Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 ஏதேது இதுக்கு தனியா ஒரு விசாரணை கமிசன் வைக்க வேணும் போலிருக்கே.

சில சமயங்களில் பெரிய புலயாவாரிகளை நான் வறுத்தெடுக்கும் போது, சிலர் குத்தி முறிவதன் அர்த்தம் இப்ப விளங்குது.

ஊரான் திருட்டை நீ மறைச்சா, உந்திருட்டு தானா மறைஞ்சிடும் ?

ஆனாலும் இதே ஆளைப் பற்றி இதே மாதிரியான குற்றச் சாட்டை முன்வைக்கும் முதல் ஆள் அஞ்சரன் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

  • Replies 124
  • Views 10.4k
  • Created
  • Last Reply
25 minutes ago, goshan_che said:

 ஏதேது இதுக்கு தனியா ஒரு விசாரணை கமிசன் வைக்க வேணும் போலிருக்கே.

சில சமயங்களில் பெரிய புலயாவாரிகளை நான் வறுத்தெடுக்கும் போது, சிலர் குத்தி முறிவதன் அர்த்தம் இப்ப விளங்குது.

ஊரான் திருட்டை நீ மறைச்சா, உந்திருட்டு தானா மறைஞ்சிடும் ?

ஆனாலும் இதே ஆளைப் பற்றி இதே மாதிரியான குற்றச் சாட்டை முன்வைக்கும் முதல் ஆள் அஞ்சரன் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

நாம் நம்பிக்கை வைக்கும்  ஒருவர்  எமக்கு  உண்மையை மறைத்து கதை சொல்லி பணம் கேட்கிறார்  அவர்  ஒப்பிரேசன் என சொன்ன  நாளில் அவருக்கு  ஆடம்பரமாக திருமணம் நடக்கு ...அந்த படம் சமூக தளத்தில் வருகிறது எமக்கு  அதிர்ச்சி. ..

இப்பொழுது புரிகிறது கூட்டுக்களவாணிகள் மெதுவாக வெளியில் வருவது டீல் எங்க  என  அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலை உள்பெட்டி கில்மா திருடர் கூட்டம் மாட்டுப்பட்டதும்.. நல்லாவே பிளேட்டை திருப்பிப் போடுகிறார்களாம் எங்கிறது சமூகவலை கசிவுத் தகவல்.

குறித்த போராளிக்கு தாங்களும் செய்வதாகச் சொன்ன உதவியை நிறுத்தினதே அவர் வெளிநாட்டு பொண்ணைக் கட்டிட்டார் என்று தானாம். இப்ப என்னடாண்ணா.. அவரின் கல்யாணம் தடல்புடலா நடந்ததால் அதிர்ச்சி அடைஞ்சிட்டினமாம். அவர் கல்யாணம் கட்டின பிறகு தான்.. அதுவும் அவரின்.. தாயகத்தில் உள்ள சொந்த மச்சினியை பாதுகாப்பு நிமித்தம் கட்டின பின் தான்.. அவரின் எதிர்கால நலன் கருதி கால் சத்திரசிகிச்சைக்கு  மக்கள் உதவி கோரினராம்.

ஆனால்.. மேற்படி முன்னாள் போராளிகள் என்று கொண்டு.. சமூகவலை உலாவரும் வேசக் கும்பல் தாங்களே ஒரு கட்டுக்கதையை உருவாக்கி அவர் வெளிநாட்டுக்காரியோட செட்டில் அவருக்கு என்ன உதவின்னு கேட்டு.. தாறது என்று சொன்னதையும் தரமாட்டம் என்று சொன்னதுமில்லாமல்.. தங்களை யோக்கியம் என்று காட்ட மற்றவர்களிடமும் கட்டுக்கதை பரப்பி விட்டனராம். நல்லா புலி பற்றி 2009 மே க்குப் பின் புனை கதை எழுதிற ஆக்களின் வால்கள் தானாம் இவையும். அதனால கதைக்குப் பஞ்சம் இல்லையாம்.

இப்ப என்னடாண்ணா.. அவர் கல்யாணம் கட்டினதைக் கண்டிட்டு காசு கொடுக்காமல் விட்டவையாம். முதல்ல சொன்னதை மறந்திட்டினம் போல. தொடர்பு கொள்ள முடியாமல் உறுதிப்படுத்த முடியாமல் கொடுக்காமல் விட்டம் என்று. 

இதெல்லாம் தமிழினி அக்கா வீரச்சாவுக்குப் பின்னர் நடந்த சம்பவங்களாம். இது குறித்த போராளிக்கு திருமணம் நடந்த பின் நிகழ்ந்த சம்பவமாம்.

கூட்டுக்களவாணிங்க யார் என்பதை சமூகவலையில் நடக்கும் கூத்துக்களை பகிரப்படுத்தினால் தெரிய வரும். ஆனால் அந்தப் போராளி கேட்காமலே மக்கள் சிலர் தாமாக முன்வந்து செய்த வந்த உதவி தானாம் இது. அதனால் அந்தப் போராளி எந்தச் சிக்கலுக்கும் இதனால் ஆகக் கூடாது என்கிறார்கள் உண்மையில் அந்த முன்னாள்..போராளி மீது அக்கறையுள்ள மக்கள்.

ஆனால் சமூகவலை உள்பெட்டி கில்மாக்கள் என்ன செய்கின்றன என்பதற்கு.. யாழ் வாசகர்கள் தான் எனிச் சாட்சி. :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

தாறம் என்று  சொல்லி பின்ன.. ஏமாற்றம் பண்ணி பிழைப்பு நடத்துவதும் நடந்துகிட்டு இருக்குது. இதுங்க மனிசரா.. இல்லை... ஓட்டப்பத்தையும் பிச்சுத் தின்னும் வானரங்களா...?! 

இத்தனைக்கும் அந்தப் போராளி கேட்கவில்லையாம். அவரே யாரையும் கேட்க வேண்டாம் பட்ட கஸ்டத்தோடு இதையும் படுகிறேன் என்று தானாம் சொன்னது. பாவம் பார்த்தது  அப்பாவி மக்கள். அடப்பாவிகள் இடையில் புகுந்து தாங்களும் முன்னாள் போராளிகள் என்ற வேசம் கலையாமல் இருக்க.. புகுந்து விளையாட வெளிக்கிட்டு.. இப்ப குட்டு உடைஞ்சதும்.. பிளேட்டை மாத்திப் போடுவதாக..

இந்தமாதிரி வானரங்களையும், அடப்பாவிகளையும் புலம்பெர்ந்து வாழும் நாடுகளிலும் உருவாக்கித் தமிழர் போராட்டங்களை மழுகடிப்பதற்கு மகிந்த ஒதுக்கிய மில்லியன்பற்றி முன்பு செய்திகள் வந்தது ஆனால் யார் யார் அதனைப் பெற்றுக்கொண்டார்கள் என்ற கணக்குவிபரம் வரவில்லை. தற்போது கணக்கில் நான் புலி என்று சிலர் வெளிக்கிட்டுள்ளனர். புதுக்கணக்குகளும் தருவதாக சத்தியம்பண்ணியுள்ளனர். மகிந்த கணக்கும் வருமா என்று எதிர்பார்க்கிறேன். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

மகிந்த இப்ப இருக்கிற நிலையில...அவரே கணக்கை வெளியால விட்டாலும் விடுவார் போல கிடக்கு!

கொஞ்சம் பொறுத்திருங்கள், நண்ப !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாரிஸ் நகரில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமான லா செப்பலில் இடம்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 17 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கையில் காயமடைந்த நிலையில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் உயிர் தப்பியிருந்தார்.

இதற்கு முன்னர் 1996 ஆம் ஊடகவியலாளர்களான கந்தையா கஜேந்திரன் மற்றும் கந்தையா பேரின்பநாதன், 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பருதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தப் படுகொலைகளுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் அரசை வலியுறுத்தினர்.

perans1

http://lankasee.com/

இந்த பிரச்சனை சம்மந்தமாக  எவரும் பெரிதாக கதைக்கவில்லை புலிக்காசை வைத்திருப்பவர்கள். .ஆட்டையை போட்டவர்கள் தான் பயத்தில் குத்தி முறிகிறார்கள். 

ஆக..

பரம்பரை புலிகளினால் இங்கு பிரச்சினை  இல்லை. ..பஞ்சத்தில் புலியானவர்கள் இங்கு பிரச்சினையே. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின சமூகவலை உள்பெட்டி.. கில்மா குறூப்பின் குட்டு உடைஞ்சது.. சமூகவலையில் அதிருதாமில்ல. குற்றமுள்ள நெஞ்சுகள் நிறைய குறுகுறுக்குதுகளாமில்ல. இதில மற்றவன் மேல அபாண்டப் பழிகளும்.. சம்பவங்களை எதிரிக்கு சார்ப்பாக திசை திருப்பும் புனைவுகளும்.. போலிக் கதைகளும்.. திசை திருப்பல்களும்...  இதுவே இந்த நாசகாரிகளின் நோக்கம். இதனை முன்னெடுப்பவர்களை மக்கள் உணரவும் விழிப்போடு இருந்து கண்காணித்து இனங்கண்டு..தவிர்க்கவும் வேண்டும். அப்போது தான் எம் இனம் உய்யும். tw_blush:

2009 இற்கு பிறகு இப்படி போலித்தனமாக மாறியவர்கள் நிறைய பேர் ஆனால் அதற்காக அவர்களை இப்ப புலி என்று எப்படி சொல்ல முடியும் அவர்களும் கருணா மாதிரி தான் .. புலி என்று சொல்லாமல் துரோகிகள் என்று அவர்களை பற்றி கருத்திடுங்கள் .....வெளிபடையாக இப்ப யார் உண்மையான புலி என்று அறியவும் முடியாது ,,,அதுவும் இப்ப நல்லதல்ல .....புளொட் எல்லாம் ஒரு இயக்கம் என்று ....அதனை சார்ந்தவர்கள் சும்மா இங்க அல்ட்டுவதுகேல்லாம் விளக்கம் எழுத தேவை இல்லை ....ஒருவேளை முன்னால் மகிந்தவின் ஆளாகவும் இருக்கலாம் ....இதனை இல்லை என்று நிருபிக்க முடியுமா ......

பல பய பிள்ளைகள் ரொம்ப நடுங்குவது போலிருக்கு ,

யாருக்கு தெரியும் அடுத்த வெடி எங்கு விழுகின்றது  என்று .

மடியில் கனம் இருந்தால் தானே  பயம் வரவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபாதாசன் said:

2009 இற்கு பிறகு இப்படி போலித்தனமாக மாறியவர்கள் நிறைய பேர் ஆனால் அதற்காக அவர்களை இப்ப புலி என்று எப்படி சொல்ல முடியும் அவர்களும் கருணா மாதிரி தான் .. புலி என்று சொல்லாமல் துரோகிகள் என்று அவர்களை பற்றி கருத்திடுங்கள் .....வெளிபடையாக இப்ப யார் உண்மையான புலி என்று அறியவும் முடியாது ,,,அதுவும் இப்ப நல்லதல்ல .....புளொட் எல்லாம் ஒரு இயக்கம் என்று ....அதனை சார்ந்தவர்கள் சும்மா இங்க அல்ட்டுவதுகேல்லாம் விளக்கம் எழுத தேவை இல்லை ....ஒருவேளை முன்னால் மகிந்தவின் ஆளாகவும் இருக்கலாம் ....இதனை இல்லை என்று நிருபிக்க முடியுமா ......

பி.தாசன், உங்கள் கடைசி வரியை பாத்தால், நீங்கள் இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஆதரிப்பவர் போல இருக்கு! அங்கேயும் இப்படித் தான், அரசு ஒருவர் மீது குற்றம் சுமத்தும். தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப் பட்டவரின் பொறுப்பு!

(உங்கள் ஸ்ரைலில் எனக்கும் நீங்கள் இணையவழியில் புலிகளின் பெயரில் மோசடியாகக் காசு சேர்க்கும் ஒருவராக இருக்கலாமோ என்ற சந்தேகம் வருகிறது. இல்லையென்று நிரூபிக்க முடியுமா..?:cool:

1 hour ago, Justin said:

இதன் உண்மையான பொருள் , நிறைய உண்மையானவர்களும் உள்ளார்கள் ..அதே நேரம் துரோகிகளும் உள்ளார்கள் ...ஆனால் இவர்களை களைவது ரொம்ப கஷ்டம் ...இப்ப உள்ள நிலைமையில் இப்படியான விடயங்களை முக்கிய படுத்தாமல் செய்ய வேண்டியவைகளை செய்தால் நல்லம் ....இதனை தான் விளக்க முற்படுகிறேன் ...மற்றும் படி குற்றம் சுமத்துவது என் செயல் அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,அஞ்சரன் வகையறாக்கள் தான் அந்தப் போராளிக்கு உதவுறதென்று சொல்லி ஏமாத்திப் போட்டினம். உங்களுக்குத் தான் நல்ல தாராள மனசாயிட்டே அந்தப் போராளிக்கு உதவியிட்டீங்களா?...அல்லது நீங்களும் வாய்ப் பேச்சா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபாதாசன் said:

தாயகத்தில் இருக்கும் முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்குக் கொடுக்கப் பட வேண்டிய செல்வம் நீங்கள் குறிப்பிடும் "சில" களைகளிடம் அகப்பட்டிருக்கிறது! அதை பெரிது படுத்தாமல் இன்னும் முன்னர் பணம் கொடுத்த மக்களிடமே போய் காசு வாங்கி அதிலயும் கொஞ்சம் சுருட்ட ஒரு கூட்டம் அலையுது என்று தெளிவாத் தெரியுது! இதை விட முக்கியமாக என்ன வேலை இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நெடுக்ஸ்,அஞ்சரன் வகையறாக்கள் தான் அந்தப் போராளிக்கு உதவுறதென்று சொல்லி ஏமாத்திப் போட்டினம். உங்களுக்குத் தான் நல்ல தாராள மனசாயிட்டே அந்தப் போராளிக்கு உதவியிட்டீங்களா?...அல்லது நீங்களும் வாய்ப் பேச்சா

உங்களை மாதிரி இல்லை. ஈயாமல்.. கதையளக்கிறதில்லை. tw_blush: (சீண்டினால் சீண்டலுக்கு ஏற்ற பதில் தான் வரும்.)

எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு எவருக்கு எப்படி உதவனும் என்பதை நாங்கள் தீர்மானிக்கும் திறன் வைச்சிருக்கிறம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2016 at 0:53 PM, arjun said:

ஆண்டுகளை பாருங்கள் ,

2009 இற்கு எதை செய்தும் என்ன ஆகாப்போகுது 

அதைவிட பகிடி இந்தியாவும் தடை தமிழ் நாட்டை ஆளுபவர்களும் எதிர்ப்பு சீமானின் ஆதரவு எங்களுக்கு போலிருக்கு பான்சின் நியுசிலாந்து டச்சு நீதி மன்ற தீர்ப்பு பற்றிய கருத்துக்கள் .

சர்வதேசம் என்றால் என்னவென்று தெரியாது 

இந்தியா என்றால் யாரென்று தெரியாது 

தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர்கள் யாரென்று தெரியாது 

ஆனால் ஒரு சுப்பன் சொன்னான் குப்பன் சொன்னான் என்று நியாயப்படுத்தல் 

இருபது வருடமாக எந்த ஒரு நாட்டிடமும்  இருந்து ஒரு அங்கீகாரமோ கடைசி ஆதரவோ பெறமுடியவில்லை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவவை மட்டும் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிய உங்களுக்கு சர்வதேசம் என்றால் என்ன என்று சொன்னால் புரியவா போகுது .

84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள் நாங்கள்.

 "தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவனை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி." எங்கேயோ படித்தது வந்து துலைக்குது இந்த நேரத்தில. அலுவலகம் துறந்து வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்தபடியால், அதுவும் 84ம் ஆண்டு டெல்லியில்? லேசுப்பட்ட காரியமல்ல.அப்ப   நீங்களும் ஒரு சிறந்த வீரன்தான். உங்களை யாரும் வீரன் என்று சொல்லாததால்த்தான் இந்தக் காய்ச்சலா? இப்ப சொல்லி விட்டீர்கள் இனி ஒரு பயபிள்ளையும் உங்களை   எதிர்க்க மாட்டான். ஆனால் தூதுவர்களோட என்ன பேசினீர்கள், என்னத்தை சாதித்தீர்கள்? என்றதையும் கதையோட கதையாய் சொல்லி விடுங்கோ. பிறகு தெரியுந்தானே, உவங்கள் சும்மா குழம்பிப்போடுவான்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

சாத்தான் அவர்களே விட்டுவிடுங்கள். அவர்கள் நோய்பற்றிய உண்மை சொல்லி மேலும் அவர்களை நோகடிக்கக்கூடாது. பாவம் அவர்கள்.:( 

உண்மையை சொன்னால் பிடிக்காதே இல்லாததை நடக்காததை எவரும் எழுதவில்லை 

மொக்கனை பார்த்து பின்ன கெட்டிக்காரன் என்றா சொல்லவேண்டும் .

"தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவனை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி." எங்கேயோ படித்தது 

அது கூட நினைவில்லை .tw_angry: வந்திட்டார்கள் வகுப்பு  எடுக்க .

இங்க நாங்கள் எங்களுக்குள் புடுங்குபடுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த திரியை கொஞ்சம் ஆக்கபூர்வமாக கொண்டுபோனால் இந்த கொள்ளை கூட்டத்தின் முகத்திரையை கிழிக்கும் ஒரு சிறு முயற்சியையாவது ஆரம்பிக்கலாம்.
பெயர்களை தந்தால் நான் போய் கேட்பேன் என்று கூறிய சசி அதை செய்வார் என்று நம்புவோம். 

தேவாரம் பாடுபவர்கள் சுத்தி சுத்தி அர்ஜுனிலயும் புளொட்டிலையும் கொண்டு வந்து முடிக்கும்போதே தெரிகிறது அவர்களின் உள்நோக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,நான் உங்களைப் பொறுத்த வரை ஈச்சாப்பியாகவே இருந்திட்டுப் போறேன். ஆனால் உங்கள மாதிரி ஈச்சாப்பியாய் இருந்து கொண்டு மற்றாக்கள் குடுக்காததைப் பற்றியோ அல்லது குடுக்கச் சொல்லியோ கேட்பதில்லை.

தேசியத்தை காட்டி காசு சேர்த்தவர்களிடம் இருந்து அந்தக் காசை திருமப பெற்று அதை எப்படி ஆக்க பூர்வமாக பாதிக்கபட்ட போராளிகளுக்கும்,மக்களுக்கும் செலவழிக்கலாம் என்பதை விடுத்து எப்ப பார்த்தாலும் ஆட்டுக்குள்,மாட்டை கொண்டு செருகிக் கொண்டு...உங்கள் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழினம் உருப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

நெடுக்ஸ்,நான் உங்களைப் பொறுத்த வரை ஈச்சாப்பியாகவே இருந்திட்டுப் போறேன். ஆனால் உங்கள மாதிரி ஈச்சாப்பியாய் இருந்து கொண்டு மற்றாக்கள் குடுக்காததைப் பற்றியோ அல்லது குடுக்கச் சொல்லியோ கேட்பதில்லை.

வெறும் கற்பனையில் வரும் அலட்டல்களுக்கு பதில் அளித்துப் பிரயோசனம் இல்லை அக்கோய். உங்களால ஈய முடியல்லையா.. பேசாமக் கிடவுங்க. ஈயுறவன் கணக்குக் கேட்கமாட்டான். அவனுக்கு நிலைமை தெரியும். கணக்குக் கேட்டு எதுவும் ஆகப் போவதில்லை என்று. முடிஞ்சதை செய்வான் அவ்வளவும் தான். கணக்குக் கேட்பது என்பது விசமத் தேவைக்கு மட்டுமே இங்கு நிகழ்கிறது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தெனாலி said:

இங்க நாங்கள் எங்களுக்குள் புடுங்குபடுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த திரியை கொஞ்சம் ஆக்கபூர்வமாக கொண்டுபோனால் இந்த கொள்ளை கூட்டத்தின் முகத்திரையை கிழிக்கும் ஒரு சிறு முயற்சியையாவது ஆரம்பிக்கலாம்.
பெயர்களை தந்தால் நான் போய் கேட்பேன் என்று கூறிய சசி அதை செய்வார் என்று நம்புவோம். 

தேவாரம் பாடுபவர்கள் சுத்தி சுத்தி அர்ஜுனிலயும் புளொட்டிலையும் கொண்டு வந்து முடிக்கும்போதே தெரிகிறது அவர்களின் உள்நோக்கம். 

உண்மை தான் தெனாலி ..இங்கே கூவி கூவி நான் பெரிது , நீ பெரிது, நான் சரி, நீ சரி என்பதை விட அடையாளம் காட்டப்பட்ட, காசுகளை சுத்தினார் என்று அறியப்பட்ட ஒருவரிடம் நேர்மையாக  போய் உண்மையை கேட்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றே நினைக்கிறன்.
அவர்கள் மனசாட்சிக்கு எதையும் செய்து விட்டு போகட்டும், குறைந்த பட்சம் இதை பற்றி கேள்வி கேட்டோமே என்ற மன நிறைவாவது எனக்கு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, arjun said:

உண்மையை சொன்னால் பிடிக்காதே இல்லாததை நடக்காததை எவரும் எழுதவில்லை 

மொக்கனை பார்த்து பின்ன கெட்டிக்காரன் என்றா சொல்லவேண்டும் .

"தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவனை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி." எங்கேயோ படித்தது 

அது கூட நினைவில்லை .tw_angry: வந்திட்டார்கள் வகுப்பு  எடுக்க .

நாங்க எழுதினால் 
அது தனிமனித தாக்குதல் மாதிரி தோன்றும் ...

அர்ஜுனே எழுதியதால் 
இதை  தயவு செய்து ஒரு கருத்தாக பார்க்கவும்.  

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

உண்மையை சொன்னால் பிடிக்காதே இல்லாததை நடக்காததை எவரும் எழுதவில்லை 

மொக்கனை பார்த்து பின்ன கெட்டிக்காரன் என்றா சொல்லவேண்டும் .

"தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவனை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி." எங்கேயோ படித்தது 

அது கூட நினைவில்லை .tw_angry: வந்திட்டார்கள் வகுப்பு  எடுக்க .

மன்னிக்கவும் நண்பரே, எனது குணமே அதுதான். முக்கியமான விஷயத்தை மட்டுமே   எடுத்துக் கொள்வேன். தேவையற்றதை  விட்டு விடுவேன்.

On 2/23/2016 at 8:10 AM, விசுகு said:

ரகு

உங்கள் கருத்தைப்பார்க்கும் போது

மிகவும் தள்ளி நின்றிருக்கின்றீர்கள் என்பது மட்டும் தான் தெரிகிறது..

அது உங்கள் தப்பல்ல

90 வீதமானவர்கள் இவ்வாறு தான் இருந்தார்கள்

நின்றார்கள்.

நீங்களுமா ரகு ......???

இதற்கு மேல் இத்திரியில் எழுத விரும்பவில்லை.

உண்மைகள் சுடத்தான் செய்யும் ,யதார்த்தங்களையும் உண்மைகளையும் எழுதும்போது இப்படியான கருத்துக்கள் தான் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வெளிப்படும் .

 வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்படும் போது மோசடிகள் நடைபெறுவது 2009இற்கு முன்பு புலிகளின் தமைமைக்கும் தெரியும்.

On 2/24/2016 at 8:16 AM, விசுகு said:

இது தான் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை

பொட்டரின் வளர்ப்பு

தலைவரின் மெய்ப்பாதுகாப்பு

இப்படி பல நூறு பேர் வந்தாச்சு

ஒருத்தரும் சாதாரண போராளியாக இதுவரை சொல்லவே இல்லை...

அத்துடன் எல்லோரிடமும் சர்வதேச கடவுச்சீட்டு...

இப்போ இவர்கள் பணத்தை எதற்காக தேடுகிறார்கள்

கண் முன் இருந்தவர்கள்

வளர்ந்தவர்கள்

தாயகத்துக்காக தம் வாழ்வையே கொடுத்ததை நாம் பார்த்தவர்கள் கள்ளர் என்றால்

ஒரு போதுமே எம்மால் அறியப்படாத இவர்கள்....?

எவ்வாறு நம்பிக்கை வரும்?

எவ்வாறு நம்பிக்கையை கட்டி எழுப்பப்போகிறார்கள்?

அவ்வாறு நம்பிக்கையை கட்டி எழுப்பாமல் எதற்காக பணம் பணம் என்று அடிபடுகிறார்கள்?

தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்

எவ்வாறு முறை தவறி புலம் பெயர் தேசங்களில்

ஐனநாயக வழிகளில் தம்மை பலப்படுத்தாமல் தலைவரால் மௌனிக்கப்பட்ட ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள்??

இவ்வாறு என்னிடம் சிலர் கேள்வி கேட்கிறார்கள்

பதில்???

எவரிடமும் கொடுக்கத்தேவையில்லை ,தாயகத்தில் உள்ள முன்னால் போராளிகள் மாவீரகள் குடும்பங்களுக்கு நேரடியாகவே உதவிகளை செய்திருக்கலாம் .தமிழர் ஒருங்கிணைப்பு குழு ,உலகத்தமிழர் அமைப்பு போன்றவற்றுக்குள் இல்லாத சிலரிடம் இருந்தநிதிகளை அவர்கள் நேரடியாக உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு கொடுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.அப்படி ஏன் இவர்கள் செய்யவில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.