Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNAயின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

Featured Replies

TNAயின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் வடமாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது..

கொழும்பின் முக்கிய பிரமுகர் கனிகீஸ்வரனின் ஏற்பாட்டில் கொழும்பு இசுப்பத்தானை மாவத்தையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127230/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
சம்பந்தன்- விக்கி கொழும்பில் திடீர் சந்திப்பு! 
[Friday 2015-12-25 20:00]
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெறுவதாக தெரியவருகிறது. பம்பலப்பிட்டி, இசிப்பத்தான வீதியில் உள்ள, தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் பிரபல சட்டத்தரணியுமான கனகஈஸ்வரன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பல மாதங்களாக வடக்கு முதல்வருக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சகட்டம் அடைந்திருந்த நிலையில், இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்களினால் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று விக்னேஸ்வரனுக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று வருகிறது.சந்திப்பு விபரங்கள் வெளியாகவில்லை.http://www.seithy.com/breifNews.php?newsID=147790&category=TamilNews&language=tamil

23 minutes ago, nochchi said:

தலைகுணிந்த சம்பந்தனும் தலைநிமிர்ந்த விக்கியரும். 

இது படத்திற்கான ஒரு விளக்கமே தவிர வேறில்லை. 

பார்க்கலாம், நல்லது நடந்தால் (அதாவது உள்பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டிருந்தால்) சந்தோசம்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்திப்பை நடாத்துவதற்கு

தமிழ் மக்கள் பேரவை

 தூண்டுதலாக இருந்ததா?

அல்லது இரையாகிவிடுமா?

பதில் மிக விரைவில் தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனை நம்பமுடியாது. சம்பந்தர் நம்பவும் கூடாது. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் செயற்படும் மகிந்த தரப்புக்கு மறைமுகமாக தனது சம்பந்தி வாசுவுக்கு ஆதரவாக செயற்படுபவர் விக்கி. இன்று தன்னையொரு தேசியவாதியாகக் காண்பிக்கமுனையும் விக்கி அன்று அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலையாளி மகிந்தவின் முன்னிலையில் எவ்வித தயக்கமும் இன்றி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டவர். இதிலிருந்து புரியும் இவரது மகிந்த விசுவாசம். மகிந்த தரப்புக்கு இனத்துவேசத்தை கிளறிவிட்டு தமது பரம்பரை ஆதிக்கத்தை முன்னிறுத்துவது முக்கியம். புலம்பெயர் தரப்புக்கு இலங்கையில் தீர்வு வந்துவிட்டால் பிச்சைக்காரன் புண்ணைச் சொறிந்து ஆறவிட்டமல் ஆதாயம் தேடுவது போல் தமது இருப்புக்கும் பணம்சேர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அடிநாதம் இல்லாது போய்விடும் என்ற பாரிய பிரச்சினை இருக்கின்றது. இங்குதான் மகிந்த ஆதரவு விக்கியும் புலம்பெயர் ஆதரவு கஜே கோஸ்டியும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். ஒருதரப்பு ரணில் ஆதரவுடனான அதிபர் மைத்திரி அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டுவிட்டால் தமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என அஞ்சுகின்றது, இன்னொரு தரப்பு தமது போலித் தேசிய வேடம் மற்றும் பொருளாதாத நிலைத்தன்மை கலைந்துவிடும் என துடிக்கின்றது. எனவே மைத்திரி- ரணில் அரசுடன் தீர்வுத் திட்டத்தில் இணைந்து செயற்படும் கூட்டமைப்பினை குழப்பவேண்டுய தேவை இருதரப்புக்கும் இருக்கின்றது. அதை சிறப்பாக விக்கி முன்னெடுத்துச் செல்கின்றார். எனவே  சம்பந்தர் விக்கியை சாமர்த்தியமாக கைகழுவிவிடவேண்டும். சாணக்கியமாக அதைச் செய்வார் என நம்பலாம்.  

தான் உடுத்தியிருக்கும் ஆடை எரியாமல் நெருப்பை மடியில் கட்டிவைத்திருக்க முடியாது எனும் சாரப்பட வேதாகமத்தில் நீதிமொழிகள் புத்தகத்தில் மன்னர் சாலொமோன் குறிப்பிடுகின்றார்.

"Can a man take fire in his bosom, and his clothes not be burned?" - Proverbs 06:27 (Bible)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

தலைகுணிந்த சம்பந்தனும் தலைநிமிர்ந்த விக்கியரும். 

இது படத்திற்கான ஒரு விளக்கமே தவிர வேறில்லை. 

பார்க்கலாம், நல்லது நடந்தால் (அதாவது உள்பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டிருந்தால்) சந்தோசம்.

அவர் ஒரு மாலை விழுந்த வெக்கத்தில போறார். நீங்க வேற

16 minutes ago, விசுகு said:

இந்த சந்திப்பை நடாத்துவதற்கு

தமிழ் மக்கள் பேரவை

 தூண்டுதலாக இருந்ததா?

அல்லது இரையாகிவிடுமா?

பதில் மிக விரைவில் தெரியும்...

தூண்டவும் இல்லை துலங்கவும் இல்லை. 
ஓட்டை சைக்கிளுக்கு காத்தடிக்க மட்டுமே பேரவை பயன்படுத்தப்படும். 

கூட்டமைப்பில் சில உள்முரண்பாடுகள் இருந்தாலும் விக்கியர் செய்த,செய்யும்  வேலைகள் சரியான நம்பிக்கை துரோகம் போல தான் இருக்கு .மைத்திரி அரசு எதுவும் தராது என்பதைவிட அதை கலைக்கத்தான் பெரும்பாடு படுகின்றார் போலிருக்கு .

அரசியலிலே இல்லாமல் இவ்வளவு காலமும் இருந்தவர் அரசியலில் குதித்ததவுடன் ஆடும் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு அது அவரை நம்பி இறக்கியவர்களையே முதுகில் குத்த நினைகின்றார் .

இவர் செயற்பாடுகள் தமிழர்கள் நலன் சார்ந்ததாக தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

பார்டா இவ்வளவுகாலமும் தமிழர்நலனுக்கு எதிராக மாறிமாறி வந்த அரசாங்ககளை ஆதரித்த அர்சுன் அண்ணாவின்  தமிழர் மீதான கரிசனையை.

இன்று எனது நண்பர் வடமாகாண சபையின் அமைச்சு செயலாளருடன் கதைத்தபோழுது ,நெடும்சாலைகள் அமைச்சிலில் 50%மான நிதி செலவழிக்கப்படாமல் உள்ளதாம் .விக்கியரின் நிர்வாகத்திறன் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்திலேயே தமிழனப் போலக் கேணயன் யாருமில்ல. ஒரே கட்சியில இருக்கிறவை.. ரகசியமாச் சந்திக்கினமாம். முடியல்ல.. உங்கட ஊடக சன நாய் அக ஆட்டம். அதுக்கு ஒரு கூட்டம் விசிலடிக்குது...! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

விக்னேஸ்வரனை நம்பமுடியாது. சம்பந்தர் நம்பவும் கூடாது. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் செயற்படும் மகிந்த தரப்புக்கு மறைமுகமாக தனது சம்பந்தி வாசுவுக்கு ஆதரவாக செயற்படுபவர் விக்கி. இன்று தன்னையொரு தேசியவாதியாகக் காண்பிக்கமுனையும் விக்கி அன்று அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலையாளி மகிந்தவின் முன்னிலையில் எவ்வித தயக்கமும் இன்றி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டவர். இதிலிருந்து புரியும் இவரது மகிந்த விசுவாசம். மகிந்த தரப்புக்கு இனத்துவேசத்தை கிளறிவிட்டு தமது பரம்பரை ஆதிக்கத்தை முன்னிறுத்துவது முக்கியம். புலம்பெயர் தரப்புக்கு இலங்கையில் தீர்வு வந்துவிட்டால் பிச்சைக்காரன் புண்ணைச் சொறிந்து ஆறவிட்டமல் ஆதாயம் தேடுவது போல் தமது இருப்புக்கும் பணம்சேர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அடிநாதம் இல்லாது போய்விடும் என்ற பாரிய பிரச்சினை இருக்கின்றது. இங்குதான் மகிந்த ஆதரவு விக்கியும் புலம்பெயர் ஆதரவு கஜே கோஸ்டியும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். ஒருதரப்பு ரணில் ஆதரவுடனான அதிபர் மைத்திரி அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டுவிட்டால் தமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என அஞ்சுகின்றது, இன்னொரு தரப்பு தமது போலித் தேசிய வேடம் மற்றும் பொருளாதாத நிலைத்தன்மை கலைந்துவிடும் என துடிக்கின்றது. எனவே மைத்திரி- ரணில் அரசுடன் தீர்வுத் திட்டத்தில் இணைந்து செயற்படும் கூட்டமைப்பினை குழப்பவேண்டுய தேவை இருதரப்புக்கும் இருக்கின்றது. அதை சிறப்பாக விக்கி முன்னெடுத்துச் செல்கின்றார். எனவே  சம்பந்தர் விக்கியை சாமர்த்தியமாக கைகழுவிவிடவேண்டும். சாணக்கியமாக அதைச் செய்வார் என நம்பலாம்.  

தான் உடுத்தியிருக்கும் ஆடை எரியாமல் நெருப்பை மடியில் கட்டிவைத்திருக்க முடியாது எனும் சாரப்பட வேதாகமத்தில் நீதிமொழிகள் புத்தகத்தில் மன்னர் சாலொமோன் குறிப்பிடுகின்றார்.

"Can a man take fire in his bosom, and his clothes not be burned?" - Proverbs 06:27 (Bible)

மகிந்தவின் முன்னிலையில் எவ்வித தயக்கமும் இன்றி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டது மகிந்த விசுவாசம் ஆனால் சம்பந்தர் சிங்கக்கொடியை ஆட்டுவதும் சுமந்திரன் பொப்பி மலர் அணிந்து பாராளுமன்றம் செல்வதும் அரசியல் சாணக்கியம். அதுசரி மகிந்த விசுவாசி வாசுவின் சம்பந்தி என்று தெரியாமலோ சம்பந்தர் குத்தி முறிஞ்சு விக்கியரை முதலமைச்சர் வேட்பாளரா கொண்டு வந்தவர்.நல்லாத்தான் ரீல் விடுறியள். உடுத்தியிருக்கிற ஆடை முக்கியமெண்டால் மடியில இருக்கிற நெருப்பை தூக்கிப்போட்டுட்டு போக வேண்டியதுதானே.

2 hours ago, arjun said:

கூட்டமைப்பில் சில உள்முரண்பாடுகள் இருந்தாலும் விக்கியர் செய்த,செய்யும்  வேலைகள் சரியான நம்பிக்கை துரோகம் போல தான் இருக்கு .மைத்திரி அரசு எதுவும் தராது என்பதைவிட அதை கலைக்கத்தான் பெரும்பாடு படுகின்றார் போலிருக்கு .

அரசியலிலே இல்லாமல் இவ்வளவு காலமும் இருந்தவர் அரசியலில் குதித்ததவுடன் ஆடும் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு அது அவரை நம்பி இறக்கியவர்களையே முதுகில் குத்த நினைகின்றார் .

இவர் செயற்பாடுகள் தமிழர்கள் நலன் சார்ந்ததாக தெரியவில்லை 

மைத்திரி அரசு எதுவும் தராது எண்டால் அதைக்கலைக்கிறதில எந்த தப்பும் இல்லையே.!!

சுமந்திரன் மாத்திரம் அரசியலில பழம் திண்டு  எதோ போட்டவர் மாதிரி

1 hour ago, புலவர் said:

பார்டா இவ்வளவுகாலமும் தமிழர்நலனுக்கு எதிராக மாறிமாறி வந்த அரசாங்ககளை ஆதரித்த அர்சுன் அண்ணாவின்  தமிழர் மீதான கரிசனையை.

புலவர் சும்மா விடுங்கோ இப்பத்தான் Christmas பார்டியால வந்திருப்பார் போல

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரைச் சமாளித்து விட சம்பந்தரும் இந்தியாவும் பெரும் பாடு படுகினம் என்பதும் மட்டும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

விக்கியரைச் சமாளித்து விட சம்பந்தரும் இந்தியாவும் பெரும் பாடு படுகினம் என்பதும் மட்டும் உண்மை.

ஏன் அமரிக்காவை விட்டுட்டியள். அப்பம் தின்ன வந்தவ அறிவுரைசொன்னது ஞாபகம் இல்லையோ. 

எது நடக்குமோ என்று ஏங்கத் தேவையில்லை. பேரவையால் பயன்கள் ஏதும் ஏற்படாது என் நம்பிக்கை. ஆனால் எதற்காக பேரவை தொடங்கப்பட்டது என்பதை அதில் பங்குபற்றியவர்கள் வெளிப்படுத்தவேயில்லையே. அதுவே இன்னமும் இரகசியமாகத்தான் இருக்கிறது. அதற்குள் சுனாமி  பினாமி என்றெல்லாம் வீர பராக்கிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

விக்கி அன்று அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலையாளி மகிந்தவின் முன்னிலையில் எவ்வித தயக்கமும் இன்றி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டவர்.

அன்றைய ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் செய்யாமல் அடம் பிடித்துவிட்டு, அவரோடு எப்படிப்பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது? விக்கியர் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து கேக்கவேண்டியத்தை கேக்கிறார். கேட்டாலும் அவர்களின் ஆட்டத்துக்கு தலை ஆட்டவில்லை என்று இங்கு சிலபேர், விக்கியர் எல்லோருடனும் முரண் படுகிறார் என்று புகார் வைக்கினம். அப்பிடி எண்டால் அவர் என்னதான் செய்யிறது?

"என்னை ஒரு கூட்டம் கேலி செய்தது, நான் வேகமாக அவர்களை கடந்து சிறிது தூரம் சென்று திரும்பிப்பார்த்தேன், அந்தக்கூட்டம் அதே இடத்திலிருந்து வேறொருவரை கேலி செய்து கொண்டிருந்தது." சிலரின் தொழில் அது. நாம் குறை சொல்லக் கூடாது, கடந்து போய்க்கொண்டே இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Iraivan said:

எது நடக்குமோ என்று ஏங்கத் தேவையில்லை. பேரவையால் பயன்கள் ஏதும் ஏற்படாது என் நம்பிக்கை. ஆனால் எதற்காக பேரவை தொடங்கப்பட்டது என்பதை அதில் பங்குபற்றியவர்கள் வெளிப்படுத்தவேயில்லையே. அதுவே இன்னமும் இரகசியமாகத்தான் இருக்கிறது. அதற்குள் சுனாமி  பினாமி என்றெல்லாம் வீர பராக்கிரமம்.

பேரவை எதற்காக தொடங்கப்பட்டது அதன் உடனடி, வருங்கால செயல்திட்டங்கள் என்னென்ன என்பது பற்றிய விக்கி ஐயாவின் பேட்டியை வாசிக்கேல்லையோ. யாழில சிலருக்கு செலெக்டிவ் அம்னீசியா போல.  ஒன்று இரண்டு திரிதான் கண்ணுக்கு தெரியுது.

விக்கினேஸ்வரனோடு பேசவேண்டியவை எல்லாம் பேசிவிட்டோம் என்கிறார் சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015, 06:15.40 PM GMT ]
vikki_sam_001.jpg
வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனோடு பேச வேண்டிய சகல விடையங்கள் தொடர்பாகவும் தாம்  பேசிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவருமான இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக லங்காசிறி 24செய்திச் சேவை தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு பதிலளிக்கும் முகமாக அவர் தெரிவித்தவை வருமாறு,

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Iraivan said:

எது நடக்குமோ என்று ஏங்கத் தேவையில்லை. பேரவையால் பயன்கள் ஏதும் ஏற்படாது என் நம்பிக்கை. ஆனால் எதற்காக பேரவை தொடங்கப்பட்டது என்பதை அதில் பங்குபற்றியவர்கள் வெளிப்படுத்தவேயில்லையே. அதுவே இன்னமும் இரகசியமாகத்தான் இருக்கிறது. அதற்குள் சுனாமி  பினாமி என்றெல்லாம் வீர பராக்கிரமம்.

வணக்கம் இறைவன்

இந்த தமிழ் மக்கள் பேரவையை தொடக்கிவர்களே கூட்டமைப்பினர் தான் என்பதை அறிந்தீர்களா?.

ஆரம்பித்தவர்கள் பின்னர் அதிலிருந்து அவர்கள் விலக அதில் உடன்பாடானவர்கள்

அதன் தேவையை தொடர்ந்து உணர்பவர்கள் 

தொடர்கின்றனர்

இங்கு இன்னொன்றையும்  சொல்லணும்

பாராளுமன்றத்தேர்தலின் போது

கயேந்திரன் பொன்னம்பலம் அவர்கள் நிச்சயம் வெல்லுவார்  என்றும்

அவர் கூட்டமைப்பில் உள்வாங்கப்படவேண்டியவர் என்றும்

அவருக்கு அதற்கான தகுதியும் தேவையும் இருக்கிறது என்று இங்கு

எல்லொரும் (எதர்க்கருத்து எழுதியவர்களும்) வலியுறுத்தியிருந்தனர்.

இந்த தமிழ் மக்கள் பேரவையில் அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனவே அனைவரையும் உள்வாங்கிய ஒரு சமூக அமைப்பாக அது இருப்பதில் என்ன தவறு..?

ஆனால் அதை  அரசியல்க்கட்சியாக

தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்தால் தமிழரின் பலத்தை அது பாதிக்கும்.

ஆனால்  அப்படியொரு நிலை வருவதற்கு கூட்டமைப்பே காரணமாக அமையப்போகிறது.

ஐனநாயகம் என சொல்லிக்கொண்டு

ஒரு சிலர் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பது ஆபத்தானது என்பதை கூட்டமைப்பின் தலைவர்கள் உணரணும். 

http://www.tamilmirror.lk/162210/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%AE

Edited by விசுகு

கஜேந்திரன் வெல்ல வேண்டும் என்று புலி ஆதரவாளர்களை விட வேறு எவரும் சொல்லவில்லை .

பாட்டன் சுத்திய காசை வைத்து மகனும் இப்ப பேரனும் தமிழ் மக்களை ஏமாற்றியே வருகின்றார்கள் .இவர் அரசியலுக்கு எள்ளளவும் லாயக்கில்லாதவர் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

கஜேந்திரன் வெல்ல வேண்டும் என்று புலி ஆதரவாளர்களை விட வேறு எவரும் சொல்லவில்லை .

பாட்டன் சுத்திய காசை வைத்து மகனும் இப்ப பேரனும் தமிழ் மக்களை ஏமாற்றியே வருகின்றார்கள் .இவர் அரசியலுக்கு எள்ளளவும் லாயக்கில்லாதவர் .

எதிரிக்கு எதிரி நண்பன்

அல்லது நண்பனுக்கு நண்பன் எதிரி....

வேறு ஏதாவது......??

விக்கினேஸ்வரன் அவர்கள் தான்  தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சரியான கடிவாளம்.,  அவரை கழட்டி விட்டு  தங்கள் ஆட்டம் ஆட நினைக்கினம். அதற்கிடையில் வடமாகாண ஆயுளும் செத்து விடும்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சம்பந்தரின் அரசியல் சானக்கியம். அடுத்த இரண்டு வருடங்களுக்கு விக்கிக்கு லொலி பப்பை குடுத்தால் காணும். 2017 இல் மாவைதான் முதலைமைச்சர்.  <_<

On ‎26‎/‎12‎/‎2015 at 11:10 PM, விசுகு said:

வணக்கம் இறைவன்

இந்த தமிழ் மக்கள் பேரவையை தொடக்கிவர்களே கூட்டமைப்பினர் தான் என்பதை அறிந்தீர்களா?.

ஆரம்பித்தவர்கள் பின்னர் அதிலிருந்து அவர்கள் விலக அதில் உடன்பாடானவர்கள்

அதன் தேவையை தொடர்ந்து உணர்பவர்கள் 

தொடர்கின்றனர்

இங்கு இன்னொன்றையும்  சொல்லணும்

பாராளுமன்றத்தேர்தலின் போது

கயேந்திரன் பொன்னம்பலம் அவர்கள் நிச்சயம் வெல்லுவார்  என்றும்

அவர் கூட்டமைப்பில் உள்வாங்கப்படவேண்டியவர் என்றும்

அவருக்கு அதற்கான தகுதியும் தேவையும் இருக்கிறது என்று இங்கு

எல்லொரும் (எதர்க்கருத்து எழுதியவர்களும்) வலியுறுத்தியிருந்தனர்.

இந்த தமிழ் மக்கள் பேரவையில் அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனவே அனைவரையும் உள்வாங்கிய ஒரு சமூக அமைப்பாக அது இருப்பதில் என்ன தவறு..?

ஆனால் அதை  அரசியல்க்கட்சியாக

தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்தால் தமிழரின் பலத்தை அது பாதிக்கும்.

ஆனால்  அப்படியொரு நிலை வருவதற்கு கூட்டமைப்பே காரணமாக அமையப்போகிறது.

ஐனநாயகம் என சொல்லிக்கொண்டு

ஒரு சிலர் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பது ஆபத்தானது என்பதை கூட்டமைப்பின் தலைவர்கள் உணரணும். 

http://www.tamilmirror.lk/162210/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%AE

"அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைக்கப்போவதாகக் கூறி வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்டு கடந்த வாரம் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு வடக்கில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், அதன் அதிருப்தியாளர்கள் பலரும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றதால் இது கூட்டமைப்புக்கு எதிரான கூட்டு என்றும், கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேச ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. "

இப்படித்தான் செய்தி வாசித்தேன். இதில் எங்கிருக்கிறது கூட்டமைப்பு அங்கத்தினரின் பங்களிப்பு. சம்பந்தருக்கு எதிரானவர்கள் அவரது தலைமைக்கு எதிரானவர்கள் அனைவரின் கூட்டுத்தான் இது. இது அரசியல் கட்சியல்ல என்ற பாட்டைப் பாடத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் பேரவை கஜேந்திரர்களால் பயன்படுத்தப்படப் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Iraivan said:

தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இன்னும் சில தரப்புக்களும்  2010 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆர்வம் காட்டின. அதற்கான முன் முனைப்புக்கள் 2012ஆம் ஆண்டில் அதிகமாகின. அதன்போக்கில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அழைப்பின் பேரில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியன சந்திப்பொன்றை நடத்தின.

தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அமைப்பினைத் தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. அதை, தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும், கூட்டமைப்புக்குள் இருந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் பேரவை உருவாக்கத்துக்குப் பெரும் ஆதரவு அளித்தார். சுமார் 6 மணித்தியாலங்கள் நீண்ட இந்த இழுபறிகளின் பின், வேண்டா வெறுப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியப் பேரவையின் உருவாக்கம் தொடர்பிலான விடயத்துக்கு இணங்கினார். இதன்பிரகாரம், தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் சிவில் சமூக அமையம் சார்பில் சட்டத்தரணி வி.புவிதரன் மற்றும் சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், அது, அடுத்த கட்டத்தினை அப்போது எட்டவில்லை. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கத்தினை தவிர்த்து வருகின்றது என்கிற குற்றச்சாட்டினை தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முன்வைத்து வந்தன. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடக அறிக்கைகளில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஆரம்பம் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. - 

இதையும் வாசித்திருக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.