Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் சங்கக்கார லண்டன் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தொந்தரவு

Featured Replies

குமார் சங்கக்கார லண்டன் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தொந்தரவு

 

sf8k0p.jpg

 

இலங்கை வீரர் குமார் சங்கக்கார லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு விரும்பத்தகாத அனுபவதை எதிர் கொண்டார்.

 

Kumar Sangakkara

@KumarSanga2

Back in London last night. Had a horrendous experience with a rude, patronising and extremely discourteous UK immigration officer.
2:12 PM - 9 May 2015

 

http://www.cricketcountry.com/news/kumar-sangakkara-harassed-by-immigration-officials-at-london-airport-285294

 

  • Replies 56
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முன்னால வந்த யரோ கையை தூக்கியிருப்பார். இவர் பின்னால போய் எடுப்பெடுத்திருப்பார்.:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கன சிங்களவர்கள் தமிழர்கள் போல் நடிச்சுக் கொண்டு பல்வேறு விசாக்களில் வந்து அசைலம் அடிக்கினம். அவைக்கு அசைலமும் கிடைக்குது. சில தமிழர்கள் உண்மையா பாதிக்கப்பட்டும் கிடைக்காமல் கஸ்டப்படுகினம். எல்லாம் காலக் கொடுமை. சங்கா என்ன சித்து விளையாடினாரோ. இல்ல ஏஜென்சி வேலை பார்த்து ஆக்களோட வந்தாரோ..?!

 

கீத்ரோ அதிகாரிகளை இது விடயத்தில் பாராட்ட வேண்டும். கரராக இருப்பதற்கு. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தங்கடை பிச்சைக்கார சொறிலங்கா விமான நிலைய ஐந்துக்கும் பத்துக்கும் அலையிற சிப்பந்திகள் போன்று லண்டன் சுங்க இலாகா அதிகாரிகளை நினைத்து இருப்பார் .  

 

உண்மையில் நெடுக்கு சொன்னது மாதிரி ஒன்றில் சிங்களவர்களை  களவாக கொண்டு வந்துருக்கணும்  இல்லாட்டி எதோ ஒரு uk யில் அனுமதிக்கபடாத பொருள் கொண்டுவந்து இருக்கணும் .அதுவும் இல்லாவிடின் ஆங்கிலம் தெரியாமல் இருக்கணும். :D  :D  :icon_idea:

 

lhr நடைமுறைகள் கடுமையாக இருப்பின் வந்த பயணி எதோ தில்லு முள்ளு செய்து விட்டார் என்றுதான் அர்த்தம் இந்த  #tuwit ஒன்று காணும் சிங்கன் அடுத்தமுறை வரும்போது ராஜ உபசாரம் ???????????செய்ய வைக்கலாம்    :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொவங்கிட்டாய்க அப்பா ..எதோ பக்கத்தில இருந்து பார்த்துபுட்டு கதை சொல்லுற மாதிரி
இதுவே பொழப்பு .... <_< 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கண்ணா.. அப்ப எதுக்கு இதுகளை மீடியாவில ஏத்திறேள். ஏத்தினா.. மக்கள் நாலு விதமாய் யோசிக்கத்தான் செய்வாங்க. இல்ல சங்கா.. சொக்கத் தங்கம் என்று கட்டி அழ மாட்டாங்க. சங்கா என்னமோ இடக்குமுடக்கு பண்ணின படியால் தான்.. இவ்வளவும்.  :lol::o

  • தொடங்கியவர்

ஓமோம் surrey team இல தான் அடிக்கிற பந்துகளை பொறுக்க நாலு பேரை கூட்டி வந்ததுதான் பிரச்சினையாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதிகாரியின் சீட்டை சங்கா கிழிக்கோணும்.

ஒரு கம்பிளைண்டை தட்டி விட்டாப் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதிகாரியின் சீட்டை சங்கா கிழிக்கோணும்.

ஒரு கம்பிளைண்டை தட்டி விட்டாப் போதும்.

கடந்த இரவே மெயில் தட்டியாச்சு அந்தசிங்கள இனதுவேசி வரட்டும் lhr பக்கம்  உருமி மேளம் அடிச்சுதான் வழியனுப்பு விழா.

உங்களுக்கு உங்கள் நாட்டில் நடப்பதே தெரியாதா மொருமாளே?

எங்க வழியனுப்ப போறியள்? அவர் உங்கள் நாட்டிலதான் இப்ப இருக்கிறார். ஆங்கிலம்தான் விளங்காட்டி தமிழும் விளங்காதா?

ஓடிப்போய் பிடித்து வழியனுப்புங்க, இன்னும் ஏன் தாமதம்?

ஒன்றுக்கும் வழி இல்லை. சும்மா படம் காட்டாதையுங்க இங்கு யாழில்.

  • கருத்துக்கள உறவுகள்

aarany எனக்கு  குத்துவது என்று முடிவாயிட்டுது இப்படி காத்திலை விசுக் விசுக்  என்று பிடி கொடுத்து குத்த கூடாது வடிவா படித்து விட்டு பிறகு குத்தவும் .

Edited by பெருமாள்

இந்த அதிகாரியின் சீட்டை சங்கா கிழிக்கோணும்.

ஒரு கம்பிளைண்டை தட்டி விட்டாப் போதும்.

இங்கிலாந்திலை நீங்கள் சொல்லுறமாதிரி கஸ்டமர் சேர்விஸ் நல்லா இல்லாதவிடத்து ஒரு கம்பிளைண்டை தட்டி விட்டாப் போதும்....சும்மா பிடுங்கி எடுப்பார்கள்

ஆனால் இமிக்கிரேசனில் மட்டும் அது வாய்க்காது.... அங்கு அவர்களுக்கு வழங்கப்படிருக்கும் அதிகாரமே வேறு

கையை தூக்கினா தப்பிக்கலாம் :lol:

உதல்லாம் எயார்போர்ட்டால உள்ள போனா புரியும் :icon_idea:

 

 

 

சங்கக்காரா எண்டா என்ன கொம்பே?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா / கனடா எல்லையிலும் இதேபோல பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சிலரைப் பிடித்து உருட்டி எடுப்பார்கள். இதனால் எல்லைக்கட்டுப்பாடு இறுக்கமாக உள்ளது என்கிற பிரமை ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கீத்ரோவில் என்னையும் ஒருமுறை ஒரு பிரட்டு பிரட்டினார்கள் ...
உள்ளே போவதென்றால் எங்கு போகிறோம் என்று ஒரு முகவரி
வேண்டும் என்னிடம் இருக்கவில்லை.
நான் ஒரு பொய் சொன்னேன் ...
அவர்கள் பொய் என்று நிருபித்து விட்டார்கள்
இனி திருப்பி கூட அனுப்பலாம் என்று
சொன்னார்.
வேறு வழியே இல்லை ...
காலில் விழுந்து விட்டேன்.

சொன்னார்.
you look very nervous

நான் சாரி அவசரத்தில் வந்துவிட்டேன்
என்று மன்னிப்பு கேட்க விட்டார்கள்.
(நான் காலில் விழுந்துதான் ஆகவேண்டும் எனது வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்)

கீத்திரோவை விட பேர்மிங்கத்திலை கூட போட்டு உருட்டுவார்கள்

பாக்கிகளின் நடமாட்டம் கூடவென்பதாலொ என்னவோ

  • கருத்துக்கள உறவுகள்

ஹீத்ரோவில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள், தன்னைத் தெரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கார் மங்காவிளக்கு சங்கா! ஆனால் எப்படிப்பட்ட அனுபவம் என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை.

மூன்றாம் உலக நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருந்தால் கேள்விகள் கேட்கப்படுவது இயல்பு. கேட்கின்ற கேள்விகளுக்கு சுருக்கமான பதிலைச் சொன்னால் வெளியில் வேகமாக வரலாம். தேவையில்லாத கதைகளில் இறங்கினால் நிற்கத்தான் வேண்டும்.

முன்னர் சிறிலங்கன் கடவுச்சீட்டில் பயணிக்கும்போது ஹீத்ரோவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அநேக தடவைகள் கேள்விகளுக்குள்ளாகியிருக்கின்றேன். குடிவரவுப் பட்டியலில் சிவப்பு நிறத்தில் சிறிலங்காவை, ஆப்கானிஸ்தானை, பாகிஸ்தானை வைத்திருப்பார்கள். கேள்வி கட்டாயம் இருக்கும் என்பதால் அதிகம் ரென்சன் ஆகாமல், அவசரப்படாமல் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலைச் சொல்லவேண்டியதுதான். வெள்ளைகளை ஆசிய அதிகாரிகள் அதிகம் உருட்டிக் கேட்பார்கள்.

  • தொடங்கியவர்

இங்கிலாந்தில் சங்கக்காராவை தரக் குறைவாக நடத்திய அதிகாரி!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார்.

குடிவரவு அதிகாரி ஒருவா், தன்னை மரியாதை குறைவான விதத்தில் நடத்தியதாகவும், கடந்த 15 வருடங்களாக இங்கிலாந்து வருகின்ற போதும் இந்த முறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், அந்த அதிகாரியின் நடவடிக்கை மிகுந்த அசௌகரியத்தையும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக ஏனைய அனைத்து குடிவரவு அதிகாரிகள் மிகுந்த கனிவுடன் நடந்து கொண்டார்கள். சர்வதேச பயணிகளிடம் நிறத்தையோ மதத்தையோ அவர்களது புகழையோ பார்க்கக்கூடாது.

 

நல்ல எண்ணத்துடன் நாட்டுக்கு வருவோர் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டியது அவசியமானது என்று கூறியுள்ளார்.

 

குமார் சங்கக்காரா இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றாக சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, போட்டிகளில் விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://sport.lankasri.com/view.php?2207DmmYebcc4CgAA344e06004Ye0034JlOOmadddceOllR2203A440oaee4cceMCQdcbbdOmDDf23

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாட்டி பேத்தனமாய் கதைகள் கூடாது.

http://icinspector.independent.gov.uk/wp-content/uploads/2010/07/Lessons-to-learn_The-UK-Border-Agencys-handling-of-complaints-and-MPs-correspondence.pdf

எல்லாரையும் போல இமிகெரேசன் அதிகாரிகளும் சட்டம் கண்டனர் சேர்விஸ் வலுயூசுக்கு கட்டுப்பட்டோரே.

http://www.publications.parliament.uk/pa/cm201213/cmselect/cmpubadm/writev/ombudsman/m07.htm

https://www.gov.uk/government/organisations/home-office/about/complaints-procedure

யுகே போர்டர் எஜெம்சியிடம் 250 000 பவுண்ஸ் நட்ட ஈடு வாங்கிய கேஸ் எல்லாம் இருக்கு.

அரைகுறையா ஒரு பேப்பர் வாச்சிட்டு கதை எழுதிறாக்களுக்கு இது வாசிக்க தெரியவேணும் முதலில்.

  • கருத்துக்கள உறவுகள்

குமார் சங்கக்காரா ஒரு கிரிக்கட் வீரராக இல்லாமல்..ஒரு இலங்கையராகச் சென்றால் என்ன விதமான வரவேற்புக் கிடைக்குமோ.. அது தான் அவருக்கும் கிடைத்துள்ளது போல உள்ளது!

 

இதற்கு 'நட்ட ஈடு' அது... இது ... என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசக்கூடாது! :lol:

 

கிருபன் கூறியது போல, வெள்ளை நிற அதிகாரிகளை விடவும்.. கறுப்பு.. மற்றும் தென்னாசிய அதிகாரிகளிடம் மாட்டுப்பட்டால்.. தங்கள் அதிகார பலத்தைக் காட்டாமல், இலேசில் விடமாட்டார்கள்! :o

 

கலியாணம் கட்டின புதுசில.. மனுசு.. கூறைச்சாரி எல்லாத்தையும் தலையில கட்டி.. அனுப்பிவிட்டிடுது!

 

குடிவரவு அதிகாரி..வெள்ளையாக இருந்த படியால்.. கலியாண வாழ்த்தோட 'ஆளை விட' , கறுப்பனான 'சுங்க அதிகாரி (?)' .. சீலையெல்லாம் என்ன வியாபாரத்துக்கா? எண்டு முழுப் பயணப் பொதியையும்

ஒருக்காத் திறந்து... பாத்துத் திரும்ப வடிவா அடுக்கித் தந்துது! :D  

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாட்டி பேத்தனமாய் கதைகள் கூடாது.

http://icinspector.independent.gov.uk/wp-content/uploads/2010/07/Lessons-to-learn_The-UK-Border-Agencys-handling-of-complaints-and-MPs-correspondence.pdf

எல்லாரையும் போல இமிகெரேசன் அதிகாரிகளும் சட்டம் கண்டனர் சேர்விஸ் வலுயூசுக்கு கட்டுப்பட்டோரே.

http://www.publications.parliament.uk/pa/cm201213/cmselect/cmpubadm/writev/ombudsman/m07.htm

https://www.gov.uk/government/organisations/home-office/about/complaints-procedure

யுகே போர்டர் எஜெம்சியிடம் 250 000 பவுண்ஸ் நட்ட ஈடு வாங்கிய கேஸ் எல்லாம் இருக்கு.

அரைகுறையா ஒரு பேப்பர் வாச்சிட்டு கதை எழுதிறாக்களுக்கு இது வாசிக்க தெரியவேணும் முதலில்.

airlankaல் நிக்கிற சிங்களத்திகளை பார்க்க ஓடுபவருக்கு (தாங்கள் தான் எழுதியது )uk கஸ்டம்ஸ்க்கு கிடைத்துள்ள புதிய அதிகாரங்கள் எவை என தெரியாது போனதில் வியப்பில்லையே அவனவன் தீவிரவாதம் என நெருப்பைகட்டிகொண்டு இரண்டு கிழமைக்கு ஒருக்கா செமினர் புதிய அது இது என்று வாட்டி எடுக்கின்றார்கள் இங்கு ஒரு மாதத்திக்கு முன்னர் இருந்த நிலைமை இன்று இருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

https://www.gov.uk/g...aints-procedure இது மாதிரி எல்லா அரச கரும அமைபுகளிட்க்கும்  சம்பிரதாயத்துக்கு கொடுக்கப்படும் .உங்கடை அந்த இனதுவேசி சங்கக்கார இரண்டு is காரனை தன்னுடைய உதவியாளர் எனும் போர்வையில் லண்டனில் கொண்டுவந்து விட்டால் அனுமதிச்ச கஸ்டம்ஸ் அதிகாரியின் நிலை என்னவாகும்.

 

சாதாரண புகையிலை குடி வகையும் அனுமதிக்கபட்ட அளவைவிட டோவர் ஆள் கொண்டுவந்தாலே உங்கள் பாஸ்போர்ட் சிவப்பு லிஸ்டில் 6 மாதத்துக்கு சிங்கன் ஊமையாய் twittlல் அழுவதை பார்த்தால் ஆளில்தான் பிழை.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார்.

குடிவரவு அதிகாரி ஒருவா், தன்னை மரியாதை குறைவான விதத்தில் நடத்தியதாகவும், கடந்த 15 வருடங்களாக இங்கிலாந்து வருகின்ற போதும் இந்த முறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இங்கே எல்லோரும் தன்னை தங்கத்தட்டில் வைத்து தாங்குவது போன்று 

இங்கிலாந்திலும் வைத்து தாங்குவார்கள் என்று சங்கா நினைத்திருக்கிறார் போல 

இங்கிலாந்தை பொறுத்தவரை அவர் அகதி ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து வரும் ஒரு மட்டையடிகாரர் அவ்வளவுதான் 

சட்டமேதை சங்கா இதனை சட்டபூர்வமாக அணுகியிருக்கலாமே ....? இங்கே சிலபேர் அவர் சட்டத்தரணி என்று உல்டா விட்டினம்.உண்மையில் இவர் அரை அவியல் (சட்டக்கல்வியை இன்னும் பூரணமாக முடிக்கவுமில்லை, சட்டத்தரணியாக பிரமாணமும் செய்யவுமில்லை)

அதிகமாக பீட்டர் விட்டிருப்பார் அதான் இங்கிலாந்துக்காரன் காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறான்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

கஸ்டம்சுக்கும் இமிகிரேசனுக்கும் இன்லாண்ட் ரெவெனியுவுக்கும் தினம் தினம் கடுக்காய் கொடுக்கும் வேலையில் இருந்த படியால், என் அனுபத்தில்தான் சொல்கிறேன். அவர்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. ஒரு கடிதம் அவர்கள் பொறுப்பான மினிஸ்டரை cc பண்ணி அனுப்பினால் போதும். பத்து மன்னிப்பு கடிதம் வரும்.

உங்களைப் போல வெள்ளை அடிமை மனப்பான்மையில், யூனிபோர்ம் காரரை கண்டாலே தொடை நடுங்குவோர்க்க்கு வெள்ளை அதிகாரிகளை கண்டால் பயம் வருவது போல எல்லோர்க்கும் இல்லை.

ஒரு சிங்கள அமைப்பின் நிகழ்வில் இந்த வருடம் சங்காவை சந்திக்க வாய்புளது. பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு சிங்கள அமைப்பின் நிகழ்வில் இந்த வருடம் சங்காவை சந்திக்க வாய்புளது. பார்க்கலாம்.

ஓ கோசான் அண்ணை 

நீங்க உறவுப்பாலம் அமைக்கும் கோஷ்டியா ....சொல்லவே இல்ல 

கவனம் அண்ணை ....சிங்களவனுடன் சேர்ந்து  உறவுப்பாலம் அமைச்சாலும் சரி ஒன்று கூடி குழி வெட்டினாலும் சரி

தமிழனை  வைக்க வேண்டிய இடத்தில் தான் வைப்பான் .....கவனம் நீங்க அமைச்ச பாலத்தினூடாகவே அடிச்சு துரத்தப்போறான்

உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் (சிங்கள அடி வாங்கியவனுக்குதான் தெரியும் ....அதன் சுவை :D ) 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை விட நன்றாக துவேசம் பேசக் கூடிய தமிழ் பேர்வழிகள் உலா வரும் திரி இது...
குறைந்த பட்சம் ஒரு செய்தியின் தன்மையை புரிந்துகொண்டு அதன் வரையறைக்குள் கருத்து பதியும் பகுத்தறிவு இங்கு பலபேருக்கு "கிலோ  என்ன விலை?" என்ற நிலைமை.
இவர்கள் தமிழ் உணர்வு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது....தூ. <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.