Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு.

Featured Replies

வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு.

sri
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.  நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள்.

விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று தான் முதலில் கூறப்பட்டது. உடல் கூற்று பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட விடயம் தமக்கு தெரியவந்தது என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/4171

இது ஒரு மோசமான முன்னுதாரணம். புலிகள் இருந்தபோது குற்றச்செயல்கள் இல்லை என்றார்கள். நீதியரசர் இளம்செழியனும் அதே பாதையில் குற்றச்செயல்களை தடுக்க முனைந்தார். போலீசுக்கு புலிகளுக்கு இருந்த அதிகாரத்தை கொடுத்தார். அவர்களும் புலிகளை போன்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமானவர்களை சுட்டு தள்ளுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, hasan said:

விடுதலைப்புலிகள் மற்றவர்களின் செயலுக்கு துலங்கி இருக்கிறார்களே தவிர.. காத்தான்குடி சம்பவம் அவர்களால் நடத்தப்பட்டிருந்தால்.. அது உட்பட... தயவு தாட்சண்ணியம் இன்றி சுட்டதாக வரலாறில்லை. முஸ்லீம் ஜிகாத்.. ஊர்காவல் படை கும்பல்கள் செய்த வெறியாட்டத்தின்.. அதனை வேடிக்கை பார்த்தவர்களின் விளைவும்.. முஸ்லீம் காடைகளின் காட்டிக்கொடுப்பும்.. தமிழின அழிப்பில்.. ஆக்கிரமிப்பில்.. சிங்களவரோடு சேர்த்து செயற்பட்டதும்.. தான் முஸ்லீம்கள் சிலரை நோக்கி துப்பாக்கிகள் நீள வேண்டி வந்தது. உண்மை பல நேரத்தில் கசக்கும் கண்டியளோ. :rolleyes:

சொறீலங்கா பொலிஸ்.. கிருசாந்தி குமாரசாமி காலத்தில் இருந்து தமிழனத்தை படுகொலை செய்தே வருகிறது. முஸ்லீம் பொலிஸும் மற்றும் ஒட்டுக்குழு ஆட்களும்.. உடந்தை. 

தமிழாராட்சி மாநாட்டில் தொடங்கி துப்பாக்கிச் சூடுகள் இன்னும் ஓயவில்லை.. யாழ்ப்பாணத்தில். அன்று இதற்கு தீர்வு தேடி இருந்தால்.. இன்று இவற்றை தவிர்த்திருக்கலாம். எல்லாம் எம் எடுபிடி அரசியல்வாதிகளின் தவறின் விளைவு. 

சுட்டதை சுட்டதென்று ஆரம்பத்திலேயே.. சொல்லி இருக்கலாம். அதெப்படி.. விபத்து.. இப்ப துப்பாக்கிச் சூடானது.. சுட்டவைக்கு மறதி வியாதியா...??! இதே அன்றில் இருந்து தொடர்கிறது. தமிழாராட்சி மாநாட்டு துப்பாக்கிச் சூட்டின் பின்னும்.. மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து தான் மரணம் சம்பவித்ததாக சடைய முற்பட்டார்கள். விளைவு.. 35 வருட ஆயுதப் புரட்சிக்கு வழிகோலியது. 

எது எதுக்கு வக்காளத்து என்று இல்லாமல் போச்சு. இதுவும் தான் முஸ்லீம்களின் கொடூரத்தனத்தை இனங்காட்டவும்.. அவர்களை இட்டு அச்சம் அடையவும் செய்கிறது.. சாதாரண மக்களை. அது சில காத்திரமான நடவடிக்கைகளை அவர்களுக்கு எதிராக எடுக்க தூண்டுகிறது.. மக்களைப் பாதுகாக்க. :rolleyes:

குற்றவாளிச் சிங்களவனை விட அவனை பாதுக்காக்கும் முஸ்லீம்கள் சிலர் ஆபத்தானவர்கள். தமக்கு வரப்போகும் ஆபத்தைக் கூட அறியாமல் வக்காளத்துக்கு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடி புத்தவிகாரையை சில போராளிகள் அழித்தொழிக்க முற்பட்டபோது அதனைப் பிரபாகரன் தடுத்து நிறுத்தியதுதான் வரலாறு. இலங்கையில் தமிழர், சிங்களர், பறங்கியர்கூட கோவில்கள், விகாரைகள், தேவாலயங்களுக்குச் சென்று கடவுளை வணங்குவதைக் கண்டுள்ளேன். முசுலீம்கள் மட்டுமே பிற இனத்தவர்கள் தங்கள் மசூதிக்கு வருவதை விரும்புவதில்லை, தாங்களும் பிற இனத்தவரின் கடவுளுக்கு மதிப்போ, மரியாதையோ தருவதுமில்லை. :( 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, hasan said:

இது ஒரு மோசமான முன்னுதாரணம். புலிகள் இருந்தபோது குற்றச்செயல்கள் இல்லை என்றார்கள். நீதியரசர் இளம்செழியனும் அதே பாதையில் குற்றச்செயல்களை தடுக்க முனைந்தார். போலீசுக்கு புலிகளுக்கு இருந்த அதிகாரத்தை கொடுத்தார். அவர்களும் புலிகளை போன்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமானவர்களை சுட்டு தள்ளுகிறார்கள். 

அதற்கு ஏன் தயவு தாட்சணியம் இல்லாமல் தமிழர்களை மட்டும் சுட்டு தள்ளுகிறார்கள் என அறியலாமா?

அப்போ ஏன் தீவுப்பகுதியில் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட யுவதியின் குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்படவில்லை?

8 hours ago, hasan said:

இது ஒரு மோசமான முன்னுதாரணம். புலிகள் இருந்தபோது குற்றச்செயல்கள் இல்லை என்றார்கள். நீதியரசர் இளம்செழியனும் அதே பாதையில் குற்றச்செயல்களை தடுக்க முனைந்தார். போலீசுக்கு புலிகளுக்கு இருந்த அதிகாரத்தை கொடுத்தார். அவர்களும் புலிகளை போன்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமானவர்களை சுட்டு தள்ளுகிறார்கள். 

அளவிற்கதிகமாக எழுதி உங்களை நீங்களே அம்பலப் படுத்தி விட்டீர்கள். மொத்தத்தில் பொலீசின் அடாவடித் தனத்திற்கும் தமிழன் மேல் பழி போடும் உங்கள் அரச விசுவாசம் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் போலீசார் மீது வாள் வெட்டு நடத்தியவர்களை சுடவில்லை. ஏதோ ஒன்றை  சாதிக்க பகீரத பிரயத்தனம் நடக்கிறது.

என்ன நடந்தது என்று கூற இறந்தவர்கள் வரப்போகிறார்களா? நினைத்த பாட்டுக்கு சோடித்து எழுத வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, hasan said:

இது ஒரு மோசமான முன்னுதாரணம். புலிகள் இருந்தபோது குற்றச்செயல்கள் இல்லை என்றார்கள். நீதியரசர் இளம்செழியனும் அதே பாதையில் குற்றச்செயல்களை தடுக்க முனைந்தார். போலீசுக்கு புலிகளுக்கு இருந்த அதிகாரத்தை கொடுத்தார். அவர்களும் புலிகளை போன்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமானவர்களை சுட்டு தள்ளுகிறார்கள். 

தொடருங்கள்.....உங்கள் சேவை சிங்களத்திற்கு தேவை.

ஒருவருக்கும் மற்றொருவருக்கு தண்டனை வழங்கவோ மற்றொருவரை கொலை செய்யவோ உரிமை இல்லை. குற்றம் செய்தவராக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படுபவர் கூட குற்றத்தை கெட்டித்தனமாக செய்யத் தெரியாமையால் மாட்டுப்பட்டவரே. கெட்டிக்காரர்கள் அதை விட மோசமான குற்றங்களை செய்துவிட்டு மக்கள் மத்தியில் மதிப்போடு வாழ்கிறார்கள். 

நாங்கள் எங்கள் இனத்தவர் மற்ற இனத்தவரை கொலை செய்ய அனுமதி வழங்குகிறோம். அவர்கள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை கொலை செய்தாலும் சரி என்று வாதாடி குதூகலிக்கிறோம். மற்ற இனத்தவர் எம்மினத்தவரை கொலை செய்யும்போது இரத்தம் துடிக்கிறது. கொலைகளை செய்தவர்களை விட அதை செய்வதற்கு அதிகாரம் கொடுத்தவர்களும் அதை நியாயப்படுத்துபவர்களுமே மாபெரும் தவறிழைக்கிறார்கள்.  
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் சமுக விரோத செயல்களை அடக்கலாம் என நினைப்பது அதற்க்கு எதிரான விளைவுகளைத்தான் தரும்.  துப்பாக்கி கலாசாரம்  நீண்ட காலம் கோலோசியதால்தான் இந்த நிலைமை. அதிலிருந்து மீளுவதற்கு மாற்று வழி தேவை. 

5 hours ago, hasan said:

ஒருவருக்கும் மற்றொருவருக்கு தண்டனை வழங்கவோ மற்றொருவரை கொலை செய்யவோ உரிமை இல்லை.

நல்லது தொடருங்கள் உங்கள் திருப்பணியை.

25 minutes ago, MEERA said:

இதை சொல்லி பெருமைப்படுபவன், குறான் இல் சொல்லப்பட்டவற்றை ஏற்றுக்கொண்ட இசுலாமியன்.

நான் சுத்தமான தமிழில் தான் எழுதுகிறேன். ஆனால் புரியாத மாதிரி என்மேல் சாயங்களை பூசுகிறீர்கள். உங்களுக்கு புரிய விருப்பம் இல்லாமல்  இருக்கலாம்.
இஸ்ரேல் நாட்டை உருவாக்க அமெரிக்காவில் உள்ள யூத தலைவர்கள் ஐன்ஸ்டைன் இன் ஆதரவை  நாடினர். ஆனால் அவர் அதை மறுத்ததோடு நீங்கள் செய்வதற்கும் ஜெர்மானியர் செய்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்கிறார். யூதர்கள் மில்லியன் கணக்கில் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்ட போதும் அவர்கள் அறியாமைக்காக இரங்கினார். வெறுப்பு கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் நான் ஐன்ஸ்டைனை முன்மாதிரியாக கொள்ள விரும்புகிறேன். பெரியார் சொல்வதைப்போல ஜாதியபிமானம் இனஅபிமானம் மதஅ பிமானம் தேசாபிமானம் எல்லாமே பிற்போக்கானது. 

10 minutes ago, hasan said:

பெரியார் சொல்வதைப்போல ஜாதியபிமானம் இனஅபிமானம் மதஅ பிமானம் தேசாபிமானம் எல்லாமே பிற்போக்கானது. 

இந்த இடத்தில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். எல்லா மதங்களுமே பிற்போக்கானவை!

5 hours ago, hasan said:

நாங்கள் எங்கள் இனத்தவர் மற்ற இனத்தவரை கொலை செய்ய அனுமதி வழங்குகிறோம். அவர்கள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை கொலை செய்தாலும் சரி என்று வாதாடி குதூகலிக்கிறோம். மற்ற இனத்தவர் எம்மினத்தவரை கொலை செய்யும்போது இரத்தம் துடிக்கிறது. கொலைகளை செய்தவர்களை விட அதை செய்வதற்கு அதிகாரம் கொடுத்தவர்களும் அதை நியாயப்படுத்துபவர்களுமே மாபெரும் தவறிழைக்கிறார்கள்.  
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் சமுக விரோத செயல்களை அடக்கலாம் என நினைப்பது அதற்க்கு எதிரான விளைவுகளைத்தான் தரும்.  துப்பாக்கி கலாசாரம்  நீண்ட காலம் கோலோசியதால்தான் இந்த நிலைமை. அதிலிருந்து மீளுவதற்கு மாற்று வழி தேவை. 

பச்சை மேற்குறிப்பிட்ட கருத்துக்குத்தான்.

நான் காதுவழியாக கேட்டவற்றை வைத்து பார்த்தால் இது இருபக்கமும் விட்ட பிழை என்றே தோன்றுகிறது. ஆனாலும் இறந்த இளைஞர்கள் மீது அதிக தப்பு உள்ளது போன்றே உள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளதால் மேலதிக கருத்து கூற விரும்பவில்லை.

துரோகி + தமிழின துரோகி
அரச கைக்கூலி
ஒட்டுக்குழு
ஓணான்குழு
கும்மானின் ஆள்
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் வால்பிடி

இப்படி ஏதாவது பட்டம் எனக்கு தந்து ஜோரா ஒருதடவை கைதட்டுங்கள் பாக்கலாம் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

. ஆனாலும் இறந்த இளைஞர்கள் மீது அதிக தப்பு உள்ளது போன்றே உள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளதால் மேலதிக கருத்து கூற விரும்பவில்லை.

தப்பு இருப்பினும் கொலை செய்ய பொலிசாருக்கு தகுதியில்லைதானே........

32 minutes ago, putthan said:

தப்பு இருப்பினும் கொலை செய்ய பொலிசாருக்கு தகுதியில்லைதானே........

உண்மைதான் - இலங்கை இன்னமும் முழுமையான ஒரு ஜனநாயக நாடாக மாறவில்லை என்பதையும் கருத்திற்கொள்வோம். மிகுதி வேண்டாமே - எனது பாதுகாப்பிற்காக.

உண்மை பொய் தெரியாது - STF எமது உயர் அதிகாரிகளின் வேண்டுகோளினால் எமது பாதுகாப்பிற்காகவே சில நாட்களாக இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் இறக்கப்பட்டிருந்தது. அதுவும் ரைபிளுடன் ( இது எ கே போன்றது இல்லை பழைய போலீசார் பயன்படுத்துவது மாதிரி ஒன்று). எனக்கு ஆயுத அறிவு ரொம்ப குறைவு - பிழையாய் இருந்தால் மன்னிக்கவும்.
 
Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் - இலங்கை இன்னமும் முழுமையான ஒரு ஜனநாயக நாடாக மாறவில்லை என்பதையும் கருத்திற்கொள்வோம். மிகுதி வேண்டாமே - எனது பாதுகாப்பிற்காக.

உண்மை பொய் தெரியாது - STF எமது உயர் அதிகாரிகளின் வேண்டுகோளினால் எமது பாதுகாப்பிற்காகவே சில நாட்களாக இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் இறக்கப்பட்டிருந்தது. அதுவும் ரைபிளுடன் ( இது எ கே போன்றது இல்லை பழைய போலீசார் பயன்படுத்துவது மாதிரி ஒன்று). எனக்கு ஆயுத அறிவு ரொம்ப குறைவு - பிழையாய் இருந்தால் மன்னிக்கவும்.
 
நன்றிகள்....எல்லாம் அவன் செயல்....என்று சிம்பிளா முடிச்சுடுவோம்...tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையட்டும். பொலீசார் வேண்டும் என்று தான் சுட்டு இருக்கிறார்கள்.இருந்தாலும் மாணவர்களில் தான் பிழை என கதைக்கிறார்கள்....இவர்கள் வாள்வெட்டுக் குழுவில் இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் திரு இளஞ்செழியன் இரவில் மாணவர்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வீதியில் திரிய வேண்டாம் என சொன்ன பிறகும் நள்ளிரவில் பைக்கில் அவ்வளவு வேகமாய் சென்றதன் காரணம் என்ன?...இரவு பார்ட்டிக்கு போயிட்டு சென்று கொண்டு இருந்தார்களா?..வெறியா?...பொலீஸ் கை காட்டும் போது ஏன் நிற்கவில்லை?...பொலீசை சூக் காட்ட நினைத்து அநியாயமாய் தங்களது உயிரை இழந்து விட்டார்கள்...மற்ற மாணவர்களுக்கு இது ஒரு தகுந்த பாடமாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் கைகாட்டியது, மாணவர்கள் சூ காட்டியது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? அப்படியெனில் காலுக்குக் கீழே சுட்டிருக்கலாம் அல்லவா? உண்மையை உள்ளபடியே கூறியிருக்கலாம். எதற்கு மூடி  மறைச்சு சோடிக்கவேணும்? தமிழன்தானே எது வேணுமெண்டாலும் செய்யலாம் என்கிற மனப்பான்மை தான் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்க சுத்தி... இங்க சுத்தி ..இப்ப சிங்கள (பொ)போலீஸ்  தமிழனை சுடுவது / கொள்ளுவது/ வெட்டுவது சரி என்று வந்து நிற்கிது ...

நாளைக்கு ஒரு தமிழ் மாணவி ..சிங்கள (பொ)போலீசினால் மானபங்கப் படுத்தப்படலாம் ...
அது கூட அவள் கட்டையாய் பாவாடை கட்டி, முகத்தில சாயம் பூசி, கமக்கட்டு மயிர் வழிச்சு என்று ஒரு காரணம் சொல்லலப்படலாம்...
என்னத்த சொல்ல ... எங்க தொடங்கினோமோ ...அங்க வந்து நிக்குது tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

கண்டவுடன் சுடும் உத்தரவு இருந்தால்.. அல்லது ஊரடங்கு உத்தரவு இருந்தால் சுட்டதில் ஓரளவுக்கேனும் நியாயத்தை வாதாடலாம். மற்றும்படி காவல்துறை செய்ததை எவ்விதத்திலும் நியாயம் என்று கூறமுடியாது.

மேலும், நாட்டில் உள்ள இளைஞர்களும் இந்த நல்லிணக்க கோசத்தை நம்பி ஏதோ முழுமையான சுதந்திர நாட்டில் வாழ்வதாக நம்பிவிடக் கூடாது. தமிழன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இன்னும் ஒரு அடிமைதான். அடிமை தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கனவில் வாழக்கூடாது.

Edited by இசைக்கலைஞன்

1 hour ago, இசைக்கலைஞன் said:

கண்டவுடன் சுடும் உத்தரவு இருந்தால்.. அல்லது ஊரடங்கு உத்தரவு இருந்தால் சுட்டதில் ஓரளவுக்கேனும் நியாயத்தை வாதாடலாம். மற்றும்படி காவல்துறை செய்ததை எவ்விதத்திலும் நியாயம் என்று கூறமுடியாது.

மேலும், நாட்டில் உள்ள இளைஞர்களும் இந்த நல்லிணக்க கோசத்தை நம்பி ஏதோ முழுமையான சுதந்திர நாட்டில் வாழ்வதாக நம்பிவிடக் கூடாது. தமிழன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இன்னும் ஒரு அடிமைதான். அடிமை தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கனவில் வாழக்கூடாது.

நீங்கள் சொல்வது சரி ஆனாலும் உந்த பயங்கரவாத சட்டம் இல்லாது ஒழிக்கும்வரை யாரிடமும் நீதியை கேட்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இசைகலைஞ்சன் .. கருத்தில் 200% உடன்பாடு உண்டு .. இங்கு என்ன விசயகாந்து படமா காட்டுகிறார்கள் ..? வாள் வெட்டு .. தேள் வெட்டு.. என்று நினைத்து நின்று கொண்டு சுட்டோம் .. படுத்து கொண்டு சுட்டோம் என்று கோர்ட்டில் கதை விட இயலாது . வெள்ளைகளின் சட்டத்தை த்தான் அவனிடம் அடிமையாக இருந்தவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப பழைய காரை பட்டி டிங்கரிங் பார்த்து இது புதுசு .. என்று திரியுதுகள்.. நிச்சயம் நேர்மையான சட்டத்தரணி கோர்ட்டில் பாதிக்கபட்டவர்கள் சார்பில் ஆஜரானால் ஆப்பு கன்பார்முடு..

டிஸ்கி :

இந்த சிக்கலில் பாதிக்கபட்டவர்க்ளுக்கு உரிய நீதியை பெற்று தருவம்.. அடிமை சங்கிலியை  உடைப்பம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று எதிர்காலத்தில் யாராவது கிளம்பி வருவார்களா ..?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருத்தரும் பொலீசுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. அவர்கள் செய்தது சரி சொல்லவும் இல்லை.
இசை; வாள் வெட்டுக் குழுவினரை அடக்க மாணவர்களை இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பால் திரிய வேண்டாம் என்று அங்குள்ள ஒரு தமிழ் நீதிபதி சொல்லுகிறார்[அறிவுரை].வாள் வெட்டு குழுவில் பிரபல்யமான பாடசாலையில் பயில்கின்ற படிப்பில் சிறந்த மாணவர்களும் இருக்கிறார்கள்...இறந்த மாணவர்கள் ஊரில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு ஊரில் என்ன நடக்குது என்று வடிவாகத் தெரியும்.சில நாட்களுக்கு முன்னர் தான் விசேட பொலீஸ் களத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில வலம் வருகிறார்கள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.தவிர இவர்கள் ஏதோ நோக்கத்திற்காகத் தான் வந்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்...தாங்கள் யூனியில் படிக்கிறோம் தங்களை யார் என்ன செய்யப் போகிறார்கள் என்ட விளையாட்டுப் புத்தி தான் அவர்களை அழித்தது...சுட்ட பொலிசுக்கு கூட அவர்கள் யூனியில் படிக்கிறது என்று தெரிந்திருக்காது...யூனி மாணவர்களை சுட்டால் விசயம் பெரிய பூதாகாரம் ஆகும் என்று அரசிற்கு நன்கு தெரியும்.

பிரபல்யமான பள்ளியில்,யூனியில் படிக்கும் நல்ல குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் தான் இந்த வாள் வெட்டுக் குழுவில் சேர்ந்து திரியினம். அவர்களை அடக்க வேண்டும் என்டால் எதாவது செய்து தானே ஆக வேண்டும்.உந்த அரசு தமிழன் தானே தங்களுக்குள்ள வெட்டுப்படுறான்,வெட்டுப் பட்டுச் சாகட்டும் என்று நினைத்திருந்தால் இங்கே புலம் பெயர் நாட்டில் உள்ள கண பேருக்கு சந்தோசம்.அப்பத் தான் அங்க அவன் வெட்டிட்டான்,இங்கே இவன் வெட்டிட்டான் என்று அவலை மெல்லலாம்.

யாழில் ஆமி இருக்கு,பொலிஸ் இருக்கு பத்தாதற்கு அதிரடிப்படையினரையும் வர வைச்சு இருக்கினம்.இப்ப சந்தோசமா?...இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள்

6 minutes ago, ரதி said:

ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. ஆனால், தெருவில் செல்கின்ற ஒருவர் மீது காவல்துறை ஏன் துப்பாக்கிப்பிரயோகம் செய்து சுட்டுக்கொலை செய்யவேண்டும்? ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா? இங்கேதான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டது நிட்சயம் அங்குள்ள மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த தான்...இனி மேல் வாள் வெட்டுக் குழுவில் உள்ள ரவுடிகளைத் தவிர யாராவது உந்த நேரத்திற்கு வெளியில் வருவார்களா?...யாழ்ப்பாணாம் கொஞ்சம் அமைதிப் பூங்காவாக மாறட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.