Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும்

Featured Replies

'இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும்
 
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. அதனை நினைவுபடுத்துவதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், மிகவும் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன என்று சொல்லக்கூடியளவுக்குக் காணப்படுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள், பத்தி எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள், அரட்டை இடங்களென, முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. 25 வருடப் பூர்த்தியையொட்டி மாத்திரம் இவை இடம்பெறுகின்றனவா என்றொரு கேள்வி இருந்தாலும், இவ்வாறான கலந்துரையாடல்கள், ஆரோக்கியமானவை. ஏனெனில், திறந்த கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களுமில்லாத சமூகம், தேங்கி நிற்கவே செய்யும்.

அண்மைய நாட்களில், இரண்டு முக்கியமான அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துத் தான், இவ்விடயத்தை மேலும் பேசுபொருளாக மாற்றியிருக்கிறது என்று கூறலாம். அதிலொன்று, அரியநேத்திரன் தெரிவித்த கருத்து. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை 'இனப் பாதுகாப்பு' என்று அவர் வர்ணிக்க, அங்கு இடம்பெற்றது 'இனச் சுத்திகரிப்பு என நான் முன்பிருந்தே சொல்லி வருகிறேன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை' என்றவாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பிலிருக்கின்ற முற்போக்காளர் எனப் பொதுவாகக் கருதப்படும் சுமந்திரனின் கருத்து, முஸ்லிம் மக்களிடத்தே பெருமளவு வரவேற்பைப் பெற்றிருந்ததோடு, அவர் மீது விமர்சனம் கொண்டோர் கூட அவரது கருத்தைப் பாராட்டுமளவுக்குக் காணப்பட்டது. ஆனால், அதற்கு விமர்சனங்களும் இல்லாமலில்லை.

இருக்க, சுமந்திரனின் கருத்தின்போது, 'சட்ட வரைவிலக்கணத்துக்கமைய' என்ற பதத்தை அவர் தெளிவாகப் பயன்படுத்தியிருந்தார். ஆகவே, எவ்வாறான வரைவிலக்கணம் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்பது பொருத்தமானது. ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக்கணத்தின்படி, 'கட்டாயப்படுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக, வழங்கப்பட்ட பிரதேசமொன்றிலிருந்து இன அல்லது மதக் குழுவொன்றை வெளியேற்றி, அதை, இன ரீதியாக ஓரினமாக மாற்றுதல்' என இனச் சுத்திகரிப்பை வரைவிலக்கப்படுத்துகிறது.

இதை இலகுவாக, 'குறித்த பிரதேசத்தில் பலமாகக் காணப்படும் இனக் குழுவானது, அப்பிரதேசத்தை ஓரினத்துக்குரிய இடமாக மாற்றும் நோக்குடன் அங்குள்ள இன அல்லது மதக் குழுக்களைக் கட்டமைப்பு ரீதியாகக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுதல்' எனத் தெரிவிக்கலாம். மேற்கூறப்பட்ட வரைவிலக்கணங்களின்படி, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது இனச் சுத்திகரிப்பு என்ற சுமந்திரனின் கருத்துச் சரியாகிறது.

திடீரென எதற்காக இந்த விவாதம் அல்லது சொற்களில் என்ன இருக்கின்றன என்ற கருத்து எழலாம். இவ்வாறான சொற்பிரயோகங்கள், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவைப் பாதிக்கலாம் எனவும் பழைய விடயங்களை மீண்டும் மீண்டும் ஆராய்வதென்பது, எந்த விதத்திலும் ஆரோக்கியமானதன்று என்ற கருத்தும், தமிழர்கள் பக்கத்திலிருந்து சில தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றது. அத்தோடு, முஸ்லிம்கள் கூட, இனச் சுத்திகரிப்பு என்ற வார்த்தையைக் கோரவில்லையெனவும் எனவே இவ்வார்த்தைப் பிரயோகம் தேவையற்றது எனவும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மைக்காலத்தில், அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லையென்பது உண்மையானது தான். ஆனால், இவ்விடயத்தை முஸ்லிம்கள் பக்கத்திலிருந்து ஆராய்வதற்கு முன்னர், தமிழர்களின் பக்கத்திலிருந்து ஆராய்வது முக்கியமானது, அவசியமானது.

சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில், கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இனமாக, தமிழ் இனம் காணப்படுகின்றது. உச்சபட்ட ஒடுக்குமுறைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளான இனம் என்ற அடிப்படையில், பெரும்பான்மையினரால் அல்லது அதிகாரம் படைத்தவர்களால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் என்பதன் அடிப்படையில், ஒடுக்குமுறையில் வலிகளைப் புரிந்த இனமாக தமிழ் இனம் காணப்பட வேண்டும்.

ஆகவே, தமிழர்கள் மீது புரியப்பட்ட ஒடுக்குமுறைகள், கொடூரங்கள் பற்றிய கோரிக்கைகள் எழுப்பப்படும் அதேவேளையில், தமிழர்களால் அல்லது தமிழர்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள், கொடூரங்கள் பற்றியும் ஆராய்வது தான் பொருத்தமானது.

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு, அவ்வமைப்பு அழிக்கப்படும்வரை, உறுதியான மன்னிப்பொன்றைக் கோரியதில்லை. வன்னியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் 'மன்னிப்பு' என்ற வார்த்தையை அன்டன் பாலசிங்கம் பயன்படுத்தியிருந்தாலும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுத் தவறென்பதும் வருத்தம் தெரிவிக்கிறோம் என்பதும் முதற்படியென்ற போதிலும், 'எம்மால், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு, நாம் மன்னிப்புக் கோருகின்றோம்' என்பது தான், வெளிப்படையான மன்னிப்புக் கோரலாக இருந்திருக்க முடியும்.

தற்போது அவ்வமைப்பு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழ் மக்களின் பெயரால் செய்யப்பட்ட அத்தவறுஃ கொடூரத்துக்கு, தமிழ் மக்களால் செய்யப்பட வேண்டிய பணிகள் இருக்கின்றன. தமிழர்களில் எல்லோருமே அந்த வெளியேற்றத்தை ஆதரித்திருக்கவில்லை, சிலர் அதற்கெதிராகத் தங்கள் குரலை எழுப்பியிருந்தனர். ஆகவே, விடுதலைப் புலிகள் செய்ததொன்றுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனமும் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற வாதம் முன்வைக்கப்படலாம். மேலோட்டமாகப் பார்க்கையில், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாதம் போலவும் தோன்றக்கூடும்.

ஆனால், அந்தக் கொடூரம் புரியப்பட்டது, தமிழ் மக்களின் பெயரால். அந்தக் கொடூரத்துக்கு, தமிழ் மக்களினுடைய ஆதரவு, கணிசமானளவுக்கு இருந்ததென்பது உண்மை. வெளியேற்றப்படுவதற்கான நேரடியாக ஆதரவாக இருந்திருக்காவிட்டாலும் கூட, அதை நியாயப்படுத்தியதன் மூலமாக, அந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே, அச்செயலுக்கான பொறுப்பை ஏற்காவிட்டாலும் கூட, தவறை ஏற்பதில் தயக்கங்கள் இருக்கத் தேவையில்லை.

ஏனென்றால், அந்த வெளியேற்றத்தை நியாயப்படுத்துகின்றோம் என்ற பார்வையில், 'முஸ்லிம்கள் கெட்டவர்கள்', 'முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள்' என, வடக்கின் பல பகுதிகளில், சிறு பிள்ளைகளுக்கான 'மாற்றப்பட்ட' வரலாறொன்று திணிப்படுவதை நாம் அறிவோம். அவ்வாறான தவறான, மோசமான சித்திரிப்புகள் கொண்ட சமூகத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமைப் பற்றிக் கலந்துரையாடுவதென்பது, வேடிக்கையானது.

மறுபுறத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்தத் தவறைஃகுற்றத்தை ஏற்றுக் கொள்வதனூடாக மாத்திரம், அவ்வமைப்பின் அத்தனை நடவடிக்கைகளும் அதன் உருவாக்கமும் அதற்கான காரணமும், தவறாகிப் போய்விடாது. எந்தவோர் அமைப்பும் எந்தவோர் இயக்கமும், தவறுகளின்றி இயங்கியதில்லை. ஆகவே, இத்தவறை ஏற்றுக் கொள்வதால், தமிழீழ விடுதலைப் புலிகளின் 'நற்பெயர்' கெட்டுவிடும் என அஞ்சுவோர், நீண்டகால நோக்கில் சிந்திப்பது சாலச்சிறந்ததாக இருக்கும்.

பழைய விடயத்தைக் கிளறி எடுப்பதால், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படலாமென்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இந்த விடயத்தை மூடி வைத்து மூடி வைத்து, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சந்தேகங்களற்ற, வெளிப்படையான உறவொன்று காணப்படுகின்றதா எனக் கேட்க வேண்டிய தேவையிருக்கிறதல்லவா? வெளிப்படையான, இரு தரப்பும் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டு, பகிரங்கமான கலந்துரையாடலில் ஈடுபடுவதைப் போன்ற, பயன்தரக்கூடிய, நீண்டகாலத்துக்கான தீர்வொன்றுள்ளதா?

இதில் நகைப்புக்குரிய விடயமென்னவெனில், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தான முழுமையான விசாரணைகள் வேண்டும், அவற்றைப் பற்றிய முழு விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வைத்துக் கொண்டு தான், இந்த விடயத்தைக் கிளறுவது தேவையற்றது, முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்த்தால் போதுமானது என, தமிழர்களில் ஒரு தரப்பில் கோரிக்கை இருக்கிறது. 'இன ஒற்றுமைக்காக, நடந்ததை மறந்து, ஒன்றாகச் செயற்படுவோம்' என்ற சிங்களத் தரப்பின் (குறிப்பிட்ட பிரிவினர், விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க வேண்டியது) கோரிக்கையை, 'முடியாது. உண்மை வெளிப்படுத்தப்பட்டாலேயே, உண்மையான இன ஒற்றுமை ஏற்படும்' எனத் தெரிவிக்கும் குறித்த தரப்பினர், சிங்களத் தரப்பின் அதே வாதத்தை, முஸ்லிம்கள் விவகாரத்தில் மாத்திரம் முன்வைப்பது, இரட்டை நிலைப்பாடேயொழிய வேறொன்றுமில்லை. பிரபலமான நகைச்சுவைமொழியில் சொல்வதானால், எங்களுக்கு என்றால் இரத்தமும் அவர்களுக்கு என்றால் தக்காளிச் சட்னியும் என்பது போல் இந்தக் கருத்தும்.

ஆகவே தான், இவ்விடயத்தில் தமிழர் தரப்பின் முழுமையான அர்ப்பணிப்பும் செயற்பாடும் தேவைப்படுகின்றது. அது, உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்தே ஆரம்பிக்கின்றது.

தவறுகளை ஏற்காத மனிதர்களால், அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படாது. இடம்பெற்றது மோசமான தவறென்பதை ஏற்றுக் கொள்ளும்போது தான், அதற்கான பரிகாரங்களை வழங்குவதற்கான முதற்படிகளை ஏற்படுத்த முடியும். மறைத்து வைத்திருக்க முயலும் வரலாறுகள், ஒரு கட்டத்தில் பாரிய பூதாகாரமான விளைவுகளுடன் வெளிப்படுமென்பது, நாம் அனைவரும் கண்கூடாகக்கண்டது தான்.

- See more at: http://www.tamilmirror.lk/158446/-இனச-ச-த-த-கர-ப-ப-ம-தம-ழர-கள-ம-#sthash.SRhOCrZI.dpuf

"தவறுகளை ஏற்காத மனிதர்களால், அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படாது. இடம்பெற்றது மோசமான தவறென்பதை ஏற்றுக் கொள்ளும்போது தான், அதற்கான பரிகாரங்களை வழங்குவதற்கான முதற்படிகளை ஏற்படுத்த முடியும். மறைத்து வைத்திருக்க முயலும் வரலாறுகள், ஒரு கட்டத்தில் பாரிய பூதாகாரமான விளைவுகளுடன் வெளிப்படுமென்பது, நாம் அனைவரும் கண்கூடாகக்கண்டது தான்."

இதைத்தான் உலகில் உள்ள அனைவருக்கும் சொல்லுகின்றோம் .

சுமந்திரன் படம் இடைக்கிட அதிகமாக காட்டுவது உண்மை அதற்காக முஸ்லிம்களின் பாதுகாப்பிற்குதான் அவர்களை வெளியேற்றினார்கள் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ..

தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் பல பிரச்சனைகள் தானாக தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே, திரும்பவும் முதல் சதுரத்தில இருந்து தொடங்கப் போகினம்! நான் எஸ்கேப்! :rolleyes:

'இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும்
 
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. அதனை நினைவுபடுத்துவதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், மிகவும் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன என்று சொல்லக்கூடியளவுக்குக் காணப்படுகின்றன.

....

பகிர்வுக்கு நன்றி நவீனன். பச்சை உங்களுக்கு மட்டுமில்லை இக்கட்டுரையை எழுதியவருக்கும்தான்.

எனது மனதில் உள்ளதை நான் எழுதியதுபோல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே, திரும்பவும் முதல் சதுரத்தில இருந்து தொடங்கப் போகினம்! நான் எஸ்கேப்! :rolleyes:

ஒரு சேஞ்சுக்கு பின்வளைகோணத்தில எழுதுறன். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனப் பாதுகாப்புக்கேயாகும். அந்த இனம் அழிந்து போகக்கூடாது, ஒருவேளை தமிழினம் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு பாரிய இன அழிவை எதிர்கொண்டால் அதன் பின்னர் சிங்களவரின் பாதுகாப்புக்குள் அனுப்பப்பட்ட முஸ்லிம்கள் மீளவந்து போராடுவார்கள் என்ற தீர்க்கதரிசனமே அவர்களை வெளியேற்றியது!

எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது. சிரிப்பை அடக்க முடியவில்லை.

நான் சிரிப்பதைப் பார்த்து எனது அவதாரில் உள்ள நாய்கூட என்னைப் பார்த்து முழுசுது.

Edited by ஜீவன் சிவா

தமிழ் மக்கள் மீது பாரிய அக்கிரமங்களை 1958 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசாங்கள் மேற்கொண்ட போது மெளமான அதை அங்கீகரித்து ஆதரித்த சிங்கள மக்களும், 1990 ல் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் மீது முஸ்லீம் ஊர்காவற்படைகளால் மேற்கொள்ளபட்ட அக்கிரமங்களில் போது பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொலைசெய்யபட்டபோது அதை எதிர்க்காமல் மெளனமாக ஆதரித்து நின்ற முஸ்லீம்களும் தமிழ் மக்களிடன் வந்து   நாங்கள் உங்களுக்கு செய்ய கொடுமைக்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று  தெரிவித்து தமிழ் மக்களுக்கு தாங்கள் இழைத்த கொடுமைகளுக்கு பரிகாரமும் தேடிவிட்டார்கள் என்பது போலவும் தமிழ் மக்கள் மட்டும் தான் மன்னிப்பு கேட்க மறுப்பது போலவும் சில அதிகம் தெரிந்தவர்கள் என்று தங்களை தாங்களே கூறும் சிலர் எழுதிவருகிறார்கள். .

அன்புள்ள ட்ரிங்கோ,

இது தான் உங்களுக்கு முக்கியமென்றால் 83 ஜூலை கலவரத்திற்கு சந்திரிக்கா (அரசியலுக்காக) மன்னிப்புக் கேட்டார்! சிங்களவர்களான பிறையன் செனிவிரத்ன, அமரர் லசந்த, உயிர் வாழும் சிறிதுங்க ஜெயசூரிய இப்படி பலர் தமிழர்களுக்கு நடப்பது அநீதி என்று குரல் கொடுத்தனர்/கொடுக்கின்றனர். இப்ப நீங்கள் இங்கே திட்டுவது போல ஏனைய சிங்களவர்கள் அவர்களைத் திட்டினார்கள், அடித்தார்கள், கொன்றார்கள். முஸ்லிம்கள் மத்தியிலும் மனித உரிமைகள்/தமிழர் உரிமைகள் என்று குரல் கொடுப்போர் இருக்கின்றனர். எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் பெயர்கள் தெரியாது.

பொயின்ற் இது தான்: எல்லாப் பக்கத்தில் இருந்தும் சரியானதை ஆதரிக்கும் மனப் போக்கு வர வேண்டும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தாலும் சரி/பிழை நியாயம்/அநியாயம் என்பது ஒன்று தான். அப்படி இல்லை என்று விட்டு, எங்கள் குழந்தைகளுக்கு எதை நாம் கற்பிக்கப் போகிறோம்? இதுவே என் வாதம்.    

பொயின்ற் இது தான்: எல்லாப் பக்கத்தில் இருந்தும் சரியானதை ஆதரிக்கும் மனப் போக்கு வர வேண்டும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தாலும் சரி/பிழை நியாயம்/அநியாயம் என்பது ஒன்று தான். அப்படி இல்லை என்று விட்டு, எங்கள் குழந்தைகளுக்கு எதை நாம் கற்பிக்கப் போகிறோம்? 

நன்றி

அன்புள்ள ட்ரிங்கோ,

இது தான் உங்களுக்கு முக்கியமென்றால் 83 ஜூலை கலவரத்திற்கு சந்திரிக்கா (அரசியலுக்காக) மன்னிப்புக் கேட்டார்! சிங்களவர்களான பிறையன் செனிவிரத்ன, அமரர் லசந்த, உயிர் வாழும் சிறிதுங்க ஜெயசூரிய இப்படி பலர் தமிழர்களுக்கு நடப்பது அநீதி என்று குரல் கொடுத்தனர்/கொடுக்கின்றனர். இப்ப நீங்கள் இங்கே திட்டுவது போல ஏனைய சிங்களவர்கள் அவர்களைத் திட்டினார்கள், அடித்தார்கள், கொன்றார்கள். முஸ்லிம்கள் மத்தியிலும் மனித உரிமைகள்/தமிழர் உரிமைகள் என்று குரல் கொடுப்போர் இருக்கின்றனர். எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் பெயர்கள் தெரியாது.

பொயின்ற் இது தான்: எல்லாப் பக்கத்தில் இருந்தும் சரியானதை ஆதரிக்கும் மனப் போக்கு வர வேண்டும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தாலும் சரி/பிழை நியாயம்/அநியாயம் என்பது ஒன்று தான். அப்படி இல்லை என்று விட்டு, எங்கள் குழந்தைகளுக்கு எதை நாம் கற்பிக்கப் போகிறோம்? இதுவே என் வாதம்.    

சிங்களவர்கள் முஸ்லீம்கள் மத்தியில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுபோர் இல்லை என்று நான் கூறினேனா ஜஸ்ரின். அதே போல் தமிழ் மக்கள் மத்தியிலும் மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் உள்ளனர். ஏன் முஸ்லிம்கள் விடயத்தை எடுத்து கொண்டால் கூட தமிழ் மக்களில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுதது போல  முஸ்லீம்களில் எந்த தலைவர்களும் முஸ்லீம் ஊர்காவற்படையால் எமது மாகாண தமிழ் மக்களுக்கு இழைத்த பாரிய அநியாங்களுக்கு எதிராக வாயை திறக்கவில்லை. மெளனமாக அதை அங்கீகரித்னர் .எமது மாகாணத்தில் எத்தனை இந்து ஆலயங்கள் முஸ்லீம்களால் அழித்தொழிக்கபட்டன என்பது ஜஸ்ரின் அவர்களே உங்களுக்கு தெரியுமா? 12.௦8.1990 அன்று வீரமுனை விநாயகர் ஆலயத்தில் இருந்த தமிழ் மக்களின் மீது முஸ்லீம்கள் மேற்கொண்ட தாக்கலதலில் 55 தமிழ்மக்கள் வெட்டி படுகொலை செய்யபட்ட சம்பவத்திற்கு எந்த முஸ்லீம் தலைவர்களாவது மன்னிப்பு கேட்டதுண்டா? அதை விட எத்தன தமிழ் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் இருந்த இடம் தெரியாமல் வன்முறைமூலம்  துரத்தபட்டனர் என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனை கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டார்களா? அதற்கு பரிகாரமாக தமிழ்மக்களின் கிராமங்களில் அவர்களை குடியமரத்தினார்களா? 

வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை தேதி வாரியாக பார்ப்போம் :

 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை

05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை

10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம்ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதிமுகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி
கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட
வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே.

இனப்படுகொலை என்பது எங்கு நடந்தாலும் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரே இனத்தை , ஒரே மொழி பேசக்கூடிய மக்களை மதத்தின் பெயரால் கொல்வதென்பது ஏற்றுக்கொள்ள இயலா ஒன்றாகும்.
காத்தான்குடி...காத்தான்குடி என கத்தும் நியாயவான்களே....இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? இவர்கள் காஃபீர்கள் என்றா?

நடுநிலமை வேசத்தை விட்டுவிட்டு உண்மையை சிந்தியுங்கள்  எல்லோரும் மன்னிப்பு கேட்கும் போது தமிழ் மக்களுக்கும் அந்த கடப்பாடு உண்டு. மற்றவர்கள் மன்னிப்பு கேட்காதவரை தமிழ் மக்களுக்கும் அந்த கட்ப்பாடு இல்லை.

Edited by trinco

சரி! இதைத் தொடருங்கள். எப்படியும் நாம் இருவரும் இன்னொரு பத்து வருடங்கள் உயிர்வாழ்வோம் என நம்புகிறேன். அந்த பத்து வருடங்களில் யாழும் இருக்கும். என்ன முன்னேற்றம் வருகிறது என்று பார்க்கலாம்!  

வேசத்தைப் பொறுத்தவரை, அதை நான் கலைப்பதாயில்லை! ஏனெனின் இது என் நிஜ முகம், வேசம் இல்லை!:)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முஸ்லீம்களை வடபகுதியிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்புத்தான் அதுதானே மெத்தப்படிச்ச அப்புக்காத்து சுமந்திரன் கூறிவிட்டார் பிறகென்ன. இப்படித்தான் ராதிகா குமாரசாமி தொடக்கம் லக்ஸ்மன் கதிர்காமர் ஈறாக கன விடையங்களைக்கூறினார்கள் கழுவேற்றப்பட்டது ஒட்டுமொத்தத் தமிழ்ச்சனமும்தான்.

சரி இனச்சுத்திகரிப்புத்தான் ஒப்புக்கொள்ளுகிறம் அதுக்கு என்ன இப்போ, தகுதிவாய்ந்த சர்வதேச நிபுணத்துவத்துடன்கூடிய விசாரணையை மேற்கொள்ளவும் புலிகளைக் கழுவேற்றவும்

(புலிகள்தானெ செய்தார்கள் அவர்கள்வேறு கூட்டமைப்பு வேறு அதுக்கேன் சுமந்திரன் முக்குறார்?)

இனச்சுத்திகரிப்புக்குள்ளான ஒரு இனம் தனியேசென்று தன்னாட்சி அமைக்கும் உரிமையைப்பெறுகின்றது என்பதற்க்கமைய முஸ்லீம்கள், இலங்கைத்தீவில் தங்களுக்கு என ஒரு தேசத்தை உருவாக்க ஒரு சந்தர்ப்பத்தை புலிகள் உருவாக்கித்தந்திருக்கினம். அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குங்கோ ஹக்கீம் ஐயா வழிகாட்ட சுமந்திரன் அப்புக்காத்து இருக்கிறார்.

*********, நீங்கள் இப்படிக்கதைத்து தமிழனது இடுப்பிலுள்ள வேட்டியும் உருவிப்போயிட்டுது இப்போது அவன் இரண்டுகைகளாலுமே தனது மானத்தை மறைத்து நிக்கிறாண் அவனது கைகளை முதுகுப்பக்கம் கொண்டுசென்று பிணைத்துக்கட்டி விடுங்கள். உங்களுக்கு ஓட்டுப்போடவேணுமெனில் அந்தநேரத்துக்கு அவிழ்த்து விடுங்கள்.

முடிவாகச் சொல்லுகிறன் புலிகள் இனச்சுத்திகருப்புத்தான் செய்தார்கள் அதுக்குச் சுமந்திரனுக்கு என்ன வந்திட்டுதாம், ********* முடிஞ்சா ஹக்கீம் நானாவையும் கூட்டிக்கொண்டு சர்வதேச விசாரணை வேண்டுமெனப் போராடவும். **************

Edited by நியானி
பண்பற்ற வார்த்தைப் பிரயோகங்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் / நேரங்களில் உணர்ச்சிகளை அடக்க வேண்டும். 

சரி! இதைத் தொடருங்கள். எப்படியும் நாம் இருவரும் இன்னொரு பத்து வருடங்கள் உயிர்வாழ்வோம் என நம்புகிறேன். அந்த பத்து வருடங்களில் யாழும் இருக்கும். என்ன முன்னேற்றம் வருகிறது என்று பார்க்கலாம்!  

வேசத்தைப் பொறுத்தவரை, அதை நான் கலைப்பதாயில்லை! ஏனெனின் இது என் நிஜ முகம், வேசம் இல்லை!:)

முஸ்லிம்களால் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகளை கூறினால் சரி இதை தொடருங்கள் என்று நக்கல் பண்ண தெரிகிறது. தமிழ்மக்கள் தரப்பில் மட்டும் மன்னிப்பு கேட்டது காணாது, பலமுறை மன்னிப்பு கேட்கவேண்டும் தவறுகளை ஏற்றிகள் கொள்ள வேண்டும் என்று போதனைகள் வேறு.

ஜஸ்ரின் அவர்கள் நீங்கள் நேர்மையாக சிந்திப்பவராகவே இருந்தீர்கள் என்பது உங்கள் பல முன்னய கருத்துக்களில்  தெரிந்தது. ஆனால் சமீபத்தில் சில நபர்கள் மீது தாங்கள் கொண்ட கோபம் சிலரோட நட்பு காரணமாக சிலரை திருப்திப்படுத்தும் சிலரை சீண்டவும்  விதண்டாவாதம் புரிய தொடங்கியுள்ளீர்கள். இலங்கைத்தீவில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பிலும் தவறுகள் உண்டு என்றால் அனைவரும். தமது தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அதற்கு பரிகாரமாக புதிய நீதியான அரசியல்தீர்வை உருவாக்க கூடிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து அதிகமாக அடக்கு முறைக்கு உள்ளான இனத்தின் மீது மட்டும் குற்றங்களை மீண்டும். மீண்டும் கூறுவதன்  மூலம் மற்றவர்களின் குற்றங்களை நீர்த்து போக செய்ய சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்படும் இத்தகைய விவாதங்களில் அவர்களுக்கு துணை போக்க் கூடாது. 

ம்.. நான் செய்வது விதண்டாவாதம்? உலகத்தில் இது வரை நடந்த போர்கள் முடிவு பெற்ற போது பாதிக்கப் பட்டோர் முன்னோக்கி நகரக் கைக்கொண்ட வழி பற்றியே நான் பேசுகிறேன்! பரம்பரைப் பகை, தமிழ் திரைப் படங்களில் வருவது போல, வளர்க்க நீங்கள் வழி சொல்கிறீர்கள். இதுவே எங்களிடையே வேறுபாடு. நேர்மையெல்லாம் எனக்குப் பெரிய வார்த்தை. யார் சொல்கிறார் என்றல்ல நான் பார்ப்பது, என்ன சொல்கிறார் என்றே பார்க்கிறேன்! குழுவாகப் பிரித்து ஆட்களை மதிப்பிடுவது உங்கள் சுதந்திரம்! அது உங்களைச் சந்தோஷப் படுத்தினால் அதைத் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! tw_smile:

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றவன்.. சரணடையனும்.. அடக்கிக்கிட்டு.. அடங்கி வாழனுன்னு சிலர் போதிக்க விரும்பினம். ஆனால்.. தோற்றவர்களால் அடுத்த நிலைக்கு இன்னொரு வழிமுறையிலும் வெல்லச் சாத்தியமா என்று ஆராயும் காலம் இது. அது சில அடிப்படைவாத பழமைச் சிந்தனையில் கல்வி கற்ற மேதைகளுக்கும் புரியாது. சிலர் பேராசிரியர்களாக இருப்பார்கள்.. பழமை வழிமுறையில் அதைப் பெற்றதால்.. நவீனத்துக்கு மாற மறுப்பவர்களாக இருப்பர். யாழிலும் அப்படிச் சிலர் உண்டு. குறிப்பாக.. சார்ள்ஸ் டார்வின் கண்டுபிடிப்புக்களை அன்று பலர் எதிர்த்தார்கள். காரணம் அது நவீனத்துவமான சிந்தனையை கொண்டிருந்ததால்.. அதனை பழமை முறைப் படிப்பாளிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக டார்வின் சோர்ந்து விடவில்லை. இன்று டார்வின் கொள்கைகள் பரந்து அங்கீகரிக்கப்பட்டு நிற்கிறது. அடுத்தவர் பழிப்பு.. ஏற்பு மறுப்பு.. இவற்றை எண்ணி.. தோற்றவனாக நினைத்திருந்தால் டார்வின் கொள்கையே பிறந்திருக்காது. அந்த வகையில் இதையெல்லாம் பெரிசு படுத்தனுன்னு இல்லை ரிக்கோ. சமூகம் பல வித மனிதர்களை காலத்துக்கும் பிரசவிக்கும். அவற்றை எல்லாம் தாண்டினால்.. தான் உரிமை.. விடுதலை.. சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். மற்றைய மனிதனுக்குள்.. கட்டுப்பட விரும்பிறவனுக்கு இவை பற்றி எதுக்கு அக்கறை. அவன் காலத்துக்கும் தான் தப்பிக்க தனக்கு ஆதாயம் தேட எதையும் சொல்லிட்டுப் போவான். அதனால் ஒரு சமூகம் பாதிப்படைவதைப் பற்றி அவனுக்கு அக்கறை எழ வேண்டிய அவசியம் இல்லைத் தானே.  tw_blush:

சம் சும் கும்பல் பழைய.. வழிமுறையில்.. மூழ்க்கிப் போன கூட்டம். அதே வழிமுறையில் இப்பவும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதே வழிமுறையை சில பழமைவாதிகளும் தகும் தாகாது என்ற குழப்பநிலையில் கையில் எடுத்து நிற்கினம். ஆனால்.. அது ஒன்றுக்குமே உதவாதது என்பது நிரூபணமான உண்மை. புதிய சந்ததி சுதந்திரம் விரும்பும் பழைய சந்ததி.. அதைத் தாண்டி சிந்திக்கும். சிந்திக்கிறது. tw_blush:

Edited by nedukkalapoovan

இந்தப் பந்தியில் உள்ள எல்லாப் புசத்தலுக்கும் பதில் தர நேரமில்லை: ஒரே ஒரு விடயம் மட்டும் திரும்பவும் நினைவு படுத்த வேணுமென்பதற்காக: உங்கள் "புதிய" அணுகுமுறை 2009 இல் ஒரு தடவை தோற்றது. 2015 இல் இரண்டாம் தடவை தோற்றது! அடுத்த தேர்தலுக்கு இப்பவே "செய்யுறன் பார் வேலை" என்று பந்தயம் கட்டிப் போட்டுக் கத்திக் கொண்டிருக்க வேண்டியது தான்! நான் எப்பவும் சொல்வது போல: உங்கள் புழுதி கிளப்பும் கணணி அரசியலால் தாயக அரசியல் நிலைமையில் ஒரு உரோமத்தைக் கூட உங்களால் பிடுங்கிப் போட இயலாது!  :cool:

ம்.. நான் செய்வது விதண்டாவாதம்? உலகத்தில் இது வரை நடந்த போர்கள் முடிவு பெற்ற போது பாதிக்கப் பட்டோர் முன்னோக்கி நகரக் கைக்கொண்ட வழி பற்றியே நான் பேசுகிறேன்! பரம்பரைப் பகை, தமிழ் திரைப் படங்களில் வருவது போல, வளர்க்க நீங்கள் வழி சொல்கிறீர்கள். இதுவே எங்களிடையே வேறுபாடு. நேர்மையெல்லாம் எனக்குப் பெரிய வார்த்தை. யார் சொல்கிறார் என்றல்ல நான் பார்ப்பது, என்ன சொல்கிறார் என்றே பார்க்கிறேன்! குழுவாகப் பிரித்து ஆட்களை மதிப்பிடுவது உங்கள் சுதந்திரம்! அது உங்களைச் சந்தோஷப் படுத்தினால் அதைத் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! tw_smile:

இலங்கைத்தீவில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பிலும் தவறுகள் உண்டு என்றால் அனைவரும். தமது தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அதற்கு பரிகாரமாக புதிய நீதியான அரசியல்தீர்வை உருவாக்க கூடிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெளிவாக நான் குறிப்பிட்டதை திரு ஜஸ்ரின் அவர்கள்  பரம்பரை பகையை வளர்ப்பதாக நான் கூறுவதாக பொருள் கொண்டால் நான் அதற்கு என்ன செய்ய முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பந்தியில் உள்ள எல்லாப் புசத்தலுக்கும் பதில் தர நேரமில்லை: ஒரே ஒரு விடயம் மட்டும் திரும்பவும் நினைவு படுத்த வேணுமென்பதற்காக: உங்கள் "புதிய" அணுகுமுறை 2009 இல் ஒரு தடவை தோற்றது. 2015 இல் இரண்டாம் தடவை தோற்றது! அடுத்த தேர்தலுக்கு இப்பவே "செய்யுறன் பார் வேலை" என்று பந்தயம் கட்டிப் போட்டுக் கத்திக் கொண்டிருக்க வேண்டியது தான்! நான் எப்பவும் சொல்வது போல: உங்கள் புழுதி கிளப்பும் கணணி அரசியலால் தாயக அரசியல் நிலைமையில் ஒரு உரோமத்தைக் கூட உங்களால் பிடுங்கிப் போட இயலாது!  :cool:

மேற்படி பதில் பொதுமைப்பாடாக எழுதப்பட்டதாயினும்.. உங்களுக்கு என்று தொப்பியை அணிந்து கொண்டு எழுதப்பட்ட பதிலுக்கு கீழ் காணும் பதில் அமையும். மேலும் உங்களின் மேற்படி புசத்தலில் பதில் தரத்தக்க பகுதிக்கான பதில்...... (வார்த்தைகள் கவனமாக வருமானால்.. பதில்களும் கவனமாக கண்ணியமாக வரும்.)

2005 இல்.. 21 இடங்களை வென்ற கூட்டமைப்பு.. 2010.. சுருங்கி 14 இல் வந்து இப்போ 16 இல் நிற்குது. இந்தத் தோல்விகளுக்கு யார் பொறுப்பேற்பது..??!

சுமந்திரனின் வெற்றி என்பதை தவிர வேறு ஒன்றும் அங்கு சாத்தியமில்லை. சுமந்திரனின் வெற்றி கேள்விக்குரிய ஒன்றும் கூட. அவரை விட அதிக வாக்குகளை 2009 தோல்விக் களத்தில் நின்றவர்கள் பெற்றிருக்கிறார்கள். 

பிரச்சனை வெற்றி பெறுவர்களின் கொள்கைகளை மக்கள் வெற்றி பெற வைப்பதாகக் காட்ட முனையும் உங்களைப் போன்ற ஒரு சிலரே தவிர.. மக்கள் யாரை வெல்ல வைக்கனும் என்பதில் ஒரு பொதுத் தெளிவில் இருந்து இன்னும் இருண்ட யுகத்திற்குள் நுழையவில்லை. ஆனால் மக்களை மீண்டும் இரண்ட ஏமாற்றும் அரசியல் யுகத்திற்குள் கொண்டு செல்ல முனையும் சிலர் அடையும் வெற்றிகள்... மக்களை மீளாத் தோல்விக்குள் முடக்கும் என்பது மட்டும் நிஜம்.

அதனை தாங்களும் வாழும் காலத்தில் மீளப் படிக்கப் போகிறீர்கள். இதுவே இவர்களின் கடந்த கால தோற்றுப்போன அரசியலாகவும் இருந்து வந்துள்ளது. தந்தை செல்வாவை விட வேறு எவரும் தமது அரசியல் தோல்விகளை ஏற்றுக் கொண்டதில்லை. சம் சும் கும்பல் உட்பட. tw_angry:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 பிரச்சனை வந்தால் சிங்களவரோடு சேர்ந்து அடிப்போம், தீர்வு வந்தா பங்கு கேட்போம். அவர்களுக்கு ஏவலாளிகள், எங்களுக்கு பங்குதாரர். இப்போ ஒரு எழுதா விதி ஒன்று உண்டு. உதை பட்டவன் உதைத்தவனிடம்  மன்னிப்புக் கேட்டு, உதைத்த காலின் உளுக்கையும் போக்க வேண்டும். காலத்துக்கும் எங்களை அடிமைகளாக வாழ வழி செய்யுங்கள் என்று அனுப்பி இருக்கிறோம். அவர்களே, இவர்களை பார்த்து   நகைப்பார்கள். அவனவன் தனக்கு வோட்டுப் போட்டவர்களுக்கு சேவை செய்கிறார்கள். இதுகளுக்கு இங்க ஒரு பிரச்சனையும் இல்லை. அடுத்தவன் சோலி பாக்க வெளிக்கிட்டிட்டுதுகள்.  தாங்கள் இன்னொரு பிரச்சனைய இழுத்துக்கொண்டு வருகுதுகள். அப்பதானே ஏமாளியள் நாங்கள் தொடர்ந்து வோட்டுப் போடுவோம். இந்தப் பெரிய மனிசர் ஒண்டை புரிஞ்சு கொள்ள வேணும். "தனக்குக் கண்டுதான் பிறர்க்குத் தானம்."  யாரும் யாருக்கும் தவறு செய்யவில்லை தமிழர் மட்டும்தான் எல்லாருக்கும் அடிக்கிறான், வெட்டுறான், விரட்டுறான். இனம் அழிஞ்சு போச்சுது இவைக்கு மன்னிப்பு ஒன்றுதான் பாக்கி. அவை மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சு போயிடும். இனப்பற்று இல்லாததெல்லாம் இனத்தின் தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு அடுத்தவன் என்ன செய்தான் ...
அதற்கு அவன் என்ன தியாகம் அர்பணிப்பு செய்தான் என்பது முக்கியமில்லை 

தாம்தான் வெள்ளையன் பிள்ளை என்ற நினைப்பில் வெள்ளையடிப்பதே பிழைப்பாய் போச்சு.

முஸ்லீம்கள் வெளியேற்ற பட்டதற்கு புலிகள் மன்னிப்பு கேட்டார்கள்.
அது பிழை இல்லை என்றால் ....? ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்.

செய்வது பிழை என்பது செய்யும்போதே தெரியும் ....
அந்த பிழையை கடந்து செல்ல வேறு வழியோ .. பலமோ புலிகளிடம் இருக்கவில்லை.

முஸ்லிம்கள் இறந்துபோகவேண்டும் ....
முஸ்லிம்கள் அழிந்து போகவேண்டும் 
என்று வெளியேற்றப்படவில்லை.
அவர்கள் வீடுகளை அபகரித்து தமிழர்கள் கைப்பற்ற வெளியேற்றப்படவில்லை. 

அப்போதைய யாழ் முற்றுகையை முறியடிக்க ..
அதுவே ஒரே  வழியாக இருந்தது.

புலிகளுக்கு ...... பொறம்போக்கு புழுக்கள் பாடம் எடுக்க முடியாது.
புலி காட்டில் வேட்டையாடித்தான் உயிர்வாழ முடியும்.
புழுக்கள்போல ஒட்டுண்ணி வாழ்வை புலிகள் கற்றுகொள்ள தேவை இல்லை.
அது காட்டில் வாழும் புலிகளுக்கு பயன் பாடாது. 

இங்கு சிலர் எதோ தாம்தான் நீதிவான் மாதிரி வாயாலே வடை சுடுவதை யாரும் செய்யலாம்.
ஒரு திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து இனத்தை காப்பது 
என்பதை புலிகளால் மட்டுமே செய்ய முடியும்! செய்தார்கள்.
ஆறு அறிவும் ஒழுங்கா வேலை செய்தால் அது புரியும்.

நாளையே இலங்கையில் முஸ்லீம்களுக்கு ஒரு அழிவு வந்தால் 
நாம்தான் கைகொடுப்போம் ..... நாம் அங்கு இருப்போம் 
சிங்களவருக்கு அழிவு வந்தாலும் அங்கும் இருப்போம்.
இந்த வாயால வடை சுடும் கூட்டம் எண்ணெய் சட்டிக்கு பக்கத்தில்தான் இருக்கும் 
அங்கு இருந்தால்தான் .. சுடமுடியும். 

இலங்கைத்தீவில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பிலும் தவறுகள் உண்டு என்றால் அனைவரும். தமது தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அதற்கு பரிகாரமாக புதிய நீதியான அரசியல்தீர்வை உருவாக்க கூடிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெளிவாக நான் குறிப்பிட்டதை திரு ஜஸ்ரின் அவர்கள்  பரம்பரை பகையை வளர்ப்பதாக நான் கூறுவதாக பொருள் கொண்டால் நான் அதற்கு என்ன செய்ய முடியும்.  

அப்படி திசை மாற்றினால்தான் ....
அவரக்ளாலும் அவிக்க முடியும் 
அதை கண்டு கொள்ள கூடாது.

ஒரு இனத்தையே துவம்சம் செய்து .... எறிந்து விட்டிருக்கிறார்கள் 
இனியும் நாம்தான் மரண  படுக்கையில் இருந்து மன்னிப்பு கேட்கவேண்டும்?

கண்ணை நோக்கி தூசு வந்தால் ... இமை தானாக மூடிக்கொள்ளும்.
இப்ப தூசிக்கு நொந்துவிட்டது என்று இமையை வெட்ட ஒரு கூட்டம் புதுசா கிளம்பி இருக்கு.

பார்த்து பரிதாப படுவதை தவிர வேறு வழியில்லை என்றுதான் எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
 
'இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும்
 
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. அதனை நினைவுபடுத்துவதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், மிகவும் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன என்று சொல்லக்கூடியளவுக்குக் காணப்படுகின்றன.

தமிழர்களை வெளியேற்றி ஒல்லாந்தர் கட்டிய கோட்டை அருகே 
வியாபாரம் செய்யவந்து முலீம்கள் தங்கினார்கள் ...... அது பற்றி பேசினால் அது பயங்கரவாதம்.
இப்படி ஏதும் பேசினால் .... தங்கமும் விருதும் கொடுப்பார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள், பத்தி எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள், அரட்டை இடங்களென, முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. 25 வருடப் பூர்த்தியையொட்டி மாத்திரம் இவை இடம்பெறுகின்றனவா என்றொரு கேள்வி இருந்தாலும், இவ்வாறான கலந்துரையாடல்கள், ஆரோக்கியமானவை. ஏனெனில், திறந்த கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களுமில்லாத சமூகம், தேங்கி நிற்கவே செய்யும்.

2009 இல் இருந்து நீங்கள் செய்யும் ப்கிர்வுகளால்தான் இனமே மிதந்து கொண்டு இருக்கிறது.
அதை கண்கூடாக பார்ப்பதால் எப்படி மறுக்க முடியும் ?

அண்மைய நாட்களில், இரண்டு முக்கியமான அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துத் தான், இவ்விடயத்தை மேலும் பேசுபொருளாக மாற்றியிருக்கிறது என்று கூறலாம். அதிலொன்று, அரியநேத்திரன் தெரிவித்த கருத்து. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை 'இனப் பாதுகாப்பு' என்று அவர் வர்ணிக்க, அங்கு இடம்பெற்றது 'இனச் சுத்திகரிப்பு என நான் முன்பிருந்தே சொல்லி வருகிறேன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை' என்றவாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

விலையை சொல்லி எதை எழுதி அவர்கள் கொடுத்தாலும் அவர் வாசிப்பார்.
அதை கடந்த ஐ நா பிரரைனையுடன் எல்லோரும் தெரிந்து கொண்டார்களே ?

கூட்டமைப்பிலிருக்கின்ற முற்போக்காளர் எனப் பொதுவாகக் கருதப்படும் சுமந்திரனின் கருத்து, முஸ்லிம் மக்களிடத்தே பெருமளவு வரவேற்பைப் பெற்றிருந்ததோடு, அவர் மீது விமர்சனம் கொண்டோர் கூட அவரது கருத்தைப் பாராட்டுமளவுக்குக் காணப்பட்டது. ஆனால், அதற்கு விமர்சனங்களும் இல்லாமலில்லை.

இப்படி வள்ளுவரே குறள் சொல்லவில்லை .....

உண்மையை சொன்னால் அயோக்கியபால் வள்ளுவர் வடிக்கவே இல்லை.
பின்ன எப்படி பாராட்டாமல் இருக்க முடியும் ?

இருக்க, சுமந்திரனின் கருத்தின்போது, 'சட்ட வரைவிலக்கணத்துக்கமைய' என்ற பதத்தை அவர் தெளிவாகப் பயன்படுத்தியிருந்தார். ஆகவே, எவ்வாறான வரைவிலக்கணம் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்பது பொருத்தமானது. ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக்கணத்தின்படி, 'கட்டாயப்படுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக, வழங்கப்பட்ட பிரதேசமொன்றிலிருந்து இன அல்லது மதக் குழுவொன்றை வெளியேற்றி, அதை, இன ரீதியாக ஓரினமாக மாற்றுதல்' என இனச் சுத்திகரிப்பை வரைவிலக்கப்படுத்துகிறது.

அம்மாடி !
அப்படியா சங்கதி ?
நல்லவேளை ...... தமிழர்கள் தாமாகவே இடங்களை விட்டு வெளியேறியதால் 
அது இன அழிப்பு என்ற சட்டதிட்குள் வரவே வராது ....

இல்லையென்றால் பெரிய அளவில் சிங்களவர்கள் மாட்டி இருப்பார்கள் சட்டதிட்குள். 

இதை இலகுவாக, 'குறித்த பிரதேசத்தில் பலமாகக் காணப்படும் இனக் குழுவானது, அப்பிரதேசத்தை ஓரினத்துக்குரிய இடமாக மாற்றும் நோக்குடன் அங்குள்ள இன அல்லது மதக் குழுக்களைக் கட்டமைப்பு ரீதியாகக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுதல்' எனத் தெரிவிக்கலாம். மேற்கூறப்பட்ட வரைவிலக்கணங்களின்படி, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது இனச் சுத்திகரிப்பு என்ற சுமந்திரனின் கருத்துச் சரியாகிறது.

1983இல் தமிழர்கள் கொழும்பில் இருந்து யாழுக்கு சுற்றுலா வந்தார்கள். 
அவர்களை பார்த்து பொறாமையால் பின்பு ....
எல்லைபகுதி தமிழர்கள் எல்லோரும் கிழக்கு மாகாணத்தில் 
உல்லாச பிராயணிகள் ஆகிவிட்டார்கள். 

திடீரென எதற்காக இந்த விவாதம் அல்லது சொற்களில் என்ன இருக்கின்றன என்ற கருத்து எழலாம். இவ்வாறான சொற்பிரயோகங்கள், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவைப் பாதிக்கலாம் எனவும் பழைய விடயங்களை மீண்டும் மீண்டும் ஆராய்வதென்பது, எந்த விதத்திலும் ஆரோக்கியமானதன்று என்ற கருத்தும், தமிழர்கள் பக்கத்திலிருந்து சில தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றது. அத்தோடு, முஸ்லிம்கள் கூட, இனச் சுத்திகரிப்பு என்ற வார்த்தையைக் கோரவில்லையெனவும் எனவே இவ்வார்த்தைப் பிரயோகம் தேவையற்றது எனவும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இவளவு நாளும் சுமத்திரன் போல அவரும் உண்மைக்கு மட்டும்தான் வாய் திறப்பார் 
மகிந்த போனதில் இருந்து சில பொய்களை அப்ப அப்ப சொல்கிறார் போல ??

முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மைக்காலத்தில், அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லையென்பது உண்மையானது தான். ஆனால், இவ்விடயத்தை முஸ்லிம்கள் பக்கத்திலிருந்து ஆராய்வதற்கு முன்னர், தமிழர்களின் பக்கத்திலிருந்து ஆராய்வது முக்கியமானது, அவசியமானது.

போனதைவிட 3மடங்கு மட்டுமே திரும்பி இருக்கு 
அதை ஒரு 10 மடங்கு ஆக்குவது என்றால் .... இரவு பகலாக நாம் முன்னெடுக்க வேண்டும். 

எங்களுக்கும் கட்டுரை பிழைப்பு வேண்டுமல்லவா ?

சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில், கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இனமாக, தமிழ் இனம் காணப்படுகின்றது. உச்சபட்ட ஒடுக்குமுறைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளான இனம் என்ற அடிப்படையில், பெரும்பான்மையினரால் அல்லது அதிகாரம் படைத்தவர்களால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் என்பதன் அடிப்படையில், ஒடுக்குமுறையில் வலிகளைப் புரிந்த இனமாக தமிழ் இனம் காணப்பட வேண்டும்.

கொஞ்சம் புதுசா இருக்கு .....
என்ன ஒடுக்குமுறை ?
என்று விரிவாக எழுதினால் வாசிக்கலாம்.
நாம் உல்லாசா பிரயாணம் போவோம் .... அங்கு சோறும் கறியும் இருக்காது 
ஜப்பான் போனால் சுசி நுடில்ஸ் இருக்கும் 
அதெல்லாம் ஒரு ஒடுக்குமுறையா ?  சரியா விளங்கவில்லையே ?

ஆகவே, தமிழர்கள் மீது புரியப்பட்ட ஒடுக்குமுறைகள், கொடூரங்கள் பற்றிய கோரிக்கைகள் எழுப்பப்படும் அதேவேளையில், தமிழர்களால் அல்லது தமிழர்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள், கொடூரங்கள் பற்றியும் ஆராய்வது தான் பொருத்தமானது.

ரொம்ப பெரிய வார்த்தை என்றாலும். மிக தாழ்வாக சொல்லும் உங்கள் 
வெள்ளை மனதை இந்த இடத்தில் பாராட்ட வேண்டும்.
அதைப்பற்றி அலட்டுவதே கால சிறப்பு ஆகும். 
ஏன் என்றால் இந்த அலட்டல் .... வெளியேறிய போன பல முஸ்லீம் மக்களுக்கு 
2009இல் இருந்து கஞ்சி கடலை வடை என்று வழங்கி வருகிறது. 

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு, அவ்வமைப்பு அழிக்கப்படும்வரை, உறுதியான மன்னிப்பொன்றைக் கோரியதில்லை. வன்னியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் 'மன்னிப்பு' என்ற வார்த்தையை அன்டன் பாலசிங்கம் பயன்படுத்தியிருந்தாலும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுத் தவறென்பதும் வருத்தம் தெரிவிக்கிறோம் என்பதும் முதற்படியென்ற போதிலும், 'எம்மால், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு, நாம் மன்னிப்புக் கோருகின்றோம்' என்பது தான், வெளிப்படையான மன்னிப்புக் கோரலாக இருந்திருக்க முடியும்.

வார்த்தைகளில் அன்டன் பாலசிங்கம் அவர்கள் 
சங்கர் சீமெந்தை பாவிக்கதது மிக பெருத்த தப்பு.
உறுதியா எப்படி சொல்வது என்று ..... சொல்லிகொடுக்க 
அதாவது .....
வார்த்தைகளில் சங்கர் சீமெந்தை எப்படி கலப்பது என்ற 
கலப்பட வித்தை அவருக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம் இல்லையா ?
உங்களை போன்ற அறிவு !
ஒரு சில மனிதருக்கு மட்டுமே கடவுளின் படைப்பில் உண்டு.
மீதி பேருக்கு ஆறு அறிவு மட்டுமே உண்டு. 

தற்போது அவ்வமைப்பு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழ் மக்களின் பெயரால் செய்யப்பட்ட அத்தவறுஃ கொடூரத்துக்கு, தமிழ் மக்களால் செய்யப்பட வேண்டிய பணிகள் இருக்கின்றன. தமிழர்களில் எல்லோருமே அந்த வெளியேற்றத்தை ஆதரித்திருக்கவில்லை, சிலர் அதற்கெதிராகத் தங்கள் குரலை எழுப்பியிருந்தனர். ஆகவே, விடுதலைப் புலிகள் செய்ததொன்றுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனமும் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற வாதம் முன்வைக்கப்படலாம். மேலோட்டமாகப் பார்க்கையில், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாதம் போலவும் தோன்றக்கூடும்.

ஆனால் அப்படி இல்லை .....
ஒட்டுமொத்த தமிழரும் யாழுக்கு சென்று முஸ்லீம்களை கலைத்துவிட்டு.
இப்போ புலிகள்தான் என்பது எப்படி பொருந்தும் ?
ரொம்ப தப்பு இல்லையா ? 

எல்லாவற்றையும் கீழ்ஓட்டமாகவும் பார்க்க வேண்டும்.
காக்க வந்து அதை கிண்டு கிளறுவதை போல 

ஆனால், அந்தக் கொடூரம் புரியப்பட்டது, தமிழ் மக்களின் பெயரால். அந்தக் கொடூரத்துக்கு, தமிழ் மக்களினுடைய ஆதரவு, கணிசமானளவுக்கு இருந்ததென்பது உண்மை. வெளியேற்றப்படுவதற்கான நேரடியாக ஆதரவாக இருந்திருக்காவிட்டாலும் கூட, அதை நியாயப்படுத்தியதன் மூலமாக, அந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே, அச்செயலுக்கான பொறுப்பை ஏற்காவிட்டாலும் கூட, தவறை ஏற்பதில் தயக்கங்கள் இருக்கத் தேவையில்லை.

வெளியேற்றுவது எனும் முடிவு ...
தமிழ் நீதிமன்றில் தீர்பாகியத்தை முதலில் ஞாபகபடுத்த வேண்டும். 

ஏனென்றால், அந்த வெளியேற்றத்தை நியாயப்படுத்துகின்றோம் என்ற பார்வையில், 'முஸ்லிம்கள் கெட்டவர்கள்', 'முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள்' என, வடக்கின் பல பகுதிகளில், சிறு பிள்ளைகளுக்கான 'மாற்றப்பட்ட' வரலாறொன்று திணிப்படுவதை நாம் அறிவோம். அவ்வாறான தவறான, மோசமான சித்திரிப்புகள் கொண்ட சமூகத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமைப் பற்றிக் கலந்துரையாடுவதென்பது, வேடிக்கையானது.

மா பாவிகள் !
இப்படி வேறு கதை கட்டி விட்டிருக்கிறார்களா ?
முஸ்லீம்கள் காட்டி கொடுத்தார்களா ?
இது புலிகள் எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லை என்பது போன்ற 
குருட்டுதனமாகிவிடும் அபாயம் இருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். 

மறுபுறத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்தத் தவறைஃகுற்றத்தை ஏற்றுக் கொள்வதனூடாக மாத்திரம், அவ்வமைப்பின் அத்தனை நடவடிக்கைகளும் அதன் உருவாக்கமும் அதற்கான காரணமும், தவறாகிப் போய்விடாது. எந்தவோர் அமைப்பும் எந்தவோர் இயக்கமும், தவறுகளின்றி இயங்கியதில்லை. ஆகவே, இத்தவறை ஏற்றுக் கொள்வதால், தமிழீழ விடுதலைப் புலிகளின் 'நற்பெயர்' கெட்டுவிடும் என அஞ்சுவோர், நீண்டகால நோக்கில் சிந்திப்பது சாலச்சிறந்ததாக இருக்கும்.

குறைஞ்ச கால நோக்கில் சிந்திக்கவே இவளவு விளங்குது ....
இதில நீண்ட காலமா ??
நாடு தங்குமா ?

பழைய விடயத்தைக் கிளறி எடுப்பதால், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படலாமென்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இந்த விடயத்தை மூடி வைத்து மூடி வைத்து, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சந்தேகங்களற்ற, வெளிப்படையான உறவொன்று காணப்படுகின்றதா எனக் கேட்க வேண்டிய தேவையிருக்கிறதல்லவா? வெளிப்படையான, இரு தரப்பும் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டு, பகிரங்கமான கலந்துரையாடலில் ஈடுபடுவதைப் போன்ற, பயன்தரக்கூடிய, நீண்டகாலத்துக்கான தீர்வொன்றுள்ளதா?

அதுதான் தாம் செய்த தவறுகளுக்கு முஸ்லீம்கள் நாளும் நாளும் 
கருத்து அரங்கு அது இது என்று செய்கிறார்கள் 
அவர்கள் கொலை செய்துபோட்ட பல தமிழர்களை உயிர்த்து எழுப்பி விடுகிறார்கள் 
மனிப்பு என்று காத்தான்குடியில் சங்கர் சீமேந்தில் கலந்து பள்ளியில் பாடுகிறார்கள்.
நாங்கள் மட்டும் இப்படியே கிடந்தால் எப்படி உறவு உருவாகும் ?

இதில் நகைப்புக்குரிய விடயமென்னவெனில், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தான முழுமையான விசாரணைகள் வேண்டும், அவற்றைப் பற்றிய முழு விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வைத்துக் கொண்டு தான், இந்த விடயத்தைக் கிளறுவது தேவையற்றது, முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்த்தால் போதுமானது என, தமிழர்களில் ஒரு தரப்பில் கோரிக்கை இருக்கிறது. 'இன ஒற்றுமைக்காக, நடந்ததை மறந்து, ஒன்றாகச் செயற்படுவோம்' என்ற சிங்களத் தரப்பின் (குறிப்பிட்ட பிரிவினர், விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க வேண்டியது) கோரிக்கையை, 'முடியாது. உண்மை வெளிப்படுத்தப்பட்டாலேயே, உண்மையான இன ஒற்றுமை ஏற்படும்' எனத் தெரிவிக்கும் குறித்த தரப்பினர், சிங்களத் தரப்பின் அதே வாதத்தை, முஸ்லிம்கள் விவகாரத்தில் மாத்திரம் முன்வைப்பது, இரட்டை நிலைப்பாடேயொழிய வேறொன்றுமில்லை. பிரபலமான நகைச்சுவைமொழியில் சொல்வதானால், எங்களுக்கு என்றால் இரத்தமும் அவர்களுக்கு என்றால் தக்காளிச் சட்னியும் என்பது போல் இந்தக் கருத்தும்.

இது எல்லாம் நாம் எழுத வேண்டியது .......
அதுதான் எழுதுற வேலையை முழுசா குத்தகை எடுத்துவிட்டீர்களே ..
இனி செக்கு என்ன ? சிவலிங்கம் என்ன ? 

ஆகவே தான், இவ்விடயத்தில் தமிழர் தரப்பின் முழுமையான அர்ப்பணிப்பும் செயற்பாடும் தேவைப்படுகின்றது. அது, உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்தே ஆரம்பிக்கின்றது.

எனது தரப்பில் நான் ஏற்றுகொள்கிறேன் 
முஸ்லீம்கள் யாழில் இருந்து வெளியேற்ற பட்டார்கள் என்ற யாருக்கும் தெரியாத பரம ரகசியத்தை. 
அன்னையின் கட்டுரை வாசித்த பின்னர் நான் அறிந்து விட்டேன் என்பதை 
இத்தால் ஏற்றுகொள்கிறேன் !

தவறுகளை ஏற்காத மனிதர்களால், அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படாது. இடம்பெற்றது மோசமான தவறென்பதை ஏற்றுக் கொள்ளும்போது தான், அதற்கான பரிகாரங்களை வழங்குவதற்கான முதற்படிகளை ஏற்படுத்த முடியும். மறைத்து வைத்திருக்க முயலும் வரலாறுகள், ஒரு கட்டத்தில் பாரிய பூதாகாரமான விளைவுகளுடன் வெளிப்படுமென்பது, நாம் அனைவரும் கண்கூடாகக்கண்டது தான்.

அதுதான் சிங்களவர் படும் பாட்டை நாம் கண்களாலேயே பார்கிறோமே ?
செய்த வற்றுக்கு இப்படியும் தண்டனையா ?
கடவுளுக்கு இந்தளவு வக்கிர குணம் கூடவே கூடாது.
சிங்களவர்கள் இந்த தண்டனைகளில் இருந்து கூடிய விரைவில் விடுவிக்க படவேண்டும் 
என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்!

- See more at: http://www.tamilmirror.lk/158446/-இனச-ச-த-த-கர-ப-ப-ம-தம-ழர-கள-ம-#sthash.SRhOCrZI.dpuf

முஸ்லிம்களை விடுதலை புலிகள் யாழில் இருந்து வெளியேற்றியது 1990 ம் ஆண்டில். 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுத்தினர் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் 20 வருடமாகிவிட்டது. 1995 ம் ஆண்டின் பின்னர் அவர்கள் யாழ்பாணதில் குடியேறுவதை விடுதலை புலிகளால் தடுத்திருக்க முடியாது. அவர்களது வீடுகளில் தமிழ் மக்கள் குடியேறவில்லை. விடுதலை புலிகளை தமிழ்மக்களை அந்த நிலங்களை அபகரிக்க விடவும் இல்லை.  அப்படியானால் அவர்களை அங்கு குடியேறவிடாமல் தடுத்தவர்கள் இலங்கை இராணுவத்தினரா? முஸ்லீம்கள்  நினைத்திருந்தால் 1995 ம் ஆண்டின் பின்னரே யாழ்பாணம் சென்று தாங்கள் முன்பு இருந்த தங்கள் வீடுகளில் குடியேறியிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதை தமிழருக்கு எதிராக அரசியல் ஆக்குகிறார்கள். சில பச்சோந்தி தமிழரும் புலிகளுக்கு எதிராக தமது உடம்பில் ஒடும் வக்கிரத்தை கொட்டுவற்காக அவர்களுக்கு ஜால்ரா போடுகிறார்கள்.

இலங்கை இராணுவத்தால் தமது வசிப்பிடங்களை விட்டு விரட்டப்பட்ட  தமிழ் மக்கள் இன்றும் அந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இராணுவம் அந்த இடங்களை விட்டு விலகினால் அடுத்த நிமிடமே அவர்களது வீடுகளுக்கு சென்று குடியேறிவிடுவார்கே தவிர அதை வைத்து அரசியல் செய்ய மாட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும் முஸ்லீம்களால் விரட்டப்பட்ட தமிழர்கள் பாடு அதோகதி தான். ஏனென்றால் அந்த இடங்களில் முஸ்லீம்கள் குடியேறிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வேண்டிய விடயம் ட்ரிங்கோ,

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று இலங்கையில் முஸ்லீம்களுக்குக் கிடைக்கும் அதிகாரங்களுக்கும்  
அங்கீகாரத்திற்கும் தமிழர்கள் தான் காரணம்.
வெகு விரைவில் வட கிழக்கில் இன்னொரு பாகிஸ்தான் உருவாக வாழ்த்துக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.