Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆரம்பமானது எழுக தமிழ்

Featured Replies

  • தொடங்கியவர்

எழுக தமிழ்பேரணியில் முதலமைச்சர் உரை

எழுக தமிழ்பேரணியில் முதலமைச்சர் உரை

எழுக தமிழ்பேரணி
ஆரம்ப நிகழ்வு 24.09.2016 காலை 11.00 மணியளவில்
யாழ்ஃமுற்றவெளி மைதானம் – யாழ்ப்பாணம்
முதலமைச்சர் உரை
குருர் ப்ரம்மா.......................................................
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே,
'எழுக தமிழ்' பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே!

இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!
இது ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை! சிங்கள சகோதர சகோதரிகளை எதிர்த்து நடாத்தவில்லை! பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை! ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை. கொள்கையளவில் அவர்கள் எம்மை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். பலர் எம்முடன் இங்கு வந்தும் இருக்கின்றார்கள். அவர்கள் இச்சந்தர்ப்பம் சரியானதா என்றுதான் கேட்கின்றார்கள். அதில் எமக்குள் கருத்து வேறுபாடு. அவ்வளவுதான். இது பற்றி நான் பின்னர் குறிப்பிடுவேன்.

ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடக் கடமைப் பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுவதாலோ மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம். அதனால்த்தான் தமிழ் மக்கள் பேரவையின்

இணைத்தலைவர் பதவியை நான் ஏற்றேன். 2009ம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு சம்பந்தமாக ஏற்கனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளன. அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே சில அடிப்படைக் கொள்கைகளை கட்சிகளும் மக்கள் சமூகமும் ஏற்றுக் கொண்டால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்காது. 2001ம் ஆண்டில் பல கட்சிகளை ஒன்று படுத்தும் 6 பேர் கொண்ட குழுவை கொழும்பில் அமைத்த போது சிவில் சமூகம் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் அரசியலில் அப்போது இல்லாதிருந்தும் அவ்வாறான ஒருங்கிணைதலை அப்போதே வரவேற்றேன். மக்களும் மக்கட் பிரதிநிதிகளும் சேர்ந்தால்த்தான் எங்களுக்கு மதிப்பு. ஆகவே உங்கள் ஊக்கமும் உற்சாகமும் உறுதுணையும் மக்கட் பிரதிநிதிகளுக்கு ஊட்டச் சத்துக்களை வழங்குவன என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

நாம் எமது தமிழ்ப் பேசும் மக்களின் கரிசனைகளை, கவலைகளை ஆகக்கூடியது எமது கண்டனங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நடாத்தியுள்ளோம்.

எம் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் பலத்த சந்தேகங்களிலும் ஐயப்பாடுகளிலும் மனச் சஞ்சலத்திலும் இருக்கின்றார்கள். அவர்களின் அந்த மனோநிலையை, மனக்கிலேசங்களை, ஊரறிய, நாடறிய, உலகறிய உரத்துக் கூறவே இங்கு கூடியுள்ளோம்.
 
எமது கரிசனைகள் என்ன?
பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது

முதலாவது கரிசனை - சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா? போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றது. புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகின்றது.

காணாமல் போனோர் பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காணாமற் போனவர் காரியாலயம் காலத்தைக் கடத்தும் கரவுத் திட்டமா? போர் முடிந்து ஏழு வருடங்களுக்குப் பின்னரே இக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச நெருக்குதல்களின் காரணமாக! இன்னமும் எவ்வளவு காலஞ் சென்றால் படையினரிடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது தஞ்சமடைந்த எம் மக்கள் பற்றித் தரவுகள் கிடைக்கப் பெறலாம்?

போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கைகள் என்ன? எம் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். இதற்கான விளக்கங்களை யார் தருவார்கள்? அவற்றைக் கோரியே இந்தப் பேரணி.

நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இது எதற்காக? எமது தனித்துவம் பேணப்படும், எமது உரித்துக்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறி வரும் இவ்வேளையில் இவ்வாறான குடியேற்றங்கள் எமது மக்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக இலங்கை பூராகவும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் மக்கள் அடித்து துரத்தப்பட்டு வெளிநாடுகள் சென்றவர்கள் போக பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் தங்கள் தாயகப் பிரதேசங்களில் அவர்கள் தஞ்சம் புக, இங்கும் வந்து எமது இன அடையாளங்களை அழிக்கவும் குடிப் பரம்பலை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் இக் குழப்பத்தை யாராவது தீர்த்து வைப்பார்களா என்று கேட்டு வைக்கவே இந்தப் பேரணி! இது யாருக்கும் எதிரானதல்ல? ஆனால் எமது வடமாகாணத்தில் நடைபெறும் பல நடவடிக்கைகள் பற்றி நாம் அறிய விரும்புகின்றோம்.

அவற்றிற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். உதாரணத்திற்கு ஏன் சிங்கள முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு மத்திய அமைச்சர்களுடனான ஒரு செயலணி வேண்டியிருக்கின்றது? மற்றைய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு செயலணி வேண்டாமா? இந்தியாவில் இருந்து வரும் எமது இடம் பெயர்ந்தோர் சம்பந்தமாக போதிய கவனம் செலுத்தியுள்ளோமா?

கேரதீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசாங்கம் எமது வடமாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதன் சூட்சுமம் என்ன?

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் இராணுவம் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அவற்றில் பயிர் செய்து பயன்களை அனுபவிப்பதன் அர்த்தம் என்ன? உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், தனியார் வாசஸ்தலங்கள் தொடர்ந்து படையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நியாயம் என்ன? ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அனைத்தையும் விடுவிக்காததன் காரணம் என்ன? மேலும் பல ஏக்கர் மக்கள் காணிகளை இப்பொழுதும் புதிதாகக் கையகப்படுத்தும் இராணுவத்தினரின் நடவடிக்கை எம் மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போர்க்குற்றப் பொறிமுறை கலப்புப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பது 2015ம் ஆண்டின் செப்ரெம்பர் மாத சர்வதேச எதிர்பார்ப்பு. வெளிநாட்டு வழக்கு நடத்துநர், வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச போர்க்குற்ற சட்டத்தை உள்ளேற்றல் போன்றவை இல்லாது கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் எமது நல்லாட்சி அரசாங்கம் நாடுவது எமக்குச் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்காமற் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவை மட்டுமல்ல. எமது வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுதும் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள். தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு கிழக்கு கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமன்றி எமது மீனவர்களின் படகுகளை சட்ட விரோதமாகப் படையினர் உதவியுடன் கைப்பற்றுகின்றார்கள், வாடிகளை அமைக்கின்றார்கள். சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள்.

கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந் நடவடிக்கைகளால் எமது வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. இவற்றை யாரிடம் சொல்வது? சொன்னாலும் தீர்வுகள் கிடைக்குமா?

இவற்றை உலகறியச் செய்யத்தான்  இந்தப் பேரணி. வடக்கு கிழக்கில் 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் போதைப் பொருட் பாவனை இல்லாமல் இருந்தது. இதனை மத்திய அரசாங்க உயர் அதிகாரிகள்
 
கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் சுமார் ஒன்றரை இலட்சம் படையினர் பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் குடியமர்ந்து இருக்கும் நிலையில், பெரும்பான்மையினப் பொலிசாரை எமது பொலிஸ் நிலையங்களில் பதவியில் நிறுத்தியுள்ள நிலையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான கிலோ கஞ்சா வட பகுதியை வந்தடைகின்றது. மேலும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் வந்தடைகின்றன. அதிகப்படியான மதுசாரமும் விற்பனையாகின்றன. இது எப்படி? சட்டமும் ஒழுங்கும் எங்களின் கைவசம் இல்லை. அப்படியானால் இவை எவ்வாறு சாத்தியமாகியுள்ளன அல்லது இவை ஏன் நடக்கின்றன? இவை எமது இளஞ் சந்ததியினரைத் திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாட்டின் அங்கமா என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? இதனை எமது பெரும்பான்மையின சகோதர சகோதரிகளிடமும் உலக நாட்டு மக்களிடமும் கேட்கவே இந்தப் பேரணி. தனியாகச் சொன்னால் எவரும் கேட்க மறுக்கின்றார்கள். ஆகவே நாங்கள் நடை பயின்று வந்து பலராகக் கேட்கின்றோம். எமது மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகின்றோம். மக்கட் பிரதிநிதிகளும் மக்களும் சேர்ந்து கேட்கின்றோம்.

அடுத்து அரசியல் யாப்புக்கு வருவோம். தொடர்ந்து தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். ஆங்கிலேயர் அதிகாரங்களை உள்ள10ர்வாசிகளுக்கு வழங்கப் போகின்றார்கள் என்று தெரிந்ததும் 1919ம் ஆண்டில் இருந்தே அதிகாரத்தைத் தம் கைவசம் வைத்திருக்கப் பெரும்பான்மையின மக்கட் தலைவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். அதிகாரம் முழுமையாக பெரும்பான்மையின மக்களிடம் சென்றுவிட்டது. எமது மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது 'இவ்வளவு தருகின்றோம்', 'இன்னும் கொஞ்சம் தருகின்றோம்', 'சரி! இவ்வளவு தான் இதற்கு மேல் எதுவும் கேட்கப்படாது' என்றெல்லாம் பேரம் பேசி வருகின்றார்கள்.

இது இவ்வளவுக்கும் தமிழ் பேசும் மக்கள் காலாதி காலமாக 2000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையின மக்களாக வசித்து வருகின்றார்கள். இங்கு சிங்கள மக்கள் எப்பொழுதும் வசிக்கவில்லை. சிங்கள மொழி நடைமுறைக்கு வந்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில். தமிழ் மக்கள் பௌத்தர்களாக சில நூறு வருட காலம் மாறியிருந்தமையே பௌத்த மத எச்சங்கள் வடக்குக் கிழக்கில் காணப்படுவதற்கு காரணம். அப்படியிருந்தும் எம்மை வந்தேறு குடிகள் என்றும் வடக்குக் கிழக்கில் சிங்கள மக்கள் முன்னர் வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் விரட்டப்பட்டு விட்டனர் என்றும் புதிய
6
சரித்திரத்தை வேண்டுமென்றே எழுதத் தொடங்கிவிட்டனர். தாம் எழுதிய புதிய சரித்திரத்தின் அடிப்படையிலேயே இவ்வளவு தருகின்றோம் இன்னும் கொஞ்சம் தருகின்றோம் என்று பேரம் பேசத் துணிந்துள்ளார்கள்.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் தாயகம். அவர்களுக்குச் சுயாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம். இந்த நாடு சமாதானத்துடனும் நல்லுறவுடனும் அரசியல், சமூக, பொருளாதார விடிவை நோக்கிப் பயணிக்க விரும்பினால் சமஷ;டி அரசியல் முறையொன்றே அதற்குத் தீர்வாக அமையலாம். இதில் கட்சிகளும் மக்களும் உறுதியாக இருக்கின்றனர். ஒற்றையாட்சியானது அதிகாரங்களைத் தொடர்ந்து பெரும்பான்மையின மக்களின் கைகளிலேயே தேக்கி வைக்கச் செய்யும். தமிழ்ப் பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் சுமூகமாக சம அந்தஸ்துடன் நல்லுறவுடன் இனியாவது வாழ்வதானால் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து சுயாட்சி வழங்குவதே ஒரே வழி. அதனால்த்தான் நாங்கள் சமஷ;டி ஆட்சி முறையை வலியுறுத்தி வருகின்றோம். அதற்கேற்றவாறு அரசியல் யாப்பு பற்றிய நகர்வுகள் நடப்பதாகத் தெரியவில்லை. ஏனோ தானோ என்று மூடி மொழுகி ஒரு அரசியல் தீர்வைத் தரலாம் என்று தெற்கு நினைப்பதாக எமக்குத் தோன்றுகின்றது. எமக்குத் தரவேண்டிய உரித்துக்கள் எமது குழுமம் ரீதியான உரித்துக்களே அன்றி தனிப்பட்டவர்களுக்கு அளிக்கும் உரித்துக்கள் அல்ல.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்று நாம் கேட்பதை ஏதோ கேட்கக் கூடாததை நாம் கேட்பதாகத் தெற்கில் நோக்கப்பட்டு வருகின்றது. பல தமிழ்ப் பேசும் மக்களால் கூட அவ்வாறே நோக்கப்படுகின்றது.

நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன?

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் சம அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் ஆதிக்கத்தை நாடு பூராகவுந் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற சரித்திர ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாத கருத்தை அதன் பின் வெளிவிட்டனர். ஆகவே சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் பௌத்த சிங்களவர் மிகக் குறைவாக வாழும் பிரதேசங்களில் கட்டாயமாகத் திணிக்கக்கூடும் என்ற பயம் எமக்கு இருக்கின்றது. அந்த வழியில்த்தான் அண்மைக் கால நடவடிக்கைகள் தெற்கிலிருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன. இது 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு

நடைமுறைக்கு வந்த பின்னரே கூர்மம் பெற்று வருகின்றது. பௌத்த கோயில்கள் கட்டுவது பற்றி புத்த சிலைகள் அமைப்பது பற்றி ஏற்கனவே கூறி விட்டேன்.

தமிழ்ப் பேசும் எமது பிரதேசங்களில் இன்னமும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் எழுதிக் கொள்ளப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்களைத் தருவதாகச் சென்ற கிழமை கூட எமக்கு அறிவிக்கப்பட்டது. எமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களில் எமது பாரம்பரிய மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை. எமது காணிகள் பறிபோகின்றன. இராணுவம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை இங்கு குடியிருக்கச் சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். எனவே வடக்கு கிழக்கைச் சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருவதால் எமது மொழியையும் மதங்களையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்க வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம். வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்தவே வடக்கு கிழக்கு இணைப்பு அத்தியாவசியம் ஆகின்றது. அதனை சிங்கள மக்கள் ஏற்பார்களா என்றதொரு சந்தேகம் எம்மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

உண்மையைச் சிங்கள மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எமது வாதம். வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக தமிழ்ப் பேசும் மக்களே வாழ்ந்தார்கள் என்பதை சிங்கள மக்கள் ஏற்காவிட்டால் சர்வதேச வரலாற்றாசிரியர்களை அழைத்து நாம் கூறுவது சரியா அல்லது அண்மைக் காலங்களில் பெரும்பான்மையினர் கூறிவருவது சரியா என்பதை ஆராய்ந்து பார்க்கட்டும். சிங்கள பௌத்த மக்கள் பாரம்பரியமாகப் பல காலம் வாழ்ந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் வந்தேறு குடிகளாக நுழைந்து ஆக்கிரமித்தார்கள் என்பது சரித்திர பூர்வமாக ருசுவாகினால் நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கான கோரிக்கையைக் கைவிடுகின்றோம். அண்மைய பல சரித்திர பூர்வ கண்டு பிடிப்புக்கள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் நவீன தொழில்நுட்ப பொறிமுறைகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு நீண்ட கால இருப்பை ருசுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
திடீரென்று ஒரு அரசியல் யாப்பைத் தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும் என்பதற்காக

எங்கள் உரிமைகளை எந்த அரசாங்கமும் சிதைக்க முயற்சிக்கக் கூடாது. 18 தடவைகள் சென்ற அரசாங்கம் இருந்த காலத்தில் பல கலந்துரையாடல்கள் இரகசியமாக தமிழ் மக்கட் தலைவர்களுக்கும் அப்போதைய அரசாங்கத்திற்குமிடையில் நடைபெற்றன. அவை பற்றி எதனையும் எவரும் வெளியிடவில்லை. அரசியல் யாப்புக்களினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் நாங்களே. எங்கள் கருத்துக்களைச் செவிமடுக்காவிடில் எமது இனத்தின் அவலங்கள், ஐயங்கள், அனர்த்தங்கள் தொடர்ந்தே செல்வன.
ஆகவேதான் இந்தப் பேரணி மூலமாக தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கரிசனைகளை நாம் வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்தப் பேரணியை கட்சி பேதமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இத்தருணத்தில் ஏன் என்று கேட்கின்றார்கள் நம்மவரில் சிலர். இத்தருணத்தில் எமது கரிசனைகளை ஊரறிய, நாடறிய, உலகறிக் கூறாவிடில் பின் எப்பொழுது கூறப் போகின்றோம்? எமது எதிர்பார்ப்புக்கள் வரப்போகும் அரசியல் யாப்பினால் திருப்திப் படுத்தப்படுவன என்ற நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுவரை காலமும் தம் கைவசம் வைத்திருந்த அதிகாரத்தை எம்முடன் பெரும்பான்மையினத் தலைவர்கள் நியாயமாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நாம் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு பகிர்ந்தார்களேயானால் எமக்கு மகிழ்ச்சி. இல்லை என்றால் எமது கரிசனைகளை எப்பொழுது நாம் வெளிக்காட்டப் போகின்றோம்?

மத்தியின் மேலாதிக்கம் தற்பொழுதும் தொடர்கின்றது. இராணுவ பிரசன்னம் தொடர்கின்றது. ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்கிறது. காணாமற் போனோர் பிரச்சினை தொடர்கின்றது. மதரீதியான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது. வடமாகாண மக்கட் பிரதிநிதிகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எந்த நேரத்திலும் முடியாது போய் விடும். புதிய அரசியல் யாப்புத் தயாரித்தலானது எமது கரிசனைகளை உள்ளேற்க வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கு சமஷ;டி அலகை உறுதிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இறுதித் தீர்வு கட்டியமைக்கப்பட வேண்டும். காணி, பொலிஸ், நிதி போன்ற அதிகாரங்கள் முழுமையாக எமக்கு வழங்கப்பட வேண்டும். இதனை சர்வதேச நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இராணுவம் படிப்படியாக குறிப்பிட்ட காலத்தினுள் வாபஸ் பெற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக புத்த விகாரைகள், சிலைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு

தமிழ்ப் பேசும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக நடைபெற வேண்டும். காணாமல்ப் போனோர் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் வலியுறுத்திவே இந்தப் பேரணி. இவ்வாறான எமது கரிசனைகளைக் கருத்தில் கொள்ளாது அவற்றிற்குத் தீர்வைக் காணாமல் நல்லிணக்கம் பற்றியும் புதிய அரசியல் யாப்புப் பற்றியும் பேசுவது கரத்தையைக் குதிரைக்கு முன் பூட்டுவதற்கு ஒப்பானது.

எமது சிங்கள சகோதர சகோதரிகள் ஏன் எமது இராணுவ, கடல்படை, விமானப்படை சகோதர சகோதரிகள் எமது மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். எமது இன்றைய கேள்விகளுக்குப் பதில் கூற அதிகாரத்தில் உள்ளோர் கடமைப்பட்டுள்ளார்கள் என்று கூறி என் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
வாழ்க தமிழ்! எழுக தமிழ்!

நன்றி. வணக்கம்
நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136306/language/ta-IN/article.aspx

  • Replies 56
  • Views 5.1k
  • Created
  • Last Reply

  • கருத்துக்கள உறவுகள்

கொழுத்தும் வெயிலில் எழுக தமிழ் பேரணியில் வரலாறு காணாத மக்கள் கூட்டம்

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதுடன் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டு எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியது.

யாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

கொழுத்தும் வெயிலில் எழுக தமிழ் பேரணியில் வரலாறு காணாத மக்கள் ஒன்று குவிந்துள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் பாராளுமன்றத்திடமோ அல்லது மாகாண சபையிடமோ செல்லுவதால் எந்த பயணும் இல்லை. மக்களின் சக்திதான் அவசியம் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பெளத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்தர்களும் பௌத்த சிலைகளும் எதற்கு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவமயமாக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? தற்போதும் தமிழ் மக்களின் பல காணிகளை இராணுவத்தினர் அபகரித்து கொண்டுதான் உள்ளனர் இதனை ஏன் தடுக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

http://ttnnews.com/கொழுத்தும்-வெயிலில்-எழுக/

on: September 24, 2016
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் எதிர்பையும் மீறி மக்கள் கலந்து கொண்டது மாற்றத்திற்கான காட்சி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 2016 செப்ரெம்பர் 24 (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில்  தற்போது ஆரம்பமாகியிருக்கும் எழுகதமிழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அலை அலையாக மக்கள் திரண்டு வந்த வண்ணமுள்ளனர்.

அவற்றின் படங்களை காணலாம்

eluka-1eluka-2eluka-3eluka-4eluka-5eluka-7eluka-8eluka-9

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். விவசாய மற்றும் வர்த்தக பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். காணாமல் போனோருக்கு நீதி வேண்டும். கடற்தொழிலில் தென்னிலங்கை மீனவரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் என்னும் கோரிக்கைகளையும் இப் பேரணி முன்வைக்கின்றது.
அத்துடன் இன்னும் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்காவுக்கு புதிய அரசியலமைப்பு வரவுள்ளது.  குறித்த  புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சந்தித்துவரும் கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில்,இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், தமிழ்த்தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகிக்கும் சமஸ்டி யாப்பாக உருவாக்கக் கூடிய நிலையை தோற்றுவிப்பதே இப்பேரணியின் பிரதான நோக்கமாகும். 

http://sangunatham.com/?p=4653

  • தொடங்கியவர்
ஏன் இந்த எழுக தமிழ் பேரணி இனைத்தலைவர் - லக்ஸ்மன் விளக்கம்
ஏன் இந்த எழுக தமிழ் பேரணி இனைத்தலைவர் - லக்ஸ்மன் விளக்கம்
யாழ் முற்றவெளி பகுதியில்  இன்று இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வு எதற்காக என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி பூபாலன் லக்ஸ்மன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
 
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
1. தமிழர் தாயகத்தில் பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும் 
 
2. யுத்தக் குற்றங்களுக்கும் , இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். 
 
3. காணாமல் ஆக்கப்படடோர் எங்கே எனவும் அவர்களிற்கு நேர்ந்த கதி என்ன எனவும் தெளிவுபடுத்த வேண்டும்.
 
4.தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்..
 
5.எங்கள் கடல் வளம் பாதுகாக்கப்படவும் , தென்இலங்கை மீனவர்களின் தலையீடுகள் முற்றாக நீக்கப்படவும் வேண்டும்.
 
6.இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
 
7.எமது பிரச்சனைக்கு நிலையான சமஷ்டி தீர்வு ஒன்று வேண்டும்
 
8.சிங்கள குடியேற்றங்கள் , பௌத்த விகாரைகள் அகற்றப்பட வேண்டும்.
 
9.திட்டமிட்டு யாழ்ப்பாணத்துக்குள் கடத்தபபடும் போதைப்பொருள் உடன் நிறத்தப்பட வேண்டும்.
 
10.முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு . அவர்களிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். 
 
போன்ற கோரிக்கைகளே இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/18033

  • தொடங்கியவர்
'தமிழரின் நம்பிக்கைக்கு உரிய தலைவன்' என வடக்கு முதல்வரை விழித்த மக்கள்
 
article_1474715845-DSC_0103.JPG

-சொரண்குமார் சொரூபன்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் இன்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, 'தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவன்', 'தமிழரின் தலைவன்' என விழித்துக் கோசமிட்டனர்.

யாழ். பல்கலைக்கழகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இரு பிரிவுகளாக ஆரம்பமான பேரணியினை வடக்கு மாகாண முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

பின்பு முற்றவெளியில் முடிவுற்ற பேரணியினைத் தொடர்ந்து அங்கு உரையாற்றுவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மேடை ஏறிய வேளையிலேயே மக்கள் இவ்வாறு கோசமிட்டு தமது ஆரவாரத்தினை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் தனது உரை நடுவே தெரிவித்த தமிழினம் தொடர்பான கருத்துக்களுக்கும் மக்கள் கைதட்டி முதலமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உற்சாகப்பட்டனர். 'தமிழினத்தின் தலைவன்' தமிழனுக்கு சரியான தலைவன் என முதலமைச்சரை மக்கள் விழித்து கரசோசம் இட்டு முதலமைச்சர் மீதான தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

article_1474715862-DSC_0101%20copy.jpg

- See more at: http://www.tamilmirror.lk/182555/-தம-ழர-ன-நம-ப-க-க-க-க-உர-ய-தல-வன-என-வடக-க-ம-தல-வர-வ-ழ-த-த-மக-கள-#sthash.6mvDvXFi.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கி எழுந்த யாழ் மக்கள் 
பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது--முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றமக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள பேரணி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேரணி யாழ். முற்றவெளி மைதானத்தை சென்றடைந்த பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் வெயிலுக்கு மத்தியிலும் பெருமளவில் இன்றைய பேரணியில் ஒன்று கூடியிருக்கிறோம் என்றால் நாங்கள் எங்களுடைய உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. எங்களது உரிமைகள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் .

நாங்கள் இன்றைய பேரணியில் சொல்லும் செய்திகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எதிரொலிக்க வேண்டும். இந்தச் செய்திகள் ஐ.நா பொதுச் சபைக்குக் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புலம்பெயர் உறவுகளுக்கும் எமது செய்திகள் சென்றடைய வேண்டும். அது மாத்திரமல்ல இன்றைய பேரணி ஒரு ஆரம்பம் தான். பொங்கு தமிழும், எழுக தமிழும் எமது ஒண்றிணைவின் ஒரு ஆரம்பம் மாத்திரமே. வன்னியில், மட்டக்களப்பில், திருகோணமலையில், இன்னும் புலம்பெயர் தேசங்களில் இந்த எழுக தமிழ் வீறு கொண்டு எழும். அவ்வாறான சூழலில் தான் எமது உரிமைகளைப் பெறும் நிலை உருவாகும் எனவும் கூறியுள்ளார்.

எழுக தமிழ் பேரணியின் செய்தி இந்த நாட்டை ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, இந நல்லிணக்கக் குழுவின் தலைவியாகவிருக்கின்ற சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் காதுகளுக்குக் கேட்க வேண்டிய செய்தி ஆகும்.

தமிழ் மக்கள் தோற்றுப் போனவர்களல்ல.ஆகவே, தமிழ் மக்களுடைய உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்ய முடியாது. தமிழ் மக்களின் கலாசாரத்தை அழிக்க முடியாது.

தமிழ் மக்க்களின் நாகரீகம், பண்பாடு போன்றவற்றை அழிக்க முடியாது. இவ்வாறான பாதிப்புக்களுக்கு எதிராக நாம் இறுதி வரை போராடுவோம். இதுவே, தமிழ்மக்கள் பேரவையினது முடிவாகும்.

ஆகவே, அமையப் போகிற அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, வடகிழக்கு இணைந்த, தமிழ் மக்களுடைய இறையாண்மை, தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதொரு அரசியல் சாசனமாக, சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் சாசனமாக அமையப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சம்பந்தன் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு அவர் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் தங்களையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி விட்டதென அவர் சொல்ல வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஐ. நா சபையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் முன்னர் அமிர்தலிங்கத்தை, தந்தை செல்வா போன்ற தமிழ் அரசியல் தலைவர்களை முன்னரும் ஏமாற்றியது. ஆகவே, நாங்கள் இனியும் ஏமாற்றுவதற்குத் தயாராகவில்லை எனவும் எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு உதயன் இது முற்றவெளியில் உள்ள முனியப்பர் கோவிலில் எள்எண்ணெய் எரிக்க வந்த கூட்டம் என்று எழுதும்

  • கருத்துக்கள உறவுகள்

Protest staged in Jaffna to highlight Tamil issues

Protest staged in Jaffna to highlight Tamil issues

September 24, 2016  06:07 pm

Thousands of Sri Lankan Tamils led by Northern Province Chief Minister C V Wigneswaran today staged a demonstration in Jaffna to highlight issues faced by the minority community in the country.

“It has been seven years since the war ended. Tamil people are yet to receive reasonable solutions to their grievances,” he said, referring to the defeat of LTTE which was fighting for an independent state for minority Tamils.

Tamil Makkal National Front organised today’s protest march and a rally to highlight issues faced by the community, under the theme ‘Arise Tamils’.

The demonstrators asked the government to halt Sinhala majority settlements and stop building Buddhist religious shrines in Tamil areas, return of the Tamil civilian lands held for military purposes, release of Tamil political prisoners and assistance in tracing missing people.

“Businesses remain shut in the Jaffna town in solidarity,” the residents said.

The main Tamil party, Tamil National Alliance, shunned the demonstration.

“The TNA pledged Tamils a federal solution at the last election. So the Tamils can be only happy with a federal solution by merging the north and east,” TNA lawmaker Dharmalingam Siddathan said. -Agencies

PTI

http://adaderana.lk/news/37102/protest-staged-in-jaffna-to-highlight-tamil-issues

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டு எழுச்சி பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்பு!

02Saturday, September 24th, 2016

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் குறுகியகால ஏற்பாட்டில் செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பேரணியை வெற்றியடையச் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கட்சிக்கொடிகளையும் தமிழர்களது அரசியல் உரிமைகள் உள்ளிட்ட அபிலாசைகளையும் எடுத்தியம்பும் எழுச்சிக்கோசங்களுடன் பிரதான வீதியூடாக நகர்ந்த மக்கள் பேரணி காங்கேசன்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து முனியப்பர் கோயில் வீதியூடாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலை சென்றடைந்தது.

02

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த நிலையில் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் உரைகளை கட்சியின் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன், யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, செஞ்சொற் செல்வர் இரா.செல்வடிவேல் ஆகியோர் உரையாற்றியிருந்த அதேவேளை அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுச்சி உரையாற்றியிருந்தார்.

04

இதில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் அரசியல் உரிமை, மீள்குடியேற்றம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அரசை நோக்கி கோரிக்கை முன்வைத்ததுடன் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடக்கு மாகாணசபை ஆகியவற்றுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியதுடன் தமது வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுத்திருந்தனர்.

DSC05531

இப்பேரணியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC05535

DSC05539

http://www.epdpnews.com/செய்திகள்/பிரதான-செய்திகள்/ஈ-பி-டி-பியின்-எழுக-தமிழ்-க/

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் ஆளாளுக்கு பிரித்து பிரித்து செய்தி போட்டு செய்யுறானுகளே

  • தொடங்கியவர்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்.

'எழுக தமிழ் 2016!' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது - தனது  அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவீன் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் வலியுறுத்துவதே 'எழுக தமிழ் 2016!' எழுச்சிப் பேரணியின் நோக்கமாகும்.

2016ஆம் ஆண்டு, செப்ரெம்பர் 24ஆம் நாள், யாழ்ப்பாண முற்றவெளியில் நடைபெறுகின்ற 'எழுக தமிழ் 2016!' எழுச்சிப் பேரணி கீழ்வரும்; பிரகடனத்தை செய்கின்றது:

1.    வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த  விகாரைகளும், புத்தர் சிலைகளும் இவ்வாட்சியிலும் அரசின் அனுசரணையுடனும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உதவியுடனும்; உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுடைய  இன அடையாளத்தை அழிக்கவும்;, வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் குடிப்பரம்பலை வலிந்து மாற்றவும் அரசு எடுத்து வரும் இவ்வாறான சகல நடவடிக்கைகளையும் உடன் நிறுத்துமாறு  இம் மக்கள் பேரணி வலியுறுத்துகின்றது.

2.    யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகிய நிலையிலும் ஆக்கிரமிப்பு இராணுவம்  மிகச் செறிவாக வட கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக பிரதேசங்களில்; ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை சுவீகரிப்பு  செய்தது மாத்திரமல்லாமல், தொடர்ந்தும், தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையிலும்  ஈடுபட்டு வருகின்றது. மேலும் உல்லாச விடுதிகள், விவசாய பண்ணைகள்;, இதர வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன்;, வடக்கு – கிழக்கு நிர்வாகத்திலும் தொடர்ந்தும் தலையிட்டு வருகின்றது;. வட கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர் தமது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு இராணுவத்தில் தங்கி தமது  பொருளாதாரத்தை தாமே பொறுப்பேற்க முடியாத நிலையையும்,  இராணுவமயமாக்கலினூடு தமிழ்  சமூகத்தினை பிளவுபடுத்தி, சமூக உறவுமுறைகளை சிதைத்து,  தமிழர் கூட்டாக சனநாயக ரீதியில் அணி திரள்வதற்கு இடையூறாகவும் இராணுவம் நிலவி வருகிறது. பெண்கள் சிறுவர்களுக்கெதிரான இராணுவத்தினரின் பாலியல் வன்முறை சம்பவங்களும் தமிழ் தேசத்தின் இருப்பை சிதைக்கும் வழி வகைகளே. இதனால் வட- கிழக்கு தாயகத்திலிருந்து உடனடியாக இராணுவத்தை வெளியேற்றுமாறு இப்பேரணி வலியுறுத்துகின்றது.

3.    தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளகப் பொறிமுறையை  நீதிக்கான தேடலில் பிரோயோசனமற்ற ஒன்று என தொடர்ந்தேர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஐ  நா மனித உரிமை ஆணையாளரின் செப்டம்பர் 2015 அறிக்கை மிகத் தெளிவாக இலங்கையின் நீதித்துறை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்க தகமையற்றது எனக் கூறியது. இருப்பினும் ஐ. நாவின் அங்கத்துவ நாடுகள் இணைந்து கலப்பு பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு பொருத்தமானது என தமது செப்டம்பர் 2015 பிரேரணை மூலம் விதந்துரைத்தனர். அதனை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் தற்போது வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது எனத் தெளிவாக அறிவித்துவிட்டது. கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீள உள்ளகப் பொறிமுறையை மட்டுமே முன்வைக்கின்றது. இச்;சூழலில் இப்பேரணி சர்வ்தேச விசாரணைக்கான தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை வலியுறுத்தி நிற்கின்றது. 

4.    கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நிலவி வரும்; பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் சிலர் 15 – 20 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர். 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு உறுதி மொழி கொடுத்தும்  இதுவரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்பதுடன் தொடர்ந்தும் பல இளைஞர்கள் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாழும்  அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென்பதுடன் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமெனவும் இப்பேரணி வலியுறுத்துகின்றது.

5.    போர் நிகழ்ந்த கால கட்டத்திலும், அரசியற் காரணங்களுக்காகவும் கடத்தப்பட்டும், சரணடைந்த பின்பும் காணாமல் போகச்செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் எங்கு இருக்கின்றார்கள் , அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என உடனடியாகக் கண்டறிந்து பகிரங்கப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு நீதி வழங்கப்படவும் வேண்டும்.

6.    யுத்தம் நடந்த காலகட்டங்களில் கடற்படையினரின் தடை உத்தரவு காரணமாக வடக்கு – கிழக்கு மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருந்தனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகிய நிலையிலஇ; இன்றும் கூட வடக்கு – கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கப்;பட்டு வருகின்றனர். தென்னிலங்கை மீனவர்கள் வட கிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமின்றிஇ வடக்கு, கிழக்கு மீனவர்களின் படகுகளை சட்ட விரோதமாக கைப்பற்றுவதாலும்இ நிரந்தர தங்குமிடங்களை அத்துமீறி அமைப்பதனாலும்; தமிழ் மீனவர்கள் தமது சொந்த மீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படுகின்ற சூழல் உருவாகி வருகின்றது. மேலும் தென்னிலங்கை மீனவர்கள், வட – கிழக்கு கடற் பிரதேசங்களில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கையாள்வதால் தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதரங்களை இழந்தும் வருகின்றார்கள்.  இதன் காரணமாக ஒட்டு மொத்தமான தமிழ் மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.

இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி முறைகளாலும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;.  அன்றாடத் தொழில் செய்து பிழைக்கும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் மீனவர்களின் கடல் வளங்கள்; அத்துமீறி, சட்டத்துக்கு புறம்பாக சூறையாடப்படுவதை இப்பேரணி வன்மையாகக் கண்டிப்பதுடன்

7.    விடுதலைக்காக போராடிய தேசிய இனங்கள் மத்தியில் அவர்களின் விடுதலை வேட்கையை அழிக்கும் பொருட்டு போதை வஸ்துக்களை இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் பரப்பும் வழிமுறைகளை பல நாடுகளின் அரசுகள் கையாண்டுள்ளன. தமிழர் தாயகத்தை  ஆழமான இராணுவ கண்காணிப்புக்குள் வைத்திருக்கின்ற போதிலும் பெருமளவான போதைவஸ்துப் பொருட்கள் எமது பிரதேசங்களினுள் ஊடுருவ விடப்படுகின்றன. மேலும்இ கிரோயின் போன்ற போதைப் பொருட்களும், வடக்கு – கிழக்கில் வேகமாகப் பரவி வருவதுடன், வட- கிழக்கில் இராணுவத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு விழாக்களின் போது தமிழ்  இளைஞர்களிடையே மது பாவனையை இராணுவம் நேரடியாக ஊக்கப்படுத்துவது  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்; இவை அனைத்தும் எமது இளம் சந்ததியின் எதிர்காலத்தை திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகளாகவே நோக்க வேண்டியுள்ளது. இவற்றை நிறுத்தவும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக:-

இன்னமும் தீர்வுகாணப்படாத தமிழ் தேசிய இனப் பிரச்சனையினதும்,  நடந்து முடிந்த போரினதும் - நேரடி மற்றும் நேரடியற்ற விளைவுகளான - மேற்கூறப்பட்ட அரசியற்-பாதகங்கள் எதுவும் மீண்டும் நிகழாதவாறு — தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியற் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தப் பேரணி பிரகடனம் செய்கின்றது.

தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனும் நோக்கில் 3ஆவது குடியரசு அரசியல் யாப்பை கொண்டு வருவோம் என்று இவ்வரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கூறி வருகின்றது. ஆனால் இலங்கை அரசின் சனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வரும் எனவும் பௌத்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையில் மாற்றம் வராது எனவும் தொடர்ந்தேர்ச்சியாக கூறி வருகின்றனர். ஒற்றையாட்சிக்குள் ஒரு குறைந்த பட்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கான தீர்வாக திணிக்க இவ்வரசாங்கம் முயற்சிக்கின்றது. அவசர அவசரமாக ஓர் அரசியலமைப்பை பாராளுமன்றில் நிறைவேற்றி பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற அரசாங்கம் முயற்சிக்கப் இருக்கின்றது. தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் வாக்கு புதிய அரசியலமைப்பிற்கு கிடைத்தால் அதை வைத்து தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வொன்றை வழங்கி விட்டதாக அர்த்தப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. தமிழர்கள் புதிய அரசியலமைப்பு எப்படியாக இருக்க வேண்டும் எனக் கருத்துக் கூறுவதோ, கூட்டாக நிலைப்பாடு எடுப்பதோ, அது தொடர்பில் சனநாயக ரீதியாக அணிதிரள்வதோ அரசியலமைப்பாக்க முயற்சியை குழப்ப எடுக்கும் நடவடிக்கையாக சித்தரிப்பதை நாம் கண்டிக்கின்றோம். அந்த வகையில் பின்வரும் நிலைப்பாடுகளை இப்பேரணி எடுக்கின்றது:

எனவே,

அ. தற்போதைய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமக்கு தந்த படிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த  மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில்த தமிழர்களின் கடந்த 68 ஆண்டு கால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

 ஆ. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில்,  தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமான தீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்படும் எனக் கூறுகின்றோம்.

இ.  தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம்.

ஈ.      தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத,  உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்பேரணி கூறுகின்றது.

உ. புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பிலாக நடாத்தப்பட்ட பொது மக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறந்தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள்ளது.  உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், சனநாயக ரீதியதுமான கலந்துரையாடல் ஒன்று மக்கள் மத்தியில் இடம் பெற போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அடக்குமுறையின் கீழ் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்த முடியாது.  வடக்கு கிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான திறந்த விவாதம்  நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், இராணுவமயநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136309/language/ta-IN/article.aspx

வன்னியில் இருக்கும் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வது நல்லதில்லை, ஏன் என்றால் இவர்கள் பேரணி முடிந்து வீடு செல்லும் போது இவர்களது நிலத்தை முஸ்லிலிம்கள் ஆக்கிரமித்து இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் உண்மையை எடுத்துக் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, முனிவர் ஜீ said:

ஆள் ஆளாளுக்கு பிரித்து பிரித்து செய்தி போட்டு செய்யுறானுகளே

இன்று செய்திகளை  இணைக்கத்தொடங்கி

வாழ்வில் முதல்முறையாக

ஈபிடிபியின் தளத்திற்குள்ளும்   போகவேண்டியதாயிற்று...

முகங்களை  அனைவரும்  அறியட்டுமே...

இவை  மக்கள்  பேரவையின் தகவல்கள்..

எழுக தமிழ்: பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் -புகைப்படத் தொகுப்பு

Mis à jour : il y a environ une heure · Pris à Jaffna Town, Sri Lanka
 
எழுக தமிழ்: பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் (புகைப்படத் தொகுப்பு)

படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்- 

மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் உரிமையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கில் பேரணியாக திரண்டிருந்தனர். 

நிறைய நாளுக்கு பிறகு தமிழ் மக்களின் கணிசமான பங்களிப்போடு இந்தப் பேரணி பெரு வெற்றி பெற்றுள்ளது. 

அலையலையாக திரண்ட தமிழ் மக்களால் யாழ். முற்றவெளியே அதிர்ந்தது.
 
Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிலோமீற்றர் தூரமாண வரிசையில் எழுக தமிழ் பேரணியாக மக்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

65 வருடங்களுக்கும் மேலாக இரத்தம் சிந்தி போராடிய எம் இனம் ‘இதுதான் கதி’ என்று வாழ முடியுமா?

September 24, 2016
0
597
14462921_1056354224463305_83598947113691

எழுக தமிழ்ப் பேரணி தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தியாக அமைந்துள்ளதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழினம் தனது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் வெறுமனே எங்களுடைய அரசியல் தலைவர்களை நம்பியிருக்க முடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழினம் வீதியில் இறங்க வேண்டும்.

தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.அவ்வாறான நிலை உருவாகும் போது நிச்சயம் எமது இனம் வெற்றி பெறும் எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

வடக்குக் கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கான தமிழர் தேசம், தனித்துவமான இறைமை, சுய நிர்ணய அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ் மக்கள் பேரவையானது முன்னெடுத்த எழுக தமிழ்

பாரிய மக்கள் எழுச்சிப் பேரணி இன்று முற்பகல்-11 மணிக்கு யாழ். முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்த பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தமிழ் மக்களின் பேரைப் பயன்படுத்தி அரசியல் அமைப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

அந்த அரசியல் அமைப்பைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? ஒரு கொடிய யுத்தத்தை நடாத்தி, பயங்கரவாதத்தை அழிப்பதாகத் தெரிவித்து ஒரு இனத்தையே அழித்தார்கள்.

போராடிக் கொண்டிருக்கிற இனத்திற்கு உரிய தீர்வை வழங்குவோம் என்கிற வாக்குறுதியை உலகிற்கு வழங்கியிருந்த நிலையில் தற்போது இரகசியமாக இந்த அரசியல் அமைப்புத் தயாரிக்கப்படுகின்றது.

ஏனைய நாடுகளில் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக வேண்டுமெனில் மக்களோடு பேசி, மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மாதக் கணக்காக மாத்திரமல்லாமல் வருடக் கணக்காக அந்த நாட்டு மக்களின் அபிலாசைகளை முற்று முழுதாகப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அந்த அரசியல் அமைப்பு உள்வாங்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு

என்பது வெறுமனே ஒரு மாதத்திலோ , அல்லது ஒரு வாரத்திலோ உருவாக்கி முடிப்பதல்ல.

அரசியல் அமைப்பு என்பது அந்த நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, சொந்தம் கொண்டாடக் கூடிய ஒரு அமைப்பு.

ஆனால், கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக எத்தனையோ தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, அழிந்து போயிருக்கும் எமது மக்களுக்கு நீதி வழங்குவதாகத் தெரிவித்துக் கொண்டு வரவிருக்கும் இந்த அரசியல் அமைப்பின் மூலம் எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படப் போகிறதா? என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

இவ்வாறு கேள்விக் குறியாக இருப்பதற்கு என்ன காரணம்? உண்மையில் எமது மக்களுடைய அபிலாசைகள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையிருந்தால் ஏன் இந்த இரகசியம்?

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வாயங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல 65 வருடங்களுக்கும் மேலாக எங்களுடைய அரசியல் அபிலாசைகள் குறித்து நாம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.

ஆனால், இரண்டு, மூன்று மாதங்களில் கொண்டுவரவிருக்கும் இந்த அரசியல் அமைப்பு தமிழ் மக்கள் காலாதி காலமாகத் தெரிவித்து வந்த அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அதற்கு மாறாகத் தற்போது சிங்களத் தலைமைகள் தங்களுடைய சொந்த மக்களுக்கே கூறி வரும் வாக்குறுதி ஒரு ஒற்றையாட்சித் தீர்வு மாத்திரம் தான் வழங்கப்படும் என்பதேயாகும்.

இவ்வாறான நிலையில் தான் இன்றைய பேரணி யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்தப் பேரணி யுத்தமொன்றை நடாத்தி இனத்தையே அழித்த நிலையில் அந்த அழிவுக்கு நீதி கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் இடம்பெறுகிறது.

அவர்கள் யுத்தம் மூலமாக எங்களுடைய முதுகெலும்பை உடைத்து எங்களை அமைதியாக்க முடியும் எனக் கருதினார்கள்.

ஆனால், இந்தப் பேரணியூடாக நாங்கள் மிகவும் தெளிவானதொரு செய்தியை வழங்கியிருக்கிறோம். எம்முடைய அரசியல் அமைப்பில் எங்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாது விடில் இந்தப் பேரணி

வளரும். இந்தப் பேரணி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் தமிழர் தாயகத்திலுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள், தாயகத்தில் வாழும் மக்கள் அனைவரது மத்தியிலும் இவ்வாறான பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

http://www.thisaikaddi.com/?p=3763

  • தொடங்கியவர்
"எழுக தமிழ்” கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி
"எழுக தமிழ்”  கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்'  பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் எழுக தமிழ் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றுள்ளது.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எவ்வித அரசியல் சார்புமின்றி, தமிழ் மக்களின் நலனை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி இடம்பெற்ற இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்தது.
_91366500__dsc3949.jpg
முற்றவெளியைச் சென்றடைந்த பேரணியின் ஆரம்பத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துடன் பேரணியின் இறுதிக்கூட்டம் ஆரம்பமாகியது.
 
இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோரின் உறவினர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்ப ங்கள்,உறவினர்கள், இராணுவம் கைப்பற்றி நிலைகொண்டுள்ள காணிகளின் உரிமையா ளர்கள் உள்ளிட்டபலர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
1474735155_download.jpg
வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்ப டையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்க ளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
_91367323__dsc4065.jpg
இந்தப் பேரணியின் மூலம், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்படவி ல்லை என்பதை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
_91367279__dsc4037.jpg
இந்தப் பேரணியில் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்நதவர்கள், தொழிற்சங்கவாதிகள், யாழ் பல்கலைக்கழக சமூகம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகியவற்றுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

http://onlineuthayan.com/news/18048

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ்
எழுந்தனர் தமிழர்
வீழும் சிங்கள வெறி
வெல்லும் தமிழர் கொடி

வாழும் புலிகளாய் 
வீதியில் திரண்ட
தமிழினம் 
உலகுக்கு சொன்னது
வெல்லட்டும் தமிழீழமென்று

போராட்ட களம் 
நமதென்ற 
நம்பிக்கை பிறக்குது

ஆரத்தழுவு தோழமையே
தோளோடு தோளாய்
களம் காண்போம்

இது முள்ளிவாய்க்கால்
ஆன்மாக்களின் மேல்
நாமெடுத்த உறுதி.

இனி நாம் 
வெல்வோம்

https://www.facebook.com/thirumurugan.gandhi?hc_ref=NEWSFEED&fref=nf

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24.9.2016 at 1:55 PM, புலவர் said:

நாளைக்கு உதயன் இது முற்றவெளியில் உள்ள முனியப்பர் கோவிலில் எள்எண்ணெய் எரிக்க வந்த கூட்டம் என்று எழுதும்

இனி இஞ்சை இருக்கிறவையள் என்ன சொல்லப்போயினமோ எண்டு என்ரை மனம் பதை பதைக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இதே பொங்கு தமிழ் என்று பெயர் வைத்திருந்தால்.. மக்கள் வந்திருப்பார்கள்.. கடைசி வரை தமிழனை காட்டிக் கொடுத்து அழித்த பெருமைக்குரிய ஒட்டுக்குழுக்கள் ஓடி மறைஞ்சிருக்கும்.

இது காட்டிக் கொடுத்தவன்.. எதிரிக்காக கொலை செய்தவன் எல்லாம்.. மக்களோடு மக்களா கொடிபிடிக்கிற நிலைக்கு கொண்டு வந்திருக்குது.

ஏதோ ஒற்றுமையின் பெயரால்.. காக்கவன்னியன்களையும் பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் மக்களும் மண்ணும். 

அதை விடக் கொடுமை.. சம் சும் கும்பலின் எஜமான விசுவாசம்.. அப்பட்டமாக வெளிப்பட்டமை. :rolleyes:tw_angry:

எதுஎப்படியோ மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்த அமையும் சந்தர்ப்பங்களை பாவிக்க தவறவில்லை. 

இது சம் சும் கும்பலின் தேர்தல் வெற்றி.. குறித்தும் சந்தேகங்களை எழுப்புகிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இனி இஞ்சை இருக்கிறவையள் என்ன சொல்லப்போயினமோ எண்டு என்ரை மனம் பதை பதைக்குது

எனக்கும் இதே குழப்பம்தான் .........

அதனுடன் திரும்பவும் பூச்சியத்தில் இருந்து தொடங்குகிறோம் என்பது 
வேதனையானது.

இப்போ இவருக்கு அவர் தேவை ..... அவருக்கு இவர் தேவை 
அதுதான் ஒன்றாக  ஒன்று கூடல்.

திரும்ப யாரும் கொஞ்சம் மக்கள் மதிப்பை பெற  ...
அவரை  இவர் சுடுவார் .... இவரை  அவர் அவர்  சுடுவார்.

மிஞ்சினது சம்மந்தர் சுமந்திரனுடன் கூடி சென்று 
சிங்களவுனுடன் இணைந்து நின்று மீதியை காட்டி கொடுக்கும்.

இப்பிடியே  திரும்பி ஒரு வட்டம் அடிக்க போகிறோம் மிகவும் வேதனையானது. 

12 hours ago, MEERA said:

ஜீவன் உண்மையை எடுத்துக் கூறுங்கள்.

இந்த பேரெழுச்சி உண்மையாக வெற்றிதான். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாவிட்டாலும் அவை பல்லாயிரக்கணக்கில்தான் உள்ளது. எனது சுய பாதுகாப்பு காரணமாக இவ்வாறான நிகழ்வுகளை படம் எடுப்பதில்லை - காரணம் எனது வதிவிட அனுமதியில் அரசியல் செயற்பாட்டிற்கு தடை என்றெழுதியிருந்தார்கள்.

சரி இனி விடயத்துக்கு வருவோம் (பகல் 10 மணி)
1 . யாழில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த சகல கடைகளும் நேற்று பூட்டப்படிருந்தன.
     ஆட்டோக்களை, மினிபஸ்களையும் நகரில்  காண முடியவில்லை. அரச பஸ்களும் மிகவும் சொற்ப அளவிலேயே பஸ் நிலையத்தில் தென்பட்டது.

2. ஸ்ரீதர் தியேட்டர் முன்னால் ஸ்டான்லி வீதியால் செல்லமுடியாதளவு கூட்டம். ஸ்டான்லி வீதியில் மக்களை வேறு பகுதியில் இருந்து அழைத்து வந்த பஸ்கள் இரு புறமும் நிரம்பி இருந்தது. வெலிங்டன்  தியேட்டர் சந்தியிலிருந்து ஆரியகுள சந்திவரையும் ஒரு சைக்கிள் கூட போக முடியாதளவு கூட்டம்.

3. நல்லூர் அரசடி வீதி, பருத்தித்துறை வீதி சந்தியிலிருந்து (பாரதியார் சிலை) சிறிது தொலைவில் அரசடி வீதியில் ஊர்வலத்தை சந்தித்திருந்தேன். ஆயிரக்கணக்கில் மக்கள். சரியாக ஊர்வலம் என்னைக் கடக்க 13 நிமிடங்கள் பிடித்தது. இதிலிருந்து மக்கள் தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

4. யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை நான் பார்க்கவில்லை. ஆனால் இம்மூன்றிலும் அதிகளவு மக்களை அது கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன்.

அப்படியானால் இம்மூன்று அணிகளும் (நல்லூர், பல்கலைக் கழகம், ஸ்ரீதர் தியேட்டர்) ஒன்றாக சேரும்போது ஊர்வலமானது குறைந்தது 2 கிலோமீட்டராவது வந்திருக்குமென்றே நினைக்கின்றேன்.

இந்த பேரணி தோல்வியில் முடிந்தது என்று யாராவது சொல்லுவார்கள் என்றால் அது முழுமையான பொய்யே தவிர வேறொன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.