Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியாத நினைவுகள்... 

Featured Replies

மறக்க முடியாத நினைவுகள்... 

ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம்.

Bild könnte enthalten: Baum, Pflanze, im Freien und Natur

இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான்.

யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம்.  கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. அதைவிட முன்பு இதே இடத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் லண்டனில் இருந்து வரும்போது அவர்களும் எம்மோடு சேர்ந்து விளையாடுவது. அந்த வருடத்திற்கான செலவு எல்லாம் அவர்கள் கணக்கில் எழுதிவிடுவோம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க ஒரு சில ரசிகர் கூட்டம். விளையாடும் ஆட்களை பார்க்க என்று ஒரு சிலர் அந்த பாதையால் நாலுதரம் சைக்கிளில் சவாரி.... வந்து போவார்கள்.
அந்த நேரம் நாங்கள் சிக்ஸ் அடிக்க போய் விக்கெட் பறிபோவதும் நடக்கும்.

விளையாட்டு முடிய பலரும் கலைந்து போக நாங்கள் ஒரு சிலர் உந்த மதிலோடு இருந்து கதைக்க தொடங்கி.. இரவு 9 மணிவரை தொடரும்... இதுகளை மறக்கத்தான் முடியுமா?

 

பிற்குறிப்பு:

இந்த பதிவை எழுத தூண்டியது.. நேற்று இங்கு ஈழப்பிரியானால் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் படம் தொடர்பானபதிவு. அதை பார்த்தபின் இந்த பதிவை முகநூலில் பதிந்தேன்.அதை இங்கு உங்களோடும் பகிர்கிறேன்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் பார்க்க ஆவலுடன் பார்த்திருக்கின்றோம் ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலை மாத்திட்டீங்களா

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்...தொடருங்கள் நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2016 at 8:24 PM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

சிக்சர் அடிச்சு அவுட்டானது அதனால்தான்....tw_tounge_wink:தொடருங்கள் நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

இப்போதைக்கு, இதுவே பெரிய விசயம்:grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

இந்த அனுபவமும் இருக்கு

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

இந்த அனுபவமும் இருக்கு

image.jpg

மீரா இது என்ன என்று தெரிய இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Ahasthiyan said:

மீரா இது என்ன என்று தெரிய இல்லை 

ஊரில் மலசல கூடத்திற்கு காற்று வருவதற்காக ஒரு கல் இடைவெளி வைத்திருப்பார்கள். நாங்கள் அடிக்கும் பந்து சரியாக அந்த இடைவெளியூடாக உள்ளே விழுந்துவிடும், விழுந்த பந்தும் திறந்திருக்கும் கதவினூடாக வர மறுத்து உந்த பேசினுள் விழுந்து தண்ணீரில் ஓய்வெடுக்கும்.  (பந்து விழுந்த முதல் நாள் பேசாமல் இருந்து விட்டோம் அடுத்த நாள் விளையாட போன போது வீட்டுக்காரர் ஓரே அமளி, அவருடன் டீல் போட்டோம் பந்து இனி விழுந்தால் நாங்களே எடுக்கிறம் என்று) 

பிறகென்ன யார் அடித்ததோ அவரே போய் எடுக்க வேண்டும்.(உபயம் - சொப்பிங் பாக்) அத்துடன் பந்திற்கு நிரந்தர ஓய்வு.

ஒரு தடவை பந்து எடுக்கப்போனவன் பயந்தடித்து வெருண்டு போய் வந்து சொன்னான் "பந்து பட்டு ------ ( அந்த வீட்டு பெட்டையின் பெயர்)  க்கு காயம், பாவாடையெல்லாம் இரத்தம்".  பந்து உள்ளுக்குள் போன நேரம் அந்த பிள்ளை உள்ளுக்குள் இருந்திருக்கு, பந்து ஓட்டைக்குள்ளால் வர பயந்தடித்து வெளியால் அவசரத்தில் ஓடி வந்திருக்கு. கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஒருத்தன் எப்ப பார்த்தாலும் அந்த வீட்டு வளவிற்குள்ளேயே அடித்துக் கொண்டிருந்தான், யார் அடித்தாலும் அவன் தான் போய் எடுப்பான், பின்னர் சொன்னான் " இனி பந்தை அவையே எடுப்பினம்" என்டு. நாங்களும் சனியன் இனி ரொயிலற்றுக்குள் பந்து எடுக்கிற வேலை இல்லை என்ற சந்தோசத்தில். ஆனால் வளவிற்குள் பந்து விழுந்தால் தான் மட்டும் போவான். பின்னர் தான் தெரிந்தது இவன் அந்த ------ தூக்கிட்டான் என்று, இப்போ கனடாவில் இருவரும்.

வெருண்டவன் வீரச்சாவு.

 

மன்னிக்கவும் நவீனன் உங்கள் திரியில் புகுந்ததற்கு.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16.12.2016 at 10:24 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

மீரா எழுதினார் பார்த்தியளா நான் வெட்ட தூக்கி அடிக்க நேரம் பார்த்து பள்ளி பிள்ளைகள்  எட்டி எட்டி பார்க்கும் ஏன்னா நம்ம அடி அப்படி  அண்ணே  சிகசர்தான்  

  • தொடங்கியவர்

விருப்பு புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த  ஜீவன்சிவா, suvy, பகலவன், ரதி, Athavan CH, putthan, Ahasthiyan, MEERA, புங்கையூரான், யாயினி எல்லோருக்கும் நன்றி..:)

மேலும் இந்த பதிவில் தங்கள் கருத்துகளையும் பதிந்த suvy, நந்தன், முனிவர் ஜீ,  ரதி, putthan, MEERA, Ahasthiyan, குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள்.

On 19.12.2016 at 10:57 AM, putthan said:

சிக்சர் அடிச்சு அவுட்டானது அதனால்தான்....tw_tounge_wink:தொடருங்கள் நவீனன்

அது சும்மா பதிவை கலகலப்பாக எழுத எழுதியது...tw_blush: அதையே கிண்டி கிண்டி எழுதபடாது..:grin:

13 hours ago, MEERA said:

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

அது ஏதோ அன்று நேரமும் இருந்தது.. எழுதும் மனநிலையும் இருந்தது எழுதிவிட்டேன்... இனி எப்பவோ.. பார்ப்பம்..

12 hours ago, நந்தன் said:

இப்போதைக்கு, இதுவே பெரிய விசயம்:grin:

ஹஹா நல்லா விளங்கி இருக்கு ஜி..tw_blush:

On 16.12.2016 at 10:24 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

ஆமா ரொம்ப  முக்கியம் இப்ப..:grin:சொந்த வீட்டில் என்னை அகதி ஆக்ககும் நோக்கம்..:rolleyes:

12 hours ago, Ahasthiyan said:

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

நன்றி Ahasthiyan... நீங்கள் சும்மா எதிலும் எழுதுவது இல்லை. ஆனால் இதில் எழுதி உள்ளீர்கள் சந்தோசம்..:)

உண்மைதான் சிலவேளைகளில் பழையது பல வெளிவரும் இப்படி தேட.

11 hours ago, MEERA said:

 

மன்னிக்கவும் நவீனன் உங்கள் திரியில் புகுந்ததற்கு.

 

இல்லை மீரா,  எல்லாம் ஒரு அனுபவம், நினைவு  பதிவுகள்தானே. தொடருங்கள்

  • தொடங்கியவர்
11 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

அதுதானே.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

மேய்ச்சல் நிலத்தில் தானே மாட்டுக்கு வேலை:grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

மேய்ச்சல் நிலத்தில் தானே மாட்டுக்கு வேலை:grin:

எந்த மாட்டை சொல்கிறார் கு.சாமி அண்ணை சொல்லுங்கோ எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணூம் :104_point_left:

11 minutes ago, முனிவர் ஜீ said:

எந்த மாட்டை சொல்கிறார் கு.சாமி அண்ணை சொல்லுங்கோ எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணூம் :104_point_left:

இந்த மனுஷனை எப்படித்தான் நம்புறாங்களோ தெரியலை. எங்க போனாலும் சுத்திவர பெண் பிரஜைகளாகவே இருக்கிறாங்க. சத்தியமா நான் பழைய வேலை, புதிய வேலை, பஸ் பிரயாணம் பற்றி சொல்லவேயில்லை..:grin:

இதுக்குள்ள உண்மை வேற தெரியணுமாம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பதில் எழுத நேரம் கிடைத்தது.தொடர்ந்து எழுதுங்கள்.சில மலரும் நினைவுகள் சந்தோசத்துடன் சேர்த்து கவலைகளும் தருகின்றன.:unsure::)

  • 2 months later...
  • தொடங்கியவர்

 

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

இதில் கிரிக்கெட் விளையாடுவதில் பலரும்  அந்த இடத்திற்கு அருகில் இருப்பவர்கள்தான். வேறு சில நண்பர்கள் கொஞ்சம் தூரத்தில்இருந்தும் வருவார்கள்.

அதுக்கு அந்த நேரம் ஒரு சில காரணங்களும் இருந்தது. முக்கியமானது பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள மைதானங்களில் விளையாடும்போது அந்த  பாதையால் போகும் இராணுவத்தினர் தரும் தொல்லை. அதனால்  வீட்டில் விடமாட்டார்கள் என்று இந்த இடத்திற்கு வருவார்கள். இந்த மைதானம் பிரதான வீதியில் இருந்து உள்ளுக்கு இருப்பதால் பாதுகாப்பு என்று.

 

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

நாங்கள் அடிக்கும் பந்துகள் தாறுமாறாக பக்கத்தில்  இருக்கும் வீட்டு கூரை யன்னல் கண்ணாடிகளையும் பதம் பார்க்கும். அதை விட பந்து எடுக்க போய் அவர்களது பூக்கன்றுகளை முறித்து விடுகிறோம் என்று வேறு முறைப்பாடு. சில வேளைகளில் நாங்கள் அடிக்கும் பந்து போய் விழுந்தவுடன் அந்த வீட்டுகாரர் பந்தை எடுத்து விடுவார்கள்.  அவர்களிடம் இருந்து பந்தை உடனே வேண்டுவது இயலாத காரியம். tw_blush: பந்தை எடுத்தாலும்   கிரிக்கெட் தொடரும். ஆனால் என்ன அந்த பக்கம் பந்தை தூக்கி அடிக்கபடாது என்று சொல்லிவிடுவம் துடுப்பெடுத்து ஆடுபவரிடம்.

அதைவிட 2 அல்லது 3 பந்து தடுப்பளார்களை அந்த பக்கம் கூடுதலாக நிற்க வைத்து அவர்கள் வீட்டு வேலிக்காலும் பந்து போகாதமாதிரி  தடுப்பது. அந்த காலத்தில் T20 போட்டிகள் இல்லை. இல்லை என்றால் அதை பார்த்து அந்த ஸ்டைலில் பந்துகளை தடுத்து இருக்கலாம். :grin:  இது எல்லாம் அந்த நாள் மாத்திரம்தான். அடுத்தநாள் நாங்கள் நினைத்தவாறு அடிதான்.

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

அதே நேரம் எங்களோடு சேர்ந்து விளையாடுவர்களும் செய்யும் அநியாயம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  பந்து வீசுவதுக்கு ஓடி வருவதுக்கு இடம் காணாது என்று விக்கெட்க்கு பின்னால் இருக்கும் வீட்டுகாரரின் வேலியின் கதியாலை பிடிங்கி விட்டு அங்கு இருந்து ஓடி வந்து பந்து வீசினால் யாரும் பேசாமல் விடுவார்களா

தனது சொந்த அக்கா வீட்டின்  வேலியின் கதியாலைதான் அவர் பிடுங்கிகியவர். அவருக்கு விழுந்த ஏச்சை இப்பவும் நினைத்தாலும் சிரிப்புதான்.

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

எப்படி எல்லாம் நாங்கள் விளையாடி வாழ்ந்த இடம் இப்ப யாருமே இல்லாமல் புல்லும் பத்தையுமாக யாரும் கவனிப்பார் இல்லாமல் இருக்கு. அதை விட காணி சொந்தகாரரும் தங்கள் காணிகளை பிரித்து எடுத்து விட்டார்கள்.

 

அந்த சுற்றாடலில் உள்ள சிறுவர்களுக்கும், இளையவர்களுக்கும் இப்ப நேரமும் இல்லை. இடமும் இல்லை. அவர்கள் எப்போவது கிரிக்கெட், உதைபந்து விளையாட வேறு தொலைவில் உள்ள இடங்களுக்கு  போக வேண்டிய நிலை.tw_cry:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் உங்களின் எழுத்தும் நன்றாக இருக்கின்றது நவீனன். தொடருங்கள்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் உங்கள் கிரிகட் கதையை இப்போ தான் பார்த்தேன்.எப்படி தவறவிட்டேன் என்று இன்னமும் யோசிக்கிறேன்.

நாங்களும் வளவுகளில் கிரிகட் விளையாடிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.ரொம்பவும் வெட்கம்.துடுப்பு மட்டைகள் எல்லாம் உள்ளுர்த் தயாரிப்புகள் தான்.

எனக்கு சுவைப்பிரியனின் ஐஸ் குச்சி கதையை வாசித்த போது தான் நோட்டீஸ் பொறுக்கிய ஞாபகம் வர அதை கதையாக எழுதினேன்.நீங்கள் என்னடா என்றால் எனது பதிவைப் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.