Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 

Featured Replies

பிரேக் இல்லாத கார் கடைசியில் தானும் அடிபட்டு மக்களையும் அடித்து நொருங்கும் என்று அப்பவே பரிதாபப்பட்டோம் அதுவே தான் நடந்தது .

ஆனால் சுமந்திரனின் நிதானமாக ஓடுகின்றது, போக வேண்டிய இலக்கை சேராவிட்டாலும் தானும் அடிபட்டு மக்களையும் அடிக்காது என்பது நிட்சயம் .

  • Replies 107
  • Views 7.2k
  • Created
  • Last Reply

இதிலை என்ன கொடுமை எண்றால் இஞ்சினே இல்லாமல்  சுமத்திரனை பிளேன் எண்டு உசுப்பேத்தி விட்டது  தான்...   மேலை இருந்து மனிசன் டபார் எண்டு குதிச்சிட்டுது...  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வாலி said:

இதற்கு வரும் காலம் பதில்கொடுக்கும். நிச்சயம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுவரும். ஏனெனில் அதைக் குழப்ப இப்ப இலங்கை அரசியலில் புலிகள் இல்லை. முற்றுமுழுவதும் சிறந்த ஒரு தீர்வு என்று வராவிட்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுகிடைக்கும் என உறுதியாக நம்பலாம். ஒருவேளை அது சிறந்ததொரு தீர்வாக அமைந்தால் கூட புலிவால்கள் தொடந்தும் புலம்பிக்கொண்டே இருப்பர்கள். அவர்களையும் பார்த்து நாங்கள் சேர்ந்து பரிதாபப்படவேண்டும்!

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை மேற்குநாடுகளின் பரிந்துரைப்படி ரணில் சிங்களவர்களுக்கு நோகாமல் கொடுப்பார். அதனைச் சிறந்த தீர்வாக தமிழர்களுக்கு விற்கும் சந்தைப்படுத்தும் பிரதிநிதிதான் சுமந்திரன்.

தமிழர்கள் என்ற இனமான உணர்வினை பலவீனப்படுத்தி, இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தினை சுமந்திரன் செய்கின்றார். ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

31 minutes ago, வாலி said:

மிக சரியான கருத்து .

எந்த தீர்வு வந்தாலும் சொகுசு வாழ்வு வாழும் புலம்பெயர்ந்தவர்கள் ஏற்றுகொள்ளப்போவதில்லை .முடிந்தவரை அதை குழப்ப வேறு முயற்சிப்பார்கள் .கடந்த தேர்தலில் அதுதான் நடந்தது ஆனால் நாட்டில் மக்கள் மிக தெளிவாக இருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன் .

குமார் பொன்னம்பலத்தை விட டக்கிளசின் கட்சி அதிக வாக்குகள் எடுத்தது மிக நல்ல உதாரணம் .

இங்கு சுமந்திரனுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகிறேன். நம்ம சுமந்திரன் ஒரு ஜாம்பவான். இருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும். சுமந்திரனின் வாரிசாக அவரின் மகன் அல்லது மகள் இதே போல வீரவசனத்தை பேசி தமிழ் அரசியலில்   வெற்றி பெறுவர். எல்லோரும். வியக்கும். வண்ணம் இலங்கை அரசியலிலும் சொத்து சுகம் சேர்த்து மிக சந்தோசமாக நம்ம சுமந்திரன் வாழ்வார்.

அவர் ஒரு சட்டமேதை. அதனால் மிக திறமையாக சட்டம் தன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தனது அரசியல் விளையாட்டை காட்டி பேரப்பிளைகள் மட்டுமல்ல அவரது பூட்டப் பிள்ளைகளுக்கு கூட சொத்து சேர்த்து தனது வாழ்வில் பெரிய வெற்றியை பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு தமிழர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை மேற்குநாடுகளின் பரிந்துரைப்படி ரணில் சிங்களவர்களுக்கு நோகாமல் கொடுப்பார். அதனைச் சிறந்த தீர்வாக தமிழர்களுக்கு விற்கும் சந்தைப்படுத்தும் பிரதிநிதிதான் சுமந்திரன்.

தமிழர்கள் என்ற இனமான உணர்வினை பலவீனப்படுத்தி, இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தினை சுமந்திரன் செய்கின்றார். ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

தமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

நேற்று முந்தினம் சிங்கள பாராளுமன்றில் .. முஸ்லீம் ஷரியாவிற்கு எதிராக சுமந்திரன் போர் தொடுத்தபோது ஆச்சரியமாக இருந்தது!  சில நாட்களுக்கு முன் தான் முஸ்லீங்களின் வடக்கு வெளியேற்றத்திற்காக ஒப்பாரி வைத்து அழுதது உலகம் அறிந்தது! ... அதற்கு மேல் நேற்றுவரை இதயங்களால் ஒன்றுபட்டு விட்ட சிங்களத்தோடு, இன்று லடாய்!  ... அனுபவ அரசியலற்ற பூஸ்வான அரசியல்வாதி! ... சுமந்திரனை விடுங்கள் ... ...

... இங்கு புலத்திலிருந்தும் சிலர் ... சிங்களத்தோடு சேர்ந்து வெட்டுவோம், வீழ்த்துவோம் என சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டவர்களின் நிலை பரிதாபம்! பாதிரியார் இமானுவேல் போன்றோர் சிங்களத்திற்கு பாவமன்னிப்பு அளிக்கவும் தயாரானார்! இவர் போன்றோரை சிங்கள வலையில் சிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் திருவாளர் சுமந்திரன்! இன்று ...????????????

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம் .... சரி சரி ... எல்லைக்கப்பால்?????

19 minutes ago, வாலி said:

தமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க வாலி சார். உங்க சுமந்திரன் ஜாலியாக வாழ்வார். இன்னும் பத்தி வருடத்தில் இலங்கையின் கோடீஸ்வர்ர்களில் ஒருவராக இருப்பார். 

30 minutes ago, வாலி said:

தமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

பகிர்வுக்கு நன்றி வாலி.
உங்கள் கருத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்கின்றேன். என்ன பச்சைதான் கைவசம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் நிதானமான கருத்தே என்னதும். சிங்களவர்கள் மாறப் போவதில்லை அல்லது பௌத்த சிங்களம் என்பது மறைய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். அது கூட சிங்களவர்களிடையே இருந்து உருவாகும் ஒரு மிதவாதத் தலைவரால் மட்டுமே சாத்தியமாகும், பு.பெ தமிழர்களின் மிரட்டலால் அது நிகழாது. வேண்டுமானால் இன்னும் கூர்மை பெற்று வாழும்! 

இயலாத ஒன்றை இயலாது என்று சொல்வதற்கும் ஒரு நேர்மை வேண்டும்!"எப்படி என்று கேட்கக் கூடாது, ஆனால் எடுத்துத் தருவோம்!" என்று சொன்ன இயக்கங்கள் சில தவறுகளைச் செய்த போதும் மூன்று தசாப்தங்கள் அவகாசம் கொடுத்தோம்! இப்ப ஒரு ஆண்டிலேயே உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒருவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்! அவ்வளவு அரசியல் தூர நோக்கு எங்களுக்கு!:cool:

1 hour ago, Sasi_varnam said:

Edited by நியானி
மேற்கோளும் பதிலும் தணிக்கை

1 hour ago, Justin said:

வாலியின் நிதானமான கருத்தே என்னதும். சிங்களவர்கள் மாறப் போவதில்லை அல்லது பௌத்த சிங்களம் என்பது மறைய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். அது கூட சிங்களவர்களிடையே இருந்து உருவாகும் ஒரு மிதவாதத் தலைவரால் மட்டுமே சாத்தியமாகும், பு.பெ தமிழர்களின் மிரட்டலால் அது நிகழாது. வேண்டுமானால் இன்னும் கூர்மை பெற்று வாழும்! 

இயலாத ஒன்றை இயலாது என்று சொல்வதற்கும் ஒரு நேர்மை வேண்டும்!"எப்படி என்று கேட்கக் கூடாது, ஆனால் எடுத்துத் தருவோம்!" என்று சொன்ன இயக்கங்கள் சில தவறுகளைச் செய்த போதும் மூன்று தசாப்தங்கள் அவகாசம் கொடுத்தோம்! இப்ப ஒரு ஆண்டிலேயே உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒருவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்! அவ்வளவு அரசியல் தூர நோக்கு எங்களுக்கு!:cool:

ஒகோ நூறு ஆண்டு ஆகுமா? அப்ப சுமந்திரனின் பூட்டப் பிள்ளையும் இந்த பிரச்சனையைத் கதைத்து பதவி எடுத்து சுக வாழ்க்கை வாழலாம். உங்களுக்கும் அது பெரிய நிம்மதி. எவ்வளவு தூர நோக்கு உங்களுக்கு. அது சரி நீங்களும் தமிழர் தானே. 

Edited by trinco

3 hours ago, வாலி said:

சரி, உங்ஜ்கதமிழர்களின் இனமான உணர்வினை சுமந்திரன் பலவீனப்படுத்துகின்றார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கமறுக்கின்றேன். முள்ளிவாய்க்கால், ஜெனிவா, மாவீரர் போன்ற முக்கிய தருணங்களில் விழா எடுத்து கொடி ஆட்டுவதும், கொத்துரொட்டி, கார்த்திகைப் பூ, கலண்டர் விற்பதும், தாயகத்தில் ஏற்பட்டுள்ள புலிகளுக்குப் பின்னான அரசியலைக் குழப்புவதும் என் பார்வையில் இனமான உணர்வாகப் படவில்லை. இலங்கைத்தீவில் பிரிவினைக்கு இடமில்லை என்ற நிலையில் நாம் இலங்கையர் என்ற அடையாளம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்றே கருதுகின்றேன். இங்கு நாம் பிரிவினை இல்லாமல் இலங்கையர் என்ற அடையாளத்துடன் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ முடியும் என்பதை சுமந்திரன் சொல்ல்வதில் செய்வதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. சுமந்திரனின் செயல்பாடு தவறாயின் மக்கள் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை கொடுப்பார்கள். 

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

சரி, உங்களுக்கு இங்கு புலத்தில் வரும் செலவுகளை சரி செய்ய வாங்கும்/விற்கும் உணவு கூட நக்கலாக படுகிறது??  (... சிலரின் பிழைகள் என்ன செய்வது ... எங்குதான் இல்லை??? ..) ! அப்படியானாலும் காசு கொடுத்து வாங்கும் கொத்து, ... மிரட்டி வாங்கிய சோத்துப்பார்ச்சலை விட கேவலமாக உங்களுக்கு படுகிறது! அது இருக்கட்டும் ... 

என் பார்வைக்கு ... சுமந்திரன் ... 2008இற்கு முன் எங்கிருந்தவர்? தமிழ் மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தில் பங்கு ... சாத்வீகமாகவாவது இருக்கட்டும் ...??? எவ்வாறு 2008இற்கு பின் தமிழரசு கட்சிக்குள் உள்நுளைந்து, இன்று தலைமையை கைப்பற்றும் நிலைக்கு வந்தார்???? ... போன்ற விடை தெரியாத பல கேள்விகள்.....

சரி ... அதுவும் இருக்கட்டும் ...

புலிகள் ... ஆயுதம் தாங்கியது ... 47இற்கு பின் ஏறக்குறைய 30 வருட உங்களை போன்ற ..  இன்று காலத்துக்கு ஏற்ப நுளைந்து பின்னணிபாடும் ... அகிம்சாவாதிகளின் தோல்விகளின் பின்னாள்தான்!

இன்று வரை ... நாம் சேர்ந்து செய்த ... உங்கள் பாசையில் ...  போட்ட ஒப்பந்தங்கள் எத்தனை? ... பண்டா-செல்வா. டட்லி/செல்வா,  ... எங்கே போயிற்று??? 

பௌத்த பேரினவாத சிந்தனை ... இது எதிர்காலத்திலும் சில ஆழும் சிங்கள தலைவர்களால் மாற்றியமைக்கப்படக்கூடியதல்ல! ... புரியுங்கள் ... இது நூற்றாண்டாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் ... இலங்கை வரலாற்றின் பௌத்த பேரினவாத அரசியலமைப்புச்சட்டம்! 

சரி ... சுமந்திரனின் பார்வையில் பெரும்பான்மையினருடன் இணைந்துதான் பெற வேண்டுமாயின் ... ஏன் தமிழரசு கட்சியை சுமந்திரன் தேர்தெடுத்தவர்??? அதே சிந்தனையுள்ள குத்தியின் ... மன்னிக்கவும் பண்பான சொல்லா தெரியவில்லை, இதே சொல், எம் தேசிய கவியும் ... பின்னால் போயிருக்கலாமே??

அதற்கு மேல் ... மைத்திரி/இரணிலின் நல்லாட்சி(?) வந்து ... சுமந்திரனின் பாசையில் "இதயங்களால் ஒன்றுபட்ட ஆட்சி" ... ஒரு வருடம் ஆகவில்லை!   ... எம்மை பொறுமை காக்க சொன்ன உங்களால் ... ஒரு வருடம் காக்க முடியவில்லை???

இப்போ, நாமா .. பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம்  ..  இதை சொன்னோம்??? 

ஏனப்புக்களே ... அதற்கு எங்கடித்தாலும், அந்த காலையே தூக்குவதை போல் தூக்குகிறீர்கள்????

இன்றைய சுமந்திரனின் ... இந்த ஓலம் ... அனுபவமற்ற ஓர் அரசியல்வாதியின் அலறல் மட்டுமே! ... கேவலம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் பொறுக்கிறாராம்.. இவர் சும் பொறுமையின் எல்லைக்கே போயிட்டாராம். கெதியா மந்திரிப் பதவியை ஏத்துக்கிட்டு.. தமிழனை காட்டிக்கொடுக்க..கிளம்புங்க சார் இல்ல மாவைக்கு மந்திரிப்பதவி கைமாறிடும் போலக் கிடக்குது. இதைவிட்டால்.. உங்களுக்கு வேறு எதுவும் வராது.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை மேற்குநாடுகளின் பரிந்துரைப்படி ரணில் சிங்களவர்களுக்கு நோகாமல் கொடுப்பார். அதனைச் சிறந்த தீர்வாக தமிழர்களுக்கு விற்கும் சந்தைப்படுத்தும் பிரதிநிதிதான் சுமந்திரன்.

தமிழர்கள் என்ற இனமான உணர்வினை பலவீனப்படுத்தி, இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தினை சுமந்திரன் செய்கின்றார். ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

ஒரு நூறு ஏக்கர் காணியை விட முடியல்ல.. மகிந்த விட ஏற்பாடு செய்திருந்த காணியை கொடுத்திட்டு... அதோட எல்லாம் முடிஞ்சிட்டதா காட்டிட்டார் ரணில். 220 பேரை விடுதலை செய்ய 12,000 உதாரணம் காட்டிறார். சரத் சொல்லுறார் இராணுவம் தவறிழைச்சிருக்குது என்று ரணில் சொல்லுறார் ராணுவத்தை தண்டிக்க அனுமதிக்கமாட்டம் என்று.. இப்படியாப்பட்ட ரணில்.. இலங்கை - இந்திய ஒப்பத்தக் காலம் தொட்டு சொறீலங்கா அரசியலில் இருக்கும் ரணில் நரித்தனமாக இருப்பாரே தவிர.. மகிந்த கும்பலை விட இந்தக் கும்பல் மோசமானது என்பதை இங்கு துதிபாடும் கூட்டம் உணரும். இப்படி காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் மத்தியில்.. முட்டாள்களை உருவாக்கி சிங்களம் தன்னை சுதாகரித்துக் கொள்வது எமது சாபக்கேடு.

புலிகள் இருந்த போது வந்த அழுத்தங்கள் எதுவும் இல்லாத நிலையில்.. தமிழர்களுக்கு ஒரு மண்பிடியும் சிங்களத்திடம் இருந்து கிடைக்காது. சந்திரிக்கா ஒருவேளை சில தீர்வுகளை சிங்களத்துக்கு அதிக ஆதாயம் தேடி கொண்டு வர முனைந்தாலும் ரணில் அதையும் எரிப்பார்... இதுதான் கடந்த காலம். இப்பவும் இந்தக் கூட்டத்தை நம்பிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தின் அரசியல் நிர்க்கதி என்பதால்.. வேற வழி அதுக்கு இல்ல. அதனால் ஆகும். :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

 அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

சிங்களவர்களுடன் இணைந்து ஈழத்தில் இருக்கும் மிச்சத் தமிழர்களுக்கும் சங்கூதும் நிலைக்கு நாம் வராமல் இருக்க வேண்டுமென்றால் சுமந்திரன், சம்பந்தன் அவர்கள் போன்ற அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்படவேண்டும்.
அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளும் முடக்கப்படவேண்டும் இல்லையேல்
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலைதான் விரைவில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

முடிந்தால் இதை செய்துகாட்டுங்கள் அய்யா வாத்தியாரே! இலங்கையில் தமிழர் வாழ்ந்தார்கள் என்ற நிலை வரும் என்று பூச்சாண்டி காட்டுவது தெரிகின்றது. ஈழத்தின் தமிழினம் வரலாற்றின் பல சவால்களைக் கண்டு மீண்டும் மீண்டும் தலைநிமிர்ந்து வந்திருக்கின்றது.  புலிவால்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் ஈழத்தின் தமிழினமே அழிந்துவிடும் என்று உங்களின் பேராறிவினால் மட்டுமே தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். புலிவால்கள் கஜே கம்பனியைக் கொண்டுவர பகீரதப் பிராயத்தனம்செய்து மூக்குடைபட்டும் இன்னும் திருந்தவில்லை எனத் தெரிகின்றது. தமிழினம் அழிந்துவிடும் என்ற புதுக் கரடி ஒன்றை எடுத்து விட்டிருக்கிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மிகத் தெளிவானவர்கள். அவர்களுக்குத் தங்களது தலைமையை இப்போது எந்த அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்காமல் தீர்மானிக்க முடியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, arjun said:

பிரேக் இல்லாத கார் கடைசியில் தானும் அடிபட்டு மக்களையும் அடித்து நொருங்கும் என்று அப்பவே பரிதாபப்பட்டோம் அதுவே தான் நடந்தது .

ஆனால் சுமந்திரனின் நிதானமாக ஓடுகின்றது, போக வேண்டிய இலக்கை சேராவிட்டாலும் தானும் அடிபட்டு மக்களையும் அடிக்காது என்பது நிட்சயம் .

இந்தா சனாதிபதி ஆட்சியை முடிச்சுக்காட்டுறன் எண்டு சொன்னவர் இப்பவும் அதே கதிரையிலை....அவருக்கு வக்காளத்து வாங்கின சம்பந்தன் கோஷ்டியும் நல்ல கதிரையைலை.......இனியென்ன தமிழ்மக்களின் பிரச்சனை அவர்களுக்கு பகுதிநேர பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

 இலங்கையில் தமிழர் வாழ்ந்தார்கள் என்ற நிலை வரும் என்று பூச்சாண்டி காட்டுவது தெரிகின்றது. ஈழத்தின் தமிழினம் வரலாற்றின் பல சவால்களைக் கண்டு மீண்டும் மீண்டும் தலைநிமிர்ந்து வந்திருக்கின்றது.  

இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. அப்போது நாட்டில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும், தமிழர் இரண்டாவது நிலையிலும், முஸ்லிம்கள் மூன்றாவது நிலையிலும் காணப்பட்டனர்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2011ல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் சனத்தொகை 2கோடியே 12 இலட்சத்து 83ஆயிரத்து 913 என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி; தரும் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்களவர்கள் 73.8வீதமாகவும்,

முஸ்லீம்கள் 7.2வீதமாகவும்,

இந்திய வம்சாவழி தமிழர்கள் 4.6வீதமாகவும்,

இலங்கை தமிழர்கள் 3.9வீதம் எனவும்

இலங்கை புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக முஸ்லீம்கள் உயர்ந்துள்ள அதேவேளை இரண்டாவது பெரும்பான்மை இனமான (24.90வீதமாக இருந்த) இலங்கை தமிழர்கள் நான்காவது நிலையில் உள்ள சிறுபான்மை இனமாக 3.9வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இது இணையத்தில் கிடைத்த தகவல்

உங்கள் கருத்தின்படி தமிழர்கள் இப்படித்தான் தங்கள் இருப்பைத் தக்க வைத்திருக்கின்றனர்.
இன்னும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர்களின் இருப்பு 1 வீததிற்க்குக் கீழேயும் வரலாம். அடுத்த 20 வருடங்களில் எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இதற்கும் நீங்கள் புலிகளையும் அவர்களின்  பயங்கரவாதத்தையும் தான் காரணம் காட்டுவீர்கள் என்பதும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, no fire zone said:

... இங்கு புலத்திலிருந்தும் சிலர் ... சிங்களத்தோடு சேர்ந்து வெட்டுவோம், வீழ்த்துவோம் என சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டவர்களின் நிலை பரிதாபம்! பாதிரியார் இமானுவேல் போன்றோர் சிங்களத்திற்கு பாவமன்னிப்பு அளிக்கவும் தயாரானார்! இவர் போன்றோரை சிங்கள வலையில் சிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் திருவாளர் சுமந்திரன்! இன்று ...????????????

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம் .... சரி சரி ... எல்லைக்கப்பால்?????

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் இல்லை. வேறு வழிகளை அவர்கள் காண்பார்கள். இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவது அமெரிக்க அரசின் திட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் பாதகமானது. சீனா மீண்டும் காலூன்றும் சாத்தியம் உள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சியை மாற்றியவர்கள் தமது நோக்கத்தில் அவ்வளவு விரைவாக தோல்வி அடைய மாட்டார்கள்.

19 hours ago, trinco said:

இங்கு சுமந்திரனுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகிறேன். நம்ம சுமந்திரன் ஒரு ஜாம்பவான். இருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும். சுமந்திரனின் வாரிசாக அவரின் மகன் அல்லது மகள் இதே போல வீரவசனத்தை பேசி தமிழ் அரசியலில்   வெற்றி பெறுவர். எல்லோரும். வியக்கும். வண்ணம் இலங்கை அரசியலிலும் சொத்து சுகம் சேர்த்து மிக சந்தோசமாக நம்ம சுமந்திரன் வாழ்வார்.

அவர் ஒரு சட்டமேதை. அதனால் மிக திறமையாக சட்டம் தன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தனது அரசியல் விளையாட்டை காட்டி பேரப்பிளைகள் மட்டுமல்ல அவரது பூட்டப் பிள்ளைகளுக்கு கூட சொத்து சேர்த்து தனது வாழ்வில் பெரிய வெற்றியை பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு தமிழர். 

இன்னுமொரு ஜி.ஜி. பொன்னம்பலம் என்று சொல்கிறீர்கள். இன்னுமொரு கஜேந்திரன் வேண்டாமா?

13 hours ago, வாத்தியார் said:

சிங்களவர்களுடன் இணைந்து ஈழத்தில் இருக்கும் மிச்சத் தமிழர்களுக்கும் சங்கூதும் நிலைக்கு நாம் வராமல் இருக்க வேண்டுமென்றால் சுமந்திரன், சம்பந்தன் அவர்கள் போன்ற அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்படவேண்டும்.
அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளும் முடக்கப்படவேண்டும் இல்லையேல்
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலைதான் விரைவில் வரும்.

இன்னுமொரு தேசியத் தலைவர் வந்தால் இந்த மிச்சத் தமிழருக்கு என்ன கிடைக்கும்? இன்னுமொரு முள்ளிவாய்க்கால். இன்னுமொரு தேசியத் தலைவர் வராமல் இருக்க சுமேந்திரன் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, trinco said:

ஒகோ நூறு ஆண்டு ஆகுமா? அப்ப சுமந்திரனின் பூட்டப் பிள்ளையும் இந்த பிரச்சனையைத் கதைத்து பதவி எடுத்து சுக வாழ்க்கை வாழலாம். உங்களுக்கும் அது பெரிய நிம்மதி. எவ்வளவு தூர நோக்கு உங்களுக்கு. அது சரி நீங்களும் தமிழர் தானே. 

இல்லை!  நீங்கள் எல்லாம் "நாம் தமிழர்!" என்று பெருமையாகச் சொன்னால், நான் தமிழன் இல்லை! அப்படிச் சொல்ல வெட்கப் படும் ஒருவன், இன அனாதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!:cool:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Jude said:

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் இல்லை. வேறு வழிகளை அவர்கள் காண்பார்கள். இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவது அமெரிக்க அரசின் திட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் பாதகமானது. சீனா மீண்டும் காலூன்றும் சாத்தியம் உள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சியை மாற்றியவர்கள் தமது நோக்கத்தில் அவ்வளவு விரைவாக தோல்வி அடைய மாட்டார்கள்.

இன்னுமொரு ஜி.ஜி. பொன்னம்பலம் என்று சொல்கிறீர்கள். இன்னுமொரு கஜேந்திரன் வேண்டாமா?

இன்னுமொரு தேசியத் தலைவர் வந்தால் இந்த மிச்சத் தமிழருக்கு என்ன கிடைக்கும்? இன்னுமொரு முள்ளிவாய்க்கால். இன்னுமொரு தேசியத் தலைவர் வராமல் இருக்க சுமேந்திரன் தேவை.

இலங்கையின் பிரதமராக பண்டாரநாயக்காவின் வருகைக்குப்பின் தமிழருக்கு எதிரான அரசபயங்கரவாதம் வளர்ந்து மகிந்தாவின் காலத்தில் தலைவித்தாடிய வரையில் நித்திரையாகக் கிடந்தவர்கள்... இன்று எழுந்து பார்த்தபோதுதான் தமிழர்களுடைய போராட்டம் தெரிந்தது. அது அவர்களுக்குப் பயங்கரவாதமாகவும் காட்சிகொடுத்துள்ளது.:shocked::shocked:

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முன்னம் இது தெரியும்தானே.அதுக்கு கையைத்தூக்கிப்போட்டு இப்ப இந்த சலிப்பு எதற்கு.2016 முடிய இதே டயாலாக் திரும்ப பேசுவீர்கள்.வல்லரசுகளை வளைத்தத இராஜதந்திரம் எங்கே போனது.மென்வலு எம்வலு.......

46 minutes ago, Justin said:

இல்லை!  நீங்கள் எல்லாம் "நாம் தமிழர்!" என்று பெருமையாகச் சொன்னால், நான் தமிழன் இல்லை! அப்படிச் சொல்ல வெட்கப் படும் ஒருவன், இன அனாதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!:cool:

ஜஸடின் நானும் உங்களைப்போல் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுபவன் தான். நீங்களும் தமிழர் தான் என்று நான்  கூறியது உங்களுக்கு புரியவில்லை என்றால் அதற்கு என்ன செய்ய. என்ன தான் அனாதை என்று நீங்கள்  கூறினாலும் அங்கு கருத்து களத்தில்  மற்றவர்களை எதற்கெடுத்தாலும் நீங்கள் பரிகசிக்கும் போது உங்களில்  தமிழனை  நான் காணுகிறேன்  

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடக்கிற புடுங்குப்பாடுகளும் ஒருவர் மீது மற்றவர் பாய்வதும் விவாதிப்பது என எல்லாமே அங்கு உள்ள எம் மக்கக்கு விடிவு வேண்டும் என்பதற்றாகவே.ஆனால் இங்கு கருத்து மோதலில் ஈடுபடுபவர்கள் எப்படி சித்திரம் வரைவது என்பதிலேயே குறியாக ஈருக்கிறார்களே தவிர யாரும் சுவரைப்பற்றி கவலைப்படுவதாக தொிய வில்லை. மேலே வாத்தியார் தந்த புள்ளி விபரம் தொடருமானால் இன்னும் சில காலங்களில் பிரச்சனை தானாக தீர்ந்து விடும்.அதாவது தமிழரே இல்லாமல் ஆகினால் பிரச்சனை தீரும் தானே.இப்ப முக்கிய பிரச்சனை மக்களின் இருப்பும் அதை ஊக்குவிப்பதும்தான்.இப்பவும் அங்கு பலர் வெளி நாடு செல்லவே முயன்று வருகின்றனர். அடாத்தாக நிகழும் நிலப்பறிப்புக்கு நிராக மனமுவந்து நிலத்தை மற்ற இனத்தவர்களுக்கு நல்ல விலைக்கு வித்துப்போட்டு வெளி நாடு செல்லவென அந்தக்காசை பயன் படுத்தகிறார்கள்.முதலலில் மக்களை அங்கு வாழ்வதற்க்கு ஊக்குவிக்க வேணும்.அதை இங்கிருந்து கொண்டு செய்ய முடியுமா என்பது கேழ்விக்குறியே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. அப்போது நாட்டில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும், தமிழர் இரண்டாவது நிலையிலும், முஸ்லிம்கள் மூன்றாவது நிலையிலும் காணப்பட்டனர்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2011ல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் சனத்தொகை 2கோடியே 12 இலட்சத்து 83ஆயிரத்து 913 என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி; தரும் தகவல் வெளியாகியுள்ளது.

சிங்களவர்கள் 73.8வீதமாகவும்,

முஸ்லீம்கள் 7.2வீதமாகவும்,

இந்திய வம்சாவழி தமிழர்கள் 4.6வீதமாகவும்,

இலங்கை தமிழர்கள் 3.9வீதம் எனவும்

இலங்கை புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக முஸ்லீம்கள் உயர்ந்துள்ள அதேவேளை இரண்டாவது பெரும்பான்மை இனமான (24.90வீதமாக இருந்த) இலங்கை தமிழர்கள் நான்காவது நிலையில் உள்ள சிறுபான்மை இனமாக 3.9வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இது இணையத்தில் கிடைத்த தகவல்

உங்கள் கருத்தின்படி தமிழர்கள் இப்படித்தான் தங்கள் இருப்பைத் தக்க வைத்திருக்கின்றனர்.
இன்னும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர்களின் இருப்பு 1 வீததிற்க்குக் கீழேயும் வரலாம். அடுத்த 20 வருடங்களில் எப்படி இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இதற்கும் நீங்கள் புலிகளையும் அவர்களின்  பயங்கரவாதத்தையும் தான் காரணம் காட்டுவீர்கள் என்பதும் தெரியும்.

வாத்தியார் எனக்கு மற்ற ஆக்களுக்கு கணக்குப் படிப்பிக்கேலாது. நீங்கள் கொடுத்த தரவுகளைக் கூட்டிப் பார்த்தால் 89.5%  தான் வரும். அது உங்கள் பிரச்சினை மட்டுமல்ல உங்களுக்கு ஊக்கம் கொடுத்தவரின் பிரச்சினையும் கூட.

இனி விடயத்துக்கு வருவோம். கீழ்வரும் இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் இணைப்பில் 146 ஆம் பக்கம் முழுத் தரவுகளும் இருக்கின்றது 

http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport/FinalReport.pdf

2012 இல் சிங்களவர் 74.9% இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர் 4.1% இலங்கைச் சோனகர் 9.3%

1981 இல் சிங்களவர் 74.0% இலங்கைத் தமிழர் 12.7% இந்தியத் தமிழர் 5.5% இலங்கைச் சோனகர் 7.0%

இங்கு தமிழர்களின் சனத்தொகைப் பரம்பல் வீழ்ச்சிக்கு பொருளாதார அகதிகள் மேற்கத்தைய தேசங்களுக்குப் பெருமளவு புலம்பெயர்ந்தமை, தொடர்ச்சியான யுத்ததினால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை அதிலும் இனவிருத்திக்கு ஏதுவான இளைஞர்கள் அதிகம் பலியாகியமை, பல்வேறு காரணங்களினால் தமிழர்கள் அதிகளவு வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளாமை முதலிய காரணங்களைச் சொல்லலாம். மறுபுறத்தே இலங்கைச் சோனகர் 2.3% ஆலும் சிங்களவர் 0.9% ஆலும் அதிகரித்து இருக்கின்றனர். முக்கியமாக இலங்கைச் சோனகரின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் வாரிசுகளை அதிகளவில் உருவாக்குவதே முக்கிய காரணமெனினும் தமிழரின் விகிதம் குறைகின்றபோது மற்றைய இனங்களின் விகிதம் புள்ளிவிபரப் பட்டியலில் அதிகரித்தே காணப்படும். 

நிலைமை இவ்வாறிருக்க, நீங்கள் உங்கள் பூச்சாண்டி காட்டலுக்கு முகவரியற்ற மற்றும் பிழையான தகவல்களை தந்த இணையத்தை நம்பி இருப்பது வேடிக்கையானது.  போரில் காவுகொடுக்கப்பட்ட மக்களையும் போராளிகளையும் இனி மீண்டழவைக்க இயலாத நிலையில் இப்போது தமிழினம் செய்யக் கூடியது ஆகக் குறைந்தது ஒரு தம்பதியர் 3 குழந்தைகளையாவது பெற்றெடுத்தல் (இதிலும் போரின் தாக்கம் இருக்கும்), பொருளாதார அகதிகளை மீண்டும் வரவழைத்தல் (இவர்கள் ஒருபோது வரமாட்டார்கள், விசில் குஞ்சுகளே இவர்களில் பெரும்பான்மையானோர்).  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.