Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்?

29 நவம்பர் 2015

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்?

உலகத் தமிழர் பேரவையின் தலைவர், அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அடுத்த வருட ஜனவரி மாத முற்பகுதியில் இலங்கை செல்லவுள்ளதாக இலங்கை அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இலண்டனில் தங்கியிருக்கும் அருட்தந்தை இமானுவேல் அடிகளார்,  கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் நாடு திரும்ப தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இன்றைய அரசினால் அத்தடை நீக்கப்பட்ட காரணத்தினால் அவர் இலங்கை திரும்புவதற்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

அத்துடன் அவரது வருகையை இலங்கை அரசாங்கமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை அரச பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

சர்வமதத் தலைவர்கள் ஊடாக இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இன்றைய அரசாங்கத்தின் முயற்சியில் தமிழ்த் தரப்பின் சார்பில் அருட்தந்தை இமானுவேல் மிக முக்கிய வகிபாகம் வகிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

இலங்கை செல்லவுள்ள அருட்தந்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத் தரப்பிற்குமிடையில் இணைப்பாளராக இருந்து செயற்படும் அதேவேளை ஏனைய மதத் தலைவர்களுடனும் கலந்துடையாடி அவர்களுடனும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126404/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பாதிரிகள் ..

ஒருவர் யாழ் இடப்பெயர்வோடு .. லண்டனில் கால் பதித்து கனடா சென்றவர் ... அப்போது சந்தித்தபோது, தான் தலைவரின் செய்தியோடு வந்திருக்கிறேன் என்றார்! .. எந்த இழப்பு வந்தாலும் விடாதையுங்கோ என ஜேசுநாதர் மீதும் சத்திய வாக்காக சொன்னார்! ... இன்று??? 

மற்றைய பாதிரி ... முல்லைத்தீவு இராணுவ முகாம வெற்றிகரமான அழிபோடு .. ஜேர்மனில் நிரந்தரமாக காலூன்ற முன் லண்டன் ... தலைவரின் செய்தியோடு வந்தேன் என்றார்! .. முல்லைத்தீவு தாக்குதலை ஜேசு சாட்சியாக ... ஒலிப்பதிவு செய்த நேர்முக வர்னணை கேட்டதுபோல் .. பிரித்து மேய்தார்! ...

... இன்று எம்மையெல்லாம் பிரித்து மேய்கிறார்!கள்

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படுவது பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்யும். அதற்காக அந்த அன்பர்கள் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவார்கள்! போராடிக்கொண்டே இருப்பார்கள்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி விழுந்தாராம். மிக விரைவில் இவரும்.. ஏறி விழுந்து.. இருக்கிற பெயரையும் கெடுத்துக்கிட்டு.. பரமபிதாவை பாவங்களோடு அணுகப் போகிறார். அவ்வளவு தான். :rolleyes:tw_blush:

ஆசை யாரை விட்டுது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அவர்கள் போராடுகின்றார்கள்! இனி போராட்டம் மென்மேலும் வலுப்பெறும்!  <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்கும் உலகத்துக்கும் தெரிஞ்ச பிரச்சனை.

ஊராலையும் உலகத்தாலையும் தீர்க்கேலாத பிரச்சனையை சாமி போய் தீர்த்து வைக்கப்போகுதாம்.

இதுக்கை கூட்டமைப்புக்கும்  அரசாங்கத்துக்கும் இடையிலை இவர் நிண்டு கரண்ட் குடுக்கப்போறாரம்...அய்யோ...அய்யொக்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே கூப்பிட்டு லண்டனில் சுமந்திரனுடன் ஒரு கூட்டம் நடந்த திரியில் 
நான் என்ன எழுதினேனோ ....
அது அங்கம்  அங்கமாக நடக்கிறது ...

பாலஸ்தீனம் போல அவர்கள் தடம் புரள தேவை வராது ...
இனத்தை விற்று வாழ வரிசையாக தமிழர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். 

ஒரு கட்டத்தில் சில நேரம் ...
இவர்கள்  சொல்வது போலவே இறுதியில் நன்மை செய்வார்கள் என்று 
நம்பி ஏமாறுகிறார்களோ தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

இமாலுவேல் அவர்கள் தமிழருக்கு ஏதாவது செய்யணும் என்றநிலையில் மதிக்கப்படுபவர்

சிங்களம் இதில் நரித்தனங்களைச்செய்யும் என்பது தெரிந்தது தான்

இதற்குள் தமிழர்கள் எப்படி தமக்குத்தேவையானவற்றை

சாதுரியத்துடன்  பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்....??

அதுவே கேள்வி.

நல்லது நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இணைப்பாளரா????இரண்டு பிரிவும் பயங்கரமாய் சண்டை பிடிக்கினம்.இவர் விலக்குப் பிடித்து சமாதானம் செய்யப்போறாரா!!!!சம்சும் இரண்டுபேரும் அரசாங்கத்தோடு படுத்துக் கிடக்கினம்.ஊரை ஏமாற்றமாக பாதிரி வெளிக்கிட்டுட்டாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

நல்லவிடயம்

இமாலுவேல் அவர்கள் தமிழருக்கு ஏதாவது செய்யணும் என்றநிலையில் மதிக்கப்படுபவர்

சிங்களம் இதில் நரித்தனங்களைச்செய்யும் என்பது தெரிந்தது தான்

இதற்குள் தமிழர்கள் எப்படி தமக்குத்தேவையானவற்றை

சாதுரியத்துடன்  பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்....??

அதுவே கேள்வி.

நல்லது நடக்கட்டும்.

நீதியாய் கேட்டம்
நேர்மையாய் கேட்டம்
பசியிருந்து கேட்டம்
பட்னியிருந்து கேட்டம்
சத்தியாக்கிரகம் இருந்து கேட்டம்
மௌனமாயிருந்து கேட்டம்
தாடி வளர்த்து கேட்டம்
சிறை சென்று கேட்டம்
தாழ்ந்து கேட்டம்
குனிந்து கேட்டம்
குட்டக்குட்ட கேட்டம்
குறுகி கேட்டம்
கோழைகள் போல் கேட்டம்
குறுகியது வலிக்க..
நிமிர்ந்து கேட்டம்
குனியாமல் நிமிர்து கேட்டம்
தட்டினவனை தட்டி கேட்டம்
முட்டினவனை முட்டி கேட்டம்
முடியாதவனை முடியுமா என கேட்டம்
முடியாதவன் காலடிக்கு வந்த போதும் கேட்டம்
செய்ய முடியுமென காட்டினோம்
இறுதியில்????
 

பாதர் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றார் .

இவர் வரிசையில் சொந்த இனத்திற்கே பாவம் செய்த அனைவரும் வருவார்கள்.

வரத்தான் வேண்டும் .

நாங்கள் மன்னிப்போம் . 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, arjun said:

பாதர் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றார் .

இவர் வரிசையில் சொந்த இனத்திற்கே பாவம் செய்த அனைவரும் வருவார்கள்.

வரத்தான் வேண்டும் .

நாங்கள் மன்னிப்போம் . 

தேவனே என்னைப்பாருங்கள்..........

வரவேற்க்கப்பட வேண்டிய விடயம். எம் மக்களின் முடிவுறா துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை கண்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, நிழலி said:

வரவேற்க்கப்பட வேண்டிய விடயம். எம் மக்களின் முடிவுறா துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை கண்டால் சந்தோசம்.

என்னது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வா?
என்ன தம்பி தமாசு கிசீசு பண்ணுறீங்களா?
ஒன்று பட்ட இழவுகெட்ட அதுக்குள்  ஒண்டுக்கு ஒண்டாகி....இதயத்தோடு இதயமாகி கன நாளாச்சே....
அதுதான்.....ஒரு குடைக்குள் ஒன்றாக .........

14 minutes ago, குமாரசாமி said:

என்னது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வா?
என்ன தம்பி தமாசு கிசீசு பண்ணுறீங்களா?
ஒன்று பட்ட இழவுகெட்ட அதுக்குள்  ஒண்டுக்கு ஒண்டாகி....இதயத்தோடு இதயமாகி கன நாளாச்சே....
அதுதான்.....ஒரு குடைக்குள் ஒன்றாக .........

இரண்டு படவேண்டும் என்று நினைச்ச காலத்தின் உலக அரசியலையும் இன்றைய உலக அரசியலையும் சீர் தூக்கிப் பார்த்து இதயத்துடன் இதயம் சங்கமம் ஆவதுதான் இன்றிருக்கும் நிலையில் உகந்தது என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவு செய்துட்டார்கள் அண்ணை. குடைக்குள் ஒன்றாக போவதுதான் இப்போதைக்கு வெள்ளம் அடிச்சுக் கொண்டு போகாமல் காப்பாற்றி கரை சேர்க்கும்

என்ன ஒன்று...வெள்ளம்  வருகிற சிலமன் கண்டவுடன் பெட்டி பெடுக்கையுடன் வெளிநாடுகளுக்கு வந்து கரை சேர்ந்த தமிழர் பலருக்கு அங்கிருக்கும் மக்களின் முடிவு கசப்பாக இருக்குதாம்......

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலை இருந்தவை ஆயுதங்களை மவுனிச்சு கிட்டத்தட்ட 6 வருசமா போனாலும் இவை புலம்பெயர் போராளிகள் விடமாட்டினம் போல கிடக்கு! நிச்சயம் இணையத்திலை வேர்ச்சுவல் தமிழீழம் அமைச்சுக் கொடியேத்துவினம் போலத்தான் கிடக்கு! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நீதியாய் கேட்டம்
நேர்மையாய் கேட்டம்
பசியிருந்து கேட்டம்
பட்னியிருந்து கேட்டம்
சத்தியாக்கிரகம் இருந்து கேட்டம்
மௌனமாயிருந்து கேட்டம்
தாடி வளர்த்து கேட்டம்
சிறை சென்று கேட்டம்
தாழ்ந்து கேட்டம்
குனிந்து கேட்டம்
குட்டக்குட்ட கேட்டம்
குறுகி கேட்டம்
கோழைகள் போல் கேட்டம்
குறுகியது வலிக்க..
நிமிர்ந்து கேட்டம்
குனியாமல் நிமிர்து கேட்டம்
தட்டினவனை தட்டி கேட்டம்
முட்டினவனை முட்டி கேட்டம்
முடியாதவனை முடியுமா என கேட்டம்
முடியாதவன் காலடிக்கு வந்த போதும் கேட்டம்
செய்ய முடியுமென காட்டினோம்
இறுதியில்????
 

அழிந்து போனோம், முடிந்தது எல்லாம் என்று சொல்கிறீர்களா? நீங்கள் தோற்றுப்போனவர்கள் - அழிந்து போனவர்கள். முடிந்து போனது உங்கள் வரலாறு. 

வடக்கு - கிழக்கு வாழ விரும்பும் இளம் சமுதாயத்தால் நிரம்பி வழிகிறது. அவர்களுக்கு வாழ்வளிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அந்த வரலாறு இப்போது தான் ஆரம்பமாகிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீதியாய் கேட்டம்
நேர்மையாய் கேட்டம்
பசியிருந்து கேட்டம்
பட்னியிருந்து கேட்டம்
சத்தியாக்கிரகம் இருந்து கேட்டம்
மௌனமாயிருந்து கேட்டம்
தாடி வளர்த்து கேட்டம்
சிறை சென்று கேட்டம்
தாழ்ந்து கேட்டம்
குனிந்து கேட்டம்
குட்டக்குட்ட கேட்டம்
குறுகி கேட்டம்
கோழைகள் போல் கேட்டம்
குறுகியது வலிக்க..
நிமிர்ந்து கேட்டம்
குனியாமல் நிமிர்து கேட்டம்
தட்டினவனை தட்டி கேட்டம்
முட்டினவனை முட்டி கேட்டம்
முடியாதவனை முடியுமா என கேட்டம்
முடியாதவன் காலடிக்கு வந்த போதும் கேட்டம்
செய்ய முடியுமென காட்டினோம்
இறுதியில்????
 

 

உண்மைதான் அண்ணா

ஆனால் தோற்றுப்போனோமே....

அஞ்சலோட்டத்தில் அவரவர் செய்தவை பதிவுகளே

வெற்றி பெற்றோமா என்பது தானே 

அடுத்த அணியையும் அதில் அவரவர் இடங்களையும் தீர்மானிக்கின்றன.

அஞ்சலோட்டத்தில் தடிக்கு இனி இடமில்லையாம்

சிலுவையை அனுப்பிப்பார்ப்பம்.....

(அந்தச்சிலுவையும்  தடியால தானே செய்யப்பட்டது....)

 

 

Edited by விசுகு

9 hours ago, குமாரசாமி said:

நீதியாய் கேட்டம்
நேர்மையாய் கேட்டம்
பசியிருந்து கேட்டம்
பட்னியிருந்து கேட்டம்
சத்தியாக்கிரகம் இருந்து கேட்டம்
மௌனமாயிருந்து கேட்டம்
தாடி வளர்த்து கேட்டம்
சிறை சென்று கேட்டம்
தாழ்ந்து கேட்டம்
குனிந்து கேட்டம்
குட்டக்குட்ட கேட்டம்
குறுகி கேட்டம்
கோழைகள் போல் கேட்டம்
குறுகியது வலிக்க..
நிமிர்ந்து கேட்டம்
குனியாமல் நிமிர்து கேட்டம்
தட்டினவனை தட்டி கேட்டம்
முட்டினவனை முட்டி கேட்டம்
முடியாதவனை முடியுமா என கேட்டம்
முடியாதவன் காலடிக்கு வந்த போதும் கேட்டம்
செய்ய முடியுமென காட்டினோம்
இறுதியில்????
 

யாவும் முடிந்ததென்றும் நம்பினோம்
இல்லை இன்னமும் முடியவில்லை
மக்கள் கையில் போராட்டம்
மக்கள் தெரிந்தவர்கள் கையில் இப்போது
சர்வதேச அரசியலால் கேட்போம்
ராஜதந்திர முறையிலும் கேட்போம்
அவர்களும் ஓடிப்பார்க்கட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்துவிட்டோம். 

முதலில் அஹிம்சை வழி, பின்னர் 30 வருட விலைமதிப்பற்ற தியாகங்களினூடாக ஆயுதப் போராட்டம். இன்றூ சர்வதேசத்துடன் ஒத்துப்போகும் சமரச வழி.

இதுவரை நாம் போராடியவற்றினால் எமக்குக் கிடைத்தவை 2 லட்சத்துக்கும் அதிகமான எமது உறவுகளின் உயிரிழப்பும், சொத்தழிவும், பாரம்பரிய எமது தாயகம் ஆக்கிரமிப்பாளர்களால் காவு கொள்ளப்பட்டதும்தான்.

ஆனால் முன்னர் நாம் போராடிய முறைக்கும் இன்று எமக்கு முன்னாலிருக்கும் தெரிவுக்குமிடையிலான ஒரே முக்கிய வேறுபாடு சர்வதேச அனுசரணை என்பதுதான்.

ஆக, இந்தச் சந்தர்ப்பத்தையும் பாவித்துப் பார்க்கலாம். 

ஏனென்றால் இதைத்தவிர எமக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு எம்மில் எவரும் மனதளவிலும், உடலளவிலும் தயாரில்லை. அப்போது என்னதான் செய்வது ?

செய்பவர்கள் செய்யட்டும். நன்றாக முடிந்தால் எல்லோருக்கும் நலம். அதணால் குறுக்கே நிற்கவேண்டாம். 

இவையெல்லாமும் கூட தோற்றுப்போனால், இனி என்ன செய்வது என்பதை அந்த மக்களே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் எடுக்கும் தீர்மானத்துக்குள் வாழப் போவோர் அவர்கள்தான். அது, இன்னொரு ஆயுதப் போராட்டமாக இருந்தாலும்கூட !

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Jude said:

அழிந்து போனோம், முடிந்தது எல்லாம் என்று சொல்கிறீர்களா? நீங்கள் தோற்றுப்போனவர்கள் - அழிந்து போனவர்கள். முடிந்து போனது உங்கள் வரலாறு. 

வடக்கு - கிழக்கு வாழ விரும்பும் இளம் சமுதாயத்தால் நிரம்பி வழிகிறது. அவர்களுக்கு வாழ்வளிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அந்த வரலாறு இப்போது தான் ஆரம்பமாகிறது.

 

 

இல்லையே! அழிந்து போனதாகவோ......தோற்றுப்போனதாகவோ எங்கும் எதிலும் குறிப்பிட்டதேயில்லையே!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசத்தை நோக்கி வகுத்த பாதையிலேதான் இன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் பயணிக்கின்றார்கள். பயணிக்க இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

வரவேற்க்கப்பட வேண்டிய விடயம். எம் மக்களின் முடிவுறா துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை கண்டால் சந்தோசம்.

அதென்ன தீர்வு.. அதை தமிழ் மக்கள் ஏற்பார்களா.. ஏற்றால்.. அதை எப்படி சிங்கள மக்களிடம் கொண்டு போய் அங்கீகாரம் பெறுவது.. இது தொடர்பிலும் சொன்னால் உங்கள் கருத்து வரவேற்கப்படக் கூடிய கருத்தா என்ற தெளிவைப் பெறும். ஏனெனில்.. இப்படி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு தேடி செய்யப்பட்ட எத்தனையோ ஒப்பந்தங்களும் முயற்சிகளும் சிங்களவர்களால்.. சாத்தியமற்றவை என்று ஆக்கப்பட்டுள்ள நிலையில்.. அது என்ன தீர்வு.. அதை இவர் பாதர் எப்படி சாத்தியமாக்கப் போறார்..??????????! காலம் கழிப்பதற்கும் சிங்களவர்களை பாதுக்காவும் இவர் வாறார் என்றால்.. அதை நேரடியாக தமிழ் மக்களிடம் சொல்லிட்டு வாங்கோ..??! :rolleyes::unsure:

சுதந்திரத்தின் பின் ஆமை வேகத்தில் என்றாலும் ஓரளவு சீரான வேகத்தில்  முன்னெடுக்கபட்டன  எமது போரட்டங்கள் . 

முயல் வேகம் எடுக்கின்றம் என்று வெளிக்கிட்டவர்கள் பாதை மாறி ஓடி பின்பக்கமாக கொண்டுபோய் விட்டுவிட்டார்கள் .அதுவும் இந்தியா, சர்வதேசத்திடம் குறுக்காக ஓடியதற்கு குற்ற பட்டமும் எடுத்துவிட்டார்கள் .

இப்போ மீண்டும் ஆமை வேகத்தில் சீரான வேகத்துடன் பயணம் தொடங்கியிருக்கு எங்கு போய் முடிகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்பம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்த்து பாடை ஏறுவதை.. விட வேற எதுவும் தமிழர்களுக்கு எனி.. சாத்தியமில்லை.

இருந்ததையும்  பொறுப்பற்ற தனத்தால் காழ்ப்புணர்வால் அழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். சிங்களவன் அழித்ததை விட தமிழர்கள் காழ்ப்புணர்வால்.. சிங்கள.. ஹிந்திய எஜமான விசுவாசத்தால்.. அழிந்தது தான் அதிகம். 

இவர்கள் தங்களின் மிகுதி காலத்தில்.. மிச்சத்தையும் நாசமாக்க வழிபார்க்கப் போகிறார்கள் அவ்வளவே. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.