Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி மோதல்களில் ‘யுத்த சூனியப் பிரதேசம்’ என்று எதுவும் இருக்கவில்லை: பரணகம ஆணைக்குழு

Featured Replies

இறுதி மோதல்களின் போது யுத்த சூனியப் பிரதேசம் என்ற எந்தப் பகுதிகளும் காணப்படவில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை” என்று பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இறுதி மோதல்களின் போது, பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

http://www.whathits.com/puthinamnews

  • கருத்துக்கள உறவுகள்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.... மேலும் கட்டெறும்பு தேய்ந்து காணாமல் போகும்வரை தொடரும். :shocked: :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோத்தபாய ராஜபக்ச என்ற ஒருத்தரே பூலோகத்தில இருக்கல்லைன்னும்.. சிங்களவன் அறிக்கை தருவான்.. நாங்க அதையும் படிக்கத்தான் செய்வம். எல்லாம் எங்க தலைவிதி. ஏன்னா.. நாங்க சம்பந்தட்ட எல்லாத்தையும் அடுத்தவன் தானே தீர்மானிக்கிறான். எங்களுக்கு ஒன்றும் ஆகாதே. அடுத்தவன் வாயைப் பார்த்திட்டு இருந்தால்.. இதுதான் நிலை. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடக்கவே இல்லை என்பார்கள்

'இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது '

நூறு வீதம் உண்மை .அவர்கள் ஒளித்திருந்தது ,அதிலிருந்து தாக்கியது எல்லாம் நடந்ததுதான் .

அப்பாவி தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்த அநியாயத்திற்கு  நீதி கிடைப்பது கஷ்டமாக இருக்கு அதற்கு மேலால் இவர்கள் செய்த அநியாயங்கள் தான் .

ஐ நா வின் போர்குற்ற அறிக்கையை வாசித்தால் தெரியும் .

இவர்களா மக்களுக்காக போராட புறப்பட்டவர்கள் .தமக்கு என்று ஒன்று வரும் போது எதையும் செய்ய துணிந்துவிட்டார்கள் .சொந்த மக்களையே பலி கொடுக்க முனைந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

புலிகள் தோற்றம் பெறும்வரையில் அப்பாவி தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்த அநியாயத்திற்கு உலகமே வியக்கும் வண்ணம் சிங்கள அரசுகள் நீதி வழங்கி உலகப் புகழடைந்தனவா...??

நாங்கள் சிங்கள அரசுசெய்த அநியாயங்களைக் கேள்விப்பட்டவர்களல்ல! அனுபவித்தவர்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த சூனிய வலயம் அறிவிச்சது புலிகள் தோற்கப் போகிறார்கள் என்று தெரிந்த பின் தான். கருணாநிதி உந்த வலயத்துக்கு யுத்த நிறுத்தம் கேட்டு தான் 6 மணித்தியாலம் யூஸ் குடிக்காமல் இருந்தவர். அப்புறம்.. தாக்குதல் நிறுத்தமாம்.. என்று மேனனும் நாராயணனும் சொல்லிட்டினமாம் என்று பிரானப் முகர்ஜி.. கருணாநிதி ஜிக்கு சொன்னதாகச் சொல்லி.. யூஸ் குடிச்சவர். இவ்வளவு நடந்த வலயம் இருக்க.. இங்க ஒரு புலி வாந்தி.. அப்படி ஒரு வலயமே இல்லை என்று சிங்களவனோடு சேர்ந்து ஊதுது.

புலிகள் அந்தக் குட்டி வலயத்துக்க இருந்து அதுவும் கடற்கரையில இருந்து ஒளிச்சு அடிச்சு மொத்த சொறிலங்காவையும் கைப்பற்றி இருப்பினம் என்று இவை குண்டு போட்டவை கண்டியளோ.

ஆனையிறவு அடிக்கேக்க கூட புலிகள்.. சிங்களவனை ஒரு வழியால ஓடுவிட்டு அடித்தார்கள். ஓடுபவர்களை சில.. களத்தளபதிகள் சுடச் சொல்ல..  சுட வேண்டாம் என்று தலைவரே சொன்னதாக அன்று செய்திகள் வெளியாகி இருந்தன. அத்தகைய ஒரு பலமான நிலையில் சொறீலங்கா இராணுவம் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்த போது மக்கள் கூடும் இடங்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியதை அங்கு பணியாற்றிய ஒரு சில ஐநா அதிகாரிகள் கூட ஐநா விசாரணைக் கமிஷனிடம் முறையிட்டிருந்தார்கள். அங்கு ஒரு யுத்த தவிர்ப்பு வலயம் அறிவிக்கப்பட்டதை ஐநா மனித நேயப்பணியாளர்களே உறுதி செய்துள்ளனர்.

ஆனால் எங்கடையள் சிலதுக்கு இப்பவும் எல்லாம் புலி மயமாவே தெரியுது. இதுகள் இருக்கும் வரை சிங்களவனுக்கு தமிழனை.. கொன்று.. உலகத்தை ஏய்க்க யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. எங்கடையளே அதைச் செய்து முடிக்கும் ஈனத்தனம் நிறைஞ்சதுகளா இருக்குதுகள். பிறகென்ன. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

இவ்வளவு சிங்கள ஆர்மிகளை ஓட விட்டவர்கள் ,

பாவம் தமது இனத்திற்காக போராட போன ஒரே குற்றத்திற்காக மாற்று கருத்தாளர்களை முழு வழியும் அடைத்து போட்டு தள்ளினார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் முன்னால் நின்று சண்டை பிடித்தது. அவர்களை தப்ப விட்டால் மீண்டுமொரு சண்டையில் ஆர்வம் கொள்ளாமல் தப்ப தான் முயல்வார்கள் என்ற ரீதியில் தப்ப விட்டார்கள்.

ஓட்டுக்குழுக்கள் செய்த வேலைகளை நீங்கள் நாட்டில் இல்லாததால் அறியவில்லையோ தெரியவில்லை. மக்களுக்கு ராணுவத்தை விட இவர்களில் தான் கூடுதல் ஆத்திரம் இருந்தது. அதற்காக ஒன்றும் செய்யாத பல போராளிகள் பழு வாங்கப்பட்டதை நிச்சயமாக ஏற்க முடியாது. ஒட்டுக்குழுக்கள் இராணுவம் செய்யாத அட்டூளியங்களை செய்தார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக புலிகள் எல்லாம் புனிதர்கள் என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

. அதற்காக புலிகள் எல்லாம் புனிதர்கள் என்று சொல்லவில்லை.

ஒட்டுக்குழுக்கள் எல்லாம் புனிதர்கள் இல்லை என்றும் சொல்லமுடியாது......காரணம் புலிகளும் மனிதர்கள் ஒட்டுக்குழுக்களும் மனிதர்கள்......விரோதம் என்பது சக‌லருக்கும் பொதுவானது .எதோ ஈழம் என்ற கருத்தியலுக்காக தம் உயிர்களை சகல‌ரும் இழந்தார்கள்.....சிறிலங்கா என்ற கருத்தியலுக்காக சிங்கள இளசுகளும் இழந்திச்சினம்.....ஆனால் இது எதுவரை என்பது விடுகதை  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எதைச்செய்தாலும்

தனது அநீதிகள் தெரிந்தால் தமிழருக்கு ஏதாவது கொடுக்கவேண்டிவந்துவிடுமே என

இவ்வளவு அநியாயங்களையும் மறைத்து தொடர்ந்து ஒரே குரலில் போராடுகின்றான்

நம்மடையள்

தமிழரது அழிவுகளிலிருந்து ஏதாவது பெறுவதைவிடுத்து

பழி வாங்கும் உணர்வுடன் இன்னும் அலைகிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நம்மடையள்

தமிழரது அழிவுகளிலிருந்து ஏதாவது பெறுவதைவிடுத்து

பழி வாங்கும் உணர்வுடன் இன்னும் அலைகிறார்கள்....

அதுதான் மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

அதுதான் மனிதன்

அப்போ சிங்களவன் தெய்வமா???

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அப்போ சிங்களவன் தெய்வமா???

எனக்கு அவன் தெய்வமில்லை ஆனால் சிலருக்கு அவன் தெய்யோ.....

தப்பு செய்தவர்களை தண்டிப்பதற்கு தமிழன் சிங்களவன் என்ற வேறுபாடு பாடு இல்லை ,

எப்பவும் தன் பிள்ளை சுத்தம் அடுத்தவன் தான் கெடுத்தவன் என்ற பரம்பையில் வந்தவர்களுக்கு அது விளங்காது 

யுத்த சூனிய வலயத்திற்குள் புலிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தவில்லை பரணகம அறிக்கை பொய் என்று யு என் என்னிடம் நிரூபியுங்கள் ,

அதைவிட்டு பஸ் பிடித்து கொடி ஆட்டுவதில் எதுவும் ஆகாது .

யாழில வந்து தேவாரம் பாடி வேணுமென்றால் ஒரு பூசையும் வையுங்கோ .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

சிங்களவன் எதைச்செய்தாலும்

தனது அநீதிகள் தெரிந்தால் தமிழருக்கு ஏதாவது கொடுக்கவேண்டிவந்துவிடுமே என

இவ்வளவு அநியாயங்களையும் மறைத்து தொடர்ந்து ஒரே குரலில் போராடுகின்றான்

நம்மடையள்

தமிழரது அழிவுகளிலிருந்து ஏதாவது பெறுவதைவிடுத்து

பழி வாங்கும் உணர்வுடன் இன்னும் அலைகிறார்கள்....

விசுகர்! அதுகள் அப்படித்தான்....அதுதான் எமது விதி. போராடுவோம்... வெல்லுவோம்.

நன்றி கெட்ட விதுரா!
சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பினுக்கே-நாசம் தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய்..
மன்றிலுன்னை வைத்தான் எந்தை மதியை என்னுரைப்பேன்!

ஐவருக்கு நெஞ்சம்-எங்கள் அரண்மனைக்கு வயிறும்
தெய்வமன் றுனக்கே விதுரா! செய்து விட்டதேயோ?
மெய்வகுப் பவன்போல் பொதுவாம் விதி உணர்ந்தவன்போல்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய்.

மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் ம்ற்றலார்களோடு
முன்னர் நாங்கள் பணயம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
என்ன குற்றங் கண்டாய்? தருமம் யார் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கின்றோமோ? பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது படம் போட தமிழனை விட்டால் ஆளில்லை ,

சக்தி டி வி செய்திகள் முடிய தினமும் கடைசி நேரம் முள்ளிவாய்காலில்  சரணடைந்து பின்  விடுதலைபெற்று  ,

இன்று பலர் அங்கவீனர்களாக இருந்து அவர்கள் படும் அவலத்தை கட்டுவார்கள் .

போராட்டத்திற்கு அள்ளி கொடுத்ததில் ஒரு துளி கொடுத்தாலே அந்த குடும்பங்கள் சற்று நிமிர்ந்துவிடும் 

ஆனால் கொடி பிடித்த கூட்டம் இன்று நூறு டொலர் டிக்கெட்டில் வைனுடன் பொங்கல் விழா செய்கின்றார்கள் .

அதைவிட துன்பம் இணையத்தில் இன்றும் தேசியம் வளர்க்கும் கயவர்கள் கூட்டம் .

முதல் மனிதர்களை மனிதளாக பார்க்க மதிக்க பழகுங்கள் அதன்பிறகுதான் அடுத்தது எல்லாம் .

நடிக்கவேன்று வேஷம் போட்டவர்களுக்கு அதை கழற்றுவது கஷ்டம் தான் 

நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல சிங்களமும் இப்படியான அறிக்கைகளால் போர்குற்றம் நடந்ததை தானே ஒப்புக்கொள்ள முயல்கிறது. ரணில் வேற அந்த பக்கத்தால சரணடைந்தவர்கள் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று கையை தூக்கிறார். சரணடைந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் ராணுவம் சரணடைந்தவர்களை கொலை செய்து போர்க்குற்றம் புரிந்தது என்று அவரே ஒத்துகொள்கிறாரா? 

கூட்டமைப்பு இந்த நேரத்தில் தான் கொஞ்சம் உருப்படியாக வேலை செய்து பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் இவை பற்றி விவாதிக்க வேண்டும். வழமை போல இப்பவும் மவுனமாக இருந்தார்கள் என்றால் மக்கள் நிச்சயம் அடுத்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தெனாலி said:

ஆக்கபூர்வமான கருத்து

நன்றி  

31 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! அதுகள் அப்படித்தான்....அதுதான் எமது விதி. போராடுவோம்... வெல்லுவோம்.

நன்றி கெட்ட விதுரா!
சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பினுக்கே-நாசம் தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய்..
மன்றிலுன்னை வைத்தான் எந்தை மதியை என்னுரைப்பேன்!

ஐவருக்கு நெஞ்சம்-எங்கள் அரண்மனைக்கு வயிறும்
தெய்வமன் றுனக்கே விதுரா! செய்து விட்டதேயோ?
மெய்வகுப் பவன்போல் பொதுவாம் விதி உணர்ந்தவன்போல்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய்.

மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் ம்ற்றலார்களோடு
முன்னர் நாங்கள் பணயம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
என்ன குற்றங் கண்டாய்? தருமம் யார் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கின்றோமோ? பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?

இதெல்லாம்  தோலில் உணர்வுள்ளவர்களுக்கு......?

  • கருத்துக்கள உறவுகள்

"தப்பு செய்தவர்களை தண்டிப்பதற்கு தமிழன் சிங்களவன் என்ற வேறுபாடு பாடு இல்லை ..."
ஐயா ..... நீங்கள்  எப்போது ஐயா தப்பு செய்த சிங்களவனை தண்டிக்க போறீர்கள்!!! 
அவனுக்கு முதுகு சொரியத்தான் லாயக்கு.

"எப்பவும் தன் பிள்ளை சுத்தம் அடுத்தவன் தான் கெடுத்தவன்" ...
இல்லை இல்லை உங்களுக்கும் உங்களைப் போல ஒரு சில "புலி காய்ச்சல்"  கொண்டவர்களுக்கு  இந்த வாசகம் தலை கீழ்...
எப்பவும் என்  பிள்ளை அசுத்தம் அடுத்தவன் பிள்ளை பரிசுத்தம்.

புலிகளுக்கு காசு அனுப்பி போராட்டத்துக்கு உறுதுணையாக நின்றால் தவறு.
புலிக்கொடி தூக்கி ஆதரவு தெரிவித்தால் தவறு.
இனஅழிப்பு பற்றி கதைத்தால் தவறு.
ஆக்கபூர்வமாக இங்குள்ள அரசியல்வாதிகளோடு புலம் பெயர் தமிழர்கள்  கைகோர்த்தால் தவறு.

"நூறு டொலர் டிக்கெட்டில் வைனுடன் பொங்கல் விழா செய்தால் தவறு " 
அதே கூடத்தில் சுமந்திரனை கூப்பிட்டு ...சம்பந்தரை கௌரவப்படுதினால் உங்களுக்கு இரட்டிப்பு சந்தோசம்.
***********
என்ன ஒரு முரண்பாடு.... இதற்கு எல்லையே இல்லையா ?

Edited by நியானி
சக கள உறுப்பினர் மீதான சீண்டல் கருத்து நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இதெல்லாம்  தோலில் உணர்வுள்ளவர்களுக்கு......?

அடுத்தவன் தோலில் செருப்புத் தைத்து போடுவதை விட தோலில் உணர்வில்லாமல் இருப்பது எவ்வளவோ மேல்!<_<

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது படம் போட தமிழனை விட்டால் ஆளில்லை ,

சக்தி டி வி செய்திகள் முடிய தினமும் கடைசி நேரம் முள்ளிவாய்காலில்  சரணடைந்து பின்  விடுதலைபெற்று  ,

இன்று பலர் அங்கவீனர்களாக இருந்து அவர்கள் படும் அவலத்தை கட்டுவார்கள் .

போராட்டத்திற்கு அள்ளி கொடுத்ததில் ஒரு துளி கொடுத்தாலே அந்த குடும்பங்கள் சற்று நிமிர்ந்துவிடும் 

ஆனால் கொடி பிடித்த கூட்டம் இன்று நூறு டொலர் டிக்கெட்டில் வைனுடன் பொங்கல் விழா செய்கின்றார்கள் .

அதைவிட துன்பம் இணையத்தில் இன்றும் தேசியம் வளர்க்கும் கயவர்கள் கூட்டம் .

முதல் மனிதர்களை மனிதளாக பார்க்க மதிக்க பழகுங்கள் அதன்பிறகுதான் அடுத்தது எல்லாம் .

நடிக்கவேன்று வேஷம் போட்டவர்களுக்கு அதை கழற்றுவது கஷ்டம் தான் 

தான் திருந்த உலகம் தானே திருந்தும். 

On 1/29/2016 at 6:23 PM, arjun said:

'இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது '

நூறு வீதம் உண்மை .அவர்கள் ஒளித்திருந்தது ,அதிலிருந்து தாக்கியது எல்லாம் நடந்ததுதான் .

அப்பாவி தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்த அநியாயத்திற்கு  நீதி கிடைப்பது கஷ்டமாக இருக்கு அதற்கு மேலால் இவர்கள் செய்த அநியாயங்கள் தான் .

ஐ நா வின் போர்குற்ற அறிக்கையை வாசித்தால் தெரியும் .

இவர்களா மக்களுக்காக போராட புறப்பட்டவர்கள் .தமக்கு என்று ஒன்று வரும் போது எதையும் செய்ய துணிந்துவிட்டார்கள் .சொந்த மக்களையே பலி கொடுக்க முனைந்தார்கள் .

துரோக தமிழன் எப்ப திருந்துவான் ...சிங்களவனின் காலை நக்க தான் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபாதாசன் said:

துரோக தமிழன் எப்ப திருந்துவான் ...சிங்களவனின் காலை நக்க தான் சரி 

தமிழினத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய்.... இராவணன் காலம்தொட்டே தொடர்வதை அறியமுடிகிறது. இது தீராது, மாற்ற முடியாதது. :( 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எந்தக்கொடுமையைச் செய்தாலும் அவர்கள் சார்ந்த ஆணைக்குழுக்கள் அமைப்புக்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. புலிகள்தான் எல்லாக்குற்றங்களையும் செய்தார்கள் என்று நாக் கூசாமல் பொய் சொல்வார்கள்.  இதை எதிர்த்து எந்த ஒரு சிங்களவனும் அவன் அரசதரப்போ எதிர்த் தரப்போ அல்லது கொம்மினியூஸ்ட்டுகளோ யாராக இருந்தாலும் இல்லை ஆணைக்குழு சொல்வது பொய் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.ஆனால் எங்கள் இனத்தின் ஒட்டுக் குழுக்கள் எல்லாம் புலிகள்தான் செய்தது. என்று கண்ணால் கண்டவர்கள் போல் ஆணைக்குழு சொல்வது சரியே என்று வாதிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தமpழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதிலோ அல்லது உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதிலோ எந்த அக்கறையும் கிடையாது. அவர்களுக்கு தேவை எல்லாக் குற்றங்களுக்கும் புல்pளே காரணம் என்ற தீர்ப்பு வந்தால் அதை வைச்சு சுய இன்பம் அனுபவிப்பார்கள் அவ்வளவுதான்.யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் அனைவரையும் புலிகளே கொன்றார்கள் என்றால்  பல்குழல் ஆட்டிலெறிகள் கனரக பPரங்கிகளை  அந்த இடத்தில் காக்கா சுடவா வைத்திருந்தார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.