Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம் – கிளைமோர் தாக்குதல் நடத்த இரண்டு முறை முயற்சி

Featured Replies

sumanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு முன்னாள் போராளிகளை கைது செய்த கிளிநொச்சி காவல்துறையினரிடம் இதுதொடர்பாக, தி ஹிந்து, விசாரித்த போது, இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவே கையாள்வதாக தெரிவித்துள்ளனர். எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான- தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டவாளர் ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பங்கேற்கவிருந்த நிகழ்வு ஒன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட சுமமந்திரன்,  “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை ரத்து செய்யவில்லை.அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன.

பின்னரே, ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி ஒன்றுக்கு தயாராக இருந்தார்கள் என்று  நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டேன்.

புனர்வாழ்வு அளிக்கப்படட முன்னாள் போராளிகள் பலர் வாழ்வதற்காக போராடுகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம்.

அத்தகைய உதவிகள் கிட்டாத போது,  அரசியல் நோக்குடன் செயற்படுவோரினால் அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுமந்திரனை டிசெம்பர் 12 மற்றும் ஜனவரி 13ஆம் நாள்களில் தாளையடி- சோரன்பற்று வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி கொலை செய்ய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், எனினும் குறிப்பிட்ட நாள்களில் சுமந்திரன் அந்தப் பாதையால் பயணிக்காததால் அவர் தப்பியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/01/28/news/20991

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியில்  அரச  புலநாய்வின் மீது பலத்த சந்தேகம் உள்ளது. குட்டையை குழப்புவதில் அரசு முன்னின்று செயற்படுகிறது. கைதுகளை மேற்கொள்ளவும் தங்கு தடையின்றி மக்களை சோதிக்கவும் இப்படியான புலுடாக்களை அரச படைகள் மேற்கொள்கின்றன. சுமந்திரனை கொல்ல யாருக்கு என்ன அவசரம் இப்போ? போராளிகள் மிகவும் கஸ்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ கிளைமோருடன் திரிகிறார்கள் என்பது நம்பும் படியாகவா உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை  இவ்வாறு இழிவு படுத்துவது தான் 

அதிகம் வலிக்கிறது

இவரெல்லாம் இலக்கா?

இவருக்கெல்லாம் கிளைமோரா????

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

sumanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு முன்னாள் போராளிகளை கைது செய்த கிளிநொச்சி காவல்துறையினரிடம் இதுதொடர்பாக, தி ஹிந்து, விசாரித்த போது, இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவே கையாள்வதாக தெரிவித்துள்ளனர். எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான- தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டவாளர் ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் பங்கேற்கவிருந்த நிகழ்வு ஒன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்ட சுமமந்திரன்,  “பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை ரத்து செய்யவில்லை.அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன.

பின்னரே, ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி ஒன்றுக்கு தயாராக இருந்தார்கள் என்று  நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டேன்.

புனர்வாழ்வு அளிக்கப்படட முன்னாள் போராளிகள் பலர் வாழ்வதற்காக போராடுகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம்.

அத்தகைய உதவிகள் கிட்டாத போது,  அரசியல் நோக்குடன் செயற்படுவோரினால் அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுமந்திரனை டிசெம்பர் 12 மற்றும் ஜனவரி 13ஆம் நாள்களில் தாளையடி- சோரன்பற்று வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி கொலை செய்ய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், எனினும் குறிப்பிட்ட நாள்களில் சுமந்திரன் அந்தப் பாதையால் பயணிக்காததால் அவர் தப்பியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/01/28/news/20991

இப்போதைய இலக்கு தமிழகம்தான் .............
இவர்கள் சுற்றி வருகிறார்கள்.

இதை புரியும் நிலையில் தமிழகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

2017 இன் மிகப்பெரிய நகைப்பு என்றால் இதுதான்!

சிங்களம் கொம்பு சீவுகிறது. தமிழனை வைத்துத் தமிழன் தலையறுக்க. தமிழினம் விழிப்போடிருத்தல் அவசியமானதும் அவசரமானதுமாகும்.

Edited by nochchi

சிங்களம் இந்த பொய் புனைவின் மூலம் ஒரு உண்மையை சொல்கிறது, தமிழருக்குத் துரோகமிழைத்து , சிங்களத்துக்கு துணை போவோரை புலிகள் தண்டிப்பார்கள், இந்த புனைவிற்கு நம்பகத் தண்மையை கூட்ட வேண்டுமெனில் , உண்மையிலேயே புலிகளால் தண்டிக்கப் படக்கூடிய ஒருவரைத் தான் முன்னிறுத்த வேண்டும் , அது தான் அவர்கள் சுமந்திரனை முன்னிறுத்தியுள்ளனர், தமிழனுக்கு சுமந்திரன் எவ்வளவு துரோகம் செய்கிறார் என தமிழரை விட சிஙகளத்துக்கு நன்றாகவே தெரியும்.
சுமந்திரனை ஒரு  மிருகத்திற்கு ஒப்பிட்டு திட்டினால் அந்த மிருகம் களங்கப் பட்டுவிடும் .... அந்த அளவிற்கு அழுக்கு நிறைநதவர்  இவர்..... தமிழரும், தமிழ்த் தாயகமும் சிதைக்கப் பட்டு சின்னாபின்னமாகி இருக்கையில் " போரை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினருக்கு நன்றி " என தெரிவித்து தனது பாரளுமன்ற உரையை தொடக்கியவர் தான் இந்த சுமந்திரன், சிங்கள இராணுவ விசுவாசத்தின் உச்ச கட்டமாக  இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரைத் தன் கோட்டில் அணிந்து பாரளுமன்றம் சென்ற ஒரு மிருகம் இவர்.......

தமிழ் நாட்டின் இளைஞ்சர் களின் எழுச்சியைக் கண்டு ஆடிப் போயிருக்கும் ஆரிய அதிகார மையம் , புலிகளை இலங்கையில் மீண்டும் உருவாக்கி , அவர்களை தமிழ் நாட்டுடன் கோர்த்துவிட்டு  தமிழக இளைஞ்சர்களையும் நசுக்க முனையும் ....... தமிழ் நாட்டினர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது....  இந்த பொய் செய்தியை முன்னிருத்தும்  தி ஹிந்து வின் நோக்கம் யாவரும் அறிந்ததே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கோ ஏதோ ஒரு விடயம் ஆகவேண்டும் போலிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுட்டு பழியை போட ஆள் தேடுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டுட்டு பழியை போட ஆள் தேடுறாங்கள்.

நடந்தால் , சந்தோசம் 

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய முயற்சி : பாதுகாப்பிற்கு பொலிஸாரே பொறுப்பு.!

Published by RasmilaD on 2017-01-29 09:47:55

(க.கமலநாதன்)

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்ற பின்னர் இன்றும் 4 ஆயிரம் புனர்வாழ்வளிக்கப்படாது விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர் என பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.

sumanthiran-575-01.jpg

ஆனால் இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்யும் முயற்சியில் முன்னால் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்வதற்கு முன்னாள் விடுதலை புலிகள் இயக்க நால்வர் திட்டமி்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் போதே  இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் புனவர்வாழ்வளிக்கப்பட்டு 4 விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வரே இவ்வாறு திட்டம் தீட்டியிருந்தாகவும் இம்மாதம் 13, 20 மற்றும் 24 ஆம் திகதிகளில் இவர்கள் கொலை செய்ய முற்பட்டு அது சாத்தியப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிப்பது எமது பொறுப்பல்ல அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது எனும் போது அது தொடர்பில் பொலிஸார் தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறிருக்கின்ற போது பாதுகாப்பு தலைமையக்கதின் தரவுகளின் பிரகாரம் யுத்தம் முடிவுற்று 6 வருடங்களுக்கு மேலாகியும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 4000 பேர் உள்ளனர் அவர்களால் தான் மேற்படி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களு்ககு எதிராக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

ஆனால் அது உண்மைக்கு புறம்பான விடயம் அவ்வாறு வெளியாகும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். அவர்கள் இவ்வாறன செயற்பாடுளில் ஈடுபட்டதாக பாதுகாப்பு மையத்திற்கும் தற்போது வரையில் தகவல்கள் கிடைக்கபெறவில்லை.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/15961

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Athavan CH said:

தமிழனுக்கு சுமந்திரன் எவ்வளவு துரோகம் செய்கிறார் என தமிழரை விட சிஙகளத்துக்கு நன்றாகவே தெரியும்.

தெளிவாக வெளிப்படுத்தியும் விட்டான். மிச்சம் மீதி இருக்கும் இளைஞர்களுக்கு ஆபத்து .

இது ஒன்றே போதும் அப்புக்காத்துக்கு,  முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பும் வேலைக்கு சிங்களவனுக்கு  ஓடியோடி உழைக்க 

  • தொடங்கியவர்

சுமந்திரன் படுகொலை சதித்திட்டத்தின் பகீர் பின்னணி..! கொலை சதிக்கான காரணம் இதுவா..?

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தேசிய பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்ற அச்சத்தில் சில அடிப்படை வாத சக்திகளே தன்னைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய திட்டம்தீட்டப்பட்டிருந்த சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டதாக தெரிவித்து இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸார் குறிப்பிட்ட விடயங்களே தனக்குத் தெரியும்.

கடந்த 23ஆம் திகதி பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் தனக்கு அச்சுறுத்தல் காணப்படுவதை உறுதிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தகவல் வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும். தன்னை எதற்காக கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தெரிவித்து இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/special/01/133631?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு..... பச்சை  பனை மட்டையாலை, நாலு  சாத்து சாத்திறதை விட்டுட்டு.....  
கிளை மோர்  தாக்குதல் என்று,  பெரிய லெவலில் கொண்டு போகக்  கூடாது.
கிளை மோருக்குகே.... அவமானம்.:grin:

  • தொடங்கியவர்

முன்னாள் போராளிகள் சுமந்திரனை படுகொலை செய்ய முயன்றாத பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை ; சி.வி.விக்னேஸ்வரன்

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முயன்றாத பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

vikkines-2-600x382.jpg

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை  படுகொலை செய்ய, முன்னாள் போராளிகள் சிலர் சதி திட்டம் தீட்டியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்வதற்கு முயன்றதாக அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதைப்பொருட்களை வைத்திருந்தார்கள், வேறு ஏதோ வைத்திருந்தார்கள் என்றே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த விடயத்தில்  எந்தளவு உண்மையுள்ளது என எண்ணத்தோன்றுகின்றது . இதற்கு முன்பும் விபூசிகாவின் தாயாரை கைது செய்யும்போதும் கூறினர் ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லையே எனவே  வடமாகாணத்தில் படையினரை தொடர்ந்தும் நிலை கொள்ள செய்வதற்கான முயற்சியா எனவும் எமக்கு சந்தேகம் உள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/16258

  • கருத்துக்கள உறவுகள்

துரைக்கு.. வருமானம் குறைஞ்சிட்டுப் போல. உள்ள தூக்கி ஒரு 100 பேரைப் போட்டால் தானே... வெளில எடுத்துவிடுற பிழைப்பும் ஓடும் தூக்குச்சட்டி அரசியலும் வலுக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎.‎01‎.‎2017 at 11:08 PM, Athavan CH said:

சுமந்திரனை ஒரு  மிருகத்திற்கு ஒப்பிட்டு திட்டினால் அந்த மிருகம் களங்கப் பட்டுவிடும் .... அந்த அளவிற்கு அழுக்கு நிறைநதவர்  இவர்..... தமிழரும், தமிழ்த் தாயகமும் சிதைக்கப் பட்டு சின்னாபின்னமாகி இருக்கையில் " போரை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினருக்கு நன்றி " என தெரிவித்து தனது பாரளுமன்ற உரையை தொடக்கியவர் தான் இந்த சுமந்திரன், சிங்கள இராணுவ விசுவாசத்தின் உச்ச கட்டமாக  இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரைத் தன் கோட்டில் அணிந்து பாரளுமன்றம் சென்ற ஒரு மிருகம் இவர்.......

இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களில்  தமிழர்களைக் கொன்றுகுவித்து அவர்கள் வாழ்விடங்களையும், வியாபார நிலையங்களையும் கொள்ளையிட்ட சம்பவங்களில் முசுலீம்களுக்குப் பாரிய பங்குண்டு. அந்தச் சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு... யாழ்ப்பாணத்திலிருந்து முசுலீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மட்டும் எவரும் மறந்துவிடாமல் நினைவில் வைத்திருக்குமாறு செய்யும் கைங்கரியத்தையும் மிக நன்றாகவே செய்து வருபவரும் இவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலையான் அடிக்க இரும்பெதற்கு????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புலவர் said:

இலையான் அடிக்க இரும்பெதற்கு????

நல்லவர்களை தரக்குறைவாக பேசாதீர்கள்..tw_tounge_xd:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.