Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, கிருபன் said:

வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி!!!

செந்தமிழன் சீமான் இன்னும் பல வருடங்களுக்கு பயிற்சியிலேயே காலத்தைக் கழிக்க வாழ்த்துக்கள் :)

 

சும்மா மொட்டையாய் சொன்னால் எப்படி? உங்களுக்கு ஏன் சீமானை பிடிக்காது எண்டதை நாலு வரியிலை சொல்லித்துலைக்கிறது :cool:

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு சற்று முன்பாக எனது தமிழக நண்பர் ஒருவருக்கு (சிங்கப்பூரில் வாழ்பவர்) மின்னஞ்சல்கள் சிலவற்றை அனுப்பினேன் (இரட்டை மெழுகுவர்த்திக்கு ஆதரவு கேட்டு). இன்று தொலைபேசியில் உரையாடினார். ஆச்சரியம் என்னவென்றால் அவரும் நாம் தமிழர் கட்சியை சில மாதங்களாக பின்தொடர்ந்துள்ளார். அவரிடமும் நல்ல அபிப்பிராயமே இருந்தது. மூன்றாவதாக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக பேசிக்கொள்கிறார்களாம் அவரின் ஊரில்.

இதே போல கூட்டணி அமைக்காமல் அடுத்த தேர்தலையும் சந்திக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமடையும் என்றார். அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களை அவருக்கு நினைவு படுத்தினேன். வெறும் காணொளிகளை மட்டும் பார்க்காமல் அவரது உறவினர்கள் நண்பர்களிடம் அரசியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு கூறினேன். அவரும் மகிழ்வுடன் சம்மதித்தார்.

14 hours ago, Nathamuni said:

இந்திய வரலாறில், டெல்லியில்  முன்பின் அறிமுகம் இல்லா அரவிந் கெஜ்ரவேல், முதலில் குறைவான சீட்டுகளுடனும் வந்து, பதவி விலகி அடுத்த முறை பெரும்பான்மையுடனும் வந்தாரா இல்லையா?

இந்த தமிழக தேர்தலில் திராவிட கட்சிகள் பணம், வாக்காளரை வாங்க செலவழிக்க கட்டுப்பாடுகள் இருந்ததால், ஊடகங்கள் சீமான் கட்சியை உதாசீனம் செய்ய செலவழிக்கப் பட்டது. இதைத்தான் வைக்கோ சொன்னார்: திராவிடக் கட்சிகளே பொது எதிரி வர்றான். அதை மனசில வச்சுக்கிட்டு...

சீமான் முன்பின் தெரியாதவர் அல்ல. சினிமாக்காரர்.

இம்முறை தேர்த்தலில் இடப்படும் வலுவான அடித்தளமானது,  தாத்தாவும் பாட்டியும் இருக்க முடியாத அடுத்த தேர்தலில் பயன் கிடைக்கும்.

ஊடகங்கள் சொல்லாவிடினும் பாட்டியம்மா தலை மேல் தொங்கும் நீதிதேவதை கத்தி குறித்து அறிந்திரா மக்கள் அல்ல தமிழகத்தில்.. பன்னீரின் பொம்மையரசுக்கு மக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.

அதே போல்... கலைஞர் குடும்ப வழக்குகளும், கலைஞரின் வயதாலான இயலாமையும்...

ஆகவே இவ்விரு காரணங்களால், மக்களின் தீர்க்கமான முடிவு இன்றி யாருக்கும் பலமற்ற தொங்கு சட்ட மன்றமும் அதனால் விரைவாக அடுத்த தேர்தலும் வரும். 

அதுவே சீமானுக்கான வாய்ப்பு.

பிரச்சனை எங்கு வருகின்றது என்றால் நாங்கள் யாரை விரும்புகின்றோம் ,எங்களது வட்டம் யாரை விரும்புகின்றார்கள் என்பதை வைத்து முடிவுகளை தீர்மானிக்கின்றோம்  பின்னர் அது உண்மையாகிவிடும் என்று நம்பவேறு செய்கின்றோம் .

பலருக்கும் பதவி ஆசை  என்று ஒன்று வருவது அதனால் தான் ஆனால்  யாதார்த்தம் அதுவல்ல .

எதிர்காலத்தில் கூட சீமான்  முதல்வராக வரும் சந்தர்பங்களை விட அன்புமணி ராமதாசுக்கு அதிகம் என்று நான் நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டை , தமிழனை தமிழனே ஆளவேண்டும் அதுதான் சீமானின் விருப்பமும்......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

பிரச்சனை எங்கு வருகின்றது என்றால் நாங்கள் யாரை விரும்புகின்றோம் ,எங்களது வட்டம் யாரை விரும்புகின்றார்கள் என்பதை வைத்து முடிவுகளை தீர்மானிக்கின்றோம்  பின்னர் அது உண்மையாகிவிடும் என்று நம்பவேறு செய்கின்றோம் .

பலருக்கும் பதவி ஆசை  என்று ஒன்று வருவது அதனால் தான் ஆனால்  யாதார்த்தம் அதுவல்ல .

எதிர்காலத்தில் கூட சீமான்  முதல்வராக வரும் சந்தர்பங்களை விட அன்புமணி ராமதாசுக்கு அதிகம் என்று நான் நம்புகின்றேன் .

இல்லை என்றே சொல்வேன். அன்புமணிக்கு மூன்று பிரச்சனைகள். முதலாவது மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் வழக்கு. 

இரண்டாவது வன்னியருக்குள் அவரது அரசியல் சுருங்கியுள்ளது. அதனுள் இருந்து வெளியே வந்து பரந்த அரசியல் செய்ய முடியாது.

மூன்றாவது, அவர் ஒரு ஜனரஞ்சக பேச்சாளர் இல்லை.

கருணாநிதியிடம், கல்வியும் இருக்கவில்லை, நிதியும் இருக்கவில்லை. பேச்சு ஒன்றே அரியணை ஏத்தியது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சும்மா மொட்டையாய் சொன்னால் எப்படி? உங்களுக்கு ஏன் சீமானை பிடிக்காது எண்டதை நாலு வரியிலை சொல்லித்துலைக்கிறது :cool:

முன்னரே சொல்லியிருந்தேன் என்று நினைக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்தும், புலிகளின் தலைமை முழுவதும் அழிக்கப்பட்டும் ஆறு மாதம் கடந்த நிலையில் 2009 மாவீரர் தினத்தன்று இலண்டன் எக்சல் மண்டபத்தில் துயரத்தில் வெள்ளம்போலக் கூடியிருந்த மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி, அவர்களை ஆற்றுப்படுத்தி, எப்படியான வழிகளில் அரசியல் உரிமைகளை அடையலாம் என்று உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துப் போயிருந்தேன்.

ஆனால் இல்லாத தலைவர் மாவீரர் உரை நிகழ்த்துவார் என்ற குசுகுசுப்பு ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தது.

நினைவுச் சுடர் ஏற்றிய பின்னர், திரையில் சீமான் தோன்றி சில உசுப்பேற்றும் வசனங்களை விடவும், அதற்கு விசிலடித்தும், கூக்குரலிட்டும் ஆரவாரித்தவர்களைக் கண்டதும் மிகவும் கோபம் வந்து வெளியே போனேன்.

வெறும் உசுப்பேற்றும் அரசியல் செய்யும் சீமானை அன்றிலிருந்து பிடிப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

10 hours ago, இசைக்கலைஞன் said:

தேர்தலுக்கு சற்று முன்பாக எனது தமிழக நண்பர் ஒருவருக்கு (சிங்கப்பூரில் வாழ்பவர்) மின்னஞ்சல்கள் சிலவற்றை அனுப்பினேன் (இரட்டை மெழுகுவர்த்திக்கு ஆதரவு கேட்டு). இன்று தொலைபேசியில் உரையாடினார். ஆச்சரியம் என்னவென்றால் அவரும் நாம் தமிழர் கட்சியை சில மாதங்களாக பின்தொடர்ந்துள்ளார். அவரிடமும் நல்ல அபிப்பிராயமே இருந்தது. மூன்றாவதாக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக பேசிக்கொள்கிறார்களாம் அவரின் ஊரில்.

 

 

10 hours ago, இசைக்கலைஞன் said:

தேர்தலுக்கு சற்று முன்பாக எனது தமிழக நண்பர் ஒருவருக்கு (சிங்கப்பூரில் வாழ்பவர்) மின்னஞ்சல்கள் சிலவற்றை அனுப்பினேன் (இரட்டை மெழுகுவர்த்திக்கு ஆதரவு கேட்டு). இன்று தொலைபேசியில் உரையாடினார். ஆச்சரியம் என்னவென்றால் அவரும் நாம் தமிழர் கட்சியை சில மாதங்களாக பின்தொடர்ந்துள்ளார். அவரிடமும் நல்ல அபிப்பிராயமே இருந்தது. மூன்றாவதாக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக பேசிக்கொள்கிறார்களாம் அவரின் ஊரில்.

இதே போல கூட்டணி அமைக்காமல் அடுத்த தேர்தலையும் சந்திக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமடையும் என்றார். அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களை அவருக்கு நினைவு படுத்தினேன். வெறும் காணொளிகளை மட்டும் பார்க்காமல் அவரது உறவினர்கள் நண்பர்களிடம் அரசியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு கூறினேன். அவரும் மகிழ்வுடன் சம்மதித்தார்.

இந்த முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சி எத்தளையாவது இடத்தில் இருந்தாலும்  கவலையில்லை அடுத்த தேர்தலில் முன்னேற வேண்டுமாயின் இதே  கொள்கையுடன் எந்த தடுமாற்றமும் தடம்புரல்களும் இல்லாமல்  மேலும் பல இளைஞர்களை கட்சியில் இணைத்து அவர்களை மக்களுடன் நேரடியாகவும் தொடர்ச்சியாகவும் அரசியல் கலந்துரையாடல்களையும் அரசியல் விளக்கங்களையும்  நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடு பற்றியும் தெளிவு படுத்த வேண்டும். இது நகரத்தில் இருந்து குக்கிராமம் வரை நடைபெற வேண்டும். இதற்காக 2021 வரை பொறுத்திராமல் இன்றே தொடங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

முன்னரே சொல்லியிருந்தேன் என்று நினைக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்தும், புலிகளின் தலைமை முழுவதும் அழிக்கப்பட்டும் ஆறு மாதம் கடந்த நிலையில் 2009 மாவீரர் தினத்தன்று இலண்டன் எக்சல் மண்டபத்தில் துயரத்தில் வெள்ளம்போலக் கூடியிருந்த மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி, அவர்களை ஆற்றுப்படுத்தி, எப்படியான வழிகளில் அரசியல் உரிமைகளை அடையலாம் என்று உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துப் போயிருந்தேன்.

ஆனால் இல்லாத தலைவர் மாவீரர் உரை நிகழ்த்துவார் என்ற குசுகுசுப்பு ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தது.

நினைவுச் சுடர் ஏற்றிய பின்னர், திரையில் சீமான் தோன்றி சில உசுப்பேற்றும் வசனங்களை விடவும், அதற்கு விசிலடித்தும், கூக்குரலிட்டும் ஆரவாரித்தவர்களைக் கண்டதும் மிகவும் கோபம் வந்து வெளியே போனேன்.

வெறும் உசுப்பேற்றும் அரசியல் செய்யும் சீமானை அன்றிலிருந்து பிடிப்பதில்லை.

எய்தவர் இருக்க அம்பை நோவதா?

உணர்வு பூர்வமாக நின்ற ஒருவரை உசுப்பேத்தல் பேச்சு பேச வேண்டி பணம் பார்த்தது யார்?

கனடாவில் அதையே செய்வித்து நாடுகடத்தப்பட வைத்தது யார்? 

இருந்தும் இன்றும் எமக்காக பேசும் உள்ளம், இன்று யார், என்ன என்ற தெளிவுடன் இருக்கிறார்.

உங்கள் கோபம் வேறு எங்கோ போக வேண்டும். இங்கே இப்போது மாவீரர் துயிலும் இல்லம் என்று துவங்கிய நபர்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்?

- பா. ஏகலைவனின் புத்தக வெளியீட்டு விழாவில்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13233113_651665218333791_996338869247693

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13263895_651671391666507_558640165799276

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

எய்தவர் இருக்க அம்பை நோவதா?

உணர்வு பூர்வமாக நின்ற ஒருவரை உசுப்பேத்தல் பேச்சு பேச வேண்டி பணம் பார்த்தது யார்?

கனடாவில் அதையே செய்வித்து நாடுகடத்தப்பட வைத்தது யார்? 

இருந்தும் இன்றும் எமக்காக பேசும் உள்ளம், இன்று யார், என்ன என்ற தெளிவுடன் இருக்கிறார்.

உங்கள் கோபம் வேறு எங்கோ போக வேண்டும். இங்கே இப்போது மாவீரர் துயிலும் இல்லம் என்று துவங்கிய நபர்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு ?

மாவீரர் துயிலும் இல்லம் என்று துவங்கியவர்கள் மேல் கிஞ்சித்தும் மரியாதை கிடையாது. போராட்டத்தில் பங்குபற்றிய முன்னாள் போராளிகள், குடும்பங்களைக் கவனியாது மில்லியன் பவுண்ஸ் கணக்கில் செலவழிக்கும் இவர்கள் தலைவர் பிரபாகரன் சொன்னதுபோல விடுதலைப்புலிகள் இயக்கத்தை அவர் போனதன் பின்னர் மொத்தமாகவும், சில்லறையாகவும் பங்குபோட்டு பிரிக்கும் வியாபாரிகள்தான். ஸஹரா மக்களின் தாயகம் மீதான உணர்வும், தேசியம் மீதான பற்றும் இவர்களின் மூலதனம்.

மறுபடியும் வடை போச்சே...:(
எங்கள் நாட்டில் ஓட்டை சைக்கிள் ஓட்ட பார்த்த மாதிரித்தான் இதுவும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தல் முடிவு:

அதிமுக (கூட்டு): 134

திமுக (கூட்டு): 98

நாம் தமிழர்:0

பாமக:0

மக்கள் நலக் கூட்டணி + தேமுதிக:0

பாஜக:0

 

ADMK gets 42% votes, DMDK cornered with 2.3 % votes

 

நன்றி: தமிழ்ஒன்

ஆக... தமிழக மக்கள்.. ஊழல்.. இலஞ்சம்.. மொழி அழிவு.. சாதி.. மதவெறி.. இன அழிவு.. குடும்ப ஆட்சி.. ஆணவக்கொலை.. மக்கள் நலனில் அக்கறையின்மை.. மது.. போதை... பெண் வன்முறை.. கொலை.. கொள்ளை.. ஏழ்மை.. மூன்றாம் தர வாழ்க்கை.. மூன்றாம் நிலை நாட்டு வாழ்க்கை.. எல்லாம் தங்களுக்கு அவசியமுன்னு வாக்களிச்சிருக்காங்க.

அதாவது நீங்க என்னவாவது செய்யுங்க.. எங்களுக்கு ஓட்டுக்கு பணப் பிச்சையும் இலவசமும் சாராயமும்.. தந்திட்டு செய்யுங்க.. என்ற மனநிலையில்.. தமிழக மக்கள் வைக்கப்பட்டிருக்கும் கொத்தடிமைத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

இதனை தகர்த்து.. மக்களை மந்தைகளாக வைச்சிருந்து.. சில மேய்ப்பர்கள்.. குறிப்பாக திராவிட பண முதலைகள் எனியும் அரசியல் ஆதாயம் அடைய விட்டால்.. தமிழகத்தில் தமிழன் நாதியற்ற கொத்தடிமை இனமாகவே வாழ நேரிடும். இது உலகெங்கும் வாழும் தமிழர்களின் இருப்பும் இன பாதுகாப்புக்கும் ஆபத்துமாகும்.

மக்களை மந்தைகளாக ஆக்கி வைச்சிருக்கும் கூட்டத்திடமிருந்து மீட்டு அவர்களை அவர்களின் மண்ணுக்கான எஜமானர்களாக்கும் வேலையை மிகவும் காத்திரமாகவும்.. நீண்ட கால குறுகிய கால இலக்குகள் வகுத்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருப்பதையே இந்த தமிழக தேர்தல் முடிவுகள் இனங்காட்டி இருக்கின்றன.

மக்கள் கட்சிக்கும் சின்னத்துக்கும் சில தலைகளுக்கும் அவர்கள் அளிக்கும் இலவசத்துக்கும் பிச்சைக்கும்.. வாக்களிக்கும் நிலையில் இருந்து மண்ணுக்காகவும்.. உரிமைக்காவும்.. எதிர்கால சந்ததியின்.. தற்கால சந்ததியின் வளமான எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்கும் நிலைக்கு சிந்திக்க வைக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி..  பெரும் பண முதலை திராவிடக் கட்சிகளை எல்லாம் போல்.. பண நாயகம் நடத்தாமல்.. நேர்மையாக.. அரசியல் செய்து.. அதுவும் திட்டமிட்டு அதன் தேர்தல் சின்னமே தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் வழங்கப்பட்ட நிலையிலும்.. திடமாக..

மதிமுக.. சிபி ஐ.. சி பி எம்.. விடுதலைச் சிறுத்தைகள்.. என்று பல ஆண்டுகளாக கூட்டணி வைச்சு களம் கண்ட கட்சிகளை விட.. ஒரு புதுக் கட்சியாக.. புதுச் சின்னத்தில் மக்களிடம் அறிமுகமாகி.. அறிமுகமான தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றிருப்பது.. நல்ல ஆரம்பம். 

நாம் தமிழர் கட்சி இளைய சமூகம் இந்த தேர்தலை பரீட்சைக்களமாகவே எதிர்கொண்டார்கள். நிறைய விடயங்களை இதில் படிக்க வேண்டி இருக்கிறது.

குறிப்பாக மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சிக்கு வரனும் என்று நினைப்பதை விட மக்களுக்கு இயன்ற நல்லதைச் செய்து மக்கள் மனங்களைச் சிறுகச் சிறுக வெல்லவும் வேண்டி இருக்கிறது. மேலும் மக்களின் நிஜ இயல்பியக்கம் பற்றிய ஆய்வுகளும்.. அவர்களின் எண்ண ஓட்டத்தை நாடிபிடித்து அறியும் நடவடிக்கைகளும் இல்லாமல்.. அந்த மக்களிடம் நியமான.. நியாமமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

ஈழத்திலும் கூட மக்கள் சொந்த இனத்தை வவுனியாவில் நின்று காட்டிக்கொடுத்து.. சொந்த பெண்களை சீரழிச்சவன்களுக்கு எல்லாம் வாக்குப் போட்டிருக்கிறார்கள். அந்த மக்களின் எண்ணம் தவறு என்பதை அவர்கள் புரிய வைக்க தவறியதும் இதற்கு ஒரு காரணம்.

மக்களோடு நாம் தமிழர் அந்நியப்படக் கூடாது. இந்தத் தேர்தல் முடிவு அது இன்னும் நெருங்க வேண்டும். மக்களின் நாளாந்த அசைவில் இருந்து அனைத்திலும்... அது இணைந்து பயணித்தால் அன்றி.. திராவிடப் பண முதலைகளை.. அதற்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் பேய்களை வீழ்த்துவது அவ்வளவு இலகு அல்ல. 

தொடரட்டும் உங்கள் விடா முயற்சி. வெற்றி ஒரு நாள் நிச்சயம். சரியான கொள்கை வகுப்பும்.. திட்டமிடலும்.. செயற்பாடும் இருப்பின்.. நாம் தமிழர் தனித்துச் சாதிக்க நினைப்பதை.. இந்த மக்களைக் கொண்டே சாதிக்க நிறைய வாய்ப்பிருக்குது. அது இந்தத் தேர்தலில் நாம் தமிழருக்கு வாக்காளர்கள் காட்டி இருக்கும் சகிக்ஞையும் கூட.  அறிவார்ந்த தமிழ் சமூகமும் இன்னும் தமிழகத்தில் வாழுது. அதன் அளவை பெருப்பிப்பதன் மூலம்.. திராவிட பண முதலைகளைக்கு முடிவு கட்டுவது அவ்வளவு கடினமில்லை. tw_blush:

முயற்சி திருவினையாக்கும். தொடரட்டும் நாம் தமிழர் முயற்சி. நாம் தமிழர் அதற்கு பக்கதுணை இருப்போம். tw_warning:

நாம் தமிழருக்கு வாக்களித்த இன உணர்வுள்ள ஈழத்தமிழர் கருசணையுள்ள.. தமிழக மக்களுக்கு நன்றி. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியல்ல. அது புரட்சி. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் புரட்சியாளர்களாக உள்ளது பெரிய விடயம். தொடர்க. அடுத்தமுறை ஒரு கோடி.

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க விற்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கிலும் ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணத்தின் வாசனையே இருக்கிறது.

ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கிலும் சீமான் மற்றும் அவரது தம்பி, தங்கைகளின் இரத்தமும், வியர்வையும், உழைப்பும், தூய அரசியல் வேண்டும் எண்ணமுமே உள்ளது.

பெரும் வெற்றியடைந்திருக்கலாம் தி.மு.க வும், அ.தி.மு.க வும். ஆனால், பணமும், எம்.ஜி.ஆர் என்னும் மந்திரச் சொல்லும், இரட்டை இலை, உதயசூரியன் போன்ற சின்னங்களும் இல்லை என்றால் தி.மு.க வும், அ.தி.மு.க வும் ஒன்றுமில்லா செல்லாக் காசாகிப் போகும்.

தனி ஒருவராக தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க ஆரம்பித்து, சில ஆயிரம் இளைநர்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட நாம் தமிழர் கட்சி, பணபலம், ஊடகபலம் எதுவுமின்றி கிட்டத்தட்ட 4,50,000 வாக்குகளைப் பெற்றிருப்பது எண்ணிப் பெருமை கொள்வோம். தொடர்ந்து களமாடுவோம். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் வரை.

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோர்வடையும் நேரமல்ல.
நாம் தமிழர் கட்சி தோழர்களே...
--------------------------------------------------

2016 சட்டமன்ற தேர்தல் முடிகளை மேம்போக்காக பார்த்தால் நாம் தமிழர் கட்சிக்கு தோல்வி என தெரியும். ஆனால் அரசியல் ஆய்வு பின்புலத்தோடு பார்த்தால் அதற்கான வாய்ப்பில்லை என்பதே உண்மை.
காரணம், இவர்கள் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டது பிரமாண்ட, நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சிகளைத்தான்.

இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வேரூன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட முறை அதிகாரத்தை சுவைத்து, அதன் பேரில் பலகோடி சொத்துக்களை குவித்து வைத்துக்கொண்டு, அந்த பணத்தில் தொகுதிக்கு சுமார் பத்துகோடி, வாக்காளர்களுக்கு 250 முல் 1000 ரூபாய் வரை வினியோகித்த பலத்தைக் கொண்ட கட்சி. ஊடக பலத்தைப் பற்றி சொல்லவேண்டாம். அந்த பின்னணியில் 31.6 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்.

அதிமுக-வை சொல்லவேண்டுமானால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆழமாய் வேர் பதித்திருக்கும் கட்சி. எம்.ஜி.ஆர் அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவி, பிறகு வந்த செல்வி ஜெயலலிதா 15ஆண்டுகளை தாண்டி, இப்போது தொடரப்போகும் முதல்வர் பதவி. அதன் மூலம் சேர்த்த சொத்துக்கள், தொகுதிக்கு பத்துகோடி, வாக்காளர்களுக்கு பணம், தவிர இலவச செல்போன், பாதி விலையில் ஸ்கூட்டி என்ற வரம்பு மீறிய அறிவிப்புகள். கூடவே ஊடக, அதிகார பலம்! இந்த பின்னணியில் 40.8 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்.

அடுத்து காங்கிரஸ் கட்சியைப் பார்த்தோமானால், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே மத்தியில் பெரும் அதிகாரத்தில் இருந்த கட்சி. மாநிலத்தில் 67-க்கு முன்புவரை அதிகாரத்தில் இருந்த கட்சி. பாரம்பரியமும் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் ஏதாவது ஒரு திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த கட்சி. இந்த தேர்தலில் 6.4. சதவீத வாக்கு வங்கியை திமுக.வின் தயவில் பெற்றிருக்கிறது.

நான்காவதாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருக்கும் கட்சி. மத்திய மாநில அரசுகளில் அதிகாரத்தை சுவைத்த பலமும், அதனால் பெற்ற பணபலமும் சேர்ந்து, கூடவே தன் சாதி பலத்தையும் ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருக்கும் கட்சி. தனது கடும் உழைப்பின் மூலமாக 5.3 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பா.ம.க.

ஐந்தாவது இடத்தில் உள்ள பிஜேபி, இப்போது மத்திய அதிகாரத்தில் இருக்கக்கூடியது. தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி. செலவுக்கும் ஊடக பலத்திற்கும் குறைவில்லாத கட்சி. பணத்தை தாராளமாக செலவு செய்து 2.8 சதவீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. இவர்களின் செலவுத் தொகையை கோடிகளில்தான் என்ன வேண்டும்.

இவர்களுக்கு அடுத்து ”மக்கள் நலக்கூட்டணி+தேமுதிக+த.மா.கா.” கூட்டணியினரை சொல்லவேண்டும். கூட்டாக சேர்ந்து 5.3. சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்.

இதில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளை எடுத்துக்கொண்டால், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு இணையான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். பணபலம் இல்லாவிட்டாலும் களப்பணியில் நீடித்த செல்வாக்கைக் கொண்டவர்கள். தமிழத்திற்கான முதல் சட்டமன்ற தேர்தலில் இருந்து களப்பணி+செல்வாக்கை பெற்றவர்கள். ஏதாகிலும் ஒரு திராவிட கட்சிகளின் கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு செல்வாக்கோடு இருந்தவர்கள். மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். ஆனாலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.8. சதவீத வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.7 சதவீத வாக்குகளையும்தான் பெறமுடிந்தது. ஒரு சதவீதத்திற்கும் குறைவாக.

இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மறுமலர்ச்சி திமுக. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அரசியல் செய்திருக்கிறது. மற்ற இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணியும் வைத்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தை பெற்று அனுபவித்து, அதன் மூலம் ஒரளவு பணபலத்தையும் தக்கவைத்துக்கொண்ட கட்சி. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி, அதன் மூலம் மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக இருக்கும் கட்சி. ஆனால் இந்த தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 0.9 சதவீத வாக்குகளைதான் எடுத்திருக்கிறது.

அதைப்போலவே இந்த ம.ந.கூட்டணில் முக்கிய கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அரசியல் செய்த கட்சி. தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து அதிகாரத்திலும் இருந்த கட்சி. அதன் மூலம் ஓரளவு பணபலம், மக்கள் செல்வாக்கு மற்றும் அரசியல் பலத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் பேரியக்கம். ஆனாலும் இந்த தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 0.8. சதவீத வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது

மேலும் இந்த ம.ந.கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் தே.மு.தி.க. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நிலைகொண்டிருக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்று, ‘நான்தான்’ என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆமாம் மாற்றம் வேண்டும் என்று நம்பிய மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க 8.0 சதவீத வாக்குவங்கி கொண்ட கட்சியாக தேமுதிக நின்றது. அதை வைத்துதான் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி வைத்து 27 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது. தொடர்ந்து பணபலத்தையும் தக்கவைத்துக்கொண்ட கட்சியாக மாறியது. பலத்த செல்வாக்கை பெற்றிருந்த ‘கேப்டன்’ கட்சி இந்த தேர்தலில் 2.4 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. 6 சதவீத வாக்குகளை இழந்துவிட்டு நிற்கிறார் கேப்டன்.

இவற்றையெல்லாம் பட்டியலிட்டு சொல்ல காரணம் இருக்கிறது. இம்மாதிரியான பின்புலத்தைக் கொண்ட கட்சிகளோடு, அசுர பலத்தைக் கொண்ட கட்சிகளோடு ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களான’ நாம் தமிழர் கட்சி மோதிப் பார்த்தது.

அவர்களைப் போன்று பணபலம் இல்லை. ஒரு தொகுத்திக்கு இரண்டு லட்சம் செலவு செய்திருந்தாலே அதிசயம். கூட்டம் நடத்திய இடத்தில் மக்கள் போட்ட உண்டியல் பணமே உதவியாக அமைந்தது. அவர்களுக்கு கிடைத்த நிதி உதவிகளும் பிரதானமாக இல்லை. முழுக்க முழுக்க சீமானின் உழைப்பு, அவருக்கு இணையான அவரது தம்பிகளின் உழைப்பை மட்டுமே கொண்டிருந்த கட்சி. ஊடக பலம் சுத்தமாக இல்லை. இருந்த ஊடகங்கள் அனைத்தும் இவர்களை, ‘மற்றும் பலர்’ பட்டியலிலேயே வைத்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களின் அரசியல் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு உள்ளாகதான். 2010-ம் ஆண்டுதான் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார்கள். தொடங்கிய ஆறு ஆண்டுகளில் கடந்த ஓராண்டுதான் கட்சிப் பணியை நகர்த்தினார்கள்.

அதிலும் குறிப்பாக கடந்த ஒரு மாதம்தான் இவர்களின் தேர்தல் பணி. ஓயாத உழைப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட உறுப்பினர்கள்தான் அந்த கட்சி வேட்பாளர்களின் பலம்.

மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது, நாம் தமிழர் கட்சியினர் வெறும் கையோடுதான் தேர்தல் களத்தில் குதித்தார்கள் எனலாம். யானைப்பசிக்கு சோளப்பொறி கதையாக தேர்தல் செலவு. அவ்வளவுதான். முழுக்க முழுக்க அந்த கட்சிகளின் உறுப்பினர்களின் கடும் உழைப்பில்தான் இப்போது 1.1. சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியினரைவிட அதிகம் என உறுதியிட்டு கூறலாம்.

இருபதாண்டுகளுக்கும் மேலாக களத்தில் நிற்கும் ம.தி.மு.க., சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், தே.மு.தி.க., த.மா.கா. ஆகியோர்களை ஒப்பிடும்போது நாம் தமிழர் கட்சியினர்தான் கூடுதலான செல்வாக்கை பெற்றிருக்கிறார்கள். அதுதான் உண்மை. விஜயகாந்த் கட்சி மட்டும்.2.2. சதவீத வாக்கு என்றாலும், முன்பு அந்த கட்சி பெற்றிருந்த 8.0 சதவித வாக்குகளில் இருந்து ஆறு சதவீதத்தை இழந்துவிட்டு நிற்கிறது என்றுதான் கூறுவேண்டும்.

எனவே குறுகிய காலத்திற்குள் ஓரளவு மக்கள் செல்வாக்கை பெற்ற நாம் தமிழர் கட்சியினர் சோர்ந்து போக வேண்டியதில்லை என்பதுதான் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது. இனி வரும் காலம் அவர்களுக்கான காலம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13256088_267207853667971_702823096897047

 

அப்படியே இதை திருப்பிப் போட்டுப் பாருங்கள். நாம் தமிழர் கட்சியின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை ஒட்டி இருக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சி ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்பார்கள். அப்படியானால் மம்தா பானர்ஜி வங்காளதேசத்து வங்காளிகளை வைத்து பிழைப்பு நடத்துகிறாரா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13265883_1733445820267991_86660460054287

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடுகள் செய்யலாம்?

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இசை,
உங்களின் இந்த "நாம் தமிழர் அரசியல்" திரி நான் மிகவும் விரும்பி தொடர்ந்தும் வாசித்த ஒரு பகுதி.
நான் நிறைய விடயங்களை  தெரிந்தும்,கற்றுக்கொண்ட பதிவுகள் இவை. எனக்குள் இருந்த மனசாட்சியையும், ஆதங்கங்களையும், நிராசைகளையும், "தமிழர்" என்ற உண்மை உணர்வையும் உரப்படுதிய, பதப்படுத்திய பதிவுகள். யாழ்கள அரசியல் அட்டவாதானிகள், புலி எதிப்பாளர், நடுநிலைவாதிகள், மாற்று சிந்தனையாளர், சாதாரண தமிழ் உணர்வு கொண்ட வாசகன் என எல்லோரினதும் கருத்துக்கள், கொச்சைகள், திட்டுகள், வசவுகள், கேலிகள், கூத்துகள், இப்படியான பலவற்றையும் தாண்டி நீங்கள் நிதானமாய் இந்த திரியை நாள் ஒரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக கொண்டு இழுத்து இருக்குறீர்கள். 
அதற்கு எனது முதல் பாராட்டுக்கள்.    

தேர்தல் முடிவுகளும் வெளியாகி விட்டன. ஏற்கனே நாம் அறிந்திருந்தது போல் இந்த கட்சியால் முதல் கால் சுவட்டிலே அரசியல் மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பது நிறூபனமாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியால் நிச்சயம் தமிழ் நாட்டு மக்களுக்கு என்றாவது ஒரு நாள் ஒரு நல்லதை செய்ய முடியும் என்பதை நம்புவன் நான். (பேராசிரியர் கல்யாணசுந்தரம் போன்றவர்களின் கூறிய சிந்தனை வடிவங்கள்  இதற்கு சாட்சி)  

ஈழப் பிரச்சினையை நான் இதற்குள் செருக விரும்பவில்லை. காரணம் இதற்கு எங்கள் இதய தெய்வங்கள்,
அரசியல் சாணக்கியர்கள்  சம்பந்தர், சுமந்திரர், தேரர் போன்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற பெருத்த நம்பிக்கை எனக்குண்டு.

நாம் தமிழர் இயக்கம் இந்த தேர்தல் முடிவுகளோடு  சோர்ந்து போகாது தொடர்ந்தும் அரசியல் மாற்று  விதையை தமிழர் மனங்களில் விதைக்கட்டும்.
தமிழனாய் என்னுடைய ஆதரவு என்றும் உண்டு.
தமிழர்களை வழி  நடாத்தும் கீழ்த்தரமான சாக்கடை அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் நொந்து போய் இருக்கும் சாதாரண மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பது குறைந்த பட்சம் ஒரு தெளிவு அவர்களுக்கு வந்திருக்கிறது என்பதாகவே நான் நினைக்கிறேன்.

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சசி உங்கள் பின்னூட்டத்திற்கு. தமிழகத்தில் ஒரு தசாப்தகாலம் வாழ்ந்துவிட்டதாலும் எனக்கு கல்விக்கொடையை தந்த நிலம் என்பதாலும் சாதாரணமாக கடந்துபோக முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.