Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2015, 08:33.58 AM GMT ]
sumanthiran_aus_005.jpg
அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.  சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று  அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன் போது சுமந்திரனுக்கு எதிராக கூடியிருந்த இளைஞர்கள் தமது கருத்தை வெளியிட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திப்பதற்கும் சுமந்திரன் அங்கு சென்றிருந்தார்.

ஆனால் திடீரென அங்கு கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டதாகவும்,  இதன் போது அண்மைய நாட்களாக சுமந்திரனின் அரசியல் செயற்பாடானது, தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக புலம் பெயர் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள்  சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களின் உண்மையான தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தி களங்கப்படுத்துவதாகவே அமைந்திருப்பதாக  ஆவேசமாக பேசியுள்ளனர்.

இதன் பின்னர் வாய்த் தர்க்கம் ஒன்று ஏற்பட்டு, அங்கு பரபரப்பான சூழ்நிலை ஒன்றும் ஏற்பட்டது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இளைஞர் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் 7ம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், நீங்கள் இந்த சூழலில் இங்கே வந்தது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை இன்னும் சில இளைஞர்கள், சுமந்திரனிடம் எமது விடுதலைப் போராட்டத்தை பற்றி கொச்சையாக பேசுவதற்கு உமக்கு உரிமையில்லை என்று ஆவேசப்பட்டார்கள் என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அவுஸ்திரேலிய பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்னர் கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் பேசிய சுமந்திரன் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தான் தமிழ்ப் பிரதிநிதி என்ற வகையில் வெட்கித் தலைகுனிவதாக தெரிவித்திருந்ததுடன், முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது தமிழ் மக்கள் மௌனம் சாதித்தமை தவறானது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sumanthiran_aus_001.jpg

sumanthiran_aus_002.jpg

sumanthiran_aus_003.jpg

sumanthiran_aus_004.jpg

sumanthiran_aus_005.jpg

sumanthiran_aus_006.jpg

tamilwin.com

பாவம் சுமந்திரன்  லண்டனில் பவுன்சர் உள்ள கொட்டல் மாதிரி ஒன்றில் அவுசில் கூட்டம் வைத்திருந்ததால் இப்படி சுமந்திரன் வேண்டி கட்டியிருக்க தேவை வந்திருக்காது .

  • Replies 117
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை இப்படியான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதாலோ அல்லது அவரது கூட்டங்களை குழப்பவதாலோ ஒன்றும் நடக்கப்போவதில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

என்னைப் பொறுத்த வரை இப்படியான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதாலோ அல்லது அவரது கூட்டங்களை குழப்பவதாலோ ஒன்றும் நடக்கப்போவதில்லை. 

நீங்கள் சொல்வது 100 வீத உண்மைதான் மீரா சிங்கள அரசின் கைகூலி சுமந்திரன்க்கு  இதெல்லாம் பெரிய விடயம் அல்ல பாவம் அந்த இளையோர் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

எழுபதுகளில் இருந்து சிங்கள அரசின் கைக்கூலிகளுக்கும் தமிழர் நலன்களுக்கு எதிரானவர்களுக்கும் எதிராக வன்முறையை மாத்திரமே பயன்படுத்தி வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் போன்றோரின் திகதி குறித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்கள் சொல்வது 100 வீத உண்மைதான் மீரா சிங்கள அரசின் கைகூலி சுமந்திரனுக்கு  இதெல்லாம் பெரிய விடயம் அல்ல பாவம் அந்த இளையோர் .

பெருமாள் அவர்களே! அப்படியெல்லாம் சுமந்திரனைப் பற்றிச் சொல்லக்கூடாது. அவர் தாயுள்ளம் கொண்டவர். சிங்களமென்ன! முசுலீம்கள்மேலும் தாயைப்போன்று தூய அன்பு கொண்டவர்தான் திருவாளர் சுமந்திரன். :)

தன்னைப் பெற்ற தாயை கத்தியால் குத்திக் கிழித்த மகனுடைய கையிலும் காயம் ஏற்பட்டதாம். அந்தத் தாயோ! தன்வலியையும் பொருட்படுத்தாது, மகனுடைய கையில் ஏற்பட்ட காயத்தைக்கண்டு பதறி வருந்தினாளாம். சுமந்திரன் அவர்களையும், சிங்களமென்ன! முசுலீம்களும், எப்டிக் குத்திக் கிழித்தாலும், வலியைத் தாங்கிக்கொள்வார். ஆனால் குத்துபவர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் தாங்கவே மாட்டார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் மட்டுமல்ல.. யார் என்றாலும்.. உலகில் எங்கும் மக்களுக்காக உண்மையாகப் போராடியவர்களை கொச்சைப்படுத்த வெளிக்கிட்டால் இதுதான் நிகழும். 

இந்தச் சூழலை உருவாக்கியதும் சுமந்திரனே. 

  • கருத்துக்கள உறவுகள்

அடிவாங்கினால் வலியில் எல்லோரும் ஐயோ..! ஐயோ...! என்றுதான் கத்துவார்கள்.tw_astonished: tw_astonished:

அவுசில் அடிவாங்கிய சுமந்தினோ....!! "விக்கி ஐயாவை கட்சியைவிட்டு வெளியேற்று" என்று கத்துகிறாராம்.tw_tired:tw_weary:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அவுஸ் சிட்னியில் எனக்கு நடந்தது என்ன - விளக்குகிறார் சுமந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2015, 02:14.20 PM GMT ]
sumanthiran98.jpg
இனவழிப்பு நடக்கவில்லையென நான் சொன்னதாக ஒரு பொய்க் குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது.

இனப்படுகொலை பற்றி இலங்கைப் பாராளுமன்றத்திலே பேசிய முதலாவது நபர் நான்.

அந்த வகையில், இனப்படுகொலை நடக்கவில்லையென எந்தக் கால கட்டத்திலும் எங்கேயும் நான் சொன்னது கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் லங்காசிறி  24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.  சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று  அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன் போது சுமந்திரனுக்கு எதிராக கூடியிருந்த இளைஞர்கள் தமது கருத்தை வெளியிட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திப்பதற்கும் சுமந்திரன் அங்கு சென்றிருந்தார்.

ஆனால் திடீரென அங்கு கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டதாகவும்,  இதன் போது அண்மைய நாட்களாக சுமந்திரனின் அரசியல் செயற்பாடானது, தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக புலம் பெயர் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள்  சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களின் உண்மையான தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தி களங்கப்படுத்துவதாகவே அமைந்திருப்பதாக  ஆவேசமாக பேசியுள்ளனர்.

இதன் பின்னர் வாய்த் தர்க்கம் ஒன்று ஏற்பட்டு, அங்கு பரபரப்பான சூழ்நிலை ஒன்றும் ஏற்பட்டது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இளைஞர் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் 7ம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், நீங்கள் இந்த சூழலில் இங்கே வந்தது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை இன்னும் சில இளைஞர்கள், சுமந்திரனிடம் எமது விடுதலைப் போராட்டத்தை பற்றி கொச்சையாக பேசுவதற்கு உமக்கு உரிமையில்லை என்று ஆவேசப்பட்டார்கள் என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அவுஸ்திரேலிய பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்னர் கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் பேசிய சுமந்திரன் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தான் தமிழ்ப் பிரதிநிதி என்ற வகையில் வெட்கித் தலைகுனிவதாக தெரிவித்திருந்ததுடன், முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது தமிழ் மக்கள் மௌனம் சாதித்தமை தவறானது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின்.காம்

  • கருத்துக்கள உறவுகள்

வாயை ஒழுங்காக வைத்திருருந்தால் இப்படி நடக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரும் நம்பும் புத்திசாலி  வேஷம் இப்படி அடி வேண்டுது நேரதிட்க்கு ஒவ்வெரு கதை சொல்லி பிழைக்கலாம் என்றாலும் youtube ல் ஆதாரத்துடன் போட்டு உடைக்கின்றார்கள் சனி வக்கரிக்க தொடங்கிட்டுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலிய தமிழர்கள் தொடக்கி வைத்துவிட்டார்கள். இனி சிங்கன் போற வாற இடமெல்லாம் திருவிழா தான் happy0199.gif

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதன் மூலம்  அவுஸ்திரேலிய தமிழர்களுக்கு பெரும் தலைகுனிவை அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தி விட்டனர்.

எழுத்தாளர் முருகர் குணசிங்கத்தின் மருமகனான யோகராஜா தான் இதற்கு தலமை வகித்து உள்ளார். இவர்கள் தாமாக போராட்டம் நடத்தி இருந்தால் பரவாயில்லை. பாவங்கள் அண்மையில் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறிய இளைஞர்களை பலிக்கடாவாக்கி இருக்கின்றனர்.

முகாமில் இருந்து வெளியேறி வெளி இடங்களில் தங்கி உள்ளவர்களின் தற்காலிக விசாவினை மிகத் தீவிரமாக அவுஸ்திரேலிய அரசு பரீசிலித்து- அவர்களின் அகதி விண்ணப்ப கோரிக்கையினை நிராகரித்து கடிதங்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் கேட்டுக் கேள்வி இல்லாமல் நாடு கடத்தி விடுவார்கள் என்று அவுஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள் தெரிவித்தனர்.

நிரந்தர வதிவுடமை உள்ளவர்கள் அப்பாவிகளான அவர்களை பலிக்கடாவாக்குவதனை தயவு செய்து நிறுத்துங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

சுமந்திரனுக்கு தனது கருத்தினை கூறுவதற்கு உரிமை உள்ளது. அதனை நாகரீகமான முறையில் அணுகி இருக்க வேண்டும். இவ்வாறு ஆர்பாட்டம் நடத்தி நடைபெறவிருந்த விடயத்தினை குழப்பிய செயலானது எந்த வகையில் சரியானது?

துரோகி என்கின்ற பட்டத்தினை வழங்குவதற்கு புலி சார் தமிழ் அமைப்புக்கள் எந்த பல்கலைக்கழகத்தினை சார்ந்தவர்கள்?

சுமந்திரனை தெரிவு செய்த யாழ். மாவட்ட மக்கள் அவர் துரோகியா நல்லவரா என்பதனை தீர்மானிக்கட்டும். சுமந்திரனை தெரிவு செய்தது அந்த மக்கள் என்பதனை புலம்பெயர் புலிக் கூட்டங்கள் மறந்து விடக் கூடாது.

கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள வக்கில்லாதவர்கள் எல்லாம் பொறுப்பான அமைப்புக்களில் இருக்க தகுதி அற்றவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஈழத்தமிழன்...
தனக்கு சுதந்திரம் கேட்டால் அவன் புலி
தனிநாடு கேட்டால் புலி
எதிர்க்கருத்து சொன்னால் புலி
மாவீரருக்கு வணக்கம் சொன்னால் புலி
அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்டால் புலி
சொந்த கருத்துக்களை சொன்னால் புலி
உண்மையை சொன்னால் புலி
என்னாங்கடா இது

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஒரு ஈழத்தமிழன்...
தனக்கு சுதந்திரம் கேட்டால் அவன் புலி
தனிநாடு கேட்டால் புலி
எதிர்க்கருத்து சொன்னால் புலி
மாவீரருக்கு வணக்கம் சொன்னால் புலி
அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்டால் புலி
சொந்த கருத்துக்களை சொன்னால் புலி
உண்மையை சொன்னால் புலி
என்னாங்கடா இது

என்ன சொல்கிறீர்கள்?

சுதந்திரம் கேட்பவன் புலி இல்லையா? அப்படியானால் அடிமை வாழ்வு கேட்பவர்களா புலிகள்?

தனிநாடு கேட்பவர்கள் புலி இல்லையா? ஒன்றுபட்ட நாடு கேட்பவர்களா புலிகள்?

உண்மை சொல்பவர்கள் புலிகள் இல்லையா? பொய் சொல்பவர்கள் மட்டும் தானா புலிகள்?

10 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் போன்றோரின் திகதி குறித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று????

தேசிய தலைவர் தந்த "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்னாயிற்று? 

2 hours ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலிய தமிழர்கள் தொடக்கி வைத்துவிட்டார்கள். இனி சிங்கன் போற வாற இடமெல்லாம் திருவிழா தான் happy0199.gif

முல்லிவைக்காலில் திருவிழா பார்த்து முடிந்து வேறு திருவிழாக்கள் இல்லாமல் தவிக்கும் உங்களுக்கு தேவையானது தான்.

அனுபவியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்

கேள்வி : வடகிழக்கு தமிழரின் உரிமையுள்ள  பிரதேசமா?

சுமந்திரன் : ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை படித்து அதை பற்றி தெரிந்து கொள்ளவும் 

இப்படியான மொக்கை பதிலை அடுத்து   தொடர்ந்து அந்த இளையவர் நீங்கள் ஸ்ரீலங்கா அரசை நம்புகின்றிர்களா ?

அதற்குள் போல் சத்தியநேசன் தன் பருத்த உடம்புடன் அவ்விளைஞர்களுக்கு அண்மையாக சென்று கேள்வி கேடகவேண்டாம் என உறுமுகின்றார் சுமதிரன் ஆட்கள் பலத்த சத்தம்போட்டு இளையவரை கேள்வி கேட்க்க விடாது தடுக்கின்றனர் ,ஆனலும் அவ் இளையவர் விடுவதாய் இல்லை கடைசியில் சுமதிரன் நாங்கள் நம்பவில்லை என்கிறார் உடனே இளையவர் " அப்ப எப்படி அது செய்வம் இது செய்வம் என எங்களுக்கு உறுதி மொழி தருகின்றீர்கள் ?" இதை கேட்டு கூட்டம் மொத்தமும் சுமதுக்கு சார்பானவர்களும் சேர்ந்து கொள் என சிரிக்கின்றனர் .

வந்ததே கோபம் சுமதுக்கு அவ்விளையோரை பார்த்து நீங்கள் இங்கு இருப்பதெண்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் இல்லையென்றால் எழும்பிபோக வைக்கபடுவீர்கள் என எச்சரிக்கை செய்கின்றார் இதுதான் சும் ஜனநாயகம் .

5 hours ago, nirmalan said:

சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதன் மூலம்  அவுஸ்திரேலிய தமிழர்களுக்கு பெரும் தலைகுனிவை அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தி விட்டனர்.

எழுத்தாளர் முருகர் குணசிங்கத்தின் மருமகனான யோகராஜா தான் இதற்கு தலமை வகித்து உள்ளார். இவர்கள் தாமாக போராட்டம் நடத்தி இருந்தால் பரவாயில்லை. பாவங்கள் அண்மையில் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறிய இளைஞர்களை பலிக்கடாவாக்கி இருக்கின்றனர்.

முகாமில் இருந்து வெளியேறி வெளி இடங்களில் தங்கி உள்ளவர்களின் தற்காலிக விசாவினை மிகத் தீவிரமாக அவுஸ்திரேலிய அரசு பரீசிலித்து- அவர்களின் அகதி விண்ணப்ப கோரிக்கையினை நிராகரித்து கடிதங்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் கேட்டுக் கேள்வி இல்லாமல் நாடு கடத்தி விடுவார்கள் என்று அவுஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள் தெரிவித்தனர்.

நிரந்தர வதிவுடமை உள்ளவர்கள் அப்பாவிகளான அவர்களை பலிக்கடாவாக்குவதனை தயவு செய்து நிறுத்துங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

சுமந்திரனுக்கு தனது கருத்தினை கூறுவதற்கு உரிமை உள்ளது. அதனை நாகரீகமான முறையில் அணுகி இருக்க வேண்டும். இவ்வாறு ஆர்பாட்டம் நடத்தி நடைபெறவிருந்த விடயத்தினை குழப்பிய செயலானது எந்த வகையில் சரியானது?

துரோகி என்கின்ற பட்டத்தினை வழங்குவதற்கு புலி சார் தமிழ் அமைப்புக்கள் எந்த பல்கலைக்கழகத்தினை சார்ந்தவர்கள்?

சுமந்திரனை தெரிவு செய்த யாழ். மாவட்ட மக்கள் அவர் துரோகியா நல்லவரா என்பதனை தீர்மானிக்கட்டும். சுமந்திரனை தெரிவு செய்தது அந்த மக்கள் என்பதனை புலம்பெயர் புலிக் கூட்டங்கள் மறந்து விடக் கூடாது.

கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள வக்கில்லாதவர்கள் எல்லாம் பொறுப்பான அமைப்புக்களில் இருக்க தகுதி அற்றவர்கள். 

நிர்மலன் அவுஸை  சொறிலங்கா ரேன்சிலை கற்பனை குதிரையை தட்டி கதை சொல்றீங்க வெரி குட் .

எழும்பி கேள்வி கேட்பவனை எல்லாம் எப்ப பயங்கரவாதி ஆக்கினீங்க ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, Jude said:

தேசிய தலைவர் தந்த "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்னாயிற்று? 

தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் அதை ஆயுதபோராட்டத்தால் வெல்லுவோம்  இளைஞர்களை படையணி அமைப்போம் என்று அன்று சொன்னவர்கள் இன்றும் இருக்கின்றார்கள். போய் கேளுங்கள்.

இன்று அதைத்தான் இன்றைய இளைஞர்கள் அவுஸ்ரேலியாவில் கேட்க ஆரம்பித்திருக்கின்றார்கள். இது தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் அதை ஆயுதபோராட்டத்தால் வெல்லுவோம்  இளைஞர்களை படையணி அமைப்போம் என்று அன்று சொன்னவர்கள் இன்றும் இருக்கின்றார்கள். போய் கேளுங்கள்.

தேசியத் தலைவர் அகிம்சை போராட்டம் நடத்தவா படையணி அமைத்தார்? தேசியத் தலைவரையும் அவர் சொன்னவற்றையும் மறைக்க பார்க்கிறீர்களே? இன்னும் சில நாள் போனால் தேசிய தலைவரா? அப்படி ஒருவர் இருக்கவில்லையே? என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்

கலவரம் போன்று நடந்த காட்சிகள் பார்க்க மனது வலிக்கிறது.
மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும், சரத்துக்கும் செய்யவேண்டிய எதிர்ப்பு இப்போது நம்மில் ஒருவர் பக்கம் திரும்பி இருக்கிறது.  
இது தான் சொல்றது மற்றவர் உணர்ச்சிக்கு மதிப்பளிக்க வேணும் எண்டு.
மேடை கிடைத்துவிட்டதே என்று எதையும் கதைக்க வெளிக்கிட்டால் இது தான் நடக்கும்.
தனிப்பட்ட முறையில் அவர் கருத்துக்கு நான் விரோதப்பட முடியாது.
அரசியலில் இறங்கி தமிழ் மக்களின் பிரதி நீதியாய், மக்காளால் தெரிவு செய்யப்பட்டு இருக்கும் இவரின் கருத்துக்கும் என்னை போன்ற சாதா குப்பன், சுப்பன்  போன்றவரின் கருத்துக்கும் நிறையவே பின்விளைவுகள் உள்ளன என்பதை உணர்ந்தால் சரி.
சரி யாருப்பா இனி அடுத்த வெளிநாட்டு பயணம் வார புண்ணியவான் ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

அடிவாங்கினால் வலியில் எல்லோரும் ஐயோ..! ஐயோ...! என்றுதான் கத்துவார்கள்.tw_astonished: tw_astonished:

அவுசில் அடிவாங்கிய சுமந்தினோ....!! "விக்கி ஐயாவை கட்சியைவிட்டு வெளியேற்று" என்று கத்துகிறாராம்.tw_tired:tw_weary:

நாலுகால் வளர்ப்பு பிராணி ஒன்றுக்கு, உடம்பில்.... எங்கு அடி விழுந்தாலும், காலைத் தான் தூக்கிக் கொண்டு...  நொண்டி, நொண்டி ஓடும்.
அதே... மாதிரி, அப்புக்காத்து சுமந்திரனின்.... செயல் உள்ளது.  happy0199.gif

Edited by தமிழ் சிறி

சுமந்திரன் மீது கடுப்பானார் கல்பனா அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பெருமை கொள்ள வேண்டிய விடயம்!

சும் மின் வெளிநாட்டுச் சந்திப்புகளில் நான் அவதானித்தவை: சும் சொல்லும் கருத்துக்கு எதிர்  கருத்து தரவுகளோடு வைக்க யாருக்கும் முடியவில்லை!, ஒரு கேள்வி சும்மிடம் கேட்டால், அதற்குப் articulate ஆக பதில் வருகிறது. பதில் பெற்றவர் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை!  

இங்கே நாய்க்கு எங்க அடிச்சாலும் அது காலைத் தான் தூக்கும் என்ற கருத்து பலமுறை சொல்லப் பட்டிருக்கு. உண்மையில் இது இங்கேயும், சும் மின் சந்திப்புகளிலும் அவரை எதிர்க்கும் அதி தீவிர தமிழர்களுக்கே பொருந்தும். சும் எது சொன்னாலும் "அடே, எங்கட தூய தமிழ் தேசியப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டார்" என்ற நொய்ஸ் தான் முதலில் வருகிறது. இந்த நொய்ஸ் தான் "நாயின் கால்"!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

தேசியத் தலைவர் அகிம்சை போராட்டம் நடத்தவா படையணி அமைத்தார்? தேசியத் தலைவரையும் அவர் சொன்னவற்றையும் மறைக்க பார்க்கிறீர்களே? இன்னும் சில நாள் போனால் தேசிய தலைவரா? அப்படி ஒருவர் இருக்கவில்லையே? என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே?

5000 இளைஞர்களை தாருங்கள் சொட் கன்னோடு உள்ள சிங்கள இராணுவத்தை துரத்தி அடிச்சிட்டு.. ஓரிரவில் தமிழீழத்தை தருகிறேன் என்று அண்ணன் அமிர்தலிங்கத்தின் தங்கத் தம்பி யோகேஸ்வரன் கேட்டது.. அண்ணன் அமிர்தலிங்கம் அகிம்சை வழியில்.. தமிழீழம் எடுக்கவோ..??! 

உந்த கள்ளச் சட்டாம்பிகள்.. காலம் காலமா சிங்கள விசுவாசிகளாக.. ( ஏனெனில் சட்டம் லோகொலிச்சிலும்.. கொழும்பிலும்.. நாவலவிலும் தான் படிக்க முடியும். யாழ்ப்பாணத்தில் இன்னும் சட்டப்படிப்பு இல்லை. மட்டக்களப்பிலும் அதற்கு வாய்ப்பில்லை.)... இருந்து தமிழ் மக்கள் முன் அறிவாளிகள் என்ற போலிப் பாவனை மூலம்.. தோல்வி அரசியல் நடத்தியது தான் வரலாறு. அதில் தோல்வியை ஒத்துக் கொண்டு அந்தப் பழியை கடவுள் மேல போட்டது தந்தை செல்வா. மற்றவர்கள்.. சுருட்டியதோடு கவ்விய எலும்புகளோடு.. திருப்திப்பட்டு விட்டார்கள்.

தேசிய தலைவர் குறைந்தது ஒரு தமிழீழ நிழல் அரசையாவது நிறுவிக்காட்டிச் சென்றார். சொன்னதை செய்து காட்டினார். இறுதியில் உலகத்தை எதிர்க்க பலம் கேட்டும் கிடைக்காத நிலையில்.. தற்காலிகமாகத் தோற்றார். 

இப்போ.. அண்ணன் அமிர்தலிங்கம்.. அண்ணன் நீலன்.. அண்ணன் கதிர்காமர் வரிசையில்.. சொறிலங்காவின் யாப்பை கையில் வைச்சுக் கொண்டு.. சின்னக் கதிர்காமர் சும் கிளம்பி இருக்கிறார். இவர் இதுவரை அளித்த வாக்குறுதிகளில் வென்றது ஏதும் இல்லை. வாக்கு அரசியலாக்கப்பட்ட சம்பூர் மக்கள் கூட இன்னும் வீடு திரும்பவில்லை. திரும்ப வீடுகளே இல்லை. மூதூரில் மக்கள் குடியேறவே வாய்ப்பில்லை. இதுக்க இன சுத்திகரிப்பு... சுத்துமாத்து வேற. கேட்கிற கேள்விகளுக்கு யாப்பை பார் என்றவனைப் போல முட்டாள் அறிவாளி எவனும் இல்லை. சொறிலங்கா யாப்பை எதிர்த்து அதற்கு வெளியில்... தான் தமிழ் மக்கள் உரிமை கேட்கிறார்கள். இது கூடத் தெரியாதவன்.. தமிழ் மக்களின் பிரதிநிதி என்பது தமிழ் மக்களின் குருட்டு அரசியலோ என்றே எண்ணத் தோன்றுகிறது. tw_blush:

Edited by nedukkalapoovan

ஆச்சரியபட என்ன இருக்கு .இது எமக்கு புதுசா என்ன .எவர் என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் காட்டுமிராண்டிதனத்தை காட்டியே தீருவோம் என்றே கடைசிவரை நின்றே அழிந்தார்கள் .

அவர்ளே அப்படி என்றால் -------- பற்றி சொல்ல தேவையில்லை . போப் ரெயின் கூட்டதையே குழப்பினார்கள் .

இவர்களை இப்போ யார் கணக்கில் எடுகின்றார்கள் .நாட்டில் கதையை முடித்தாயிற்று ஓடி வந்த எச்ச சொச்சம் இப்படி கொஞ்சகாலம் ஆடிவிட்டு படுத்துவிடும் . 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தாயகத்திலும் மக்களால் எதிர்க்கப்பட்டவர். கள்ள வழியில் தேர்தலில் வென்றார். லண்டனிலும் இவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில்... இப்போ அவுஸில். 

தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் அரசியல் செய்ய வெளிக்கிடும் எந்த வெண்ணையும்... இப்படி அடி வாங்குவது தவிர்க்க முடியாதது. சிங்களவனை வார்த்தைகளால் குசிப்படுத்தி.. தமிழர்கள் உரிமை பெற முடியும் என்றால்.. அதனை எப்பவோ.. பலர் சாதித்திருப்பர். இப்ப சும் தமிழ் மக்களுக்கு புதுசா படம் காட்டத் தேவையில்லை. சிங்களத்தின் மீது வெளியார் அழுத்தம் இன்றி தமிழர்களுக்கு கருவாடு காயவிடக் கூட உரிமை கிடைக்காது. இதுதான் யதார்த்தம்.

சம்.. சும் கும்பல் சுய ஆதாய அரசியலை விட்டு மக்கள் உணர்வுகளை உள்வாங்கி செயற்படனும். இறுதியாக சம் அரசியல்கைதிகள் விடுதலையில் வழங்கிய வாக்குறுதியும் தோல்வி கண்டுவிட்டது. கூட்டமைப்பே அது புகழ்பாடும் சிங்கள அரச நிர்வாகத்தை முடக்க..ஹர்த்தாலுக்கு அழைக்கும் நிலை தோன்றி உள்ளது.

ஆனால்.. இன்னும் சும் தேவாரம் பாடிகளுக்கு விடியவே இல்லை. நேற்றைய இரவில் கண்ட கனவில் கிடக்கிறார்கள்.. அதே தேவாரத்தோடு. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.