Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

சித்திரை 15, 2015

கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். :huh: இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். :unsure:

இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. :o

இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துகொண்ட விபரங்கள் பின்வருமாறு.

அப்பாவி இசைக்கலைஞன் வீட்டில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டதால் வேறு வழியின்றி மருத்துநீர் பெறுவதற்காக கனடா கற்பக விநாயகர் கோயிலுக்குச் சென்றுள்ளார். :unsure:

templeMain.jpg

அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார்.

இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். :huh:

அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். :blink: தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார்.

சாதாரணமாக விருந்தாளி வீட்டுக்குள் நுழையவே பத்துத்தரம் யோசிக்கும் இசைக்கலைஞனால் ஊடு கட்டியெல்லாம் அடிக்க முடியுமா? :( நைசாக அந்தப்பக்கமாக தள்ளி 20 அடி சுற்றி அந்தப்பக்கமாகப் போய்விட்டார். முறுகலை தவித்துக்கொண்ட இவரது செயலை காவல்துறை பாராட்டுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட மருத்து நீர் பெறுவதில் குறியாக இருந்த இசைக்கலைஞன் :wub: கோயிலுக்குள் சென்று (அங்கு ஏற்கனவே மருத்து நீர் எடுத்துக்கொண்டு நின்ற ஃபிகரை சைட் அடித்து வழிந்துவிட்டு :wub:) வெற்றிகரமாகத் திரும்பிவந்தார். தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய இவரின் செயலை காவல்துறை வெகுவாகப் பாராட்டுகிறது.

அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட பெண் தலைமறைவாகியுள்ளார். சந்தேகத்துக்கிடமான பெண் எவரையும் கண்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அண்மையில் திருட்டு வழக்கில் கைதான பெண் ஒருவரின் படம் வெளியானதால் யாழ்களத்தில் பயங்கர கலகம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கலகம் மறுபடியும் ஏற்படுவதை ஒன்ராரியோ காவல்துறை விரும்பவில்லை. ஆகவே, சந்தேக நபரின் புகைப்படத்தை மறைத்து வெளியிடுகிறோம்.

Spoiler
article-2327212-19D6C97B000005DC-60_634xbird.gif:wub:
  • Replies 50
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சறங் கட்டி அடிக்கிற பெண் என்றால் உடனே காவல்துறை பிடித்திருக்கும். இது ஊடுகட்டி அடிக்கிற பெண் என்றதால் காவல்துறை தேடிக் கொண்டிருக்கு...! :lol::)

குரு சம்பந்தப்பட்ட பெண் தாக்கும் மூர்க்கத்தை பார்க்க உங்கள் பின் மண்டையில் ஒரு டொக்கு விழுந்திருக்கும் போலுள்ளதே :D

குருவை தாக்கிய குருட்டு பறவையே

உன்னை அடுப்பில் வைத்து எரிக்குமுன்

மன்னிப்புகேள் மானசீகமாக...

இல்லையேல் உன் சந்ததியை வரலாற்று பாடப்புத்தகத்தில் மட்டுமே எம்சந்ததி படிக்க நேரிடும்.

- இங்கனம்

மானசீக சீடன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சறங் கட்டி அடிக்கிற பெண் என்றால் உடனே காவல்துறை பிடித்திருக்கும். இது ஊடுகட்டி அடிக்கிற பெண் என்றதால் காவல்துறை தேடிக் கொண்டிருக்கு...! :lol::)

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. அதன் வாய் சரியான உரம்.. :unsure: முரட்டுத்தனம் கனக்க இருக்கு. பிரான்சில் இவை இல்லையா? :huh:

குரு சம்பந்தப்பட்ட பெண் தாக்கும் மூர்க்கத்தை பார்க்க உங்கள் பின் மண்டையில் ஒரு டொக்கு விழுந்திருக்கும் போலுள்ளதே :D

குருவை தாக்கிய குருட்டு பறவையே

உன்னை அடுப்பில் வைத்து எரிக்குமுன்

மன்னிப்புகேள் மானசீகமாக...

இல்லையேல் உன் சந்ததியை வரலாற்று பாடப்புத்தகத்தில் மட்டுமே எம்சந்ததி படிக்க நேரிடும்.

- இங்கனம்

மானசீக சீடன் :D

அது தன்னுடைய முட்டையை பாதுக்காக்கிறன் பேர்வழி எண்டு எனக்கு மொட்டை போடப் பார்த்துது.. :o ஆனாலும் அதன் தாய்மை உணர்ச்சியைப் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.. :D (முட்டையை பாதுகாக்கவே என்னை தாக்க வந்தது.. :huh: )

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார்.

இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். :huh:

Spoiler
article-2327212-19D6C97B000005DC-60_634xbird.gif:wub:

உறுதியாக்கூறமுடியும்

இவர் சும்மா போயிருக்கமாட்டார்..

கண்ணை(ல்லை)யாவது அடித்திருப்பார்

பெண் பாவம் பொல்லாதது ராசா....

நான் வரல இந்த விளையாட்டுக்கு.. :lol:  :D  :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நெஞ்சோடு போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

சனீசுவரனுக்கு விரதமிருந்து விரதஉணவை, ஆதிப் பழங்குடிப் பெண்ணுக்கும் படைத்து, மோட்சமடைய விரும்பும் அடியார்களுக்காகவே அந்தப் பெண்ணையும் அதன் கற்பையும் காப்பதற்குக் கூண்டிலும் அடைத்து வைத்திருந்தனர். அப்படியும் அந்தப் பெண் குஞ்சுத்தாட்சி ஆகி அம்மாவும் ஆகிவிட்டார். எப்படி....???? அந்த மர்மத்தை அப்பாவிபோல் நடித்து இசைக்கலைஞன் தெரிந்துகொண்டதை பழங்குடிப் பெண்ணும் அறிந்துகொண்டதால் வந்த வினை. :o

சுவியும், ராசன் விசுவாவும் இதற்குள் மூக்கை நுளைப்பதால் அவர்களுக்கும் இதன் மர்மம் தெரிந்துள்ளதுபோல் தெரிகிறது. விநாயகர் துணை. :(  :huh:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறுதியாக்கூறமுடியும்

இவர் சும்மா போயிருக்கமாட்டார்..

கண்ணை(ல்லை)யாவது அடித்திருப்பார்

பெண் பாவம் பொல்லாதது ராசா....

நான் வரல இந்த விளையாட்டுக்கு.. :lol:  :D  :D

ஒரு அப்பாவியைப் போய் கண்ணால், கல்லால் அடித்திருப்பார் என்று பழி போடுறீங்களே.. நியாயமா? :D

நல்ல காலம் நெஞ்சோடு போச்சுது.

ஏன்யா பீதியை கிளப்புறீங்க? :D

சனீசுவரனுக்கு விரதமிருந்து விரதஉணவை, ஆதிப் பழங்குடிப் பெண்ணுக்கும் படைத்து, மோட்சமடைய விரும்பும் அடியார்களுக்காகவே அந்தப் பெண்ணையும் அதன் கற்பையும் காப்பதற்குக் கூண்டிலும் அடைத்து வைத்திருந்தனர். அப்படியும் அந்தப் பெண் குஞ்சுத்தாட்சி ஆகி அம்மாவும் ஆகிவிட்டார். எப்படி....???? அந்த மர்மத்தை அப்பாவிபோல் நடித்து இசைக்கலைஞன் தெரிந்துகொண்டதை பழங்குடிப் பெண்ணும் அறிந்துகொண்டதால் வந்த வினை. :o

சுவியும், ராசன் விசுவாவும் இதற்குள் மூக்கை நுளைப்பதால் அவர்களுக்கும் இதன் மர்மம் தெரிந்துள்ளதுபோல் தெரிகிறது. விநாயகர் துணை. :(  :huh:

அவை இரண்டுபேரும்தான் காரணமோ.. :o இருக்கு சீடனுக்கு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் வாய் பேசாப் பிராணி..ஒரு பறவை தாக்கியதயா இவ்வளவு பெரிய செய்தியாக்கினீங்கள் இசை அண்ணா.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களின் அடி இறகால் வருடியது மாதிரி இருக்கும் என்பது இன்னமும் கனடாவாழ் இசைக்கலைஞனுக்குத் தெரியாதோ! :lol:

இசை அண்ணோய் இதுதான் சொல்லுறது  ஆகக் குறைஞ்சது மான் கராத்தே எண்டாலும் பழகி இருக்கணும்.  :D

character_animation_running_by_sonic_e-d

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

வருசக்கடைசியோடை இருந்த கண்டமெல்லாம் போயிட்டுது.
இனி  நாப்பது நாள் வெறும் வயித்தோடை நாகம்மாளுக்குப் பால் ஊத்திக்
கும்பிட்டு வந்தால் ஒரே யோகம் தான் உங்களுக்கு :D :D :lol:

கனடாவிற்கு வந்தும் மருத்துநீர் வைப்பவர்களை பறவை வைத்து அடிக்க ஏற்பாடு . :lol:

 - வருத்தப்படாத தாடிக்கார  சங்கம் . 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சந்தேகமாய் உள்ளது அதேன் இவரை மாத்திரம் குறி வைத்து தாக்குதல்??? :D

  • கருத்துக்கள உறவுகள்

-------

அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். :blink:தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார்.

-------

அந்த, ஆதி பழங்குடி பெண்.... "மோதிப் பார்க்கலாம் வரியா....." என்று கேட்டதை வைத்து...

கனடா உளவுப் பிரிவு பொலிசார், துப்புத் துலக்கியதில்.....

அவர் இசைக்கலைஞன் மீது தாக்குதல் நடத்த வரவில்லை என்றும், வேறு நோக்கத்துக்காக... வந்துள்ளார் என்று கண்டறிந்துள்ளார்கள்.

அது, என்ன நோக்கம் என்று, புலனாய்வுப் பொலிசார்.... துருவி ஆராய்கிறார்கள். :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் வாய் பேசாப் பிராணி..ஒரு பறவை தாக்கியதயா இவ்வளவு பெரிய செய்தியாக்கினீங்கள் இசை அண்ணா.. :lol:

என்ன இப்பிடி சொலலிப் போட்டிங்கள்.. :D அது கொஞ்சம் பலமான தாக்குதல்தான்.. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களின் அடி இறகால் வருடியது மாதிரி இருக்கும் என்பது இன்னமும் கனடாவாழ் இசைக்கலைஞனுக்குத் தெரியாதோ! :lol:

கிருபன் இன்னும் சரியான இடத்தில மாட்டுப்படேல போல இருக்கு.. :unsure:

033112-AJC-girls-wrestling-national-cham

:blink::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணோய் இதுதான் சொல்லுறது ஆகக் குறைஞ்சது மான் கராத்தே எண்டாலும் பழகி இருக்கணும். :D

character_animation_running_by_sonic_e-d

இந்த மான் கராத்தே என்றால் என்ன சேர்வயர்?? ஒரு படம் வந்திருந்தது.. சண்டையை பார்த்து ஓடுறதா?? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருசக்கடைசியோடை இருந்த கண்டமெல்லாம் போயிட்டுது.

இனி நாப்பது நாள் வெறும் வயித்தோடை நாகம்மாளுக்குப் பால் ஊத்திக்

கும்பிட்டு வந்தால் ஒரே யோகம் தான் உங்களுக்கு :D :D :lol:

இங்கே நாகம்மாள் Snake-icon.png எல்லாம் இல்லை.. நம்மாட்கள் தயவில நாகபூசணி அம்மாள் மட்டும் இருக்கிறா.. :D

கனடாவிற்கு வந்தும் மருத்துநீர் வைப்பவர்களை பறவை வைத்து அடிக்க ஏற்பாடு . :lol:

- வருத்தப்படாத தாடிக்கார சங்கம் .

என்ன செய்யிறது.. அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றினதால பல சிக்கல்கள்.. :o:D

இந்த மருத்து நீரை ஒருக்கால் ஆராய்ச்சிக்கு அனுப்பி எடுக்க வேணும்.. மாட்டு கோமியம் என்று கேள்விப்பட்ட ஞாபகம்.. உண்மையா?? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சந்தேகமாய் உள்ளது அதேன் இவரை மாத்திரம் குறி வைத்து தாக்குதல்??? :D

வசந்தகாலம் வரேக்குள்ளை இவை (canadian geese) கனடாவுக்கு திரும்பி வருவினம்.. இந்த ஒண்டுக்கு அவசரமா முட்டை வந்திட்டுதுபோலை.. :o கோயில் வளவில் மரம் இல்லாத பூச்சாடி ஒண்டுக்குள்ளை முட்டையை போட்டிட்டு மேலே படுத்திருந்திருக்கு.. :huh: நான் என்னத்தை கண்டன்.. பக்கத்தால போக எனக்கு மேல பாய்ஞ்சு விட்டுது சில்லி கூஸ்.. :blink:

அந்த, ஆதி பழங்குடி பெண்.... "மோதிப் பார்க்கலாம் வரியா....." என்று கேட்டதை வைத்து...

கனடா உளவுப் பிரிவு பொலிசார், துப்புத் துலக்கியதில்.....

அவர் இசைக்கலைஞன் மீது தாக்குதல் நடத்த வரவில்லை என்றும், வேறு நோக்கத்துக்காக... வந்துள்ளார் என்று கண்டறிந்துள்ளார்கள்.

அது, என்ன நோக்கம் என்று, புலனாய்வுப் பொலிசார்.... துருவி ஆராய்கிறார்கள். :D:lol:

உண்மையில் அது தலையை ஆட்டிய விதத்தை நினைத்தால் இப்பவும் சிரிப்பாகத்தான் இருக்கு.. :D திரும்பி வரேக்குள்ளையும் அதே இடத்தில் நின்றது.. :o

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக  தெரியாமல் தான் கேட்கின்றேன்

இந்த பச்சை போடுதல்

முகநூலில் லைக் போடுதலில் சிலருக்கு சில சிக்கல்கள் வருவதுண்டு..

இந்தத்திரியையும் அதற்கு உதாரணமாக எடுத்தக்கொள்ளலாமா?? :icon_idea:

உண்மையில் இசை தாக்கப்பட்டிருந்தால்

நாம் பச்சை குத்தி வரவேற்கின்றோமா?

கொண்டாடுகின்றோமா??.  :o  :o  :o

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாரோ பைத்தியம் தாக்கிவிட்டது என்று எண்ணிவிட்டேன். ஒரு சாதாரண பறவையா தாக்கியது. :D

இந்த மான் கராத்தே என்றால் என்ன சேர்வயர்?? ஒரு படம் வந்திருந்தது.. சண்டையை பார்த்து ஓடுறதா?? :D

ஓம் அண்ணை. மான் கராத்தே என்றால் வேகமா ஓடுறது. இது சும்மா ஊர் பக்கங்கம் பேச்சு வழக்கில பாவிகிறது.     அந்த படத்துக்கும் இந்த மான் கராத்தேக்கும் தொடர்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக  தெரியாமல் தான் கேட்கின்றேன்

இந்த பச்சை போடுதல்

முகநூலில் லைக் போடுதலில் சிலருக்கு சில சிக்கல்கள் வருவதுண்டு..

இந்தத்திரியையும் அதற்கு உதாரணமாக எடுத்தக்கொள்ளலாமா?? :icon_idea:

உண்மையில் இசை தாக்கப்பட்டிருந்தால்

நாம் பச்சை குத்தி வரவேற்கின்றோமா?

கொண்டாடுகின்றோமா??.  :o  :o  :o

ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாய் யாழில் எழுதியதுக்கு விசுகு சார் உண்மையில் நானும் பச்சை குத்தினான் ஆனால் பச்சை முடிந்து விட்டது சுய ஆக்கங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்பதில் தப்பில்லையே . 

பலத்த மழையின் போது அங்க தானே நின்றேன் இந்த காட்சியை தவற விட்டிட்டனே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.