Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஜீவன் சிவா said:

மீரா 
நான் சந்தேகிக்கும் உறவுதான் நீங்கள் சந்தேகிப்பவராயின்

அவர் பலகாலமாக இங்கு பல உதவிகளையும் + பல ஆரோக்கியமான செயல்களிலும் சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளார். அவரது ஆரோக்கியமான செயல்களை பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள் - ஆனால் என்ன அது அவர் என்று உங்களுக்கு தெரியாதது அவர் குற்றமில்லையே.

ஜீவன் பலர் பல விடயங்களை செய்கிறார்கள்,

ஆனால் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற செயல்கள் என்று எவ்வாறு வகைப்படுத்துகிறீர்கள்? 

மேலும் நான் குறிப்பிட்டது அவரது சவாலையே, 2015 இல் பலாலி மக்கள் பாவனைக்கு வரும் என்றதையே.

  • Replies 56
  • Views 5.4k
  • Created
  • Last Reply
12 minutes ago, MEERA said:

மேலும் நான் குறிப்பிட்டது அவரது சவாலையே, 2015 இல் பலாலி மக்கள் பாவனைக்கு வரும் என்றதையே.

மீரா நாங்கள் ஒன்றும் அனைத்தும் அறிந்தவர்கள் இல்லை 

நானும்தான் காங்கேசன்துறையை விடுவிக்கப் போகிறார்கள் என்று எவ்வளவு ஆர்வமாய் ஒரு திரியையும் திறந்து அதனது முன்னேற்றங்களை பதிந்தேன். நிஜம் வேறானது. ஆனாலும் எதிர்பார்ப்புகளும் வேறானவை. இரண்டும் ஒரு இடத்தில் சந்திக்கும்போதுதான் சந்தோசம். அதற்காக எதிர்பார்ப்புகள் கூடாது என்பது தப்பு. 

சில வாரங்களின் முன்னர் அரசாங்க அதிபரும் பத்தாம் திகதி இன்னும் பல இடங்களை விடுவிக்க இருப்பதாக சொன்னார், இப்படி பல திகதிகள் வந்து போய்விட்டன // ஆனாலும் மக்கள் நம்பிக்கையை விடவில்லை + நாங்களும்தான். அதற்காக விடுவிக்கப்பட்டால் என்ன பண்ணலாம் என்று யாராவது யோசிக்காமல் இருப்பாங்களா? எமது எதிர்பார்ப்புகளுக்காக நாம் திட்டங்களை வகுக்கக்கூடாதென்று சொல்வதும் தப்பு.

எனக்கு தெரிய அவர் // நீங்கள் குறிப்பிட்டவர் // கடந்த இரு வருடங்களில் செய்தவைகளை நீங்களே போற்றி இருப்பீர்கள். அவரது செய்திகள் யாழ் களத்திலும் நிறையவே உண்டு.

என்ன, எனது மறதியால் குமாரசாமி அண்ணை தேடவேண்டியவர்களின் எண்ணிக்கையும் ஒன்றால் கூடிவிட்டது - இப்ப அவர் இவரையும் சேர்த்து ஐந்துபேரை கண்டுபிடிக்கணும்.:grin:

  • தொடங்கியவர்

சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ( படங்கள்இணைப்பு )

Published by Priyatharshan on 2017-04-06 13:18:06

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

17820115_10207053838699109_1225208958_o.

17820433_1343230225715424_600420291_o.jp

குறித்த ஓடுபாதையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கியதுடன் குறித்த ஓடுபாதை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

17522144_1343230229048757_778666481_o.jp

17668898_10207053839579131_1179467842_o.

குறித்த ஓடுபாதையானது சுமார் 50 மில்லின் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அஅமைக்கப்பட்டுள்ளதுடன் இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17819811_1343230239048756_1722378303_o.j

17821471_1343230242382089_515427456_n.jp

17819843_1343230209048759_1163478245_o.j

17690455_10207053838579106_740235767_n.j

17792647_10207053838619107_1458836606_n.

17821699_10207053839459128_1652779535_n.

http://www.virakesari.lk/article/18791

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

மீரா நாங்கள் ஒன்றும் அனைத்தும் அறிந்தவர்கள் இல்லை 

நானும்தான் காங்கேசன்துறையை விடுவிக்கப் போகிறார்கள் என்று எவ்வளவு ஆர்வமாய் ஒரு திரியையும் திறந்து அதனது முன்னேற்றங்களை பதிந்தேன். நிஜம் வேறானது. ஆனாலும் எதிர்பார்ப்புகளும் வேறானவை. இரண்டும் ஒரு இடத்தில் சந்திக்கும்போதுதான் சந்தோசம். அதற்காக எதிர்பார்ப்புகள் கூடாது என்பது தப்பு. 

சில வாரங்களின் முன்னர் அரசாங்க அதிபரும் பத்தாம் திகதி இன்னும் பல இடங்களை விடுவிக்க இருப்பதாக சொன்னார், இப்படி பல திகதிகள் வந்து போய்விட்டன // ஆனாலும் மக்கள் நம்பிக்கையை விடவில்லை + நாங்களும்தான். அதற்காக விடுவிக்கப்பட்டால் என்ன பண்ணலாம் என்று யாராவது யோசிக்காமல் இருப்பாங்களா? எமது எதிர்பார்ப்புகளுக்காக நாம் திட்டங்களை வகுக்கக்கூடாதென்று சொல்வதும் தப்பு.

எனக்கு தெரிய அவர் // நீங்கள் குறிப்பிட்டவர் // கடந்த இரு வருடங்களில் செய்தவைகளை நீங்களே போற்றி இருப்பீர்கள். அவரது செய்திகள் யாழ் களத்திலும் நிறையவே உண்டு.

என்ன, எனது மறதியால் குமாரசாமி அண்ணை தேடவேண்டியவர்களின் எண்ணிக்கையும் ஒன்றால் கூடிவிட்டது - இப்ப அவர் இவரையும் சேர்த்து ஐந்துபேரை கண்டுபிடிக்கணும்.:grin:

ஜீவன், எதிர்பார்பிபிற்கும் சவாலுக்கும் வித்தியாசம் இருக்கு. தான் நடத்திக் காட்டிவேன் என்று சவால் விட்டிருந்தார்.

(இப்படித்தான் ஒருவர் ஜெர்மனியிலிருந்து ஒருவர் 300/400 கட்டில்களுடன் வடமராட்சிக்கு வைத்தியசாலையை கட்டப்போகிறேன் என்றார். இப்போ முகநூலில் அவரை தேடித் திரிகிறார்கள்.)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

மீரா 
நான் சந்தேகிக்கும் உறவுதான் நீங்கள் சந்தேகிப்பவராயின்

அவர் பலகாலமாக இங்கு பல உதவிகளையும் + பல ஆரோக்கியமான செயல்களிலும் சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளார். அவரது ஆரோக்கியமான செயல்களை பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள் - ஆனால் என்ன அது அவர் என்று உங்களுக்கு தெரியாதது அவர் குற்றமில்லையே.

நான் சொன்ன ஆழைத்தானே நீங்களும் சந்தேகிக்கீர்கள்.:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, நவீனன் said:

இன்று திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

fasf.jpg

குறித்த ஓடுபாதையில் இன்று பகல் 12.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓடுபாதையானது சுமார் 50 மில்லின் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அmமைக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என  சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/18778

ஏ- 380 வந்து இறங்கிறதையும்.....றோட்டுக்கு தார் ஊத்துறதையும் உலகசாதனையாய் நினைக்கினம் போலை கிடக்கு...tw_tounge_xd:

7 hours ago, சுவைப்பிரியன் said:

நான் சொன்ன ஆழைத்தானே நீங்களும் சந்தேகிக்கீர்கள்.:unsure:

:91_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
On 06/04/2017 at 5:55 PM, Maruthankerny said:

இப்போது கொழும்பு விமானநிலையத்தை குறைந்தது 40 வீதம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்தான் 
பாவிக்கின்றார்கள் ....... அவர்களுக்கு நேரே போகும் வசதி இருந்தால் 
அங்குபோகத்தான் விரும்புவார்கள்.

தவிர போக்குவரத்து இருந்தால்தான் மக்கள் பொருட்கள் நகர தொடங்கும் 
விமானம் பறக்க தொடங்கினால் சுன்னாகத்தில் சுத்தும் சுருட்டை 
கொழும்புக்கு கொண்டுபோக தேவையில்லை ... கோவா விற்கு கொண்டு சென்று 
வாற வெள்ளைக்காரர்களுக்கு சிலோன் சுருட்டு என்று விக்கலாம்
வரும்போது கேரளாவில் இருந்து கொஞ்ச மாங்காய் கொண்டுவரலாம் ....
அது ஊருக்கு போகும் எண்ணத்தை இங்கு இருக்கும் இளைஞருக்கு இன்னும் கொஞ்சம் 
உத்வேகமாக இருக்கும். 

கொழும்பில் இருந்து செல்ல 6-7 மணிநேரம் செல்கிறது ....
உலகம் யாழுக்கு 6 மணிநேரம் பிந்தி இருக்கிறது ... இதை மாற்ற முடியும். 
வர்த்தகம் இருக்க  என்றால் .. போக்குவரத்து அவசியம். 

BIA யை குறைந்தது  40% வட கிழக்கு மக்கள் பாவிக்கிறார்கள் என்ற தரவை எங்கிருந்து பெற்றீர்கள் எனக் கூறமுடியுமா? இந்த சத விகிதம் பிழை என நிச்சயமாகக் கூறுவேன்.  reality check செய்து பார்ப்போம்.

கீழுள்ள தரவுகள் இலங்கை தகவல் தரவுத் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ தளத்திலிருந்து பெறப்பட்டவை.
தகவல்களை கிரகிக்க இலகுவாக்க ஒரு Excel அட்டவணையைத் தயாரித்திருக்கிறேன். வடகிழக்கின் இணைந்த சனத்தொகையே இலங்கை மொத்த சனத்தொகையின் அண்ணளவாக 13%.

Statistics_1.jpg

Statistics_2.jpg

Population_Analysis-2.jpg

IMG_0256.jpg

அடுத்ததாக Airport and Aviation Services இன் 2015-16 Annual Report ஜப் பார்ப்போம். இதிலிருந்து கனக்க analysis செய்ய முடியும். அதிலிருக்கும் performance highlights இனைப் பார்த்தால் 2015 இலெ அண்ணளவாக 8.5Mil வெளிநாட்டு பயணிகள் வந்து போயிருக்கிறார்கள். மற்றைய வருட  விகித்ததுடன் பார்த்தால் 2016 இலெ அண்ணளவாக 9.1Mil வரும். இதன் 40% -> 3.64Mil. வடகிழக்கின் இணைந்த சனத்தொகையே அண்ணளவாக 2.8Mil. இவர்களில் எத்தனை பேரின்  வெளிநாட்டில் இருப்பார்கள்? ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவராவது வெளிநாட்டில் இருந்து வருடத்துக்கு ஒருமுறை இலங்கை வந்து போனாலும் உங்கள் கணக்கு பிழை. இது வடக்கும் கிழக்கும் இணைந்த கதை. கிழக்கிலிருப்பவர்களுக்கு கட்டுநாயக்கா பலாலியை விட அண்மித்தது, இலகுவானது.  பலாலிக்கு வரப்போவது இல்லை. வடக்கு மாகாணத்தின் சனத்தொகை அண்ணளவாக 1.1Mil (5.2%மான மக்கள் தொகை). இந்தச் சிறிய மக்கள் தொகையின் பயன்பாட்டிற்காக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைப்பது வர்த்தக ரீதியில் சாத்தியப்படாது.

Cargo பற்றி யோசித்தாலும் high demand and or high value goods, அல்லது large quantity இல்லாவிட்டால் உங்களின் சுருட்டயும் மாங்காயையும் கொண்டு போவதற்கான COGS - cost of goods sold மிக அதிகமாகும். வர்த்தக ரீதியாக சரிப்பட்டு வராது. 

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Thumpalayan said:

அடுத்தவரை மட்டம் தட்டும் எண்ணத்தை நீங்கள் விட்டுவிட்டாலே 
நிறைய தெளிவான கருத்துக்களை பதிய முடியும்.

பாஸ்போர்ட் விடயத்தில் நான் அப்படியே போயிருப்பேன் ...
எனக்கு ஒன்றும் தெரியாது என்பது உங்களுக்கு தெரியும் என்று 
எழுதிய ஒரே காரணத்தால்தான் அங்கு நான் தொடர வேண்டி வந்தது.

40 வீதம் என்று ஒரு அண்ணளவா கணக்கைத்தான் எழுதினேன் ஸ்ரீலங்கன் விமான சேவை 
தனது சேவைகளை வழங்கும் நகரங்களை வைத்தே அப்படி எழுதினேன் அது கூடி குறைவாகத்தான் இருக்கும்.

உங்களின் கணக்கு 1880இல் ஆட்கள் சிந்திக்க கூடிய ஒரு விடயம் 
இந்த உலகில் உங்கள் கணக்குக்கும்  இப்போதைய நடைமுறைக்கும் 
எந்த ஒரு தொடர்பும் இல்லை

இல்லை அப்படிதான்  என்று அடித்து சொல்வதானால் ........
முதலில் டுபாய் ..... சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களே உலகில் இல்லை என்று மறந்த 
பின்தான் அப்படி கூற முடியும்.

உங்கள் கணக்கு கூட எனது கருத்துக்கு சார்பானதுதான் 
அதிகமாக இலங்கையர் அல்லாதவர்களே பயன்படுத்துகிறார்கள் (உங்கள் கணக்குப்படி)
அவர்கள் என்ன கொழும்பு எயர்போர்ட் பார்க்கவா வருகிறார்கள் ?
அவர்கள் வரும் தேவையை நாங்கள் வடக்கில் உருவாக்கினால் 
இங்கு வந்துவிட்டு போகிறார்கள். 

எல்லாவற்றிக்கும் முதலில் போக்குவரத்தே அவசியம் 
ஆடோ ...மாடோ .... குருவியோ .... பறவையோ ... ரயிலோ .. பஸ்சோ ... பிளேனோ 
எதோ ஒன்று ஓரிடம் இருந்து ... இன்னொரு இடம் நகரும்போது ..
பறவை கக்கா போனாலே மரம் பரவுகிறது ... மனிதன் நகரும்போது எத்தனை நகரும் ?? 
முதலில் நகர்வுதான் முக்கியம் ...
மற்றதெல்லாம் அதன் தொடர்ச்சி என்பதுதான் 
டுபாய் ..சிங்கப்பூர் போன்ற நாடுகள் உலகிட்கு சொல்லும் செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

BIA யை குறைந்தது 40% வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் பாவிக்கிறார்கள் என்று சொன்னது நீங்கள். அதுசரி எனது கணக்குப்படி அதிகம் பாவிப்பது இலங்கையர் அல்லாதோரா???? ஹா ஹா ஹா எனது கணக்குப்படி அதிகம் பாவிப்பது தமிழரல்லாதோர். விஷயம் தெரியாட்டிக்கு அண்ணளவு அக்கா அளவு என்று சும்மா ஒரு நம்பரை இழுத்து விடாதேயுங்கோ. உத வாசிச்ச விஷயம் தெரிஞ்ச சனம் ஆ இவரிண்ட கருத்துதானே எண்டு கொடுப்புக்க சிரிச்சுப்போட்டு போயிருக்கும். ஆனால் நாள் முழுக்க நம்பரை பார்க்கிற என்னால முடியாது. மற்றது சிங்கப்பூரும் டுபாயுமா? அந்த இரண்டு ஏர்போர்ட்டினதும் passenger movement என்ன இலங்கையின் PM என்ன. 

பாஸ்போர்ட் திரியை மீண்டும் ஞாபகப் படுத்தாதேயுங்கோ, பிறகு இண்டைக்கு முழுக்க சிரிக்க வேண்டி வந்திடும். ஒவ்வொரு முறையும் கருத்து எழுதும் போதும் உங்கட இமேஜை நீங்களே நாசமாக்குகிறீங்க!

மாமாவின் செத்த வீட்டுக்கு பிப்ரவரியில் செல்லும் போது அவசரமாக செல்ல வேண்டி இருந்தமையால்  கொழும்பிலிருந்தோ அல்லது கட்டுநாயக்காவில் இருந்தோ யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை இருக்குதா என விசாரித்து பார்த்தேன். முன்னர் யுத்த காலத்தில் இலங்கை விமானப்படையும், ஒரு சில தனியார் உள்ளூர் விமான சேவைகளும் யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபட்டு இருந்தன. ஆனால் இப்ப நிறுத்தி விட்டார்கள் என அறிய முடிந்தது. காரணம் ரயில் / பேருந்து சேவை அதிகமாக இருப்பதால்  எவரும் விமானத்தில் பயணிக்க விரும்புவதில்லை என்றும் எனவே விமான சேவையை  நடத்துவது நஷ்டம் என்றும் அறிய முடிந்தது.

சினமன் எயார் (Cinnamon Air) எனும் உள்ளூர் விமான சேவை திருமலை / சிகிரியா போன்ற நகரங்களுக்கு விமான சேவையில் ஈடுபடுகின்றது, ஆனால் யாழ்ப்பாணத்துக்கு நடத்த முன்வராமைக்கும் இதுவே காரணம்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்கின்றவர்கள் எல்லாரும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் செல்லவில்லை. மட்டக்களப்பு / திருமலை / வவுனியா / கிளிநொச்சி / மன்னார் போன்ற ஊர்களுக்கும் செல்கின்றனர். இவர்களுக்கு ரயில் / பேருந்து சேவையே சரியான தெரிவாக இருக்கும்.

அத்துடன் ஊருக்கு செல்கின்ற புலம்பெயர் தமிழர்களில் பலருக்கு கொழும்பு நகரத்தில் தங்க ஏதாவது ஒரு வேலை / அவசியம் இருக்கும். ஆகக் குறைந்தது ஓடேலில் (ODEL) ஷாப்பிங் செய்யவாவது தேவை இருக்கும். பலரது நெருங்கிய உறவுகள் கொழும்பில் கண்டிப்பாக இருப்பர். அல்லது ஒரு அபார்ட்மெண்ட் / வீடு ஆவது அங்கு இருக்கும். எனவே கொழும்பு தவிர்க்க முடியாத ஒரு தரிப்பிடம். அதை தவிர்க்க அநேகருக்கு அவசியம்.இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thumpalayan said:

ஓகே சரி போட்டுவாங்கோ ..............
45 வருடம் முன்பு பாலைவனமாக இருந்த துபாய்க்கு 
ஓட்டகத்திலா பயணிகள் போகிறார்கள் ?

அல்லது போகிறவர்கள் பாலைவனத்தில் மண் அள்ள போகிறார்களா ?

வருவத்துக்கான காரணியையும் 
வசதியையும் செய்துவிட்டால் வந்துவிட்டு போவார்கள் என்பதே 
இங்கு நடைமுறையில் இருக்கு.

நிழலின் கருத்திலேயே இதுதான் இருக்கு ...
ஷோப்பிங்கிட்காக கொழும்பில் வடக்கு மக்கள் 
தங்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று ...
அடுத்த 10 வருடத்தில் இந்த நிலை வெகுவாக மாறும்.

அமெரிக்கா  சீனாவில் ஷொப்பிங் மால்கள் 
ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது.

நாட்டில் இருக்கும் மக்கள் தொகை காணாது என்கிறீர்கள் ...
இப்போ வேறு விதமாக குத்துகாரணம் அடிக்கிறீர்கள்...
பின்பு சிரிக்கிறீர்கள் ......
எனக்கு வேறுவிதமாக விளங்குகிறது !

57 minutes ago, நிழலி said:

மருது,

எதற்கு என் எழுத்தை என்று சொன்னால் தான் என்னால் பதில் எழுத முடியும்.

அல்லது புலம்பெயர் மக்கள் திருமலைக்கும் போகினம், அப்ப ஏன் அங்கு மட்டும் விமான சேவையோ எனக் கேதின்றீர்கள் என ஊகித்து தான் பதில் எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

மருது,

எதற்கு என் எழுத்தை என்று சொன்னால் தான் என்னால் பதில் எழுத முடியும்.

அல்லது புலம்பெயர் மக்கள் திருமலைக்கும் போகினம், அப்ப ஏன் அங்கு மட்டும் விமான சேவையோ எனக் கேதின்றீர்கள் என ஊகித்து தான் பதில் எழுத வேண்டும்.

அதேதான் திருமலைக்கு விமானம்  செல்லும்போது .....
அதிகளவான மக்கள் போகும் யாழுக்கு விமானம் போக முடியாதா ?

மக்கள் வசதி இல்லாமல் இருந்த காலத்திலேயே விமானசேவை இருந்து இருக்கிறதே ?

தவிர புலப்பெயர் தமிழர்களை மட்டுமே கணக்கில் எடுப்பதால்தான் 
அங்கு போக முடியவில்லை எனும் காரணம் தோன்றுகிறது.
அங்கு இருப்பவர்களே பாவிக்க கூடிய நிலைமை இப்போது இருக்கிறது.
விமான போக்குவரத்து தொடங்கினால் ....... எனது கணக்குப்படி 
யாழ் நகர உள்ளூர் வாசிகளே அதை அதிகம் பயன்படுத்துவார்கள்.

உயர்தர கைவே வீதி இல்லாத காரணம்தான் மிக முக்கிமானது.
யாழ் .... சென்னை விமான சேவை இருக்கும் எனில் நாளுக்கு மூன்று 
50 ஸீட் விமானம் பயணிகள் குறைவின்றி போகும் என்று நான் நம்புகிறேன்.

ஏற்கனவே இருந்தது தேவை அதிகமானபோது இல்லாமல் இருக்கிறது என்றால் ...
ஏதும் அரசியல் காரணம் இருக்கலாம் என்றுதான் எண்ணுகிறேன். 

மிலேனிமமும் என்று ஒரு பயணிகள் விமான சேவை 
யாழ் செல்வதாக .... கொழும்பு விமான நிலைய 
நேர அட்டவணை சொல்கிறது 
அதில் தேதியை காணமுடியவில்லை 

நீங்கள் இப்போ சென்று வந்ததால் 
அது பழசாக இருக்கலாம்.
அல்லது நீங்கள் வந்த பின்பு தொடங்கியதா தெரியவில்லை.

பலாலியை அப்படியே விட்டுவிட்டு ........
மண்டைதீவில் ஒரு விமான நிலையம் கட்டினால் 
(அதட்கான இட வசதி அங்கு நிறைய இருக்கிறது )
மிகவும் சுறு சுறுப்பான விமான நிலையமாக நிச்சயம் மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின்பு நிறைய மாற்றம் 
யாழில் தோன்றும் ..
எளிமையான போக்குவரத்து இன்மையே 
ஆப்ரிக்கா பின் நிற்க இப்போதைய உலகில் முக்கிய காரணம். 
இதை திட்டமிட்டே மேற்கு உலகம் இப்படி வைத்திருக்கிறது.

இண்டெர்நெட் உலகில் நைஜிரியா வீறுகொண்டு எழுந்தது 
உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் ..... கைதரபாத்திக்கு முன்பே 
அபுஜா வீறுகொண்டு எழுந்தது .....
எனக்கு என்னமோ திட்டமிட்டே கள்ள வேலைகள் எல்லாம் அங்கு 
நகர்த்தினார்கள் பின்பு முடக்கினார்கள் என்றுதான் தோன்றுகிறது 
பண ஆசையை காட்டி முடக்கி விட்டார்கள்.

முதலில் மக்கள் நகர வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்

பலாலிக்கு புலம் பெயர் தமிழர்கள் போய் இறங்குவது தான் அவர்களுக்கு நல்லது

அத்துடன் பாதுகாப்பானதும் கூட.

இதை  சிறீலங்கா அரசு ஒரு போதும் செய்யாது

காரணம் ஒன்று அரசியல்

இன்னொன்று வருமானம்

தமிழர்கள் தமது இடத்துக்கு வந்து

தமது இடம் ஊடாகவே வெளியேறத்தொடங்குவது 

அவர்களுக்கு உற்சாகத்தை தந்துவிடும் என்பது சிறீலங்காவுக்கு உறக்கத்தை  கெடுக்கும் செய்தி

இன்னொன்று

இலங்கையிலேயே வருமானத்தை தரும் ஒரேயொரு  புகையிரதசேவை யாழ் தேவி  மட்டும் தான் (அன்றையநிலையில்)

Edited by விசுகு

50 minutes ago, Maruthankerny said:

அதேதான் திருமலைக்கு விமானம்  செல்லும்போது .....
அதிகளவான மக்கள் போகும் யாழுக்கு விமானம் போக முடியாதா ?

திருமலைக்கு மூவின மக்களும் செல்வதுடன் பெருமளவிலான உல்லாச பயணிகளும் செல்கின்றனர். சினமன் எயார் சிகிரியா,  பெந்தோட்டை, பாசிக்குடா, நுவரேலியா போன்ற உல்லாச பயணிகள் அதிகம் செல்லும் இடங்களுக்குத்தான் பறக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அவற்றின் சில விமானங்கள் சீ-பிளேன்கள்.

50 minutes ago, Maruthankerny said:

தவிர புலப்பெயர் தமிழர்களை மட்டுமே கணக்கில் எடுப்பதால்தான் 
அங்கு போக முடியவில்லை எனும் காரணம் தோன்றுகிறது.
அங்கு இருப்பவர்களே பாவிக்க கூடிய நிலைமை இப்போது இருக்கிறது.
விமான போக்குவரத்து தொடங்கினால் ....... எனது கணக்குப்படி 
யாழ் நகர உள்ளூர் வாசிகளே அதை அதிகம் பயன்படுத்துவார்கள்.

உயர்தர கைவே வீதி இல்லாத காரணம்தான் மிக முக்கிமானது.
யாழ் .... சென்னை விமான சேவை இருக்கும் எனில் நாளுக்கு மூன்று 
50 ஸீட் விமானம் பயணிகள் குறைவின்றி போகும் என்று நான் நம்புகிறேன்.

ஏற்கனவே இருந்தது தேவை அதிகமானபோது இல்லாமல் இருக்கிறது என்றால் ...
ஏதும் அரசியல் காரணம் இருக்கலாம் என்றுதான் எண்ணுகிறேன். 

கண்டிப்பாக ஒரு 100 பேராவது நாளாந்தம் பயணம் செய்யக் கூடிய நிலை இருக்கும். அரச / அரசார்பற்ற  ஆனால் அது லாபம்  தரக்கூடியதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. நல்ல லாபம் தரக்கூடியதெனில் டக்கிளஸ் /சரவணன் எம் பி போன்றவர்களே ஆரம்பித்து இருப்பர்.

யாழ் - கொழும்பு கண்டி வீதி உயர்தர ஹைவே ஆக இல்லாவிடினும், தரமான வீதியாகத்தான் உள்ளது. நல்ல வாகனம் எனில் ஒரு சிறு குலுக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். பெப்ரவரி மாதத்தில் நான் கட்டு நாயக்காவில் இருந்து யாழ் செல்ல 5:30 மணித்தியாலங்களே எடுத்தது.

மிலேனியம் விமான சேவையை பற்றி கேள்விப்படவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு விமான் நிலையம் ஓடுபாதை சரி செய்து  கொண்டுதான் இருக்கிறார்கள் தற்போது வந்து சீ பிளேன் மட்டுமே வருபவர்கள் உல்லாச பிரயாணிகள் மட்டுமே  ஒருவருக்கு இலங்கை காசு 5000-5500 ரூபா என சொல்கிறார்கள் உன்மையாக் தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஓகே சரி போட்டுவாங்கோ ..............
45 வருடம் முன்பு பாலைவனமாக இருந்த துபாய்க்கு 
ஓட்டகத்திலா பயணிகள் போகிறார்கள் ?

அல்லது போகிறவர்கள் பாலைவனத்தில் மண் அள்ள போகிறார்களா ?

வருவத்துக்கான காரணியையும் 
வசதியையும் செய்துவிட்டால் வந்துவிட்டு போவார்கள் என்பதே 
இங்கு நடைமுறையில் இருக்கு.

நிழலின் கருத்திலேயே இதுதான் இருக்கு ...
ஷோப்பிங்கிட்காக கொழும்பில் வடக்கு மக்கள் 
தங்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று ...
அடுத்த 10 வருடத்தில் இந்த நிலை வெகுவாக மாறும்.

அமெரிக்கா  சீனாவில் ஷொப்பிங் மால்கள் 
ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது.

நாட்டில் இருக்கும் மக்கள் தொகை காணாது என்கிறீர்கள் ...
இப்போ வேறு விதமாக குத்துகாரணம் அடிக்கிறீர்கள்...
பின்பு சிரிக்கிறீர்கள் ......
எனக்கு வேறுவிதமாக விளங்குகிறது !

உரிஞ்சு அம்மணமா நிக்க வைத்துவிடுவேன் எண்டு பயந்து போனியல் போல மருதர், போட்டுவாங்கோ எண்டு அனுப்பி வைக்கிறியள்? துபாயில எண்ணெய் இல்லாட்டிக்கு துபாய் இப்பவும் பாலைவனமாகத்தான் இருக்கும். திருகோணமலைக்கும் சிகிரியாவுக்கும் பறப்பது CESNA CARAVAN போன்ற சிறிய விமானங்கள் கூடியது 8 பேர் வரையில் போகலாம். இங்கே இராசவன்னியன் ஐயா சொன்னது சர்வதேச விமான சேவையை. வருவதற்கான காரணியையும் வசதியையும் செய்துவிட்டு போய் விமான நிலயத்தைக் கட்டுங்கோ. யாரும் வரமுதல் வருவதற்கு விமான நிறுவனங்கள் ஓமெண்ட வேணும். அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவுக்கு சிங்கப்பூர் விமான சேவையை வரவழைக்க state government 5 வருடம் கஷ்டப்பட்டு subsidy குடுத்துத்தான் வரவைத்தார்கள். இந்த விடயத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை நெருக்கமாகத் தெரியும், நான் சீவிப்பதுவும் கன்பராவில் தான். அடுத்த வருஷம் Qatar விமான சேவையை ஒரு மாதிரி வரவைத்திருக்கிறார்கள். அவுசில் சீவிக்கும் யாருக்குமே இது தெரியும். 

விமானம் வரும், இறங்கும் காசு கொட்டும் என்று நானும் நடக்க சாத்தியமற்ற விஷயத்தைப் பற்றி வாயால வடை சுடலாம் தான் ஆனால் எனக்கும் உங்களுக்கும் என்று ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் தானே - விஷயம் தெரிஞ்சவன் இல்லை அண்ணளவா தரவுகளை ஆகாசத்தில் இருந்து புடுங்குபவன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

திருமலைக்கு மூவின மக்களும் செல்வதுடன் பெருமளவிலான உல்லாச பயணிகளும் செல்கின்றனர். சினமன் எயார் சிகிரியா,  பெந்தோட்டை, பாசிக்குடா, நுவரேலியா போன்ற உல்லாச பயணிகள் அதிகம் செல்லும் இடங்களுக்குத்தான் பறக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அவற்றின் சில விமானங்கள் சீ-பிளேன்கள்.

கண்டிப்பாக ஒரு 100 பேராவது நாளாந்தம் பயணம் செய்யக் கூடிய நிலை இருக்கும். அரச / அரசார்பற்ற  ஆனால் அது லாபம்  தரக்கூடியதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. நல்ல லாபம் தரக்கூடியதெனில் டக்கிளஸ் /சரவணன் எம் பி போன்றவர்களே ஆரம்பித்து இருப்பர்.

யாழ் - கொழும்பு கண்டி வீதி உயர்தர ஹைவே ஆக இல்லாவிடினும், தரமான வீதியாகத்தான் உள்ளது. நல்ல வாகனம் எனில் ஒரு சிறு குலுக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். பெப்ரவரி மாதத்தில் நான் கட்டு நாயக்காவில் இருந்து யாழ் செல்ல 5:30 மணித்தியாலங்களே எடுத்தது.

மிலேனியம் விமான சேவையை பற்றி கேள்விப்படவில்லை

இதைத்தான் நானும் சொல்கிறேன் .............
உல்லாசப்பிராயணிகளுக்கான வசதிகள் போதிய அளவில் 
வடக்கில் இல்லை ....
நாம் சிறுவர்களாக இருந்த காலங்களில் 
எமது ஊரில் (தாளையடி) நிறைய வெள்ளைக்காரர்கள் வருவார்கள் 
வந்து கடக்கரையில் குளிப்பார்கள்.
இப்போதிருக்கும் வசதிகளில் எதுவும் அப்போது இருக்கவில்லை 
எனினும் ............

இப்போது உல்லாச பயணிகளின் எதிர்பார்ப்பும் 
அதிகமாகிவிட்ட்து.

இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டது 
உல்லாச பிராணிகள் வருவதட்கு வழியில்லாத நிலையில் 
யாரும் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் ...
வழியை திறந்துவிட்ட்டால்தான் ..... பொருட்கள் ..மக்கள் நகர முடியும்.
பின்புதான் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

எனது ஆப்ரிக்கா உதாரணமே அதட்குத்தான் எழுதினேன்.

இது உங்களுக்கு இல்லை ...........
எண்ணையை நம்பி டுபாய் இல்லை.
இப்போ மிகுந்த லக்ஸரி கொண்ட அதி நவீன ஹாஸ்பிடல் ஒன்றை 
துபாயில் கட்டுவதற்கு தீர்மானிக்கிறார்கள் ...
சிறந்த மருத்துவர்களை அதிக சம்பளத்தில் கொண்டுவருவதால் 
முதல் ஒரு 10 வருடம் இலாபம் என்பது பெரிதாக சாத்தியம் இல்லை 
அதனால் முதலீட்டாளர்கள் பின்னடிக்கிறார்கள் ....
இதன் பொருள் துபாயில் அதிகளவு நோயாளர்கள் அவதி படுகிறார்கள் என்பது அல்ல.

கன்பீரா விமான சேவை ..... நான் எழுத வேண்டியது ...
ஏன் அரசு தனது செலவில் விமான சேவையை நடத்துகிறது ?
அரசுக்கு என்ன விசரா ?
எதிர்கால முதலீடுகளே இவைகள் ... முதலில் மக்கள் நகர வேண்டும்.  

34 minutes ago, Thumpalayan said:

உரிஞ்சு அம்மணமா நிக்க வைத்துவிடுவேன் எண்டு பயந்து போனியல் போல மருதர், போட்டுவாங்கோ எண்டு அனுப்பி வைக்கிறியள்? துபாயில எண்ணெய் இல்லாட்டிக்கு துபாய் இப்பவும் பாலைவனமாகத்தான் இருக்கும். திருகோணமலைக்கும் சிகிரியாவுக்கும் பறப்பது CESNA CARAVAN போன்ற சிறிய விமானங்கள் கூடியது 8 பேர் வரையில் போகலாம். இங்கே இராசவன்னியன் ஐயா சொன்னது சர்வதேச விமான சேவையை. வருவதற்கான காரணியையும் வசதியையும் செய்துவிட்டு போய் விமான நிலயத்தைக் கட்டுங்கோ. யாரும் வரமுதல் வருவதற்கு விமான நிறுவனங்கள் ஓமெண்ட வேணும். அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவுக்கு சிங்கப்பூர் விமான சேவையை வரவழைக்க state government 5 வருடம் கஷ்டப்பட்டு subsidy குடுத்துத்தான் வரவைத்தார்கள். இந்த விடயத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை நெருக்கமாகத் தெரியும், நான் சீவிப்பதுவும் கன்பராவில் தான். அடுத்த வருஷம் Qatar விமான சேவையை ஒரு மாதிரி வரவைத்திருக்கிறார்கள். அவுசில் சீவிக்கும் யாருக்குமே இது தெரியும். 

விமானம் வரும், இறங்கும் காசு கொட்டும் என்று நானும் நடக்க சாத்தியமற்ற விஷயத்தைப் பற்றி வாயால வடை சுடலாம் தான் ஆனால் எனக்கும் உங்களுக்கும் என்று ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் தானே - விஷயம் தெரிஞ்சவன் இல்லை அண்ணளவா தரவுகளை ஆகாசத்தில் இருந்து புடுங்குபவன்!

கொஞ்சம் ... நடுக்கமாகத்தான் இருக்கு !

சரியான போட்டி, மோதல் ஏற்பட்டால்த்தான் (முக்கியமா தமிழர்களுக்கு) விசயங்கள் வந்து விளும் 

ஒருவர் விமானநிலையம் வந்தால் யாழ்பாணம் ஓகோ என்று வரும் என்கிறார், மற்றவர் STATISTICS எல்லா எழுதி அது இப்போதைக்கு நடக்காது என்கிறார். 

இரண்டுபேரும் சரியாத்தான் சொல்லுறியள்

என்ன, விசுவின் பட்டிமன்றம் பார்த்தபின் குளம்பிறமாதிரித்தான் இருக்கு

என்ன, உங்களுட்ட உள்ளதுகளை, படித்ததுகளை மெல்லமா அவிட்டு வி(க்)றியள், எங்கட வீட்டை ஒரு எலி வந்தப்பா .. கதைமாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி, சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா..!

யாழ்ப்பாணம் - சென்னை அல்லது யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை எப்போ தொடங்குவதாக உத்தேசம்..?

ஈழம்தான் தள்ளிப்போகுதென்றால், பிச்சாத்து யாழ்ப்பாண விமான நிலைய மேம்பாடுமா அப்படி..?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சரி, சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா..!

யாழ்ப்பாணம் - சென்னை அல்லது யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை எப்போ தொடங்குவதாக உத்தேசம்..?

ஈழம்தான் தள்ளிப்போகுதென்றால், பிச்சாத்து யாழ்ப்பாண விமான நிலைய மேம்பாடுமா அப்படி..?

நமக்கு,  இந்தியா.... தண்டவாளம்  போட்டு,  யாழ்தேவியை. ஓட  விட்ட  மாதிரி,
பலாலி விமான நிலையத்தையும், சென்னை விமான நிலையம் மாதிரி கட்டாமல், 
ஒழுங்காக... கட்டித் தந்தால்.... டபிள்  ஓகே... சார்.
நாங்க.. ரெடி, நீங்க தான்.... ரெடியாகல. 

14 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சரி, சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா..!

யாழ்ப்பாணம் - சென்னை அல்லது யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை எப்போ தொடங்குவதாக உத்தேசம்..?

ஈழம்தான் தள்ளிப்போகுதென்றால், பிச்சாத்து யாழ்ப்பாண விமான நிலைய மேம்பாடுமா அப்படி..?

நக்கல்

எப்ப நீங்கள் சென்னை விமானநிலையத்தில விளுகிறதுகளை கட்டி நிமித்திறீங்களோ அப்ப தொடங்கலாமென்று இருக்கிறம், சும்மா விளையாட்டுக்கு எழுதிறம் நீங்க நம்பீட்டீங்க, LOL

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சரி, சட்டுப்புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா..!

யாழ்ப்பாணம் - சென்னை அல்லது யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை எப்போ தொடங்குவதாக உத்தேசம்..?

ஈழம்தான் தள்ளிப்போகுதென்றால், பிச்சாத்து யாழ்ப்பாண விமான நிலைய மேம்பாடுமா அப்படி..?

சிங்களவன் வந்தாலும் தமிழன் விடமாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.