் இல்லை. முருகன் கூட. சிவனின், பார்வதியின் மகன் எப்படி தமிழராய் இருக்க முடியும்.

வன்னியில், மட்டில் இப்போதும் குட்டித்தெய்வ வழிபாடு உள்ளது. ஆனாலும் ஆகம முறையே முதன்மையாய் இருக்கிறது.

எமது நாட்டில் இல்லாத சிங்கத்தை ஒருவர் தனது கொடியில் வைத்திருக்கின்றார். மிருகக்காட்சிசாலையில் மட்டும் பார்த்த புலியை இன்னொருவர் எமது கொடி என்கிறார். இதையே யாரும் கேட்பதாக தெரியவில்லை.
 
இங்கு அம்மன் அமெரிக்காவில் இருந்து வந்தாலென்ன அனுமார் ஆபிரிக்காவில் இருந்து வந்தாலென்ன.

Edited by ஜீவன் சிவா

மருதனாமடத்தில் உள்ள குரங்கு கோவிலை நானும் பாரத்தேன்.

புலவர் இதை புரிந்து கொள்ள பல ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போக வேண்டும். தாயாதி வழிபாடு எம்சமூகத்தில் இருந்தது - முத்துமாரி, கருமாரி இப்படி - ஆனால் அவை காவல் அல்லது குல தெய்வங்கள் என்ற ரீதியிலேயே இருந்தன.

சிவனின் ( வடக்கத்தையான் :) ) மனைவி பார்வதி, அப்புறம் முப்பெரும்தேவிஸ், சக்தி,காளி இவை எல்லாம் வடக்குத் தெய்வங்களே.

காலப்போக்கில் கவுண்ட மணி செந்தில் காமெடி போல "அதுதான் இது" என்று சொல்லி, சகல பெண் தெய்வங்களையும் ஒரு அம்மன் எனும் உருவில் கொண்டு வந்து விட்டோம்.

ஆக இப்போ யாழ்பாணத்தவராகிய நாம் கும்பிடும் எந்த தெய்வமும் 100% தமிழ் தெய்வம் இல்லை. முருகன் கூட. சிவனின், பார்வதியின் மகன் எப்படி தமிழராய் இருக்க முடியும்.

வன்னியில், மட்டில் இப்போதும் குட்டித்தெய்வ வழிபாடு உள்ளது. ஆனாலும் ஆகம முறையே முதன்மையாய் இருக்கிறது.

சிவ வழிபாடு ஆரியர் இந்தியா வருவதற்கு முற்பட்டது.
 
வரலாறு முக்கியம் அமைச்சரே !!
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றும் வரலாற்றசிரியன் இல்லை அமைசரே. ஒரு பொறுக்கி. அங்கங்க பொறுக்கினதை உங்களிடம் பகிர்கிறேன்.

நாம்தான் ஆரியத்தையும் வட இந்த்ஹியாவையும் போட்டுக் குழப்பி அடிக்கிறோம் என்று தோன்றுகிறது.

ஆரிய வருகைக்கு முன் வட இந்தியாவில் சிவ வழிபாடு இருந்திருக்கலாம். அதுக்காக சிவன் தமிழ் கடவுள் என்றாகாது.

சிந்து சமவெளியில் ஆதி தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். அங்கே இருக்கும் எழுத்துக்களில் கூட முந்து சிவன் என்று இருப்பதாக படித்த நியாபகம்.

ஆனால் வட இந்தியா, ஆப்கான், நேபாளம், பலூச்சிஸ்தான், திபெத் என்று சிவ வழிபாடு நடக்கும் எல்லை பிரமாண்டமாணனது.

தென்னாடுடைய சிவன், எந்த பாரிய படை எடுப்பும் தெற்கு - வடக்கு என்று நிகழாத போது எப்படி தமிழர் மத்தியில் இருந்து இந்தளவுக்கு பரவினார் என்பதும் ஆய்வுக்குரியதே.

திபெத் வாசியான (கைலாயம்) எப்படி தமிழ் கடவுளாக முடியும்?

ஏன் வட இந்தியர் ஒரு தமிழ் கடவுளை தமதாக வரித்துக்கொள்ள நேர்ந்தது?

ஒரு சிலர் சொல்கிறார்கள் - முன்பு இந்தியா முழுமையும் தமிழ் மயப்பட்டிருந்ததாகவும் பின்னர் தமிழர் தெற்கு நோக்கி நகர்ந்ததாயும்.ஆனால் இதை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்பதில்லை. சும்மா கந்தபுரிதான் Canterbury ஆகியது எனும் ரேஞ்சில் ஊர் பெயர்களை வைத்து, சில பழம்பெருமை பேசும் தமிழர்கள் சொல்லும் இட்டுகதைகளே உள்ளன ( நானறிந்த வரையில், வேறு ஆதாரம் இருந்தா அறியத்தரவும்).

என் சிற்றறிவுக்கு பட்ட வகையில் சிவன் ஒரு வட இந்திய கடவுள் என்றே படுகிறது. ஆளிண்ட பேர்த் சேர்டிபிக்கெட் கிடைச்சா நல்லாயிருக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.