Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது

Featured Replies

பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது
 
 

article_1476246995-df.jpgமருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவரொட்டியை ஒட்டியது ஒப்புக்கொண்ட அந்தப் பெண், அதனை நியாயப்படுத்தும் வகையிலும் கருத்துக்களையும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள், கடந்த திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்தன. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சி.சி.டி.வியின் உதவியுடன் மேற்படி பெண்ணைக் கைதுசெய்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/183772/ப-ரப-கரன-ன-ச-வர-ட-ட-ய-ஒட-ட-ய-ஜ-ர-மன-ப-ரஜ-க-த-

  • கருத்துக்கள உறவுகள்

தைரியமான பெண். இந்தப் பெண்ணை வாழ்த்த ஒரு பெண்ணுறவும் இங்கு வரவில்லையே.... ?? crying_baby-01.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துபவர்கள் ,அடுத்த  முறை ஊருக்கு போகும்போது .ரெண்டு குண்டை வச்சிட்டு வாங்கோ :102_point_up_2:

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ், அம்மணிக்கு இது தேவையில்லாத வேலை. இப்படி ஒட்டி எதனை சாதிக்கப் போகின்றார்? உலகத்திற்கு புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்று காட்டப் போகின்றாவா? 

இவர் இப்படி செய்தமைக்கு இரு காரணங்கள், 

1) (யாருடைய?)தூண்டுதலின் பேரில் செய்திருக்கலாம்.

2) இவருடைய உறவுகள் புலம் பெயர்நாடுகளில், இவர் இப்படி செய்தமையால் தமக்கு பிரச்சனை என்று தஞ்சமடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

பாஞ், அம்மணிக்கு இது தேவையில்லாத வேலை. இப்படி ஒட்டி எதனை சாதிக்கப் போகின்றார்? உலகத்திற்கு புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்று காட்டப் போகின்றாவா? 

இவர் இப்படி செய்தமைக்கு இரு காரணங்கள், 

1)

2) இவருடைய உறவுகள் புலம் பெயர்நாடுகளில், இவர் இப்படி செய்தமையால் தமக்கு பிரச்சனை என்று தஞ்சமடையலாம்.

ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரப் பொண்ணா இருந்தால் என்ன காரணமாக இருக்கும் :11_blush:

  • தொடங்கியவர்

பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய பெண் ; பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு

 

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

14650595_559135364291695_880369525638214

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்னால் வேலுப்பிள்ளை பிரபாகரனது உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து இதனை ஒட்டியது யார் என்பது தொடர்பாக விசாரனையை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

14650130_559135384291693_198826559550812

இதனடிப்படையில் ஆஞ்சநேயர் ஆலய சூழலில் ஒட்டப்பட்டிருந்த கண்கானிப்பு கமராவின் மூலம் அதனை ஒட்டியது பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பெண் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரனையின் அடிப்படையில் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு ஒட்டியதாக தெரியவந்ததையடுத்து அவர் தங்கும் விடுதியொன்றில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

14572360_559135354291696_812694411982474

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை மேலதிக விசாரனைகளுக்கு உட்படுத்துவதற்காக அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருத்தார்.

http://www.virakesari.lk/article/12339

  • கருத்துக்கள உறவுகள்

இவவை யாரோ நல்ல உசுப்பேத்தி அனுப்பி இருக்கினம்...பேருக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு தனக்கு ஜேர்மனி பாஸ்போட் தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைத்திருப்பா...லூசுப் பெண்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ! தவறோ! ஒரு பெண்ணின் துணிவைப் பாராட்ட பெண்களே முன்வர விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.:(

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு இப்ப பாராட்டணும். போராட்ட காலத்தில் போய் போராடியிருந்தால் பாராட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சரியோ! தவறோ! ஒரு பெண்ணின் துணிவைப் பாராட்ட பெண்களே முன்வர விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.:(

மண்டைப்பிழை போல கிடக்குது, நீங்க வேற.. :rolleyes:

இனி வெளிநாட்டுக்காரர் என்றால் வேற பார்வை... தான்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.10.2016 at 10:33 AM, நந்தன் said:

வாழ்த்துபவர்கள் ,அடுத்த  முறை ஊருக்கு போகும்போது .ரெண்டு குண்டை வச்சிட்டு வாங்கோ :102_point_up_2:

பிரபாகரன் என்றால் குண்டுதான் ஞாபகத்திற்கு வருமா?

அரசியல்கள், பேச்சுவார்த்தைகள் எதுவுமே ஞாபகத்திற்கு வாராதா?

2009 முன் வடக்கிற்கு செல்லும் ஒவ்வொரு வெளிநாட்டு பிரமுகர்களும் யாரை சந்தித்தார்கள்? ஏன் சந்தித்தார்கள்?

எல்லாவற்றையும் குழப்பியடித்த பிரபாகரனோ புலிகளோ இன்றில்லை.

சரி.......சிறிலங்காவில் இன்று அரசியல் ரீதியாக என்ன முன்னேற்றம் நடக்கின்றது? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சரி.......சிறிலங்காவில் இன்று அரசியல் ரீதியாக என்ன முன்னேற்றம் நடக்கின்றது? 

சம்பந்தர் தமிழராக இருந்தும் எதிர்க்கட்சித் தலீவராக இருக்கின்றார்
நல்லிணக்கம்.. நல்லிணக்கம்... நல்லிணக்கம்..... காணாதோ :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

சரியோ! தவறோ! ஒரு பெண்ணின் துணிவைப் பாராட்ட பெண்களே முன்வர விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.:(

இதற்குப் பெயர் துணிவு அல்ல அண்ணா. மூடத்தனம். அதற்கு நாம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு எழுதிய கருத்தை நானே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனாலும் எழுதினேன். எழுதும்போது நாரதர் நினைப்பு வந்துவிட்டது.:(

7 hours ago, Nathamuni said:

மண்டைப்பிழை போல கிடக்குது, நீங்க வேற.. :rolleyes:

இனி வெளிநாட்டுக்காரர் என்றால் வேற பார்வை... தான்.

 

சிங்கள இராணுவத்தி ஒருத்தி யாழ்ப்பாணத்தில் நின்று பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்ததாகச் செய்தி வந்து படித்தேன். இனி சிங்களம் தனது இராணுவத்திகளை பார்க்கும் பார்வையும் வேறுதானா? :unsure::unsure: 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

நான் இங்கு எழுதிய கருத்தை நானே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனாலும் எழுதினேன். எழுதும்போது நாரதர் நினைப்பு வந்துவிட்டது.:(

பாஞ்ச் அண்ணை.... எதுக்கும், வாற சனிக்கிழமை...
சனி பகவானுக்கு... விரதம் பிடித்து, காகத்துக்கு சோறு வைத்து,  எள்ளெண்ணை சட்டி ஒன்றை எரித்து விடுங்கோ..... :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13.10.2016 at 6:11 AM, Paanch said:

நான் இங்கு எழுதிய கருத்தை நானே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனாலும் எழுதினேன். எழுதும்போது நாரதர் நினைப்பு வந்துவிட்டது.:(

சிங்கள இராணுவத்தி ஒருத்தி யாழ்ப்பாணத்தில் நின்று பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்ததாகச் செய்தி வந்து படித்தேன். இனி சிங்களம் தனது இராணுவத்திகளை பார்க்கும் பார்வையும் வேறுதானா? :unsure::unsure: 

ஒரு பகுதி முள்ளிவாய்க்கால்லை நடந்தது தெரியும் தானே எண்டு வெருட்டும்....
இன்னொரு பகுதி  புலத்திலையிருந்து கதைக்கிறவை அங்கை போய் செய்திருக்க வேணும்....செய்ய வேணும்.....போராடியிருக்க வேணும்.......போராடினவைக்கு மட்டும்தான் கதைக்க உரிமையிருக்கு....எண்டு சொல்லி வாயடைப்பினம்.


ஆனால் பொதுசனம் எண்டால் என்ன எண்டு அவையிட்டை ஒருக்கால் கேக்க வேணும்.

வெளிநாடுகள் போன்றல்லாது யாழ்ப்பாணத்தில் கண்காணிப்புக் கமராக்கள் மிகக் குறைவு. அப்படி இருந்தும் கண்காணிப்புக் கமராவில் படும்படியான இடத்தைத் தேடிப்போய் சுவரொட்டியை ஒட்டச் சொல்லியுள்ளனர் ஒட்டியுள்ளார். :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணை.... எதுக்கும், வாற சனிக்கிழமை...
சனி பகவானுக்கு... விரதம் பிடித்து, காகத்துக்கு சோறு வைத்து,  எள்ளெண்ணை சட்டி ஒன்றை எரித்து விடுங்கோ..... :grin:

வழக்கமாக சனிக்கிழமைகளில்தான் மீன், ஆட்டிறைச்சி என்று அதன் சுவையின் ஆனந்தத்தில் மிதப்பது வழக்கம். புரட்டாசி மாதத்தில் மட்டும் நாலு சனிகளில் அதற்கு அம்மா ஆப்புவைத்துத் தோப்புக்கறணமும் போடவைத்துவிடுவார். அம்மாவுக்குப் பிறகு இப்போ ஆத்துக்காரி..... போதாததற்கு இந்தமுறை ஐந்து சனிகளாம், கடுப்பில் இருக்கும்போது உங்கள் குசும்பு வேற....... :oO::oO:       

  • கருத்துக்கள உறவுகள்
On 12 October 2016 at 0:42 PM, வாத்தியார் said:

வெள்ளைக்காரப் பொண்ணா இருந்தால் என்ன காரணமாக இருக்கும் :11_blush:

மலர்விழி ஈஸ்வரராஜா

http://www.yarl.com/forum3/topic/182822-பிரபாகரன்-படங்களை-வைத்திருந்த-பெண்ணை-நாடு-கடத்த-கொழும்பு-நீதிமன்றம்-ஆணை/

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ எய்த அம்புதான் இவா தலைவர் என்ற சொத்து போஸ்டரில்தான் அடித்து ஒட்டி கிழித்து எறிய வேண்டிய தேவையில்லை ஏதோ ஒன்று மர்மம் இருக்கிறது ஆனால் தெரியவில்லை 

 

இணையவன் அண்ணா இப்ப பெட்டி கடைகளில் கூட கண்காணிப்பு கமறா வைக்கப்பட்டுள்ளது கடவுளை நம்பாதவன் கூட கண்காணிப்பு கேமராவை நம்புகிறான்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்குப் பெயர் துணிவு அல்ல அண்ணா. மூடத்தனம். அதற்கு நாம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறு.

சகோதரி; உங்கள் கருத்தும் ஏற்புடையதாகத் தோன்றினாலும், அந்த அம்மணி யேர்மனி வந்தபின்பு வெளியிடும் அறிக்கை எங்கள் அனுமானங்களை மாற்றவும் செய்யலாம்.        

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு துறை என்பது 
மனோதத்துவாதம் சார்ந்தது .....
எம்மை அறியாமலேயே ..... நாம் பாதாளத்தில் வீழ்ந்து கொள்ள 
நாமே மிக அறிவாளிகள் போல் சொந்த கையால் கிடங்கு வெட்ட 
வைக்கும் சூனிய வேலைகளை செய்யவைப்பது.

இன்றைய மத்திய அரபு நாடுகளை அழித்து கொண்டிருப்பது 
இஸ்லாமியர்கள்தான்.
எங்கிருந்து தொடங்கியது யார் திரைமறைவில் என்று நீங்கள் பார்க்க தொடங்கினால் 
உளவு துறை பற்றி கொஞ்சம் புரிந்து கொள்வீர்கள்.


இவரை கைது செய்து சித்திரவதை செய்ய வேண்டிய தேவை 
இலங்கை காவாலி சிங்கள அரசுக்கு இருந்தால் ?
இப்போ இவரின் நிலைமையை யோசித்து பாருங்கள் ?

சிங்கள அரசு இப்போ ஜேர்மன் அரசுக்கு அறிவித்திருக்கும் 
கைது செய்வததற்கு முன் தமிழ் இணையங்கள் அள்ளிக்கொட்டிய அனைத்து 
செய்திகளையும் கொடுத்திருப்பார்கள் ....
இப்போ இவரை கைது செய்து வைத்திருக்கிறோம் என்று சொல்லி இருப்பார்கள்.

ஜெர்மன் என்ன சொல்லியிருக்கும் ... இப்படி பயங்கரமானவரா ?
அங்கேயே வைத்திருங்கள்.

இப்போ ரூட் கிளியர் ..... இவருடைய வாழ்வை பற்றி யோசித்து பாருங்கள்.

"தான் ஒட்டியதாக அவர் ஒப்புக்கொண்டார்"
இதுதான் அவர் வெளியில் வர பல வருடம் ஆகும் என்பதை உறுதி செய்வது.  

  • தொடங்கியவர்
4 minutes ago, Maruthankerny said:

"தான் ஒட்டியதாக அவர் ஒப்புக்கொண்டார்"
இதுதான் அவர் வெளியில் வர பல வருடம் ஆகும் என்பதை உறுதி செய்வது.  

 

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் இதை ஓடியிருக்கும் என்பது 
அதே திரியில் இருந்த சந்தேகம் ......

இப்போ எம்மை அறிவாளிகள் என்று ஆக்க வேண்டும் என்றால் 
என்ன செய்யலாம் ?
இன்னொருவரை முட்டாள் ஆக்கிவிட்டால் மிக எளிது அல்லவா ?
ஒட்டியவரை முடடாள் ஆக்கி நாம் அறிவாளி ஆகிவிடோம்.

இந்த திரிக்கு வந்தவுடன் ....
முதலாம் திரியில் இருந்து எவ்ளவு தூரம் பல்டி அடித்தோம் 
என்று யாரும் சிந்திக்க முடிவதில்லை.....

அதட்கு ஒரே ஒரு காரணம்தான்.
நான் அறிவாளி !
இது சாதாரண மனித இயல்பு (இதில் தப்பு ஒன்றும் இல்லை)
இந்த பலவீனத்தைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் 

புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு
புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி ள்ளை பிரபாகரனின் உருவப படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் இன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தில் தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொ ன்று ஒட்டப்பட்டிருந்தது. கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒட்டப்பட்ட இந்த சுவ ரொட்டி தொடர்பான தகவலை அறிந்ததும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுவரொட்டியை அகற்றியிருந்தனர்.

எனினும் ஊடகங்களில் இந்தத் தகவல் வெளிவந்திருந்த நிலையில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார் அங்குள்ள சீ.சீ.ரி.வி காணொளியொன்றைின் துணையுடன் குறித்த சுவரொட்டியை ஒட்டியது பெண் என்று அடையாளம் கண்டதுடன், குறித்த பெண் சுன்னாகம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாற்றிய பொலிசார் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதற்கமைய இலங்கையில் பிறந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பிரஜாவுரிமையும் பெற்றுள்ள மலர்விழி ஈஸ்வரனை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் இன்று கொழும்புக்கு அழைத்து வந்து மேலதிக நீதவான் முன்னிலையில் நிறுத்தினர்.

இதன்போது மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 40 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். பொலி சாரின் இந்த தகவல்களை கேட்ட நீதவான் அருணி ஆட்டிகல, குறித்த பெண்ணை ஜேர்ம னுக்கு உடனடியாக நாடு கடத்தமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும் எதற்காக அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருப்படம் பொறிக்க ப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற விபரம்  தெரிவிக்கப்படவில்லை

 

 

http://onlineuthayan.com/news/18894

 

இதில் அடுத்த கட்டம் கூட இருக்கலாம் 

இவர் இலங்கை உளவு துறையின் ஆளாக கூட இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.