Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுடைய பட்டுச் சேலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்தபோது நிறையச் சேலைகளை வாங்கி வந்தேன். ஏற்கனவே நிறையச் சேலைகள் இருந்தாலும் பெண்களின் சேலை ஆசை நீங்கள் எல்லாம் அறிந்தது தானே.

முதல் நாள் ஒரு இருபதினாயிரம் ரூபாய்களுக்கு சாதாரண சேலைகளும் பிள்ளைகளுக்கான ஆடைகளும் வாங்கியதில் கடையில் வேலைசெய்வோர் சகஜமாகக் கதைத்துச் சிரித்து எனக்கு ஐந்து வீதக் கழிவும் தந்தார்கள். அடுத்தநாளும் பட்டுச் சேலைகள் வாங்கவேண்டி இருந்ததில் நானும் மாமியும் போத்தீசுக்குச் சென்றோம்.

மாமி என்றால் என்னிலும் ஐந்து வயது பெரியவர் தான். இந்தியாவில் இருபது ஆண்டுகள் இருக்கிறார். ஆனால் அவர் பெரிதாக சேலைகள் வாங்குவதோ உடுத்துவதோ கூடக் கிடையாது. அதனால் அவருக்குச் சேலைகள் பற்றியோ வேறு கடைகள் பற்றியோ  எதுவும் தெரியாதவர். ஆனாலும் நான் அவர் வீட்டில் தங்கி இருந்ததால் வேறு வழியின்றி அவரைக் கூட்டிக்கொண்டே கடைக்குச் செல்லவேண்டியதாகிவிட்டது.

முதல் நாள் பழக்கத்தில் அடுத்த நாள் கடைக்குப் போனதும் ராஜ மரியாதை. ஒரு மணிநேரம் அவர்களும் சலிக்காமல் சேலைகளை எடுத்துப் போட ஒருவாறு அதில் இரண்டு சேலைகள் ஒவ்வொன்றும் 15,500 இந்தியன் ரூபாய்கள் பெறுமதியானவை. அவற்றைத் தெரிவு செய்தேன். பணத்தைச் செலுத்தி முடிய எமக்கு சேலை காட்டியவருள் ஒருவர் "அம்மா! சேலைக்கு இலவசமாக் குஞ்சம் தைத்துத் தருகிறோம். ஒரு அரைமணி நேரம் பொறுக்க முடியுமா "என்றார். நான் மாமியைப் பார்க்க குடன் தைத்துத் தரட்டும் என்றார். சரி அரைமணி நேரம் தானே என்று கொடுத்துவிட்டுப் பக்கத்தில் இருந்த சரவணபவனுக்குப் போய் நெய் முறுகல் ஒன்று சாப்பிட்டுவிட்டு திரும்பிவந்து சேலையைப் பெற்றுக்கொண்டோம். அவர்கள் தந்த உடன் பெட்டியின் மூடியைத் திறந்து நான் கொடுத்த சேலைகள் தானா என்று பார்க்க எல்லாம் சரியாக இருக்க, அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தோம். உனக்கு சந்தேகம். ஏன் அவங்களுக்கு முன்னால பெட்டியைத் திறந்து பாத்தனி எண்டு மாமி கேட்க, பாக்காமல் எப்பிடி வாங்கிறது என்று கூறி மாமியின் வாயை அடைத்துவிட்டு வீடு வந்து நாடு வந்து இரண்டு ஆண்டுகள் ஆச்சு.

இந்த இரண்டு ஆண்டுகளில் தெரிந்த சொந்தங்கள் வீட்டில் திருமணம் நடைபெறவில்லை. நடைபெற்ற சில நிகழ்வுகளுக்கு இருந்த பழைய பட்டுச் சேலைகளைக் கட்டிவிட்டு இன்னும் இரண்டு வாரங்களில் என் ஒன்றுவிட்ட சகோதரனின் மகளுக்கு நடக்க இருக்கும் திருமணத்துக்குக் கட்டவேண்டும் என எண்ணியபடி சட்டையைத் தைப்பதற்காக இரண்டு சேலைகளையும் எடுத்து விரித்தால்...... நெஞ்சு படபடப்பு இன்னும் தான் போகேல்லை. 

நான் எடுத்த சேலைகளின் நிறத்தில் இந்தியப் பணத்துக்கு 3000 ரூபாய் கூடப் பெறாத சேலைகள் என் முன்னால் பல் இளித்தபடி.

என்ன செய்வது கோபப்பட்டும் ஒண்டும் செய்ய முடியாது. ஆனாலும் உப்படியான வேலைகளை சும்மாவும் விடக்கூடாது என எண்ணி போத்தீசின் இணையத்தளத்துக்குச் சென்று அதிலிருந்த மின்னஞ்சலுக்கு விபரத்தை எழுதினேன். ஆனாலும் மூன்று நாட்களாகியும் எந்தப் பதிலும் இல்லை.

பணம் கூடப் பெரிதில்லை ஆசையாக வாங்கிய சேலையை இப்படி ஏமாற்றி விட்டார்களே என்றுதான் கோபம் வருகிறது.

  • Replies 53
  • Views 5k
  • Created
  • Last Reply

நீங்கள் சொல்வது விளங்க இல்லை. இரண்டு வருசங்களில் மூடி வைத்த சேலையின் நிறம் மாறிவிட்டதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கலைஞன் said:

நீங்கள் சொல்வது விளங்க இல்லை. இரண்டு வருசங்களில் மூடி வைத்த சேலையின் நிறம் மாறிவிட்டதோ?

தம்பி!!!!!!!!

என்ன ராசா?????

கதை விளங்கேல்லையோ? :(

நம்ம சங்கத்திலை இணைஞ்சு....எங்கடை கதையை கேட்டுப்பார்! :grin:
பூமி மட்டுமில்லை இந்த பிரபஞ்சமே கண்ணுக்கு முன்னாலை சுத்தும்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தான் சேலை வாங்கச் செல்லும்போது வூட்டுக்காரரையும் உடன் இருக்கும்படி அழைத்து செல்லவேண்டும் என்பது..(தரமான,சரியான சேலையை பாக்கெட்டுக்குள் வைக்கிறார்களாஎன கண்காணிக்க, வூட்டுக்காரர் அவசியம் அம்மணி..!)  vil-timide2.gif

எடுக்கும் சேலையின் விலைகளையும், எண்ணிக்கையையும் பார்த்து அவர் மயங்கிவிழுந்துவிடுவார் என சாதுர்யமாக  நீங்கள் அவரை வீட்டிலோ, அக்கடையிலோ ஓரமாக உட்கார வைத்து மிக்சர் சாப்பிட வைத்தால் இதுதான் நடக்கும்..!  express5.gif

  • கருத்துக்கள உறவுகள்

கவனக்குறைவால் தவறுதலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.. ஆனால் இரண்டாண்டுகள் கழித்துதான் பொட்டியை திறந்து பார்த்தேன் என சொல்வது நம்ப முடியவில்லை.. !

ஏனெனில் பெண்கள் பட்டு சேலை எடுத்து வீட்டிற்கு வந்தவுடன், அதற்கு பொருத்தமான மேலாடை, நகைகள் என தையல் கடைக்காரனுக்கும்,நகைக் கடைக்கும் வூட்டுக்காரர்களை அலைக்கழிப்பது பெண்களின் வாடிக்கைதானே?
( கடமையிலிருந்து தவறாத அனுபவத்தில் சொல்கிறேன்..happyroule.gif)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

கவனக்குறைவால் தவறுதலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.. ஆனால் இரண்டாண்டுகள் கழித்துதான் பொட்டியை திறந்து பார்த்தேன் என சொல்வது நம்ப முடியவில்லை.. !

ஏனெனில் பெண்கள் பட்டு சேலை எடுத்து வீட்டிற்கு வந்தவுடன், அதற்கு பொருத்தமான மேலாடை, நகைகள் என தையல் கடைக்காரனுக்கும்,நகைக் கடைக்கும் வூட்டுக்காரர்களை அலைக்கழிப்பது பெண்களின் வாடிக்கைதானே?
(அனுபவத்தில்தான் சொல்கிறேன்..)

அம்மணி இதை பிரசுரித்த காலம்

எது என்பதை உற்று நோக்கவும்

அது

தமிழக மக்கள் தம் உரிமைக்காக போராடும் காலம்

அதற்கு ஈழ மக்களும் / புலம்பெயர்ந்த ஈழ மக்களும் ஆதரவு கொடுக்கும் காலம்

இந்தப் பதிவை முற்றிலும் உள் நோக்கத்துடன் தான்

இவர் பதிந்து உள்ளார்

ஏனென்றால் இவரது அன்பிற்குரிய அனைத்து சகாக்களும்

இப் போராட்டத்தை எதிர்பதில் முன்னுக்கு நிற்கினம்

அம்மணியும் தன் முகநூல் விருப்புகள் ஆதரவுகள் மூலம்

அவர்களுடன் தான் நிற்கின்றார்

உப்புச் சப்பற்ற தன் புத்தகம் விற்க தமிழகம் தேவை

ஆனால் அவர்களின் உரிமைப் போராட்டம்

தேவையில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

நீங்கள் சொல்வது விளங்க இல்லை. இரண்டு வருசங்களில் மூடி வைத்த சேலையின் நிறம் மாறிவிட்டதோ?

சேலையையே மாற்றிவிட்டார்கள்

6 hours ago, குமாரசாமி said:

தம்பி!!!!!!!!

என்ன ராசா?????

கதை விளங்கேல்லையோ? :(

நம்ம சங்கத்திலை இணைஞ்சு....எங்கடை கதையை கேட்டுப்பார்! :grin:
பூமி மட்டுமில்லை இந்த பிரபஞ்சமே கண்ணுக்கு முன்னாலை சுத்தும்.tw_glasses:

Smiley Symbol: Smiley Face Collection (10+ Pics)

2 hours ago, ராசவன்னியன் said:

இதற்குத்தான் சேலை வாங்கச் செல்லும்போது வூட்டுக்காரரையும் உடன் இருக்கும்படி அழைத்து செல்லவேண்டும் என்பது..(தரமான,சரியான சேலையை பாக்கெட்டுக்குள் வைக்கிறார்களாஎன கண்காணிக்க, வூட்டுக்காரர் அவசியம் அம்மணி..!)  vil-timide2.gif

எடுக்கும் சேலையின் விலைகளையும், எண்ணிக்கையையும் பார்த்து அவர் மயங்கிவிழுந்துவிடுவார் என சாதுர்யமாக  நீங்கள் அவரை வீட்டிலோ, அக்கடையிலோ ஓரமாக உட்கார வைத்து மிக்சர் சாப்பிட வைத்தால் இதுதான் நடக்கும்..!  express5.gif

இப்பிடி எல்லாம் நடப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறியளோ அண்ணா?

2 hours ago, ராசவன்னியன் said:

கவனக்குறைவால் தவறுதலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.. ஆனால் இரண்டாண்டுகள் கழித்துதான் பொட்டியை திறந்து பார்த்தேன் என சொல்வது நம்ப முடியவில்லை.. !

ஏனெனில் பெண்கள் பட்டு சேலை எடுத்து வீட்டிற்கு வந்தவுடன், அதற்கு பொருத்தமான மேலாடை, நகைகள் என தையல் கடைக்காரனுக்கும்,நகைக் கடைக்கும் வூட்டுக்காரர்களை அலைக்கழிப்பது பெண்களின் வாடிக்கைதானே?
( கடமையிலிருந்து தவறாத அனுபவத்தில் சொல்கிறேன்..happyroule.gif)

அவர்கள் சேலையை எப்படி மடிப்பார்கள் என்று தெரியும் தானே அண்ணா. நாம் ஒருமுறை விரித்தால் குலைந்துவிடும். மீண்டும் அந்தப் பெட்டியில்வைக்க முடியாது என்பது ஒன்று. அங்கிருந்து வந்ததன் பின்னர் அம்மா அப்பா இருவரும் அடுத்தடுத்து இறந்ததில் எந்த சில நிகழ்வுகளுக்கும் செல்லவில்லை.

2 hours ago, வைரவன் said:

அம்மணி இதை பிரசுரித்த காலம்

எது என்பதை உற்று நோக்கவும்

அது

தமிழக மக்கள் தம் உரிமைக்காக போராடும் காலம்

அதற்கு ஈழ மக்களும் / புலம்பெயர்ந்த ஈழ மக்களும் ஆதரவு கொடுக்கும் காலம்

இந்தப் பதிவை முற்றிலும் உள் நோக்கத்துடன் தான்

இவர் பதிந்து உள்ளார்

ஏனென்றால் இவரது அன்பிற்குரிய அனைத்து சகாக்களும்

இப் போராட்டத்தை எதிர்பதில் முன்னுக்கு நிற்கினம்

அம்மணியும் தன் முகநூல் விருப்புகள் ஆதரவுகள் மூலம்

அவர்களுடன் தான் நிற்கின்றார்

உப்புச் சப்பற்ற தன் புத்தகம் விற்க தமிழகம் தேவை

ஆனால் அவர்களின் உரிமைப் போராட்டம்

தேவையில்லை

ஐயோ பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

கவனக்குறைவால் தவறுதலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.. ஆனால் இரண்டாண்டுகள் கழித்துதான் பொட்டியை திறந்து பார்த்தேன் என சொல்வது நம்ப முடியவில்லை.. !

ஏனெனில் பெண்கள் பட்டு சேலை எடுத்து வீட்டிற்கு வந்தவுடன், அதற்கு பொருத்தமான மேலாடை, நகைகள் என தையல் கடைக்காரனுக்கும்,நகைக் கடைக்கும் வூட்டுக்காரர்களை அலைக்கழிப்பது பெண்களின் வாடிக்கைதானே?
( கடமையிலிருந்து தவறாத அனுபவத்தில் சொல்கிறேன்..happyroule.gif)

எங்க வீட்டில் 2014 இல் வாங்கிய 10 ற்கும் அதிகமான சேலைகள் இன்னமும் உடுத்தாமல் இருக்கிறது வன்னியர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதுனமா இருக்கு வேண்டி வந்த சேலையை  தோளுக்கு மேல போட்டு பார்க்காட்டி  இந்த பொம்புளையளுக்கு தூக்கமே வராதே இதுல வேற 2 வருடம் பார்க்கலையாம் 

ஆனால் பக்காவா குஞ்சத்துக்கு ஏமாந்துட்டயலே  சுமே  tw_blush:

8 hours ago, குமாரசாமி said:

தம்பி!!!!!!!!

என்ன ராசா?????

கதை விளங்கேல்லையோ? :(

நம்ம சங்கத்திலை இணைஞ்சு....எங்கடை கதையை கேட்டுப்பார்! :grin:
பூமி மட்டுமில்லை இந்த பிரபஞ்சமே கண்ணுக்கு முன்னாலை சுத்தும்.tw_glasses:

ரொம்பதான் அண்ணாச்சி நொந்து போயிருக்கு போல்   பட்டு புடைவையாலtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கிடை இப்படி சும்மா முசுப்பாத்தி (கொமடி) கதையல் சொல்ல அக்கா இருக்காக.

வீட்டு விலை ஏறீட்டுது. குடும்பம் பெரிசாகினாலும், பெரிய வீடாக மாற முடியவில்லை என்றதும், அரசாங்கமே, 9 மீட்டருக்கு உள்ளாக, அனுமதி இல்லாமல் கல் எஸ்ட்டென்ஷன் (நீட்சி) போடலாம் என்னும் போது, கடை யில் வாங்கி பொருத்தும் பிளாஸ்டிக் கான்சேவேடோரிக்கு, யாரோ வந்தான், அனுமதி வாங்கினியோ எண்டு கத்தினான் என்று கரடி விட்டா.

இப்ப என்னடா எண்டா, தினமும் பல கோடிகளில் வியாபாரம் நடக்கும் ஒரு இந்தியா எங்கும் கிளைகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம், சில்லறைத்தனமாக நடந்திருக்கும் என்கிறா.

வாங்கின கணத்தில் இருந்து, இரு வருடங்களில் வேறு பல விடயங்கள் நடந்திருக்கும். நீங்களும் யாருக்கும் கொடுத்து மறந்திருக்கலாம்.  

உங்களுக்கு சகோதரிமார் இல்லையோ?

உங்கள் ஆத்துக்காருக்கு சகோதரிமார் இருக்கினமோ எண்டு எங்களுக்கு சொன்னால், எங்கட விளப்பங்கள், அதுக்கேத்தமாரி போகுமெல்லோ (ஏதொ, நம்மால முடிஞ்சது).

இருந்தால், அவையண்ட, வீட்டுக்காரர் பகுதி கலியாணத்துக்கு வெளிக்கிட்டு போகேக்கையை, ஒருக்கா, ரோட்டில நிண்டு ரகசியமா பாருங்கோவன்.....

விடாதேயுங்காக... எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கொண்டு வந்து சேர்த்தனியல்... சும்ம்மா.... நினைக்கவே நமக்கே கோவம் வருகுது.

(இண்டைக்கு அத்தார் சரி) :grin: 

இவள் என்னுடைய காசை கரியாக்கிறாள் என்று உங்கட ஆத்துகாரனே எடுத்துக்கொன்டே அதே கடையில் குடுத்து மாத்திக்கொண்டுவந்து வைத்திருக்கலாம்

அல்லது, உங்கள் உற்ற தோழியே, உங்கள் வீட்டுக்கு வரும் வேளையில் (ஆட்டைய போட்டிருக்கலாம்), இவவுக்கு உந்தளவு காசுத்திமிரெடுத்து திரியிறா, சும்மா ஒருக்காலும் உடுக்காமல் வைத்திருக்கிறா எண்டு, வேறயொரு அதேமாதிரி சேலையை மாத்தி வத்திருக்கலாம்.

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் சகோதரி, தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தண்ணியை ஊத்தினது நாதமுனிக்கு தெரியாது போல , தப்பிட்டம்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

நல்லகாலம் சகோதரி, தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தண்ணியை ஊத்தினது நாதமுனிக்கு தெரியாது போல , தப்பிட்டம்....!  tw_blush:

அட இது வேற நடந்திருக்கா.....

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லோரும் சுமேயை கலாய்க்கிறாப்பல.......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அட இது வேற நடந்திருக்கா.....

அப்ப மண்சட்டில மீன் சமைச்சதும் உங்களுக்கு தெரியாதா, நான்தான் தெரியாமல் உளறுகிறேனோ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வைரவன் said:

அம்மணி இதை பிரசுரித்த காலம்

எது என்பதை உற்று நோக்கவும்

அது

தமிழக மக்கள் தம் உரிமைக்காக போராடும் காலம்

அதற்கு ஈழ மக்களும் / புலம்பெயர்ந்த ஈழ மக்களும் ஆதரவு கொடுக்கும் காலம்

இந்தப் பதிவை முற்றிலும் உள் நோக்கத்துடன் தான்

இவர் பதிந்து உள்ளார்

ஏனென்றால் இவரது அன்பிற்குரிய அனைத்து சகாக்களும்

இப் போராட்டத்தை எதிர்பதில் முன்னுக்கு நிற்கினம்

அம்மணியும் தன் முகநூல் விருப்புகள் ஆதரவுகள் மூலம்

அவர்களுடன் தான் நிற்கின்றார்

உப்புச் சப்பற்ற தன் புத்தகம் விற்க தமிழகம் தேவை

ஆனால் அவர்களின் உரிமைப் போராட்டம்

தேவையில்லை

வைரவர்....

சும்மா... சீரியஸ் ஆகக் கூடாது...

எல்லாம் ஒரு தமாசு தானே.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நல்லகாலம் சகோதரி, தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தண்ணியை ஊத்தினது நாதமுனிக்கு தெரியாது போல , தப்பிட்டம்....!  tw_blush:

14 minutes ago, suvy said:

அப்ப மண்சட்டில மீன் சமைச்சதும் உங்களுக்கு தெரியாதா, நான்தான் தெரியாமல் உளறுகிறேனோ....!  tw_blush:

எப்படி இப்படி எல்லாம்.இன்னும் சிரிச்சு முடியல.

27 minutes ago, suvy said:

அப்ப மண்சட்டில மீன் சமைச்சதும் உங்களுக்கு தெரியாதா, நான்தான் தெரியாமல் உளறுகிறேனோ....!  tw_blush:

4 hours ago, suvy said:

நல்லகாலம் சகோதரி, தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தண்ணியை ஊத்தினது நாதமுனிக்கு தெரியாது போல , தப்பிட்டம்....!  tw_blush:

இதுமட்டுமா இன்னும் நிறைய இருக்கு...tw_blush: கொஞ்சம் நேரம் எடுத்து தேடினால் எல்லா லிங்கும் வரும் யாழில்..:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இடைக்கிடை இப்படி சும்மா முசுப்பாத்தி (கொமடி) கதையல் சொல்ல அக்கா இருக்காக.

வீட்டு விலை ஏறீட்டுது. குடும்பம் பெரிசாகினாலும், பெரிய வீடாக மாற முடியவில்லை என்றதும், அரசாங்கமே, 9 மீட்டருக்கு உள்ளாக, அனுமதி இல்லாமல் கல் எஸ்ட்டென்ஷன் (நீட்சி) போடலாம் என்னும் போது, கடை யில் வாங்கி பொருத்தும் பிளாஸ்டிக் கான்சேவேடோரிக்கு, யாரோ வந்தான், அனுமதி வாங்கினியோ எண்டு கத்தினான் என்று கரடி விட்டா.

இப்ப என்னடா எண்டா, தினமும் பல கோடிகளில் வியாபாரம் நடக்கும் ஒரு இந்தியா எங்கும் கிளைகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம், சில்லறைத்தனமாக நடந்திருக்கும் என்கிறா.

வாங்கின கணத்தில் இருந்து, இரு வருடங்களில் வேறு பல விடயங்கள் நடந்திருக்கும். நீங்களும் யாருக்கும் கொடுத்து மறந்திருக்கலாம்.  

உங்களுக்கு சகோதரிமார் இல்லையோ?

உங்கள் ஆத்துக்காருக்கு சகோதரிமார் இருக்கினமோ எண்டு எங்களுக்கு சொன்னால், எங்கட விளப்பங்கள், அதுக்கேத்தமாரி போகுமெல்லோ (ஏதொ, நம்மால முடிஞ்சது).

இருந்தால், அவையண்ட, வீட்டுக்காரர் பகுதி கலியாணத்துக்கு வெளிக்கிட்டு போகேக்கையை, ஒருக்கா, ரோட்டில நிண்டு ரகசியமா பாருங்கோவன்.....

விடாதேயுங்காக... எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கொண்டு வந்து சேர்த்தனியல்... சும்ம்மா.... நினைக்கவே நமக்கே கோவம் வருகுது.

(இண்டைக்கு அத்தார் சரி) :grin: 

இன்னும் மனிசனுக்குத் தெரியாது. தெரிஞ்சா ஒவ்வொருநாளும் உதைச் சொல்லியே சுப்பிரபாதம் நடக்கும்.

9 hours ago, MEERA said:

எங்க வீட்டில் 2014 இல் வாங்கிய 10 ற்கும் அதிகமான சேலைகள் இன்னமும் உடுத்தாமல் இருக்கிறது வன்னியர்.

நல்ல காலம் நீங்கள் சொன்னது.அல்லாட்டிச் சனம் என்னை நம்பாது.

6 hours ago, suvy said:

நல்லகாலம் சகோதரி, தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தண்ணியை ஊத்தினது நாதமுனிக்கு தெரியாது போல , தப்பிட்டம்....!  tw_blush:

நல்லாய் இருங்கப்புtw_blush:tw_blush:

6 hours ago, Knowthyself said:

இவள் என்னுடைய காசை கரியாக்கிறாள் என்று உங்கட ஆத்துகாரனே எடுத்துக்கொன்டே அதே கடையில் குடுத்து மாத்திக்கொண்டுவந்து வைத்திருக்கலாம்

அல்லது, உங்கள் உற்ற தோழியே, உங்கள் வீட்டுக்கு வரும் வேளையில் (ஆட்டைய போட்டிருக்கலாம்), இவவுக்கு உந்தளவு காசுத்திமிரெடுத்து திரியிறா, சும்மா ஒருக்காலும் உடுக்காமல் வைத்திருக்கிறா எண்டு, வேறயொரு அதேமாதிரி சேலையை மாத்தி வத்திருக்கலாம்.

Image result for angry face

6 hours ago, MEERA said:

அட இது வேற நடந்திருக்கா.....

images?q=tbn:ANd9GcRBhaa1ZYCx8YhVRq05Ih1CL6FmUZyIFz7eaCbyBcoqVoMSRVZ4Uj3JTw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

எப்படி இப்படி எல்லாம்.இன்னும் சிரிச்சு முடியல.

நல்லாச் சிரியுங்கோ சிரியுங்கோ

2 hours ago, நவீனன் said:

இதுமட்டுமா இன்னும் நிறைய இருக்கு...tw_blush: கொஞ்சம் நேரம் எடுத்து தேடினால் எல்லா லிங்கும் வரும் யாழில்..:grin:

வாங்கப்பு ......வாங்கோ

4 hours ago, வல்வை சகாறா said:

என்னப்பா எல்லோரும் சுமேயை கலாய்க்கிறாப்பல.......

அப்பிடியா நினைக்கிறீங்கள் ......Image result for thinking smileys

6 hours ago, MEERA said:

அட இது வேற நடந்திருக்கா.....

Related image

எல்லாத்தையும் விடக் கொடுமை என்ன தெரியுமே. மனிசன் புதிசா வாங்கின சீலையைக் கட்டு எண்டு ஒற்றைக் காலில நிக்குது. சொல்லவும் முடியாமல் கட்டவும் முடியாமல் பாவம் ..... சுமே.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சேலைகள் புது உடப்புகள் வாங்கினால் யாரும் கலியாணத்தக்க கூப்புடுவானா புது வீட்டுக்கு கூப்புடுவானா என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் பேசாமல் கோவில் குளத்துக்கு கணவனையும் கூட்டிக் கொண்டு போங்கம்மா.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இனிமேல் சேலைகள் புது உடப்புகள் வாங்கினால் யாரும் கலியாணத்தக்க கூப்புடுவானா புது வீட்டுக்கு கூப்புடுவானா என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் பேசாமல் கோவில் குளத்துக்கு கணவனையும் கூட்டிக் கொண்டு போங்கம்மா.

எல்லாம், சரவணபவன் எண்னெய் முறுவலால வந்த பிரச்சனை.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் மனிசனுக்குத் தெரியாது. தெரிஞ்சா ஒவ்வொருநாளும் உதைச் சொல்லியே சுப்பிரபாதம் நடக்கும்.

அதுக்குத் தான் ஐடியா தந்தமே.

யாருக்கோ தூக்கிக் குடுத்துட்டியலே... உங்களுக்கே நல்லா இருக்கா என்று, நீங்கள் சகஸ்ரநாமத்தில விடுறது தானே...

குடுத்தது தான் பருவாயில்ல, நம்ம லெவலுக்கே இல்லாத, பிச்சக்கார சீலைய வைச்சது தான், நான் யாழில போய் குளற வேண்டியதாப் போச்சு... என்று இன்னும் விடுங்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/01/2017 at 8:44 PM, ஈழப்பிரியன் said:

இனிமேல் சேலைகள் புது உடப்புகள் வாங்கினால் யாரும் கலியாணத்தக்க கூப்புடுவானா புது வீட்டுக்கு கூப்புடுவானா என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் பேசாமல் கோவில் குளத்துக்கு கணவனையும் கூட்டிக் கொண்டு போங்கம்மா.

சரியுங்கோ

On 21/01/2017 at 8:50 PM, Nathamuni said:

எல்லாம், சரவணபவன் எண்னெய் முறுவலால வந்த பிரச்சனை.

அதுக்குத் தான் ஐடியா தந்தமே.

யாருக்கோ தூக்கிக் குடுத்துட்டியலே... உங்களுக்கே நல்லா இருக்கா என்று, நீங்கள் சகஸ்ரநாமத்தில விடுறது தானே...

குடுத்தது தான் பருவாயில்ல, நம்ம லெவலுக்கே இல்லாத, பிச்சக்கார சீலைய வைச்சது தான், நான் யாழில போய் குளற வேண்டியதாப் போச்சு... என்று இன்னும் விடுங்கோ...

Image result for moving angry animation

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விடக் கொடுமை என்ன தெரியுமே. மனிசன் புதிசா வாங்கின சீலையைக் கட்டு எண்டு ஒற்றைக் காலில நிக்குது. சொல்லவும் முடியாமல் கட்டவும் முடியாமல் பாவம் ..... சுமே.

மனிசி ஹீல்ஸ் போட்டால் நான் எப்பவும் ஒரு மீட்டர் தள்ளித்தான் நடக்கிறது. எதுக்கு வம்பு.....! :unsure:

அக்காவின் வீட்டு ரகசியங்களை வெளியில் சொல்வதை மென்மையாக கண்டிக்கிறேன் இன்னும் கொஞ்சம் சொல்லுங்களன் அண்ணைtw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.