Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா பின்பற்றி வந்த கடுமையான நிலைப்பாடுகளை தளர்த்திக் கொண்டு, இலங்கையுடன் நட்புறவான கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளிக்கும் வகையில் தீர்மானம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான வகையில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கை தொடர்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உள்ளடக்கம் பற்றி பிஸ்வால் தகவல்களை வெளியிடவில்லை.
 இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையி ஐ.நாவில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா

26-08-2015 - 01:51

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123339/language/ta-IN/article.aspx

காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு

AUG 26, 2015by கார்வண்ணன்in செய்திகள்

nisha-press-colombo (1)ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

தனது இரண்டு நாள் பயணத்தின் முடிவில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் ஜெனிவாவில் வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் அமெரிக்க மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து முன்வைக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அனைத்துலக சமூகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளுக்குப் பதிலளிப்பதற்கு காலஅவகாசத்தைக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

nisha-press-colombo (1)nisha-press-colombo (2)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக கொண்டு வரும் தீர்மானம் கருத்தொருமித்த தீர்மானமாக அமையும்.

ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் தெரிய வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடி அந்த தீர்மானம் வரையப்படும்.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரியிலும், இந்த மாதமும் பதவிக்கு வந்த பின்னர் உள்நாட்டு விசாரணைகளின் மூலம் கரிசனைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தினேன்.  புதிய அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கு, அதனுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/08/26/news/9196

மஹிந்தவுக்கு வாக்களிக்காததன் விளைவு.சொந்தச் செலவில் நாம் எமக்கு வைத்த சூனியம்.கோட்டுச் சூட்டு கழுத்துப்பட்டி அணிந்தவன் எல்லாம் புத்தகப் படிப்பு மட்டும் தான் போல

போர்க்குற்றங்கள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை மறந்தது அமெரிக்கா

AUG 26, 2015 | 1:55by கி.தவசீலன்in செய்திகள்

nisha-biswal-colomboசிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சார்பில் சிறிலங்கா தொடர்பாக கருத்து வெளியிடப்படும் சந்தர்ப்பங்களில், பொறுப்புக்கூறல், போர்க்குற்றங்கள் , மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்படுவது வழக்கம்.

எனினும், நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் மற்றும், இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர், போர்க்குற்றங்கள், பொறப்புக்கூறல், மனித உரிமைகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அவர்கள் சுருக்கமான உரையின் போது இந்த மூன்று சொற்களையும் பயன்படுத்தவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தண்டனை விலக்குரிமை, நல்லிணக்கம், போன்ற சொற்களையே அவர்கள் பயன்படுத்தியிருந்தனர்.

கடந்தவாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கொழும்புடன் முதலாவதாக இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ள வொசிங்டன், சிறிலங்கா தொடர்பாக காண்பித்துள்ள மென்போக்கு சமிக்ஞையாக இது கருதப்படுகிறது.

அதேவேளை, “சில விடயங்களை அடைவதற்கு முன்னோக்கிச் செல்வது கடினமானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்த முயற்சிகளை நிறைவேற்ற காலஅவகாசம் தேவை என்பதை ஏற்கிறோம்.

குறுகிய காலத்துக்குள் ஆச்சரியங்களை எதிர்பார்க்க முடியாது” என்றும் ரொம் மாலினோவ்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/08/26/news/9191

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நம்புவதை அமெரிக்காவும் நம்பினால் என்ன தவறு?! tw_blush:

Edited by இசைக்கலைஞன்
எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரூட்டில் போனால் கடுகளவு நீதியும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான் நாங்கள் அப்பவே கஜே கோஸ்டியைக் கொண்டு அதிபர் தேர்தலலைப் புறக்கணிக்கச் சொன்னனாங்கள்! மகிந்தவுக்கு மறைமுக      ஆதரவு குடுத்தனாங்கள்! மக்களுக்கு மூளையில்லை போய் வோட்டுப்போட்டு எல்லாத்தையும் கெடுத்துப் போட்டுதுகள்!   

பிற்குறிப்பு: இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மைதான். ஆனால் ஆதிக்க சக்திகள் தமக்கு நலன்களுக்கு வேண்டியாவாறே அதைக் கையாண்டுகொள்ளும். அதற்காக மகிந்த போன்ற ஒரு கொடூரனை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமர்த்தினால் மக்களின் நிலை பரிதாபமாகிவிடும். கணனிகளுக்கு முன் இருந்துகொண்டு வருடத்துக்கு வருடம் வக்கேசனுக்கு உலகத்தைச் சுத்திக்கொண்டு பிள்ளைகளுக்கு பீட்சாவும் பாஸ்டாவும் கொடுத்துவுட்டு ஆயிரமாயிரம் போராட்டங்களை நடத்தலாம். ஆனால் அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும் என்ற நிலை புலத்து அன்றாடங்காய்ச்சிகளுக்கு உண்டு. இதனை எவரறிவர்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்தது பெரிதாக ஒன்றுமே நடக்கவில்லை.
அமெரிக்கா மட்டுமல்ல எந்தக் கொம்பனும் இலங்கைப் பிரச்சனையில்
சிங்கள அரசை ஒன்றுமே செய்ய முடியாது.
ஒறே ஒருவரால் தான் சிங்கள அரசை விரல் நுனியில் வைத்து ஆட்டலாம்
அவர் தான் எங்கள் சிங்கக்கொடி வீரர் சம்பந்தன் ஐயா tw_blush:

இன்று சுமந்திரனின் பேட்டி கேட்டேன் .

அரசியல் கைதிகள் விடுதலை 

மீள் குடியேற்றம் 

காணமல் போனோர் பற்றிய விபரங்கள் 

இவை மூன்றிற்கும் மிக முக்கியத்துவம் கொடுக்க சொல்லி நிஷாவிடம் வலியுறுத்தினார்களாம் .

அதுதான் எனது நிலையும் .

அதுசரி அமெரிக்கா இதனை நிறைவேற்றுவதாக சொன்னதா ? 

இதனை தானே 60 கலில் இருந்து சொல்ல தொடங்கினாங்கள் ...இப்பவுமா ...தேறும் ...என்னதான் தார் உற்றி அடித்தாலும் எங்கட புண்ணாக்குகள் தெளிய மாட்டுதுகள் ....அடிமை வாழ்வே பிடிக்கும் ....இதுக்காகவா மக்கள் வாக்கு போட்டார்கள் ....இதனை ஆதரிக்க இங்க கொஞ்ச ......

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு.... தமிழ் மக்களின் நிலையை எடுத்துச் சொல்ல....
பாராளுமன்றம், போன பயலுகள், முயற்சி செய்யலாமே....
ஆக்கள் பேச்சு, முச்சு.. இல்லாமல் கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்னும் எதிர்பார்க்காதது அல்ல. எதிர்பார்த்தது தான். ஐநா தீர்மானங்களை தீர்மானத்துக்கு தீர்மானம் நீர்த்துப் போகச் செய்து கொண்டு வரும் போதே பலரும் விடுத்த எச்சரிக்கை தான். குறிப்பாக மே 17 இயக்கம் இது குறித்த அன்றே எச்சரித்திருந்ததோடு.. அமெரிக்காவையும் இந்தியாவையும் இது தொடர்பில் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் செய்திருந்தார்கள். அமெரிக்கா இந்த உலகில் எந்த விடயத்தில் தனக்கு ஆதாயம் இல்லாமல் நீதியோடு நடந்திருக்கிறது..?! அதனிடம் நாம் போய் நீதியை எதிர்ப்பார்க்க. அதுபோக அமெரிக்கா தான் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து ஜே ஆர் காலம் முதல் தமிழின அழிப்புக்கு சிங்களவர்களுக்கு முண்டுகொடுத்து வந்த நாடுகளில் முதன்மையானது. அதனிடம் போய் தமிழர்கள் முதன்மையான நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்..??!

அமெரிக்காவோ.. இந்தியாவோ.. புற அக அழுத்தங்கள் இன்றி எமக்கு உதவாது. அவை அவைக்கு பலவீனமான சூழல் தோன்றின் அதனைப் பலப்படுத்த எம்மை பாவிப்பார்கள். இப்ப அவைக்கு எம்மை பாவிக்காமல்.. தம்மை பலப்படுத்தும் சூழல் தோன்றி இருக்குது. நாங்களே அதையும் உருவாக்கி கொடுத்திருக்கிறம். நாங்கள் தான் எஜமான விசுவாசிகள் ஆச்சே. அடிச்சாலும் விரட்டினாலும் வாலை ஆட்டிக்கிட்டு காலைச் சுற்றி வந்துகிட்டிருப்பம் என்று எஜமானர்களுக்கு நல்லாத் தெரியும். இதில.... அமெரிக்கா வந்து.. எமக்கு நீதி தரும்.. என்ற எதிர்பார்ப்பு வேற..?! நாங்க போராடாமல் எமக்கு விடிவு இல்லை. tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பயங்கரவாதிகள் .... அதுதான் சர்வதேசம் அழிச்சது!
தமிழர்கள் பயங்கரவாதிகள் ..... அதுதான் ஸ்ரீலங்கா அழிச்சது !

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தமிழர் தரப்பு சீனாவை அணுகினால் அமெரிக்கா ஒரு வேளை தமிழர் பிரச்சனையை சாதகமாக அணுக முயற்சிக்கலாம். அந்தக் கலைதான் நம் தலைவர்களிடம் இல்லை. இந்தியாவுக்கு ---   கழுவத்தான் லாயக்கு. இவர்களைத் தெரிவு செய்த மக்கள் அதன் பலனை அனுபவிக்கப்ப் போகிறார்கள். அமெரிக்கா கண் துடைப்புக்காக மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றைச் செய்யும். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழருக்கான நீதி கிடைக்காது. தமிழர்கள் ஏதோ கிடைத்தவரை லாபம் என்று இருக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாக, சீனாவை ஓரள‌வுக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். இதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பிடித்திருக்கிறது. மகிந்தவின் வரவுடன் ஏற்பட்ட சீன நுழைவு இன்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட‌ மகிந்தவின் வரவுக்கு தலைவர் காரணமில்லை என்பதை முதற்கண் தெரிவித்துவிடுகிறேன். tw_blush:

இனிமேல் இந்தியாவும், அமெரிக்காவும் சாதுவாக உரசிக்கொள்ளுவினம். அநேகமாக இந்தியா இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் பம்மிக்கொள்ளும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனாலும் சீனனும் சும்மா இருக்கமாட்டான். சும்மா இருந்தால் அந்த பட்டுப்பாதை திட்டம் அம்பேல் ஆகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

26_08_2015-DM-Main-Cartoon-600-1.jpg

Main-cartoon-04_06_2015-600-1.jpg

Edited by Nathamuni

எங்களிற்கு அரசியல் விளங்க சோனகர் வயதான காலத்தில் மெக்கா போய் உண்மை அறிந்து வருகிற மாதிரிதான் தமிழனின் அரசியல். எங்களிற்கு அரசியல் விளங்க சோனகர் வயதான காலத்தில் மெக்கா போய் உண்மை அறிந்து வருகிற மாதிரிதான் தமிழனின் அரசியல். முன்பு இந்தியா இந்தியா வடக்கத்தையான் என்றார்கள்.யுத்தம் முடிந்து சிங்கள ஆமியை கொண்டு எடுத்து படங்களை வைத்து ஐ.நா விசாரனைக்கு சனல் 4ம் வைத்து தமிழரை முட்டால் ஆக்கினார்கள்.இதை புலத்து ஒருசில¨குழுக்கள் மக்கள் காசில் ஐ.நா வாசலில் தமிழ்ஈழம் வந்துட்டுது என்று ஏமாற்றினார்கள் இப்ப அமெரிக்காவை திட்டுகிறார்கள்.வேலையாலை வீட்டிற்கு வந்தால் குளிர் நாடுதான் வெளியில் ஒன்றும் செய்யமுடியாது தான் அதற்கு அந்த நொந்து போன மக்களை உங்களின் பொழுது போக்க இது நேரமில்லை. அமெரிக்கா அமெரிக்காதான

Edited by bismar

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான் நாங்கள் அப்பவே கஜே கோஸ்டியைக் கொண்டு அதிபர் தேர்தலலைப் புறக்கணிக்கச் சொன்னனாங்கள்! மகிந்தவுக்கு மறைமுக      ஆதரவு குடுத்தனாங்கள்! மக்களுக்கு மூளையில்லை போய் வோட்டுப்போட்டு எல்லாத்தையும் கெடுத்துப் போட்டுதுகள்!   

பிற்குறிப்பு: இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மைதான். ஆனால் ஆதிக்க சக்திகள் தமக்கு நலன்களுக்கு வேண்டியாவாறே அதைக் கையாண்டுகொள்ளும். அதற்காக மகிந்த போன்ற ஒரு கொடூரனை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமர்த்தினால் மக்களின் நிலை பரிதாபமாகிவிடும். கணனிகளுக்கு முன் இருந்துகொண்டு வருடத்துக்கு வருடம் வக்கேசனுக்கு உலகத்தைச் சுத்திக்கொண்டு பிள்ளைகளுக்கு பீட்சாவும் பாஸ்டாவும் கொடுத்துவுட்டு ஆயிரமாயிரம் போராட்டங்களை நடத்தலாம். ஆனால் அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும் என்ற நிலை புலத்து அன்றாடங்காய்ச்சிகளுக்கு உண்டு. இதனை எவரறிவர்?

யாருக்கு வேண்டும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ? தாயகத்திலுள்ளவர்கள் கேட்கவில்லை, ஏனென்றால் கொல்லப்பட்டவர்களுக்கும், தாயகத்திலுள்ளவர்களுக்கும் எந்தத் தொடர்புமேயில்லை. கொல்லப்பட்டவர்கள் முழுக்க முழுக்க புலபெயர்ந்தவர்களின் சொந்தங்களே, ஆகவே சர்வதேச விசாரணை தேவைப்படுவது புலம்பெயர்ந்தவர்களுக்குத்தான் என்பது தெளிவாகிறது. ஆகவே அதுபற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் புலம்பெயர்ந்தவர்களுக்கும், தாயகத்திலுள்ளவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இன்று இல்லை.

அடுத்தது, எமது அரசான தேசிய நல்லிணக்க அரசு இப்போதுதான் பதவியில் அமர்ந்திருக்கிறது. இதயங்கள் சங்கமித்திருக்கும்போது எதற்காக மறுபடியும் பாழாய்ப்போன போர்க்குற்ற விசாரணை பற்றி நாம் பேசித் தொலைக்க வேண்டும் ? அப்படிப் பேசினால் அது எமது இதயத்தை நாமே புண்படுத்துவது ஆகாதா? இது, எமது ஜனாதிபதியினதும், எமது பிரதமரினதும் இதயத்தைக் காயப்படுத்துவதோடு, சிங்களவர்களின் மனதையும் நோகடிக்குமே? ஆகவே இந்த சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டவே வேண்டாம். நான் முதலே சொன்னதுபோல இது புலம்பெயர்ந்தவர்களின் கொல்லப்பட்ட உறவுகளுக்காக அவர்கள் போடும் கூச்சல் என்கிற படியால் நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் கொல்லப்பட்டவர்களுக்கும் எமக்கும் , அதாவது தாயகத்திலிருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. 

அடுத்ததாக, மூதூரில் மீள்குடியேற்றம் நடைபெறத் தொடங்கிவிட்டது. இப்படியே நாளை மணலாற்றிலும், நாளை மறுதினம் அம்பாறையிலும் தமிழரின் மீள்குடியேற்றங்களை எமது தேசிய நல்லிணக்க அரசின் சனாதிபதியும், அதன் பிரதமரும் தொடங்கிவைப்பார்கள். அப்படியே மணலாற்றில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் அம்பாறையில் புலிகளிடமிருந்து பிடுங்கிய ஆயுதங்களையும் அவர்கள் காண்பார்கள். ஆகவே இந்த சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வேண்டவே வேண்டாம். அது புலம்பெயர்ந்தவர்கள் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக எழுப்பும் கோஷம், எமக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

மற்றைய விடயம், காணாமல்ப் போனவர்கள் பற்றியது. எங்களைப் பொறுத்தவரை இதுவரையில்க் காணாமல்ப் போனவர்கள் என்று பார்த்தால், அது பிரகீத் எக்னெலிகொட மட்டும்தான். அவரைப் புலிகளின் உறுப்பினர்களே கடத்திக் கொண்டுபோய்க் கொன்றிருக்கிறார்கள். மற்றும்படி தமிழரில் யாராவது காணாமல்ப் போயிருந்தால், அவர்கள் கூட புலம்பெயர்ந்தவர்களின் உறவுகளாக மட்டுமே இருக்கமுடியும், எமக்கும் அவர்களுக்கு எந்தச் சொந்தமுமில்லை.ணஆகவே காணாமல்ப் போனவர்பற்றியும் யாரும் பேசத் தேவையில்லை.

கடைசியாக அரசியல் கைதிகளின் விடுதலை. அரசியல் கைதிகள் என்றால் யார் ? அவர்கள்கூட முன்னால்ப் புலிகள் என்றால், அவர்களும் புலம்பெயர்ந்தவர்களின் சொந்தங்களே. எமக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆகவே, அவர்கள் பற்றியும் பேசி எமது நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

பிற்குறிப்பு ; அமெரிக்கா உற்பட இன்று கூறப்பட்டும் சர்வதேசம் மகிந்த இருக்கும்வரை சர்வதேச போர்குற்ற விசாரணையைத் தூக்கிப் பிடித்தது உண்மையாகவே தமிழர் மேல் உள்ள அக்கறையினால் அல்ல. மாறாக சீனாவின் கைக்குள் ஒரேயடியாக ஓடி ஒளிந்துகொள்ளப் பார்த்த மகிந்தவை வீழ்த்துவதற்காக. இன்று மகிந்தவை வீழ்த்தி தனது செல்லப்பிள்ளையான ரணிலைக் கொண்டுவந்திருக்கிறது. இவ்வளவு கஷ்ட்டப்பட்டுக் கொண்டுவந்த ரணிலின் அரசுக்கு எதிராக தானே எவ்வாறு ஒரு சர்வதேச விசாரணையைக் கொண்டுவரமுடியும் ? ஆக, இது முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். 

இன்றுவரை அமெரிக்கா சர்வதேசத்தில் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும்போது, அது எப்போதுமே அடக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தது கிடையாது. அடக்குபவர்களின், சர்வாதிகாரிகளின், கொடுங்கோலர்களின் வியாபாரியாக, ஆலோசகராக, கூலிப் படைகளாக மட்டுமே இருந்திருக்கிறது. அதுபோலத்தான், 2009 முன்னரும் சரி, அதற்குப் பின்னரும் சரி, அமெரிக்கா ஒன்றில் போரில் முன்னின்று அழித்தது, அல்லது போர்க் குற்ற விசாரணைகளை மழுங்கடிக்க முன்னின்று  உழைக்கிறது.

இந்த சர்வதேச சூழ்ச்சிக்குள், தமிழர்கள் தாமே தேர்ந்தெடுத்த, அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான தேசிய நல்லிணக்க அரசின் மூலம் எவ்வாறு தமக்கான ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சிலவேளை அந்த சுதந்திர வாழ்க்கை என்பதுகூட புலம்பெயர்ந்தவர்களின் கோஷமாக இருக்குமோ ? ஏனென்றால், அந்த வார்த்தைக்கும் தாயகத்தில் உள்ளோருக்கும் இப்போது எந்தவித தொடர்பும் கிடையாதே ! இதயங்கள் சங்கமித்தபோது வேறுபாடுகளும், வெற்றுக் கோஷங்களும் இனியெதற்கு ?!

Edited by ragunathan

யாருக்கு வேண்டும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ? தாயகத்திலுள்ளவர்கள் கேட்கவில்லை, ஏனென்றால் கொல்லப்பட்டவர்களுக்கும், தாயகத்திலுள்ளவர்களுக்கும் எந்தத் தொடர்புமேயில்லை. கொல்லப்பட்டவர்கள் முழுக்க முழுக்க புலத்திலுள்ளவர்களின் சொந்தங்களே, ஆகவே சர்வதேச விசாரணை தேவைப்படுவது புலத்திலுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது தெளிவாகிறது. ஆகவே அதுபற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் புலத்திலுள்ளவர்களுக்கும், தாயகத்திலுள்ளவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இன்று இல்லை.

ரகு,

புலத்தில் உள்ளவர்கள் என்பதும் தாயகத்தில் உள்ளவர்கள் என்பதும் ஒரே அர்த்தம் தரும் பதங்கள். புலம் என்பது நிலம் என்று பொருள்படும். புலம்பெயர்ந்தவர்கள் என்பதுதான் சரியான பதமாக இங்கு வர வேண்டியது என்று நம்புகின்றேன்

தமிழ் முக்கியம் அமைச்சரே :grin:

Edited by நிழலி
மூஞ்ச்சிக் குறி

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

புலத்தில் உள்ளவர்கள் என்பதும் தாயகத்தில் உள்ளவர்கள் என்பதும் ஒரே அர்த்தம் தரும் பதங்கள். புலம் என்பது நிலம் என்று பொருள்படும். புலம்பெயர்ந்தவர்கள் என்பதுதான் சரியான பதமாக இங்கு வர வேண்டியது என்று நம்புகின்றேன்

தமிழ் முக்கியம் அமைச்சரே :grin:

புலம்பெயர்ந்தவர்கள் என்று வந்திருக்க வேண்டும், நன்றி மன்னா !tw_cry:

Edited by ragunathan

யார் செத்தால் என்ன இருந்தால் என்ன .....இவன்தான் தமிழன் .....

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வேண்டும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ? தாயகத்திலுள்ளவர்கள் கேட்கவில்லை, ஏனென்றால் கொல்லப்பட்டவர்களுக்கும், தாயகத்திலுள்ளவர்களுக்கும் எந்தத் தொடர்புமேயில்லை. கொல்லப்பட்டவர்கள் முழுக்க முழுக்க புலபெயர்ந்தவர்களின் சொந்தங்களே, ஆகவே சர்வதேச விசாரணை தேவைப்படுவது புலம்பெயர்ந்தவர்களுக்குத்தான் என்பது தெளிவாகிறது. ஆகவே அதுபற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் புலம்பெயர்ந்தவர்களுக்கும், தாயகத்திலுள்ளவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இன்று இல்லை.

அடுத்தது, எமது அரசான தேசிய நல்லிணக்க அரசு இப்போதுதான் பதவியில் அமர்ந்திருக்கிறது. இதயங்கள் சங்கமித்திருக்கும்போது எதற்காக மறுபடியும் பாழாய்ப்போன போர்க்குற்ற விசாரணை பற்றி நாம் பேசித் தொலைக்க வேண்டும் ? அப்படிப் பேசினால் அது எமது இதயத்தை நாமே புண்படுத்துவது ஆகாதா? இது, எமது ஜனாதிபதியினதும், எமது பிரதமரினதும் இதயத்தைக் காயப்படுத்துவதோடு, சிங்களவர்களின் மனதையும் நோகடிக்குமே? ஆகவே இந்த சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டவே வேண்டாம். நான் முதலே சொன்னதுபோல இது புலம்பெயர்ந்தவர்களின் கொல்லப்பட்ட உறவுகளுக்காக அவர்கள் போடும் கூச்சல் என்கிற படியால் நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் கொல்லப்பட்டவர்களுக்கும் எமக்கும் , அதாவது தாயகத்திலிருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. 

அடுத்ததாக, மூதூரில் மீள்குடியேற்றம் நடைபெறத் தொடங்கிவிட்டது. இப்படியே நாளை மணலாற்றிலும், நாளை மறுதினம் அம்பாறையிலும் தமிழரின் மீள்குடியேற்றங்களை எமது தேசிய நல்லிணக்க அரசின் சனாதிபதியும், அதன் பிரதமரும் தொடங்கிவைப்பார்கள். அப்படியே மணலாற்றில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் அம்பாறையில் புலிகளிடமிருந்து பிடுங்கிய ஆயுதங்களையும் அவர்கள் காண்பார்கள். ஆகவே இந்த சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வேண்டவே வேண்டாம். அது புலம்பெயர்ந்தவர்கள் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக எழுப்பும் கோஷம், எமக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

மற்றைய விடயம், காணாமல்ப் போனவர்கள் பற்றியது. எங்களைப் பொறுத்தவரை இதுவரையில்க் காணாமல்ப் போனவர்கள் என்று பார்த்தால், அது பிரகீத் எக்னெலிகொட மட்டும்தான். அவரைப் புலிகளின் உறுப்பினர்களே கடத்திக் கொண்டுபோய்க் கொன்றிருக்கிறார்கள். மற்றும்படி தமிழரில் யாராவது காணாமல்ப் போயிருந்தால், அவர்கள் கூட புலம்பெயர்ந்தவர்களின் உறவுகளாக மட்டுமே இருக்கமுடியும், எமக்கும் அவர்களுக்கு எந்தச் சொந்தமுமில்லை.ணஆகவே காணாமல்ப் போனவர்பற்றியும் யாரும் பேசத் தேவையில்லை.

கடைசியாக அரசியல் கைதிகளின் விடுதலை. அரசியல் கைதிகள் என்றால் யார் ? அவர்கள்கூட முன்னால்ப் புலிகள் என்றால், அவர்களும் புலம்பெயர்ந்தவர்களின் சொந்தங்களே. எமக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆகவே, அவர்கள் பற்றியும் பேசி எமது நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.