Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை

Featured Replies

மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை
 
 
மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை
 புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக  வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது  இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் நட்சத்திரவீரர்மஹேல ஜெயவர்த்தனவை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளதுடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகு வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
 
‘எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கா நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன். மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.
 
வீதியில் கைகுலுக்கிக்கொண்டு வந்தார். அவரை பார்த்தபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்துவிட்டது. நான் விளையாட்டை நேசிக்கும் ஒருவர். அதனால் அப்படி செய்தேன். ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டன. தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

http://onlineuthayan.com/news/18684

அன்பின் சகோதரி. தமிழ் கலாசாரம் பெண்களின் யோனியில் இருப்பதை அறியாமல் உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி  தமிழ் கலாசாரத்தை அவமானப்படுத்தி விட்டீர் . உங்களை கலாசார காவலர்களிரமிருந்து கடவுள்தான் காப்பாற்றவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிபிடித்த வேகத்தப் பார்த்தால் அப்படித் தெரியலையே....அம்மணீ அவையடக்கம் நன்றூ..

கனடாவில்  ஐன்பது  டொலர்  கொடுத்து  அனிருத்த  கட்டிபிடித்த  பெண்கள்  அமைப்பு  சார்பாக  இதை  மென்மையாக  கண்டிக்கிறேன் 

நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

14492554_1135116809907983_44762888297581

tw_blush:

தனக்கு பிடித்தமான பிரபல விளையாட்டு வீரரை கண்ட நேரில் கண்ட சந்தோசத்தில் அவரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்பபடுத்துவது உலக நடைமுறை. இதில் தவறு கிடையாது. அதை புரிந்து கொள்ளும் உலக அறிவு அற்ற, தவறான கண்ணோட்டதுடன் இதனை எழுதிய  கிணற்றுதவளைகள் பத்திரிகை  நடத்துவது தமிழரின்  அவமானம். அடுத்தவரின் தனிப்பட விடயத்தில் தலையிடுவது தமிழ்க் கலாச்சாரமா? 

9 hours ago, hasan said:

அன்பின் சகோதரி. தமிழ் கலாசாரம் பெண்களின் யோனியில் இருப்பதை அறியாமல் உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி  தமிழ் கலாசாரத்தை அவமானப்படுத்தி விட்டீர் . உங்களை கலாசார காவலர்களிரமிருந்து கடவுள்தான் காப்பாற்றவேண்டும் 

ஹசான் அவர்களே நீங்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளுகிறோம் ஆனால் உங்கள் முஸலீம் கலாச்சாரம் அதே போல தான் என்பதை ஏற்றுக் கொண்டு எமது கலாச்சாரத்தை விமர்சித்தால் அது சரியாக இருக்கும.  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, trinco said:

ஹசான் அவர்களே நீங்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளுகிறோம் ஆனால் உங்கள் முஸலீம் கலாச்சாரம் அதே போல தான் என்பதை ஏற்றுக் கொண்டு எமது கலாச்சாரத்தை விமர்சித்தால் அது சரியாக இருக்கும.  

முஸ்லீம் கலாச்சாரம் பெண்களின் யோனியில் இருப்பதை அறிந்தவர் அவர்.

ஒரு ஆம்பிளையும்... 

ஒரு பொம்பிளையும்...

நட்டநடு ரோட்டில...

எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்கேக்க...

க க க...

கட்டிப்பிடிக்கியினம்! 

ஐயோ இது என்ன அநியாயம்? 

ஒளிச்சு இருந்து கட்டிப்பிடிக்கிறதுதானே எங்கள் தமிழ்க்கலாச்சாரம்? 

இது என்னது புதுப்பழக்கம்? அதுவும் யாழ்ப்பாணத்தில? 

நோ நோ இது ரொம்பத்தவறு! tw_thumbsdown: 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டிப்பிடிப்பதை விட கைகுலுக்கி வாழ்த்தோ நன்றியோ தெரிவித்தும் இருக்கலாம் அல்லது ஒரு செல்பி எடுத்த்கிருக்கலாம்.

அதென்ன கண்டவுடன் கட்டிப்பிடிப்பதற்கு வளர்த்த நாய்க்குட்டியா அல்லது கட்டிய கணவனா?tw_tounge_xd:

மேலைத்தேய நாடுகளில் கண்டவுடன் கட்டிப்பிடிப்பதை நாகரீகமாக கருதுவதில்லை :cool:

லூசுக்கூட்டங்கள் என்று சொல்வார்கள்.tw_blush:

தில் இருக்கிற ஆட்கள் மட்டும் சந்தியில் நின்று கட்டிப்பிடியுங்கோ. :17_heart_eyes: மிச்ச ஆட்கள் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சும்மா முணுமுணுக்காமல் அங்காலை நகருங்கோ. :grin:

அடிப்படை கலாசாரங்கள் எல்லாமே காமத்தை குறிப்பாக பெண்களை எவ்வாறு அடக்குவது என்பதிலேயே குறியாயுள்ளது. பெண்கள் சுதந்திரமாக தங்கள் உணர்வுகளை முக்கியமாக காம உணர்வுகளை வெளியிடும்போது அது கலாசாரமில்லாத சமூகம் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்த கலாசாரங்கள் எல்லாமே அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரமில்லாதவர்களை அடக்கியாளவே பயன்படுகிறது. அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில். அமெரிக்காவில் அயலில் உள்ளவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை பொருடாக மதிக்கமாட்டார்கள். ஆனால் நாட்டின் தலைவன் வேறொரு பெண்ணுடன் காதல் கொள்வதையே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எங்கள்  நாடுகளில் பக்கத்து வீட்டுக்காரன் வேறொரு பெண்ணை உற்று பார்த்தாலே வதந்திகளால் கொன்று விடுவார்கள். தலைவர்கள் எத்தனை பெண்களுடன் படுத்தாலும் பெருமையாக சொல்லிக்கொள்வோம்.
 

இன்னொரு விடயம். முஸ்லீம்களுக்கு என்று தனி கலாசாரம் கிடையாது. இலங்கை முஸ்லீகள் இலங்கை கலாசாரத்தை உடையவர்கள். சவூதி முஸ்லீங்கள் சவூதி கலாசாரம். இந்தோனேசிய முஸ்லீம்கள் இந்தோனேசிய கலாசாரம். சூடானிய முலீன்கள் சூடானிய கலாசாரம். 
 இலங்கையிலே சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடையே முற்றிலும் வேறு வேறான கலாசாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு இலங்கை தமிழனின் கலாசாரம் இந்தியத் தமிழனின் கலாசாரத்தை விட இலங்கை சிங்களவனின் கலாசாரத்துக்கு நெருக்கமானது. கலாசாரம் என்பது வெறுமனே மொழியாலோ மதத்தாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிவசப்படல் என்பதற்கு கன பேருக்கு அர்த்தம் தெரியாது போல்

வடக்கு கிழக்கில் குடைக்குள்ளும் பற்றைக்காட்டுக்குள்ள கடற்கரையில் போகாத கலாசாரமா இங்கே போகிறது இணையதளம் உழைப்பதற்கு அது வழி சமைக்கிறது. 

நான் கூட வழியில் நடந்து போககுள்ள நடிகை கீர்த்தி சுரேஷை கண்டால் நான் உங்களை கட்டி பிடிக்கலாமா என்று கேட்பேன் அவா ஓகே சொன்னால் கிஸ்ஸூம் கொடுப்பேன். 

நடிகை, நடிகர்ககளை சார் மேடம் நான் உங்களை ஹக் பண்ணலாமா என்று கேட்டு ஹக் பண்ணின ஆட்கள் நிறைய பேர் இருக்குறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, hasan said:

இந்திய தமிழனின் கலாச்சாரமும் இலங்கைத்தமிழனின் கலாச்சரமும் அடிப்படையில் ஒன்று தான். என்ன இந்திய தமிழனின் கலாச்சாரத்தில் ஹிந்தியனின் கலாச்சாரமும் இலங்கைத்தமிழனின் கலாச்சாரத்தில் சிங்களவனின் கலாச்சாரமும் புகுந்துவிட்டது.

இலங்கை முஸ்லிம்கள் இனம் என்று வரும் போது இசுலாமியர்கள் தனித்துவமான இனம் என்பார்கள் யாவாரம் என்று வரும் போது தமிழ் என்பார்கள். பிழைப்பிற்காக இலங்கையில் குடியேறிய இனம் என்பதை எப்போதும் நிரூபிப்பார்கள். 

அமெரிக்காவில் இருவர் சேர்ந்து வாழு தொடங்கும் போது இருவரும் அதற்கு முன்னர் நடந்ததை பற்றி கவலைப்பட மாட்டார்கள் ஆனால் சேர்ந்து வாழும் போது இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணரை நான் நேரில் கண்டால் ஓடி வந்து கட்டிப் பிடிக்க கூடாது. ஏன் என்ட கையைக் கூட குடுக்கலாமோ தெரியல்ல

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கட்டிப்பிடிப்பதை விட கைகுலுக்கி வாழ்த்தோ நன்றியோ தெரிவித்தும் இருக்கலாம் அல்லது ஒரு செல்பி எடுத்த்கிருக்கலாம்.

அதென்ன கண்டவுடன் கட்டிப்பிடிப்பதற்கு வளர்த்த நாய்க்குட்டியா அல்லது கட்டிய கணவனா?tw_tounge_xd:

மேலைத்தேய நாடுகளில் கண்டவுடன் கட்டிப்பிடிப்பதை நாகரீகமாக கருதுவதில்லை :cool:

லூசுக்கூட்டங்கள் என்று சொல்வார்கள்.tw_blush:

வெளிநாட்டில் செய்வதை எல்லாம் எமது நாடுகளிலும் செய்வதில் என்ன பிரச்சினை என்று மேலோட்டமாக சிந்திப்பவர்களால்தான் பிரச்சினைகள் வருகிறது. :unsure:

வெளிநாடுகளில் அணியும் கோட் சூட் என்பவற்றை வெப்ப வலய நாடுகளிலும் அணிய ஆரம்பிக்கும்போதே பிரச்சினைகள் தொடங்கிவிடுகிறது.  அதுபோல ஊரில் சேலை அணிந்த பழக்கத்தை மாற்ற முடியாமல் குளிர் நாடுகளிலும் அதையே தொடர்வதும் வேதனை.

எமது பழக்கவழக்கங்கள் என்பவை சில நூற்றாண்டுகள் அல்ல.. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செதுக்கப்பட்டு பல மேடு பள்ளங்களைத் தாண்டி வந்த ஒரு விடயம். அந்த மக்கள் குழுமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வந்தவர்கள் மேலை நாடு கலாச்சாரத்தை ஓரளவு பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். அதேபோல நல்லூர் கோயிலுக்குச் செல்லும் மேலை நாட்டவர்களும் உள்ளூர் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். இவை வழக்கமான ஒன்றுதான்.

ஆகவே பழக்க வழக்கங்கள் என்பவை தாம் வாழும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர சம்பந்தமில்லாத ஒன்றை தொடுவது அல்ல. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டிப்பிடிக்கிறது அவ்வளவு நல்லாய்யில்லை எண்டு தனிப்பட்ட கருத்தை சொல்ல வெளிக்கிட....அவனவன் தலிபான் / ஐ.எஸ் ரேஞ்சுக்கு எங்களை விமர்ச்சிக்கிறாங்களப்பா....tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்

"கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்டபடி கட்டிப்பிடிடா" என்ற பாட்டைக்கேட்டு ஆடியவர்களோடு நானும் சேர்ந்து ஆடியிருப்பதால் கருத்தெழுத முடியவில்லை.:(

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்பிடிப்பது தவறு அல்ல, அதே நேரம் கட்டிப்பிடிப்பதை கண்டிப்பதும் தவறல்ல என தீர்ப்பளிக்கிறேன் , ஏனெனில் கட்டிப்பிடிப்பவர் யாரோ ஒருவராக இருந்தால் பொதுவாக பெருந்தன்மையுடன் வரவேற்பதுடன் மருவளமாக கட்டிப்பிடிப்பவர் உறவினராக இருந்தால் அதனை கண்டிக்கும் பரந்த மனப்பான்மையுள்ள பெரும்பான்மையானவர்களுக்கு சாதகமாக இந்த தீர்ப்பை வழங்குகிறேன் இத்துடன் இவ்விவாதத்தை முடிக்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9.10.2016 at 2:42 PM, ரதி said:

என்ட அண்ணரை நான் நேரில் கண்டால் ஓடி வந்து கட்டிப் பிடிக்க கூடாது. ஏன் என்ட கையைக் கூட குடுக்கலாமோ தெரியல்ல

தாய் தந்தை சகோதரங்களை நண்பர்களை கட்டிப்பிடிப்பதற்கும்.....
காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி கட்டிப்பிடிப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளது.
பாடகர்கள் விளையாட்டு வீரர்கள்  சினிமாக்காரர்கள் போன்றவர்களை கட்டிப்பிடித்து...?????

உலக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை பார்த்தீர்களானால் உண்மைகள் தெரியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 ஒவ்வொருவரின் பார்வை, அனுபவம், ரசனை  வித்தியாசமானது. தெற்கின் ரசனை, பார்வை,அனுபவம் நம்மை மாதிரி இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

நாளைக்கு மகேல யாழ்பாணத்தில் தேர்தலில் நின்று  வோட்டு கேட்டால்........? என் கற்பனை எங்கேயோ போட்டுது.

7 hours ago, குமாரசாமி said:

தாய் தந்தை சகோதரங்களை நண்பர்களை கட்டிப்பிடிப்பதற்கும்.....
காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி கட்டிப்பிடிப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளது.
பாடகர்கள் விளையாட்டு வீரர்கள்  சினிமாக்காரர்கள் போன்றவர்களை கட்டிப்பிடித்து...?????

உலக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை பார்த்தீர்களானால் உண்மைகள் தெரியும்.

 

குமாரசாமி அவர் தனக்கு விருப்பமான பிரபல விளையாட்டு வீர்ரை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்துவது அவரது உரிமை.  அதில் தலையிடும்  உரிமையை உங்களுக்கு கொடுத்ததது யாரோ. 

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்று விவாதம் போகிறது.

இந்த சனம் திருந்துமா??????

  • கருத்துக்கள உறவுகள்

 

25 minutes ago, MEERA said:

முகநூலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்று விவாதம் போகிறது.

இந்த சனம் திருந்துமா??????

முத்தத்தைப் பெருக்கப் பெருக்கத் துப்பரவாகும். தெரியாதா அம்மணி? முத்தத்தைக் கூட்டி, வேண்டாத குப்பைகளை அகற்றி, மகிழ்வோடு வாழப் பழகுங்கள். ???

 

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற சம்பவங்களுக்கு கருத்திட நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது... காரணம் நாங்களும் கண்ணாடி மாளிகைக்குள்தான் வாழுகின்றோம் ...!

எமது அல்லது நாங்கள் விரும்புகின்ற கருத்தை எழுதுவதெனில் இது வருந்தத்தக்க கூடிய தவறான செயல். எதிர்காலத்தில் அந்தப் பிள்ளையின் இல் வாழ்க்கையையும் பாதிக்கலாம். அனல் அவை செய்தியில் வரப்போவதில்லை ...! ஆயினும் இன்றைய சந்ததி அவற்றை சுலபமாகக் கடந்தும் போய் விடுவார்கள்...!

நாளைக்கு எமது பிள்ளைகள் உணர்ச்சி வசப்பட்டு இதுபோன்ற ஒரு செயலைச் செய்தால் அதை தவறென்று சொல்லவோ அல்லது தடுக்கக் கூடிய தூரத்திலோ நாம் இருக்க மாடடோம் . இதுதான் யதார்த்தம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.