Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி

Featured Replies

ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி

ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி

ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் நாட்டின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜேர்மனியின் பெர்லின் நகரில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை ஜேர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன இரு நாடுகளுக்கிடையிலும் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://tamil.adaderana.lk/news.php?nid=77140

(அத தெரண தமிழ்)

Präsident von Sri Lanka, #Sirisena, bei Kanzlerin #Merkel zu Gast. PK ca. 12.15 Uhr, live https://t.co/0lQLkkBo9l

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

President Sirisena meets German Chancellor Angela Merkel (Video)

https://www.facebook.com/newsfirst.english/videos?fref=photo

இந்த குளிருக்கையும் வேட்டியோடை....ஜக்கற்றும் இல்லாமல்.........தேசபக்தியாய் இருக்குமோ?????:grin:

  • தொடங்கியவர்

இராணுவ மரியாதை

12717464_1053195041407420_56114995147158

12742756_1053195064740751_35529867268820

11215079_1053195101407414_33595950545736

12717829_1053195128074078_73285940253677

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நவீனன் said:

ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி

ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி

ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் நாட்டின்

இதேவேளை ஜேர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன இரு நாடுகளுக்கிடையிலும் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://tamil.adaderana.lk/news.php?nid=77140

(அத தெரண தமிழ்)

Präsident von Sri Lanka, #Sirisena, bei Kanzlerin #Merkel zu Gast. PK ca. 12.15 Uhr, live https://t.co/0lQLkkBo9l

கடன் வாங்கும் ஒப்பந்தங்களைக் கைவிட்டு....... உருப்படியான ஒரு அரசியல் யாப்பை உருவாக்கும் யோசனைகளையும்..... ஜேர்மன் நாடு  அரசியல் யாப்பு முறையை நடைமுறைப்படுத்தும் திறமையையும் அறிந்து சென்றால் பிரயோசனமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கடப்பா எங்கட ஜெர்மன் வாழ் தமிழர்கள் போராட்டம் / எதிர்ப்பு ஒன்றையும் காணேல்ல. லண்டன் தமிழர்கள் திறமடப்பா மகிந்த லண்டன் வந்தபோது ஒட, ஒட விரட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ரணில் லண்டன் வந்த போது முன்னாள்.. போராட்டக்காரர்கள் அவரை.. சந்திச்சு விருந்துண்டதாகக் கேள்வி.

எங்கட ஆக்கள்.. சிங்களவனோட கைலாகு கொடுப்பதில் முண்டி அடிக்கும் ஒரு ஈனப்பிறப்புகள் என்பது தெரிந்து தான் சிங்களவனும் சர்வதேசமும் ஹிந்தியமும் எங்களைப் போட்டு அடியோ அடியோன்னு அடிச்சு.. மிதிக்குது.

எங்கடையள்.. ஏதோ நடக்கப் போகுது என்ற பழைய படி.. கனவில்...................................................?! இதே அதுங்க பிழைப்பா போச்சு. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து அம்மணி

அங்க ஒருத்தர்

நேற்றிரவு ஒன்றாக அப்பம் சாப்பிட்டார்

அடுத்தநாள் கழுத்தழுத்தார் என புலம்பித்திரிகிறார்.....

இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு கிடைத்த பெருமை இது ,

இதில் நாங்களும் ஒரு பங்காளிகள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பங்காளி... 

1 hour ago, colomban said:

அட எங்கடப்பா எங்கட ஜெர்மன் வாழ் தமிழர்கள் போராட்டம் / எதிர்ப்பு ஒன்றையும் காணேல்ல. லண்டன் தமிழர்கள் திறமடப்பா மகிந்த லண்டன் வந்தபோது ஒட, ஒட விரட்டினார்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சினை "கொழும்பான்" ?
ஒரு காலத்தில் புலத்தில் உள்ளவன் கொடி தூக்கினால் உங்களை போன்றோர் மூக்கை சிந்துனீர்கள், குய்யோ முறையோ என்று ஓலமிட்டீர்கள் ...
இப்போ அவர்கள் எதையோ ஒன்றை நம்பி அமைதியாக இருக்கிறாகள். இப்போ உங்களுக்கு எங்க குடையுது?
சக தமிழனை இளக்காரமாக பார்ப்பதை விட்டு உருப்படியாக உறவாடுங்கள் நண்பரே.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Sasi_varnam said:

பாவம்

அம்பை நோவானேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய உலக அரசியல் அரங்கில் 
வெட்டி ஒடும் ஒரே ஒரு அரசியல்வாதி இந்த அம்மையார்தான் !

ஜேர்மன் மக்கள் (வாழும் தமிழர்கள் உட்பட) இவருக்கு நன்றி கடன் 
உரித்துடையவர்கள்.

கிரீஸ் அடி பாதளம் போனபோது இரண்டு தடவை சொந்த செலவில் 
தூக்கியவர்.
வோல்ஸ்வாகன் அடிபாதளத்தில் வீழ்ந்த போது நம்பிக்கை கொடுத்தவர் 

தற்போதைய உலக சந்தைகள் ஜெர்மனியை தவிர்த்து 
செங்குத்தாக வீழ்ந்துகொண்டே போகிறது.

இத்தனை லட்சம் அகதிகளை உள்வாங்கியும் 
வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை மற்றைய நாடுகளுடன் 
ஒப்பிட்டால் மிக குறைவு.

துருக்கியின் குணம் அறிந்து கைவிட்டவர்.

மைத்திரி நேர்மையுடன் இருந்தால் 
இவருடைய வாக்கு எதுவோ அதை நிறைவேற்றுவார் ! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

அட எங்கடப்பா எங்கட ஜெர்மன் வாழ் தமிழர்கள் போராட்டம் / எதிர்ப்பு ஒன்றையும் காணேல்ல. லண்டன் தமிழர்கள் திறமடப்பா மகிந்த லண்டன் வந்தபோது ஒட, ஒட விரட்டினார்கள்.

கெஞ்சக் கெஞ்ச tw_blush: சுமந்திரனை ஆஸியில் இருந்தும் விரட்டின ஆக்கள்! 

  • தொடங்கியவர்

ஜனாதிபதி மாளிகை Bellevue இல்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

வணக்கம் பங்காளி... 

உங்களுக்கு என்ன பிரச்சினை "கொழும்பான்" ?
ஒரு காலத்தில் புலத்தில் உள்ளவன் கொடி தூக்கினால் உங்களை போன்றோர் மூக்கை சிந்துனீர்கள், குய்யோ முறையோ என்று ஓலமிட்டீர்கள் ...
இப்போ அவர்கள் எதையோ ஒன்றை நம்பி அமைதியாக இருக்கிறாகள். இப்போ உங்களுக்கு எங்க குடையுது?
சக தமிழனை இளக்காரமாக பார்ப்பதை விட்டு உருப்படியாக உறவாடுங்கள் நண்பரே.

சசி இங்கு யாரையும் இளக்காரமாய் பார்க்கவில்லை, நடந்த உண்மையை தானே ஐயா கேட்கின்றேன்.

சில வருடங்களுக்கு முன் மகிந்த இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை ஒட ஒட ஐரோப்பாவாழ் தமிழர்கள் விட்டினார்கள், இப்போ இலங்கை ஜனாதிபதியாக மைத்திரி ஐரோப்பா வந்துள்ளார். எங்க அந்த ஒட ஒட கொடிபிடித்து விரட்டிய கூட்டத்தை காண்வில்லை எனதான் கேட்கின்றேன், இதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்

போற இடங்களிலாவது சிறுபான்மை இன மக்களை எப்படி அரவணைத்து போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, colomban said:

அட எங்கடப்பா எங்கட ஜெர்மன் வாழ் தமிழர்கள் போராட்டம் / எதிர்ப்பு ஒன்றையும் காணேல்ல. லண்டன் தமிழர்கள் திறமடப்பா மகிந்த லண்டன் வந்தபோது ஒட, ஒட விரட்டினார்கள்.

ஐயா கலம்பன்! போராட்டம் எதிர்ப்பு என்பதெல்லாம் தேவைகள் ஏற்படும்போது தானாக வருபவை. நீங்கள் உங்கள் நண்பர்களைப்போல் எதற்கெடுத்தாலும் எல்லா பகுதியிலும் புலிவாந்தி எடுப்பவர்கள் அல்ல இந்த விடுதலை விரும்பிகள்.

  • தொடங்கியவர்

ஜெர்மன் சான்சலர் மெர்க்கலுடன் ஜனாதிபதி மைத்திரிபால பேச்சுவார்த்தை

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜெர்மனிய சான்சிலர் ஏங்கலா மேர்க்கல்

ஜெர்மனிக்கான மூன்று நாட்கள் அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்நாட்டு சான்சலர் ஏங்கலா மேர்க்கலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவ அணிவகுப்புடன் மரியாதை செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

160217133038_president_meets_german_fede

 ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவ அணிவகுப்புடன் மரியாதை செலுத்தப்பட்டபோது

இன்றைய சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக, பொருளாதார மற்றும் இராஜீய உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துயாரைடப்பட்டதாக அந்த பிரிவின் தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160217_maithripala_angelamerkel_meet

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

ஐயா கலம்பன்! போராட்டம் எதிர்ப்பு என்பதெல்லாம் தேவைகள் ஏற்படும்போது தானாக வருபவை. நீங்கள் உங்கள் நண்பர்களைப்போல் எதற்கெடுத்தாலும் எல்லா பகுதியிலும் புலிவாந்தி எடுப்பவர்கள் அல்ல இந்த விடுதலை விரும்பிகள்.

அப்ப இந்த மாசம் தேவைகள் ஒண்டும் இல்லைப் போல! <_< நான் சொன்னது தேசியத்துக்கான தேவைகள்! tw_blush:

  • தொடங்கியவர்

12742025_1053250338068557_64106320954582

12728916_1053384234721834_79692954699516

12715693_1053384248055166_52627230441825

12728916_1053384368055154_11209606745682

12744168_1053384414721816_49353588654222

The Sri Lankan delegation headed by President Maithripala Sirisena met with
Dr. Frank Walter Steinmeier the federal minister of Foreign affairs of Germany. Several MOUs were also signed during the meeting

  • கருத்துக்கள உறவுகள்

 சீனாவா மேற்குலகா என்ற கொள்கையில் மேற்குலகை முத்தமிட்ட தலைவர்கள் தப்பிபிழைத்தார்கள் என்பதற்கு இது இன்னுமொரு சான்று..........இதுக்குள்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, வாலி said:

அப்ப இந்த மாசம் தேவைகள் ஒண்டும் இல்லைப் போல! <_< நான் சொன்னது தேசியத்துக்கான தேவைகள்! tw_blush:

அவலை நினைத்து வெறும் உரலை தினசரி இங்கே இடிக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, நவீனன் said:

12728916_1053384234721834_79692954699516

12715693_1053384248055166_52627230441825

12728916_1053384368055154_11209606745682

The Sri Lankan delegation headed by President Maithripala Sirisena met with
Dr. Frank Walter Steinmeier the federal minister of Foreign affairs of Germany. Several MOUs were also signed during the meeting

இவையெல்லாம் வியாபார ஒப்பந்தங்கள். இதையே சீனாவும் மகிந்தவுடன் செய்தது.இந்தியாவும் செய்தது. ஏதோ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு ஒப்பந்தம் செய்வது போல் இங்கே ஒருசிலர் குதுகாலிக்கின்றனர்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் சிங்களவன் ஐரோப்பா அமெரிக்காவை தொட்டாலே சாதனை என்றாக்கிட்டாங்க கு.சாண்ணா. நாடு கடன் என்று விற்கப்படுவது குறித்து ஒரு அக்கறையும் இல்லை. அந்த வகையில் தமிழர்களுக்கு வெற்றி தான்.  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.... நீங்க வேறை. சுமந்திரன் கிரிக்கெட் பார்க்க அவுஸ்ரேலியா போனாலும் அது இலங்கை தமிழ் அரசியலிலை முக்கிய அம்சமாம்.......அட்ர்ர்ர்ர்ர்ர்ரா.....அட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அட.... நீங்க வேறை. சுமந்திரன் கிரிக்கெட் பார்க்க அவுஸ்ரேலியா போனாலும் அது இலங்கை தமிழ் அரசியலிலை முக்கிய அம்சமாம்.......அட்ர்ர்ர்ர்ர்ர்ரா.....அட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராtw_blush:

அதுமட்டுமா அண்ணை ....உடம்பிற்க்கு முடியாமல் வெளி நாட்டு ஆஸ்பத்திரியில் படுத்தாலும் இலங்கை தமிழ் அரசியலில் வெடி அம்சமாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.