Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி?

k-p

தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் இராணுவத் தளபதி கருணா, தனக்கும் பிரபகரனுக்கும் இடையிலான முரண்பாடு என்ன என்று தெரிவித்துள்ளார். கருணாவின் திடீர் இந்தியப் பிரசன்னம் இந்திய உளவுத்துறை மீண்டும் ஈழப் பிரச்சனையில் மீண்டும் தீவிர அக்கறைகொள்வதை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையை தயவு தாட்சணியமின்றிக் கூறுபோடும் ஏகாதிபத்தியங்களுக்கு மத்தியில் இந்தியா தனது பங்கை எதிர்பார்ப்பது கருணாவின் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கும் தனக்கும் இடையிலான முரண்பாடு நோர்வேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நோர்வே அமைச்சர் விதார் கல்சிசனின் தலைமையிலேயே பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், அதன் ஐந்தாவது கட்டத்தில் நோர்வே அரசு திட்டம் ஒன்றை முன்வைத்தாகக் குறிப்பிடுகிறர்.

அந்த அடிப்படையில் தமக்கு சமஷ்டியைக் கருத்தில் கொண்டு பேசுங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கு இணங்கி பாலசிங்கம் கையெழுத்திட்டதாகவும், அதன் பின்னர் அச் செய்தியை இலங்கைக்குக் கொண்டு சென்ற வேளை பிரபாகரன் தனது அனுமதியில்லாமல் முடிவெடுத்தமையை கண்டித்து மாத்தையாவிற்கு இணையான துரோகியாக கருணாவைச் குறித்துக்காட்டியமையால் தான் தனது பிரதேசத்திற்குத் திரும்பிச் சென்று பிரிந்து சென்றதாகக் கருணா கூறுகிறார்.

அது மட்டுமல்ல இன்று புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் உருத்திரகுமாரை நடந்தவற்றிற்குச் சாட்சியாக முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் நாடுகடந்த அரசாங்கத்தின் ஆயுள் காலப் பிரதமர்.

பாலசிங்கம் கையெழுத்திட்டமையால் கருணா துரோகியாக்கப்பட்டதாகக் கருணா கூறுகிறார்.

புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கமே பேச்சுவாத்தைக்குத் தலைமை தாங்கினார். அப்படியிருந்தும் கருணா-பிரபாகரன் பிளவு ஏற்பட்டதன் காரணம் என்ன. பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு கருணா இலங்கைக்குப் பயணமானதும் கருணா – பிரபாகரன் பிளவை ஏற்படுத்துவதற்கான சதி நடந்திருக்கிறதா? கருணா பிளவைத் தூண்டிய தமிழ் நெட்டின் முன்னை நாள் ஆசிரியர் சிவராமின் பங்கு என்ன?

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்கள் போல நாடகமடிப் புலிகளை அழித்த கூட்டம் கருணா இலங்கைக்குப் பயணமாகும் இடைவெளிக்குள் பிரபாகரனுக்குப் போட்டுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு புலிகளைப் பிளவுபடுத்தி அழித்தவர்கள் யார்?

கருணா இதற்கான சாட்சியாக உருத்திரகுமாரனை அழைத்துள்ளார். போராட்டத்தை ஏகபோக அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்து அழிப்பு நடத்திவிட்டு இன்றும் தமிழ்த் தேசியம் பேசும் பலரை அடையாளம் காட்ட உருத்திரகுமாருக்கு இது ஒரு சந்தர்ப்பம்.

  • Replies 57
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் ஒரு சிறந்த போர் வீரன் என்பதை புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அம்மான் பேட்டியில் சொல்கின்றார்.

அம்மான் சண்டையிலும் மட்டுமல்ல, பேச்சிலும் திறமை மிக்கவர் என்பதை பேட்டியை முழுவதுமாகப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. கருணா என்ன பழகுனதில்ல இல்லையோ, நன்றாக கதைக்கப்கழகிவிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமில்லாமல் செல்லக்காசாக இருந்த கருணாவை அடுத்தடுத்து  2 இந்திய தொலைக்காட்சிகள் (புதிய தலைமுறை>தந்தி)பேட்டி எடுத்ததின் காரணம் என்ன?சிங்களவர் சப்பித் துப்பிய சக்கைக்கு இந்தியர்கள் கொடுக்கும் மரியாதை சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ஆளாகப்பட்டவனெல்லாம் மாட்டை அவித்து பின் கண்டில் செட்டில் ஆவார்கள்! ஆனால்

கர்ணல் கருணா அம்மாணோ ... முதலில் கண்டை அவிழ்த்து விட்டு ... பின் மாட்டில் செட்டில் ஆக்கப்பட்டார் ... சிங்களத்தினால்!

கருணா அம்மானுக்கு இப்போது அரசியல் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது, ஏதாவது கூறி மக்கள் மனம் கவரப் பார்க்கிறார்.  இதற்கென சில கூட்டம் தயாராகிவிட்டது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கருணாவுக்கு அந்தமாதிரி ரெயினிங் குடுத்திருக்கிறாங்கள்.

கருணா அம்மான் நிறைய பொய்கள் இதில் சொல்கின்றார். தன் கடும் பிரதேசவாத உணர்வை மறைக்க வேடம் போடுகின்றார். புலிகளின் தோல்விக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா...

ஆனாலும் அவர் சொல்கின்ற சில விடயங்கள் 100 வீதம் கேள்விகுட்படுத்த வேண்டியவை.

இவற்றை கேட்பது கருணா அம்மான் என்பதை பார்க்காமல்  அதில் உள்ள நியாயத்தன்மையும் கேள்விகளும்  முக்கியமானவை

1. கிழக்கு மாகாண போராளிகளை புலிகளின் தலைமைப் பீடத்துடன் முரண்பட்டவுடன் வீட்டுக்கு அனுப்பியதால் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களை காப்பாற்றியது
2. புலிகள் இறுதிப் போரில் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கல்
3. இறுதி யுத்தத்தில் தம் பலத்தினை நம்பியதை விட வெளிநாடுகளை நம்பினர்
4. தனிநாட்டுக்கு மாற்றான எந்தவொரு யதார்த்தபூர்வமான தீர்வுகளுக்கும் அவர்கள் தயாரில்லை
5. இந்திய படைகளிற்கு எதிரான போரில் ஓடி ஒளிந்த தளபதிகள் பற்றிய விவரங்கள்\
6. தான் பெண்களுடன் கள்ள உறவு கொண்ட ஒருவர் என்றால் ஏன் முன்னமே தன் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரிந்து போன பிறகு மாத்திரம் அது பற்றி குற்றம் சாட்டியது?
7. 94 இல் இருந்து7 2000 வரைக்கும் அனைத்து தமிழ் மக்களின் அழிவுக்கும் பொறுப்பானவர் இன்று மீண்டும் சமாதான வேடம் போடும் சந்திரிக்கா.
8. யுத்தம் நடக்கும் போது மைத்திரியும் இதைத்தான் செய்தார்
9. இறுதி யுத்தத்தில் வவுனியாவில் இருந்த இந்தியப் படைகள்
10.வரலாற்றில் எந்தவொரு தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இலங்கைக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கவில்லை
11. தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்து இருக்க கூடிய சந்தர்ப்ப மற்றும் அவர் குணாதிசயங்கள்

இவற்றை நேர்மையுடன் அணுகக் கூடிய சூழல் தமிழ் தேசிய அரங்கில் இல்லை. ஆகக்குறைந்தது இவரது பேட்டியை முழுமையாக கேட்டு பின் அதற்குரிய பதில்களை கொடுக்கக் முடியாத அளவுக்கு கூட நேர்மையுடன் இங்கு தமிழ் சூழலில் பலர் இல்லை

Edited by நிழலி

வணக்கம் நிழலி,

உங்களின் கேள்விகள் நியாயமானவை. தர்க்கிக்கப்பட வேண்டியவை. இத்திரி இன்னும் தொடர வேண்டும். எம்மைச் சுற்றி நாமே போட்டிருக்கும் தேவையற்ற வட்டத்தை விட்டு வெளியே வந்தால் எதைப்பற்றியும் விவாதிக்கலாம். மேலே நீங்கள் குறிப்பிட்ட அனைத்துடனும் உடன்படும் அதேவேளை, இவை பற்றி பலரினதும் கருத்துக்கள் பதியப்படும் இடத்து பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

இந்தத் திரி தொடர்ந்து எரியவேண்டும், நான் வேலையினால் வந்து பதில் எழுதும்வரையாவது !

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி என்ற தீர்வுக்காக எல்லோரும் போராட வேண்டும் என்று சொல்லுகின்றார் ...........13+ யை விட சமஸ்டி நல்லமா?அம்மான் தனிகட்சி தொடங்கப்போறார் போலகிடக்கு........

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் நிறைய பொய்கள் இதில் சொல்கின்றார். தன் கடும் பிரதேசவாத உணர்வை மறைக்க வேடம் போடுகின்றார். புலிகளின் தோல்விக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா...

ஆனாலும் அவர் சொல்கின்ற சில விடயங்கள் 100 வீதம் கேள்விகுட்படுத்த வேண்டியவை.

இவற்றை கேட்பது கருணா அம்மான் என்பதை பார்க்காமல்  அதில் உள்ள நியாயத்தன்மையும் கேள்விகளும்  முக்கியமானவை

1. கிழக்கு மாகாண போராளிகளை புலிகளின் தலைமைப் பீடத்துடன் முரண்பட்டவுடன் வீட்டுக்கு அனுப்பியதால் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களை காப்பாற்றியது
2. புலிகள் இறுதிப் போரில் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கல்
3. இறுதி யுத்தத்தில் தம் பலத்தினை நம்பியதை விட வெளிநாடுகளை நம்பினர்
4. தனிநாட்டுக்கு மாற்றான எந்தவொரு யதார்த்தபூர்வமான தீர்வுகளுக்கும் அவர்கள் தயாரில்லை
5. இந்திய படைகளிற்கு எதிரான போரில் ஓடி ஒளிந்த தளபதிகள் பற்றிய விவரங்கள்\
6. தான் பெண்களுடன் கள்ள உறவு கொண்ட ஒருவர் என்றால் ஏன் முன்னமே தன் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரிந்து போன பிறகு மாத்திரம் அது பற்றி குற்றம் சாட்டியது?
7. 94 இல் இருந்து7 2000 வரைக்கும் அனைத்து தமிழ் மக்களின் அழிவுக்கும் பொறுப்பானவர் இன்று மீண்டும் சமாதான வேடம் போடும் சந்திரிக்கா.
8. யுத்தம் நடக்கும் போது மைத்திரியும் இதைத்தான் செய்தார்
9. இறுதி யுத்தத்தில் வவுனியாவில் இருந்த இந்தியப் படைகள்
10.வரலாற்றில் எந்தவொரு தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இலங்கைக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கவில்லை
11. தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்து இருக்க கூடிய சந்தர்ப்ப மற்றும் அவர் குணாதிசயங்கள்

இவற்றை நேர்மையுடன் அணுகக் கூடிய சூழல் தமிழ் தேசிய அரங்கில் இல்லை. ஆகக்குறைந்தது இவரது பேட்டியை முழுமையாக கேட்டு பின் அதற்குரிய பதில்களை கொடுக்கக் முடியாத அளவுக்கு கூட நேர்மையுடன் இங்கு தமிழ் சூழலில் பலர் இல்லை

6வது விடயத்திற்கு வெளியில் தெரியக் கூடிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் இயக்கத்தை விட்டுப் பிரிந்த பின்னர் அவர் அந்த விடயத்தில் எப்படியானவர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.இயக்கத்தில் இருந்த பொழுது மேல் மட்டத்தில் உயர் மட்டத்தளபதியாக இருந்ததால் சில ஒத்துப் போகும் விடயங்கள் நடந்திருக்கலாம்.மற்றும்படி மற்றைய குற்றச்சாட்டுகள் கையாலாகத நிலையில் இப்பொழுத இருக்கும் நிலையில் அவரின் கூற்றுக்கள் புலம்பல்களே அன்றி இயக்கத்துக்கு கொள்கை விடயத்தில் கருத்துக் கூறும் இடத்தில் அவர் இருக்கவில்லை. அதற்கான அரசியல் அறிவும் அவருக்கு இல்லை. தலைவருக்கே அரசியல் விடயத்தைக் கையாள்வதற்கு பாலா அண்ணையை வைத்திருந்தது உலகறிந்த விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மானுக்கு அன்று கதிரையை அலங்கரிக்க மகிந்தவின் ஆசீர்வாதம் தேவைப்பட்டது இப்போ தமிழரின் வாக்கு தேவைப்படுகுது. இருந்தாலும் தன் எஜமானுக்கு அடிக்கடி வாலாட்டிகொண்டிருந்துது. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்னுது. முன்னுக்கு பின் முரணாகவும் கதைக்குது. எத்தனயோ பேர் இயக்கத்தை விட்டு விலகி இருக்கிறார்கள் அவர்களுக்கு  எல்லாமா மகிந்தா அமைச்சு பதவி கொடுத்தார்? புலிகளின் தந்திரோபாய போராட்ட வழி முறைகளை ஆமிக்கு கற்றுக் கொடுத்தது யார்? உந்த கோமாளியின்ர கதையை கதைத்தால், என்னவோ  குப்பையை   கிண்டினால் ....வரும் என்றொரு பழமொழி உண்டு. தமிழ் மக்கள் புலியளை விரும்பேலயாம் என்னுது. அதுக்கு யாரையும் புரியேல. போராளியளுக்கு யாரும் வோட்டு போடேலயாம், தான்ஒரு கட்சி அமைக்கப்போறாராம். என்னவோ அவருக்குத் தான் வெளிச்சம். தமிழ் மக்கள் எண்டால் இளிச்ச வாயள் எண்டு எல்லாற்றையும் நினைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவின் பேட்டி கண்டேன்.மிகவும் நன்றாக கேட்க பட்ட கேள்விகளுக்கு அலட்டி கொள்ளாமல், பொறுமையாக , ஏன் அழகாக கருணா பதில் கூறினார். நல்ல அறிவு திறமை உள்ள ஆள் போல் நடந்து கொண்டார். ஒன்றே ஒன்று , அவர் மகிந்தவை விட்டு கொடுக்காத பேச்சு மட்டும் பிடிக்க வில்லை.

சரி, ஏன் இலங்கையர்கள் தென்னிந்தியா என்ற சொல்லை அதிகம் கையாளுகிறீர்கள். தமிழ் நாடு அல்லது தமிழகம் என்று போட்டால் ஆகாதோ ?. தென்னிந்திய என்ற பிரதேசத்தில் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களும் உள்ளன. தமிழ் என்ற சொல் இலங்கையர்க்கு மட்டும் சொந்தமான சொல்லோ என்று சில சமயங்களில் எண்ண தோன்றுகிறது. 

Edited by kanna123

நானும் கருணாவை பேட்டி கண்டேன்..........

கேட்டேன் ஏன் அண்ணை இப்புடி செய்தனீங்கள் எண்டு.....சிரிச்சுப்போட்டு சொன்னார்.....அப்ப தம்பி மருந்துகள் ஒண்டும் இல்லை எண்டு

நான் சொல்லுறது எங்கடவீட்டை வேலியடைக்கவாற ஐயாவை

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் நிறைய பொய்கள் இதில் சொல்கின்றார். தன் கடும் பிரதேசவாத உணர்வை மறைக்க வேடம் போடுகின்றார். புலிகளின் தோல்விக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா...

ஆனாலும் அவர் சொல்கின்ற சில விடயங்கள் 100 வீதம் கேள்விகுட்படுத்த வேண்டியவை.

இவற்றை கேட்பது கருணா அம்மான் என்பதை பார்க்காமல்  அதில் உள்ள நியாயத்தன்மையும் கேள்விகளும்  முக்கியமானவை

1. கிழக்கு மாகாண போராளிகளை புலிகளின் தலைமைப் பீடத்துடன் முரண்பட்டவுடன் வீட்டுக்கு அனுப்பியதால் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களை காப்பாற்றியது
2. புலிகள் இறுதிப் போரில் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கல்
3. இறுதி யுத்தத்தில் தம் பலத்தினை நம்பியதை விட வெளிநாடுகளை நம்பினர்
4. தனிநாட்டுக்கு மாற்றான எந்தவொரு யதார்த்தபூர்வமான தீர்வுகளுக்கும் அவர்கள் தயாரில்லை
5. இந்திய படைகளிற்கு எதிரான போரில் ஓடி ஒளிந்த தளபதிகள் பற்றிய விவரங்கள்\
6. தான் பெண்களுடன் கள்ள உறவு கொண்ட ஒருவர் என்றால் ஏன் முன்னமே தன் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரிந்து போன பிறகு மாத்திரம் அது பற்றி குற்றம் சாட்டியது?
7. 94 இல் இருந்து7 2000 வரைக்கும் அனைத்து தமிழ் மக்களின் அழிவுக்கும் பொறுப்பானவர் இன்று மீண்டும் சமாதான வேடம் போடும் சந்திரிக்கா.
8. யுத்தம் நடக்கும் போது மைத்திரியும் இதைத்தான் செய்தார்
9. இறுதி யுத்தத்தில் வவுனியாவில் இருந்த இந்தியப் படைகள்
10.வரலாற்றில் எந்தவொரு தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இலங்கைக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கவில்லை
11. தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்து இருக்க கூடிய சந்தர்ப்ப மற்றும் அவர் குணாதிசயங்கள்

இவற்றை நேர்மையுடன் அணுகக் கூடிய சூழல் தமிழ் தேசிய அரங்கில் இல்லை. ஆகக்குறைந்தது இவரது பேட்டியை முழுமையாக கேட்டு பின் அதற்குரிய பதில்களை கொடுக்கக் முடியாத அளவுக்கு கூட நேர்மையுடன் இங்கு தமிழ் சூழலில் பலர் இல்லை

1.பேச்சு வார்த்தையில் மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களைக்
கையெழுத்திடும்படி கோரியதால் தன்னைத் துரோகி என்ற நிலைக்குப் புலிகளின் தலைமை தள்ளியவுடன் இயக்கத்தை விட்டு வெளியேறிய கருணா அவர்கள் ஆயிரக்கணக்கான போராளிகளை வீட்டுக்கு அனுப்பாமல் தான் மட்டுமே பிரிந்து சென்றிருந்தால் போராட்டத்தில் சடுதியான வீழ்ச்சி ஏற்படாமல் போயிருக்கலாம்.
கருணா அவர்கள் தான் மட்டும் வெளியேறாமல் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த போராளிகளையும் அழைத்துச் சென்றமை கேள்விக்குரியதாகின்றது.

2.இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றால்
புலிகள் யாழை விட்டு வெளியேறிய போது குடாவிற்குள் வாழ்ந்த எத்தனையோ  ஆயிரம் மக்கள் அவர்களைப் பின் தொடர்ந்தார்களே அது எப்படிச் சாத்தியமானது.
ஆக மக்கள் புலிகள் மீதுள்ள நம்பிக்கையை இறுதி வரை இழக்காமல் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள் என்று கொள்ளலாம்.
இறுதிச் சமரிற்கு முன்னர் நடந்த சமர்களைப் போல புலிகள் ஏதாவது ஒரு வழியில் ராணுவத்தை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்திருக்கலாம்.

3.வெளி நாடுகளை நம்பினர் என்பதனை விட இந்தியத் தேர்தலின் மூலம் முக்கியமாக சோனியாவின் வீழ்ச்சி மூலம் இந்தியக் கொள்கையில் மாற்றம் வரும் என நம்பியிருக்கலாம்.
அடுத்து மேற்குலக நாடுகள் பல  புலிகளின் முகவர்களுக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட  வாக்குறுதிகளை நமி ஏமாந்தனர் என்றும் நினைக்கலாம்.

4.தனி நாட்டிற்கு மாற்று வழிகள் பல புலிகளின் காலத்திற்கு முன்னரே தமிழ் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு இருந்தன.
சகல வழிமுறைகளும் சிங்கள அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தனி நாட்டிற்காக போராடச் சென்ற விடுதலைப் புலிகள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தது பெருமைக்குரியது.
சரி 2009 இற்குப் பின்னர் சிங்கள அரசால்  புலிகள் இல்லையென அறிவிக்கப்பட்ட நிலையில்  அந்தச் சிங்கள அரசு தமிழர்களுக்கான தீர்வை எட்ட ஏதாவது வழியில் முயற்சிக்கின்றதா?
என்னைப்பொறுத்தளவில் இனப்பிரச்சனைக்கு நாங்கள் அதி உயர்வான தீர்வை முன்வைத்துப் போராடினால் மட்டுமே எதிரி மிகக்குறைந்தளவிலான தீர்வை முன்வைப்பார்கள்.

5.இந்தியப் படைகளின் காலம் வேறு மாதிரியானது.
தளபதிகள் மற்றும் போராளிகள் அந்தக் களத்தில் பாதுகாக்கப்பட்டார்களே தவிர அவர்கள் ஒளிந்து ஓடவில்லை.
பாதுகாக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் அந்தக் களத்தில் இந்தியாவுடம் மோதியிருந்தால் புலிகளால் 2009 வரை போராட்டத்தைக் கொண்டு சென்றிருக்க முடியாது.

6.புலிகள் எப்போதுமே போராளிகள் தளபதிகள் சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது  தங்கள் உள் விடையங்களை வெளியே செல்ல விடுவதில்லை.
கருணா அவர்கள் புலிகளை விட்டு வெளியேறியதன் பின்னர் அவர் புலிகளின் தளபதிக்கான தகமையை இழந்து விடுகின்றார்.

7.சந்திரிக்கா மட்டுமல்ல காலம் காலமாக சிங்கள  அரச தலைவர்களாக வந்த எல்லோரும் தமிழின அழிப்பில் பங்கு கொண்டிருக்கின்றனர்.
ஈழ விடுதலைப் போர் ஆரம்பமானதிலிருந்து தமிழின அழிப்பில் பங்குபற்றிய தலைவர்களில் ரணிலும் அடங்குவார்.
ஆனால் மகிந்தவின் எதிரி கருணா அவர்களுக்கும் எதிரியே என்ற கோட்பாட்டில் அவர் மகிந்தவைக் காப்பாற்றும் நிலையில் இருக்கின்றார்.

8.நிச்சயமாக மைத்திரியின் புதிய  முகம் அன்று சந்திரிகா அவர்கள் போட்ட வேசமே தவிர இவராலும் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியாது.

9.இந்தியப்படைகள் மட்டுமல்ல பல சர்வ தேச நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு  என்ற போர்வையில் இலங்கைக்குள் பல இடங்களிலும் கண்காணிப்பில் இருந்தனர்.

10.இந்திய தமிழ் நாட்டு  வம்சாவழித் தமிழர்கள் மலையகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். அல்லது பல இன்னல்களுக்கும் மத்தியில் வாழ வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களின் இன்னல்களுக்குக் கூட ஒரு உதவியை அவர்களால் செய்ய முடியவில்லையே. வட கிழக்கில் வாழும் தமிழர்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் எப்படி அவர்களால் ஒரு விஜயத்தை மேற்கொள்ள முடியும்.
அப்படி ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் மத்திய அரசு உடனே தனது கையை நீட்டி அவரின் பதவியைப் பறித்துவிடுமே

11.தலைவரின் குணாதிசயங்களைக் கருணா அவர்கள் இன்றைய நிலையில் புகழ்ந்து தள்ளுவது ஆச்சரியப்படத் தக்கதல்ல.
இது சுய நலம் சார்ந்தது மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் குழப்பமான அரசியல் சூழ் நிலையை அவர் தனக்குச் சாதகமாக்க முயல்கின்றார் எனவும் நினைக்கலாம்.
இந்திய ஊடகம் கருணா அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல பதிய விடையங்களை மீழாய்வு செய்வதிலும் பல பின்னணிகள் இருக்கலாம்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா ஏன் கேபியை பற்றி ஒரு வார்தையையும் உதிர்க்கவில்லை.tw_astonished:
நிருபர் கேட்கவில்லையா? அல்லது கேட்கக்கூடாது என்று சொல்லி விட்டார்களா?tw_warning:

அல்லது நான் ஒளிநாடாவை ஒழுங்காக பார்க்கவில்லையா? :rolleyes:

எட்டாப் பழம் நரிகளுக்கு எப்போதும் புளிக்கும்!

கருணா அம்மான் புதியதலைமுறை டிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சி என்றும் அது தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இதே கருணா அம்மான் கடந்த வருடம் "சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் தமிழர்கள் எல்லோரும் சேரவேண்டும். அதைவிட்டால் தமிழர்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறியிருந்தார்.

தான் அமைச்சராக இருந்தபோது சிறந்த கட்சியாக தோன்றிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது எந்த பதவியும் அவருக்கு தராதபோது இனவாதக் கட்சியாக தெரிவது எட்டாப் பழம் நரிகளுக்கு எப்போதும் புளிக்கும் என்பதையே காட்டுகிறது.

ஆனால் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில் அவர் தனது பேட்டியில் இறுதி யுத்தத்தின்போது இந்திய ராணுவம் நேரடியாக யுத்த முனையில் பங்கு பற்றியது என்றும் தமிழர்களின் அழிப்பில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக இருந்தவர். இலங்கை அரசில் பிரதி அமைச்சராக இருந்தவர். நேரடியாக யுத்த முனைக்கு சென்றவர். எனவே அவரது கூற்று புறந்தள்ளிவிட முடியாதது.

இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என இன்னமும் கூறிக்கொண்டு திரிபவர்கள் இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?

கருணா அம்மானின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பிரமுகர்கள் அனைவரும் இந்த விடயத்தை தவிர்த்தது தற்செயலானதா? அல்லது இந்திய அரசுமீதான விசுவாசமா?

11951733_1629066887365037_62006687302847

தான் அமைச்சராக (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உபதலைவராக ) இருந்தபோது சிறந்த கட்சியாக தோன்றிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது எந்த பதவியும் அவருக்கு தராதபோது இனவாதக் கட்சியாக தெரிவது எட்டாப் பழம் நரிகளுக்கு எப்போதும் புளிக்கும் என்பதையே காட்டுகிறது

11061172_1629066540698405_72767482789504

நன்றி தோழரே! (https://www.facebook.com/pages/Balan-tholar/1528490507422676)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இனி மேல் யாழுக்கு வரக் கூடாது,எழுதக் கூடாது என்று தான் நினைத்தேன். கருணாவின் பேட்டி வந்தவுடன் புலம் பெயர் வாழ் புலி முக்கியஸ்தரான விசுகு அண்ணா போன்றவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என பார்க்கலாம் என வந்தால் என்ன ஆச்சரியம் அவர்கள் வாயையே திறக்க காணோம்.

முன்னர் ஒரு கருணா பற்றிய திரியை[திரியில் எனக்கு எதிராக எழுத முடியாமல்] நிர்வாகத்திடம் அழுது,புரண்டு,முறையிட்டு அந்தத் திரியையே பூட்ட வைச்ச ஆட்கள் இந்தத் திரியில் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்...திருந்திட்டினமா?.... இன்னொரு திரியில் கூட "கருணா" சொல்லியிருக்கார்.பொய் சொல்லி இருக்க மாட்டார் என்ட மாதிரி கருத்து எழுதி இருக்கார்.இன்னம் கொஞ்சக் காலம் போனால் கருணா தான் தங்கட தலைவர் என பின்னால போவார்கள் போல கிடக்கு...நல்ல மாற்றம்.

இந்தப் பேட்டிகளில் கருணா அவருடைய போர்த் திறமையை கொஞ்சம் ஓவராய்ப் புகழ்ந்தாலும்[அதிலும் உண்மை இல்லாமலில்லை], ஒரு சில பொய்கள் சொல்லி இருந்தாலும்[இந்தியன் ஆமி காலத்தில் சூசை,பானு இந்தியா போனது மருத்துவ உதவி பெறுவதற்காக] மற்றப் படி பெரும்பாலும் கருணா சொன்னது எல்லாம் உண்மை...இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருந்தால் முழு உண்மையும் வெளியில் வரும்.

நான் முன்பே[முந்திய திரியில்] எழுதிய மாதிரி தலைவருக்கும்,கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சின்னப் பிரச்சனையே அங்கு வன்னியில் இருந்தவர்களும்,மட்டக்களப்பில் இருந்தவர்களும்,முக்கியமாக புலத்தில் இருந்தவர்களும் ஊதிப் பெரிதாக்கி விட்டிட்டினம். ஒரு பெரிய அமைப்பை நீண்ட காலமாக கொண்டு நடத்திய தலைவருக்கு "நாகாக்க" தெரியவில்லை...அதை விட முக்கியம் தன்னோட கூட இருந்த தளபதியின் குணத்தை அவர் அறிந்திருக்காதது. மற்றத் தளபதிகள் மாதிரி தான் எது சொன்னாலும் கருணா கேட்டுட்டு சும்மா இருப்பார் என தலைவர் நினைத்தார் போலும்...புகழேந்தி போன்றோர் தங்கட நிதியூழல்களை மறைக்க கருணாவின் விடயத்தை பெரிதாக்கி விட்டு இருப்பார்கள்

புலிகளை விட்டுப் பிரிந்த பிறகு கருணா செய்த மிக நல்ல விடயம் அந்த 6000 போராளிகளையும் வீட்டுக்கு அனுப்பியது...கவலையளிக்க கூடிய விடயம் என்டால் குறைந்த பட்சம் மு.வாய்க்காலில் அந்த மக்களது இறப்பையாவது தவிர்க்க இவர் தன்னாலான முயற்சிகள் செய்திருக்கலாம்.அதை செய்ய அவர் தவறி விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.தவிர இன்னும் மகிந்தா சகோதரங்கள் பற்றி வாய் திறக்கவில்லை.... பொறுத்திருந்து பார்ப்போம்

அவர் சீக்கிரமாக ஒரு கட்சி தொடங்கி கூட்டமைப்பு,டக்லஸ் போன்றவரை ஒருங்கிணைத்து அங்குள்ள மக்களுக்கு நியாயமானதும், அவர்களால் ஏற்க கூடியதுமானதும் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வாழ்த்துக்கள்...நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக...

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் சூரியன் உதிக்கிறது தங்கள் 3 பேருக்கு மட்டும்தான் தெரியும் என்ற நினைப்பில் 
இன்னமும் வாழ்பவர்களை நினைத்தால் 

பரிதாபப்பட மட்டுமே முடிகிறது !

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் சூரியன் உதிக்கிறது தங்கள் 3 பேருக்கு மட்டும்தான் தெரியும் என்ற நினைப்பில் 
இன்னமும் வாழ்பவர்களை நினைத்தால் 

பரிதாபப்பட மட்டுமே முடிகிறது !

இப்படித்தான் சிலர்

தாங்கள் மட்டக்களப்பில் சூரியனைப்பார்த்தார்களாம்

அதையே நான் பிரான்சில் பார்த்தேன் என்றால் கடுப்பாகிறார்கள்..

உங்களுக்காவது  புரிகிறதா???

பல சூரியன்களுடன் பழகியிருக்கின்றேன்

பழகிவருகின்றேன்

அவர்கள் இன்றும் அவ்வாறே உள்ளனர்....

தோல்வி ஒரு அபாண்டத்தை சுமத்தும் என்றால் நான் அந்த விளையாட்டுக்கு இடம் தரேன்

இது தான் நாம் நடந்த பாதையில் நாம் தெளிவாக புரிந்துணர்வுடன் நடந்தோம் என்பதன் ஆகக்குறைந்த செயல்

என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம்

உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு .....

அண்ணை பழகாத சாமான்களே இல்லை போலிருக்கு .

முடிந்தால் எனக்கும் ஒரு சூரியனை பழக்கிவிடுங்கோ ? பார்த்து செய்யலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பழகாத சாமான்களே இல்லை போலிருக்கு .

முடிந்தால் எனக்கும் ஒரு சூரியனை பழக்கிவிடுங்கோ ? பார்த்து செய்யலாம் .

அதற்கு முதல்  உங்களது பார்வைக்கோளாறு மாறணும் அண்ணை

புலிகளிடம்  பிழை மட்டும் பிடிப்பவர் தாங்கள்...

தமது வாழ்வையே தாயக மக்களுக்காக கொடுத்தவர்களை கண்டவன்

காண்பவன் நான்.

இங்கு கருத்து எழுதுபவர்களில் 90 வீதமானவர்கள்

புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள எந்த அமைப்பிலும் இருக்காதவர்கள்

எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காதவர்கள்

ஏதாவது செய்து பார்த்தால் தான் செய்பவர்களின் சுமையும் நேரமும் தெரியும்.

அது எனக்குத்தெரியும்.

நான் நினத்தன் பாம்பு குரூப் தான் உங்கள் சூரியன்கள்என்று ,

அவர்களை தானே வாலுகள் உலகெங்கும் வளர்த்துவிட்டார்கள் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இனி மேல் யாழுக்கு வரக் கூடாது,எழுதக் கூடாது என்று தான் நினைத்தேன். 

தங்கச்சியை கண்டதிலை எனக்கு பெரிய சந்தோசம்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.