Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 

Featured Replies

On 12/6/2015, 1:15:49, Jude said:

1) நிச்சயமாக முள்ளிவாய்க்கால் இல்லை. வேறு வழிகளை அவர்கள் காண்பார்கள்.

2) இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவது அமெரிக்க அரசின் திட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் பாதகமானது. சீனா மீண்டும் காலூன்றும் சாத்தியம் உள்ளது.

3)இவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சியை மாற்றியவர்கள் தமது நோக்கத்தில் அவ்வளவு விரைவாக தோல்வி அடைய மாட்டார்கள்.

ஜூட் அண்ணா....

1) நீங்கள்/நாங்கள் இன்று பிறந்த தவ்வல்கள். வரலாறு தெரியாது? பலபேர் கதைக்கினம் ... 58ல் சத்தியாக்கிரகம் இருந்து ஆயிரக்கணக்கில் கொடுத்தனாங்களாம்! பின்பு இடையிடையே எச்ச சொச்சமாக போய், 77இல் வேறு வழிகளை காணப்போய் ன்னும் பல ஆயிரக்கணக்கில் கொடுத்தது மட்டுமல்லாமல், சொத்து பத்தெல்லாம் கொடுத்து ... கப்பலில் துரத்தப்பட்டனாங்களாம்? உண்மையா??? 

2) முள்ளிவாய்க்கால முடிந்து சில நாடகளுக்கு உள்ளேயாம் .. டெலோ, ஈ பிஆர் எல் எப் ஐ உங்கள் அதே ஹிந்தியா கூப்பீட்டு, ஆயிரக்கணக்கில் இளைஞர்களை அழைத்து வாருங்கள், பயிற்சியும், ஆயுதமும் தருகிறோம் என காந்தி மீது சத்தியமடித்து சொன்னார்களாம்/கேட்டார்களாம்! ... சொன்னது இன்று கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வந்தர்களுக்கு அடைக்கலமானவர்! கேளுங்கள்?

3) உலக அரசியல் புரியும் உங்களுக்கு? நேற்று தூணாக நின்றவன், இன்று புரட்ட முற்படுவதும், அன்று புரட்ட முறபட்டவன், இன்று தூணாக இருப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது . உங்கள் மொழியில் கஸ்டப்பட்டு புரட்டியவனை மீண்டும் கொணர முற்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. 

On 12/6/2015, 3:57:32, Jude said:

இரு பகுதிகளை கொண்ட ஒரு பிரச்சினைக்கு இரு பகுதியினரும் மனம் விரும்பி ஏற்கும் தீர்வு தவிர வேறு எந்த தீர்வும் நிலையான தீர்வாக அமையாது. இதற்கு உள்ள ஒரே ஒரு விதிவிலக்கு இரண்டில் ஒரு பகுதி முற்றாக அழிந்து போவதாகும். போர் இதனையே சாதிக்க முயலும். போரில்லாத தீர்வு இரு பகுதியினராலும் மனம் விரும்பி ஏற்றுகொள்ளும் தீர்வாக அமைய வேண்டும். 

சிங்களவர் உலகில் பூர்வீக மக்களாக வாழும் ஒரே நாடு இலங்கை. இந்த நாட்டில் தான் சிங்கள இனம் உருவானது.  அவர்களின் பண்பாடும், வரலாறும் இந்த  நாட்டிலேயே பேணி பாதுகாக்க பட முடியும். அதை செய்ய ஒரு அரசாங்கம் தேவை. இலங்கை அரசாங்கம் ஒன்றே அவர்களுக்கு உள்ளது. ஆகவே சிங்கள மக்களின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு நியாயபூர்வமாக இருக்கிறது. இதை தமிழர் தரப்பு வெளிப்படையாகவும் தெளிவாகவும் அதற்குரிய முன்னுரிமை கொடுத்து ஏற்றுக்கொள்ளும் வரை சிங்களவர்கள் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் பற்றி மனம் விரும்பி பேச முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

அண்ணா, குழம்பிப் போயிருக்கிறீர்கள்! யார்? ... செல்வநாயகம் தொடக்கம் பிரபாகரன் வரை ... இதை மறுத்தார்கள்? ... 

  • Replies 107
  • Views 7.2k
  • Created
  • Last Reply
52 minutes ago, Justin said:

மற்றபடி, தூற்றுதல் என்பது எப்போதும் புலிகளை விமர்சிப்போரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை! ஒரு சாதாரண கேள்வி, விமர்சனம், உண்மையான தகவல் புலிகள் பற்றிச் சொன்னாலே இன விரோதி, துரோகி , கூலி என்று திட்டுதல் புலி ஆதரவாளர்களின் வழமையான துலங்கல். இதெல்லாம் உங்களுக்குத் தூற்றுதலாகத் தெரியாமல் புலியை விமர்சனம் செய்வது மட்டும் தூற்றுதலாகத் தெரிவது வேடிக்கை! ஆனால், புதிய தகவல் அல்ல!   

தூற்றுதல் இல்லை  அதை  விமர்சனம் எண்று வைத்துக்கொண்டாலும் இதுவரை நீங்கள் அதனால்  அடைந்த நன்மை அல்லது முன்னேற்றம் அல்லது ;பெற்ற வெற்றி  என்ன...?  நிண்ற புள்ளியில் 6 வருடத்துக்கு பிறகும் நிண்று சுளலாதீர் எண்று யாராவது சொன்னால் கோபம் பலமாக  தான் இருக்கும்...  காரணம் இயலாமல்...

எதுவும் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது முன்னேற முடியாமல் சுற்றி சுற்றி விமர்சனம் மட்டும் குறைவே இல்லாமல் இருக்கிறது....   ஒருவேளை அறிவுரையும் விமர்சனமும் எந்த செலவும் வலியும் இல்லாமல் இலவசமாக கொடுக்க  கூடியதாக இருப்பதாலாக இருக்கலாம்...  ஏற்படுத்த வேண்டிய அரசியல் திட்ட வரைபு (லோபியிங் பிளான் எண்டு சொல்லுங்கோவன்...)  இந்த நிலை இன்னும் நீண்டு கொண்டு தான் போகும்...

JUST Move ON... 

Edited by காத்து
இலக்கண தவறு

On 12/5/2015, 3:28:46, no fire zone said:

sampanth.jpg

மடி .. மன்னிக்கவும் ... முடி துறப்பாரா?

12308491_1712143002333324_71517512997633

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை கண் மூடித் தனமாக நம்பினவர்களை நக்கலடித்த சிலர் சுமத்திரனையும்,சம்மந்தனையும் கண் மூடித் தனமாக நம்புவது தான் பகிடியிலும்,பகிடி...அவர்களிடம் ஒரு கேள்வி ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்ரோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு என்று சொல்கிறீர்களே அதற்குள் கல்வி,வேலைவாய்ப்பு போன்ற இத்தியாதிகளுக்கு சம உரிமை வழங்கப்படுமா? அல்லது தமிழர்கள் கிடைக்கிறதை வாங்கிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமா?

புலிகள் இருக்கும் போது பறி போன பிரதேசங்களை விட தற்போது தான் அதிக பிரதேசங்கள் பறி போய்க் கொண்டு இருக்குது. அதை கூட தடுக்கக் கூடிய சக்தி கூட இவர்களிடம் இல்லை. இவர்கள் ஒரு தீர்வை பெற்றுத் தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்கள்

காலம்,காலமாய் யாரையாவது நம்பி ஏமாறுவதே தமிழனுக்கு வாடிக்கையாய்ப் போய்ட்டுது

சும், கண்ணகி கோலம் கொண்டதன் பின் கூட சம் ... வரவு செலவுக்கு ஆதரவளிக்கப்போகிறாராம்!

சம், முடி துறப்பதற்கு பதில் .. மடி பெருக்கப் போகிறது!

1 hour ago, ரதி said:

புலிகளை கண் மூடித் தனமாக நம்பினவர்களை நக்கலடித்த சிலர் சுமத்திரனையும்,சம்மந்தனையும் கண் மூடித் தனமாக நம்புவது தான் பகிடியிலும்,பகிடி...அவர்களிடம் ஒரு கேள்வி ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்ரோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு என்று சொல்கிறீர்களே அதற்குள் கல்வி,வேலைவாய்ப்பு போன்ற இத்தியாதிகளுக்கு சம உரிமை வழங்கப்படுமா? அல்லது தமிழர்கள் கிடைக்கிறதை வாங்கிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமா?

புலிகள் இருக்கும் போது பறி போன பிரதேசங்களை விட தற்போது தான் அதிக பிரதேசங்கள் பறி போய்க் கொண்டு இருக்குது. அதை கூட தடுக்கக் கூடிய சக்தி கூட இவர்களிடம் இல்லை. இவர்கள் ஒரு தீர்வை பெற்றுத் தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்கள்

காலம்,காலமாய் யாரையாவது நம்பி ஏமாறுவதே தமிழனுக்கு வாடிக்கையாய்ப் போய்ட்டுது

கண்மூடித்தனமாக எவரும் நம்புகின்றார்கள் என்று நான் நினைக்கவில்லை அப்படித்தான் நம்பினாலும் அவர்களால் எதுவும் ஆகாவிட்டால் நாலு வருடங்களில் தூக்கிவிடலாம் என்ற நம்பிக்கை தான் .

ஜனநாயகத்தை மக்கள் விரும்புவதே அதற்காத்தான் .

போரை வென்ற மகிந்தா இந்த நிலைக்கு வந்ததற்கு ஒரே காரணம் ஜனநாயகம் என்ற ஒற்றை விடயம் தான் .

சர்வாதிகாரிகளை அவர்கள் பிழை என்று தெரிந்தாலும் ஆதரித்துத்தான் ஆகவேண்டும் அல்லது தலை இருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, காத்து said:

தூற்றுதல் இல்லை  அதை  விமர்சனம் எண்று வைத்துக்கொண்டாலும் இதுவரை நீங்கள் அதனால்  அடைந்த நன்மை அல்லது முன்னேற்றம் அல்லது ;பெற்ற வெற்றி  என்ன...?  நிண்ற புள்ளியில் 6 வருடத்துக்கு பிறகும் நிண்று சுளலாதீர் எண்று யாராவது சொன்னால் கோபம் பலமாக  தான் இருக்கும்...  காரணம் இயலாமல்...

எதுவும் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது முன்னேற முடியாமல் சுற்றி சுற்றி விமர்சனம் மட்டும் குறைவே இல்லாமல் இருக்கிறது....   ஒருவேளை அறிவுரையும் விமர்சனமும் எந்த செலவும் வலியும் இல்லாமல் இலவசமாக கொடுக்க  கூடியதாக இருப்பதாலாக இருக்கலாம்...  ஏற்படுத்த வேண்டிய அரசியல் திட்ட வரைபு (லோபியிங் பிளான் எண்டு சொல்லுங்கோவன்...)  இந்த நிலை இன்னும் நீண்டு கொண்டு தான் போகும்...

JUST Move ON... 

காத்து, உங்கள் கருத்துகளுக்குப் பதில் எழுதுவது வீண் என்று கருதுபவன் நான், ஆனாலும் விளக்கத்திற்காக மட்டும்: புலிகளை விமர்சித்து யாராவது தனித்திரி திறந்து விவாதத்தை ஆரம்பிக்கிறார்களா யாழில்? திரி த.தே.கூவின் நடவடிக்கைகள் பற்றி ஆரம்பிக்கும், ஆனால் தரவுகள் எதுவும் இல்லாமல் எல்லாம் புலிகளால் நன்றாக செய்யப் பட்டது போலவும் த.தே.கூ ஏதோ சொந்தக் காணி புலம் காக்க வேலை செய்வது போலவும் வந்து கதை சொல்வார்கள்! சொல்பவர்கள் யார்? புலிகள் தவறு செய்து அதனால் பல்லாயிரம் மக்கள் செத்த போதும், இப்பவும் அது பற்றி ஒரு கண்டனமும் தெரிவிக்காதோர்! இந்த hypocrisy ஐச் சுட்டிக் காட்டினால் அவர்களது போலித் தனமாவது களையப் படும் என்பதே நான் எழுதக் காரணம்! கடந்து போவோம் என்பது குற்றவுணர்வை எதிர் கொள்ளத் தைரியமற்ற எவரும் சொல்வது தான்! சிங்கள ராணுவமும் அதைத் தான் சொல்கிறது!  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

ஜூட்,
இணைப்பிற்கு நன்றி. உங்களைப் போன்று புலம் பெயர்ந்தவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில் இதுவும் ஒன்று. நான் எப்போதும் தீர்வு ஒன்று வருமாயின் காவல்துறை அதிகாரம் எமக்கு வேண்டுமென்று கூறுவேன். உங்களது காவல்துறை பற்றிய பிரச்சனைக்குரிய தீர்வு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. நிதி சம்பந்தப்பட்ட தீர்வில் நேரடியாக வெளிநாட்டு உதவுகளைப் பெறவும், வெளிநாட்டு முதலீடுகளை சுயமாக நாம் பெறுவதற்கான வழிமுறையும் அவசியம் என்பது எனது கருத்து.

எல்லாவற்றிற்கும் முதல் எமது அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டு சமுக நிலை ஒன்று இலங்கையில் தோன்றுமாயின், காலப் போக்கில் எமக்கென்று ஒரு நிலப்பரப்பு தேவை எனும் வாதம்கூட அடிபட்டுப் போகலாம். 

ஜீவன் சிவா,

உங்கள் பயன் மிக்க பின்னூட்டத்துக்கு நன்றி. நிதி பற்றிய உங்கள் கருத்து, இலங்கை உதவிகளில் வாழும் பின் தங்கிய நாடு என்ற நிலைப்பாட்டில் தோன்றியதாக இருக்கலாம். உண்மையில் இந்த 'வெளிநாட்டு நிதி உதவிகள்' உதவிகள் அல்ல. அவை வேறு நோக்கங்களுக்காக செய்யப்படும் முதலீடுகள் அல்லது நீண்டகால கடன்கள். இவற்றை நேரடியாக பெறுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால்  நாட்டின் பணத்தின் பெறுமதியையும் கடன் வாங்கும் தகுதியையும் இந்த பணத்தை கையாளும் முறை தீர்மானிக்கிறது. ஆகவே மத்திய அரசாங்கங்களின் உடன்பாட்டுடனேயே இவை  கையாளப்படுகின்றன.  

அதே வேளை நேரடி வெளிநாட்டு முதலீடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட தனியார் வணிக வழிகளே பொருத்தமானவை. இன்று கூட இவை செய்யப்படலாம் - செய்யப்படுகின்றன. இலங்கை தமிழர்களின் அமெரிக்க நிறுவனங்களும் ஐரோப்பிய நிறுவனங்களும் வட பகுதியில் முதலீடுகளை செய்து வருகின்றன. பிரதேச அரசுகள் தேவையான வசதிகளையும் தகவல்களையும் வழங்கி இந்த முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் இவ்வாறாக தமது நாட்டு வணிக நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கின்றன. இதனால் வரும் வரிப்பணத்திலேயே அமெரிக்க ஐரோப்பிய அரசுகளும், இராணுவங்களும், அரசியல்வாதிகளும் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் இந்த நிறுவனங்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். உதாரணமாக அமெரிக்க அரசு ஒபிக் (Overseas Private Investment Corporation - Official Site  (OPIC)) என்ற நிறுவனத்தின் மூலம் இவ்வாறான முதலீடுகள் இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் காரணங்களால் நட்டத்தில் முடிந்தால் அந்த இழப்பை ஈடு செய்ய காப்புறுதி வழங்குகிறது. மேலும் மேற்படி முதலீட்டில் பங்குதாரராக வரவும் விரும்புகிறது. இவை பற்றிய பகிர்வுகள் மிகவும் ஆழமான சிந்தனை பகிர்வுகளாக அமையும். அவை தனியான திரியில் செய்யப்படுவதே பொருத்தமானது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

அதிக முயற்சியுடன் ஆய்வுகள் செய்து மும்மொழியிலும் வரைந்த திட்டத்தை மேலோட்டமாகப் படித்தேன். எல்லா விடயங்களையும் ஆராய்ந்து முன்மொழியப்பட்ட இந்த ஆவணத்தை ஆறுதலாக வேறு ஒரு திரியில் விவாதித்தால் நல்லது. இப்படியான ஆவணத்தை அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்துவதே அவர்களிடம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆர்வம் இல்லையென்றுதான் காட்டுகின்றது.

தமிழர்களும், சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைதான் தொடர்கின்றது. இந்த நிலை மாறும்வரை இலங்கையில் பிரச்சினைகள் தொடரவே செய்யும். அதிகாரம் உள்ள அலகு ஒன்றை தமிழர்களிடம் கையளிக்க சிங்களவர்கள் முன்வரமாட்ட்டார்கள். அதிகாரம் இல்லாத மாகாணசபை போன்ற தீர்வினால் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே இருப்பார்கள். 

கிருபன்,

நீங்கள் சொல்வது போல இன்னுமொரு திரியில் இந்த ஆவணத்தை விவாதிப்பதே பொருத்தமானது. ஆயினும் இந்த ஆவணத்தை அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தி இருப்பதாக நீங்கள் கருதுவது தவறாக இருக்கலாம். நான் இந்த ஆவணத்தை ஒரு சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கே கிடைக்க செய்திருந்தேன். ஒரு கிழமைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்நாட்டிலும் புலம் பெயர்ந்தவர்களிடமும் இவ்வாறான அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளை கேட்டு மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்து இருந்தது. மகிந்த ஆட்சி காலத்தில் அதற்கு மேல் போகவில்லை.

இப்போது அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க ஒரு அமைச்சர்கள் குழு நியமிக்க பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். டி எம் சுவாமிநாதனும் மனோ கணேஷனுமே அவர்கள். இந்த குழுவுக்கும் இந்த ஆவணங்களை வழங்க இருக்கிறேன். இந்த குழுவுக்கு ரணில் தலைமை வகிக்கிறார். மேலும் சந்திரிக்கா தலைமையில் இனங்களுக்கிடையில் மீளிணைவை உருவாக்க ஒரு  குழு  அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் இந்த பிரதிகள் வழங்கப்படும். பல வழிகள் இருக்கின்றன.

அமெரிக்க அரசின் பின்னணியிலேயே இந்த தீர்வு முயற்சிகள் இடம் பெறுகின்றன. இவை தமிழர்கள் மேல் அமெரிக்கா மிகுந்த பற்று கொண்டுள்ளதால் இடம்பெறுவதாக நான் சொல்லவில்லை. இவ்வாறான  ஒரு நிலையான தீர்வு உருவாவது அமெரிக்க அரசுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நான் உட்பட அமெரிக்க மக்களுக்கு, எங்கள் பொருளாதார நலன்களுக்கு இலங்கையில் உண்மையான சமாதானமும் பொருளாதார வளர்ச்சியும் தேவையாக இருக்கின்றன. இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தலைவராக ஒரு இந்தியரும் கூகிளுக்கு தலைவராக தமிழரான சுந்தர் பிச்சையும் வந்திருப்பது அமெரிக்க பொருளாதாரத்துக்கு  இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும்  முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஆகவே இந்த இந்து சமுத்திர பிராந்தியம் அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு போர் நடக்காத, பயங்கரவாதம் இல்லாத, பாதுகாப்பு நிறைந்த வளம் கொழிக்கும் பிரதேசமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதை அமெரிக்கா கொண்டு வரும். ஆகவே தீர்வு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு தருபவர்களின் நடவடிக்கைகளை பார்த்து  தீர்வை தருவார்களா என கூறலாம். சிங்கள  அரசின் சுத்துமாத்துகள் தமிழ் மக்களை விரக்தி அடையத்தான் வைத்துள்ளது. தீர்வு என்பது எட்டாக்கனியாகி விட்டது. சிங்களவரின் ஏமாற்றும் புத்தி உள்ளவரை ( உலகத்தையும் . தமிழ் மக்களையும்) தீர்வு என்பது கிடைக்க சந்தர்ப்பம் இல்லை. தீர்வுக்கு புலிகள் தான் தடையாக இருந்தார்கள் என்ற கூற்றும் பொய்யாகி விட்டது. 

52 minutes ago, nunavilan said:

நுணாவிலான் நடந்தவைகள வைத்துத்தான் நாம் நடக்கப் போவது எவ்வாறு இருக்கும் என ஊகிக்கின்றோம். அந்த வகையில் நீங்கள் பெரும்பாண்மையினத்தை சந்தேகிப்பதில் தவறு இல்லை. ஆனால் தற்சமயம் நிலமைகளில் மாற்றம் வந்துள்ளதாகவே தெரிகின்றது. தமிழர்களை வென்று விட்டோம் என்ற மமதை, குண்டுகளற்ற சுமுகமான சூழ்நிலை, உயிர்ப்பயமற்ற நாட்கள் என எவ்வளவோ மாற்றங்கள் சிங்களவரிடமும் உள்ளது. மறுபடியும் பழைய நிலைக்குத் நாடு திரும்புவதை விரும்பும் நிலையில் அவர்களும் இல்லை, நாமும் இல்லை. இவற்றுடன் சர்வதேச அழுத்தங்கள் வேறு. நாடு ஒரு முன்னேற்றப் பாதையில் செல்வதாக இருந்தால் எமது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய கட்டாய நிலமை. மகிந்த போல போர் முடிந்தாலும் எம்மை இராணுவக் கட்டுப்பாட்டில் பயமுறுத்தி வைத்திருக்கும் பாதையை மைத்திரி தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக ஒரு மென்மையான அணுகு முறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். சொல்வதை செய்துகாட்டும் ஒரு பலமிக்க தலைவராக மைத்திரி இல்லாவிட்டாலும் ரணில், சந்திரிகா, சர்வதேச நாடுகளின் அணுசரணையுடன் ஒரு தீர்வுக்கு வரவேண்டியுள்ளது. இல்லை இல்லை வந்தேயாக வேண்டும்.

இவ்வரசாங்க காலத்தில் தமிழர்கள் தமிழர்களிற்கான உரிமைகளுடன் வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்பது எனது நம்பிக்கை. ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்த ஆளுமையுள்ள, சகல அதிகாரமும் உள்ள ஒரு ஜனாதிபதி தேவை.  சகல அதிகாரமும் உள்ள ஜனாதிபதிமுறை இப்போது ஒழிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றுள்ள நிலை இன்னும் ஒரு  10 வருடங்களிற்கு தொடர்ந்தால் நிறையவே மாற்றங்கள் வரும். இல்லை அடுத்த தேர்தலில் வேறு யாராவது வந்து யாவற்றையும் தலைகீழாக மாற்றி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நம்பிக்கைக்கு குறுக்கே  நான் நிற்கவிரும்பவில்லை. ஒரு சிறிய சலுகையையே தர முடியாதவர்கள் . அதற்கு பல முட்டுக்கட்டைகளை போடுபவர்களை கண்கூடாக பார்க்கிறோம். தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது எவ்வாளவு பெரிய விடயம். அதனை  இதே வேகத்தில் செல்லும் அரசு செய்யும் என எதிர்பார்க்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

மற்றபடி, தூற்றுதல் என்பது எப்போதும் புலிகளை விமர்சிப்போரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை! ஒரு சாதாரண கேள்வி, விமர்சனம், உண்மையான தகவல் புலிகள் பற்றிச் சொன்னாலே இன விரோதி, துரோகி , கூலி என்று திட்டுதல் புலி ஆதரவாளர்களின் வழமையான துலங்கல். இதெல்லாம் உங்களுக்குத் தூற்றுதலாகத் தெரியாமல் புலியை விமர்சனம் செய்வது மட்டும் தூற்றுதலாகத் தெரிவது வேடிக்கை! ஆனால், புதிய தகவல் அல்ல!   

ஐயா

தற்பொழுது ஒரு புள்ளிக்கு வந்திருக்கின்றோம் என நினைக்கின்றேன்

அதாவது ஒருவர் இவ்வாறு எழுதினார் என்பதற்காக நாங்களும் எல்லா இடமும் எல்லோருடனும் 

புலிகளை கேவலப்படுத்தி

வசைபாடி எழுதுவோம்

எழுதுகின்றீர்கள்

இதைத்தான் பிழை என்கின்றேன்

இங்கு நீங்கள் சொல்வது போல் பட்டம் சூட்டுவோர் எத்தனை பேர்

ஒன்று இரண்டு

ஆனால் அவர்களை முறியடிக்க நீங்கள் யாரைக்கையில் எடுக்கின்றீர்கள்???

எதற்காக?

இந்தக்கருத்துக்களத்தில் இவ்வாறு வென்று

அல்லது அவர்களை ஓரங்கட்டி சாதிக்கப்போவது என்ன???

நான் யாழ் ஒரு குடும்பம் என்று சொல்வதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

தேவையற்ற தூற்றுதல்கள் சீண்டுதல்களை தவிர்த்தால்

தாயகத்துக்கு யாழ் குடும்பம் ஊடாக எவ்வளவோ செய்யலாம்

செய்திருக்கின்றோம்

இன்று நிலை என்ன??

நாம் யாழுக்கு வரும் காரணமே அடிபட்டுப்போயுள்ளது..

இது தான் நமது இலக்கா......

(இவ்வளவும் எழுதக்காரணம் உங்களது பதில்கள் மூலம் என்னுடன் நீங்கள் பேசவிரும்புகின்றீர்கள் என்பதை கண்டு கொண்டதால்)

On 12/5/2015 at 0:59 PM, இசைக்கலைஞன் said:

எழுபதுகளில் ஓடிய ரீல் மீண்டும் ஓடுகிறது.. tw_blush:

இங்குள்ள பெரிசுகளும் இதைத்தான் சொல்லுகினம் ஆனால் பாவம் சும் காலம் மாறிவிட்டதை கவனிக்கவில்லை 

 " சுமந்திரன் சீற்றம் " என்று மாய் மாலம்  காட்டி விட்டு மக்களை முட்டாள் ஆக்கிவிட்ட நினைப்பில் வடமராட்சி கிழக்கில் வந்து வாங்கி கட்டிக்கொண்டு கொழும்புக்கு பின்னங்கால் பிடரியில் பட ஓடியிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா,விமர்சனங்களை சரியான நேரத்தில் வைக்க வேண்டும்...புலிகள் இருக்கும் போது செய்யாத விமர்சனத்தை அவர்கள் இல்லாத போது தான் செய்கிறார்கள்...தற்போது விமர்சிக்காத கூட்டமைப்பை அவர்கள் பதவியில் இல்லாத போது விமர்சிப்பதாலோ, அல்லது ஊரில் உள்ள மக்களே அவர்களுக்கு தண்டனை கொடுத்திட்டார்கள் என சந்தோசப்படுவதாலோ என்ன கிடைக்கப் போகுது சும்மா தேவையில்லாமல் வாய்ப்புக்களையும்,காலங்களையும் வீணடிப்பதை தவிர‌

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ரதி அக்கா, ஒரு வார்த்தை ஒரு லட்சம்...
நல்லதொரு கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அர்ஜீன் அண்ணா,விமர்சனங்களை சரியான நேரத்தில் வைக்க வேண்டும்...புலிகள் இருக்கும் போது செய்யாத விமர்சனத்தை அவர்கள் இல்லாத போது தான் செய்கிறார்கள்...தற்போது விமர்சிக்காத கூட்டமைப்பை அவர்கள் பதவியில் இல்லாத போது விமர்சிப்பதாலோ, அல்லது ஊரில் உள்ள மக்களே அவர்களுக்கு தண்டனை கொடுத்திட்டார்கள் என சந்தோசப்படுவதாலோ என்ன கிடைக்கப் போகுது சும்மா தேவையில்லாமல் வாய்ப்புக்களையும்,காலங்களையும் வீணடிப்பதை தவிர‌

ரதி, நான் புலிகள் கவுரவமாக ஆயுத்தங்களை மவுனித்த காலம்வரைக்கும் ஊரில் இருந்தவன். புலிகளை அப்போது விமர்ச்சித்து  பரலோகம் போக எனக்கென்ன விசரா? விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் கேட்கும் ஆக்களா அவர்கள். கூட்டமைப்பை விமர்சிப்பது வேறு புலிவால்கள் கையகப்படுத்த நினைப்பது வேறு.இந்த யாழ் களத்தில் கூட்டமைப்பு குறித்த ஆக்கபூர்வமான விமர்சனம் ஏதும் எழுதப்படுகிறதா? 

3 hours ago, ரதி said:

நான் விமர்சிக்கவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும் ,புலம் பெயர்ந்தவர்களில் ஒரு பகுதி தொடர்ந்தும் புலிகளை பற்றிய விமர்சனக்களை வைத்துக்கொண்டே வந்தார்கள் .இன்று இருக்கும் இணைய வசதிகள் அப்போது இல்லை இருந்தாலும் பத்திரிக்கை ,வானொலி ,நாடகம் என்று தமது எதிர்ப்பை காட்டினார்கள் .சிலர் பயந்து ஒழித்து செய்தார்கள் சிலர் துணிந்து நேரிடையாக செய்தார்கள் .கூட்டம் குழப்பியது ,அடித்து கால் முறித்தது ,நூல் நிலையம் கொழுத்தியது,மிக கேவலாமாக வக்கிரமாக இவர்களை தமது ஊடகங்களில் விமர்சித்தது .இவற்றையும் தாண்டித்தான் முடிந்தவரை எம்மால் முடிந்த எதிர்ப்புகளை காட்டினோம் .சாத்திரி யார் என்று தெரியாத காலத்திலேயே ஒரு பேப்பரில் எம்மவர் ஒருவரை பற்றி அவதூறு எழுதியது இன்னமும் நினைவு இருக்கு .

நான் ரொறொண்டோவில் இயங்கிய மூன்று வானொலிகளில் அடிக்கடி வந்து எனது கருத்துக்களை சொல்லியே வந்தேன் .என்னை அந்த ஒலிபரபாளர்களுக்கு நன்கு தெரியும் அவர்களில் இரு வானொலி நடத்துபவர்களுக்கு புலிகளை பிடிக்காது இதுதான் சாட்டு என்று எனக்கு தாரளாமாக நேரம் தருவார்கள் .யாழில் எழுதுவது போல ஒரே வசைதான் .மற்றது  புலிகளின் வானொலி ஆனால் அவரும் என்னை வெட்டுவதில்லை கதைக்கவிடுவார் (அத்தான் தொடங்கிய வானொலி அது ).

ஆனால் பலர் எனக்கு சொல்வது,

புலிகள் சரியோ பிழையோ அவர்கள் மட்டும்தான் இப்போ நாட்டில் இருந்து போராடுகின்றார்கள் தயவு செய்து அவர்களில் பிழை பிடித்து போரட்டத்தை பலவீனபடுத்தவேண்டாம் என்பதுதான். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீர்கள்  -நீங்கள் இப்போ சொல்வதற்கு முழு எதிர்மாறு  அது .

"தனிய நின்று போராடுகின்றார்கள் விமர்சனம் வைக்க வேண்டாம் என்றவர்கள்தான் தான் இப்போ புலிகள் இல்லை ஏன் விமர்சிக்கின்றீர்கள் என்று கேட்கின்றார்கள் ." 

இருந்தும் விமர்சனம் செய்தோம் புலிகளை பிடிக்கவில்லை என்பதால் அல்ல இப்படியே போனால் தாங்களும் அழிந்து மக்களையும் அழிப்பார்கள் என்று தெரிந்துதான் .முடிந்தால் பழைய பதிவுகள் தேடிப்பார்த்து இணைகின்றேன் .

இப்போ கூட்டமைப்பை பற்றி இரண்டு பக்கமும் தாராளமாக விமர்சனங்கள் வருகின்றது அவர்கள் பதவி இறங்கிய பின் தான் அது வரும் என்று நீங்கள் அஞ்ச தேவையில்லை .சம்பந்தனே மக்கள் விரும்பினால் விக்கியர் தலைவர் பதவிக்கு வரலாம் என்கின்றார் இந்த மாற்றங்கள் உங்களுக்கு ஏன் புரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
On December 7, 2015 at 11:29 PM, Jude said:

நாம் மலையாளிகள் போல தமிழக தமிழரல்லாத வேறு இனத்தவர் - சங்க காலத் தமிழிலில் இருந்து மருவிய மொழி பேசும் ஈழவர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் எமது சமயம் பௌத்தம் என்றும் கூறுகிறீர்கள். இதை சிங்கள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஏன் தமிழர்களில் பலரும் இதை அறியவில்லை. இன்றும் சிங்கள மக்கள் எமது உறவினர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கள்ளமாக இலங்கைக்கு வந்து குடியேறுவதாகவும் நினைத்து வருகிறார்கள்.

உண்மையில் சிங்கள மக்களின் மனம் விரும்பிய ஆதரவுடனான தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையும்.  சிங்கள மக்கள் ஈழவர் பற்றிய  உண்மையை அறிந்தால், அதுவும் நாம் இன்றைய தமிழக தமிழர் அல்ல - மலையாளிகள் போல வேற்று இனத்தவர் - ஈழத்தின் பூர்விக ஈழவர் மேலும் பௌத்தர்கள் என்று அறிந்தால் அவர்கள் ஆதரவு தரக்கூடும்.

  1. நாம் இன்று தமிழர்கள் அல்ல - ஈழவர்கள். மலையாளம்  போல எங்கள் மொழி தமிழில் இருந்து மருவிய ஒரு மொழியே அன்றி தமிழகத்தில் புழங்கும் தமிழ் அல்ல.எமது மொழி ஈழ மொழி. சிங்களவர் தமது பழைய மொழியை ஹெல பாஷா என்பார்கள் அது தமிழில் ஈழ மொழி என்றாகும். ஆகவே எங்கள் இரு இனத்துக்கும் பொதுவான ஈழ மொழி இந்த நாட்டில் பாதுகாக்க படவேண்டும். ஈழ மொழியில் இருந்து வந்த சிங்களமும் இன்று ஈழத்து "தமிழர்" பேசும் ஈழ மொழியும் சமமாக பாதுகாக்க பட வேண்டும். குறிப்பாக தமிழக தமிழின் ஆதிக்கத்தில் இருந்தும் கலப்பில் இருந்தும் பாதுகாக்க பட வேண்டும். இதற்கு சிங்கள மக்களும் இலங்கை அரசும் ஆதரவு தர வேண்டும்.
  2. ஈழ மொழி பேசும் எமக்கும் சக ஈழ மக்களான சிங்கள (சிங்க ஹெல - சிங்க - ஈழ ) மக்களுக்கும் பொதுவான சமயமான பௌத்தம் தேசிய மதமாக நாடுமுழுவதும் முன்னெடுக்க பட வேண்டும்.

மேற்படி இரண்டு கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து தமிழர் தலைமை இலங்கை அரசுடன் பேச முன் வந்தால் ஈழ மொழியும் (நீங்கள் கூறியபடி இது மலையாளம் போல வேறு மொழி - இன்றைய தமிழக தமிழ் அல்ல), சிங்களம் போல அரசின் ஆதரவுடன் மேம்படும் சாத்தியம் உள்ளது. மேலும் நாம் எமது சமயமான பௌத்தத்தை அரசின் அங்கீகாரம் மற்றும் ஆதரவுடன் எமது பிரதேசத்தில் வளர்த்தெடுக்க வழி ஏற்படும்.

முதலில் தமிழுடன் வடமொழி கலந்த மணிப்பிரவாள மொழிநடை தான் மலையாளமென ஏலவே கூறியுள்ளேன். ஈழத் தமிழரின் மொழியில் வேறெந்த மொழியின் தாக்கமும் அதிகமாக இல்லையாயினும் ஈழ மண்ணின் மொழிநடை தமிழகத்தின் மொழிநடையில் இருந்து வேறுபட்டது. இங்கு குறிகாட்டிக்கருதப்படுவது மொழிநடை மட்டுமே. இவ்வாறான பின்னணியில் தமிழகத்தில்  பேசப்படும் தமிழும்,மலையாளமும் (ஏற்க மறுத்தாலும்), ஈழத்தில் பேசப்படும் தமிழும் தமிழ் மொழியின் வடிவங்களே என விளங்கும். எனவே நாம் தமிழகத்து தமிழரல்லர் என்பது உண்மைதான் ஆனால் தமிழர் என்பது ஈற்றில் புலப்படும்.  

ஈழத்தமிழரின் தொடக்ககால மதம் புத்தமதம் என்பதை சிங்களம் அறியவில்லை என்கிறீர்கள், அறிந்தனால்தால் பயப்பட்டு நிற்கின்றது. துடிக்கின்றது. ஈழத்தின் புத்த மதத்தின் உண்மை வரலாறு வெளிக்கொண்டுவரப்பட்டால், சிங்களம் அம்மணமாக தெருவில் நிற்கவேண்டிவரும் என்பதை இனவாதிகள் அறிவார்கள். அதனால்தான் புத்த கோயில்கள் இருக்கும் இடமெல்லாம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தப்பார்க்கின்றது. சிங்களவர்களே வசிக்காத கந்தரோடையிலும் நயினாதீவிலும் புத்தகோவில்கள் இருந்தது எவ்வாறு? சுற்றுவட்டாரத்தில் சிங்களக் குடியிருப்புகள் இல்லாத நிலையில் புத்தகோவில்கள் இருப்பது கண்டு சிங்களம் அஞ்சியதன் விளைவுதான் இன்று நயினாதீவின் பெயர் மாற்றம். 

"ரவணா பலய" என்ற ஓர் அமைப்பை சிங்கள இனவாதிகள் அமைத்திருக்கின்றார்கள். சிங்களத்தின் அங்கலாய்ப்புக்கு இது ஒன்றே பாரிய சான்று. எந்தவொரு சிங்கள அறிஞர் பெருமகனும் இந்த அமைப்புக்கு அறிவுரை சொல்லவில்லைப் போலும். இராவணன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. அந்த இராவணனை சிங்களவனாக காண்பித்து விட்டால் தம்மை இலங்கையின் ஆதிக் குடிகளாக காண்பித்துவிடலாம் என வெம்புகின்றது. 

இதைப்போலவே எலு மொழியில் இருந்து சிங்களமொழி பிறந்ததாக கதையளக்கின்றது. கலிங்கத்து குடியேற்றவாசிகளுக்கும் பாண்டிய பெண்களுக்கு பிறந்த வரிசுகளே இவர்கள் எனச் சொல்லப்படுகின்றது. எனவே கலிங்கம், வங்கம், பாளி, தமிழ் போன்ற பலமொழிகளின் கலவையே சிங்களமொழி. மகாவம்சத்தின் மகாநாமதேரர் சிங்கள இன உருவாக்கத்துக்காக பொய் ஒன்றைச் சொல்லி இன்று வெட்கப்பட்டு நிற்கின்றார். அன்று வீரத்தின் அறிகுறியாக சிங்கத்தில் இருந்து  சிங்கள இனம் பிறந்ததாக கற்பனையில் கதையளந்து விட்டார். பின்னாளில் அறிவியல் இந்தளவு வளரும் என கற்பனை செய்திருக்கமாட்டார். சிங்கத்தை மானிடப் பெண் கூடி உருவாகிய இனம் என்பது எங்கட சம்பந்தர் உமாதேவியாரிடம் பால் குடிச்ச கதையைப் போன்று விஜய் சாரின் புலி திரைப்படத்தை விட நகைச்சுவையானது.  இதிலிருந்தே மகாவம்சத்தின் கட்டுக்கதைகள் புலப்படும். 

ஈழத்தமிழினத்தின் வரலாறு பற்றிப் பேசும்போது, கரிகாலனைப் பற்றியோ அல்லது  ராஜராஜனைப் பற்றியோ எழுதிவிட முடியாது, மாறாக அது சங்கிலியனையும், பண்டார வன்னியனையும், பூதத்தம்பியையும், பரராசசேகரனையும், எல்லாளனையும், ஈழசேனனையும்  பற்றியே பேசப்படவேண்டும். பண்பாடு கலாசாரம் பழக்கவழக்கம் பற்றிக் காணும் போது, இன்றைய தமிழகத்தில் இருந்து பலவேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றது. அதே போன்று பல ஒற்றுமைகளையும் கொண்டிருக்கின்றது தமிழகத்தில் பரவலாக்க காணப்படும் அக்காள் மகளை திருமணம் செய்யும் முறைமை ஈழத்தில் அறவே இல்லை. ஈழத்தில் பெற்றோர் சீதனம் கொடுப்பதுவும் தங்கி இருப்பது பெண்பிள்ளைகளிடம்தான், எனவே ஈழத்துச் தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகம் எனப்படுகின்றது, (இதையே குவேனி என்ற நூலில் செங்கைஆழியான் கூறியிருப்பார்). இடியப்பமும் பிட்டும் ஈழத்து தமிழரின் காலை உணவு. மிக முக்கியமாக தமிழகத்தில் இருப்பதுபோல் பிராமணருக்கு சமூகத்தில் முதல் இடம் இல்லை. வளைகாப்பு, தலைத்தீபாவளி போன்ற சம்பிரதாயங்களும் இல்லை. எனவே ஈழத்தின் தமிழரின் வரலாறு  பண்பாடும் பழக்கவழக்கமும் மொழிநடையும் தமிழகத்தை விட வேறுபட்டது. 

தலைகீழாக  நின்றாலும் தமிழுக்கு நிகர் சிங்களம் நிற்கமுடியாது.  இவவளவு தொழிநுட்பம் வளர்ந்துவிட்டது இலங்கையில் சிங்கள இனத்தின் வரலாற்றை அகழ்வாராய்வு மூலம்  நிறுவ இதுவரை சிங்கள அரசுகள் எதுவும் முன்வரவில்லையே. காரணம் அப்படி ஆராயப்பட்டால் இலங்கையில் தமிழரின் பூர்வீக உரிமை உறுதிப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், தற்போது மானங்கெட்டு பல தமிழ் அரசர்களுக்கு சிங்களப் பெயர் சூட்டி  உரிமைகோருவது அம்பலமாகிவிடும் என்ற பயம் மட்டுமே. இல்லாவிட்டால் இதைச் சிங்களம் என்றோ செய்திருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

ப்பூ ......சட்டப்புத்தகம் சும்மிண்ட லெவல் இவ்வளவுதானா .....
இந்த புலம் பெயர் சும்  வாலுகள் விட்ட உதாரில் அண்ணை என்னவோ புடுங்கப்போறார் என்று நினைச்சிப்போட்டன் ...கடைசியாக பழைய தள்ளுவண்டிக்கு வந்திருக்கிறார் .....தள்ளுங்கோ நல்லா மூச்ச புடிச்சு தள்ளுங்கோ சும் உங்களுக்கும்  விசிலடிக்க ஒரு டீம் இருக்கு  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, arjun said:

நான் ரொறொண்டோவில் இயங்கிய மூன்று வானொலிகளில் அடிக்கடி வந்து எனது கருத்துக்களை சொல்லியே வந்தேன் .என்னை அந்த ஒலிபரபாளர்களுக்கு நன்கு தெரியும் அவர்களில் இரு வானொலி நடத்துபவர்களுக்கு புலிகளை பிடிக்காது

இதுதான் சாட்டு என்று எனக்கு தாரளாமாக நேரம் தருவார்கள் .யாழில் எழுதுவது போல ஒரே வசைதான் .மற்றது  புலிகளின் வானொலி ஆனால் அவரும் என்னை வெட்டுவதில்லை கதைக்கவிடுவார் (அத்தான் தொடங்கிய வானொலி அது ).

நன்றி

இது போதும்.....

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

ரதி, நான் புலிகள் கவுரவமாக ஆயுத்தங்களை மவுனித்த காலம்வரைக்கும் ஊரில் இருந்தவன். புலிகளை அப்போது விமர்ச்சித்து  பரலோகம் போக எனக்கென்ன விசரா? விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் கேட்கும் ஆக்களா அவர்கள். கூட்டமைப்பை விமர்சிப்பது வேறு புலிவால்கள் கையகப்படுத்த நினைப்பது வேறு.இந்த யாழ் களத்தில் கூட்டமைப்பு குறித்த ஆக்கபூர்வமான விமர்சனம் ஏதும் எழுதப்படுகிறதா? 

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்களின் உறுபினர்களின் கருத்துக்களையே ஏற்க மறுக்கும் கூட்டமைப்பின் தலைமை மக்களின் கருத்துக்களைச் செவி மடுக்குமா? அல்லது யாழ் கள உறுப்பினர்களின் கருத்துக்களைச் செவிமடுக்குமா?

கூட்டமைப்பு புலிகளைப் போன்று ஒருவரால் கட்டியமைக்கப்பட்ட இயக்கம் அல்ல. பல்வேறு கட்சிகள் உள்வாங்கப்பட்ட இயக்கம்.
உட்கட்சிப் பூசல்கள் தான் கூட்டமைப்பின்மேல் வரும் விமர்சனங்களுக்கான முக்கிய காரணி.
உட்கட்சிப்பூசல்கள் தான் கூட்டமைப்பின் பலவீனம். அதற்கான விமர்சனங்களை ஏற்றுக் கூட்டமைப்பின் தலைமை கூட்டமைப்பை சீரமைக்க முன்வரும் வரை அவர்களின்   மீதான விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,புலிகளை விமர்சிக்க உங்களால் முடியவில்லை மரண பயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கடந்த காலம்...ஏன் தற்போது உங்களால் கூட்டமைப்பை விமர்சிக்க முடியவில்லை?...கூட்டமைப்பு போகும் பாதை சரியென நம்புகிறீர்கள். அவர்கள் மீது ஒரு பிழை கூட உங்களால் சொல்ல முடியவில்லை இல்லையா?... சில நேரம் உங்கள் மனதிற்குத் தெரியும் அவர்கள் செய்யும் சில,பல விடயங்கள் சரியில்லை என ஆனால் அதைச் சொல்ல/எழுத மன்ட் சாட்சி இடம் கொடுக்காது...ஏன் என்டால் அப்படி எழுதினால் அது கூட்டமைப்புக்கு எதிராக எழுதுபவர்களுக்கு வசதியாய்ப் போய் விடும் என நினைத்து அமைதியாய் இருப்பீர்கள் அல்லவா!

அதையே தான் தீவிர புலி ஆதரவாளார்களும் செய்தார்கள்.அது எங்கே கொண்டு போய் விட்டது என்று பார்த்தீர்கள் தானே...அதைத் தானே நீங்களும் தற்போது செய்கிறீர்கள்...இன்னும் 3,4 வருடங்களுக்குப் பிறகு நீங்களும் இதே இடத்தில் தான் வந்து நிற்பீர்கள்.புலிகளை விமர்சிக்க உங்களால் முடியாமல் போய் விட்டது.ஆனால் கூட்டமைப்பின் மீது உண்மையான விமர்சனத்தை வைக்கலாம் தானே.

பி;கு; ஒரு திரியில் ரதி அக்கா, இன்னொரு திரியில் ரதி காரணம் என்னவோ?

...........................................

அர்ஜீன் அண்ணா நான் சொல்வது உண்மையான விமர்சனத்தை... நீங்கள் புலிகளுக்குக் எதிரான் இரு வானொலிகளிலும் போய் புலிகளை தூத்தி இருப்பீர்கள். அதே போல் புலிகளுக்கு ஆதரவான வானொலியில் போய் புலிக்கு ஆதரவாய் கதைத்திருப்பீர்கள் அது உண்மையான விமர்சனமா?

புலிகள் மட்டும் தான் உண்மையான ஊரில் இருந்து போராடினார்கள்...அவர்களை விமர்சிக்க கூடாது என்டொரு நிலை இருந்தது உண்மை தான்...புலிகளை விடுவோம் அவர்கள் கடந்து போன அத்தியாயம்...தற்போது உள்ள கூட்டமைப்பினர் மீது ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே!...நீங்கள், அவர்கள் செய்வது எல்லாம் சரி என்ட மாதிரியான விமர்சனத்தை தானே வைக்கிறீர்கள்...நீங்களோ அல்லது இங்கு வந்து எழுதும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ ஒரு எதிர் மறையாக கூ.அ விமர்சித்து நான் காணவில்லை.

என்னைப் பொறுத்த வரை விமர்சனம் என்டால் கூ.அ ஒரு விடயத்தில் சரியாக செயற் பட்டால் அதைப் பாராட்ட வேண்டும்.இன்னொரு விடயத்தில் அவர்கள் போகும் பாதை பிழை என்று தெரிந்தால் அதை தைரியமாக எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் நகர்த்த வேண்டும். அதை விடுத்து எப்பவுமே, எல்லாத்துக்குமே சில,பல காரணங்களுக்காய் ஆமாம் போட்டுக் கொண்டுக் கொண்டு இருந்தால் இன்னும் 100 ஆண்டுகள் போனாலும் தமிழனை அழிவுப் பாதையில் இருந்து மீட்க முடியாது.

புலிகளில் இருந்து விட்ட பிழைகளில் இருந்து பாடம் படிப்பார்கள் என்று பார்த்தால் அதே தான் தொடர்ந்தும் செய்கிறார்கள்.

இந்தத் திரியில் எனது முதலாவது கருத்திற்கு இன்னும் பதில் வரவில்லை

2 hours ago, ரதி said:

வாலி,புலிகளை விமர்சிக்க உங்களால் முடியவில்லை மரண பயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கடந்த காலம்...ஏன் தற்போது உங்களால் கூட்டமைப்பை விமர்சிக்க முடியவில்லை?...கூட்டமைப்பு போகும் பாதை சரியென நம்புகிறீர்கள். அவர்கள் மீது ஒரு பிழை கூட உங்களால் சொல்ல முடியவில்லை இல்லையா?... சில நேரம் உங்கள் மனதிற்குத் தெரியும் அவர்கள் செய்யும் சில,பல விடயங்கள் சரியில்லை என ஆனால் அதைச் சொல்ல/எழுத மன்ட் சாட்சி இடம் கொடுக்காது...ஏன் என்டால் அப்படி எழுதினால் அது கூட்டமைப்புக்கு எதிராக எழுதுபவர்களுக்கு வசதியாய்ப் போய் விடும் என நினைத்து அமைதியாய் இருப்பீர்கள் அல்லவா!

அதையே தான் தீவிர புலி ஆதரவாளார்களும் செய்தார்கள்.அது எங்கே கொண்டு போய் விட்டது என்று பார்த்தீர்கள் தானே...அதைத் தானே நீங்களும் தற்போது செய்கிறீர்கள்...இன்னும் 3,4 வருடங்களுக்குப் பிறகு நீங்களும் இதே இடத்தில் தான் வந்து நிற்பீர்கள்.புலிகளை விமர்சிக்க உங்களால் முடியாமல் போய் விட்டது.ஆனால் கூட்டமைப்பின் மீது உண்மையான விமர்சனத்தை வைக்கலாம் தானே.

பி;கு; ஒரு திரியில் ரதி அக்கா, இன்னொரு திரியில் ரதி காரணம் என்னவோ?

இங்கு பலருக்கு இன்னமும் புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் கூட விளங்கவில்லை. புலி இருக்கும் போது கேள்வி கேட்டா வாலி கூறியது போல பரலோகம் தான் போயிருப்பம். வெளிநாடுகளிலேயே அவர்களது ரவுடி கூட்டம் எதிர்த்து கதைத்த எத்தனை பேரின் காலை முறித்தது. அந்த நேரத்தில் கேள்வி கேட்டு பரலோகம் போயிருந்தா உங்கள் தரவளி துரோகி ஒழிஞ்சான் என்டு விசிலடித்திருப்பியள். 
கூட்டமைப்பு பிழையான பாதையில் சென்றால் 4 வருடத்தில் அவர்களை மக்கள் தூக்கி கடாசிட்டு செல்ல முடியும். புலிகளை அவ்வாறு செய்ய முடியுமா? 

2 hours ago, தெனாலி said:

தெனாலி சார் அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் துரோகிகள். அவர்களை போட்டு தள்ள வேண்டும் என்ற எண்ணக்கருவை அன்று இளைஞர்கள் மத்தியில் கிட்டத்தட்ட இருபது ஆண் டுகளாக  விதைத்தவர்கள் அகிம்சை பேசிய தமிழரசுக்கட்சியினரே. அதற்குள்ள சம்மந்தனும் அடக்கம். இன்று .எல்லா பழியையும் இயக்கங்கள் மீது போட்டுவிட்டு நல்ல பிள்ளைக்கு  நடிக்கிறார்கள். 

Edited by trinco

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.