Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக தொட்டப்பநாயக்கனூர் கண்மாயில் பனை விதை நடப்பட்டது உசிலம்பட்டி ஒன்றியம்! NTK

முதல்கட்ட சீரமைப்பு பணி || சுற்றுசூழல் பாசறை | தஞ்சை | கஜா புய

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

அப்படியா! இதுக்கெல்லாம் expiry date இருக்கா? கோட்டபாயவும் மகிந்தவும் இதை சொல்லி தான் தப்பிக்க நினைக்கிறார்கள். 

👍

இந்த நியாயமான கேள்விக்கு பச்சை போடலாம் என்றால்
Sorry, you cannot add any more reactions today

Link to comment
Share on other sites

47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

இந்த நியாயமான கேள்விக்கு பச்சை போடலாம் என்றால்
Sorry, you cannot add any more reactions today

பரவாயில்லை விளங்க நினைப்பவன். பச்சை முக்கியமுல்லை. சாதாரண மக்கள் நினைப்பதை நான் இங்கு எழுதுகிறேன். நான்  எழுதுவது யாழ் களத்தை வாசிக்கும் வாசகர்களுக்காகவே.  நீங்கள் எனக்கு பச்சை போட உங்களையும்  என்னையும்  ஒரே ஆள் என்று இங்கு விடுப்பு கதைப்பதையே பொழுது போக்காக  கொண்ட சிலர் விடுப்பு பொய்களை கூறி வருகின்றனர். பரவாயில்லை அடுத்தவன் விடுப்பு கதைப்பது தமிழர்  கலாச்சாரத்தின் முக்கிய கூறு தானே.  ஊரை விட்டு வந்து நீண்ட நாளாலும் அந்த பழக்கம் விட்டு போகாமல் அந்த  பேச்சுவழக்கிலேயே விடுப்பு பேசுது  அவர்களுக்கு சுகத்தை கொடுத்தால் அனுபவித்துவிட்டு போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் விழுந்ததா ? இலக்கை நோக்கிய பயணம்

உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே!
ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!
 
உலகெலாம் உரிமை முழக்கம் எழுந்தது
உணரந்திடு; விழி, எழு தமிழா!!
‘வெட்சிப் பூவணி, வேகப் படுநீ
வெற்றி முரசினை அதிர முழக்கு’
 
‘நேற்றைய அடிக்குமேல் நெட்டடி இன்று வை
நேற்று நீ காற்றெனில் நீள்விசும்பு இன்று நீ’
 
தமிழ்கொல்லும் தீயிதழ்கள் தாக்குறப் பாடி
இமிழ்கடல் வையத்(து) இனம்மொழி காப்பார்!
 
கல்லறை பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேறும் மணிநாளும் விரைந்த தன்றே!
 
பொதுமை உணர்வுப் பொதுளலிற் பொங்கும்
இதுவரை கேளா எழிலுறும் பாக்களில்!
 
ஒருநலம் பெறுகையில் உலக நலம் நினை
வருநலம் யாவும் வகுத்துண்டு வாழ்வாய்!
 
பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!
 
பொதுமை உலகம் வரல்வேண்டும் – ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்
 
உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை,
உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள் –
என்று மட்டும் நீ ஒதுங்கி
இருந்துவிடாதே! – நீ
இறந்த பின்னும் உலகம் இருக்கும்
மறந்து விடாதே!
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?
 
பொய்மை நிலைமாற்றப் புரட்சிக் குரல்கொடுக்கும்
மெய்யாய் உணர்ந்தே மிகக்கவன்ற மெய்யறிவர்!
 
சட்டங்கள் தீட்டினோம்; திட்டங்கள் காட்டினோம்;
சரிசமம் எனும்நிலை வாய்ந்ததா? – பழஞ்
சாத்திரச் சேறும் காய்ந்ததா? – பணக்
கொட்டங்கள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை?
கூச்சலிட்டோம் பயன் இல்லையே! – ஒரு
கொடிய புரட்சிதான் எல்லையே!
 
சாதி ஒழிப்பிற்குச் சாட்டைச் சுழற்றிடுவார்!
ஏதிங்கே சாதியெதிர்த் தாரிவர்போல் வாழ்வினிலே!
 
சாதிப்புழுக்கள் நெளிந்திடுமோர் மொத்தைச்
சாணித்திரளையாய் வாழ்க்கையிலே – நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்உல
கோருக்குரைக்கத் துடிக்கிறோம்!
 
பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம் முதலியென்போம் நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர் படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள் நமைத்’தமிழர்’ என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டோரே!
 
மாந்தநே யப்பண்பு மண்ணில் நிலைத்திடவே
பாந்தம் உரைப்பார் பரிவன்புப் பாங்கில்!
 
நல்லவனோ, இல்லை பொல்லாதவனோ,
நாணம் விட்டே, உனை இரக்கின்றான் –மானந்
துறக்கின்றான் – தம்பி
‘இல்லை’யென் னாதே! ‘தொல்லை’யென்னாதே!
இருப்பதில் ஒருதுளி எடுத்துக்கொடு – இது
சரி; இது தவறெனும் ஆய்வை விடு!
 
உரைநடையில் சொற்பொழிவில் ஓங்கறிவுத் தீயாய்
திரையில்லா தேஒளிரும் தெள்ளியநற் கொள்கை!
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால் என்ன
அருமுரைகள் ஆற்றிடுவார் அத்தனையும் இம்மேடை
வெளிப்படுத்த ஒல்லாதே! வேட்கையுளார் அன்னார்
ஒளிவீசும் நூல்படித்தே  ஓர்ந்துகொள வேண்டுகிறேன்!
நூற்றுக் கணக்கான நூல்கள் கனிச்சாறாய்ப்
போற்றும் இலக்கியங்கள் புத்தெழுத்தில் தந்துள்ளார்!
சிங்களரின் வெங்கொடுமை தீர்த்தீழ நாடமைக்கப்
பங்காய் முயற்சி பலநூறு மேற்கொண்டார்!
நந்தமிழ நன்னலனே நாடி எழுதினரே
அந்தஎழுத் தெல்லாமே ஆட்சியரால் இப்பொழுது
பாட்டும் உரையுமெனப் பல்லாயி ரம்பக்கம்
நாட்டுடைமை ஆக்கி நலம்புரியப் பட்டுளதே!
 
இன்றிருந்தால் என்னஇவர் பேசிடுவார் எனபதற்கே
பொன்றாப் புகழ்ப்பாடல் ஒன்றிதனைக் கேட்பீரே!
 
பெற்றுவிட வேண்டும் – தமிழகம்
பெற்றுவிட வேண்டும் – தன்னாட்சி
பெற்றுவிட வேண்டும்!
முற்றும் நினைந்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும் மாற்றம் இலாதது!   (பெற்று)
 
நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்!   (பெற்று)
 
உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழ்வென்ன வாழ்வோ?   (பெற்று)
 
இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்!
வாய்ச்சொல்லால் முழக்கத்தால் என்னகண் டீர்கள்?
 
வெற்று நினைப்பினில் வாழ்ந்திட லாமோ?
விலகுதல் பகையெனப் பொருள்கொள்ள லாமோ? (பெற்று)
 
வாய்ப்பளித் தோர்க்கென் வணக்கமும் நன்றியும்
ஏய்வுற ஏற்க இயைந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவுக்கு மோடிதான் காரணம் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவை வெளுத்த சீமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன்.
நீ என்ன கண்றாவியை (இ )கட்டு கட்டாய் எழுதினாலும், 
கதை கதையாய் சொன்னாலும்;  எனக்குள் எழும் தமிழ் உணர்வில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

நீ மெத்தம் படித்த அறிவாளியா  ... இருந்துட்டு போ ..
நீ லங்கனா ...  இருந்துட்டு போ ..
நீ சிங்களவனா ... இருந்துட்டு போ ..
நீ தி. மு. க. வா ... இருந்துட்டு போ ..
நீ பா. ஜா. க. வா ... இருந்துட்டு போ ..
நீ  தெலுங்கானா ... இருந்துட்டு போ ..
நீ மலையாளியா ... இருந்துட்டு போ ..
நீ கன்னடனா ... இருந்துட்டு போ ..
நீ இந்தியனா ... இருந்துட்டு போ ..
நீ அரசியல் செய்பவனா செஞ்சிட்டு போ ...
நீ மொத்த உலகமாய் திரண்டு வருவியா ... வந்துட்டு போ ...
நீ எந்த கொம்பனாய் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை..
உள்ளத்தால் நான் தமிழன்.... உணர்வால் நான் தமிழன் .. 
"தமிழ் பிறப்பு" எனக்கு வரம் அதற்கு உண்மையாய் நான் ... அது மட்டுமே நான்!!!

Link to comment
Share on other sites

9 minutes ago, Sasi_varnam said:

மன்னிக்கவேண்டும் ச‍சிவர்ணம். பிறப்பில் எவருக்கும் எந்த பெருமையும் இல்லை. மனிதர்கள்  வாழ்வில் தான் பெருமை உள்ளது.  இதை எழுதிய நீங்கள் சிங்களவராக பிறந்திருந்தால் உங்கள் மூன்றாவது வரியில் உள்ள வசனத்தை மாற்றி  ''தமிழானாக இருந்து விட்டு போ'' என்றும்  கடைசி வரியில் 'சிங்களப்பிறப்பு எனக்கு வரம் அதற்கு உண்மையாக நான்''  என்றும் சிங்களத்தில்  எழுதியிருப்பீர்கள்.  அது தான் வித்தியாசம். உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இதுவே என் நிலையும் சசி! என் தமிழை நான் நேசிக்கிறேன், அதை காக்க படுபடுபவனை அது யாரென்றாலும் நான் ஆதரிக்கிறேன். அவ்வளவுதான்!! அவன் அரசியல் அவர்களுக்கானது. அதை அவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இனமும் ஏன் எந்த வகையான உயிரினங்களும் தன் இனத்தை மறுப்பதில்லை மாற்றுவதில் லை அவ்வாறு மாற தயாரானவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. அழிந்து போவதை எவரும் தடுக்க முடியாது. தமிழர்கள் தம் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மன்னிக்கவேண்டும் ச‍சிவர்ணம். பிறப்பில் எவருக்கும் எந்த பெருமையும் இல்லை. மனிதர்கள்  வாழ்வில் தான் பெருமை உள்ளது.  இதை எழுதிய நீங்கள் சிங்களவராக பிறந்திருந்தால் உங்கள் மூன்றாவது வரியில் உள்ள வசனத்தை மாற்றி  ''தமிழானாக இருந்து விட்டு போ'' என்றும்  கடைசி வரியில் 'சிங்களப்பிறப்பு எனக்கு வரம் அதற்கு உண்மையாக நான்''  என்றும் சிங்களத்தில்  எழுதியிருப்பீர்கள்.  அது தான் வித்தியாசம். உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். 

நிச்சயமாய் சொல்வேன் சிங்களவனாய் பிறந்ததில் பெருமைப்பட எனக்கு அதில் ஒன்றுமே இல்லை...
என்னுடைய வரிகள் தமிழின் தொன்மை, இலக்கிய, இலக்கண பரிணாமம், தமிழர் வாழ்வியல், சிந்தனை குறித்த தெளிவில் பிறந்தவை மட்டுமே. சிலரின் வரிகளில் அடிக்கடி தமிழரை பற்றிய சற்றே தாழ்ந்த புரிதல் ஒன்றும் இருப்பது துரதிஷ்டமே . 😢
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Sasi_varnam said:

நிச்சயமாய் சொல்வேன் சிங்களவனாய் பிறந்ததில் பெருமைப்பட எனக்கு அதில் ஒன்றுமே இல்லை...
என்னுடைய வரிகள் தமிழின் தொன்மை, இலக்கிய, இலக்கண பரிணாமம், தமிழர் வாழ்வியல், சிந்தனை குறித்த தெளிவில் பிறந்தவை மட்டுமே. சிலரின் வரிகளில் அடிக்கடி தமிழரை பற்றிய சற்றே தாழ்ந்த புரிதல் ஒன்றும் இருப்பது துரதிஷ்டமே . 😢
 
ஒரு கொலைகாற அரக்க குணம் கொண்ட இனத்தில் மதத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Sasi_varnam said:

நிச்சயமாய் சொல்வேன் சிங்களவனாய் பிறந்ததில் பெருமைப்பட எனக்கு அதில் ஒன்றுமே இல்லை...
என்னுடைய வரிகள் தமிழின் தொன்மை, இலக்கிய, இலக்கண பரிணாமம், தமிழர் வாழ்வியல், சிந்தனை குறித்த தெளிவில் பிறந்தவை மட்டுமே. சிலரின் வரிகளில் அடிக்கடி தமிழரை பற்றிய சற்றே தாழ்ந்த புரிதல் ஒன்றும் இருப்பது துரதிஷ்டமே . 😢
 
1 minute ago, விசுகு said:

ஒரு கொலைகாற அரக்க குணம் கொண்ட இனத்தில் மதத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. 

ஒரு தெளிவான வரலாறு இல்லாத, போலி வரலாறு கொண்ட இனம் சிங்கள இனம்.

ஆண் சிங்கத்துக்கும், மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனமே சிங்களம் என்று மகாவம்சம் சொல்கிறது.

அறிவுபூர்வமான மக்கள் கேள்வி கேட்க, இராவணனை சிங்களவராக்க முயல்கிறது.

போதாக்குறைக்கு விக்கி ஐயா கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தடுமாடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஒரு தெளிவான வரலாறு இல்லாத, போலி வரலாறு கொண்ட இனம் சிங்கள இனம்.

ஆண் சிங்கத்துக்கும், மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனமே சிங்களம் என்று மகாவம்சம் சொல்கிறது.

அறிவுபூர்வமான மக்கள் கேள்வி கேட்க, இராவணனை சிங்களவராக்க முயல்கிறது.

போதாக்குறைக்கு விக்கி ஐயா கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தடுமாடுகிறது.

மகிந்த வென்றதற்கும் பிரபாகரன் தோற்றதற்கும் இனத்தின் இந்த அடிப்படை தார்ப்பரியமே மூலகாரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஒரு தெளிவான வரலாறு இல்லாத, போலி வரலாறு கொண்ட இனம் சிங்கள இனம்.

ஆண் சிங்கத்துக்கும், மனிதப்பெண்ணுக்கும் பிறந்த இனமே சிங்களம் என்று மகாவம்சம் சொல்கிறது.

அறிவுபூர்வமான மக்கள் கேள்வி கேட்க, இராவணனை சிங்களவராக்க முயல்கிறது.

போதாக்குறைக்கு விக்கி ஐயா கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தடுமாடுகிறது.

 இனி இதுக்கு எங்கடை வரலாற்று விற்பன்னர்கள் வந்து என்ன சொல்லப்போயினம் எண்டதை  நினைக்க என்ரை நெஞ்சு திக்கு திக்கெண்டு அடிக்குது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

பரவாயில்லை விளங்க நினைப்பவன். பச்சை முக்கியமுல்லை. சாதாரண மக்கள் நினைப்பதை நான் இங்கு எழுதுகிறேன். நான்  எழுதுவது யாழ் களத்தை வாசிக்கும் வாசகர்களுக்காகவே.  நீங்கள் எனக்கு பச்சை போட உங்களையும்  என்னையும்  ஒரே ஆள் என்று இங்கு விடுப்பு கதைப்பதையே பொழுது போக்காக  கொண்ட சிலர் விடுப்பு பொய்களை கூறி வருகின்றனர். பரவாயில்லை அடுத்தவன் விடுப்பு கதைப்பது தமிழர்  கலாச்சாரத்தின் முக்கிய கூறு தானே.  ஊரை விட்டு வந்து நீண்ட நாளாலும் அந்த பழக்கம் விட்டு போகாமல் அந்த  பேச்சுவழக்கிலேயே விடுப்பு பேசுது  அவர்களுக்கு சுகத்தை கொடுத்தால் அனுபவித்துவிட்டு போகட்டும்

பேச்சு வழக்கில் பதிவதில் என்ன தவறு என்று விளக்குவீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபசுர குடிநீர் வழங்கல் – நாசரேத் பேரூராட்சி

கபசுர குடிநீர் வழங்கல் - நாசரேத் பேரூராட்சி

நாம் தமிழர்
நாசரேத் பேரூராட்சி

(08-09-2020 ) அன்று நாசரேத் பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வவை நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார்கள். திருமதி. அனிதா, திருமதி. சோபி பத்மா, திருமதி. இந்திராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருத்துவர். விஜய் ஆனந்த், திரு. ஜெயசீலன், திரு. பிரேம்குமார், திரு. கல்யாணசுந்தரம், திரு. வைகுண்டமணி, திரு. ஓபேத், திரு. முத்துகிருஷ்ணன் திரு. அறிஞர் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்

இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

செய்தி தொடர்பாளர்
நாசரேத் பேரூராட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கொடைக்கானல் நகரில் பழனி சட்டமன்றத் தொகுதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய, மாநில அரசுகள் கூட்டுசேர்ந்து செய்து முடித்தப் பச்சைப்படுகொலையாகும்-சீமான்

9 hours ago, tulpen said:

மன்னிக்கவேண்டும் ச‍சிவர்ணம். பிறப்பில் எவருக்கும் எந்த பெருமையும் இல்லை. மனிதர்கள்  வாழ்வில் தான் பெருமை உள்ளது.  இதை எழுதிய நீங்கள் சிங்களவராக பிறந்திருந்தால் உங்கள் மூன்றாவது வரியில் உள்ள வசனத்தை மாற்றி  ''தமிழானாக இருந்து விட்டு போ'' என்றும்  கடைசி வரியில் 'சிங்களப்பிறப்பு எனக்கு வரம் அதற்கு உண்மையாக நான்''  என்றும் சிங்களத்தில்  எழுதியிருப்பீர்கள்.  அது தான் வித்தியாசம். உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். 

சிங்களவனாய் பிறப்பதில் என்ன பெருமை... புத்த மதத்திற்கே இழிவு இந்த இனம்... இறந்தவர்களையே ஆடை நீக்கி அழகு பார்த்த கேடு கெட்ட இனம், இதை நீங்கள் பெருமைப்படுவீர்களென நினைக்கவில்லை... உங்கள் மனநிலை இப்படியா ஒப்பட சொல்கின்றாது.

தமிழனாக அதுவும் தலைவர் பிறந்த காலத்தில் நானும் இருந்தேன் என பெருமை கெள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று களத்தில் மன்சூர் அலிகான் எங்களுடன் நாம் தமிழர் கட்சி

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

பேச்சு வழக்கில் பதிவதில் என்ன தவறு என்று விளக்குவீர்களா? 

பேச்சுவழக்கில் பதிவதில் தவறு இல்லை. அதுவும் ஒரு மொழி நடை தான். கவிதைகளும்ஆ உள்ளனவே. ஆனால் பேச்சுவழக்கில் சக கருத்தாளர் இல்லாத நேரம்  அவர்களைப்  பற்றி அடிக்கடி பொய்கதைகளை கூறி  விடுப்பு பேசும் கேவலமான கலாச்சாரம்   யாழ்களத்திற்கு பெருமை தராது என்பதைத் தான்  குறிப்பபிட்டேன். அதற்காக அவ்வாறு செய்து பழக்கப்பட்ட, வயதாகியும்  அதை கைவிட முடியாமல் தவிக்கும் அந்த மனிதர்களின் தனியுரிமையில் நான் தலையிடவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

large_NTK.jpg.3c0c199bd6b68f20ec4f176880f9c825.jpg

24.56 + 27.63 = 52.19%

பாதிப்பு இல்லை என்கிறார்கள்.

பெரிய பாதிப்பு இருக்காது. இருப்பதை தானே இழக்கமுடியும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.