Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படக் காரணமான மூன்று காரணிகள் – ஒரு அனைத்துலக ஆய்வு (சிறப்பு கட்டுரை)

Featured Replies

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படக் காரணமான மூன்று காரணிகள் – ஒரு அனைத்துலக ஆய்வு APR 13, 2015 | 11:47by நித்தியபாரதிin கட்டுரைகள்

ltte-300x200.jpgஅனைத்துலகில் செயற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் வழி ஏற்றுமதி இறக்குமதிகள் மற்றும் கேந்திரம் முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் போக்குவரத்துப் போன்றவற்றை தடுத்து நின்ற போரியல் ஆற்றல் மிக்க ஒரு அமைப்பாக விளங்கியது.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Peter Layton என்ற போரியல் நிபுணர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சிவாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது?

இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற போதிலும் ஒரு சில வெற்றிபெறுகின்றன.

25 ஆண்டுகளாக சிறிலங்கா அரசால் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்துத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டு நாட்டில் அமைதி உருவாக்கப்பட்டது. ஒரு பத்தாண்டிற்கும் மேலாகத் தொடரப்பட்ட யுத்தத்திற்கு மேற்குலக நாடுகளால் ஆதரவளிக்கப்பட்ட ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் யுத்தங்களுடன் சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தை ஒப்பிடும் போது இது எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டது என ஆராயப்படுகிறது.

இதற்குப் பிரதானமாக மூன்று காரணங்கள் உண்டு.

முதலாவதாக, எதிரியானவன் சண்டையிடுவதற்கு பொருத்தமான மூலோபாய நோக்கம் ஒன்று தேவை. சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் முதல் 22 ஆண்டுகளும் இராணுவ வழிமுறையைக் கைக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

இதுவே இப்போரை வெற்றி கொள்வதற்காக வெளிநாட்டு வல்லுனர்களால் வழங்கப்பட்ட சிறந்த ஒரேயொரு தெரிவாகக் காணப்பட்டது.

‘இப்போருக்கு எந்தவொரு இராணுவ வழிமுறையும் தீர்வாகாது. தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தை சிறிலங்கா இராணுவத்தால் வெற்றி கொள்ள முடியாது’ என 2006ல், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது இறுதிக்கட்டத்தை அடைவதற்கு முன்னர், ஓய்வுபெற்ற இந்திய  இராணுவ அதிகாரியான லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கத் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்து தடவைகள் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டனர். ஆனால் இவை வெற்றியளிக்காது இடையில் முறிவடைந்தன. 2006 நடுப்பகுதியில் நோர்வேயின் அணுசரனையுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தநிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் நான்காம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்தனர்.

இதற்குப் பதிலாக, சிறிலங்கா அரசாங்கமும் தனது மூலோபாய நோக்கத்தை மாற்றிக் கொள்வதெனத் தீர்மானித்தது. அதாவது புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதை விடுத்து போரின் மூலம் இவர்களைத் தோற்கடிப்பதென அரசாங்கம் தீர்மானித்தது.

இதில் வெற்றிகொள்வதற்கான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசு தரப்பிற்கு ஏற்பட்டது. இதனடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்த்து நிற்கக்கூடிய வலுவான ஒரு மூலோபாயத்தை சிறிலங்கா அரசாங்கம் வகுத்தது.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் முதல் 22 ஆண்டுகளும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இவ்வாறானதொரு வெற்றிகரமான மூலோபாயத்தை வகுக்கவில்லை. 2005ன் பிற்பகுதியில் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் தேர்வுசெய்யப்பட்டது. இந்த அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படைப் பலவீனம் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப வித்தியாசமான மூலோபாயக் குறிக்கோளைத் தெரிவுசெய்தது.

புலிகள் அமைப்பின் பிரதான பிரச்சினையாக அவர்களது மனிதவளமாகும். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையின் 12 சதவீதம் மட்டுமே தமிழர்களாவர். சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுள் 300,000 வரையானவர்கள் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகக் காணப்பட்டனர்.

இதற்கும் மேலாக, ஒரு அமைப்பு என்ற வகையில் புலிகளின் அதிகாரம் நலிவுற்றிருந்தது. 2006ல், புலிகள் அமைப்புத் தனக்கான ஆளணிகளைப் பலவந்தமாக இணைத்துக் கொண்டது. இதில் சிறுவர்களே அதிகமாவர்.

போரியல் நடவடிக்கைகளில் புலிகள் பெற்றிருந்த பலம் கூட இவர்களுக்கு எதிராகத் திரும்பியது.  குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டளை வழங்கல் கட்டமைப்பு, மரபுசார் போர் உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை மற்றும் அனைத்துலக ஆதரவை மிக ஆழமாக நம்பியிருந்தமை போன்றன புலிகளின் போரியல் பலவீனங்களாகக் காணப்பட்டன.

இரண்டாவதாக, புலிளைத் தோற்கடிப்பதற்கு மிகவும் உயரியதொரு மூலோபாய வெற்றி தேவைப்பட்டது. அதாவது இராஜதந்திரம், பொருளியல், இராணுவ நடவடிக்கைகள், தகவல் நடவடிக்கைகள், இயலுமைகள் தொடர்பாக ஆராய்தல் உட்பட பல்வேறு புலனாய்வு சார் விடயங்களை உள்ளடக்கிய உயரியதொரு மூலோபாயத்தை சிறிலங்கா அரசாங்கம் வகுக்கவேண்டியிருந்தது.

இந்தவகையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனக்கு முன்னால் ஆட்சி செய்த அரசாங்கங்களால் வகுக்கப்பட்டு தோல்வியுற்ற குறுகிய இராணுவ மூலோபாயங்களை விடுத்து இதற்குப் பதிலாக ஒரு காத்திரமான முழுமையான மூலோபாயத்தை வகுக்கத் தீர்மானித்தது.

இதன் பிரகாரம், மிகவும் அடிமட்டச் செயற்பாடுகளை வழிகாட்டுவதற்காக ஒரு முழுமையான உயரிய மூலோபாயம் வகுக்கப்பட்டது.

பொருளாதார விடயத்தில், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மொத்தத் தேசிய உற்பத்தியின் நான்கு சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்குவதெனவும், இராணுவத்தினருக்கு வரவுசெலவுத் திட்டத்தின் 40 சதவீதத்தை ஒதுக்குவதெனவும் புதிய அரசாங்கம் தீர்மானித்தது.

இது சிறிலங்கா அரசின் வரையறுக்கப்பட்ட நிதி வளங்களை விட அதிகமாக இருந்ததால் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களை மானியமாகவும் கடனாகவும் பெற்றுக் கொண்டது. எண்ணெய் மற்றும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி உட்பட பல்வேறு நிதிசார் உதவிகள் ஈரான், லிபியா, ரஸ்யா மற்றும் பாகிஸ்தானால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து தனக்குத் தேவையான 60 சதவீத இராணுவத் தளபாடங்கள் மற்றும் நிதியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கமானது இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய வெற்றிகரமான நடவடிக்கைகளால் 32 நாடுகளில் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டது. இது சிறிலங்காவிற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

முக்கியமாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு தொடரப்பட்டது. இந்தியா மட்டுமே சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் தீட்டப்பட்ட உயரிய மூலோபாயத்திற்குக் காத்திரமான பங்களிப்பையும் தலையீட்டையும் மேற்கொள்ளக்கூடிய ஒரேயொரு நாடாகக் காணப்பட்டது.

செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஆதரவை அனைத்துலக நாடுகளுக்கு வழங்கத் தொடங்கியது.

இந்த வகையில் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் உலகின் மிகவும் முன்னணி வாய்ந்த தற்கொலைக் குண்டுத்தாரிகளைக் கொண்ட விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை வழங்கியது.

வெளிநாடுகளில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவுகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலமும், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டமை, கரையோரப் பாதுகாப்புக் கலம் ஒன்றை சிறிலங்காவுக்கு வழங்கியமை மற்றும் மிக முக்கிய தேசிய கடற்படைக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைமை போன்றவற்றை வழங்கியதன் மூலமும் புலிகள் அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியது.

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன தத்தமது நாடுகளில் புலிகள் அமைப்பின் ஆதரவுக் குழுக்களால் புலிகளுக்காக செயற்பட்ட நிதிசேகரிப்பு வலைப்பின்னல்களை அழிப்பதற்கான சட்டத்தை இயற்றின. இதன்மூலம் புலிகள் அமைப்பின் நிதிப் பலமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

சிறிலங்கா அரசாங்கமானது உள்நாட்டில் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது. முன்னைய எந்தவொரு அரசாங்கங்களாலும் வெற்றிகொள்ளப்படாத யுத்தத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை இலங்கையர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்த அரசாங்கத்தின் போரியல் அணுகுமுறைகள் இத்தகையதொரு நம்பிக்கையைத் தோற்றுவித்தது. மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் உணர்ந்து கொண்டது.

போரை முன்னெடுக்கும் அதேவேளையில் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தொடங்கியது. இதற்கும் மேலாக, வறுமையை ஒழிப்பதற்கான பல்வேறு தேசியத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

எடுத்துக்காட்டாக, ஏழை விவசாயிகளுக்கான உரமானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகள் போருக்குத் தேவையான நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதனால் வெளிநாடுகளின் நிதியுதவி தேவைப்பட்டது.

ஆனால் சமாதானத்திற்கான போர் என்பதை மக்கள் மத்தியில் நம்பச்செய்ய வேண்டியதும் மிகவும் அவசியமானதாக இருந்தது. இச்செயற்பாடுகள் தொடரப்பட்டன.

2005 இற்கு முன்னர், ஆண்டுதோறும் சிறிலங்கா இராணுவத்திற்காக 3000 வீரர்களை இணைத்துக் கொள்வது மிகவும் கடினமானதாகக் காணப்பட்டது. 2008ன் பிற்பகுதியில், மாதம் ஒன்றுக்கு 3000 இராணுவ வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டமை, மக்களின் ஆதரவு பெருகியமை போன்றன சிறிலங்கா இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தன.

குறிப்பாக 2005ல் 120,000 ஆகக் காணப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை 2009ல் 200,000 ஆக உயர்ந்தது.

மூன்றாவதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட உயரிய போரியல் மூலோபாயத்தை நிறைவு செய்வதற்கு மதிநுட்பமான மூலோபாயத்தை வரையறுக்க வேண்டிய நிலையேற்பட்டது.

அதாவது எதிரியின் பலங்களை எதிர்த்து நிற்பதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ளும் அதேவேளையில் எதிரியின் பலவீனங்களையும் பயன்படுத்துவதற்கான மதிநுட்பம்மிக்க மூலோபாயம் உருவாக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது.

புலிகளின் ஆளணி வளம் 20,000-30,000 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்கா அரசாங்கத்தின் மதிநுட்பமான மூலோபாயம் வெற்றிபெற்றது.

அதாவது 2006 நடுப்பகுதியில் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறிலங்காப் படைகள் ஏற்கனவே பாரியதொரு வெற்றியைப் பெற்றிருந்தன.

2004ன் பிற்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த கட்டளைத் தளபதியான கேணல் கருணா இந்த அமைப்பிலிருந்து விலகினார். இவருடன் 6000 வரையான புலி உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து பிரிந்தனர். இதனால் கிழக்கில் புலிகளின் நிலை மிக மோசமாக வீழ்ச்சியுற்றது.

கருணாவின் பிளவானது புலிகள் அமைப்பின் போரியல் தொடர்பான மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களைப் பெற உதவியது.

முக்கியமாக, முதன் முதலாக, சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை சேகரித்து அவற்றை அறிக்கையாக்குவதற்கு கருணாவின் பிளவு வழிவகுத்தது. இந்தப் பிளவானது புலிகள் அமைப்பு பலவீனம் அடையப் போவதை உறுதிப்படுத்தியது.

நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் நாடு பூராவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.

உயர் இலக்குகள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை புலிகள் நடத்தினர். சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புச் செயலர், பாகிஸ்தான் உயர் ஆணையாளர், இராணுவத் தளபதி போன்ற உயர் இலக்குகளைக் குறிவைத்துப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.

புலிகளின் இத்தகைய போரியல் திறன்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையினரின் அதிகரித்த ஆளணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தால் சிவில் பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு கிராமங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறிலங்காவின் தலைநகருக்குள் செயற்பட்ட புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை மையங்கள் கண்டறியப்பட்டு அவை நிர்மூலமாக்கப்பட்டன. இது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவின.

சிறிலங்கா அரசாங்கத்தால் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகள் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வழிவகுத்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான இலக்காக புலிகள் மீதான தாக்குதல் காணப்பட்டது. புலிகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடப் புலிகளை அழிப்பதே சிறிலங்காப் படைகளின் பிரதான இலக்காகக் காணப்பட்டது.

புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் மீது சமநேரத்தில் பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் புலிகளைத் திணறடிப்பதே சிறிலங்காப் படைகளின் நோக்காகக் காணப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் மூலம் இவ்வாறான தந்திரோபாய நலனைப் பெறமுடிந்தது.

இந்த இராணுவ நடவடிக்கைகளில் சிறிய, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, உயர் நடமாடும் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தக் குழுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளுள் ஊடுருவி உயர் பெறுமதி மிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டன.

புலிகளின் முன்னணி நிலைகளுக்கான வழங்கல்கள் மற்றும் தொடர்பாடலை இடையூறு செய்வதற்கான தாக்குதல்களில் இந்தக் குழுக்கள் ஈடுபட்டன. சிறிய அணிகள் மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இவர்கள் புலிகளின் நிலைகள் மீது வான் மற்றும் ஆட்லறி, மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான கட்டளையை வழங்குவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறான பல்வழி சமநேரத் தாக்குதல்கள் புலிகள் தமது நடமாடும் சுதந்திரத்தை இழப்பதற்கு வழிவகுத்தன. இதன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.

சிறப்புப் படைகள் உட்பட இராணுவ வீரர்களைக் கொண்ட சிறிய குழுக்கள் சிறிலங்கா தரப்பின் புதியதொரு போரியல் அணுகுமுறையாக உட்புகுத்தப்பட்டனர். நன்கு பயிற்சி வழங்கப்பட்ட சிறப்பு காலாற் படையினர் புலிகளின் நிலைகளுக்கு மிக நெருக்கமாகப் பணிபுரிந்தனர்.

புலிகளின் இராணுவத் தலைமைத்துவ இலக்குகள் மீதான தாக்குதல்களில் 10,000 வரையான சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் புலிகளின் கட்டளை வழங்கும் தளபதிகள் சிலர் கொல்லப்பட்டனர். இதனால் புலிகளின் கட்டளைச் சங்கிலியில் முறிவு ஏற்பட்டது.

‘நாங்கள் நான்கு பேரைக் கொண்ட சிறிய குழுக்களைப் போரில் ஈடுபடுத்தினோம். இவர்கள் ஆழமான காடுகளுக்குள் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டனர். இவர்கள் தம்மில் தாமே தங்கியிருந்து சுதந்திரமாகச் செயற்பட்டனர். ஆகவே ஒரு பற்றாலியனில் மிகப் பெரிய எண்ணிக்கையில் நான்கு பேரைக் கொண்ட குழுக்கள் காணப்பட்டன. இக்குழுக்கள் மூலம் நாங்கள் பரந்தளவில் போரிடுவதற்கான சாதகமான சூழலைப் பெற்றோம்’ என இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டார்.

இவரே நான்கு பேரைக் கொண்ட சிறிய குழுக்களைப் போரில் ஈடுபடுத்துவதற்கான எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியிருந்தார். நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது 1500 சிறிய குழுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. 2008ல் இந்த எண்ணிக்கை 30,000 ஆக உயர்ந்தது.

சிக்கலான அடர்ந்த காடுகளுள் ஆழ ஊடுருவிப் போர் செய்வதற்கான பயிற்சிகளைப் பெற்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் பொதுவாக போரியல் ஆளுமையைப் பெற்ற, அதிக நம்பிக்கையைக் கொண்ட வீரர்களாகக் காணப்பட்டனர். இதன்மூலம் இவர்கள் இரவிலோ அல்லது பகலிலோ எந்தவேளையிலும் போரிடுவதற்கான ஆற்றலைப் பெற்றிருந்தனர்.

தந்திரோபாய மட்ட முயற்சிகள் மற்றும் புதிய போர் முறைமையைப் பெற்ற சிறிலங்கா இராணுவமானது முன்னுதாரணமான ஒரு அமைப்பாகப் பரிமாணம் பெற்றது.

அனைத்துலகில் செயற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் வழி ஏற்றுமதி இறக்குமதிகள் மற்றும் கேந்திரம் முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் போக்குவரத்துப் போன்றவற்றை தடுத்து நின்ற போரியல் ஆற்றல் மிக்க ஒரு அமைப்பாக புலிகள் அமைப்பு விளங்கியது.

இவ்வாறான தாக்குதல்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிய மற்றும் விரைவுப் படகுகளையும் கண்ணாடி இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படகுகளையும் தாக்குதல் கலங்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கரும்புலிகளைக் கொண்ட படகுகள் போன்ற பல்வேறு போரியல் அணுகுமுறைகளைப் புலிகள் கைக்கொண்டனர்.

நான்காம் கட்ட ஈழப்போரின் போது, புலிகளால் பயன்படுத்தப்பட்ட 30 தாக்குதல் கலங்கள் மற்றும் 8-10 கரும்புலிப் படகுகள் போன்றன சிறிலங்கா கடற்படையின் 60-70 கடல்மைல் வேக விரைவுத் தாக்குதல் கலங்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சிறிலங்கா கடற்படையினரின் இத்தகைய கடற் தாக்குதல்கள் அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைமையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது.

கடற் போக்குவரத்து நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதினொரு பாரிய சரக்குக் கப்பல்களைப் பயன்படுத்தினர். இவை உலகம் பூராவும் புலிகள் தமக்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்பட்டன.

ஆனால் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர், இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து மூழ்கடித்தனர். இதில் சிறிலங்காவின் புதிய போரியல் முறைமையும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களும் பயன்படுத்தப்பட்டன.

புலிகளின் இறுதி ஆயுதக் கப்பல் 2007ன் பிற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்டது. சிறிலங்கா கரையிலிருந்து 3000 கிலோமீற்றருக்கு அப்பால் அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகில் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட மூன்று காரணிகளின் ஒட்டுமொத்த விளைவாக சிறிலங்கா இராணுவம் தனது மூலோபாய இலக்கை அடைந்து கொண்டது.

அதாவது உயரிய போரியல் மூலோபாயம், சிறிய இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி மதிநுட்பமாகக் கையாளப்பட்ட மூலோபாயம் போன்றன சிறிலங்கா அரசாங்கத்தின் போர் வெற்றிக்குக் காரணமாகியது.

இப்போரியல் மூலோபாயமானது புலிகள் அமைப்பை முற்றிலும் அழித்தது. சிறிலங்கா அரசாங்கமானது தனது போரியல் மூலோபாயத்தை மாற்றியமைத்து புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிரூபித்தது.

புலிகள் தமது மரபுசார் போரியல் உத்தியைத் தொடர்ந்தும் கையாண்டதன் மூலம் முன்னர் வெற்றியடைந்த போதிலும் பின்னர் தோல்வியடைய நேரிட்டது. சிறிலங்கா அரசாங்கம் முன்னைய போரியல் முறைமை மூலம் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த போதிலும் தனது புதிய போரியல் மூலோபாயம் மூலம் வெற்றியைப் பெற்றது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களைக் கருத்திலெடுக்காது, இராணுவப்படையை மிகவும் அப்பட்டமாக, கொடூரமாகப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் போரை மேற்கொண்டதன் மூலமே அதனை வெற்றி கொள்வது சாத்தியமானது என சிலர் விமர்சிக்கின்றனர்.

போரானது இயற்கையான கொடூரம் மற்றும் வன்முறை மூலம் மேற்கொள்ளப்பட முடியும் எனவும் தொடர்ந்தும் அது மிக இலகுவான வழியில்  மேற்கொள்ளப்பட முடியாது எனவும் சிலர் கூறுகின்றனர். எதுஎவ்வாறிருப்பினும், இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் வாதங்களைத் தாண்டி இக்கட்டுரையின் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது தனது போரியல் உத்தியை மாற்றியமைத்ததன் மூலமே போரை வெற்றி கொள்ள முடிந்தது என்பதை அழுத்தமாகக் கூறுவதே இதன் நோக்காகும்.

இதனைக் கண்டுபிடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு 22 ஆண்டுகளுக்கு மேல் பிடித்துள்ள போதிலும் தனது புதிய போரியல் மூலோபாயம் மூலம் சிறிலங்கா அரசாங்கம் போரில் வென்றுள்ளது.

இதனடிப்படையில், மேற்குலக நாடுகளின் தலைமையில் கிளர்ச்சிகளை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு இரண்டு போர்கள், அதில் கொல்லப்பட்ட வீரர்கள், பொதுமக்கள் போன்றவற்றின் விபரம் வருமாறு:

                                   போரில் கொல்லப்பட்டவர்கள் போரில் கொல்லப்பட்டவர்களின் வகைகள் சிறிலங்கா யுத்தம்(1983-2009) ஈராக் யுத்தம்

(2004-09) ஆப்கானிஸ்தான் யுத்தம்  (2001-14)  போரில் ஈடுபட்ட நேசப் படையினர்        29%     17%         29% எதிரிப் படையினர்        37%      22%         46% பொதுமக்கள்        34%      61%         25%

இந்த அட்டவணை மூலம் மூன்று வெவ்வேறு உள்நாட்டு யுத்தங்களில் கிளர்ச்சிக் குழுக்களை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போரியல் மூலோபாயத்தின் விளைவாகப் கொல்லப்பட்டவர்களின் வீதங்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றுள் ஈராக் போரில் கொல்லப்பட்டவர்களில் 61 சதவீதத்தினர் பொதுமக்களாவர். ஆப்கானிஸ்தானில் இது 25 சதவீதமாகும். சிறிலங்கா போரில் படுகொலை செய்யப்பட்டவர்களுள் 34 சதவீதத்தினர் பொதுமக்களாவார்.

ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா போரானது ஏமாற்றப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்கள் வெற்றி கொள்ளப்படவில்லை. இங்கு சமாதானமும் எட்டப்படவில்லை. மக்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சிறிலங்காவில் 2009 உடன் துப்பாக்கிகள் மௌனமாகி விட்டன. இங்கு ஏழு சதவீதத்தால் மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. வேலையற்றோர் பிரச்சினை குறைவாக உள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத சிறிலங்கா, உள்நாட்டுப் போரை வெற்றி கொண்டு நாட்டில் அமைதியை உருவாக்கியுள்ளது. ஆகவே போரில் வெற்றி கொள்வதற்கு உகந்த மூலோபாயம் வரையறுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

Peter Layton has considerable defense experience and a doctorate in grand strategy.

http://www.puthinappalakai.net/2015/04/13/news/5179

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளரின் அரைவேக்காட்டுத் தனம், ஏட்டுச் சுரைக்காய் போன்றது.  உலகத்தின் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ உதவியுடன், இனவாத சிறிலங்கா அரசு தொடுத்த போரில்,  போர் நெறிகள் வேண்டுமென்றே மீறப்படுவதைக் கண்டுகொள்ளாத ஐக்கிய நாடுகள் சபை போன்ற வெங்காயங்கள், ஐக்கிய நாடுகள் சபையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச பயங்கரவாதி அமெரிக்கா, இவற்றோடு இந்திய காங்கிரஸ் அரசாங்கம், தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் ராஜபக்சேவின் தேர்தல் வெற்றிக்கு புலிகள் வழிவகுத்தது,   இவை மட்டுமே புலிகளின் தோல்விக்கு காரணமான 4 காரணிகள் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுன், கோசான் இருவரும் எங்கிருந்தாலும், தாமதிக்காமல் உடனடியாக மேடைக்கு வருமாறு தலீவர் அழைக்கிறார்.

எனக்கு தெரிஞ்சது ஒரே காரணம் தான் . அது சமாதான பேச்சுவார்த்தை . 1. சமாதான கால கட்டத்தில் எப்படியும் ஒரு விடிவு பிறக்கும் என அதிகம் புலிகள் நம்பியிருந்தது . அந்த கால கட்டங்களில் போர் சம்மந்தப்பட்ட பயிற்சிகளோ அல்லது ஆயுத கொள்முதல்களோ அதிகம் செய்யாமல் ( சர்வதேசத்திடம் நல்ல பெயர் வாங்க ) தவிர்த்தது மட்டுமே. மேலும் நாலு வருடங்கள் அமைதியான வாழ்க்கை என்கிற பெயரில் சுகபோகதிற்கு ஆசைப்பட்டு புலிகளை விட்டு பலர் விலகினார்கள். சிலர் துரோகிகள் ஆனார்கள் . 2. மேலும் அதே கால கட்டத்தில் சமாதானத்தின் தூதர்கள் அனைவரும் மிக சரியாக புலிகளின் பலம் பலவீனம் அனைத்தையும் கணித்து விட்டார்கள் . இலங்கை அரசும் ஆயுதங்களை வாங்கி குவித்து இடையூறு இன்றி நாலு வருடம் நல்ல திட்டம் போட்டு போரிட்டனர். ( ஏனெனில் சமாதான காலகட்டத்தில் ராணுவம் சுறுசுறுப்பாக திட்டம் போட்டது ) 3. அத விட்டுட்டு சர்வதேசம் புடுங்குச்சு, இந்தியா நோன்டுச்சுன்னு கடுப்ப கெளப்பிகிட்டு . முப்பது வருடம் புடுங்க முடியாத சர்வதேசமும் , இந்தியாவும் திடீர்னு புலிகளை புடிங்கிடுச்சாக்கும் ... ராஜபக்ஷே ஜெயித்து இருக்காவிட்டாலும் ரணில் போரை தொடங்கி இருப்பார். எதோ தேர்தலை புலிகள் புறக்கணித்தது தவறுன்னு ஒரு கூட்டம் . கோடையில மண்ட காய வச்சிக்கிட்டு

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க தமிழ்ப்பைத்தியம்.. :D

உண்மைதான்.. ஏதோ மகிந்தவும், கோத்தவும்தான் துவக்கு பிடிச்சமாதிரி நினைக்கினம்.. மற்ற ஜனாதிபதிமாருக்கு இந்த மோட்டு தைரியம் (இன அழிப்பு குற்றச்சாட்டில் வந்து முடிந்தது.) வரவில்லை என்பதுதான் ஒரே வித்தியாசம்.

நான் இவ்வளவு காலமும் புலிகள் போரை தொடக்கிவிட்டு மூளையாக :D மௌனித்தார்கள் என்று அல்லோ இருக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு எப்பவும் விமர்சனமாக விமர்சனங்களில் இருந்தே  எழுதப்படுகிறது.

 

சுயவிமர்சனமல்ல துயரம். நமது வரலற்றின் முக்கிய திருப்பு முனையான ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் நமது பங்களிப்பு இல்லாமல் எழுதப்படுகிற சூழல்தான்  துயரமானது.

 

எதிர் விமர்சனம் சுய விமர்சனம் ரீதியான ஆய்வுக்கு யாழ்க்களம்கூட நத்தை வேகத்தில்தான்  தயாராகி வருகிறது. இதனால் கண்மூடித்தனமான எதிர்ப்புக்குரலே விமர்சனமாக கோலோச்சுகிறது.

 

இன்னும் நாம் இருளில்  

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கெரில்லா அமைப்புக்கே.. பாடம் எடுக்கிறாங்க.

 

சிறீலங்கா படைகளின் வடக்கு கட்டளை அமைப்பை அராலியில் வைத்து.. புலிகள் தகர்த்த போதும்.. அந்தக் காலத்தில் கூட..போரில் புலிகளால் முழுமையாக வெல்ல முடியல்ல.

 

காரணங்கள் பல. சுய நலமிக்க.. சுயநலத்துக்கு போராட்டத்தை காட்டிக்கொடுத்துப் பிழைக்கக் கூடிய.. மக்கள் கூட்டத்தில் இருந்து எழுந்து புலிகள் போராட வேண்டி இருந்தமையும் ஒரு காரணம். :icon_idea::)

 

2009 மே தோல்விக்கு.. சிறீலங்காவில் இருந்த அகக் காரணிகளை விட புலிகளுக்கு அதற்கு வெளியில் இருந்த புறக்காரணிகளை சமாளிப்பதே சவாலானதாக இருந்தது. அது புலிகளுக்கு மட்டுமான ஒன்றல்ல. உலகில் அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும்.. இது பொதுவானது. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம் சமர்ப்பித்த அபாக்கியமும் அதில் கலந்திருந்தது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்சது ஒரே காரணம் தான் . அது சமாதான பேச்சுவார்த்தை . 1. சமாதான கால கட்டத்தில் எப்படியும் ஒரு விடிவு பிறக்கும் என அதிகம் புலிகள் நம்பியிருந்தது . அந்த கால கட்டங்களில் போர் சம்மந்தப்பட்ட பயிற்சிகளோ அல்லது ஆயுத கொள்முதல்களோ அதிகம் செய்யாமல் ( சர்வதேசத்திடம் நல்ல பெயர் வாங்க ) தவிர்த்தது மட்டுமே. மேலும் நாலு வருடங்கள் அமைதியான வாழ்க்கை என்கிற பெயரில் சுகபோகதிற்கு ஆசைப்பட்டு புலிகளை விட்டு பலர் விலகினார்கள். சிலர் துரோகிகள் ஆனார்கள் . 2. மேலும் அதே கால கட்டத்தில் சமாதானத்தின் தூதர்கள் அனைவரும் மிக சரியாக புலிகளின் பலம் பலவீனம் அனைத்தையும் கணித்து விட்டார்கள் . இலங்கை அரசும் ஆயுதங்களை வாங்கி குவித்து இடையூறு இன்றி நாலு வருடம் நல்ல திட்டம் போட்டு போரிட்டனர். ( ஏனெனில் சமாதான காலகட்டத்தில் ராணுவம் சுறுசுறுப்பாக திட்டம் போட்டது ) 3. அத விட்டுட்டு சர்வதேசம் புடுங்குச்சு, இந்தியா நோன்டுச்சுன்னு கடுப்ப கெளப்பிகிட்டு . முப்பது வருடம் புடுங்க முடியாத சர்வதேசமும் , இந்தியாவும் திடீர்னு புலிகளை புடிங்கிடுச்சாக்கும் ... ராஜபக்ஷே ஜெயித்து இருக்காவிட்டாலும் ரணில் போரை தொடங்கி இருப்பார். எதோ தேர்தலை புலிகள் புறக்கணித்தது தவறுன்னு ஒரு கூட்டம் . கோடையில மண்ட காய வச்சிக்கிட்டு

 

 

ஒரு கட்டத்துக்கு மேல் 

புலிகள் களத்தில் சமபலத்துக்கு வந்தபின்னர்

அல்லது அதற்கும் சற்று அதிகமாக வந்தபின்னர்

அடுத்த கட்டம் என்பது இந்த சமாதானப்பேச்சுத்தான்...

இதைத்தவிர்க்க புலிகள் பட்டவைகளை அதனுடன் இருந்தோர் அறிவர்

ஆனால் தவிர்க்கமுடியாதபடி 

அழுத்தங்களும்

அழிக்கப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தல்களும்......

சமாதானப்பேச்சுக்கு போன நாள் கூட புலிகளைப்பொறுத்தவரை கரி நாளாகவே கணிக்கப்பட்டது

பலமுறை அன்ரன் பாலசிங்கம் அவர்களே இதை பல இடங்களில் சொல்லி கவலைப்பட்டுள்ளார்....

 

சமாதானப்பேச்சுக்கு போகாது அழிந்திருந்தால்..

இன்று முரண்டுபிடித்து அழிந்தார்கள் என எழுதிக்கொண்டிருப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமான  அக புற காரணிகளை விரிவாக ஆராய விவாதிக்க  நமக்கு கழமில்லை. புத்தகமாக எழுதுவது பார்ய பணி. மேலும் அது ஒரு வழிப்பதையே. புறக்காரணிகளை மட்டுமே நாம் எழுதுகிறோம். அக புறக் காரணிகள் சேர்ந்ததுதான் யானையின் முழுமை. அல்லாவிட்டால் குருடர்கள் யானை பார்த்த கதைதான்.  

 

பறங்கி ஆறு தாண்டி பாலி ஆற்றுக்கு மேல் பின்வாங்குவதை மக்களை வைதிருப்பதை எதிர்த்தவர்கலுள் நானும் ஒருவன். காடுகளில் இருந்து வெளியேறி காட்டுக்கு வெளியில் முறைசார் அரசு யந்திரத்தைக் கட்டியபோதே அககாரணிகள்  ஆரம்பித்துவிட்டது. கிறு குழுக்ககளாக சிங்கள தமிழ் காடுகளுக்கு பின்வாங்குவதை  தவிர்த்து கடற்கரை நோக்கி முன்னேற நிர்ப்பந்திதவர்கள் பற்றியெல்லாம் இன்றுவரை பேச்சில்லை.  அரசியல் இராணுவ மூல உபாயங்கள் பரற்றியும் தந்திரோபாயங்கள்பற்றியும். வன்னியில் ஓரளவுக்கு விவாதங்கள் இடம்பெற்றுள்ளது.. மேற்படி விவாதங்களில் பங்குபற்றிய சிலர் இன்னும் உயிர் தப்பி வாழ்கிறார்கள். அவர்கள் எழுத வேண்டும். இன்னும் அதற்க்கான கழங்கள்கூட இன்னும் உருவாகவில்லை.

 

 

 

Edited by poet

ஒருவரும் இல்லை  எங்களால் நாங்கள் அழிந்தோம்.   காட்டி கொடுத்தோம்  ,எதிராக இயங்கினோம்,    எது உண்மை என்பதை ஏ`ற்று கொள்ள் தயங்கினோம்.

நமக்கு  நாமே குழிபறித்தோம்.

இந்த கட்டுரையாளர் எப்படி பிரியாணி செய்யலாம் என்று எழுதுவதற்கு தான் லைக்கு .
 
வந்திட்டங்கள் " புதினைப்பலகை " உங்களுக்கு வேற வேலை இல்லையா ? 
 
இதனை விட போய் குடும்பம் நடத்துவது எப்படி என்று யோசிங்கோ ....

இந்த கட்டுரையாளர் எப்படி பிரியாணி செய்யலாம் என்று எழுதுவதற்கு தான் லைக்கு .

 

வந்திட்டங்கள் " புதினைப்பலகை " உங்களுக்கு வேற வேலை இல்லையா ? 

 

இதனை விட போய் குடும்பம் நடத்துவது எப்படி என்று யோசிங்கோ ....

சரியாக சொன்னீர்கள் பிரபா....

ஒரே  ஒரு  காரணம் தான் உண்மையான  விசுவாசிகள் ,பற்றுடன்  செயல்பட்டவர்களை  புறம் தள்ளி வெறும் ஜால்ராக்களை வாய்சொல் வீரர்களை  நம்பியது தான் அழிவுக்கு  முழுமையான காரணம் ..

 

இங்கே பல  உதாரணம் இருக்கு  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான விசுவாசிகள் வெளியிலை வந்து தன்னினம் என்றும் பாராமல் காட்டிக்கொடுத்ததுதான் இன்னும் பெரிய விசுவாசம்.  :D  :lol:

பக்கத்தில இருந்த  ஜால்ராக்கள்  தான்  காட்டியும்  கொடுத்து வெளியில் வந்தவன்  எல்லாம் சிவனே  என்றுதான்  இப்பவும்  இருக்கிறான் ,ஆனால் இந்த  வாய்சொல்  வீர்கள் இன்னும்  நாடு  பிடிச்சு  தாறம்  என்று  இப்பவும்  கூவீனம் கவனிப்பதில்லையா   :icon_idea:

பக்கத்தில இருந்த  ஜால்ராக்கள்  தான்  காட்டியும்  கொடுத்து வெளியில் வந்தவன்  எல்லாம் சிவனே  என்றுதான்  இப்பவும்  இருக்கிறான் ,ஆனால் இந்த  வாய்சொல்  வீர்கள் இன்னும்  நாடு  பிடிச்சு  தாறம்  என்று  இப்பவும்  கூவீனம் கவனிப்பதில்லையா   :icon_idea:

 

அப்படியென்றால் நீங்கள் சிவனே என்று இருக்க இந்த வாய்சொல் வீரர்கள் நாடு பிடித்து தருவதாக கூவீனம் என்று சொல்லுறீங்க அஞ்சரன் சார்.

பக்கத்தில இருந்த  ஜால்ராக்கள்  தான்  காட்டியும்  கொடுத்து வெளியில் வந்தவன்  எல்லாம் சிவனே  என்றுதான்  இப்பவும்  இருக்கிறான் ,ஆனால் இந்த  வாய்சொல்  வீர்கள் இன்னும்  நாடு  பிடிச்சு  தாறம்  என்று  இப்பவும்  கூவீனம் கவனிப்பதில்லையா   :icon_idea:

உங்களுக்கு தெரிந்தால் அவர்களை வெளிக்கொண்டு வாருங்கள் ..மக்கள் நிட்சயமாக அவர்களை ஒதுக்குவார்கள் . அதனை விட்டிட்டு சும்மா சொல்லக்கூடாது ....
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான விசுவாசிகள் வெளியிலை வந்து தன்னினம் என்றும் பாராமல் காட்டிக்கொடுத்ததுதான் இன்னும் பெரிய விசுவாசம்.  :D  :lol:

பச்சை முடிஞ்சுட்டுது ........

சிரிப்பு முடியல்ல 

நான் 1990ஆம் ஆண்டே கணித்துவிட்டேன் இது ஒரு கேடு கெட்ட இனம்.
புலிகள் இல்லது போகும் காலம் மிக விரைவில் என்று.
அவர்களது அசாதாரண அர்ப்பணிப்பால் 
30 வருடம் தம்மை தீயில் போட்டு எரித்து தக்க வைத்தார்கள். 
 
தோற்காமல் இருக்க ........ ஏதும் காரணம் தமிழனிடம் இருக்கிறதா ? 
  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு, ஜயா, கணக்கு!

தீவின் மொத்த சனத்தொகையின் எத்தனை வீதம் தமிழர்கள், இலங்கைப் பூர்வீகத் தமிழர்கள்?

மதரீதியாக முஸ்லீம் மக்கள் பிரிக்கப்பட்ட பின், கிழக்கின் மக்களை, பிரதேச வாதம் பேசவைத்து பிரித்த பின் மிகுதி எவ்வளவு?

இருந்த மீதிக்குள், டக்ளஸ், சித்தார்தன், சங்கரி என்ற பிரிவுகள்.

வெறும் 6 - 8 % வரை தான் மொத்தமே எண்டால், தோல்வி நிச்சய நிதர்சனத்தை புரியாமல் யாரை நொந்து என்ன பலன்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு காரணம்தான்! வேறெதுவும் இல்லை. தமிழன் என்றால், எல்லோரும் தன்னைப்போலவே தமிழனாகவே இருப்பார்கள் என்று பிரபாகரன் கொண்ட நம்பிக்கைதான்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு காரணம்தான்! வேறெதுவும் இல்லை. தமிழன் என்றால், எல்லோரும் தன்னைப்போலவே தமிழனாகவே இருப்பார்கள் என்று பிரபாகரன் கொண்ட நம்பிக்கைதான்.  :(

இதுதான் உண்மை !

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கொம்பன் இயக்கம் போராடியிருந்தாலும் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்..........அதுதான் ஆசியாவின் அரசியல்.....

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கொம்பன் இயக்கம் போராடியிருந்தாலும் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்..........அதுதான் ஆசியாவின் அரசியல்.....

அப்படி சொல்ல முடியாதே.

தலிபான் தோற்கடிக்கப் படவில்லை. காரணம் அவர்கள் எண்ணிக்கை, தோற்கடிக்க முனைவோரிலும் அதிகம்.

நைஜீரிய போக்க ஹாரம் இறுதியில் அழியும். காரணம் இந்தக் கணக்கு.

இந்திய, சிம்பாபே, தென்னாபிரிக்க, விடுதலைப் போர் வெற்றியும் இந்தக் கணக்கே.

இந்தக் கணக்குப் புரியாமல் போராடினால், கொரில்லா முறையில், ஆண்டுக் கணக்கில் போராடலாம். மரபு வழியில் தாக்குப் பிடியாது.

யாரையும் நோக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தலிபானை அழிக்க சவுதியை தூண்டிவிட்டாச்சு ,தற்பொழுது போரை நடத்துவதற்கு கெரில்லா போராளிகள் தேவை ,அவர்களை மரபு வழி இராணுவமாக வளரவிட்டு பினபு அழிப்பதுதான் தற்பொழுது உலக நாடுகளின் கொள்கை....

Bhagat Singh:- Jailed, tortured and hanged

Neta Ji: Thrown out of country, spied by Nehru

Lala Lajpat Rai: Beaten to death

Azad: Fought till last bullet

But

Gandhi: Royal treatment in jail

Nehru:wrote book in jail

and our schools teach us??

Gandhi and nehru brought freedom to India.

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.