Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் சிதைந்த கிளிநொச்சியிலும் 600லட்சத்தில் 99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்:-

Featured Replies

யுத்தத்தில் சிதைந்த கிளிநொச்சியிலும் 600லட்சத்தில் 99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்:-

ராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழாவும் விமரிசையா நடந்தேறியது..

யுத்தத்தில் சிதைந்த கிளிநொச்சியிலும் 600லட்சத்தில்   99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்:-

வடக்கு மாகாணத்தின்   நுழைவாயிலாக  உள்ள  கிளிநொச்சி மண்ணின்    அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர   அடிக்கல்  நாட்டு  விழா  வியாழ்கிழமை 14-07-2016 அன்று  நடைபெற்றது
 
காலை  விசேட  வழிபாடுகளுடன்  ஆரம்பிக்கப்பட்ட  இவ்   அடிக்கல்  நாட்டு  விழாவில்   பாராளுமன்ற  உறுப்பினர்  சி . சிறிதரன், முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினர் மு ,சந்திரகுமார் நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர்  சுதாகரன், கரச்சி பிரதேச  செயலர் நாகேஸ்வரன் , உத்தியோகத்தர்கள், குருக்கள், பக்தர்கள்  என  பலரும்  கலந்து  கொண்டு  அடிக்கல்லினை நாட்டி  இருந்தனர்.
 
இரணைமடு  நீர்த்தேக்கத்தின்   இடது  கரையில்   மேற்குப்   புறமாகவும்      இரணைமடு  நீர்த்தேக்கத்தினையே   தீர்த்தக்   கேணியாகவும்   கொண்டு அமைக்கப்பட்ட    இவ்  ஆலயத்திற்கு 99  அடி  உயரமும்         36  அடி  அகலத்தை  கொண்டு நவ  தளங்களுடன்  கூடிய  இராஜ  கோபுரம்  அமைப்பதற்கான         அடிக்கல்  நாட்டு  விழாவே    நடை  பெற்றது  இவ்  இராஜகோபுரத்தினை ஆறு  கோடி   செலவில் இரண்டு  வருடங்களிற்குள்  முடிக்க  இருப்பதாகவும்   இதற்கான பணத்தினை புலம்பெயர்  உறவுகள் மற்றும்  வடக்கு  வாழ் மக்களிடம்  இருந்து  எதிர்  பார்ப்பதாகவும்   ஆலய  பரிபாலன  சபையினரும் ஆலய இராஜகோபுர திருப்பணி  சபையினரும்   தெரிவிக்கின்றனர் இரனைமடு கணகாம்பினை அம்மன் ஆலயம் யோகா் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட கோவில் எனக் குறிப்பிடப்படுகின்றது...

மேலே வந்தது இன்றைய செய்தி... தொடர்வது செய்திப் பார்வை...

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதான் முது மொழி கூறியதே தவிர, சுற்றியுள்ள மக்கள் பட்டினியிலும், வறுமையிலும் தவிக்க வானளாவிய கட்டடங்களையும், மணிமண்டபங்கள், கோபுரங்களையும், கோடி பணம் செலவளித்து கட்டுமாறு முதுமொழிகளோ பழ மொழிகளோ, அறவாக்குகளோ கூறவில்லையே...

வடக்கில் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிற கோவில்கள் போதாது என்று முழத்திற்கு ஒரு கோவில் முளைத்துக்கொண்டு இருப்பதுடன், கோடி கோடியாக பணமும் கொட்டப்படுகின்றன... என்றால்,  கண்முன்னே ஆயிரம் ஆயிரம் மக்கள் பலியாகி, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வருமானம் இன்றி தவிக்க, 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலையில்லாது திண்டாட 600 லட்சத்தில் ராஜகோபுரம் தேவையா?

பண்பாடும், கலாசாரமும், கோவில்களை மையமாக கொண்டு வளர்ந்தது அவை தமிழ் மக்களின் பண்பாட்டு கலாசார விழுமியங்களை கட்டிக்காக்கும் மூலங்கள் என்பதற்காக, கோடிகளை கொட்டி ஆலையங்களை அமைத்தால்தான் தாம் அங்கு வீற்றிருந்து அருள் பாலிப்போம் என இந்துமதக் கடவுளர்கள் சொன்னார்களா?

இந்த 600 லட்சங்களை செலவளித்து, ஒரு உற்பத்தி ஆலையை அமைத்தால் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்? அதனால் எத்தனை வயிறுகள் பசியாறும்? இத்தனை அழிவுகளை சந்தித்த வன்னியிலுமா பணத்தைக் கொட்டி ஆலையங்களை உருவாக்கும் கலாசாரம் தொடங்குகிறது?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134053/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கோயில் கட்டுவதை விட பாடசாலைகள்,தொழிற்சாலைகள் கட்டுவது தான் விருப்பம்,ஆனால் நாடு இப்ப இருக்கின்ற நிலைமையில் கோயில் கட்டாமல் விட்டால் அந்த இடத்தில் மசூதியோ,விகாரையோ வந்து விடும் என்பதால் கோயில் கட்டுவதே மேல் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து இல்லையென்று சொல்வதற்கில்லை. சமுதாயத்தின் சகல கட்டுமானங்களுக்கும் ஒரே நிர்வாக அலகு என்று ஒன்று இருந்தால் அப்படித்தான் யோசிப்பார்கள்.  நிதியை கையாளும்போது சமுதாயத்தின் அத்தியாவசிய  தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு முன்னுரிமை வழங்குவார்கள். ஆனால்  இன்று அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

ரதியின் கருத்திலும் எனக்கு மிக்க உடன்பாடு உண்டு. தமிழர் மண்ணில் சிறப்பான கட்டுமானங்களை  வளர்த்தெடுப்பது சமுகத்திற்கு நன்மேயன்றி தீமையில்லை. காலங்காலமாகவே தமிழர் வரலாற்றில் கோவிலும் பிறந்த மண்ணும் வாழ்வில் முக்கிய பங்கை கொண்டிருப்பது கண்கூடு. போர் ஓய்ந்தபின் தமிழ் இனம் மீண்டும் தமது நிலங்களில் வேருன்ற தொடங்கியிருப்பதையே இதுபோன்ற செயற்பாடுகள் எமக்கு சொல்லும் செய்தி.
மண்ணில் வேருன்றியபின்னர் தமிழ் இனம்  தானாகவே அடுத்த படிநிலைக்கு உயர்வது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கும் கோயில் கட்டுவதை விட பாடசாலைகள்,தொழிற்சாலைகள் கட்டுவது தான் விருப்பம்,ஆனால் நாடு இப்ப இருக்கின்ற நிலைமையில் கோயில் கட்டாமல் விட்டால் அந்த இடத்தில் மசூதியோ,விகாரையோ வந்து விடும் என்பதால் கோயில் கட்டுவதே மேல் என்பது எனது கருத்து.

கிறீஸ்தவ தேவாலயங்கள் சுத்தி சுத்தி உருவாகுவது பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே? அவை மட்டும் விதிவிலக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள் ஒரு இனத்தின் அடையாளங்கள் மட்டுமே!

அந்த இனமே அழிந்து போகும் நிலையில் உள்ள போது...அடையாளங்களினால் என்ன பலன் இருக்கப்போகின்றது?

ஒரு வேளை... எகிப்திய பிரமிட்டுக்களால் என்ன பலன் கிடைக்குமோ.. அதே போல பலன் கிடைக்கக்கூடுமோ..என்னவோ?

கடல் கொண்ட.. பூம்புகார் நகரிலும் தான் கோவில்கள் உள்ளன! ஆனால் அவற்றைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதக்கூட..எமக்கு அதிகாரமில்லை!

எமது காலில் நாமே நிற்கும் நாள் வரை...உயிருடன் தினமும் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும்..எமதினத்தின் உயிருள்ள அம்மன்கள் இருக்குவரை... இந்தக் கோவில்கள் கொஞ்ச நாட்கள் காத்திருக்கட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

கிறீஸ்தவ தேவாலயங்கள் சுத்தி சுத்தி உருவாகுவது பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே? அவை மட்டும் விதிவிலக்கா?

அதை ஏலவே போர்த்துக்கீசர்களும்.. ஒல்லாந்தர்களும்.. பிரிட்டிஷ்சாரும் செய்திட்டுப் போட்டினம்.

இப்ப பெளத்த ஆக்கிரமிப்பு நடக்குது.

எப்போதும் அடிவாங்குவதாக சைவமும் தமிழும் உள்ளது.

ஆனாலும் யாராலும்.. அவற்றை பூரணமாக அழித்து வெற்றி கொள்ள முடியவில்லை.

எத்தனையோ சிங்களவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடிக் கொண்டிருக்க.. சிங்கள பெளத்த பேரினவாத அரசும் அதன் இராணுவ இயந்திரமும்.. பெளத்த பீடங்களும்.. விகாரைகளை தானே பெருக்கிக் கொண்டுள்ளன. சிங்கள பெளத்த மக்களின் வறுமையை போக்க நினைக்கல்லையே..?!

சைவ மக்கள்.. இது விடயத்தில் பறுவாயில்லை. ஒரு கோயிலைக் கட்டினாலும்.. அதனை வைச்சு நாலு பேருக்கு அன்னதானமுன்னு சாப்பாடாவது போடுங்கள். இங்கு லண்டனிலேயே..  கோவில் சாப்பாட்டில்.. வாழ்பவர்கள் பலர். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கூட பெரிய கோவில் இருக்கிறதாம் இது அதை விட சின்னது தானே 

ஒரு காலத்தில் இதை வைத்தாவது தமிழர்கள்  இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை பலர் அறிந்து கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, முனிவர் ஜீ said:

அமெரிக்காவில் கூட பெரிய கோவில் இருக்கிறதாம் இது அதை விட சின்னது தானே 

ஒரு காலத்தில் இதை வைத்தாவது தமிழர்கள்  இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை பலர் அறிந்து கொள்ளலாம்

அமெரிக்காவில் கோயில் கட்டுவது எந்த பாதிப்பையும் தராது

ஆனால் ஒரு பக்கம் ஒரு இனமக்களே பசி பட்டினி வேலையின்மை வீடின்மை மற்றும் நோய்களால் அன்றாடம் இறந்து கொண்டிருக்க

அதே இன மக்களால் இவ்வாறான அதிஉச்ச பணக்காரத்தனம்

அந்த மக்களிடையே

விரக்தியையும் பிளவுகளையும்

கொடூர மன அழுத்தங்களையும்

ஏன் பல குற்றச்செயல்களுக்கும் காரணமாக அமையும்

புலிகள் இருந்த காலத்தில் இது பற்றி மிக அதிகமாக தூரநோக்கோடு சிந்தித்தார்கள்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,நாங்கள் அழிந்தாலும் எங்கள் வருங்கால சந்ததியினருக்கு எமது வர‌லாற்றை சொல்வதற்கு கோயில்கள் இருத்தல் வேண்டும்....கோயில்கள் கட்டாமல் அந்தக் காசைக் கொண்டு பாடசாலைகளோ அல்லது தொழிற்சாலைகளோ கட்டலாம் தான்,ஆனால் நாளைக்கு எமது மண்ணின் மக்களே வேற்று மதத்தவராகி,இனத்தவராகி அவற்றை வழி நடத்திக் கொண்டு இருப்பார்கள் அல்லது அவற்றை ஆண்டு கொண்டு இருப்பார்கள்.

கோயிலுக்கு கொடுக்க இருப்பமானவர்கள் கோயிலுக்கு கொடுக்கட்டும். அதே நேரம் பாடசாலை கட்டவோ அல்லது தொழிற்சாலை கட்டவோ அவரவர் தங்களுக்கு விருப்பானதை செய்யட்டுமேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அது உன்மை தான் ஆனால் வேற்று மதத்தினரின் ஆதிக்கம் எப்படி மேலோங்கி செல்கின்றது இங்கு தெரியுமா. 

இங்கே கோவில் அமைவது பிரச்சனை இல்லை ஆனால் அநாவசிய செலவு செய்வதை நானும் விரும்பவில்லை அதாவது திருவிழா செலவுகள் 

தற்போது கொழும்பில் ஒரு பெரிய கோவில் திருவிழா நடைபெறுகிறது  இதன் போதான படங்கள் உங்கள் முகநூலுக்கு  உள் பெட்டியில் அனுப்பிவிடுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/07/2016 at 10:33 AM, Jude said:

கிறீஸ்தவ தேவாலயங்கள் சுத்தி சுத்தி உருவாகுவது பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே? அவை மட்டும் விதிவிலக்கா?

அவையள் அங்க தேவாலயம் கட்ட நாங்கள் இங்க அவையளின்ட தேவாலயத்தை வாங்கி கும்பாபிசேகம் செய்து கோவில் கட்டிட்டோமே......tw_tounge_wink:

37 minutes ago, முனிவர் ஜீ said:

அது உன்மை தான் ஆனால் வேற்று மதத்தினரின் ஆதிக்கம் எப்படி மேலோங்கி செல்கின்றது இங்கு தெரியுமா. 

இங்கே கோவில் அமைவது பிரச்சனை இல்லை ஆனால் அநாவசிய செலவு செய்வதை நானும் விரும்பவில்லை அதாவது திருவிழா செலவுகள் 

தற்போது கொழும்பில் ஒரு பெரிய கோவில் திருவிழா நடைபெறுகிறது  இதன் போதான படங்கள் உங்கள் முகநூலுக்கு  உள் பெட்டியில் அனுப்பிவிடுகிறேன் 

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை ஆனாலும் மக்கள் அதை விரும்புகின்றார்கள் .வேண்டாம் என்று சொல்லி தடை போட்டால் மக்கள் வேறு தெய்வத்திடம் போவார்கள் ......

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

....tw_tounge_wink:

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை ஆனாலும் மக்கள் அதை விரும்புகின்றார்கள் .வேண்டாம் என்று சொல்லி தடை போட்டால் மக்கள் வேறு தெய்வத்திடம் போவார்கள் ......

இதற்கு உதாரணம் மன்னார் மாவட்டம் புத்தன் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இதற்கு உதாரணம் மன்னார் மாவட்டம் புத்தன் 

சிவன் வழிபாடு இருந்தமையால் இன்று ஒரு சில அன்பர்கள் சிவபூமி,சிவன் அருள் இல்லம் என்பவற்றை உறுவாக்கி இயன்றளவு நற்காரியங்களை செய்கின்றார்கள் .....சிவனை அன்று புறக்கணித்திருந்தால் இன்று சைவத்தின் நிலையை நினைத்தும் பார்த்திருக்கமுடியாது....

தமிழ் இனத்தின் நம்பிக்கை அச்சாணிகளாக, மனத் துன்பங்கள் போக்கும் உளவளத் துணை மையங்களாக கோவில்கள், சர்ச்சுக்கள்  இருந்து வருகின்றன என்பது வரலாறு.

எனவே மக்களின் நம்பிக்கை மையங்களை குறை சொல்வது நல்லதல்ல. அங்கு நடக்கும் வீண் செலவுகளை குறைப்பதில் தவறில்லை.

கோவில்களையும், சர்ச்சுக்களையும் அழித்துவிட்டால் தமிழர்களை அழித்ததற்கு சமனாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

புங்கையூரான்,நாங்கள் அழிந்தாலும் எங்கள் வருங்கால சந்ததியினருக்கு எமது வர‌லாற்றை சொல்வதற்கு கோயில்கள் இருத்தல் வேண்டும்....கோயில்கள் கட்டாமல் அந்தக் காசைக் கொண்டு பாடசாலைகளோ அல்லது தொழிற்சாலைகளோ கட்டலாம் தான்,ஆனால் நாளைக்கு எமது மண்ணின் மக்களே வேற்று மதத்தவராகி,இனத்தவராகி அவற்றை வழி நடத்திக் கொண்டு இருப்பார்கள் அல்லது அவற்றை ஆண்டு கொண்டு இருப்பார்கள்.

கோயிலுக்கு கொடுக்க இருப்பமானவர்கள் கோயிலுக்கு கொடுக்கட்டும். அதே நேரம் பாடசாலை கட்டவோ அல்லது தொழிற்சாலை கட்டவோ அவரவர் தங்களுக்கு விருப்பானதை செய்யட்டுமேன்.

வணக்கம் ரதி! வருங்கால சந்ததியைப் பற்றிக் கவலைப்படும் நாங்கள் ஏனோ தற்கால சந்ததியைப் பற்றிக் கவலைப்படப் பின்னிற்கிறோம்!

கொடிது..கொடிது வறுமை கொடிது ..அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்றார் அவ்வையார்! பசியும், வறுமையும், மற்றவர்களின் ஏளனப் பார்வையும் அதை அனுபவித்தவனுக்கே தெரியும்!

வரலாறு வெறும் சின்னங்களால் பாதுக்காக்கப் படுவதில்லை! அந்த மண்ணில் வாழும் மக்களிடையே தான் வரலாறு வாழ்கின்றது! ஆபிரிக்காவில்.. பெரிதாக ஒரு சின்னங்களும் இல்லை! ஆனால் அவர்களது வரலாறு இன்னும் வாழ்கின்றது! அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடம் கேளுங்கள்! ஐம்பதாயிரம் ஆண்டு கால வரலாறைச் சொல்லுவார்கள்! அவ்வளவு எதற்கு? எமது வேதங்கள் கூட வாய் வழியாகத் தானே..ஐயாயிரம் வருடங்கள் வரை ..வாழ்ந்தன!

ஆனந்தா..நாலந்தா போன்ற அந்தக்காலத்துப் பல்கலைக் கழகக் கட்டிடங்களின் அத்திவாரங்கள் கூட இப்போது இல்லை! புத்த மதம் அழிவதை.. அந்தப் பல்கலைக் கழகங்களால் பாதுகாக்கக் கூட முடியவில்லை! ஆப்கானிஸ்தானின் மலைக்கல்லுகளில் செதுக்கப் பட்ட 'பாமியன்' புத்தர் சிலைகள், கண் முன்னே வெடி வைத்துத் தகர்க்கப் படுவதை... ஐக்கிய நாடுகள் சபையால் கூடத் தடுக்க முடியவில்லையே?

தவிரக் கோவில்களுக்கு நான் எதிரானவன் அல்ல! நயினாதீவின் 'அமுதசுரபியிலும்', சந்நிதிக்கொவில் மடங்களிலும், திருகேதீஸ்வர மடங்களிலும் சாப்பிடுவதை மிகவும் விரும்புபவன்! 

ஆனால்.. சுற்றி வரக் குடிமனைகள் எல்லாம் ஓட்டையும் உடைசளுமாக இருக்கக் கோவில் சுவர்கள் மட்டும் வெள்ளையும் சிவப்புமாய் மினுங்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!

அத்துடன் இந்தக் கோவில் கட்டுவதற்குச் செலவழிக்கப் படப் போகும் பணத்தில் பெரும்பகுதி இந்தியச் சிற்ப வல்லுனர்களுக்குத் தான் போகப் போகின்றது! எமது ஊரவருக்கு இந்தத் திறமை இப்போதைக்கு இல்லை! வாங்கப்படப் போகும் கருங்கற்களும், சீமந்தும் சிங்களத்திடமே வாங்கப் படப் போகின்றது! இந்த முதலீடு எந்த விதமான பலனையும் நீண்ட காலத்துக்குத் தரப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன்! 

அத்துடன்... அம்பேத்காருக்கும்.. அனுமானுக்கும்...அப்துல் கலாமுக்கும்.. சிலை வைப்பதையே...இந்தக் கோவில்கள் ஊக்குவிக்கும்! அவர்களுக்குச் சிலை வைப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை! ஆனால் அறுபதினாயிரம் விதவைகள் எம்மிடையே வாழ்கையில்.. இந்தக் கோவில் கட்டுவதற்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரமோ? எனது பெண் சகோதரங்கள் அவ்வளவையும் கரையேற்றிய பின்னர் கலியாணம் கட்டுவதைத் தானே.. எமது கலாச்சாரம் எமக்குப் போதித்தது?

43 minutes ago, புங்கையூரன் said:

வரலாறு வெறும் சின்னங்களால் பாதுக்காக்கப் படுவதில்லை! அந்த மண்ணில் வாழும் மக்களிடையே தான் வரலாறு வாழ்கின்றது! ஆபிரிக்காவில்.. பெரிதாக ஒரு சின்னங்களும் இல்லை! ஆனால் அவர்களது வரலாறு இன்னும் வாழ்கின்றது! அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடம் கேளுங்கள்! ஐம்பதாயிரம் ஆண்டு கால வரலாறைச் சொல்லுவார்கள்! அவ்வளவு எதற்கு? எமது வேதங்கள் கூட வாய் வழியாகத் தானே..ஐயாயிரம் வருடங்கள் வரை ..வாழ்ந்தன!

ஆனந்தா..நாலந்தா போன்ற அந்தக்காலத்துப் பல்கலைக் கழகக் கட்டிடங்களின் அத்திவாரங்கள் கூட இப்போது இல்லை! புத்த மதம் அழிவதை.. அந்தப் பல்கலைக் கழகங்களால் பாதுகாக்கக் கூட முடியவில்லை! ஆப்கானிஸ்தானின் மலைக்கல்லுகளில் செதுக்கப் பட்ட 'பாமியன்' புத்தர் சிலைகள், கண் முன்னே வெடி வைத்துத் தகர்க்கப் படுவதை... ஐக்கிய நாடுகள் சபையால் கூடத் தடுக்க முடியவில்லையே?போகும் பணத்தில் பெரும்பகுதி இந்தியச் சிற்ப வல்லுனர்களுக்குத் தான் போகப் போகின்றது! எமது ஊரவருக்கு இந்தத் திறமை இப்போதைக்கு இல்லை! வாங்கப்படப் போகும் கருங்கற்களும், சீமந்தும் சிங்களத்திடமே வாங்கப் படப் போகின்றது! இந்த முதலீடு எந்த விதமான பலனையும் நீண்ட காலத்துக்குத் தரப்போவதில்லை என்றே நான் நினைக்கிறேன்! 

அத்துடன்... அம்பேத்காருக்கும்.. அனுமானுக்கும்...அப்துல் கலாமுக்கும்.. சிலை வைப்பதையே...இந்தக் கோவில்கள் ஊக்குவிக்கும்! அவர்களுக்குச் சிலை வைப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை! ஆனால் அறுபதினாயிரம் விதவைகள் எம்மிடையே வாழ்கையில்.. இந்தக் கோவில் கட்டுவதற்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரமோ? எனது பெண் சகோதரங்கள் அவ்வளவையும் கரையேற்றிய பின்னர் கலியாணம் கட்டுவதைத் தானே.. எமது கலாச்சாரம் எமக்குப் போதித்தது?

நடப்பதை வைத்து பார்க்கும் பொழுது இன்னொமொரு சில வருடங்களில் வன்னி முழுவதும் இஸ்லாமிய மயமாகி விடும், அதற்கு பின்னர் அவர்கள் இந்த 6 கோடி  ரூபாய் செலவில் கட்டப்பட்ட கோவிலை 6 மணித்தியாலங்களில் இடித்து விட்டு கட்டார்,சவுதி தனவந்தர்களின் உதவியுடன் மிக பெரிய பள்ளிவாசலை அமைப்பார்கள், அதே போல் வறுமையில் வாடும்  மக்களையும் புனித இஸ்லாமிய மதத்துக்கு மாத்தி  ஒரு புதிய சமுருகத்தையும் உருவாக்குவார்கள், அதற்காக கோவிலை கட்டுவது தவறல்ல, ஆனால் 6 கோடி தான் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

இந்த 6 கோடியைக்கொண்டு

வறுமையில் வாழும் மக்களை தூக்கி 

அவர்களது கால்களில் நிறுத்தினால்......?

ஒரு கல்லில்.........??

Edited by விசுகு

5 minutes ago, விசுகு said:

ஒரு கல்லில்.........??

தமிழினம் அழிவை நோக்கி நகரும்!

35 minutes ago, விசுகு said:

இந்த 6 கோடியைக்கொண்டு

வறுமையில் வாழும் மக்களை தூக்கி 

அவர்களது கால்களில் நிறுத்தினால்......?

ஒரு கல்லில்.........??

அந்த சாமர்த்தியம் தான் எங்களிடம் இல்லையே!!! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது தமிழ்பிரதேசங்கள் இன்றிருக்கும் இனமத அச்சுறுத்தல்களை கருத்திலெடுத்து பார்த்தால் கோவில்களும் பிரமாண்டங்களும் மிக அவசியமாகின்றது.
 தமிழ் பகுதிகளில்  தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க....... ஏனைய  மதங்களும் இனங்களும் அத்துமீறி தாண்டவம் ஆடும் போது யாருக்குமே சொல்லி அழ மனம் வராதது ஏனோ????

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Dash said:

அந்த சாமர்த்தியம் தான் எங்களிடம் இல்லையே!!! 

அப்போ

ஆளில்லாத ஊரில் கோயில் என்ன செய்யும்??

6 கோடிக்கு கோவிந்தா தான்..

enna seiwoom kaddenalum pelai edichalum pilai

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, neervai baruki said:

enna seiwoom kaddenalum pelai edichalum pilai

என்ன செய்வோம் கட்டினாலும் பிழை இடிச்சாலும் பிழை..

nantri tamil elutha koncham uthavi seiungo,sulapamana muraijil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.