Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

இந்தக் கருத்தோடு உடன்படுகின்றேன். ஆனால் நான் நடைமுறையில் உண்மையாகவே கோபம் வரும்போது ஒருகணம் கூட தாமதிப்பதில்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க மானமும் ரோஷமும் விடுவதில்லை.

பழகியளவில் அப்படியேதும் இருப்பதாக தெரியவில்லைtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் ஊர் பக்கம் வருவதனால் ஊரில பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதால் தானே பலர் போராளியானார்கள்  சும்மா பார்த்துவிட்டு போகலையே  நெடுக்கு அப்படியானால் அவர்களால்  விவேகமாக செயற்பட்டு அந்த  செயலை செய்தவர்களுக்கு  தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம் தானே  ஏன் போராளியாகி  இயக்கம் கூட பெண்களை கெடுத்தவர்களுக்கு ஏன் தண்டனை உடன் வழங்க வேண்டும் ??

ஜீ,

வசனங்களைப் போகிறபோக்கில எடுத்துவிட்ட மாதிரி இருக்கு. இது பெண்போராளிகளை அவமதிப்பதாகத்தான் உள்ளது.

Just now, நந்தன் said:

பழகியளவில் அப்படியேதும் இருப்பதாக தெரியவில்லைtw_blush:

உண்மையான கோபம்  வந்து உடம்பெல்லாம் அதிரும்போது நீங்கள் காணவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் கோபம் வந்தால் ஒன்றுக்கு பத்துமுறை யோசிப்பது.மீண்டுமொரு முறை வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜீ,

வசனங்களைப் போகிறபோக்கில எடுத்துவிட்ட மாதிரி இருக்கு. இது பெண்போராளிகளை அவமதிப்பதாகத்தான் உள்ளது

அப்படி இல்லை  அப்படி விளங்கிக்கொண்டால் மன்னிக்கவும் நெடுக்கு  ஒட்டுக்குழுக்களைஇழுக்க நான் ஊர் பக்கம் இணைத்து எழுதினேன் வெளிநாடில் வெள்ளைக்காரனோ  இல்லை நம்ம ஆதளோ ரோட்டில போற பொண்ணுங்களை திட்டினாலோ  இல்லை அவளுக்கு ஏசினாலோ பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் போகலாம் இங்கு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அதை தட்டிக்கேட்ப்பார்கள்   அடுத்தவர்கள் பட்ட வேதனை கண்டே ஆயிரம் ஆயிரம் பேர் போர்க்களம் கண்டனர் ஈழத்தில்  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதுவே, துரதிஷ்டாவசமாக stalkers மனவியல். இந்த stalker களிடம் மாட்டுப்படும் பெண் அல்லது ஆண் நிலை மிகவும் பரிதாபாரமானது. தமிழ் படங்களில், இந்த ஆபத்தான மனநோய், பெரும் ஹீரோ விளையாட்டாக காட்டும் அபத்தம் நிலவுகிறது.

இப்படியானவர்களை தண்டிக்க சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. மனநல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கு உரிய வழிமுறைகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். அதை விடுத்து... ஒரு stalker ஐ வெட்டிச் சாய்ப்பதால்.. இன்னொருவன் அந்த இடத்தை நிரப்ப வரமாட்டான் என்பது எவ்வளவு போலியான நிலைப்பாடு. நாம் தான் இப்படியானவர்களிடம் இருந்து எம்மை எம் சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் புத்திசாதுரியமான காரியங்களை செய்யனும். மாறாக நாங்கள் அவங்களுக்கு ஈடாக குற்றவாளிகளாகி எம்மை நம்பி நிற்பவர்கள் நட்டாற்றில் விடுவது அல்ல... புத்திசாலித்தனம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இப்படியானவர்களை தண்டிக்க சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. மனநல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கு உரிய வழிமுறைகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். அதை விடுத்து... ஒரு stalker ஐ வெட்டிச் சாய்ப்பதால்.. இன்னொருவன் அந்த இடத்தை நிரப்ப வரமாட்டான் என்பது எவ்வளவு போலியான நிலைப்பாடு. நாம் தான் இப்படியானவர்களிடம் இருந்து எம்மை எம் சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் புத்திசாதுரியமான காரியங்களை செய்யனும். மாறாக நாங்கள் அவங்களுக்கு ஈடாக குற்றவாளிகளாகி எம்மை நம்பி நிற்பவர்கள் நட்டாற்றில் விடுவது அல்ல... புத்திசாலித்தனம். tw_blush::rolleyes:

ஒருவர் ஸ்டால்கர் என்று கடைசி வரை தெரிய வராதே, நெடுக்கர்.

அவர் காதல் கொண்டு பின்னால், முன்னால் வருகிறார் என்றே கருதுவார்கள்.அவர் பெரும்பாலும் தமது காதலை வெளிப் படுத்துவதில்லை.

ஆனாலும், குறித்த பெண்ணுக்கு வேறு கலியாணம், அல்லது ஆண் நண்பர் கிடைத்து விடடார் என்றவுடன், மூர்கமாவார்.

சில வேலைகளில் பெண்ணுக்கு தெரிய வராது, அவர் தன்னை மானசீகமான காதலித்தார் என....

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

ஒருவர் ஸ்டால்கர் என்று கடைசி வரை தெரிய வராதே, நெடுக்கர்.

அவர் காதல் கொண்டு பின்னால், முன்னால் வருகிறார் என்றே கருதுவார்கள்.அவர் பெரும்பாலும் தமது காதலை வெளிப் படுத்துவதில்லை.

ஆனாலும், குறித்த பெண்ணுக்கு வேறு கலியாணம், அல்லது ஆண் நண்பர் கிடைத்து விடடார் என்றவுடன், மூர்கமாவார்.

சில வேலைகளில் பெண்ணுக்கு தெரிய வராது, அவர் தன்னை மானசீகமான காதலித்தார் என....

கொரில்லாவில் இருந்து எல்லாம் விலங்குகளிலும் இப்படி ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யுது. அதுக்காக அதுகளை நாங்க தண்டிக்கப் போய் எங்களை எங்கள் வாழ்க்கையை எம் சார்ந்தோர் வாழ்க்கையை அழிக்கச் செய்வதிலும்.. அதுகளை தண்டிக்க உள்ள பொது வழிமுறைகளூடாக அதுகளை தண்டிப்பது தான் சமூகத்திற்கும் பாதுகாப்பு எங்களுக்கும் பாதுகாப்பும் நன்மையும் ஆகும். இதில் ஆத்திரப்படுவதை விட விவேகமான செயற்பாடு தான் முக்கியம். ஒரு நோயாளி திட்டுறான் என்பதற்காக அவனை வெட்டிச் சாய்க்க முடியாது. அவனை கையாளவும் வழிமுறைகள் இருக்கின்றன. அதனை தான் பின்பற்ற வேண்டும். tw_blush:

.. அப்பத்தான் ஒரு பெண்ணுவருவா, கத்தியப்பார்த்தவுடன் கற்பழிக்கபோறோமோ என்று கத்துவா கதறுவா, உடனே பக்கத்திலவுள்ள நம்மளவிட அயோக்கியன்பூரா அன்னைகெண்டு யோக்கியனாமாறி நம்மள கையும்களவுமாப்பிடிச்சு விடிய விடிய வெளிக்குப்போறவரைக்கும் அடிச்சேகொல்லுவாங்கள் .. அம்மாடி இம்புட்டுபேரும் எங்ககிடந்து வந்தாங்க

 

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2017 at 9:31 AM, நந்தன் said:

பழகியளவில் அப்படியேதும் இருப்பதாக தெரியவில்லைtw_blush:

நீங்கள் சிங்கத்தை திறந்த வெளி ஸூவிலதான் பார்த்துகிட்டு இருக்கிறீங்க 

காட்டிலே வேடடையாடும் போது பார்த்தாதான் உண்மை தெரியும். 


பஞ்சபாண்டவர்களில் தர்மன்தான் மிகுந்த கோபக்காரன் ஆனால் மிகுந்த பொறுமை உடையவனும் 
அவன்தான். தனக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் என்ற எல்லை அவனுக்கு தெரிந்து இருந்ததால் 
மிகுந்த பொறுமையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இருந்து இருந்தது.


புலிகளை பாருங்கள் சாதாரண போராளிகள் சிலநேரம் தளபதிகளுக்கு வரும் கோபம் 
பிரபாகரனுக்கு வந்திருந்தால் 
சிங்கள மக்களை வெட்டி புதைத்து இருப்பார்கள்.
இல்லாமலும் வாழ்கிறார்கள் என்றால் ... ஒரே காரணம் அவர்கள் கடைபிடித்த பொறுமைதான். 
2009-2010 கும் இடையில் கிணறு வெட்ட கிளம்பிய பூதம் மாதிரி எத்தனை பேர் கிளம்பினார்கள் 
புலிகளை அவதூறு செய்து பிழைப்பு நடாத்த ?
இப்போ எல்லாம் புஷ்வாணம் ஆகிவிட்டது ......... இது வேலைக்கு ஆகாது என்று இப்போ அவர்களே 
வாலை சுருட்டி விட்டார்கள்.
சிங்கள தலைவர்கள் பிரபாகரனின் பெருமை பேசுகிறார்கள் 
ரணில் சந்திரிகா உட்பட. 

 

மிகுந்த கோபக்கார்களின் கோபத்தை பார்க்க முடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்
இவர் கொஞ்சக் காலம் பொறுத்துப் பார்த்து விட்டுத் தான் அடிக்கக் கிளம்பி இருக்கார்...திரும்ப,திரும்ப அடுத்த நபர் இவரின்ட மனிசியோட படுக்காமல் விட மாட்டேன் என்று சொல்ல கேட்டிட்டு அமைதியாய் இருந்தால் அவரை "பெட்டை" என்று தான் சொல்லுவினம்...துரதிஸ்ட வசமாக அவர் அடித்த அடியில் இவர் செத்திட்டுட்டார்.
 
நோமலாய் றோட்டால போகும் போது பெட்டையளை நக்கலடிக்கிறத்திற்கும்,ஒரு குறிப்பிட்ட பெண்ணை பாலீயல் ரீதியாக தாக்கி கதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
 
பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை,அதுவும் திருமணம் முடித்த பெண்ணை இப்படிக் கதைத்தவர் நிட்சயம் மன வக்கிரகம் பிடித்தவராய்த் தான் இருப்பார்....சம்மந்தப்பட்டவர்கள் பொலீசுக்கு ஆதாரத்தோட போனாலும் கொஞ்ச காலம் உள்ளே இருந்து போட்டு திரும்ப வந்து அந்தப் பெண்ணை பாலியல் பலத்காரம் செய்திருப்பார்.
 
இப்படிப்பட்ட வக்கிரமனம் படைச்ச கழிசடைகளை அடிச்சு சாகடிக்காமல் கால்,கையை உடைச்சு காலம் பூரா படுக்கையிலேயே இருக்கின்ற மாதிரி வைச்சிருக்கோனும்.tw_angry:
On ‎13‎/‎05‎/‎2017 at 3:32 PM, கிருபன் said:

 

உண்மையான கோபம்  வந்து உடம்பெல்லாம் அதிரும்போது நீங்கள் காணவில்லை?

 

என்னாலே என்டால் நம்பேலாது<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலையெல்லாம் பல குடும்பங்களுக்கு தனிப்பட்ட மரியாதை / பயம் இருக்கும்.
அந்த வீட்டு பொம்புளையளை எந்த நாயும் ஏறெடுத்தும் பார்க்காது. காரணம் அந்தளவுக்கு பயம்.
ஒரு சில ஊர்களுக்கு சும்மா சைக்கிள் எடுத்துக்கொண்டு பெட்டை பாக்கவும் போகேலாது....தற்சமயம் விசயம் சிக்கினால்.......நோண்டிக்கொண்டுதான் வீடுவந்து சேரவேணும்.
கோயில் திருவிழாக்களிலையும் தேவையில்லாமல் பெட்டையளோடை சேட்டை விட்டால் சுவாமி வடக்கு வீதிக்கு வரக்கிடையிலை தம்பியருக்கு பெரியாஸ்பத்திரியிலை டாக்குத்தர்மார் இழைபோட்டுக்கொண்டிருப்பினம்.

கேடுகெட்ட  செயல்களுக்கெல்லாம் பொலிசு கோடு கேசு எண்டு போனாலும்......நல்ல லோயர் எண்டு கொஞ்சப்பேர் இருக்கினமெல்லே.......அவையளாலை எந்த குற்றம் செய்தவனும் வெளியிலை வரேலுமெண்டால்..... நியாயமான அவசரக்கொலை சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்வதில் உள்ள நிதானம் புரிந்தாலும், மனைவியுடன் தெருவில் நடந்து போகும் போது, ஒரு கிறுக்கன், பச்சையாக இப்படி சொன்னால், சிரித்து, ஹீ...ஹீ, அவன் சும்மா சொல்லுறான், நீ பேசாமல் வா என்றால், மனிசி கூட, இவன் என்ன பரதேசிக் கிறுக்கனா இருக்கிறானே என்று நம்மளை, வீட்டுக்குள்ள போய் படுங்கோ.... நான் இவனுக்கு நாலு சாத்து சாத்திவிட்டு வாறன் என்று தானே சொல்வார்.

அவர் அவ்வாறு செய்யாவிடில், அவரது கவரவும் கேள்விக்குள்ளாக்கும்.

அது நிதானம் இல்லை.... பேராண்மை. தன்னை நம்பி வந்த பெண்ணை முடிந்த வரை பாதுகாத்தார் என்பேன். இந்த முயட்சியில் அவர் கூட கொலை செய்யப் பட்டு இருக்கலாம்.

இது புரிந்தே இரு ஜூரர்கள் கண்ணீர் விட்டனர். அவர் மீதான திடடமிடட கொலை குற்றசாட்டு கைமோச கொலையாகியது. 

பக்கத்து வீட்டில் ஒரு கிறுக்கன் இருந்தால், நிம்மதியாக இருக்க முடியுமா? சவால் விட்டவன்.... அலுப்புப் பாடல்கள் போடுவான்.... கிளுகிளு விடயங்களை வேண்டுமென்றே சத்தமாக போடுவான். 

மனைவி அழ, நிம்மதியா ஒன்னுமே இல்லை, பயப் படாதே என்று சொல்லி, மத்தியானம் என்ன சமையல் என்றா, கேட்க முடியும். 

அல்லது, இந்தா, மத்தியானம் மீன்குழம்பு செய்தனாங்க... உனக்கு கொஞ்சம் கறி கொண்டு வந்தனான்.... என்று அந்த கிறுக்கனிடம்.... கறியோட போய்... நிற்போமா?

The couple was in a wrong place with wrong man as neighbour which was hugely unfortunate.

On 2017-5-14 at 7:29 AM, nedukkalapoovan said:

இதில் ஆத்திரப்படுவதை விட விவேகமான செயற்பாடு தான் முக்கியம். ஒரு நோயாளி திட்டுறான் என்பதற்காக அவனை வெட்டிச் சாய்க்க முடியாது. அவனை கையாளவும் வழிமுறைகள் இருக்கின்றன. அதனை தான் பின்பற்ற வேண்டும். tw_blush:

 

Edited by Nathamuni

இவ்வளவு குத்தி முறியுரம் இங்கு கொலை செய்தவரின் பெயர் தண்டபாணி தேசிகர் இந்தப்பெயரை ஊரில் வைத்திருப்பவர்கள் யார் என்று எம்மனைவருக்கும் தெரியும் ஆகவே இங்கு பூனை ஒன்று பொறுக்க முடியாமல் புலியாகி உள்ளது கொலையானவர் தான் கொலையாகும் அளவுக்கு பிரச்சினை குடுத்து இருக்கார் பெரும்பாலும் மன்மதகுன்சு ஆக இருக்கலாம் மொன்றியலில் உள்ளவர்களுக்கு உண்மை தெரியும் செய்தியின் அடிப்படையில் தர்க்கிப்பது நன்றாக யிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட இருவரின் பெற்றோரும் ஊரில் பெருமதிப்பிற்குரியவர்கள் ஆவர். இன்று பிள்ளைகளின் செயலால் பேரவமானத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

சம்பந்தப்பட்ட இருவரின் பெற்றோரும் ஊரில் பெருமதிப்பிற்குரியவர்கள் ஆவர். இன்று பிள்ளைகளின் செயலால் பேரவமானத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம்.
மனோதத்துவ விஞ்ஞான கல்வி அறிவு என்பது எமக்கு (தமிழ் சமூகத்திற்கு) சிறிதளவும்  இல்லாத 
காரணம்தான் இதன் அடிப்படை பிரச்சனை என்று எண்ணுகிறேன். 
எமது மதம் முன்னையோரின் நன்னெறிகள் போன்றவை சொல்லிவைத்த 
வாழ்வை எமக்கு யாரும் சொல்லித்தருவதில்லை ...... பேருக்கு நாம் வசித்தாலும் 
திருக்குறளை மனப்பாடம் செய்தாலும் . ஊர் சமூகம் சார்ந்து அப்படி ஒரு வாழ்வை 
எமக்கு யாரும் அறிவுறுத்துவத்துக்கு பதில் மூத்தவர்களே தவறான வாழ்வையே வாழ்ந்துகொண்டு 
இருப்பார்கள். கோவிலுக்கு போனால் ஒட்டுமொத்த கள்ளன் காவாலி கஞ்சன் தான் முன்னுக்கு 
நிற்பார்கள்.
இந்தியாவில் பெண்களுக்கான மதிப்பு என்பது சிறிதளவும் இல்லை 
கொழும்பில் கூட நெரிசலான பஸ்ஸில் ஏறினால் பெண்கள் நாலு ஆண்களின் கை 
சுரண்டலை கண்டுதான் இறங்க வேண்டிய  நிலைமை.
நாமாகவே உணர்ந்து ஒரு மரியாதை நிமித்தம் சமூகத்தில் இருக்கும் 
இன்னொரு பெண்ணை மதிக்க வேண்டும் என்று சொல்லித்தருவதற்கு பதிலாக.
தொழில் ரீதியாக சாதி பிரித்து இன்னொரு சமூகத்தை தாழ்த்தி எள்ளளவும் மதிக்காது 
ஒரு சமூகத்தை விரட்டி அடித்து நசுக்கி திமிர் கொண்டு வாழவே எமது சமூகம் எமக்கு சொல்லி தந்து உள்ளது.
கோவிலில் சுத்த சுயவிளம்பரம் ஆதிக்க எண்ணம் அதிகார போக்கு இருக்கிறதே தவிர 
ஒரு புனித எண்ணம் ஈடேற என்று எதுவுமே இல்லை. கடவுள் மூடன் நாம் ஏமாத்துகிறோம் எனும் 
நிலைதான் எங்கும் காணக்கூடியதாக உள்ளது.  

இங்கு பெரும்பாலும் ஊரில் மிகுந்த கட்டுப்பாடுடன் வாழ்ந்த இளைஞர்களே 
தவறி போகிறார்கள் சுதந்திரம் என்பதன் பொருள் தெரியாது சுதந்திரத்தின் 
எல்லை புரியாது ...... கட்டு கஞ்சா ..குடி என்று அவர்கள்தான் பெரும்பாலும் ரோட்டில் அலைகிறார்கள் 
ஏற்கனவே அங்கு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாது வாழ்ந்தவர்கள் 
இங்கும் ஒரு எல்லையை வகுத்து கொள்கிறார்கள். 
காரணம் அவர்களுக்கு சமூகம் சார்ந்து உழைக்க யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை.
சமூகத்தை நாட்டிடை கட்டி காப்பது ஒவ்வரு ஆண்ணினதும் கடமை என்ற எண்ணமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள் .......விட்டால்   குற்றமில்லையா ?
கொலை செய்தவர் யாராக இருப்பினும் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,ஏன் உணர்ச்சி வசப்படுறீங்கள்<_< இப்ப யார் அவருக்குத் தண்டனை குடுக்க கூடாது என்டு சொன்னது?

  • 2 weeks later...

> கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதி மன்றில் கொலையுண்டவரின் மகளை பார்த்து 'உன் அப்பாவை கொல்ல வேண்டும் என நான நினைத்து இருக்கவில்லை.. உங்களுக்கு என்னை தெரியும் தானே' எனக் கேட்டு உடைந்து அழுதுள்ளார். கொலையுண்டவரின் மகளும் அழுதுள்ளார்

> தான் கொலை செய்தமைக்கு தன் மனைவியுடன் கொலையுண்டவர் எல்லை மீறி நடந்து கொண்டதாக மனைவி செய்த முறைப்பாடு காரணம் அல்ல என்று மறுத்துள்ளார்

> கொலையுண்டவர் காயத்துடன் கட்டிடத்தின் வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் போது கொலை செய்தவர் பக்கத்து கடையில் பீர் வாங்கி குடித்து இருக்கின்றார்

> கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் இன்னும் அதே கட்டிடத்தில் உள்ள அபார்ட்மெண்ட் டில் தான் வசிக்கின்றனர். கொலையானவரின் மகள் அடிக்கடி தன் தந்தை கொல்லப்பட்ட இடத்தை கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது

மிகுதி ஆங்கிலத்தில்

Montreal man breaks down while apologizing for murder in front of victim’s wife and children

A Côte-des-Neiges resident who killed his neighbour and then downed a few beers before he was arrested broke down in tears on Monday while he apologized to the victim’s children for having taken away their father.

“I never had an intention of killing your father. You know me,” Amalan Thandapanithesigar said after he broke down before Superior Court Justice Jean-François Buffoni.

He turned around in the courtroom where his sentence hearing was being held and directly addressed the family of Jeyarasan Manikarasa, the 40-year-old man he stabbed to death on June 23, 2014. Both men were originally from the same town in Sri Lanka and came to Canada as refugees. Manikarasa arrived in Canada in 2000 and Thandapanithesigar arrived the following year.

Manikarasa’s daughter broke down in tears as Thandapanithesigar looked directly toward her while her mother and brother sat on either side of her. Thandapanithesigar made the emotional gesture even though he was advised against doing so just minutes earlier by his defence lawyer, Elise Pinsonnault.

Although he had been tried on a charge of first-degree murder, on May 8 a jury found Thandapanithesigar guilty of second-degree murder. While he automatically received a life sentence, the court has to determine when Thandapanithesigar, 37, will be eligible for full parole. His parole eligibility can be set anywhere between 10 and 25 years.

Any sense of home sweet home has been stolen from them

Pinsonnault is arguing that he be eligible for a release after having served the minimum, while prosecutor Dennis Galiatsatos has argued that Thandapanithesigar should serve at least 17 years.

The prosecutor emphasized one specific element of the investigation while making his arguments. He reminded the judge a few times about how security cameras installed inside a gas station and a pub on Décarie Blvd. captured how Thandapanithesigar purchased and drank a few beers right after he stabbed Manikarasa six times and left him to die outside where they had fought near their apartment on Mountain Sights Ave. One camera inside the pub even recorded how Thandapanithesigar put money in a jukebox while he drank.

“He coldly enjoyed a few beers afterward,” Galiatsatos said while reminding Buffoni that one of Manikarasa’s three children watched in horror as “he bled to death with his eyes wide open.”

The prosecutor also noted that Manikarasa’s family still lives in the same apartment and that his children frequently walk by the spot where their father died.

“Any sense of home sweet home has been stolen from them,” Galiatsatos said.

During his trial, Thandapanithesigar testified that Manikarasa had insulted him minutes before he stabbed the victim. He denied that the attack was premeditated or had anything to do with how his wife, Reka Amalan, had told him a few days earlier that Manikarasa had made unwanted advances toward her.

While the jury apparently rejected the theory the murder was planned and premeditated, Galiatsatos asked Buffoni to consider that Thandapanithesigar armed himself with a knife and concealed it before leaving his apartment to confront Manikarasa on the street outside. The prosecutor also noted that the stabbing was carried out next to a park where children were playing and there was evidence that Thandapanithesigar kicked the victim twice, including once in the head, while he was lying on the ground and bleeding to death.

The only mitigating factor in this case, Galiatsatos said, is that Thandapanithesigar has no criminal record.

“But that is easily eclipsed by what he did,” the prosecutor said.

Pinsonnault will continue to make her arguments Monday afternoon.

pcherry@postmedia.com

 

http://news.nationalpost.com/news/canada/montreal-man-breaks-down-while-apologizing-for-murder-in-front-of-victims-wife-and-children

 

  • கருத்துக்கள உறவுகள்

துட்டரை கண்டால் தூர விலகு. வீணா அடிபட்டு சிறைக்குப் போய் ஒரு புண்ணியமும் இல்லை. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.