Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யதார்த்த பூர்வமாக எட்டக்கூடிய தீர்வுகளுக்காக வாக்களிப்போம்- யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்சங்கம்

Featured Replies

யதார்த்த பூர்வமாக எட்டக்கூடிய தீர்வுகளுக்காக வாக்களிப்போம்- யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்சங்கம்:

07 ஆகஸ்ட் 2015
Bookmark and Share
 
யதார்த்த பூர்வமாக எட்டக்கூடிய தீர்வுகளுக்காக வாக்களிப்போம்- யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்சங்கம்:

தமிழ் மக்களிற்கான அரசியல் தீhவானது, அவர்கள் இலங்கையின் ஏனைய  மக்களுக்கு நிகராக வாழ்வதற்கான உரிமையுடன் தமது பொருளாதாரத்தினையும் கலாச்சாரத்தினையும்; காப்பதற்கும் வளர்ப்பதற்குமான உரிமையினையும், தமது பூர்வீக நிலங்களின் குடிசனப் பரம்பல் பெரும்பான்மையின மக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய மாற்றப்பட முடியாதவாறான உத்தரவாதத் தினையும் கொண்டதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் இந் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தினது ஆதரவும் அனுதாபமும் இருந்தது.

எமது நியாயமான கோரிக்கைகளின் பாலிருந்த சர்வதேச ஆதரவினையும் அனுதாபத்தினையும் எமது பிடிவாதமான விட்டுக்கொடாத போக்கின் காரணமாக இழந்து போனது மாத்திரமின்றி ஒரு கட்டத்தில் சர்வதேச ரீதியான தனிமைப்படுத்தலையும் எதிர்நோக்கியிருந்தோம்.

மீண்டும் கனியத் தொடங்கியிருக்கும் சர்வதேச மற்றும் சிங்கள முற்போக்குசக்திகளின் அனுதாபத்தினையும் ஆதரவினையும் எமது பிடிவாதப் போக்கினால் போட்டுடைப்பது நாம் வரலாற்றிலிருந்து எவ்வித பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதாக அமைந்துவிடும்.

எமக்கான தீர்வினைப் பெறுவதற்கு நாம் பொறுப்புடனும் கௌரவமான முறையிலும் பிரச்சனையை அணுகவேண்டும.; சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்களைத் தூண்டிவிடத் தக்கதான தேவையற்ற உணர்ச்சியூட்டும் சொல்லாடல்கள்; தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டஇ பொறுப்பான அரசியல்வாதிகளால் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

முஸ்லீம் மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தவதில் எமது தலைவர்களின் பணி போதுமானதாக இல்லை. எமது நாட்டின் எனைய சிறுபான்மையினராகிய முஸ்லீம்கள் மற்றும் மலையகத் தமிழர்களுடன் எமக்கான பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை.

எமது சமூகத்தின் இருப்பிற்கும் நல்வாழ்விற்கும் எமக்கு தற்போது தேவையாயிருப்பது இராசதந்திர அணுகுமுறையன்றி உணர்ச்சியூட்டும் பேச்சுக்களும் வறட்டு விவாதங்களும் அல்ல. எமது மூலக் கோரிக்கைகள் தொடர்பான உணர்ச்சியூட்டும் உரைகளும் துரோகிகளென கூறுவதும் உண்மையிலேயே எமது நல்வாழ்விற்காக தமது உயிரைத் துறந்தவர்களை அவமதிப்பது மட்டுமன்றி நாம் மீண்டும் எங்கு செல்கின்றோம்? என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

அரசியல் கட்சிகள் பலவும் தமிழ் தேசியப் பிரச்சனைக்கான தீர்வினைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளன. மேற்படி தீர்வுத்திட்டங்களில் யதார்த்தபூர்வமான, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கக்கூடியதான, தீர்வுத் திட்டத்தினையே நாம் ஆதரிக்கவேண்டும். பெரும்பாலான தமிழ் மக்கள் சமஸ்டித் தீர்வினை விரும்புவதுடன் அதற்கு ஆதரவாக மீண்டும் மீண்டும் வாக்களித்துமுள்ளனர். சிறுபான்மையினராகிய எமக்காக பாராளுமன்றத்தில் பலமானதொரு குரலாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதித்துவம் அவசியம்.

கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட பேரழிவுகள், மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தும் பாதை நோக்கிய வெற்றுக் கோ~ங்களினை தவிர்க்கும் போக்கினை வாக்காளரிடம் ஏற்படுத்தியுள்ளது. எமது வாழ்வினை நாம் மீளவும் இந்த நாட்டிலேயே கட்டியெழுப்ப வேண்டுமேயன்றி வெளிநாடு எதிலுமல்ல.

எனவே யாதார்த்தபூர்வமாக எட்டக்கூடிய தீர்வுத் திட்டங்களுக்காக வாக்களித்து இந்நாட்டில் எமது மக்களின் கௌரவமான வாழ்விற்கு உறுதிசேர்ப்போம்.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட பேரழிவுகள், மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தும் பாதை நோக்கிய வெற்றுக் கோசங்களினை தவிர்க்கும் போக்கினை வாக்காளரிடம் ஏற்படுத்தியுள்ளது. எமது வாழ்வினை நாம் மீளவும் இந்த நாட்டிலேயே கட்டியெழுப்ப வேண்டுமேயன்றி வெளிநாடு எதிலுமல்ல.

எனவே யாதார்த்தபூர்வமாக எட்டக்கூடிய தீர்வுத் திட்டங்களுக்காக வாக்களித்து இந்நாட்டில் எமது மக்களின் கௌரவமான வாழ்விற்கு உறுதிசேர்ப்போம்.

கஜே கோஸ்டிக்கும் புலிவாலுகளுக்கும் நச்செண்டு ஒரு குட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

கஜே கோஸ்டிக்கும் புலிவாலுகளுக்கும் நச்செண்டு ஒரு குட்டு!

நேற்றுச் இதைச் சொன்னேன், இன்று அந்த திரி நூத்தாச்சு.

சொன்னது எண்னென்டா, டக்கி அண்ட் கம்பனிக்கு போன முறை கிடைத்த சீட்டுகளுக்கு தான் கஜன், வித்தி கம்பனிகள் அடிபாடு.

கூட்டமைப்பு வழக்கம் போல கிடைப்பது கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவின் இன்றைய யதார்த்த சூழலில்.. டக்கி அன்கோவுக்கு வாக்குப் போடச் சொல்லுவது போல் உள்ளது. ஏனெனில்..

** சம் சும் கும்பலின் சமஸ்டி சிங்கள தேசத்தால்.. நிராகரிக்கப்பட்டிட்டுது.. தேர்தலுக்கு முன்னாடி. 

** கஜேந்திரன் அணியின் ஒரு நாடு இரு தேசம் உலக அளவில் சாத்தியம் என்றாலும்.. சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டிட்டுது... தேர்தலுக்கு முன்னாடி.

** வித்தியாதரன் அணியின் சுயநிர்ணயம்.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. சொல்லவே தேவையில்லை. அதுவும் நிராகரிக்கப்பட்டிட்டுது.. தேர்தலுக்கு முன்னாடி.

இருக்கிற யதார்த்தம் என்று பார்த்தால் சிங்கள தேசத்துக்கு அடிமை சாசனம் எழுதிட்டு... அது போடுற பிச்சையில் வாழ்ந்து முடிப்பது.அது வீசிற எச்சில் எலும்பை சுகித்துக்கிட்டு அதற்கு வாலாட்டு அரசியல் நடத்துவது. இதற்கு விஜயகலா.. டக்கிளஸ்.. தரப்புத்தான் சரியான தேர்வு.

இவை இப்ப யாரை ஆதரிக்க அறிக்கை விடினம்..????????!:grin::unsure::innocent:

Edited by nedukkalapoovan
எழுத்துப்பிழை;மேலதிக கருத்திடல்

  • கருத்துக்கள உறவுகள்

ககஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சி ஓரிரு ஆசனங்களையாவது பெற்ருக்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு, அப்படி ஏற்படாதவிடத்தே.......

புலம்பெயர்ந்துவாழும் தற்போதைய தமிழர்களது மூன்றாவது சந்ததிகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுடனான தொடர்புகள் அற்றவர்களாகிவிடுவார் எனும் எதிர்வுகூறலின் அடிப்படையில் "உங்கட அலுவலை நீங்கள் பாருங்கோ எங்களுக்கு எங்கட அலுவல்தெரியும்" என தற்போது கூறுவதுபோல் கூறவேண்டியதேவை இனிமேல் ஏற்படாது.

காரணம், புலம்பெயர்வாழ் தமிழர்களது தற்போதைய சந்ததியினாலேயே புலத்துத் தமிழர்கள் கைவிடப்படும் அபாயம் ஏற்படலாம். 

அவர்களிடமுள்ள பணத்தால் தமிழர்களது மனங்களை வெல்லமுடியாது போகலாம் எனிலும் சிங்களவனை வெல்லலாம்.

நானும் இனிமேல் சிங்களவருடன் ஒத்துப்போகுதல் எனும் பயணப்பாதையில் செல்ல எத்தனிக்கப்போகிறேன் எல்லாத்துக்கும்  தேர்தல் முடிவுக்காகப் பொறுத்துக்கொண்டு இருக்கிறன். 

அடுத்த நத்தார் விடுமுறையை காங்கேசந்துறையில் இராணுவம் நடத்தும் உல்லாசவிடுதியில் களிப்பதாக உத்தேசம்.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னமேயே நான் ஒருசில அலுவல்களைப் பார்க்க ஆரம்பிச்சிட்டன். எவ்வளவுகாலத்துக்குத்தான் நாங்களும் அடிச்ச காசை பதுக்கிவைச்சு அனுபவிக்காமல் இருக்கிறது, என்னதான் தாய்லாந்து சிங்கப்பூர் மடஹஸ்கர் எனப் போனாலும் உரும்பிராச்சந்தி  தளையசிங்கத்தாற்றை ஆட்டிறச்சிப்பங்கு தின்னுமாப்போல் வருமோ.

தமிழீழமும், ...........வும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேர்தல் வாக்களிப்பு சரித்திரத்தினை ஆய்வு செய்யும் ஒருவர் ஆங்கில பத்திரிகையில் இவ்வாறு சொல்கின்றார்:

இலங்கை வாக்காளர்கள் ஒரு போதும் நிராகரிக்கப் பட்ட தலைவருக்கோ, கட்சிக்கோ வாக்களித்தது கிடையாது.

இதனை, சிறிமா பண்டாரநாயக்க  (1989), காமினி திசநாயக்கா (1994), ரணில் (2010) ஆகியோரது உதாரணங்களுடன் காட்டும் அவர், இதுவே மகிந்தவுக்கும் நிகழும் என்கிறார். மகிந்த போலவே அந்த மூவரும், மக்கள் உணர்வு அறியாது, தாமே வெல்வது உறுதி என போட்டி இட்டு, தோல்வி அடைந்த போது, திகைத்து போய் இருந்தார்கள்.

17 வருட UNP ஆட்சியில் வெறுத்துப் போன மக்கள், தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என போட்டியிடாது ஜனாதிபதியான விஜயதுங்க, தேர்தலில் நிற்கவில்லை. சந்திரிகா வென்றார்.

அதே போல, கிட்டத்தட்ட 17 வருடம் ஆண்டு விட்ட சுதந்திர கட்சி பதிவியில் இருந்து இறக்க, சிறிசேன வெளிய வந்ததால், ஐ தே க ஆதரவுடன் வென்றார். இம்முறை அதே கட்சி வெல்லும் என்பதால் அவரும் பிரச்ராரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார்.

அதே வேளை இம்முறை இனவாதம் எடுபடப் போவதில்லை. காரணம்: தமிழர்கள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்கள் என்ற உணர்வு சிங்களவர்களிடம் இருப்பது. பிரபாகரனும், போராட்டமும் இருக்கும் வரை, சிங்கள பேரினவாதமும் வேகமாக இருந்தது.

இது தெரிந்தே, முன்னர் பெரும் இனவாதிகளாக இருந்த சம்ப்பக ரணவக்கவும், இரத்தின தேரரும் இனவாதம் பேசி அலட்டிக் கொள்வதில்லை. (இம்முறையாவது )

  • கருத்துக்கள உறவுகள்

காரணம்: தமிழர்கள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்கள் என்ற உணர்வு சிங்களவர்களிடம் இருப்பது. பிரபாகரனும், போராட்டமும் இருக்கும் வரை, சிங்கள பேரினவாதமும் வேகமாக இருந்தது.

ஆங்கில பத்திரிகையாளர் 1983 ஆம் அண்டு பிறந்தவர் போல

  • கருத்துக்கள உறவுகள்

---முஸ்லீம் மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தவதில் எமது தலைவர்களின் பணி போதுமானதாக இல்லை. எமது நாட்டின் எனைய சிறுபான்மையினராகிய முஸ்லீம்கள் மற்றும் மலையகத் தமிழர்களுடன் எமக்கான பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்

எலி... ஏன், கோவணம் கட்டிக் கொண்டு.... ஓடுது, என்று பார்த்தால்.... 
யாழ். பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீடத்தில், முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகம்.
இதனை... இப்பவே, ஓட்ட நறுக்கா விட்டால்... யாழ்ப்பாணத் தமிழன், பிச்சை எடுப்பது நிச்சயம். 
முஸ்லீம்... ஆதிக்கத்தை... கிழக்கு பல்கலை கழகத்தில், விட்டுக் கொடுத்து... ஏற்பட்ட அவமானம் போதும்.
இதற்கும் .... வக்காலத்து வாங்க, நாலு....  மண்டை, கழண்ட விசர் சனம் இங்கு திரியுது.
அந்தச் சனத்துக்கு, இது... விளங்க முதல்.... யாழ்ப்பாணம், முஸ்லீம் பூமியாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எலி... ஏன், கோவணம் கட்டிக் கொண்டு.... ஓடுது, என்று பார்த்தால்.... 
யாழ். பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீடத்தில், முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகம்.
இதனை... இப்பவே, ஓட்ட நறுக்கா விட்டால்... யாழ்ப்பாணத் தமிழன், பிச்சை எடுப்பது நிச்சயம். 
முஸ்லீம்... ஆதிக்கத்தை... கிழக்கு பல்கலை கழகத்தில், விட்டுக் கொடுத்து... ஏற்பட்ட அவமானம் போதும்.
இதற்கும் .... வக்காலத்து வாங்க, நாலு....  மண்டை, கழண்ட விசர் சனம் இங்கு திரியுது.
அந்தச் சனத்துக்கு, இது... விளங்க முதல்.... யாழ்ப்பாணம், முஸ்லீம் பூமியாகி விடும்.ஔண்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சிறியர்....யதார்த்தம் விளங்கமுதல்...பூமி பறிபோய்விடும்.....இதுவிளங்காமல்  இராமாயண பாத்திரமும்....மகாபாரத பாத்திரமும் எதுவோ அலம்பினால் சரி என்பதுபோல் உள்ளது....இனத்தின் தியாகிகளையும் வீரத்தையு ம் நினைப்பதேயில்லை....மஹாபாரத பாத்திரம் நீங்கள் குறிப்பிட்ட இனமோ தெரியவில்லை...தமிழ் கதறுது..

Edited by alvayan
எழுத்துபிழை

உங்கள், பாராட்டுக்கு... நன்றி அல்வாயன்.:)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீடத்தில், முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகம்.
இதனை... இப்பவே, ஓட்ட நறுக்கா விட்டால்... யாழ்ப்பாணத் தமிழன், பிச்சை எடுப்பது நிச்சயம். 

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஆசிரியர் பீடத்தில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை எடுத்து இணைத்து இருக்கிறேன்.

முஸ்லிம் பெயர்கள் எத்தனை? ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்?

http://www.jfn.ac.lk/sci/index.php/faculty-board

he Faculty Board consists of all permanent members of academic staff, three external members from the areas of related to the discipline and two student members. All decisions connected with teaching, examinations and research are approved by the Faculty Board before submission to the Senate of the University. Student members are excluded in related to examinations and election of the Dean.

1. Prof.S.Srisatkunarajah (Chairman)
2. Dr.P.Abiman
3. Dr.S.Arivalzahan
4. Dr.E.Y.A.Charles
5. Dr.T.Eswaramohan 
6. Dr.K.Gajapathy
7. Dr.(Mrs.) R.Gnaneswaran
8. Dr.P.Iyngaran
9. Prof.J.P.Jeyadevan
10. Prof. K. Kandasamy
11. Dr.K.Kannan
12. Mr.R.Kapilan
13. Mr.M.Khokulan (Rep. Prob. Lecturer)
14. Miss.N.Krishnapillai 
15. Prof.(Mrs).S.Kuganathan
16. Mr.A.Laheetharan
17. Dr.S.Mahesan
18. Dr.T.Manoranjan
19. Mr.B.Muraleetharan (Rep. Prob. Lecturer)
20. Mrs.J.Nandakumar
21. Mrs.K.Niranjan
22. Dr(Mrs)J.Prabagar
23. Dr(Mrs)G.Rajkumar
24. Mrs.N.Rajan
25. Dr.A.Ramanan
26. Dr.N.Ramaruban
27. Mrs.N.Ravimannan
28. Prof.P.Ravirajan
29. Dr.G.Sashikesh
30. Mrs.N.Satkunanathan
31. Mr.S.Selvarajan
32. Prof.(Mrs).M.Senthilnanthanan
33. Mrs.R.Senthooran
34. Dr.P.Sevvel
35. Dr.N.Sivapalan
36. Dr(Mrs)A.Sivaruban
37. Dr.R.Srikaran
38. Prof.S.N.Surendran
39. Mr.S.Suthakar
40. Dr.K.Thabotharan 
41. Mr.A.C.Thavaranjit
42. Mr.N.Varathan
43. Dr.K.Velauthamurty
44. Mr.A.Vengadaramana
45. Mr.C.K.W.Venkatesh Luckshman
46. Dr. K. Vignarooban
47. Prof. R. Vigneswaran

Students' Representatives
48. Ms.D.Marimurhu ( 2011/SP/129)
49. Mr.R.Miller Alexander (2011/SP/200)

External Members
50. Prof.V.Tharmaratnam 
51. Mr. P. Thayananthan
52. Mr. V.S.B.Thuseetharan

Mr. A.Philips Vijayaratnam - Secretary

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஆசிரியர் பீடத்தில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை எடுத்து இணைத்து இருக்கிறேன்.

முஸ்லிம் பெயர்கள் எத்தனை? ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்?

வணக்கம், ஜூட் .
நீங்கள், மினைக்கெட்டு தேடி எடுத்த, பட்டியலை....  பார்த்தேன். தவறு  எதுவும் இல்லை.
கிழக்கு... பல்கலை கழகத்தில், ஒவ்வொரு மாதமும்.... 
சிங்கள மாணவர்களை விட, முஸ்லீம் மாணவர்கள்.....
எம்மவர்களை.... ராகிங் என்ற பெயரில், கொடுமைப் படுத்துவார்கள்.
அது.... யாழ்பாண பல்கலைக் கழகத்திலும் நடக்கக் கூடாது  என்ற ... ஆதங்கம்.
அது.... எனது, பூமி. சின்ன வயசில் ஓடி... விளையாடிய..... என் மண்.
அந்த.... மண்ணை, இன்றும் .....  நேசிக்கின்றேன்.:love:

தவறுதலான பதிவு, அதனால் சுயதணிக்கை

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இது பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவின் அறிக்கை. ஒட்டு மொத்த பல்கலைக்கழகத்தின் அறிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது. பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தின் தலைவர் தமிழ்த்தேசிய முன்னணியின் வேட்பாளர். நெடுக்கர் சொன்னது போல இந்த அறிக்கை டக்ளசுக்கும் விஜயகலாவுக்கும் பொருந்தும்.ததேகூட்டமைப்புக்கும் பொருந்தும் என்றால் அவர்களும் அந்தக் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டு விட்டார்கள் என்பதே அர்த்தம். சமஷ்டிp பற்றிச் சொல்லுவதெல்லாம் தேர்தல் புலுடா.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேர்தல் வாக்களிப்பு சரித்திரத்தினை ஆய்வு செய்யும் ஒருவர் ஆங்கில பத்திரிகையில் இவ்வாறு சொல்கின்றார்:

இலங்கை வாக்காளர்கள் ஒரு போதும் நிராகரிக்கப் பட்ட தலைவருக்கோ, கட்சிக்கோ வாக்களித்தது கிடையாது.

இதனை, சிறிமா பண்டாரநாயக்க  (1989), காமினி திசநாயக்கா (1994), ரணில் (2010) ஆகியோரது உதாரணங்களுடன் காட்டும் அவர், இதுவே மகிந்தவுக்கும் நிகழும் என்கிறார். மகிந்த போலவே அந்த மூவரும், மக்கள் உணர்வு அறியாது, தாமே வெல்வது உறுதி என போட்டி இட்டு, தோல்வி அடைந்த போது, திகைத்து போய் இருந்தார்கள்.

17 வருட UNP ஆட்சியில் வெறுத்துப் போன மக்கள், தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என போட்டியிடாது ஜனாதிபதியான விஜயதுங்க, தேர்தலில் நிற்கவில்லை. சந்திரிகா வென்றார்.

அதே போல, கிட்டத்தட்ட 17 வருடம் ஆண்டு விட்ட சுதந்திர கட்சி பதிவியில் இருந்து இறக்க, சிறிசேன வெளிய வந்ததால், ஐ தே க ஆதரவுடன் வென்றார். இம்முறை அதே கட்சி வெல்லும் என்பதால் அவரும் பிரச்ராரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார்.

அதே வேளை இம்முறை இனவாதம் எடுபடப் போவதில்லை. காரணம்: தமிழர்கள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்கள் என்ற உணர்வு சிங்களவர்களிடம் இருப்பது. பிரபாகரனும், போராட்டமும் இருக்கும் வரை, சிங்கள பேரினவாதமும் வேகமாக இருந்தது.

இது தெரிந்தே, முன்னர் பெரும் இனவாதிகளாக இருந்த சம்ப்பக ரணவக்கவும், இரத்தின தேரரும் இனவாதம் பேசி அலட்டிக் கொள்வதில்லை. (இம்முறையாவது )

ரணிலை எத்தனை தரம் நிராகரித்தார்கள்.அவர் இன்னும் அரசியலில் இருக்கிறார்.1977 இல் எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அடுத்த 1989 ஆம் ஆண்டுத் தேர்தலில் மண்ணைக் கவ்வியதே மக்கள் புலிகளுடன் அதிகம் முரண்படாத ஈரோஸ் இயக்கத்தைத் தேர்ந் தெடுத்தார்களே.நிராகரிக்கப் பட்டவர்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.அருளம்பலத்திடம் தோற்ற அமிர்தலிங்கம் 1977 இல் எதிர்க்கட்சித் தலைவரானார். 1989 இல் படுதோல்வி அடைந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னதான் கத்தினாலும் அங்க இருக்கிற சனம் தான் வாக்களிக்கப் போகுது

ரணிலை எத்தனை தரம் நிராகரித்தார்கள்.அவர் இன்னும் அரசியலில் இருக்கிறார்.1977 இல் எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அடுத்த 1989 ஆம் ஆண்டுத் தேர்தலில் மண்ணைக் கவ்வியதே மக்கள் புலிகளுடன் அதிகம் முரண்படாத ஈரோஸ் இயக்கத்தைத் தேர்ந் தெடுத்தார்களே.நிராகரிக்கப் பட்டவர்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.அருளம்பலத்திடம் தோற்ற அமிர்தலிங்கம் 1977 இல் எதிர்க்கட்சித் தலைவரானார். 1989 இல் படுதோல்வி அடைந்தார்.

அருளம்பலத்துடன் தோற்ற அமிர்தலிங்கம் ?

இது எல்லாம் எப்ப நடந்தது .:innocent:

இனி என்ன அம்மாணும் சப்போட்டாம் பேந்தென்ன 

karuna.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்த் தொகுதியில் அப்போது தமிழ்காங்கிரஸ்சில் போட்டியிட்ட அருளம்பலம்தான் நாகநாதனிடம் தோற்றதாக நினைவிருக்கு, அதன்பின்பு அருளம்பலம் தேர்தலில் தோத்ததன் காரணமாக பொஞ்சாதிக்காரி கிணத்தில் விழுந்து தற்கொலை  செய்ய முயற்சித்தா எனும் கட்டுக்கதையால அனுதாப வாக்குகளை பெறமுயற்சித்ததாக அறிவேன். கடைசியில் தேர்தலில் வெற்றிபெற்ரு சிறீமாகாலத்தில் சுதந்திரக்கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.

அமிர்தலிங்கத்தார், அந்தக்காலத்தில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலைக்கேசில் கோகிலாம்பாள் சார்பாக வாதாடி வழக்கில் தோற்றது உண்மை. அதனால்தான் காங்கிரஸ் மேடைகளில் கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம் எனக்கேலிசெய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமிர்தலிங்கம் தோற்காத இடமில்லை.... 
தமிழீழம் என்ற நிலைப்பாடு வந்த பின்னரே  அவர் தமிழ்மக்களின் கதாநாயகன் வேடம் எடுத்தார்.

மங்கையற்கரசி அக்காவை அமுக்கினதும் குருட்டு லக்கிலைதான்..... இல்லாட்டி  இராசதுரை....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஜூட் .நீங்கள், மினைக்கெட்டு தேடி எடுத்த, பட்டியலை....  பார்த்தேன். தவறு  எதுவும் இல்லை.
கிழக்கு... பல்கலை கழகத்தில், ஒவ்வொரு மாதமும்.... 
சிங்கள மாணவர்களை விட, முஸ்லீம் மாணவர்கள்.....
எம்மவர்களை.... ராகிங் என்ற பெயரில், கொடுமைப் படுத்துவார்கள்.
அது.... யாழ்பாண பல்கலைக் கழகத்திலும் நடக்கக் கூடாது  என்ற ... ஆதங்கம்.
அது.... எனது, பூமி. சின்ன வயசில் ஓடி... விளையாடிய..... என் மண்.
அந்த.... மண்ணை, இன்றும் .....  நேசிக்கின்றேன்.:love:

வணக்கம் தமிழ் சிறி.

ஒரு சின்ன ஒரு தகவல்: எனது தாயார் அந்த நாட்களில் சிங்கள ஸ்ரீ அழித்து தமிழ் ஸ்ரீ எழுதி சிறை சென்றவர். உங்கள் பெயர் அதனை நினைவுக்கு கொண்டு வருகிறது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் செய்யும் பகடி வதையில் நீங்கள் காணும் இன ரீதியான பாகுபாட்டை வைத்து, யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கத்தில் முஸ்லிம் ஆதிக்கம் என்ற முடிவுக்கு வந்து அதை பகிரங்கமாக அறிவித்தது உங்கள் கருத்துக்களின் நம்பகத்தன்மையையும் உங்கள் ஆய்வு திறனையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இத்தனைக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட ஆசிரியர் பீடத்தில் முஸ்லிம் பெயருடன் எவரும் இருப்பதாக தெரியவில்லை. எமது மக்கள் மத்தியில் கல்வியில் சிறந்தவர்களின் நிலை இதுவென்றால் இந்த மக்களின் நிகழ்காலம் இப்படி இருப்பதற்கான காரணம் புரிகிறது. எதிர்காலத்தை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.

வடிகட்டி அவர்கள் தான் எடுத்தார்கள் என்று நினைத்தேன் யாழிலும் பலர் நிலை  அதே அதே ..

அமிர் எந்த தொகுதி எத்தனை தரம் தோற்றார். சிமோல் அருளம்பலம் யார்?

  போராட்டம் என்றவுடன் கள்ளமாக ஓடி வந்த  பாதை  மட்டும் அந்த  மாதிரி  ஞாபகம் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டிருந்தார். யாரால் என்பது நினைவில்லை..(அருளம்பலத்திடம் தோற்றார் என்பது தவறாக எழுதப்பட்டிருக்கலாம்.)சட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார். விக்கிபீடியா

https://ta.wikipedia.org/wiki/அப்பாப்பிள்ளை_அமிர்தலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வடிகட்டி அவர்கள் தான் எடுத்தார்கள் என்று நினைத்தேன் யாழிலும் பலர் நிலை  அதே அதே ..

அமிர் எந்த தொகுதி எத்தனை தரம் தோற்றார். சிமோல் அருளம்பலம் யார்?

  போராட்டம் என்றவுடன் கள்ளமாக ஓடி வந்த  பாதை  மட்டும் அந்த  மாதிரி  ஞாபகம் .:grin:

அமிர்தலிங்கம் குறைந்தது  2தரம் தோற்றது உண்மை அதற்கு மேலும் தோற்றாரா என்பது தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.