Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் சலார், சிதிலம் இப்படிப்பட்ட சொற்களை உபயோகித்து எவ்வளவு காலம்.  

80 களில் கொண்டுபோய் விட்டிருக்கிறீர்கள் கிருபன் ???

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமாத்தான் போவுது. தொடருங்கோ கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகப் போகின்றது!

பெட்டைக்குயிலன்..படப்போகும் பாட்டை நினைக்க...கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது!

அல்லது அடிக்கப் போற ஆக்களுக்கு...மாறி நடக்கப் போகுதோ தெரியாது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயுருவி, கூப்பிட்டுக் குத்தி, காவிளாய் எல்லாவற்றையும் நான் இதுவரை மறந்தே போயிருந்தேன். உண்மையாகவே அந்த பத்தைகளையும் மரங்களையும் நினைக்கும் போது இப்பவும் கண் கலங்குது. எல்லாத்தையும் இழந்து விட்டது போல உணர்வு......!  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுபேஸ் said:

2011 இல இருட்டடி பற்றி ஒரு நகைச்சுவைக் கதை எழுதி இருந்தேன்... அதில் கிருபன் அண்ணா இப்படி எழுதி இருந்தார்..

"நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!"

இப்பொழுது 2017... கிட்டத்தட்ட ஆறுவருசம் ஆகி இருக்கு எழுதி முடிக்க... தும்பளையான் பழையகதைக்கு இன்று லைக் போட்டிருந்ததால் என்ன ஏது என்று பார்க்க போன இடத்தில் சிக்கியது..

இணைப்பு இது... https://www.yarl.com/forum3/topic/95751-நான்-அவனில்லை/


பெட்டைக்குயிலனுக்கு செவிட்டப்பொத்தி அடிச்சதில அநேகமா அவனுக்கு காதுகேக்காமா போயிருக்குமோ தெரியல அடுத்த தொடரில...

அப்பிடி நடந்திருந்தா அடுத்தமுறை வெட்டையால போகேக்க பொடியளின்ர வாய் அசையுறத வச்சுத்தான் என்ன கத்துறாங்கள் எண்டு மட்டுப்பிடிச்சு இந்தவாட்டி நலமெடுத்திருப்பான்...

இல்லை எண்டா ஒண்டில் வெட்டைக்கு மறுக கிறுகி இருக்கமாட்டான்.. tw_bawling:

சுபேஸ் கூட வந்து எட்டிப் பார்த்திருக்கார் :)

சுபேஸின் திரியில் குறிப்பிட்டமாதிரி கையெழுத்தில எழுதிக் குறையாகக் கன காலம் (12 வருடம்!!!) இருந்தது. நேரம் கிடைக்காததால் தொடர்ந்து எழுதி முடிக்கவில்லை.

யாழின் பிறந்தநாளுக்கும் எழுதாவிட்டால் பிறகு எப்ப எழுதுவது என்றுதான் தூசிதட்டி, நிமிர்த்தி எழுதத் தொடங்கினேன். இப்ப கையெழுத்தைவிட தட்டச்சு வேகம் கூட என்பதாலும் Notepad++ இல் எழுதுவதாலும் மூளையின் வேகத்திற்கு தட்டச்சு செய்யமுடிகின்றது.

கதையின் முடிவு விரைவில் வரும். ஜவ்வுமிட்டாய் போல இழுக்க மனம் இல்லாவிட்டாலும் ஒரு சட்டகத்திற்குள் எழுதவேண்டும் என்று கட்டாயமில்லைத்தானே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavallur Kanmani said:

கிருபன் மிகச் சுவாரசியமாக கிராமியச் சூழலையும் அங்கு நடைபெறும் சிறுபராய சம்பவங்களையும் எம் கண்முன் நிகழ்ச்சிப் படுத்தியுள்ளார். பாவம் பெட்டைக்குயிலன் இருட்டடி  வாங்குவது தெரியாமல் இரண்டாம் பாகத்தில் வரப் போகிறான். யாராவது காப்பாத்துங்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.

பெட்டைக் குயிலனை இரண்டாம் பாகத்தில் உள்ளே விடவில்லை அக்கா! ஆனால் அடுத்த பாகம்தான் நிறைவுப் பகுதி!

11 hours ago, சண்டமாருதன் said:

நேற்று இரவு கைபேசியில் உங்கள் கதையை பயணத்தின் போது படித்தேன். மிகவும் சுவார்ஸயமாக இருந்தது. சிறு வயதில் மாயாவி காமிக்ஸ்சில் ஆரம்பித்து ராஜேஸ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் என பல நுற்றுக்கணக்கான கிரைம் நாவல்கள் திரிலர்கள் என படித்தது ஞாபகம் வந்தது. அதன் ஆர்வாம் அடுத்து என்ன என்பதிலேயே இருக்கும். இதிலும் அவ்வாறு ஒரு ஆர்வரம் அடுத்து பெட்டைக் குயிலன் என்ன ஆனான்? மண்மணத்தோடு சேர்ந்த உங்கள் கதை ஏதோ பரிட்சயமான எழுத்தாளரின் கதையை படிப்பது போல் இயல்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். 

சுவாரசியமாக எழுதவேண்டும் என்று நினைத்தது உண்மைதான். 

பலரது நாவல்களை, சிறுகதைகளை தொடர்ந்தும் வாசிப்பதால் விபரித்து எழுதவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது எப்பவும் கடினமாகத்தான் இருக்கின்றது.

6 hours ago, MEERA said:

சத்தம் சலார், சிதிலம் இப்படிப்பட்ட சொற்களை உபயோகித்து எவ்வளவு காலம்.  

80 களில் கொண்டுபோய் விட்டிருக்கிறீர்கள் கிருபன் ???

எனக்குத் தெரிந்த தமிழ் 80களில் உறைந்துபோன தமிழ்தான். இலண்டனுக்கு 70களில் வந்த எனது நண்பனின் தாய், தகப்பனாரின் தமிழைக் கேட்டபோது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

 

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுவாரசியமாத்தான் போவுது. தொடருங்கோ கிருபன்.

அடுத்த பகுதியில் முடிந்துவிடும் :)

5 hours ago, புங்கையூரன் said:

கதை நன்றாகப் போகின்றது!

பெட்டைக்குயிலன்..படப்போகும் பாட்டை நினைக்க...கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது!

அல்லது அடிக்கப் போற ஆக்களுக்கு...மாறி நடக்கப் போகுதோ தெரியாது!

 

கதையின் முடிவைத் தீர்மானித்தபின்னர் மிச்சத்தை எழுதினேன் <_<

4 hours ago, suvy said:

நாயுருவி, கூப்பிட்டுக் குத்தி, காவிளாய் எல்லாவற்றையும் நான் இதுவரை மறந்தே போயிருந்தேன். உண்மையாகவே அந்த பத்தைகளையும் மரங்களையும் நினைக்கும் போது இப்பவும் கண் கலங்குது. எல்லாத்தையும் இழந்து விட்டது போல உணர்வு......!  :unsure:

எனக்கு ஆமணக்கு என்ற சொல் மறந்துவிட்டிருந்தது. போன வெள்ளிக்கிழமை அந்த ஒரு சொல்லைத் தேடிக் கண்டுபிடிக்க பல மணித்தியாலங்கள் செலவழித்தேன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பெட்டைக் குயினுக்கு இருட்டடி போடுவதற்கே இவ்வளவு திட்டம் என்றால் ஆமிக் காம்புகளை அடிக்க புலிகள் எவ்வளவு திட்டம் போட்டு என்ன பாடுபட்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கள் ஒத்திகையின் ஆர்ப்பாட்டாத்ரதப் பாக்கும் போது அடி மாறி வேறு ஒருவருக்கு விழும் போல இருக்கு. மற்றது மேல மீரா சொன்னது போல பல பழைய சொல்லாடல்கள் என்னை பின்னோக்கி இழுத்து செல்கிகறது.மொத்தத்தில் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் பெட்டைக் குயினுக்கு இருட்டடி போடுவதற்கே இவ்வளவு திட்டம் என்றால் ஆமிக் காம்புகளை அடிக்க புலிகள் எவ்வளவு திட்டம் போட்டு என்ன பாடுபட்டிருப்பார்கள்.

உண்மைதான். அப்பால் ஒரு நிலம் நாவலை வாசித்தபோது திட்டமிடலின் நுணுக்கங்களையும் அதற்கான தயாரிப்புக்களுக்காகத் தியாகம் செய்தவர்களையும் பார்த்து பிரமிக்கத்தான் முடிந்தது. இத்தனை திறமைகளையும் கொண்டவர்களை இழந்த சமூகமாகிவிட்டோம்.

இந்தக் கதையில் போட்டதிட்டம் வெறும் கற்பனைதான்?

11 hours ago, சுவைப்பிரியன் said:

கிருபன் உங்கள் ஒத்திகையின் ஆர்ப்பாட்டாத்ரதப் பாக்கும் போது அடி மாறி வேறு ஒருவருக்கு விழும் போல இருக்கு. மற்றது மேல மீரா சொன்னது போல பல பழைய சொல்லாடல்கள் என்னை பின்னோக்கி இழுத்து செல்கிகறது.மொத்தத்தில் மிக்க நன்றி.

முடிவுப் பகுதியில் எல்லாம் வெளிப்படும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்னும் எழுதி முடியேல்லையோ ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன இன்னும் எழுதி முடியேல்லையோ ???

எழுதி முடித்தாயிற்று. ஆனால் சில அலட்டல்களை வெட்டிப்போட்டு போடவுள்ளேன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

எழுதி முடித்தாயிற்று. ஆனால் சில அலட்டல்களை வெட்டிப்போட்டு போடவுள்ளேன்.?

கதையை  வெட்டத்தொடங்கினால் முழுமை சிதைந்து போய்விடும் ஐயா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டிலியன்,பாலகுமாரன் போன்றவர்களது கதையை வாசித்து,வாசித்து கிருபனது எழுத்திலும் முக்காவாசிக்கு மேல் வர்ணனைகள்tw_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

சாண்டிலியன்,பாலகுமாரன் போன்றவர்களது கதையை வாசித்து,வாசித்து கிருபனது எழுத்திலும் முக்காவாசிக்கு மேல் வர்ணனைகள்tw_confused:

இவர்களையெல்லாம் 18க்குப் பிறகு வாசித்ததில்லை!?

ஈழத்தமிழர்கள் கதைகளில் விபரிப்பு இல்லையென்று இந்திய எழுத்தாளர் ஒருத்தர் சொன்ன ஞாபகம்.

 

 

ஜெயமோகன் கூட எப்படி கதை எழுதுவது சொல்லியுள்ளார்

http://www.jeyamohan.in/336#.WNvuXDx4VR4

Quote

முதல் காரணம், வாசகனின் கற்பனைக்கு அதிக இடம் கொடுப்பதேயாகும். மற்ற கதைகளில் கதையின் மையத்தை புரிந்து பெற்றுக்கொள்ளும் இடத்தில் வாசகன் இருக்கிறான். ஆனால் சிறுகதையில் வாசகனை கதைக்குள் இழுக்கிறான் ஆசிரியன். வாசகன் கதைமுடிவைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து அவனை திகைக்க வைக்கிறான். கதைவாசிப்பு என்ற செயலில் வாசகன் ஆற்றும் பணி மேலும் அதிகமாக ஆகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 3

 

குருவியன் வெட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இலந்தை மரத்தோடு அண்டிய அன்னமுன்னா, அணிஞ்சில் பத்தைக்குள் சைக்கிளை வெளியே தெரியாமல் மறைத்துவிட்டு மற்றவர்களுக்காக காத்திருந்தேன்.  மூவரும் ஒருவர் பின் ஒருவராக நேரம் சுணங்கமுன்னரே வந்து சேர்ந்தனர். புக்கையரும் சொக்கியும் இருட்டில் தெரியாத நிறத்தில் உடுப்புக்களைப் போட்டுத் தயாராக வந்திருந்தார்கள். ஆனால் கட்டையன் வழமையான வெள்ளைச் சேர்ட்டுடன் வந்திருந்தான். இருட்டில வெள்ளைச் சேர்ட் வெளிச்சமாகத் தெரியும் என்று யோசிக்காமல் மொக்கன் மாதிரி வந்திருக்கின்றான் என்று உள்ளே கோபப்பட்டாலும், கன கச்சிதமாக திட்டம் போடாதது என்ரை கவனக்குறைவு என்பதால் அவனை சேர்ட்டைக் கழற்றச் சொன்னேன். கட்டையன் சேர்ட்டைக் கழற்றி சாரத்துக்குள் வைத்து சாரத்தை மடித்துக்கட்டி மந்திபோல இளித்தான்.  ஏற்கனவே போட்ட திட்டத்தை மீண்டும் ஒருமுறை சுருக்கமாகச் சரிபார்த்துக்கொண்டோம்.  ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் எப்ப செய்யவேண்டும் என்பதில் ஒரு குழப்பமும் இருக்கவில்லை.
 
 நன்றாக இருட்டுப்பட்டாலும் முன்னிலவுக் காலமாக இருந்ததால் நிலவு வெளிச்சத்தில் குருவியன் வெட்டை  குளித்துக்கொண்டிருந்தது.  நிலவொளியில் வெட்டையில் நிற்பது அதனூடாகப் போய் வருபவர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் நாங்கள் முன்னரே தீர்மானித்த பனங்கூடல் ஒற்றையடிப் பாதையின் வளைவுக்கு வேகமாக ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசாது நடந்தோம்.  எமது குதிகால்கள் நிலத்தில் படும் ஓசையும், நெஞ்சு படபடக்கும் ஓசையும் மட்டுமே கேட்டன.  யாரோ எங்களுக்குப் பின்னால் தொடர்ந்து வருவது போன்ற உணர்வு வர அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டோம்.  ஆனால் அப்படி ஒருவரும் எங்களைத் தொடரவில்லை. அடிபாட்டுக்குப் போகும்போது எல்லாப் புலன்களும் கூர்மையாக ஏற்படும் பதட்டத்தால் வரும் மனப்பிரமை என்று நினைத்தேன். மூச்சை சீராக உள்ளிழுத்து பதட்டத்தைத் தணிக்கமுயன்றேன்.  
 
 பனை மரங்கள் செறிவாக இருந்தமையாலும் பல பனைகள் கள்ளுவடிக்கத் தேர்ந்தவையாக இருந்ததாலும் பனங்கூடலுக்குள் நிலவொளி இருக்கவில்லை. புக்கையரும் சொக்கியும் வளைவைத் தாண்டி பனை மரங்களுக்குப் பின்னால் நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டையன் எனக்கு எதிர்ப்புறமாக ஒரு பனைக்குப் பின்னால் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டான்.  நான் நின்ற பக்கத்தில் பாதை வளைவுக்கு பக்கத்தில் ஒரு பனம்பாத்தி போட்டிருந்தார்கள்.  அதனைச் சுத்தி நிறையக் காவோலைகள் கருக்குமட்டைகளோடு இருந்தன.  கொக்காரை, பன்னாடைகளையும் கூட பனம்பாத்தியின் மேல்பக்கம் அடுக்கிவைத்திருந்தார்கள். கால்களுக்கிடையில் உமல்கொட்டைகள் இடறினாலும் பதுங்கி இருக்க வசதியாக இருந்ததால் பனம்பாத்தியோடு நான் ஒதுங்கினேன்.

 இருண்டுவிட்டதால் பின்னேரக் கள்ளுக்குப் போய்விட்டு ஆடி ஆடிப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு சைக்கிள்களைத் தவிர பனங்கூடல் மயான அமைதியாக இருந்தது.  ஊரடங்கிவிட்டதால் கல்லுரோடும் வெறிச்சோடித்தான் இருந்தது.  நாங்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்ச நேரத்தில் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பெட்டைக் குயிலன் கல்லுரோட்டிலிருந்து பிரியும் ஒற்றையடிப் பாதையில் பனங்கூடலுக்குள் இறங்குவது  நிலவு வெளிச்சத்தில் அவனது நெளிந்த நடையில் தெரிந்தது.  அடுத்த கணமே அவனை அடிச்சுத் துவைக்கவேண்டும் என்ற திகில் நிறைந்த ஆவல் உடலெல்லாம் பெருகி, கைகளும், கால்களும் தினவெடுத்தன.  படபடவென இடிக்கும் இதயத்தோடு அவன் பாதை வளையும் இடத்திற்கு வரும்வரை தயாராகக் காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களாகத் மாறி, இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரித்தன.  இந்த அனுபவம் இதுவரை உணர்ந்திருந்தாத புதிய அனுபவமாக இருந்தது. 
 
 பெட்டைக் குயிலன் பாதை வளையும் இடத்திற்கு  சரியாக வந்தபோது அவிட்டுவிட்ட நாம்பன் போல தடதடவென்று வேகமாக ஓடிவந்த புக்கையர் பெட்டைக்குயிலன் முதுகு மீது முழுப் பலத்தோடு பாய்ந்து விழுந்தான்.  பாதையின் வளைவில் பெட்டைக் குயிலனுக்கு மேல் புக்கையர் புளிச் சாக்குமூட்டை மாதிரிக் கிடந்தது தெரிந்தது.  உடனடியாகவே சொக்கி மற்றப் பக்கத்தாலும், நானும், கட்டையனும் எங்கள் பக்கத்தாலும் அவர்கள் கிடந்த இடத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினோம்.  எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பெட்டைக் குயிலன் ஒருகணம் ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வெலவெலத்துப் போனாலும், அடுத்த கணமே கலவரத்துடன் பெருங்குரலில் குரவெடுத்து " ஐயோ, ஐயோ அடிக்கிறாங்கள், காப்பாத்துங்கோ" என்று  ஒரு குட்டைபிடித்த நாயைப் போல ஊளையிடத் தொடங்கினான்.  அடுத்த நொடியில் சொக்கி விழுந்த கிடந்த பெட்டைக் குயிலனின் திமிறும் கைகளை நிதானித்து மடக்கிப் பிடித்து பின்வளமாகப் பூட்டைப்போட்டுப் அழுத்தமாக இழுத்து நிமிர்த்தினான். பெட்டைக் குயிலனின் குழறலும் கத்தலும் இன்னும் அதிகமாகி ஒரு விசித்திரமான விலங்கொலியாக காதை அறைந்தது. சொக்கியின் அழுங்குப் பிடிக்குள் ஈரச்சாக்குக்குள் அகப்பட்ட எலி மாதிரி வெடவெடுத்து நடுங்கிக் கொண்டும், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கத்திக்கொண்டு நிற்கும் பெட்டைக் குயிலனைச் சுத்தி நான், கட்டையன், புக்கையர் மூவரும் நின்றோம்.
 
  போட்ட திட்டப்படி நான் பெட்டைக் குயிலனின் மூஞ்சையையும் நெஞ்சாங்கூட்டையையும்  நொருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.  கட்டையன் அவன்ரை கவிட்டைக் கந்தலாக்கியிருக்கவேண்டும்.  ஆனால் குலைப்பன் காய்ச்சல் வந்தவன் மாதிரி உடம்பெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டு, எந்த எதிர்ப்பும் காட்டாமல் கெஞ்சி மண்டாடி அழுதுகொண்டிருந்தவனின் கண்களைப் பார்த்தபோது எனது நிலை தளர்ந்தது. குத்துவதற்கு உரப்பாக ஓங்கின கை அந்தரத்தில் உறைந்துபோய் பின்னர் அறுபட்டு உயிரற்ற சடம்போல் தளர்ந்து கீழே பதிந்தது.  நான் அடிக்காமல் நிற்பதைப் பார்த்த கட்டையனும், புக்கையரும் கூட செய்வதறியாது நின்றார்கள்.  செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, தன்னை விட்டுவிடும்படி இறைஞ்சிக்கொண்டிருக்கும் பெட்டைக் குயிலனைப் பார்த்து எனது மனம் இளகிச் சுருங்கிவிட்டதால் அவனுக்கு அடிக்க மனம் வரவில்லை.  சரிக்குச் சரி என்று யாரியாக சண்டைக்கு நிற்பவனுக்கு அடிக்கலாம். ஆனால் சரணாகதி அடைந்து ஒடுங்கி நிற்பவனுக்கு அடிப்பது எப்படி நீதியாகும் என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

 பெட்டைக் குயிலனை பூட்டுப்போட்டுப் பின்பக்கத்தால் அமத்திப் பிடித்துக்கொண்டிந்த சொக்கி, திட்டமெல்லாம் சறுக்குவதை உணர்ந்து, கதறும் பெட்டைக் குயிலனை இன்னும் இறுக்கி, முழங்காலால் அவனது காலிடுக்குக்குள் மிண்டித் தள்ளியவாறு "பேப் பூனாவளே! பனியங்கள் மாதிரி மிலாந்திக்கொண்டு நிக்காமல் ஆக்கள் வரமுந்தி அடியுங்கோடா.. இப்ப இவனைச் சும்மா விட்டால் நாளைக்கு எங்கள் எல்லாருக்குமெல்லே சேத்து வைச்சுக் கம்பியடிக்கப்போறான்" என்று ஆத்திரத்தோடு உறுமினான்.

 பெட்டைக் குயிலன் எதிர்ப்புக் காட்டாமல் கெஞ்சுவது ஒரு தற்காப்புக்கான தந்திரமாக இருக்கும் என்று மனதைச் சுதாகரித்துத் திடப்படுத்தி, அவன் காலமையில் குழவியனுக்கு செய்ததை நினைவுக்கு கொண்டுவந்து, தளம்பல் எதுவுமில்லாமல்  அவனை அடிப்பதற்கு என்னை மீளவும் தயார்படுத்த முயன்றேன். பெட்டைக் குயிலனின் அந்தப் பரிதாபமான பார்வையைச் சந்திக்கக் கூடாதென்று மனம் குறுகியது. அப்படிப் பார்த்தாலும் அவனது பார்வையை உள்வாங்காது எதிர்கொண்டு வெறித்துப் நோக்க வேண்டும்.  இது ஒரு பெரும் சவாலாகவே பட்டது. ஆரம்பத்தில் ஏராளமாக இருந்த மனோதிடம் சொல்லாமல் கொள்ளாமல் காலை வாரிவிட்டது. அடிக்கவேண்டும் என்ற வெறி துப்பரவாக வடிந்துவிட்டது. பலப் பரீட்டை விஷப் பரீட்சையாக மாறிக்கொண்டிருந்தது. சொக்கி "அடியுங்கோடா.. அடியுங்கோடா" என்று கத்தியபோதும் நான் அடிக்காமல் மீண்டும் பின்வாங்குவதைப் பார்த்த புக்கையரும் ஒன்றும் பேசாமல் நின்றான்.  வினாடிகள் ஓடிக்கொண்டிருந்தன.
 
 பனங்கூடலுக்கு அண்டிய வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. ஆக்கள் வரப்போகின்றார்கள் என்று புரிந்தது. கட்டையன் என்ன நினைத்தானோ, ஏது நினைத்தானோ தெரியவில்லை. திடீரென்று சாரத்தின் மடிப்பைக் குலைத்து உள்ளேயிருந்த சேர்ட்டை எடுத்து தனது கண்கள் வெளியே தெரியாதவாறு தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டினான்.  தோட்ட வேலை செய்து உரமேறிப்போன கட்டையனது விம்மிப் புடைத்த நெஞ்சிலிருந்து குத்தீட்டிகளாக விசை கொண்ட கைகள்  வேகமாக வெளிக்கிளம்பி, சொக்கியின் பிடியிலிருந்த பெட்டைக் குயிலனை தாறுமாறாகத் தாக்கத் தொடங்கின.  அவனது இரண்டு கைகளும், கால்களும்  சுற்றிச் சுழன்று மிகுந்த நுட்பத்துடனும், லாகவமாகவும் இயங்கின.  ஓலமிட்டுக் கொண்டிருந்த பெட்டைக் குயிலனது உடம்பு கட்டையனது பயங்கரமான அடிகளாலும், உதைகளாலும் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருந்தது.  கட்டையனுக்கேயுரிய கைவந்த வித்துவத்தை நான் கண்களை இமைக்காமலும் வாயைப் பிளந்தவாறும் பார்த்துக்கொண்டு நின்றேன். 
 
பெட்டைக் குயிலனது அலறல் உச்சத்தைத்  தொடவும், சத்தத்தைக் கேட்டு ஓடி வரும் ஆட்களின் காலடிச் சத்தம் கேட்கத் தொடங்கவும் நாங்கள் நாலு பேரும் பனைகளுக்கிடையே பிரிந்து முங்கியன் தோட்டத்தை நோக்கி ஓடத் தொடங்கினோம். மற்றையவர்களின் முகங்களில் வெற்றி முறுவல்கள் பூத்திருந்தபோதும், அடிபிடிக்கு உதவாத சொத்தையன் என்ற அவமானத்தில் நான் அமிழ்ந்துகொண்டிருந்தேன்.

- முற்றும் -
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் குயிலனுக்கு பதிலா வேறுயாரோ மாட்டுப் படப் போகிறார்கள் என்டு......! அதுக்கப்பிறம் அவர் என்ன ஆனார்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

கதையை  வெட்டத்தொடங்கினால் முழுமை சிதைந்து போய்விடும் ஐயா..

கதை முடிந்தது,, சிதைந்ததா இல்லையா என்று சொல்லுங்கள்!

8 minutes ago, suvy said:

நான் நினைத்தேன் குயிலனுக்கு பதிலா வேறுயாரோ மாட்டுப் படப் போகிறார்கள் என்டு......! அதுக்கப்பிறம் அவர் என்ன ஆனார்....! tw_blush:

அது வாசகரின் கற்பனைக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை... கற்பனை ஆகட்டும், நிகழ்வு ஆகட்டும், கதையைக்கொண்டு கதை வடிப்பவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளலாம். இங்கு கதை முடிவு கிருபனின் பண்பை வெளிப்படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கம்பியடிக்கப்போறான்

கிருபன் நாங்கள் படிக்கும் காலத்தில் ரொம்ப ரொம்ப பிரபலமாக இருந்த ஒரு சொல்.

இங்கே கே என்ற சொல்லை தாங்க முடியாதவர்கள் அந்த நேரமே இவைகளுக்கு பெயர் போனவர்கள் இருந்தார்கள் என்றால் நம்பவா போகிறார்கள்.  

கடைசியில் பெட்டைக் குயிலன் செத்தான் என்று பார்த்தா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 
  போட்ட திட்டப்படி நான் பெட்டைக் குயிலனின் மூஞ்சையையும் நெஞ்சாங்கூட்டையையும்  நொருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.  கட்டையன் அவன்ரை கவிட்டைக் கந்தலாக்கியிருக்கவேண்டும்.  ஆனால் குலைப்பன் காய்ச்சல் வந்தவன் மாதிரி உடம்பெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டு, எந்த எதிர்ப்பும் காட்டாமல் கெஞ்சி மண்டாடி அழுதுகொண்டிருந்தவனின் கண்களைப் பார்த்தபோது எனது நிலை தளர்ந்தது. குத்துவதற்கு உரப்பாக ஓங்கின கை அந்தரத்தில் உறைந்துபோய் பின்னர் அறுபட்டு உயிரற்ற சடம்போல் தளர்ந்து கீழே பதிந்தது.  நான் அடிக்காமல் நிற்பதைப் பார்த்த கட்டையனும், புக்கையரும் கூட செய்வதறியாது நின்றார்கள்.  செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, தன்னை விட்டுவிடும்படி இறைஞ்சிக்கொண்டிருக்கும் பெட்டைக் குயிலனைப் பார்த்து எனது மனம் இளகிச் சுருங்கிவிட்டதால் அவனுக்கு அடிக்க மனம் வரவில்லை.  சரிக்குச் சரி என்று யாரியாக சண்டைக்கு நிற்பவனுக்கு அடிக்கலாம். ஆனால் சரணாகதி அடைந்து ஒடுங்கி நிற்பவனுக்கு அடிப்பது எப்படி நீதியாகும் என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

 

 
 
 
 

இருட்டடி வர்ணனை அருமையாக இருந்தது.
இருந்தாலும் அடித்தவனுக்கு அடி வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை .
அவன் எப்படித் திருந்துவான்.
உண்மையிலேயே கிருபனின் சுபாவம் இது தான் என்று நினைக்கின்றேன்  
அதற்காகச் சொத்தையென்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.

அவனுக்காகப் பரிதாபப்பட்ட கிருபனாவது  குரலை மாத்தி அவனுக்கு அவன் செய்த பிழையை சுட்டிக்காட்டியிருக்கலாம்.
அதன் பிறகு பெட்டைக் குயிலான் திருந்தியிருக்கலாம்
இருட்டடிக்குப் பின்னர் அவனின் நிலைமை தெளிவில்லை.

ஆனால் இங்கு  இருட்டடிதான் பிரதான விடயம் என்பதால் இவற்றை விட்டு  விடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, 

இந்தக் கதைக்கும் சம்பவத்துக்கும் ஏற்ற பொருத்தமான உவமை. ஒரு கிராமத்துக்குள் பனங் கூடல்களுக்குள் கும்மாளம் இடுபவர்களுக்குத்தான் இந்த உவமைகள் வசப்படும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நாங்கள் படிக்கும் காலத்தில் ரொம்ப ரொம்ப பிரபலமாக இருந்த ஒரு சொல்.

இங்கே கே என்ற சொல்லை தாங்க முடியாதவர்கள் அந்த நேரமே இவைகளுக்கு பெயர் போனவர்கள் இருந்தார்கள் என்றால் நம்பவா போகிறார்கள்.  

கடைசியில் பெட்டைக் குயிலன் செத்தான் என்று பார்த்தா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள்.

கிருபன் கதை அந்தமாதிரியிருக்கு.....ஈழப்பிரியன் கே.கே என்ற சொல்லை தாங்குவினமோ:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதாசிரியன் ஒருவன்.....கதையாக மாறிய கதை போல உள்ளது!

கிருபன் நீங்கள் மிகவும் மென்மையான மனம் படைத்தவராக இருக்க வேண்டும்!

உங்கள் கதையின் மொழி நடையும், அதில் வந்து விழுந்த நாட்டுச் சொற்களும் எம்மை விசாப் பிரச்சனை இல்லாமலே ஊருக்கு ஒரு முறை அழைத்துச் சென்று விட்டன!

கூப்பிட்டுக் குத்தி....நான் கேள்வியே பட்டிராத வார்த்தை!

ஒரு வேளை நான் வளர்ந்த இடங்களில் .....வளர்ந்த செடி கொடிகள் எல்லாமே மிகவும் நல்லவை போல இருக்கின்றது!

ஆனால் என்ன காரணத்தாலோ...எனக்கு இந்தப் பெயர் நன்றாகப் பிடித்துப் போய் விட்டது!

ஒரு வேளை ...நல்ல வடிவான பூவாய்ப் பூத்து...அதை ஆசையாய்..பிடுங்கப் போகும் போது முள்ளுக் குத்தி விடுமோ..?

பல பெண்களுக்கும் இது பொருந்தும் போல உள்ளது!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  கிருபன் ஐயா

கதாயாசிரியராக வெளி  வந்திருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்..

ஒரு வாசகனாக பெரிய  கதைகள்

தொடர்கள்

விபரித்தல் போன்றவற்றில் நாட்டமில்லை

இன்றைய உலக ஒழுங்கு அதற்கு இடம் தரவில்லையோ என்னவோ...

உங்களுடைய  கதையையும் சில இடங்களில்  (பந்தி) தாவி  தாவித்தான் வாசித்தேன்

கதையை  சொல்லு

முடி என்பது எனது பாணி

யாரும்  எதையாவது என்னிடம் சொல்ல வந்தால் கூட இழுக்க விடமாட்டேன்

நேரே விசயத்துக்கு வா என்று தான் சொல்வேன்

ஆனால் உங்களுடைய  கதையில் பல எமது தாயக விடயங்களை  கொண்டு வந்தீர்கள்

அதை பலரும் ரசித்தார்கள்

நான் மீண்டும்  ஒருமுறை திருப்பி அவற்றை வாசிக்கும் அளவுக்கு அவை பேசப்பட்டன

வாழ்த்துக்கள்

நமக்கு நேரமிருக்கோ

வாசிக்கின்றோமா என்பதைவிட

அவை பேசப்படணும்

மீள மக்கள் முன் வைக்கப்படணும்

உலா வரணும்.

 

கதையின்படி திட்டம் போடுவது இலகு

ஆனால் செயல் என்று வரும் போது ..??

நன்றி  ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இன்னும் நீட்டியிருந்தால்  என்று கேட்கிறது மனது  ஆயிரம் பச்சைகள்  உங்களுக்கு  தொடரட்டும்  கதைகள் :97_raised_hand:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.