Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனிற்கு ஆதரவளிப்பதில்லை! உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானம்!!

Featured Replies

நாடாளுமன்ற தேர்தலிற்கான முன்னேற்பாடுகளினில் முனைப்பு காட்டிவரும் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவளிப்பதில்லையென கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பினில் ஆராய கூட்டப்பட்ட கூட்டத்தினையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர்;.பதிவு இணைய செய்தி

வடமராட்சியினில் தேர்தல் களமிறங்க தீர்மானித்துள்ள சுமந்திரன் கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை நகரசபை ,பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் கரவெட்டி பிரதேசசபைகளது உறுப்பினர்களை கூட்டமொன்றிற்கு அழைத்திருந்தார்.

எனினும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர்.கலந்து கொண்ட பலரும் வடமராட்சியினில் மக்கள் முற்றுமுழுதாக தங்களிற்கு எதிரான மனோநிலையினில் இருப்பதாகவும் தாங்கள் போட்டியிடுவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை வெற்றியடையவே வைக்குமெனவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.பதிவு இணைய செய்தி

குறிப்பாக கடந்த தேர்தலிலும் வடமராட்சியின் இருதொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையினில் எவரும் நாடாளுமன்றம் செல்லவில்லையெனவும் இம்முறையும் அவ்வாறான சூழலை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.எனினும் இதற்கு சுமந்திரன் பதில் எதனையும் தந்திருக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளன. http://www.pathivu.com/news/41174/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்... ஊருக்குள் வந்தால், "கூழ் முட்டை....". அடிக்க,  யாழ் மக்கள் உள்ளார்கள்.
வந்து பாக்கட்டும், சுமந்திரனின்.... வழக்கமான  சிவப்பு "ரீ சேட்டு, நாறிப் போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள  ஜே.வி.பி. தலைவருக்கே..... 
நெத்தியில், குறி பார்த்து... கல்லால் எறிந்து... தக்காளி சட்னி... பார்த்து ரசித்தவர்கள், யாழ். தமிழர்.
இதிலை...  சுத்து மாத்து, சுமந்திரனுக்கு....  என்ன *************நடக்கப் போகுதோ.......:o

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. சம் சும் கும்பலுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாக இது அமையும். இது கரவெட்டியோடு நிற்காமல்.. வடக்குக் கிழக்கு எங்கனும் தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும். தமக்கான நீதியை.. சோரம்போகாத அரசியலை தமிழ் மக்கள் வேண்டுவதை.. உலகம் உணரச் செய்வதை விடுத்து.. சிங்களவனுக்கு காவடி தூக்கி எலும்புத் துண்டு பொறுக்கும்.. சம் சும் கும்பலின் டக்கிளஸ் கருணா பாணி அரசியல் அசிங்கத்துக்கு மக்கள் முடிவுரை எழுதுவது நல்லது.அது நீண்ட கால ஒழுங்கில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது பதிவு விடும் புலுடா! சுமந்திரன் அதிகப்படியான (கள்ள) வாக்குகளால் வெல்வார்! 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனிற்கு ஆதரவளிப்பதில்லை! உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானம்!!

செய்தி  உண்மையானால் நல்ல சகுனமன்று.

உடனடியாக கூட்டமைப்பு செயற்பட்டு

ஆவன செய்யணும்....

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை... யாழில்,  வெல்ல வைக்க,
சம்பந்தன் பையன், ஒருக்கா... யாழ்ப்பாண பக்கம் வந்து, புலிக் கொடியை தூக்கி, காட்ட வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு.....

காலையில் இருந்து டாயிலெட் பேப்பர் கையிருப்பு குறையுதே என்ற கவலையில் இருந்தேன்.

இனிக் கவலையில்லை, பதிவை கிழிச்சு..,....

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையாயின் மகிழ்ச்சியே!!!தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேணும் ஒற்றுமையாக வாக்களித்து  பெரும் எண்ணிக்கையில் நாடகளுமன்றத்துக்கு அனுப்ப வேணும் என்ற நிலை இப்ப தேவையில்லை.என்ன கொள்கைக்காக நாம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யப் போகிறோம்?இம்முறை சம்சும் கும்பல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் துPர்வு பெற உழைப்போம் என்றே குறிப்பிடப் போகிறார்கள்.தேர்தல் பிரச்சாரத்தில் புலிகள் ,பிரபாகரன் பெயரை அடிக்கடி உச்சரிப்பார்கள். அதற்காக சிறிதரன் எம்பி இருக்கிறார். முன்னாள் போராளிகளுக்கு நெருக்கமான இன்னொருவரையும் வேட்பாளராகப் போடுவார்கள்.வாக்குகள் பிரிவதையிட்டு நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.நாம் எத்தினை பேரை அனுப்பினாலும்சம்சும்  கும்பல் ஒருவரையும் ஒன்றும் கிழிக்க விடாது.சுpங்கக் கொடியைத் தூக்கிப் பிடிச்சதற்கும் ,சுதந்திரன தின விழாவில கலந்து கொண்டதற்கும் யாரும் எந்த விளக்கமும் கேட்கவில்லை. முன்னைய காலங்களில் நாம் ஒற்றுமையாக எமது பிரதிநிதிகளை பெருமளவு அனுப்பியும் சர்வதேசம் எங்கள் கோரிக்கையைக் கணக்கில் எடுக்கவில்லை. ஆகவே என்னுடைய ஆதரவு இம்முறை கஜேந்திரகுமார் தலைமயிலான தமிழ்த்தேசிய முணன்னணிக்கே.கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். அப்பதான் சம்சும் கும்பல் வழிக்கு வருவார்கள்.இன்றைய பிபிசியில் தினக்குரல் செய்தியாளர்  வடக்கில் இம்முறை தமிழ்த் தேசிய முன்னணி ஓரளவு  வாக்குகளைப் பெறும் என்றும் மத்தியதர வர்கத்திற்கு ததேகூட்டமைப்பின் தலைமையின் போக்கில் விரக்தி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

1) மிக்க சந்தோசம். கீரைக் கடைக்கு எதிரா 2010 முதலே ஒரு வெறும் டீக்கடை இருக்கு. வாடிக்கையாளர்தான் இல்லை. நீங்கள் இந்த முறை கொள்கைக்காக வோட்டுப் போடப் போவதை போல்தான் எல்லோரும். பிறகு கூட்டமைப்பு வெண்டா அது தலைவரின் வெற்றி என அழுகுணியாட்டம் கூடாது.

2) புலத்தில் வாக்குச் சாவடி ஏதேனும் திறக்கும் சிலமன்? :) என் முன் வீட்டு ஆங்கிலேயனுக்கும் இலங்கைத் தேர்தலில் வோட்டுப் போட ஆசையாம். வழி இருந்தால் சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட தலைவர் சம் ஏன் தமிழரசுக் கட்சியில் போட்டியிடக் கூடாது.வீட்டுச்சின்னம் அவர்கள் சின்னம் பெயர் மட்டும் ஏன் தலைவர் வைச்ச பேர் இவைக்குத் தேவை.புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.ததேகூட்டமைப்பை பேருக்கு மட்டும் ஏன் பாவிக்க வேணும் என்று நினைக்கிறார். .தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரால் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லப்பட்ட ஒரு அமைப்பு அதில இருந்து சம்சும் 2 பேரும் வெளியேறும் வரைக்கும் மட்டுமே அதை தள்ளிவைத்து அரசியல் செய்ய விழைகிறோம். கஜேந்திரகுமாரும் ததேகூட்டமைப்பின் ஒரு ஆரம்ப கால உறுப்பினர் என்பதை மறந்து விட வேண்டாம். புலி இருக்iகும் பொழுது இந்த ததேகூட்டமைப்புக்கு எதிராக கொடி பிடிச்ச ஆட்கள் தான் இப்போ சம் தலைமையிலான கூட்டமைப்பை விழுந்து விழுந்து ஆதரிக்கினம்.

எனக்கு தெரிந்து புலிகள் கூட்டமைப்பை தமிழரசு கட்சியை மையமாக வைத்துத்தான் ஏற்றுகொண்டார்கள். மிச்ச அன்னகாவடிகளை கோர்த்து விட்டார்கள் ஏனென்றால் அந்த காலத்தில் தமிழர்கள் எல்லாரும் ஒரே அணியில் நிற்கவேண்டும் என்பதற்காக.

தமிழரசு கட்சி இல்லை இல்லாமல் ஒரு கூட்டமைப்பு இருந்தால் அது எட்டப்பர் கூட்டமைப்புத்தான்.

இன்றைய சூழலில் விரும்பியோ விரும்பாமலோ தமிழரசு கட்சியின் வசம்தான் கூட்டமைப்பு. விரும்பினால் இருக்கலாம் விருப்பமில்லாட்டல் வெளியேறலாம். அனாலும் யாரும் வெளியேறும் எண்ணம் இல்லை. வேளியில் வெறும் அறிக்கை மாத்திரம் விடுவார்கள் உள்ளே ஒரு கருத்துத்தான். 

உண்மை என்னவெறால் சம்பந்தர் அளவுக்கு யாருக்கும் அங்கு ஆளுமை இல்லை மாவை உட்பட. 

ஓரளவுக்கு இளமையும் ஆளுமையும் இருக்கும் ஒரு தெரிவு கஜேந்திர குமார் போன்னம்பாலம் அனாலும் அவர் இன்னும் தெளிவுக்கு வரவில்லை. 

அதுவரை உங்களுக்கு சுமந்திரந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பெரும்பாலன எம்பிகள், முதலைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழசுக் கட்சியினரே. தலைதான் வாலை ஆட்டும். வால் தலையை ஆட்ட முடியாது. 

யதார்தம் என்னவெனில், சுரேசோ, அனந்தியோ செல்வமோ புலவர் போன்றோரின் பேச்சை கேட்டு வெளியே போகத்தயாரில்லை.

புலவாலுகளை நம்பினால் என்னாகும் என்பதை கஜேந்திரகுமாரிடம் அறிந்து கொண்டிருப்பர் :) 

புலிகள் கூட்டமைப்பை உருவாக்கும் / ஒன்றிணைக்கும் போது தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF)தான் இருந்தது. 2000ம் ஆண்டு சம் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF)சார்பிலேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2001ம் ஆண்டு தேர்தலிலும் கூட்டமைப்பு  தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) என்றே தேர்தலில் போட்டியிட்டனர்.

2004 இல் ஆனந்தசங்கரி உதய சூரியனுக்காக நீதி மன்றம் சென்றதனாலேயே தமிழரசுக் கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளால் தூசு தட்டி உயிர்ப்பிக்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பெரும்பாலன எம்பிகள், முதலைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழசுக் கட்சியினரே. தலைதான் வாலை ஆட்டும். வால் தலையை ஆட்ட முடியாது. 

யதார்தம் என்னவெனில், சுரேசோ, அனந்தியோ செல்வமோ புலவர் போன்றோரின் பேச்சை கேட்டு வெளியே போகத்தயாரில்லை.

புலவாலுகளை நம்பினால் என்னாகும் என்பதை கஜேந்திரகுமாரிடம் அறிந்து கொண்டிருப்பர் :) 

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது.சுரேசோ, அனந்தியோ,சித்தரோ கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டார்கள்.அதேவேளை சம்பந்தரும் ததேகூட்டமைப்பை தமிழரசுக்கட்சியின் கூடாரமாக மாற்ற முயற்சிப்பாரே ஒழிய அந்தப் பெயரை விட்டு விலகி தமிழரசுக்கட்சி என்ற பெயரில் தேர்தலில் நிற்கும் சக்தியும் தன்னம்பிக்கையும் அவருக்கு இல்லை.சுரேஸ் சம்பந்தர்,மாவைக்குப் பிறகு ததேகூட்டமைப்பின் தலைமையை தான் கைப்பற்றலாம் என்று கணக்குப் போட்டவர்.ஆனால் சும் இதற்கு இடையுறாக இருக்கிறார். அது சரி கோசான். தமழ்தேகூட்டமைப்பின் பெரும்பாலான எம்பிக்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதால் தமிழரசுக் கட்சி ஏன் தனித்துப் போட்டியிடக் கூடாது. இந்தக் கேள்வியை நான் பல முறை எழுப்பியும் நீங்கள் பதில் சொல்லவில்லை. ததேகூட்டமைப்பை தலைவர் உருவாக்காதது மாதிரியும் சம்பந்தரின் சொத்து மாதிரியும்  நீங்கள் கருதுகிறீர்கள். தமி தேகூட்டமைப்பு தமிழ்மக்களிற்காக புலிகள் விட்டுச் சென்ற சொத்து. அங்கு சம்சும் குளிர் காய்வது அப்பட்டமான சுயநலம். 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அணியியான யாருமே இல்லாத தேனீர்க்கடையில் தற்போது பலர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளதாக அண்மையில் அறிந்தேன். தவிர, தற்போது வடமாகாண முதல்வருக்கு மக்கள்மத்தியில் ஏனைய கூட்டமைப்பினருக்கு இல்லாத செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகிறது எனவும், சுமந்திரன் சம்பந்தர் சுரேஸர், மாவை ஆகியோர் ரணிலிடம் காசுவாங்கிய விடையத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாது நடந்துகொண்டதாலும் வாங்கிய காசை என்னமாதிரிச் செலவளித்தது என கூறாதுவிட்டதாலும் இவர்கள் காசை ஆட்டையைப்போட்டுட்டினம் எனப் பரவலாகச் சனம் கதைக்குது எனவும் (உங்களுக்குத் தெரியும்தானே புலம்பெயர் தேசங்களிலேயே கொஞ்சம் மினுக்கமாகத் திரிந்தால் இயக்கக்காசை அடிச்சிட்டாங்கள் எனக்கூறுபவர்கள் புலத்தில் எவ்வளவு கண்கொத்திப்பாம்பாக இருப்பினம் என அதுவும் காசு விசையத்தில்) அண்மையில் ஒரு அளையவரிடம் யாழ்ப்பாணத்தில் தொடர்பு கொண்டபோது கூறினார், தானும் கஜன் குறூப்பில தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கப்போறதாக் கூறுகிறார்.

யார் வேணுமென்டாலும் நிக்கலாம். மக்கள் தெரிவு செய்யட்டும். இதுதான் ஜனநாயகம்.

பிறகு மக்கள் தெரிவு செய்தபின் குய்யோ முறையோ என்டு கத்தக்கூடாது. கம்முன்னு ஏத்துக்கிடணும், சரியே.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு.....

காலையில் இருந்து டாயிலெட் பேப்பர் கையிருப்பு குறையுதே என்ற கவலையில் இருந்தேன்.

இனிக் கவலையில்லை, பதிவை கிழிச்சு..,....

......... கவனம்..அரக்கி அரக்கி நடக்கவேண்டி வரலாம்.
பத்திரிகைகள் வாசிக்க மட்டுமேயன்றி துடைக்க அல்ல.

உங்கட தலைவர் சம் ஏன் தமிழரசுக் கட்சியில் போட்டியிடக் கூடாது.வீட்டுச்சின்னம் அவர்கள் சின்னம் பெயர் மட்டும் ஏன் தலைவர் வைச்ச பேர் இவைக்குத் தேவை.புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.ததேகூட்டமைப்பை பேருக்கு மட்டும் ஏன் பாவிக்க வேணும் என்று நினைக்கிறார். .தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரால் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லப்பட்ட ஒரு அமைப்பு அதில இருந்து சம்சும் 2 பேரும் வெளியேறும் வரைக்கும் மட்டுமே அதை தள்ளிவைத்து அரசியல் செய்ய விழைகிறோம். கஜேந்திரகுமாரும் ததேகூட்டமைப்பின் ஒரு ஆரம்ப கால உறுப்பினர் என்பதை மறந்து விட வேண்டாம். புலி இருக்iகும் பொழுது இந்த ததேகூட்டமைப்புக்கு எதிராக கொடி பிடிச்ச ஆட்கள் தான் இப்போ சம் தலைமையிலான கூட்டமைப்பை விழுந்து விழுந்து ஆதரிக்கினம்.

TN

Edited by Gari
4:53நிமிடத்தில் TNA உருவாக்கப்பட்ட வரலாறு சொல்லப்படுகின்றது ஆகவே தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

தமிழரசு கட்சி என நிப்பதை விட கூட்டமைப்பு என்று நின்றால் தமிழரசுக் கட்டியினர்கு அதிக வெற்றி கிடைக்கும். ஆகவேதான் கூட்டமைப்போடு தொங்கீனம்.

ஆனால் தனியே நிண்டாலும் உள்ளதில் பெரிய கட்சியாய் அவர்களே வருவார்கள்.

என்ன கூட்டமைப்பு என்று நின்றால் 12 சீட் வெல்லும் இடத்தில் தமிழரசு எண்டு நிண்டால் 9 வெல்லுவார்கள்.

,மாகாணசபை தேர்தலில் தம்பி 13வது இடத்திற்கு பின் தள்ளுபட்டு விட்டவுடன் சுரேசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தற்போது   சம்பந்தன் ஐயாவுக்கு நெருக்கமானவர்களுக்கு பிறர் முலமாக தூது விடுகின்றார் அதாவது சுமந்திரன் யாழை விட்டு வேறு மாவட்டத்தில் போட்டியிட்டு வெல்லமுடியும் தானே ,எங்கள் மூலமாகவும் சிலர் அணுகியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக 1970 தேர்தலில் வீட்டு சின்னத்தை கண்ட மக்கள் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் 2004 இல் காணத் தொடங்கினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg
 
மீரா,

திருமுகங்களை பார்த்தியளோ? இவைதான் எங்களுக்கு கிழிக்கபோற ஆக்கள்

நாடாளமன்றில் எதிர்கட்சி பதவியையே கைப்பெற்ற வக்கிலாத ஆக்கள்

இந்த மூஞ்சியல் தானே தொடர்ந்து   நாடாளமன்றம் போரியல், இந்தமுறை வேறை ஆக்களை ட்ரை பன்னேலாதோ?

எங்களுக்கு இப்ப வேற தெரிவு இல்லாத காரணத்தால் இந்த சம் சும் என்ற கோடாரிக்காம்புகள் ஆட்டம் போடுகினம் ஆனால் இப்ப விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளதால் மக்கள் கொஞ்ச நிம்மதி அடைந்துள்ளார்கள் ...
இந்த முறை தேர்தல் பதில் சொல்லும் கோசன் மற்றும் எதிர்ப்பாளர்களே ...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.