Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

Featured Replies

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

IMG_0968.jpg

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து  வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை.

2016 இல்  கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து  வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன்  பெற்று  தரம் ஆறுக்கு பெரிய பாடசாலைக்கு செல்ல போகும் அவாவுடன்  பாடசாலை செல்வதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு தை மாதம் இரண்டாம் திகதிக்காக காத்திருந்தாள்.

தந்தையும் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற கூலிப் பணத்தில் ஏனைய  இரண்டு பிள்ளைகளுக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை  வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில் பெற்றுக்கொடுத்துள்ளார். கனுசியா தான் பெரிய பள்ளிக் கூடத்திற்கு போகப்போறன் என்ற மகிழ்ச்சியை அயல்வர்களுடனும் பெற்றோர்களுடனும் சதோரர்களிடம் அடிக்கடி வெளிப்படுத்தியே அந்த நாளுக்காக காத்திருந்தாள். சில வேளை தாயுடன் ஏ9 வீதியால் சென்று வரும் போது தான் படிக்கப்போகும் பாடசாலையை காட்டி இதுதான் என்னுடைய பாடசாலை என பெருமிதத்துடனும் பல  தடவைகள் கூறியிருக்கின்றாள்.

விடுமுறை நாட்களில் தரம் ஆறுக்குரிய புதிய புத்தகங்கள் மற்றும் கொப்பிகளுக்கு   ஆசையோடு உறைகள் போட்டு அவற்றில் தனது பெயர் தரம் என்பவற்றையும் எழுதியதோடு பாடசாலையின் பெயரையும் கிளிநொச்சி மத்திய கலலூரி என எழுதி கனவுகளோடு இருந்திருக்கிறாள் கனுசியா.

அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது வழமைக்கு மாறாக கனுசியா நேரத்தோடு எழும்பி குளித்துவிட்டு புதிய சீருடையும் அணிந்து சுவாமி அறைக்குள் சென்று கடவுளை வணங்கி புதிய புத்தக பையை சுமந்தபடி தாயுடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி நோக்கி வெள்ளை பட்டாம் பூச்சியாய்  பறக்கிறாள். பாடசாலை முதலாம் தவணைக்காக 02-01-2017 இல் ஆரம்பித்தாலும் தரம் ஆறுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நாள் 06-01-2017 ஆக பாடசாலையால் அறிவிக்கப்பட்டிருந்ததால் கனுசியாவும் ஆறாம் திகதி ஆறாம்  ஆண்டில் காலடி வைக்க சென்றிருக்கிறாள்.
IMG_0970.jpg
கனுசியா போன்று பலரும் வந்திருக்கின்றார்கள். அதில் பலர் அவளுடன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நண்பர்களும் நண்பிகளும். ஒவ்வாருவராக அழைத்து பாடசாலை நிர்வாகம் அவர்களது விண்ணப்பங்களை பெற்று அனுமதி வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் செல்லும் போது  சிலர் கனுசியாவை பார்த்து உனக்கும் கதிரை பிடிச்சி வைக்கிறன் கெதியா வாடி என்று அழைப்பும் விட்டிருக்கின்றார்கள். கனுசியாவும் வகுப்புக்குச் செல்லும் ஆவலோடு காத்திருக்கிறாள்.

இப்பொழுது பாடசாலை நிர்வாகம் கனுசியாவின் விண்ணப்பத்தை பரிசீலிக்கிறது. கனுசியா தாயின் அருகில் நிற்கிறாள். ஒரு சில நிமிடங்களில் அதிபர் கூறுகின்றார் இவவுக்கு இங்க அனுமதியில்லை  நீங்கள் வேறு பாடசாலையில் சேருங்கோ என்று.  தாய் ஏன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் படித்த பிள்ளையை இங்கதானே சேர்க்கவேண்டும் என்கிறார். இல்லை  அப்படி எந்தச்  சட்டமுமில்லை இங்கு இடவசதியும் போதாது அதனைவிட இவவுக்கு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 62  புள்ளிகள் இங்கு சேர்ப்பது என்றால் 70 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் அதிபர். கனுசியா எதுவும் அறியாதவளாய் விழிகள் அகல விரிய தாயுக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் உரையாடலில் இருவரது முகங்களையும் மாறி மாறி பார்க்கின்றாள்.

தொடர்ந்தும் தாய் இங்கு 27 புள்ளிகள் பெற்ற மகளுடன் படித்த  மாணவர்களையும் சேர்த்துள்ளீர்கள் என சுட்டிக்காட்ட, அவர்கள் எங்கள் பாடசாலையின் சூழலில் உள்ள மாணவர்கள் என அதிபர் பதிலளிக்கின்றார்.  கனுசியாவின் சகோதரியும் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில்  தரம் மூன்றில் கல்வி கற்கின்றார் எனவே  கனுசியாவை இங்கு சேர்த்தால்தான்  பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றி இறக்குவதிலும் வசதியாக இருக்கும் என கனுசியாவின் தாய் தன்னால் இயலுமானவரை காரணங்களையும் கூறிவிட்டார். ஆனால் அதிபர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

கனுசியாவின் தாய் தனது இருக்கையில் இருந்து எழுந்துவெளியே வர தன்னை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை புரிந்துகொண்டவளாய் வெளியேறுகிறாள். தன்னோடு படித்த பள்ளித்தோழிகள் வகுப்பறைக்குள் செல்ல கனுசியா தாயோடு வீதிக்கு வருகிறாள்  வீட்டுகுச் செல்ல.  கனுசியாவின் கனவுகள் உடைந்துபோகின்றன. அவளது ஆசைகள்  அழிக்கபடுகின்றதாய் உணர்கிறாள் காலையில் கடவுளிடம் நடந்த பிரார்த்தனை பொய்யாகிவிட்டது என அறிகிறாள். இப்படி அளவது உணர்வுகள் பலவிதமாய் காணப்படுகிறது. வீடு செல்லும் வரைக்கும் இருவரும் அமைதி. வீட்டைச் சென்றடைந்தும் தாயிடம் ஏன் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை? எப்பொழுது சேர்ப்பார்கள்?  எனக் கேள்விகளை கேட்கின்றாள் தாயும் நடந்தவற்றை பக்குவமாய் சொல்லி திங்கள் கிழமை கல்வித்திணைக்களத்திற்குச் சென்று அனுமதி பெற்று சேர்த்துவிடுகிறேன் கவலைப்படாதே என கூறி சமாதானப்படுகிறார். என்னை விட குறைவான மார்க்ஸ் எடுத்தவர்கள் சேர்கின்றார்கள் ஏன்  என்னை சேர்க்கவில்லை எனத் திரும்பவும் கேள்வி தாயிடம் பதில் இல்லை.

புதிய புத்தகபை, கொப்பிகள், எல்லாம் பக்குவமாய் மேசைகக்கு செல்கிறது. சீருடையை கழற்றும் போது மாத்திரம் கண்கள் பனித்தன என்கிறார்  தாய்.

திங்கள் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு செல்கின்றார்கள் அனுமதி வழங்குமாறு கடிதம்  வழங்கப்படுகிறது. மறுபடியும் பாடசாலைக்கு வருகின்றார்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. மீண்டும் வலயம் செல்கின்றனர் வேறுபாடசாலைகளில் சேர்க்குமாறு கடிதம்  வழங்க்கப்படுகிறது. இதனை தவிர கிராம அலுவலர் கடிதத்தை பெற்றுவருமாறு கூறப்படுகிறது. தாய் அதனையும் பெற்றுக்கொடுகின்றார் இருந்தும் எதுவும் நடக்கவில்லை. மகளுடன் வேறு இரண்டு பாடசாலைகளுக்கு செல்கின்றார்  அனுமதி தருமாறு மன்றாடுகின்றார் ஆனால் அங்கும் எதுவும் நடக்கவில்லை.

இப்படி பதினெட்டு நாட்களாக அழைந்து திரிகின்றார் கனுசியாவை பாடசாலையில் சேர்த்துவிடுவதற்கு ஆனால் எங்கும் எதவும் நடக்கவில்லை. பாடசாலைகளில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெறுகிறது. புதிய புத்தகங்களில் பல பாடங்கள் கற்பிக்கப்பட்டுவிட்;டன. ஆனால் 19-01-2016 வரை கனுசியாவுக்கு எந்தப் பாடசாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை.

என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்கமாட்டார்களா? நான் இனி படிக்க முடியாதா? பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளை பிடித்து வந்து படிக்கச் சொல்கின்றார்கள் நான் பள்ளிக் கூடம் போயும் என்னை ஏன் எடுக்கினம் இல்லை என கேள்விகள் தொடர்கிறது பாவம் பதினொரு வயது சிறுமி பல விதமாய் யோசித்து யோசித்து விரக்தியாய் நிற்கின்றாள். அவளது கேள்விகளுக்கு தாயிடம் இருந்து இப்போது கண்ணீர் மாத்திரமே பதிலாக வருகிறது.

சிறுவர் உரிமைகள், கல்வி உரிமைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா உரிமைகளும் இருக்கிறது ஆனால் கனுசியாவுக்கு எதுவுமில்லை இதுவரைக்கும்.

http://globaltamilnews.net/archives/14401

51 minutes ago, நவீனன் said:

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 
இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்? 

Just now, MEERA said:

இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்? 

மீரா இங்கு ஏன் அல்லது ஆதாரம் என்று கேட்டால் பிரச்சனை
பேசாம இது உண்மை எண்டு ஒத்து கொள்ளுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு பத்தி எரிய வேண்டிய திரி இது 

அனைவரும் - மவுனம்

இந்த பிள்ளைக்கு ஏதாவது பண்ணலாமா?

முடிந்தால் பொன் வாய் திறவுங்கள் உறவுகளே

என்ன பண்ணலாம்.
 
அனேகமானோர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

கடனெடுத்து செய்த உறவுகள் அதிகம்.வட்டிக்கு வாங்கி உதவியவர்கள் இன்னும் அதிகம்.

இன்றும் செய்கின்றார்கள்....செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு இங்கு திரிகள் எரிய வேண்டும்.

ஆனால் எமக்கும் என்னைப்போன்றவர்களாலும் அங்கு  அடுப்பு எரிய வேண்டும்......... எரிகின்றது.tw_cookie:

பூவரசு.....அதன் அருமை தெரியுமா உங்களுக்கு.

Edited by குமாரசாமி
. தவறு சுட்டிக்காடியமையால் ஒரு சிறு திருத்தம்.

16 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

சொல்ல வந்தது கோடி புண்ணியம் கு .சாமி 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடசாலை அதிபருக்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில் இதுவரை இல்லை.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

  • தொடங்கியவர்

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன நடந்தது?...எதற்காக ஒரு பாடசாலையும் அந்த சிறுமியை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

வாழ்த்துக்கள்.நீங்கள் படிப்பில் சாதிக்க வாழ்த்துக்கள்.

5 hours ago, நிழலி said:

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.இது தான் எங்களுக்கு (மாகணம்)சில அதிகாரங்கள் கிடைத்தாலும் நடக்கப் போகுது.

1 hour ago, ரதி said:

உண்மையில் என்ன நடந்தது?...எதற்காக ஒரு பாடசாலையும் அந்த சிறுமியை சேர்க்க மாட்டேன் என்கிறார்கள்?

செல்வாக்கும் இருக்கவேணுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.நீங்கள் படிப்பில் சாதிக்க வாழ்த்துக்கள்.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.இது தான் எங்களுக்கு (மாகணம்)சில அதிகாரங்கள் கிடைத்தாலும் நடக்கப் போகுது.

ஏற்கனவே இது நடந்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.

  • தொடங்கியவர்

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் அதை லிங்காக தரவில்லை. யாழ் இந்து மகளிர் கல்லூரி உப அதிபரின் முகநூல் தகவலின்படி அந்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள அதே பாடசாலைக்கு திங்கள் முதல்  போகலாம் என்பதே செய்தி.

நான் அந்த தகவலை தந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மன்னித்து கொள்ளுங்கள்...

17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நவீனன் said:

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் அதை லிங்காக தரவில்லை. யாழ் இந்து மகளிர் கல்லூரி உப அதிபரின் முகநூல் தகவலின்படி அந்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள அதே பாடசாலைக்கு திங்கள் முதல்  போகலாம் என்பதே செய்தி.

நான் அந்த தகவலை தந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மன்னித்து கொள்ளுங்கள்...

அந்த முகநூல் தகவலை இங்கு இணைத்திருக்கலாமே

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2017 at 3:22 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.

செய்தி  கிளிநொச்சி என்பதால் என்னால் உறுதி  படுத்த முடியாமல் உள்ளது அக்கா அதிக மாணவ‌ மாணவிகள் கிராமத்தில் இருந்து நகர பாடசாலைகளுக்கு நகர்வதால் கிராம பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் உள்ளது அதனால் அரசாங்கமே புதிய கட்டுப்பாடு வித்தித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும் பாடசாலையில் அண்மித்து வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கிராமத்தில் இருக்கும் பல பாடசாலைகள் இயங்காமல் இருக்கிறது இதன் காரணமாக இங்கே பாடசாலைகள் , மாகாண சபை பாடசாலை , மத்திய அரசு பாடசாலை என பிரிக்கப்பட்டுள்ளது அதில் தற்போது மாகாண சபைக்குள் இருக்கும் சிறு பாடசாலைகல் இயங்கவில்லை  காரணம் பிள்ளைகள் வேற , பெரிய பாடசாலை நோக்கி நகர்வதால் இது பலருக்கு விளங்குவதில்லை இதனால் என்னவோ அதிபர் அவர்கள் சேர்க்க இயலாது என்று சொல்லி இருக்கலாம். 

எனக்கு தெரிந்த ஒரு பாடசாலையில் தரம் 1ற்கு 120 மாணவர்களை சேர்ப்பதற்க்காக அனுப்பிய அப்பிளிகேசன் என்று சொல்கின்ற அனுமதி கோரல் 800 ஐ தாண்டியது என்றால் அது ஒரு தேசிய பாடசாலை மற்ற பாடசாலைகளின் நிலை??  இப்படியிருக்கு நிலமை இங்கு அதிபர் சேர்க்கவில்லை என்றால் அவரிடம் காரணம் கேட்டு பெற்று இருக்க வேண்டும்  
 தரம் 5 மாணவர்கள் அடுத்த பாடசாலைக்கு அதாவது தேசிய பாடசாலைக்கு போக வேண்டும் என்றால் கொலசீப் பாஸ் பண்ணியிருந்தால் இலகுவாக சேர்க்கலாம் அதற்கு சேக்குலர்  உண்டு. இதை அதிபர் தட்டிக்களிக்க முடியாது 

ஊரில் உள்ள பொடியங்களுக்கு தொழிலைக்கொடுங்கள் என்றால் பலருக்கு கமறாவை கொடுத்து செய்தியாளராக்கிவிடுறார்கள் அவர்கள் போடும் செய்திக்கு ஒரு அளவு கணக்கே கிடையாது. 

On 1/20/2017 at 5:48 AM, குமாரசாமி said:

அனேகமானோர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்கள் ஏதோ ஊரில் இருப்பதால் மட்டும் புனிதர் என்று நினைத்து கருத்துக்களையும் கண்ணியமில்லாத வார்த்தைகளையும் கொட்டுகின்றீர்கள்.

கடனெடுத்து செய்த உறவுகள் அதிகம்.வட்டிக்கு வாங்கி உதவியவர்கள் இன்னும் அதிகம்.

இன்றும் செய்கின்றார்கள்....செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு இங்கு திரிகள் எரிய வேண்டும்.

ஆனால் எமக்கும் என்னைப்போன்றவர்களாலும் அங்கு  அடுப்பு எரிய வேண்டும்......... எரிகின்றது.tw_cookie:

பூவரசு.....அதன் அருமை தெரியுமா உங்களுக்கு.

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 
வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தப் பிள்ளை வறுமையினால் / படிப்பதற்கு போதிய பணம் இல்லாமையால் படிக்க முடியாத நிலை ஏற்படவில்லை. மற்றவர்களின் கையை எதிர்பார்க்காமல்  மேசன் வேலை செய்கின்ற கவுரமான அப்பாவின் பிள்ளை இவர். செய்தியின் பிரகாரம், ஒரு பொறுப்பற்ற அதிபரால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கு. எங்கள் ஊர்களில் அதிகாரம் கொஞ்சம் வந்துவிட்டால் போதும் தலை கால் தெரியாமல் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் உண்டு. அது கிராம சேவையாளரில் இருந்து அதிபர் வரைக்கும் நீளும்.

ஆனால் எல்லோரும் இல்லை  

புதிய சட்டங்கள்  அரசுனால் வந்துள்ளது நிழலி ஒரு வகுப்பறையில் 30 பிள்ளைகள் மாத்திரமே  இருக்க முடியும் அதிக பிள்ளிகளை சேர்ப்பதால் 40 நிமிடத்திற்குள் ஒரு ஆசிரியரால்  எத்தனை பிள்ளைகளை பார்க்க முடியும் அவர்கள் சொப்பிகளை சரி பார்க்கமுடியும், இது ஒவ்வொரு நாளும் நான் காணும் அனுபவம் .

அதிகார துஸ்பிரயோகம்  யார்தான் செய்ய வில்லை இலங்கையில் ?? அதிபர் முதல் அல்லக்கை வரைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 
வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

அவர் செய்பது நல்லவிடயங்கள். அதற்காக மற்றவர்களை கேணைத்தனமாக மதிப்பிட்டு கருத்துக்கள் வைப்பது சரியல்ல....
நீங்கள் கூறும் நற்திட்டங்களை அவர் முன்னெடுப்பாரேயானால் அள்ளிக்கொடுக்க அகிலமெங்கும் ஆட்கள் இருக்கின்றர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

வாழ்த்துக்கள் அக்குழந்தைக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர்

  • தொடங்கியவர்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த முகநூல் தகவலை இங்கு இணைத்திருக்கலாமே

17 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாணவி கனுசியாவுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.

வரும் திங்கட்கிழமை அவள் தனது கனவுப் பாடசாலைக்கு மகிழ்ச்சியாக செல்வாள் என்ற நல்ல தகவல் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் மாணவிக்கு!

இது ஒரு முகநூல் தகவல்.. யாழ் நகரில் உள்ள லயன்ஸ் கிளப் உறுப்பினரும்... Vice Principal  J/Jaffna Hindu Ladies College

இதுதான்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர் செய்பது நல்லவிடயங்கள். அதற்காக மற்றவர்களை கேணைத்தனமாக மதிப்பிட்டு கருத்துக்கள் வைப்பது சரியல்ல....
நீங்கள் கூறும் நற்திட்டங்களை அவர் முன்னெடுப்பாரேயானால் அள்ளிக்கொடுக்க அகிலமெங்கும் ஆட்கள் இருக்கின்றர்கள்.

நீங்கள் எப்படி விளங்கி கொண்டீர்  என்று எனக்கு தெரியாது அவர் பற்றி  எரிய வேண்டும் என்பது  அந்த பிள்ளைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் என்னவோ  அப்படி இருக்கலாம் அல்லவா .:unsure:

14 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள்  அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய
 இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை.
 
வடக்கிலும் 5 பாட‌சாலைகள் 

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான்  கருத்து மட்டுமே வேறு

தவறு முனி 
எனக்கும் இந்த திட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.