Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தியமாகாத ஒரு நாடு இரு தேசம் கொள்கை- முஸ்லீம்களை புறந்தள்ளி தீர்வு சாத்தியமில்லை

Featured Replies

Published on April 28, 2015-5:05 pm   ·   No Comments

Map-150x150.jpgஇலங்கையில் பொதுதேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இத்தேர்தலை இலக்கு வைத்து மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன.

தமிழீழமே தமது இறுதி இலக்கு என்று புலம்பெயர்நாடுகளில் செயற்படும் இந்த அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலில் கீழ் ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையுடன் செயற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ( அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்) வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

அதன் ஒரு அங்கமாக மாற்றத்திற்கான குரல் என்ற பெயரில் ஏற்கனவே கனடாவில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 18ஆம் திகதி லண்டனில் இந்த அமைப்பினர் கருத்தரங்கு ஒன்றை நடத்தினர்.

கடந்த 2010ஆம் ஆண்டு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் வெற்றிக்காக பல்வேறு வழிகளில் போராடி தோற்றுப்போனமை சகலரும் அறிந்த விடயம்.

தற்போது பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் இவ்வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் மாற்றத்திற்கான குரல் என்ற பெயரில் மேற்குலக நாடுகளில் மக்கள் ஆதரவையும் பணத்தையும் திரட்டும் நோக்குடன் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தற்போது முன்னெடுக்கப்படும் அறவிழி அரசியல் போக்குகளும் நோக்கங்களும் தடம்மாறி செல்வதாகவும் தமிழ் அரசியல் தலைமையை தமிழர் நலன்சார்ந்து வழிப்படுத்தும் நோக்கத்துடன் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை எதிர்வரும் தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றி ஈட்ட செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழர்களுக்கான ஒரே தீர்வு தமிழீழம் தான் என கூறிவரும் விடுதலைப்புலி அமைப்பினர் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பை வெற்றி பெற செய்ய வேண்டும் என முற்படுவதன் மூலம் தமது இலக்கை எவ்வாறு அடையப்போகிறார்கள் என்பதை அவர்கள் இந்த கருத்தரங்குகளில் விளக்கவில்லை.

தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற இலக்குடன் இரு தேசம் ஒரு நாடு என்பதே தமது கொள்கை என்றும் அதனை அடைவதே தமது நோக்கம் என்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியக் மக்கள் முன்னணியினர் கூறிவருகின்றனர்.

இலங்கையில் இரு தேசங்கள் இருப்பதாகவும் ஒன்று தமிழர் தேசம் மற்றது சிங்கள தேசம் என்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்வைக்கும் வாதமாகும்.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணமும் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணமும் தமிழர் தேசமாக அடையாளப்படுத்தப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து அதனை தமிழர் தேசமாக பிரகடனம் செய்து அப்பிரதேசத்தில் தனியான ஆட்சி ஒன்றை அமைப்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் கொள்கையாகும். 

ஒரு நாடு இரு தேசம் என்ற கஜேந்திரகுமாரின் கோரிக்கையில் படி தமிழர் தேசம் என்ற எல்லைக்குள் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக்கூடிய ஒரு வீத சாத்தியமாவது உள்ளதா? கிழக்கில் உள்ள 60வீதமாக இருக்கும் முஸ்லீம் சிங்கள மக்கள் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைவதற்கு சம்மதிப்பார்களா? அதை விட கிழக்கில் உள்ள தமிழர்கள் வடக்குடன் இணைவதற்கு சம்மதிப்பார்களா? கிழக்கில் முஸ்லீம்களை விட்டு தீர்வு சாத்தியமா? கிழக்கில் உள்ள ஒரு முஸ்லீமாவது இவர்களின் தமிழர் தேசம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் தேசம் என்பதை விட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண ஆட்சியாவது சாத்தியமா என்ற யதார்த்தத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால் முதலில் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய குடிசன பரம்பலை சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.

மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்களும் சரி அல்லது அவர்களுக்கு சார்பாக இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி கிழக்கு மாகாணம் பற்றிய சரியான புரிதல் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் ஒரு தனிஇனமாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கிலும் அவர்கள் ஒரு தனி இனமாகவே வாழ்ந்து வருகிறார்கள். எனவே கிழக்கு மாகாணம் தனியே ஒரு தமிழ் இனத்தை கொண்ட மாகாணம் அல்ல, அது தமிழ் முஸ்லீம், சிங்கள இனங்களை உள்ளடக்கிய மூன்று இனங்களை கொண்ட மாகாணமாகும். அவ்வாறானால் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தனி தமிழர் பிரதேசம் என்று எப்படி சொல்ல முடியும்?

தமிழர் பிரதேசத்தில் உள்ள முஸ்லீம்களதும் சிங்களவர்களதும் நிலை என்ன?

வடக்கு கிழக்கு இணைப்பு கூட தற்போது சாத்தியமற்ற ஒன்று என்பதை அங்கு இனரீதியான குடிமக்களின் எண்ணிக்கையையும் வீதத்தையும் அறிந்து கொண்டால் புரிய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4இலட்சத்து 20ஆயிரத்து 949 தமிழர்களும் ( 73வீதம் ) ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 17 முஸ்லீம்களும் ( 26.5வீதம்) 4992 பறங்கியர்களும், 3306 சிங்களவர்களும் வாழ்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் 2இலட்சத்து 82ஆயிரத்து 484 முஸ்லீம்களும் (44வீதம்) 2இலட்சத்து 51ஆயிரத்து 18 சிங்களவர்களும் (40வீதம்) ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 750 தமிழர்களும் ( 16வீதம்) வாழ்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 84ஆயிரத்து 529 முஸ்லீம்களும் (41.86வீதம்) ஒரு இலட்சத்து 44ஆயிரத்து 613 தமிழர்களும் (32.80வீதம்) ஒரு இலட்சத்து 10ஆயிரத்து 679 சிங்களவர்களும் ( 25.10வீதம்) வாழ்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தமிழர்கள் 41.51வீதமாகவும், முஸ்லீம்கள் 30.58வீதமாகவும் சிங்களவர்கள் 20வீதமாகவும் காணப்பட்டனர். தற்போது முஸ்லீம்கள் 30வீதத்திலிருந்து 40வீதமாக அதிகரித்திருக்கிறார்கள், சிங்களவர்கள் 20வீதத்திலிருந்து 25வீதமாக அதிகரித்திருக்கிறார்கள். தமிழர்கள் 41வீதத்திலிருந்து 32.வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ( 678312) 40வீதமாகவும், முஸ்லீம்கள் (620030) 37.5வீதமாகவும் சிங்களவர்கள் (365003) 22.5வீதமாகவும் உள்ளனர்.

கிழக்கில் 60வீதமாக இருக்கும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர் தேசம் என்ற கொள்கைக்கோ அல்லது வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கோ ஒரு போதும் இணங்கப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

கஜேந்திரகுமார் போன்றவர்கள் வடக்கை மட்டும் வைத்து சிந்திக்கிறார்களே தவிர கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பற்றி சிந்திக்கவில்லை, முஸ்லீம்கள் மட்டுமல்ல அங்குள்ள தமிழர்களை பற்றி கூட சிந்திக்கவில்லை. கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம்களை விரோதித்து கொண்டு வாழ முடியாது என்பதும் இதனால் இவர்களின் இரு தேசம் என்ற கொள்கை எந்த நிலையிலும் சாத்தியமில்லை என்பதும் தான் யதார்த்தம்

வடக்குடன் கிழக்கு இணைப்பதற்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்களும் சிங்களவர்களும்( 60வீதம்) சம்மதிப்பார்களா? ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். வடமாகாண தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ்வதற்கே அங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள். இதனை 24வருடங்களாக கிழக்கில் வாழ்ந்தவன் என்ற வகையில் அனுபவத்திலும் நேரிலும் உணர்ந்திருக்கிறேன்.

1980களின் முன்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம்கள் தமிழர்களுடன் ஐக்கியமாக வாழ்ந்தனர். அரசியலிலும் தமிழர்களுடன் இணைந்து பயணிக்க தயாராக இருந்தனர். ஆனால் 1980களின் பின்னர் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் மிக தந்திரமாக செயற்பட்டனர். தமிழர்களும் முஸ்லீம்களும் மோதும் நிலைகளை உருவாக்கினர்.

மிக தந்திரமாக ஊர்காவல்படைகளில் முஸ்லீம்களை இணைத்து கொண்டு அவர்களை தமிழ் இயக்கங்களுடன் மோத விட்டதன் மூலம் தமிழ் முஸ்லீம் உறவு விரிசல் அடைந்தது. உச்சக்கட்டமாக விடுதலைப்புலிகள் முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்ட மக்களை சுட்டுக்கொன்றனர். பதிலுக்கு முஸ்லீம்களும் வீரமுனை பிள்ளையார் ஆலயம் உட்பட பல இடங்களில் தமிழர்களை வெட்டிக்கொன்றனர்.

கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவு முறிந்து போவதற்கு விடுதலைப்புலிகளும் காரணமாக இருந்தனர், அரச படையினரும் காரணமாக இருந்தனர், அரச படையினருடன் இணைந்திருந்த முஸ்லீம்களும் காணமாக இருந்தனர்.

இதனால் 1990களின் பின்னர் கிழக்கில் முஸ்லீம்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ விரும்பிய அளவிற்கு தமிழர்களுடன் உறவை வளர்த்து கொள்ளவில்லை, கடந்த மாகாண சபை தேர்தலின் போது கூட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் சிங்கள அரசியல் தலைமைகளுடன் கூட்டை வைத்துக் கொள்ள விரும்பினார்களோ ஒழிய தமிழ் தலைமைகளுடன் கூட்டை வைத்துக் கொள்ள விரும்பவில்லை,

கிழக்கு மாகாண சபையில் தற்போது அமைக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவை வழங்கி முறிந்து போன தமிழ் முஸ்லீம் அரசியல் உறவை சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒட்ட வைக்க முற்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளால் முறித்து சின்னாபின்னமாக்கப்பட்ட தமிழ் முஸ்லீம் உறவை சம்பந்தன் தற்போது மீண்டும் கட்டி எழுப்ப முற்பட்டிருப்பது முற்போக்கான விடயமாகும். ஆனாலும் இந்த அரசியல் உறவை வைத்து கொண்டு கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்க சம்மதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம்கள் ஒரு போதும் தங்களை தமிழர் என்ற அடையாளத்திற்குள் வர விரும்புவதில்லை, தங்களை ஒரு தேசிய இனமாகவே கருதுகிறார்கள், தமிழர் தேசம் சிங்கள தேசம் என பிரிக்கப்பட்டால் முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் வேண்டும் என அவர்கள் கோரலாம். அப்படி கோரினால் வடகிழக்கு இணைந்த தமிழர் தேசம் என்ற கொள்கையின் நிலை என்னாகும்?

தமிழர் தேசம் என்பதை விட்டு விடுவோம், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண ஆட்சி கூட தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாகும். வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டுமானால் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

கிழக்கில் உள்ள 37.5வீதமான முஸ்லீம்களும் 22.5வீதமான சிங்களவர்களுமாக மொத்தம் 60வீதமானவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். மிகுதி 40வீதமான தமிழர்களிலும் கணிசமானவர்கள் வடக்குடன் கிழக்கு இணைவதை விரும்பவில்லை. வடக்கு தலைமைகளுக்கு எதிரான போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

தமிழர் தேசம் என்ற கோஷம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் உறவை மேலும் சீரழிக்கவும், தமிழர்கள் மீது முஸ்லீம்கள் சந்தேகம் கொண்டு பார்ப்பதற்குமே வழிவகுக்கும்.

சில தமிழர்கள் தமது வசதிக்காக கிழக்கில் உள்ள முஸ்லீம்களை தமிழ் பேசும் மக்கள் என அழைக்கின்றனர். அந்த தமிழ் பேசும் மக்கள் என்ற வட்டத்திற்குள் வருவதற்கு இலங்கையில் உள்ள முஸ்லீம்மக்கள் தயாராக இல்லை, அவர்கள் தங்களை தனியான ஒரு இனமாக இலங்கை முஸ்லீம்கள் என்ற இனவரையறைக்குள் அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர்.

இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் குறிப்பாக கிழக்கில் உள்ள முஸ்லீம்களின் இந்த உணர்வுகளை தமிழர் தரப்பு சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

கிழக்கில் உள்ள முஸ்லீம்களது அபிலாசைகளையும் விரும்பங்களையும் அரசியல் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளாது அவர்கள் மீது தமிழர் தேசம் என்ற கொள்கையை அல்லது தமிழீழம் என்ற கொள்கையை திணிக்க முடியாது. தமிழர்கள் மேல் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழர் தேசம் சிங்கள தேசம் என கோஷமிடுவது கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவை சின்னாபின்னமாக்கி விடும். இது கிழக்கில் உள்ள தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும்.

வெறுமனே வடக்கின் அரசிலை மட்டும் வைத்து சிந்திக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் களயதார்த்தங்களை புரிந்து கொண்டு மீண்டும் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லீம் உறவை வெட்டி சாய்க்காமல் இருந்தாலே போதும்.

இரா.துரைரத்தினம்

 

 

http://www.thinakkathir.com/

 

 

 

  • Replies 58
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இணைந்த வடகிழக்கில் " ஓரளவு "சுயாட்சியை தேடலாம் மற்றவை தேடக்கூடாது.

கரி நீங்கள் இணைத்த இந்த இணைப்பில் சம்பந்தன் கூறுவதை கேளுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/157130-இணைந்த-வடகிழக்கில்-அரசில்-தீர்/

http://youtu.be/lMDpbJRTj5E

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
வெறுமனே வடக்கின் அரசிலை மட்டும் வைத்து சிந்திக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் நிகழ்ச்சி நி
அட இப்ப பத்திரிகையாளரும் தொடங்கிட்டாங்களா புலம் பெயர்ந்தவர்களை திட்ட .....
  • கருத்துக்கள உறவுகள்

அட இப்ப பத்திரிகையாளரும் தொடங்கிட்டாங்களா புலம் பெயர்ந்தவர்களை திட்ட .....

 

 

காய்க்கும் மரம் தானே கல்லெறிவாங்கும் என்பதை அறியாதவரா நீங்கள் புத்தர்.....??

தாயகவிடுதலையில் புலம்பெயர் மக்களும் அவர்களது அமைப்புக்களும் முக்கியமான பணிகளையும்

முக்கியத்துவத்தையும் உடையவர்கள்

அந்த முக்கியத்தவம் கூட்டமைப்புக்கு எந்தவகையிலும் குறைந்தது அல்ல...

அதை கூட்டமைப்பு உணர்ந்து

புலத்துடன் கலந்து பேசி ஒரு முடிவை எடுத்து செயற்படுவதே சாலச்சிறந்தது...

அதற்கு எவரும்

எதுவும் ஈடுஇணையாகாது...

மற்றும்படி இதை மறுத்து எங்கு சென்றாலும் சுற்றினாலும் முடிவில் இங்கதான் வந்து நிற்கணும்

நிற்பார்கள்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்களை கொண்டு வந்து  குடியேற்றி தமிழ் மக்களை விரட்டி அடித்து விட்டு இனப்பரம்பல் வீதத்தை போடுதல் தமிழ் மக்களுக்காக ஓரவஞ்சகம் என தெரியாமல் சிலர் இருப்பது ஏன்?
 
வடக்கும் கிழக்கும் இணைந்து தான் இருந்தது. இனவாத அரசு தான் தந்திரமாக பிரித்தது.
 
தற்போது முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளில் உள்ளவர்கள் பெரும்பாலோர் வடக்கு கிழக்குக்கு வெளியில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களுக்கு வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சனை பற்றி அதிக ஈடுபாடு கொண்டவர்கள் இல்லை.வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு சரியான தலைமை, கட்சி(கள்) தேவை.

தமிழர்களுக்கு தனிநாடும் வேண்டும் என்று முதலில் சொன்னவர்கள் தந்தை செல்வா போன்றோர் தான். அதற்காக கஜேந்திரனையும் புலம்பெயர்ந்தவர்களையும் காய்வது ஏனோ தெரியவில்லை.ஒரு வேளை தோல்வி பயம் ஆட்கொண்டு விட்டதா? :D

நீங்கள் இதிலே இணைக்கும் கருத்துகளுக்கும் அதனை இணைப்பவர்களுக்கும் கருத்து கூறக் கூடாது என்றால் அதை நேரடியாக கூற வேண்டியதுதானே.. இணைக்கும் கருத்துகளுடன் அதை யார் இணைக்கிறார்கள் என்பதும் முக்கியமானதுதான்.. அதைச் சுட்டிக் காட்ட.. சைலண்டாக தூக்கிவிட்டீர்கள்.. பிறாகு இதில் என்ன கருத்து எழுத இருக்கிறது. வர வர இங்கு எழுதுவதே அர்த்தமில்லைபோல தோன்றுகிறது. நன்றி!!

 

நீங்கள் இதிலே இணைக்கும் கருத்துகளுக்கும் அதனை இணைப்பவர்களுக்கும் கருத்து கூறக் கூடாது என்றால் அதை நேரடியாக கூற வேண்டியதுதானே.. இணைக்கும் கருத்துகளுடன் அதை யார் இணைக்கிறார்கள் என்பதும் முக்கியமானதுதான்.. அதைச் சுட்டிக் காட்ட.. சைலண்டாக தூக்கிவிட்டீர்கள்.. பிறாகு இதில் என்ன கருத்து எழுத இருக்கிறது. வர வர இங்கு எழுதுவதே அர்த்தமில்லைபோல தோன்றுகிறது. நன்றி!!

இங்கு யார் உங்கள் கருத்தை தூக்கியது? இத் திரியில் நீங்கள் இடும் முதல் கருத்தே இது தானே !

  • கருத்துக்கள உறவுகள்

தினக்கதிரில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எழுதப்பட்ட இரண்டு பூச்சாண்டி காட்டும் கட்டுரைகளையும் இரா.துரைரத்தினமே எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். இவர் தாயகத்தில் இருக்கின்றாரா? சுவிஸில்தானே கருணா பிரச்சினைக்கு பின்னர் வந்து தஞ்சமடைந்தவர்.?.?

பிரதேசவாதத்தை கையில் எடுப்பவர்கள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத்தான் எடுக்கின்றார்கள். எதுவித மக்கள் நலனும் இதனால் முன்னெடுக்கப்படுவதில்லை.

மைத்திரியோடு இணக்க அரசியல் செய்தும் ஒரு பலனும் கிடைக்காது என்று தெரிந்தமையால் தமிழ்மக்களை அடுத்த தேர்தலில் எந்த முகத்தோடு எதிர்கொள்வது என்பதுதான் கூட்டமைப்பின் அடிப்படைப் பிரச்சினை. சம்பந்தரும் அவரது சகாவும் ஆலோசகருமான சுமந்திரனும் கூட்டமைப்பின் தலைவர்களாக தொடர்ந்தும் இருந்தால் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கலாம் என்ற பயத்தால் அதனைத் தடுக்க இப்படியான அரசியல் பிற்போக்குத்தனத்தைக் காட்டுவது ஒன்றும் வியப்பில்லை.

மக்களின் விடுதலையைக் கைவிட்டு சுயநல, கட்சி அரசியலை முன்னெடுக்கும் சாக்கடைக் குட்டைகளாக கூட்டமைப்பும் அதனை முட்டுக்கொடுப்பவர்களும் உருமாறுகின்றனர்.

இங்கு யார் உங்கள் கருத்தை தூக்கியது? இத் திரியில் நீங்கள் இடும் முதல் கருத்தே இது தானே !

 

மன்னிக்கவும். நாந்தான் ஆற்றில போட்டுவிட்டு ( http://www.yarl.com/forum3/index.php?/topic/157628-கிழக்கிற்கு-மீண்டும்-ஓர்-அழிவு/ ) குளத்திலை தேடிக் குழம்பி அபாண்டமான குற்றத்தைச் சுமத்திவிட்டேன்.

மனம் வருந்துகிறேன். மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த சாக்கடைக்குள்தான் 
தீர்வு மீன் பிடிக்க போகிறார்களாம் 
 
காய்ச்சி சாபிட்ட மாதிரிதான். 
 
சம்மந்தர் 
சுமந்திரன் 
மாவை 
 
உண்மை முகங்கள் வெளி தெரிய நேர்ந்ததால் 
இப்போ கலர் அடிப்பில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
 
இந்திய றோ இதை துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறது 
இந்த மூதேவிகள் (மூன்று தேவிகள்) சரிப்பட மாட்டார்கள் என்பதால்தான் 
வரத ராசரை களம் இறக்கி இருக்கிறது றோ.
 
இவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று 
இப்போது றோ கணித்திருக்கிறது. 
  • தொடங்கியவர்

சம்பந்தன் இணைந்த வடகிழக்கில் " ஓரளவு "சுயாட்சியை தேடலாம் மற்றவை தேடக்கூடாது.

கரி நீங்கள் இணைத்த இந்த இணைப்பில் சம்பந்தன் கூறுவதை கேளுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/157130-இணைந்த-வடகிழக்கில்-அரசில்-தீர்/

http://youtu.be/lMDpbJRTj5E

எல்லோரும் தேடலாம் ,சம்பந்தன் ஐயா அதை எப்படி அடையலாம் என்பதற்கு சில சாத்தியமான முறைகளை சொல்லுகின்றார் .அது சம்பந்தமாக சர்வதேசத்துடன் பேசுகின்றார் .

 

அதேவேளை கஜேந்திரகுமாரின் இரு தேசம் ஒரு நாடு கொள்கையை எப்படி முன்னேடுக்கப்போகின்றோம் என்பதை தெளிவு படுத்தவில்லையே ?

 

கஜேந்திரகுமாரை பொருத்தவரையில் பணம் பிரச்சனையில்லை ,ஆனால் தாயகத்திலுள்ள  மக்கள் ஒரு நேர உணவுக்கே தள்ளாடும் நிலையில் இனியும் ஒரு போராட்டத்திற்கு உடன்படுவார்களா ?

 

புலம் பெயர் தமிழர்களை பொறுத்தவரையில் தாங்கள் நினைக்கின்றதை அனுபவித்திக்கொண்டு (வீடு ,உல்லாச விடுமுறைகள் ,பிள்ளைகளை விரும்பிய துறைகளில் படிப்பித்தல் ) தாயகத்திலுள்ள மக்களை போராட வற்புறுத்துதல் ஏற்றுக்கொள்ளமுடியாதது .

 

நான் பிறந்த மண்ணை நேசித்து ,அந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க கருத்துக்களை இணைப்பது எந்தவகையில் பிரதேச வாதமாகும் ,திருகோணமலை மக்கள் சிங்கள இனவாதிகள் ,சிங்கள அரசு ,அதனதிகாரிகள் போன்றோரிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதே வேளை தன் சொந்த இனத்திடமிருந்தும் தங்களை பாதுகாக்க போராடவேண்டியுள்ளது .(கஜேந்திரகுமாரின் நடவடிக்கைகளும் இதற்கு புலம்பெயந்தவர்களின் நிதி பாய்வதும் )

 

புலிகள் இருந்தபோது ,புலிகளுக்கே சொன்னனான் நீங்கள் போராட்டத்தை கவனியுங்கள் நாங்கள் மக்களுடைய அவலங்களை ,அவர்களுடைய தேவைகளை கவனிப்போம் எவரும் நினைக்கக்கூடாது தங்களுக்கு மட்டும்தான் மக்களின் மீது கரிசனை உள்ளதென்று .

 

எங்களுடைய ஆதங்கம் புலிகள் இருந்தபோது வாய்முடி இருந்தவர்கள் தற்போது எங்களின் மேல் சவாரி செய்ய முனைகின்றார்கள் .இதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை .எங்களுடைய வழியில் தொடந்து பயணிப்போம் எவருடைய விமர்சனங்களும் எங்களுடைய பயணத்தை தடைசெய்ய முடியாது ..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தபோது ,புலிகளுக்கே சொன்னனான் நீங்கள் போராட்டத்தை கவனியுங்கள் நாங்கள் மக்களுடைய அவலங்களை ,அவர்களுடைய தேவைகளை கவனிப்போம் எவரும் நினைக்கக்கூடாது தங்களுக்கு மட்டும்தான் மக்களின் மீது கரிசனை உள்ளதென்று .

 

எங்களுடைய ஆதங்கம் புலிகள் இருந்தபோது வாய்முடி இருந்தவர்கள் தற்போது எங்களின் மேல் சவாரி செய்ய முனைகின்றார்கள் .இதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை .எங்களுடைய வழியில் தொடந்து பயணிப்போம் எவருடைய விமர்சனங்களும் எங்களுடைய பயணத்தை தடைசெய்ய முடியாது ..

 

உண்மையிலயே மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ,இங்கு வந்து என்னை போல(சும்மா பொழுது போக்க யாழில கிறுக்குபவன் நான்) கிறுக்கி கொண்டு இருக்கமாட்டியள் ,செயலில் காட்டி இருப்பியள் ...யார் உங்கள் மீது சவாரி செய்வது ,நீங்கள் ஏன் அவர்களை சவாரி செய்ய விடுகின்றீர்கள்....கஜேந்திக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது உங்கள் மேல் சவாரி செய்ய நிச்சயமாக புலம்பெயர்ந்த பிரதேசத்திலிருந்து ஒருத்தரும் கொடுக்கவில்லை ..... கஜேந்திரகுமார் தனது சொந்த பணத்தில் கொடுக்கிறார் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை புறந்தள்ளிறதா கூட வைச்சிருக்கிறதா என்பது முஸ்லீம்களின் செயற்பாட்டில் தான் தங்கி இருக்குது. முஸ்லீம்களின் பங்களிப்பு இல்லாமலே தான் தமிழீழத்தின் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். எனவே முஸ்லீம்கள் இந்த வெற்றுக் கூச்சல் போடுவதை விட்டு தமிழ் மக்களுடன் இணைந்து தனியான நாட்டில் ஒரு சுபீட்சமான வாழ்வை ஏன் வாழ விரும்பக் கூடாது. இல்ல சிங்களவனிடம் அடியும் குத்தும் வாங்கிக் கொண்டு சலுகை அரசியல் தான் செய்யப் போறமுன்னா அது உங்கட விருப்பம். தமிழ் மக்கள் அதனை முஸ்லீம்களுக்காக விரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. :icon_idea::)

 

தேசிய தலைவர் பிரபாகரன் சொன்னது இதுதான்.. தமிழீழம் எல்லோருக்கும் சொந்தமான தேசம். அங்கு மதம்.. சாதி.. பிரதேசம் என்ற பாகுபாடுகளுக்கு இடமில்லை. அந்தந்த மக்கள் குழுமம் அதன் விழுமியம் சுதந்திரத்தோடு வாழ முடியும்.. அதே தான் எப்போதும் தமிழர்களின் கொள்கையும் கூட. முஸ்லீம்கள் இந்தப் பண்பட்ட கொள்கைக்கு தம்மை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். மாறாக.. மத அடிப்படை வாத வெறி அடிப்படையில் சிந்திக்க வெளிக்கிட்டால்.. மத்திய கிழக்கில்.. பாகிஸ்தானில்... சிதைவது போல நீங்களே உங்களை சிதைத்துச் சீரழிவீர்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கரி உங்களுக்கு விளக்கம் குறைவு. கஜேந்திரகுமார் ஆயுத போராட்டத்திற்கு வருமாறு மக்களை அழைத்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பத்திரிக்கையில் இருந்து கரி என்பவரால் இரு நாட்களுக்கு முன்னரும் இங்கே கொண்டுவந்து சொருகப்பட்ட இதேமாதிரியான காழ்ப்புணர்வைக் கொட்டும் கட்டுரையையும் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. 

 

அது என்னவென்றால், எப்பாடு பட்டாவது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முகத்தில் கரியைப் பூசுவது. இதைச் செய்வதற்கு அவர்கள் பிரதேசவாதத்தையும் கைய்யில் எடுப்பதற்கு அவர்கள் பின்னிற்கப் போவதில்லை என்பதும் தெரிகிறது.

 

அதிர்வு போன்ற இணையங்களில் இருந்து செய்தி இணைப்பதை மறுக்கும் யாழ் இணையம், முற்றுமுழுதாக ஒரேயொரு அரசியல் கட்சியை முன்னிறுத்தி, மற்றிய கட்சிகள் மீது காழ்ப்புணர்வைக் கொட்டி வசைபாட்டுத் தனமான கட்டுரைகளையும் வரையும் தினக்கதிர் என்கிற பத்திரிக்கையின் செய்திகளை இங்கே தொடர்ச்சியாக இணைத்துவரும் கரி என்பவரது நடவடிக்கை பற்றி என்ன செய்யப்போவதாக உத்தேசித்திருக்கிறது //

 

இதற்கு நிழலியோ அல்லது கிருபனோ பதில் தந்தால் நன்றாக இருக்குமென்பது எனது விருப்பம். 

 

ஆனால், அவர்களுக்கு முந்தி கிரியே இங்கு பதில் தர வந்தால், இன்னொரு காழ்ப்புணர்வுக் கட்டுரை வருமென்கிறது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் கூறவேண்டும்,

 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்துக்கும், சுமந்திரனுக்குமிடையிலான விவாதம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிலே முக்கியமாக சுமந்திரன் கஜேந்திரக்குமார் மீது சுமந்திரன் ஒருவிடயத்தைக் காட்டி வசை பாடினார், அதாவது 'கஜன் அடிக்கடி ஒரு நாடு, இருதேசம் எண்டு ஏன் சொல்லுறார்' என்கிற வசை.

 

அடப் பாருங்களேன், அந்த விவாதம் முடிந்த கைய்யோட, தினக்கதிர் அதையே தலைப்பாக இட்டு கட்டுரை வரையுது அதே காழ்ப்புணவுடனான வசைபாடலுடன்!

 

ஆனால் போங்கள், தினக்கதிருமும், கிரியும் , துரையும் எதைச் சொன்னாலும்கூட, கஜனிட்டை மாட்டுப்பட்டு சுமந்திரன் ஐய்யா பட்ட பாடு இருக்கே? ஐய்யோ, ஐயோ, அழாத குறை.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆனால் போங்கள், தினக்கதிருமும், கிரியும் , துரையும் எதைச் சொன்னாலும்கூட, கஜனிட்டை மாட்டுப்பட்டு சுமந்திரன் ஐய்யா பட்ட பாடு இருக்கே? ஐய்யோ, ஐயோ, அழாத குறை.

 

அதையும் ஒருக்கா இணைத்துவிடுங்களேன்.

நாங்களும் பார்ப்பமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சொல்லைக் கண்டு பிடித்துள்ளீர்கள் ரகு - காழ்ப்புணர்வு.

இன்னொரு சொல் பிரதேசவாதம்.

மற்றொரு சொல் ஒற்றுமை.

இவற்றை பாவித்து கிழக்கிலங்கை தமிழர் தலையில் நன்றாக சம்பல் அரைக்கப் படுகிறது. கரி போன்றோர் அதுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறார்கள்.

கஜன் சொல்கிறார் ஒரு நாடு இரு தேசமாம்.

இது சாத்தியமாகுமா?

தமிழர் தரப்பில் ஆயுத பலமிலாத நிலையில் - கிழக்கிலங்கை முஸ்லீம்கள் இதை ஒரு போதும் ஏற்க்கப் போவதில்லை.

ஆக கஜன் கேட்கும் ரெண்டாவது தேசம், வடமாகாணத்தை மட்டுமே குறிக்கிறது. குறிக்க முடியும்.

அப்போ கஜன் என்ன சொல்கிறார் கிழக்கிலங்கை தமிழர்களை கழட்டி விடுவோம் என்றா?

ஜி ஜி பொன்னரின் பேரன் என்பதை நிரூபிக்கிறார் போலும்.

இதைச் சொல்லப் போனால் தினக்கதிர் மீதும், கரி மீதும் பிரதேசவாத முலாத்தை பூசித்தப்பிக்க பார்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வீடியோ இருக்குது. 2 மணித்தியாலம் வேண்டும். பாத்து மகிழுங்கோ ஈழப்பிரியன் !

 

http://www.jvpnews.com/srilanka/109159.html

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நிழலியோ அல்லது கிருபனோ பதில் தந்தால் நன்றாக இருக்குமென்பது எனது விருப்பம்.

ரகுநாதன்,

யாழ் களப் பொறுப்பாளர்கள்தான் பதில் சொல்லவேண்டும்!

தினக்கதிர் கட்டுரை வெறும் அவதூறுக் கட்டுரை. உண்மையில் இந்த அவதூறுக் கட்டுரைகளை யாழில் அனுமதிப்பது சரியல்ல என்பதுதான் எனது கருத்து. கஜேந்திரகுமார் ஆயுதப் போராட்டத்தை தொடங்க புலம்பெயர் புலிகளுடன் சேர்ந்து திட்டம்போட்டுள்ளார் என்ற பூச்சாண்டிக் கட்டுரையை எழுதியவர் என்ன நோக்கத்திற்காக எழுதினார் என்பதும், அதை மினக்கெட்டு ஒட்டியவர் என்ன நோக்கத்திற்காக ஒட்டினார் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததே. இப்படியான கட்டுரைகளை யாழில் வருவதால் அம்பலப்படுவது எழுதியவர்களும் ஒட்டியவர்களும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை யாரும் புறம்தள்ளவில்லை. அவர்கள் தமிழ் முஸ்லீம்கள அல்லது சிங்கள முஸ்லீம்களாக.. அதாவது இரண்டு தேசியங்களுள் ஒன்றாக வாழலாம்.. அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அதற்காக மதத்தை இனம் / தேசியம் என்று கொள்ளமுடியாது. இப்படி நின்றவர் போறவர் எல்லாம் கேட்க ஆரம்பித்தால் தேசியம் என்பதற்கான வரைவிலக்கணமே சிதைந்து போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சொல்லைக் கண்டு பிடித்துள்ளீர்கள் ரகு - காழ்ப்புணர்வு.

இன்னொரு சொல் பிரதேசவாதம்.

மற்றொரு சொல் ஒற்றுமை.

இவற்றை பாவித்து கிழக்கிலங்கை தமிழர் தலையில் நன்றாக சம்பல் அரைக்கப் படுகிறது. கரி போன்றோர் அதுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறார்கள்.

கஜன் சொல்கிறார் ஒரு நாடு இரு தேசமாம்.

இது சாத்தியமாகுமா?

தமிழர் தரப்பில் ஆயுத பலமிலாத நிலையில் - கிழக்கிலங்கை முஸ்லீம்கள் இதை ஒரு போதும் ஏற்க்கப் போவதில்லை.

ஆக கஜன் கேட்கும் ரெண்டாவது தேசம், வடமாகாணத்தை மட்டுமே குறிக்கிறது. குறிக்க முடியும்.

அப்போ கஜன் என்ன சொல்கிறார் கிழக்கிலங்கை தமிழர்களை கழட்டி விடுவோம் என்றா?

ஜி ஜி பொன்னரின் பேரன் என்பதை நிரூபிக்கிறார் போலும்.

இதைச் சொல்லப் போனால் தினக்கதிர் மீதும், கரி மீதும் பிரதேசவாத முலாத்தை பூசித்தப்பிக்க பார்கிறீர்கள்.

 

 

என்ன வார்த்தை ஜாலமா கோஷான் ?

 

இரு தேசம் என்பது ஒன்று சிங்கள தேசம், மற்றையது தமிழ்தேசம். அதைப் போய் வட தேசம், கிழக்கு தேசம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? இது எப்போதிருந்து ?

 

தினக்கதிர் எழுதிய ஆக்கங்களை நான் நன்றாகப் படித்தேன் கோஷான். அதன்பிறகுதான் அது தனிநபர் அல்லது தனிக்கட்சித் தாக்குதல் என்று இறங்கியிருப்பதைப் புரிந்துகொண்டேன்.

 

இறுதியாக கரி என்பவரது பின்புலம் பற்றி நான் நன்றாக அறிந்தபின்னர்தான் அதுபற்றியும் எழுதினேன். கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டுமென்பதற்காக மற்றைய கருத்துக்களை எள்ளி நகையாடிவரும் அவரது தொடர்ச்சியான கருத்துக்களைப் படித்திருக்கிறேன். நீங்களும் கூட்டமைப்பு ஆதரவாளர் என்றால், நான் கூறுவது உங்களுக்கு வார்த்தை ஜாலமாகத்தான் தெரியுமென்பதிலும் எனக்கு ஐய்யமில்லை.

ரகுநாதன்,

யாழ் களப் பொறுப்பாளர்கள்தான் பதில் சொல்லவேண்டும்!

தினக்கதிர் கட்டுரை வெறும் அவதூறுக் கட்டுரை. உண்மையில் இந்த அவதூறுக் கட்டுரைகளை யாழில் அனுமதிப்பது சரியல்ல என்பதுதான் எனது கருத்து. கஜேந்திரகுமார் ஆயுதப் போராட்டத்தை தொடங்க புலம்பெயர் புலிகளுடன் சேர்ந்து திட்டம்போட்டுள்ளார் என்ற பூச்சாண்டிக் கட்டுரையை எழுதியவர் என்ன நோக்கத்திற்காக எழுதினார் என்பதும், அதை மினக்கெட்டு ஒட்டியவர் என்ன நோக்கத்திற்காக ஒட்டினார் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததே. இப்படியான கட்டுரைகளை யாழில் வருவதால் அம்பலப்படுவது எழுதியவர்களும் ஒட்டியவர்களும்தான்.

 

 

நன்றி கிருபன்,

 

மோகன் அன்ணாவோ அல்லது நிழலியோ இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை ! பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜன் சொல்கிறார் ஒரு நாடு இரு தேசமாம்.

இது சாத்தியமாகுமா?

தமிழர் தரப்பில் ஆயுத பலமிலாத நிலையில் - கிழக்கிலங்கை முஸ்லீம்கள் இதை ஒரு போதும் ஏற்க்கப் போவதில்லை.

ஆக கஜன் கேட்கும் ரெண்டாவது தேசம், வடமாகாணத்தை மட்டுமே குறிக்கிறது. குறிக்க முடியும்.

அப்போ கஜன் என்ன சொல்கிறார் கிழக்கிலங்கை தமிழர்களை கழட்டி விடுவோம் என்றா?

ஜி ஜி பொன்னரின் பேரன் என்பதை நிரூபிக்கிறார் போலும்.

இதைச் சொல்லப் போனால் தினக்கதிர் மீதும், கரி மீதும் பிரதேசவாத முலாத்தை பூசித்தப்பிக்க பார்கிறீர்கள்.

ஒரு நாடு இரு தேசம் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை அரசியல் தரிசனம். அதைக் கொள்கையாகக் கொண்டுதான் அக்கட்சி செயற்படுகின்றது. இதைப் பற்றிய அரசியல் விமர்சனங்கள், விளக்கங்கள், நடைமுறைச் சாத்தியப்பாடுகளைத் தாராளமாக விவாதிக்கலாம், ஆராயலாம். விரும்பினால் இரண்டாவது தேசம் வடமாகாணம்தான் என்று அபிப்பிராயம் கூடச் சொல்லலாம். இதில் எந்தக் காழ்ப்புணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அடிமட்டத்தில் உள்ளவர்களுடன் நெருங்கி அரசியல் எதையும் செய்யாது, ஒரு தெளிவற்ற கொள்கையை அல்லது நிலைப்பாட்டை மக்களுக்குத் சொல்லாது, அவர்களை சரியான திசையில் நடத்தாது, திரைமறைவில் அரச பங்காளிகளாகச் செயற்படும் கூட்டமைப்பும் அதன் ஆதரவாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் தலைமையாக வந்துவிடுமோ என்று பயந்து மக்களுக்குப் பூச்சாண்டி காட்டத்தான் ஆதாரமில்லாத அவதூறுக் கட்டுரைகளை தினக்கதிரில் வெளியிடுகின்றார்கள்.

யதீந்திரா, நிலாந்தன் எழுதிய இரண்டு கட்டுரைகளை இன்று இணைத்திருந்தேன். அதனைப் படித்தால் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

இசையும் நெடுக்கும் ஏதோ முஸ்லீம்கள் தமிழர்களிடம் அங்கீகாரம் இரைஞ்சி நிப்பது போல் எழுதியுள்ளார்கள்.

நிலமை இப்போ தலைகீழ்.

கிழக்கில் இப்போ முஸ்லீம்களே பெரும்பான்மை. இன்னும் 15 வருடங்களில் எம்மை பிந்தள்ளி விட்டு 1 ம் சிறுபான்மை ஆகி விடுவார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தை கஜன் சொல்லும் ரண்டாவது தேசத்தில் இணைக்க அவர்களுக்கு ஒரு தேவையும் இல்லை. தமிழர்கள் காலைப்பிடித்து கெஞ்சினாலும் முஸ்லீம்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

அப்படி இருக்க கஜன் மறைமுகமாக சொல்லும் செய்தி - கிழக்கிலங்கை தமிழர்களை கழட்டி விடுவோம் என்பதுதானே?

இது எவ்வளவு அபாயகரமான பச்சை பிரதேசவாதம்?

கிழக்கில் ஒரு கட்சி அலுவலுகம் கூட அமைக்கத்திண்டாடும் கஜன் கம்பேனி, வடைக்கை தம் அரசியல் லாபத்துக்காக தனியாக பிரிக்க வேண்டுவது எவ்வகை நியாயம்?

இப்படி சொல்லியதற்க்கு பிரபாகரன் இருந்திருந்தால் கஜேந்திர குமாரை மண்டையில் போட்டிருப்பார்.

இவர் தாத்தா மலையக மக்களை கருவறுத்தார்.

தந்தையை சிறிமா தன் கறுப்பு புதல்வன் என்றார்.

அதே வழியில் இவர் கிழக்கிலங்கை தமிழரை கருவறுக்கப் பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

இசையும் நெடுக்கும் ஏதோ முஸ்லீம்கள் தமிழர்களிடம் அங்கீகாரம் இரைஞ்சி நிப்பது போல் எழுதியுள்ளார்கள்.

நிலமை இப்போ தலைகீழ்.

கிழக்கில் இப்போ முஸ்லீம்களே பெரும்பான்மை. இன்னும் 15 வருடங்களில் எம்மை பிந்தள்ளி விட்டு 1 ம் சிறுபான்மை ஆகி விடுவார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தை கஜன் சொல்லும் ரண்டாவது தேசத்தில் இணைக்க அவர்களுக்கு ஒரு தேவையும் இல்லை. தமிழர்கள் காலைப்பிடித்து கெஞ்சினாலும் முஸ்லீம்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

அப்படி இருக்க கஜன் மறைமுகமாக சொல்லும் செய்தி - கிழக்கிலங்கை தமிழர்களை கழட்டி விடுவோம் என்பதுதானே?

இது எவ்வளவு அபாயகரமான பச்சை பிரதேசவாதம்?

கிழக்கில் ஒரு கட்சி அலுவலுகம் கூட அமைக்கத்திண்டாடும் கஜன் கம்பேனி, வடைக்கை தம் அரசியல் லாபத்துக்காக தனியாக பிரிக்க வேண்டுவது எவ்வகை நியாயம்?

இப்படி சொல்லியதற்க்கு பிரபாகரன் இருந்திருந்தால் கஜேந்திர குமாரை மண்டையில் போட்டிருப்பார்.

இவர் தாத்தா மலையக மக்களை கருவறுத்தார்.

தந்தையை சிறிமா தன் கறுப்பு புதல்வன் என்றார்.

அதே வழியில் இவர் கிழக்கிலங்கை தமிழரை கருவறுக்கப் பார்க்கிறார்.

உங்களின் வாதப்படி பார்த்தால், மலையகத்தில் சில பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மை. அப்ப அவர்களும் தனி அல்குதானே?! இதை ஏன் யாரும் பேசுகிறாரில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.