Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவை யாழில் கண்டேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணனித் திரையில் தனது அம்மாவைப் பார்த்து என் மனைவி கதைத்தபோது, நாளை நான் இருப்பேனா இல்லையோ என்ற அவரின் வயதிற்கேற்ற கூற்று என்மனைவியை  ஆதங்கப்படுத்தியதில் வியப்பில்லை. அந்த ஆதங்கம் 90 வயதைத் தொடும் தனது அம்மாவைக் காணவேண்டும் என்ற தவிப்பை மேலோங்கச் செய்தது. தாய்தந்தையரை இழந்துவிட்ட எனக்கும் என் மாமிதான் தாயாக விளங்கினார். மனைவி துன்பப்பட்டால் தீர்த்துவைப்பேன் என்று திருமணத்தின்போது அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்து, கூடவே விடுமுறையும் வரவே, துணைவியையும் அழைத்துக்கொண்டு பிறந்தமண்ணுக்குப் பறந்தேன்.  

விடிந்ததும் எழுந்து யாழில் செய்திகள் பார்த்துக் கருத்துக்களும் எழுதும் எனக்கு இனிச் சிலவாரங்கள் அது முடியாதே என்ற கவலை எழுந்தது. கைத்தொலைபேசி பாவிக்கவும் தயக்கமாக இருந்தது. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பதுபோல், சென்றதடவை யாழில்நின்று ஐரோப்பா, கனடா என்று வொய்ப் சீப் மூலம் கதைத்தபோது கட்டணம் 0 என்று சொல்லியது. செலவில்லாமலே தொர்புகள்... கேட்கவேண்டுமா! தாரளமாக தினமும் கதைத்துவிட்டு யேர்மனிக்குத் திரும்ப வந்தும், நூற்றுக்கணக்கான யூரோக்களை வூடபோன் என்னிடமிருந்து புடுங்கிக்கொன்டது.  

விமானப் பதிவை மேற்கொண்டபின், மட்டக்களப்பில் மறைந்த என் நண்பரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கச் செல்லவேண்டும் என்ற கடமை உணர்வும் எழுந்தது. ஆகவே, கொழும்பு வந்ததும் நேராக மட்டுநகர் விரைந்தோம். பெண்னுக்கு முதலிடம் என்பதால் என் மனைவி பிறந்த மண்ணுக்குச் செல்லும் சந்தர்ப்பமும் தானாக அமைந்தது. சிலகாலத்திற்கு முன்பாக நாங்கள் இலங்கை சென்றபோது, வழி நெடுகிலும் ஆமியும், காவல்துறையும் மறித்து மறித்துச் சோதனை என்ற பெயரில் செய்த கெடுபிடிகள் போன்று இல்லாது இந்தத்தடவை இராணுவத்துக்குப் பதிலாகச் சிங்கள மக்கள் மறித்து மறித்துத் தாகசாந்தி செய்துகொள்ளுமாறு வரவேற்றுக் கிரிபத்தும் தந்து உபசரித்ததைக் காண வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய வெசாக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்துகொண்டேன். அரசியலுக்குள் வந்த சிங்கள அதர்மிகள் பதவியை அடைவதற்காக இனப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்தாது இருந்திருந்தால் இன்று சிங்களரும் தமிழரும் ஒன்றாக இணைந்து தங்கள் கொண்டாட்டங்களை எத்துணை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை அந்த வரவேற்பு ஏற்படுத்தியது.

மட்டக்களப்பு நகரின் மாற்றம் என்னை அதிசயிக்க வைத்தது. அங்கு குச்சொழுங்கைகள் எல்லாம் அத்துப்படியான எனக்கு, கோட்டைமுனைப் பாலத்திற்குச் செல்வதற்கே வழிதேடவேண்டி இருந்தது. ஆற்றின் இருமருங்கிலும் பெரும் பெரும் கட்டிடங்கள் கொண்ட விற்பனை நிலையங்கள் பெரும் பட்டணம்போல் காட்சிதந்தது. அனேகமானவை முசுலீம்களுக்குச் சொந்தமாக மாறியிருந்தன. மட்டுநகரின் பிரதான வீதிகளூடாகச் செல்லும்போது, முசுலீம்கள் வாழும் நகரங்களின் இருபக்கங்களும் கடை கண்ணிகளும், தமிழர்வாழும் நகரங்களின் இருபக்கங்களிலும் அனேகமாக ஆலயங்களும், வீடுகளும் வெற்றுக் காணிகளுமாகக் காணப்பட்டன.  

மட்டக்களப்பு செல்பவர்கள் விசேடமாக வாங்கிச்செல்லும் பொருட்களில் முக்கியமானது தயிர். தயிரும், முந்திரிப்பருப்பும், அரிசியும் வாங்கி நாங்கள் பயணித்த சிற்றூர்தியில் ஏற்றிவிட்டு, மீன்பாடும் தேன்நாட்டில் தேன்வாங்கும் எண்ணமும் எழுந்தது. பனிச்சம்கேணித் தேன் சிறந்தது, சுவையானது போகும் வழியில் அங்கு வாங்கலாம் என்ற சாரதியின் அறிவுரையைப் பின்பற்றினோம்.

மிகுதி தேன்வாங்கிச் சுவைத்த பின்பு.

  • Replies 67
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

...மனைவி துன்பப்பட்டால் தீர்த்துவைப்பேன் என்று திருமணத்தின்போது அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்து, கூடவே விடுமுறையும் வரவே, துணைவியையும் அழைத்துக்கொண்டு பிறந்தமண்ணுக்குப் பறந்தேன்...

இந்த வாக்கை, உங்கள் 'மாம்ஸ்'(மாமனார்)க்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? gaga.gif Wrong address..!!

பாவம் அவர்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

இந்த வாக்கை, உங்கள் 'மாம்ஸ்'(மாமனார்)க்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? gaga.gif Wrong address..!!

பாவம் அவர்..!

எங்கள் திருமணத்தின்போது ஆசி தந்து வாழ்த்துவதற்கு என் மாமனார் உயிருடன் இல்லையே ஐயா!  Bild in Originalgröße anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் நான் மட்டக்களப்புக்கு சென்றது கிடையாது , இந்தப்பகுதியை வாசித்தபின்னர் நானும் மட்டக்களப்புக்கு  ஒருதடவையாவது சென்று பார்க்கவேண்டும் என்று ஆவலாகவுள்ளது .... 


நன்றி பாஞ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...அருமையான பயணக்கட்டுரை ஆரம்பிக்கின்றது. தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பஞ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே.... அசத்தலாக உள்ளது.
உங்களுடன் பயணிக்க.... ஆவலாக உள்ளோம்,
தொடருங்கள்... பாஞ்ச்.:)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச!

சில நாட்களாக உங்களைக் காணவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்!

இப்போது தான் தெரிகின்றது...எங்கே போயிருந்தீர்கள் என்று!

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் 

நாங்களும் கிழக்குப்பகுதியில் தான் பாஞ் தாத்தா ??

 

மட்டுநகர் பலர் மனதை ஈர்த்த பகுதிகளில் ஒன்று கால ஓட்டத்தில் முஸ்லிம் மக்களின் வியாபார கைகளில் சென்று கொண்டு இருக்கிறது இந்த நகரம் 

இங்கு மாடுகள் அதிகமாக உள்ளதால் தயிருக்கு பஞ்சமில்லை கடல் மீன் ஆற்றுமீன் அதிகமாக கிடைக்கும் தேனுக்கு (நல்ல )வாகரை அல்லது கிளிவெட்டி பனிச்சங்கேணி ஆகிய பகுதிகள் பிரபலமான பகுதி ஆனால் இப்போது கலப்படம் அதிகரித்துள்ளது சில பேர்  மட்டுமே நாம் காட்டும் தேன்  வதையை  எடுத்து பிழிந்து தருவார் கள் ஆனால் அவர்களை கண்டு கனகாலம் ஆகிவிட்டது ?

 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

....சிங்கள மக்கள் மறித்து மறித்துத் தாகசாந்தி செய்துகொள்ளுமாறு வரவேற்றுக் கிரிபத்தும் தந்து உபசரித்ததைக் காண வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய வெசாக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்துகொண்டேன். அரசியலுக்குள் வந்த சிங்கள அதர்மிகள் பதவியை அடைவதற்காக இனப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்தாது இருந்திருந்தால் இன்று சிங்களரும் தமிழரும் ஒன்றாக இணைந்து...

Mr.பாஞ்,

சிங்கள மக்கள் அடிப்படையில், மனதளவில் தமிழர்களை சக உறவாக, சமமாக எற்றுக்கொள்பவர்களாக இருந்தால் ஏன் இந்தக் கலவரங்கள்? இரத்தக் களரி?அவர்களிலிருந்து வருபவர்கள்தானே இந்த சிங்கள அரசியல்வாதிகள்?

ஒன்றுபடவே முடியாத இனங்கள் என வரலாற்று நிகழ்வுகள், துயரங்கள் சொல்ல, நீங்கள் இப்படி எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது..!

வேறு வழியே இல்லையென இணக்க மனமாற்றமா?

ஏன் இந்த தடுமாற்றம்? rebond.gif

தற்பொழுது யாழ்களத்தில் சிலரிடமும் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது..

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

Mr.பாஞ்,

சிங்கள மக்கள் அடிப்படையில், மனதளவில் தமிழர்களை சக உறவாக, சமமாக எற்றுக்கொள்பவர்களாக இருந்தால் ஏன் இந்தக் கலவரங்கள்? இரத்தக் களரி?அவர்களிலிருந்து வருபவர்கள்தானே இந்த சிங்கள அரசியல்வாதிகள்?

ஒன்றுபடவே முடியாத இனங்கள் என வரலாற்று நிகழ்வுகள், துயரங்கள் சொல்ல, நீங்கள் இப்படி எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது..!

வேறு வழியே இல்லையென இணக்க மனமாற்றமா?

ஏன் இந்த தடுமாற்றம்? rebond.gif

தற்பொழுது யாழ்களத்தில் சிலரிடமும் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது..

வன்னியனது கருத்திலும் தவறில்லை!

பாஞ்சினது கருத்திலும் தவறில்லை!

தவறு....மகாவம்ச சிந்தனையிலும்....தமிழன் தங்களைத் தின்று விடுவான் என்று நினைக்கும் சிங்களவர்களின் பலவீனமான மனத்திலும் தான் உள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

Mr.பாஞ்,

சிங்கள மக்கள் அடிப்படையில், மனதளவில் தமிழர்களை சக உறவாக, சமமாக எற்றுக்கொள்பவர்களாக இருந்தால் ஏன் இந்தக் கலவரங்கள்? இரத்தக் களரி?அவர்களிலிருந்து வருபவர்கள்தானே இந்த சிங்கள அரசியல்வாதிகள்?

ஒன்றுபடவே முடியாத இனங்கள் என வரலாற்று நிகழ்வுகள், துயரங்கள் சொல்ல, நீங்கள் இப்படி எழுதுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது..!

வேறு வழியே இல்லையென இணக்க மனமாற்றமா?

ஏன் இந்த தடுமாற்றம்? rebond.gif

தற்பொழுது யாழ்களத்தில் சிலரிடமும் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது..

குறைகள் அற்ற மனிதர்கள் என்று எவருமே உலகில் இல்லை. ஏன் தமிழர்கள் தங்கள் சக தமிழர்களை உறவாக சமமாக ஏற்றுக்கொண்டுள்ளனரா?? இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் கூட... தமிழர்களிடையேதான் எத்தனை பிரிவுகள்! பிளவுகள்!! ஆனாலும் எங்களில் இருந்து அன்றுவந்த தமிழ் அரசியல்வாதிகள் (இன்றல்ல) உண்யிலேயே அரசியல் செய்தனர். தமிழர்களின் அரசியல்வாதிகள் தமிழர்களின் கைகளில் இருந்தார்கள். அதனால்தான் இலங்கை அன்று பேரும் புகழோடும் விளங்கியது. சிங்கள அரசியல்வாதிகளின் நிலமை அப்படியல்ல அவர்கள் மக்களின் கைகளில் இருக்கவில்லை மதத்தலைவர்களின் கைகளில் இருந்தார்கள், இன்றும் இருந்துவருகிறார்கள். இது தவறு என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சோழ அரசன் அருள்மொழிவர்மன் தெரிவித்ததாகக் கல்கியே எழுதியிருக்கிறார். சிங்களமக்களோடு கூடி வாழ்ந்தவர்களுக்குச் சிங்களமக்களைத் தெரியும். என் அனுபவத்தில் சொல்கிறேன் கலவரத்தின்போது நான் குடும்பத்துடன் அநுராதபுரத்தில் அகப்பட்டபோது எங்களுடன் இன்னும் பல தமிழர்களின் உயிர்களையும் காடைதனம் கொண்ட சிங்களவரிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து உதவியதும் சிங்கள மக்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

...என் அனுபவத்தில் சொல்கிறேன் கலவரத்தின்போது நான் குடும்பத்துடன் அநுராதபுரத்தில் அகப்பட்டபோது எங்களுடன் இன்னும் பல தமிழர்களின் உயிர்களையும் காடைதனம் கொண்ட சிங்களவரிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து உதவியதும் சிங்கள மக்கள்தான்...

ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.. அதை வைத்து எடை போட இயலாது..


தமிழர்களை சக உறவாக எண்ணுபவர்களாயின், உங்கள் துயரம் பல்லாண்டுகளாக தொடர வாய்ப்பில்லை.. குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும் குத்திக் கிழித்துக் கொல்லும்போது, நீங்கள் வெள்ளையடிக்கும் சிங்கள மக்கள் கொதிதெழுந்திருந்தால் அக்காடைகள் அடங்கியிருப்பர்..

தங்கள் கருத்தின் முரண்பாடு, நெருடுகிறது... Sorry sir..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Paanch said:

 

 

 சிலகாலத்திற்கு முன்பாக நாங்கள் இலங்கை சென்றபோது, வழி நெடுகிலும் ஆமியும், காவல்துறையும் மறித்து மறித்துச் சோதனை என்ற பெயரில் செய்த கெடுபிடிகள் போன்று இல்லாது இந்தத்தடவை இராணுவத்துக்குப் பதிலாகச் சிங்கள மக்கள் மறித்து மறித்துத் தாகசாந்தி செய்துகொள்ளுமாறு வரவேற்றுக் கிரிபத்தும் தந்து உபசரித்ததைக் காண வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய வெசாக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்துகொண்டேன். அரசியலுக்குள் வந்த சிங்கள அதர்மிகள் பதவியை அடைவதற்காக இனப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்தாது இருந்திருந்தால் இன்று சிங்களரும் தமிழரும் ஒன்றாக இணைந்து தங்கள் கொண்டாட்டங்களை எத்துணை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை அந்த வரவேற்பு ஏற்படுத்தியது.

 

 

 

 

நாங்கள் அடிமையாக இருக்கின்றோம் . நீங்கள் எஜமானராக இருங்கள் என்று சொன்னால் மற்றவர்கள்  எங்கள் எஜமான விசுவாசத்தைப் பாராட்டிடவே செய்வார்கள்.
இல்லை எங்களுக்கு எங்கள் உரிமைகள் வேண்டும் நாங்களும் தலை நிமிர்ந்து அடிமைத்தனத்தை உதறி வாழ விரும்புகின்றோம் என்று சொல்லிப் பாருங்கள் அவர்கள் எங்களை  எப்படி உபசரிப்பார் என்பது எல்லோரும் கண்ட அனுபவம்.
பூமி சுற்றுவதைப்போன்று தமிழர்களின் இருப்பும் இப்போது சுற்றிக் கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா சென்று மீண்டு வருபவர்களின் மனதிலிருந்து  இப்போது சிங்கள இனமக்கள் மீதான பாசம் அதிகமாகவே வெளிவருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள் பான்ச்....! அரசியல் என்றூ வரும்போது திரியும் திசைமாறீவிடும்....! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

சிறிலங்கா சென்று மீண்டு வருபவர்களின் மனதிலிருந்து  இப்போது சிங்கள இனமக்கள் மீதான பாசம் அதிகமாகவே வெளிவருகின்றது. 

தமிழர்களையும் துரே துரே என்று சிங்களவர் மரியாதைதந்து நடத்திய காலமும் உண்டு அந்தக்காலம் திரும்ப வரக்கூடிய அறிகுறிகள் சில தெரியும்போது, அது கானல்நீர் என்று தெரிந்தாலும், மனம் எண்ணங்களால் கவரப்படுவது இயல்பு. அதனைப் பாசம் என்று சொல்வது மிகவும் அதிகம் என்று நினைக்கிறேன். இருந்தும் உங்கள் கருத்தில் கோபமுள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் நியாயமும் உள்ளது. இவ்விடயத்தில் என்னை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சின் அனுபவப் பகிர்விற்க்கு நனறி.பாஞ்சின் கருத்து பலரிற்க்கு ஆச்சரியமாக இருக்கலாம்.ஏன் எனக்கும் பாஞ் தான் இப்படி எழுதுகிறாரா என்று தோன்றியது.ஆனால் யாதார்தம் என்று ஒன்று இருக்குதே.ஆனாலும் வன்னியன் சாரின் சந்தேகம் நியாமனாதே.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விசயம் பாஞ் அண்ணா.. யுத்த நிகழ்ந்த போதும் நாங்க எல்லாம் கண்டிப் பக்கம் கொழும்பில் இருந்து கல்விச் சுற்றுலா சென்ற வழியில் அழகிய உடை உடுத்திய அழகிய சிங்களக் குமரிகள்... ரம்புட்டானும்.. மங்குஸ்தானும் தந்தவை தான்.. இலவசமா. 

ஏன் யுத்த காலத்தில் சிறீலங்கா அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய போது புலிகளும் வாழ்த்துச் சொன்னார்கள்.

ஏன் யுத்த நிகழ்ந்து போர் நிறுத்தம் நிலவிய போது.. புலிகள் இருந்த போது தென்னிலங்கை இயற்கை அனர்தத்தத்தின் போது வன்னி உதவிப் பொருட்களோடு புலிப் போராளிகள் நேரடியாக களமிறங்கி சிங்கள மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.

புலிகள் ஜெயலத் ஜெயவர்த்தன போன்றோரோடு சிங்கள மக்கள்  மடுவுக்கு வர அனுமதித்தார்கள்.

ஆக.. எல்லாத்தையும் அரசியல் பார்வையில் பார்க்க முடியாது. அதேவேளை ஒரு சில சம்பவங்களின் நிகழ்வுகளின் அடிப்படையில்.. தமிழரின் அரசியல் தலைவிதியே மாறிவிட்டது என்றும் தீர்மானிக்கக் கூடாது. ஏனெனில் பெரும்பான்மை என்பது ஆட்சி அதிகார பீடங்களில் உள்ளோரின் மனப்போக்கில் உள்ளது. tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பதிவைத் தொடர ஊக்கம்தந்த நுநாவிலான், புங்கையூரன், தமிழரசு, சுவைப்பிரியன், யாயினி, தமிழினி, வந்தியத்தேவன், அபராஜிதன், தமிழ் சிறி, குமாரசாமி, நிழலி, இசைக்கலைஞன், ஜீவன் சிவா, கிருபன் ஆகிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!!

பின்னூட்டத்தின் ஊடாக என் நெறியை உணரவைத்த வாத்தியாருக்கும் நன்றிகள்!!

ராசவன்னியன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல, தான் தமிழினத்திற்கே சொந்தம் என்பதை தனது பின்னூட்டத்தின் ஊடாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சுவி அவர்களின் அறிவுரைப்படி திரி மாறாதிருக்க அனுபவத்தைத் பகிருகின்றேன்.

 

திருமலை ஊடாகச் செல்லும் சாலையில் யாழ்நோக்கிப் பயணம் ஆரம்பமாகியது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கரும் கம்பளம் விரித்தாற்போன்று சாலை நேர்த்தியாக இருந்தது. இன்று தமிழர் வாழும் பகுதிகளின் சாலைகளும் சீராக வருவதற்கும் ஒரு காரணமாகி, ஈழ விடுதலைக்காகப் போராடித் தங்கள் உயிர்நீத்த மாவீரர்களும், மக்களும் நினைவில் வந்து இதயத்தைக் கனக்கச் செய்தனர்.

சோலைகளாக இருந்த பனிச்சங்கேணி தற்போது காடுகளின்றி ஒரே வெளியாகக் காட்சிதந்தது. சுனாமியாக வெளிப்பட்டு ஏராளமான மக்களைக் காவுகொண்ட நீலக்கடலும் ஒருபக்கம் நீண்டு சென்று நல்ல பிள்ளைபோல் அமைதியாக அலைவீசிக் கொண்டிருந்தது. வழியில் ஒரு மரத்தடி நிழலில் இரண்டு தேன்போத்தல்கள் இருப்பது தெரியவே ஊர்தி நிறுத்தப்பட்டது. மரநிழலில் ஒரு வயதான அம்மாவும், பெரியவரும், சிறுவனும் படுத்திருந்தார்கள். தேன் வேணுமா ராசாக்கள் என்று கேட்டபடி அந்த அம்மா எழுந்து வந்தார். வெண்மையான சாராயப் போத்தலின் கழுத்தை தேன்வதை மூடியிருக்கத் தேன் களங்மின்றிக் காட்சிதந்தது. தேன் என்னவிலை?“ ஆயிரம்ரூபா ராசா.என்ன இந்தவிலை?“ இப்படித்தேன் நீங்கள் எங்குமே எடுக்கமாட்டியள் ஒரு நூறுரூபாய் குறைத்துத்தாறன் அதுக்குமேல் குறைக்க முடியாது.

ஒருபோத்தல் காணும் மனைவியின் சொல் காதில் விழுந்தது. ஒரு போத்தலை மட்டும் வாங்கிக்கொண்டு தேனின் ருசிபார்க்க அருகே சிறு குச்சி ஒன்றையும் முறித்துக்கொண்டு ஏற ஊர்தி புறப்பட்டது. குச்சியை வதையூடாகக் செலுத்திக் குத்தியெடுத்த தேனைச் சுவைத்தேன், ஆகா! என்ன சுவை!!. மற்றதையும் வாங்குவோம்.“ ஊர்தி பின்நோக்கி நகர்ந்தது. தேன் சரியில்லை அம்மா வேண்டாம். அம்மாவின் முகத்தில் கோபமும் கவலையும் தெரிந்தது. உண்மைக்கும், நேர்மைக்கும் வரவேற்பு இல்லையே என்று கவலைகொண்ட அவரது மனத்தை முகம் மறைக்காமல் காட்டியது. என் பொருளைத் தாருங்கள் உங்கள் பொருளைத் திருப்பித் தருகிறேன். ஏழ்மையிலும் நேர்மையின் கர்வம் தெரிந்தது.இல்லையம்மா நான் பகடிக்குச் சொன்னேன். தேன் நல்ல ருசி, மற்றதையும் வாங்கவந்தோம் என்றேன். அப்போது மரத்தடியில் இருந்து ஒரு குரல் கேட்டது. தம்பியவை ருசி மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லது, மருந்துமாதிரி." அச்சமயத்தில் பூக்கும் ஒரு பூவின் பெயர்சொல்லிப் பெரியவர் பொக்கைவாய் தெரியச் சிரிப்போடு கூறினார். முன்கொடுத்த பணத்துடன் மேலும் ஆயிரத்து நூறு சேர்த்து அம்மா சொன்ன விலைப்படி இரண்டாயிரத்தையும் கொடுத்தேன். மலர்ந்த அந்த அம்மாவின் முகம் எங்கள் இதயத்தைத் தொட்டது. என் அம்மாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என் மனைவி கூறினார்.

திருமலைநகரின் மத்திக்குச் செல்லாது மாமியை விரைவில் காணும் ஆவலில் நேராக ஊர்தி யாழ்நோக்கி விரைந்தது. உந்து ஊர்திகளை 70 கிலோமீற்றர் வேகத்திற்குமேல் செலுத்திப் பிடிபட்டால் குற்றம் பதிவாகிவிடும். மிகக் கவனமாக எங்கள் சாரதி ஊர்தியை ஓட்டிவந்தும், வேறு வாகனங்கள் எதுவுமின்றிச் சாலை வெறுமையாகத் தெரிந்த ஓரிடத்தில் மீற்றர் 80தைத் தொட்டது. தொட்டதுதான் தாமதம் மரத்தின்பின்னால் ஒளிந்திருந்த காவல்துறை வெளிவந்து கையை நீட்டிவிட்டது. யேசுவே என்று சொன்ன எங்கள் சாரதி விரைவாக ஊர்தியை நிறுத்தி வேண்டிய பத்திரங்களை எடுத்துக்கொண்டார். பத்திரங்களுக்குள் இரு 100 ரூபாய் நோட்டுகள் நுளைந்தன. சென்ற வேகத்தில் சாரதி திரும்பிவரவே பயணம் தொடர்ந்தது. அந்த இரு நூறு ரூபாய்களும் ஊர்தியைத் தாமதமின்றி வழியனுப்பி வைத்தது. வழமைபோல் முருகண்டிப் பிள்ளையாருக்குக் கற்பூரம் கொளுத்தித் தேங்காய் உடைத்து அவருடைய ஆசிபெற்றுப் பயணம் தொடர்ந்தது.

பயணம் தொடரும்.

1 hour ago, Paanch said:

ஒருபோத்தல் காணும் மனைவியின் சொல் காதில் விழுந்தது. ஒரு போத்தலை மட்டும் வாங்கிக்கொண்டு தேனின் ருசிபார்க்க அருகே சிறு குச்சி ஒன்றையும் முறித்துக்கொண்டு ஏற ஊர்தி புறப்பட்டது. குச்சியை வதையூடாகக் செலுத்திக் குத்தியெடுத்த தேனைச் சுவைத்தேன், ஆகா! என்ன சுவை!!. மற்றதையும் வாங்குவோம்.“ ஊர்தி பின்நோக்கி நகர்ந்தது. தேன் சரியில்லை அம்மா வேண்டாம். அம்மாவின் முகத்தில் கோபமும் கவலையும் தெரிந்தது. உண்மைக்கும், நேர்மைக்கும் வரவேற்பு இல்லையே என்று கவலைகொண்ட அவரது மனத்தை முகம் மறைக்காமல் காட்டியது. என் பொருளைத் தாருங்கள் உங்கள் பொருளைத் திருப்பித் தருகிறேன். ஏழ்மையிலும் நேர்மையின் கர்வம் தெரிந்தது.இல்லையம்மா நான் பகடிக்குச் சொன்னேன். தேன் நல்ல ருசி, மற்றதையும் வாங்கவந்தோம் என்றேன். அப்போது மரத்தடியில் இருந்து ஒரு குரல் கேட்டது. தம்பியவை ருசி மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லது, மருந்துமாதிரி." அச்சமயத்தில் பூக்கும் ஒரு பூவின் பெயர்சொல்லிப் பெரியவர் பொக்கைவாய் தெரியச் சிரிப்போடு கூறினார். முன்கொடுத்த பணத்துடன் மேலும் ஆயிரத்து நூறு சேர்த்து அம்மா சொன்ன விலைப்படி இரண்டாயிரத்தையும் கொடுத்தேன். மலர்ந்த அந்த அம்மாவின் முகம் எங்கள் இதயத்தைத் தொட்டது. என் அம்மாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என் மனைவி கூறினார்.

 

 

 

பயணம் தொடரும்.

எங்கள் மனதை தொட்டுவிட்டீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

தேன் சரியில்லை அம்மா வேண்டாம். அம்மாவின் முகத்தில் கோபமும் கவலையும் தெரிந்தது. உண்மைக்கும், நேர்மைக்கும் வரவேற்பு இல்லையே என்று கவலைகொண்ட அவரது மனத்தை முகம் மறைக்காமல் காட்டியது. என் பொருளைத் தாருங்கள் உங்கள் பொருளைத் திருப்பித் தருகிறேன். ஏழ்மையிலும் நேர்மையின் கர்வம் தெரிந்தது.

வாசிக்கும் போது எனக்கே முகம் கறுத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

...தேன் சரியில்லை அம்மா வேண்டாம். அம்மாவின் முகத்தில் கோபமும் கவலையும் தெரிந்தது. உண்மைக்கும், நேர்மைக்கும் வரவேற்பு இல்லையே என்று கவலைகொண்ட அவரது மனத்தை முகம் மறைக்காமல் காட்டியது. என் பொருளைத் தாருங்கள் உங்கள் பொருளைத் திருப்பித் தருகிறேன். ஏழ்மையிலும் நேர்மையின் கர்வம் தெரிந்தது.இல்லையம்மா நான் பகடிக்குச் சொன்னேன். தேன் நல்ல ருசி, மற்றதையும் வாங்கவந்தோம் என்றேன். அப்போது மரத்தடியில் இருந்து ஒரு குரல் கேட்டது. தம்பியவை ருசி மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லது, மருந்துமாதிரி." அச்சமயத்தில் பூக்கும் ஒரு பூவின் பெயர்சொல்லிப் பெரியவர் பொக்கைவாய் தெரியச் சிரிப்போடு கூறினார். முன்கொடுத்த பணத்துடன் மேலும் ஆயிரத்து நூறு சேர்த்து அம்மா சொன்ன விலைப்படி இரண்டாயிரத்தையும் கொடுத்தேன். மலர்ந்த அந்த அம்மாவின் முகம் எங்கள் இதயத்தைத் தொட்டது. என் அம்மாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என் மனைவி கூறினார்.

....வாகனங்கள் எதுவுமின்றிச் சாலை வெறுமையாகத் தெரிந்த ஓரிடத்தில் மீற்றர் 80தைத் தொட்டது. தொட்டதுதான் தாமதம் மரத்தின்பின்னால் ஒளிந்திருந்த காவல்துறை வெளிவந்து கையை நீட்டிவிட்டது. யேசுவே என்று சொன்ன எங்கள் சாரதி விரைவாக ஊர்தியை நிறுத்தி வேண்டிய பத்திரங்களை எடுத்துக்கொண்டார். பத்திரங்களுக்குள் இரு 100 ரூபாய் நோட்டுகள் நுளைந்தன. சென்ற வேகத்தில் சாரதி திரும்பிவரவே பயணம் தொடர்ந்தது...

இவைகள்தான் யதார்த்தம்.. நன்றி!

எங்கள் ஊரில்தான் 'கையூட்டிற்கு' போக்குவரத்து காவல்துறை படியுமென்றால், அங்கேயும் இதே நிலைதானா..?

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகளின் உன்மை முகமது  பாஞ் அதுதான் அவர்களை வாழ வைக்கிறது 

எந்த பொருட்களாக இருந்தாலும் உன்மை சொல்லி விற்பனை செய்வது?

தொடரட்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

மரநிழலில் ஒரு வயதான அம்மாவும், பெரியவரும், சிறுவனும் படுத்திருந்தார்கள். தேன் வேணுமா ராசாக்கள் என்று கேட்டபடி அந்த அம்மா எழுந்து வந்தார். வெண்மையான சாராயப் போத்தலின் கழுத்தை தேன்வதை மூடியிருக்கத் தேன் களங்மின்றிக் காட்சிதந்தது. தேன் என்னவிலை?“ ஆயிரம்ரூபா ராசா.என்ன இந்தவிலை?“ இப்படித்தேன் நீங்கள் எங்குமே எடுக்கமாட்டியள் ஒரு நூறுரூபாய் குறைத்துத்தாறன் அதுக்குமேல் குறைக்க முடியாது.

--------

முன்கொடுத்த பணத்துடன் மேலும் ஆயிரத்து நூறு சேர்த்து அம்மா சொன்ன விலைப்படி இரண்டாயிரத்தையும் கொடுத்தேன். மலர்ந்த அந்த அம்மாவின் முகம் எங்கள் இதயத்தைத் தொட்டது. என் அம்மாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என் மனைவி கூறினார்.

பயணம் தொடரும்.

முதலில் அந்த அம்மாவிடம் ..... தேனுக்கு பேரம் பேசி, 100 ரூபாய் குறைத்து வாங்கிய  போது...
பாஞ்ச் அண்ணை..... ஒரு ஏழைத் தமிழ்ப் பெண்ணிடம், 50 சென்ற் காசுக்காக இப்படிச் செய்து விட்டாரே என்று கவலை கொண்டேன்.
தொடர்ந்து வாசிக்கும் போது... நீங்கள் மற்ற தேன் போத்தலையும் வாங்கி, 
அந்த அம்மா... முதலில் கூறிய பணத்தை கொடுத்து விட்டு, 
அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு வந்ததை வாசித்த பின்தான் எமக்கும் ஆறுதலாக இருந்தது.  thumbs_up_by_weapons_expert_cool-d6sx4o7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.