Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர், வழியாக.. இந்தியாவுக்குள் நுழைவோம். சீனா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவு

காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்!

இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது.

டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன.

பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா மிரட்டும் தொனியில் தொடர்ந்து கெஞ்சி வருகிறது.

இதனிடையே, இது குறித்து சீன ஆய்வாளர் லாங் ஷிங்சுன், அந்த நாட்டு மீடியாவான குளோபல் டைம்ஸ்-சில் எழுதி உள்ள கட்டுரையில், பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக் கொண்டால் அப்பகுதி பொதுவான பிரதேசமாக இருக்கும். தொல்லைதரும் பகுதியாக இருக்காது.

சீனாவின் சாலை திட்டத்தால் வடகிழக்கு மாநிலங்கள் தனி நாடாக பிரிந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியா சரியான கட்டமைப்பை செய்து தரவில்லை. அதை சீனா செய்வதால் அந்த மாநிலங்கள் தனி நாடாக பிரிந்துவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

பூடானுக்காக இந்தியா வரிந்து கட்டுவதை போல, பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் தவிர 3வது நாட்டின் ராணுவமும் (சீனா) நுழையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சீனா தரப்பில் இந்தியாவை மிரட்டும் தொனியில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தை சீனா இப்போதுதான் கிளப்ப ஆரம்பித்துள்ளது. ஏதாவது சொல்லி மிரட்டி, எப்படியாவது இந்திய படைகளை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்பதே சீனா எண்ணம். இந்தியாவுடன் ராணுவ மோதலை சீனா தவிர்க்க நினைப்பது தெளிவாகியுள்ளது.

நன்றி தற்ஸ்  தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தால்...இந்தியாவுக்குக் கோவணத் துண்டும் மிஞ்சாது போல ....கிடக்கே!:rolleyes:

இந்தியா என்று ஒரு தேசம் என்றும் இருந்ததில்லை !

அது ஒரு மாயை!

அது துண்டு படுவதை எனது வாழ் நாளுக்குள் காண வேண்டும் என்பது எனது ஆசை!

அது நிச்சயம் நடக்கும்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

.. அது துண்டு படுவதை எனது வாழ் நாளுக்குள் காண வேண்டும் என்பது எனது ஆசை!

அது நிச்சயம் நடக்கும்!

நல்ல எண்ணம்.. நிறைவேற வாழ்த்துக்கள்!  bourgeons.gif

அப்படியாவது என் கடவுச்சீட்டில் தமிழ் இடம் பெறட்டும்..!! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்!

செய்தி உண்மையாக இருந்து....சொன்னது நடக்குமானால் சந்தோசம்.Bildergebnis für blumen gif

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ஓர் தேசம்.

சிங்கிஸ் கான் முதல் குபிளை கான் (சிங்கிஸ் கான் இந்த பேரன்) வரையான மொங்கோலியர்கள் சீன மீது படையெடுத்தனர்.

சீனாவை மொங்கோலியர் வசம் கையகப்படுத்தல் என்ற சிங்கிஸ் கான் இன் கனவை, குபிளை கான் பௌதிக அடிப்படையில் நிறைவேற்றி வைத்தார்.

ஆனால் மொங்கோலியரான குபிளை கானும் அவரது பரம்பரையும்  சீனரவாகே மாறிவிட்டனர், அல்லது சீனா அவர்களை மாற்றிவிட்டது.

இங்கே தான் தேசம் என்பதின் தன்மையும் சக்தியையும்  மிகவும் வெளிப்படையாக சீனா சிறு சஞ்சலமும் இன்றி வெளிப்படையாக அதன்  இறைமையையம் சுதந்திரத்தையும் தேசமாகவே கோலோச்சுகிறது.

ஆனால்  இந்திய ஓர் தேசம் அன்று.

ஆனால்  இந்தியா, பிரிட்டிஷ் ஆல் அவர்களது வணிக, அரசியல் மற்றும் இராணுவ நலன்கருதி,  ஏலவே  துண்டுகளாக உடைந்து சிதறியிருந்த  மனிதக் கூட்டத்தையும் நிலப்பரப்பையும் இராணுவ வலிமை என்ற பசையால் ஒட்டப்பட்ட  ஓட்டைகளும், வெடிப்பும், நீங்கலும், பாரிய இடைவெளிகளும் (fault lines), பள்ளத்தாக்குகழும், கணவாய்களும் ஆனா நிலைக்கண்ணாடி. அது பார்ப்பவர்களையும், பார்க்கப்படுவர்களையும் அவ்வாறே காட்டும்.

அதனால் தான் இந்தியா மிகவும் ஆழமாக பின்னிப் பிணைத்திருந்த பிரிட்டிஷ்ஷாரை இந்தியராக மற்ற முடியவில்லை.

ஏனெனில் பிரிட்ஷ்ஷாரை விட மொங்கோலியல் மிகவும் கொடூரமான வன்முறையைப் உபயோகித்தே சீனாவை ஆக்கிரமித்தனர்.

இதை விட மொங்கோலியர் சீன நிலப்பரப்பின் அயலவர் ஆனால் பிரிடிஷ்ஷார் தூர தேச அந்நியர்.

வணிகம் மற்றும்  ராஜதந்திரதுடன் இராணுவ பழத்தை பிரயோகித்த பிரிட்ஷ்ஷாரை இந்தியா என்ற பெருநிலப்பரப்பு அந்நிலத்தவராகக் (nativication to the soil) கூட மாற்ற முடியவில்லை.

India is at best power-transferred (by and from British), land controllling kleptocracy.

This is the reason for it India never will be or shall be a Nation nor Super power.

Edited by Kadancha
correction.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

நல்ல எண்ணம்.. நிறைவேற வாழ்த்துக்கள்!  bourgeons.gif

அப்படியாவது என் கடவுச்சீட்டில் தமிழ் இடம் பெறட்டும்..!! 

11 hours ago, புங்கையூரன் said:

போற போக்கைப் பார்த்தால்...இந்தியாவுக்குக் கோவணத் துண்டும் மிஞ்சாது போல ....கிடக்கே!:rolleyes:

இந்தியா என்று ஒரு தேசம் என்றும் இருந்ததில்லை !

அது ஒரு மாயை!

அது துண்டு படுவதை எனது வாழ் நாளுக்குள் காண வேண்டும் என்பது எனது ஆசை!

அது நிச்சயம் நடக்கும்!

இந்தியா  சிதறாது தமிழருக்கு விடிவில்லை

தமிழ்  வளர வழியில்லை

என்  வாழ்நாளில் அதைக்காண்பேனாயின் அதுவே  பேறு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

சீனா ஓர் தேசம்.

சிங்கிஸ் கான் முதல் குபிளை கான் (சிங்கிஸ் கான் இந்த பேரன்) வரையான மொங்கோலியர்கள் சீன மீது படையெடுத்தனர்.

சீனாவை மொங்கோலியர் வசம் கையகப்படுத்தல் என்ற சிங்கிஸ் கான் இன் கனவை, குபிளை கான் பௌதிக அடிப்படையில் நிறைவேற்றி வைத்தார்.

ஆனால் மொங்கோலியரான குபிளை கானும் அவரது பரம்பரையும்  சீனரவாகே மாறிவிட்டனர், அல்லது சீனா அவர்களை மாற்றிவிட்டது.

இங்கே தான் தேசம் என்பதின் தன்மையும் சக்தியையும்  மிகவும் வெளிப்படையாக சீனா சிறு சஞ்சலமும் இன்றி வெளிப்படையாக அதன்  இறைமையையம் சுதந்திரத்தையும் தேசமாகவே கோலோச்சுகிறது.

ஆனால்  இந்திய ஓர் தேசம் அன்று.

ஆனால்  இந்தியா, பிரிட்டிஷ் ஆல் அவர்களது வணிக, அரசியல் மற்றும் இராணுவ நலன்கருதி,  ஏலவே  துண்டுகளாக உடைந்து சிதறியிருந்த  மனிதக் கூட்டத்தையும் நிலப்பரப்பையும் இராணுவ வலிமை என்ற பசையால் ஒட்டப்பட்ட  ஓட்டைகளும், வெடிப்பும், நீங்கலும், பாரிய இடைவெளிகளும் (fault lines), பள்ளத்தாக்குகழும், கணவாய்களும் ஆனா நிலைக்கண்ணாடி. அது பார்ப்பவர்களையும், பார்க்கப்படுவர்களையும் அவ்வாறே காட்டும்.

அதனால் தான் இந்தியா மிகவும் ஆழமாக பின்னிப் பிணைத்திருந்த பிரிட்டிஷ்ஷாரை இந்தியராக மற்ற முடியவில்லை.

ஏனெனில் பிரிட்ஷ்ஷாரை விட மொங்கோலியல் மிகவும் கொடூரமான வன்முறையைப் உபயோகித்தே சீனாவை ஆக்கிரமித்தனர்.

இதை விட மொங்கோலியர் சீன நிலப்பரப்பின் அயலவர் ஆனால் பிரிடிஷ்ஷார் தூர தேச அந்நியர்.

வணிகம் மற்றும்  ராஜதந்திரதுடன் இராணுவ பழத்தை பிரயோகித்த பிரிட்ஷ்ஷாரை இந்தியா என்ற பெருநிலப்பரப்பு அந்நிலத்தவராகக் (nativication to the soil) கூட மாற்ற முடியவில்லை.

India is at best power-transferred (by and from British), land controllling kleptocracy.

This is the reason for it India never will be or shall be a Nation nor Super power.

உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக எல்லாத் திரியிலும் ஆங்கிலத்தில் எழுதி உங்கள் திறமையை நிருபீக்க வேண்டியதில்லை...இது தமிழர்களுக்கான தளம்...தமிழில் எழுதவும்.
 
நிர்வாகம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் பாராபட்சம் காட்டுமாக்கும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

என்னை போல் உங்களுக்கும் ஆங்கிலம் தெரியதாக்கும்  நம்ம இனம் போல் இருக்கே:10_wink::10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

அவர் எழுதுவது சரியென்றுதான் தெரிகிறது ...........
அதுதான் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அவர் தமிழில்தான் கருத்தை எழுதுகிறார் ...
ஆங்கிலம் எக்ஸ்ட்ரா சப்போர்ட் ... அதை தமிழில் மாற்றினால் அர்த்தம் வேறு ஆகிவிடும்.
அது அப்படியே இருப்பது அன்று என்றுதான் நான் எண்ணுகிறேன்.

அவர் முக்கியமான பொயிண்ட்களையே அப்படியே 
குழப்பாமல் எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.

ரதி 
எல்லோருக்கும் எல்லா திறமையும் இல்லை.
எனக்கும் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மாற்ற தெரியாது 
ஆனால் நெடுக்கரிடம் அந்த திறமை இருப்பதை பார்த்து இருக்கிறேன்.
நாம் எழுதலாம் ஆனால் அர்த்தம் மாறிவிடும்.

காவோலையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் 
அனால் அதை காவோலைதான் என்று புரிந்துகொள்ள முடியாது.
தமிழர் நாட்டில் குளிர் இல்லை அதனால் பனி இல்லை 
எல்லா விதமான பனியையும் பனி என்றுதான் தமிழில் எழுத முடியும் 
இங்கு ஒவ்வரு நிலையிலும் ஒரு பெயர் உண்டு .... அதை எப்படி எழுதுவது ? 

3 hours ago, குமாரசாமி said:

செய்தி உண்மையாக இருந்து....சொன்னது நடக்குமானால் சந்தோசம்.Bildergebnis für blumen gif

இந்தியா ஒருபோதும் சீனாவுடன் சண்டைக்கு போகாது 
அமெரிக்க பழிதீர்க்க வேண்டுமானால் அப்போதைய 
இந்திய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி 
இந்தியாவை தூண்டி விடலாம்.

தவிர சீனா ஒரு போதும் போரை விரும்பாது சீனாவின் இராஜ தந்திரம் 
தொலைநோக்கு பார்வை கொண்டது. போரில் பொருள் இழப்பை செய்வதை 
சீனா விரும்புவதில்லை தனது ஆயுதங்களை நட்பு நாடுகளிடம் கொடுத்து 
அவர்கள் மூலமே சண்டையை செய்து வருகிறது.

அமெரிக்கவிட்கு ஒரு இஸ்ரேல் என்றால் 
சீனாவுக்கு பாகிஸ்தான் என்பது 60-70 களிலேயே 
நிரூபணமான ஒன்று.
அப்படி இருக்கும்போதே ..... பாகிஸ்தானை அமெரிக்க சார்பு நாடாக்கி 
அனைத்து அமெரிக்க உதவிகளையும் பாகிஸ்தானுக்கு பின்புலத்தில் இருந்து 
பெற்று கொடுத்தது சீனாதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Maruthankerny said:

காவோலையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் 
அனால் அதை காவோலைதான் என்று புரிந்துகொள்ள முடியாது.

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

Palm tree's dried leave. 

இப்பிடித்தான் எழுதலாம். 

ஆனால் நாம் ஒரு அர்த்தத்தில்தான் அதை  காவோலை என்கிறோம்.
அந்த அர்த்தம் அதில் வராது. 

1 hour ago, குமாரசாமி said:

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

Kaavolai :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Maruthankerny said:

Palm tree's dried leave. 

இப்பிடித்தான் எழுதலாம். 

ஆனால் நாம் ஒரு அர்த்தத்தில்தான் அதை  காவோலை என்கிறோம்.
அந்த அர்த்தம் அதில் வராது. 

அதுதான் எந்த மொழியிலும் இல்லாத பெருமையும் சிறப்பும் வசதியும் எமது தமிழில் நிறைந்தே இருக்கின்றது. சங்கேத மொழியாகவும் இருக்கின்றது. சுத்த தமிழில் கதைத்தால்  தன்னை சுத்ததமிழனாக காட்டிக்கொள்பவனுக்கே அந்த தமிழ் விளங்காது.

9 minutes ago, ஜீவன் சிவா said:

Kaavolai :grin:

அண்ணை இப்ப எல்லா இடங்களிலையும் உதுதானே நடக்குது......அதாவது இங்கிலிஸ் பாசையிலை எழுதி வாசிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:
உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்கிறோம். அதற்காக எல்லாத் திரியிலும் ஆங்கிலத்தில் எழுதி உங்கள் திறமையை நிருபீக்க வேண்டியதில்லை...இது தமிழர்களுக்கான தளம்...தமிழில் எழுதவும்.
 
நிர்வாகம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் பாராபட்சம் காட்டுமாக்கும்.
 
3 hours ago, தனி ஒருவன் said:

என்னை போல் உங்களுக்கும் ஆங்கிலம் தெரியதாக்கும்  நம்ம இனம் போல் இருக்கே:10_wink::10_wink:

உங்கள் கருத்தை ஆக்கபூர்வமான விமர்சனமாகவே ஏற்றுக்கொள்கிறேன்.  

முற்றாக தமிழில் எழுதிவதற்கு முயற்சிக்கிறேன்.

ஆங்கிலத்தில் எழுத்துவதற்கன காரணம், எழுதப்பட்ட கூற்றின் வலுவும் வீச்சும் தமிழில் அக்கருத்தை எழுதினால் இருக்கும் அளவிற்கு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தினாலேயேயொழிய எனது ஆங்கிலப் புலமையை பறைசாற்றுவதற்கு அன்று.

ஆனால் அக்கருத்தை அதே வலுவுடனும்  வீச்சுடனும் தமிழில் எழுதிவதற்கான சொற்களையும்  வசன அமைப்புகளையும் உணர்ந்து எழுதுவது மிக கடினமாக உள்ளது.

இதுவே ஆங்கில உபயோகிப்பதற்கன முழுமுதற்க் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அதுசரி காவோலைக்கு என்ன இங்கிலிஸ் பெயர்?

அட.....காவோலைக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கெண்டு இண்டைக்குத் தான் தெரியுது....!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு இனத்தின் சாபத்திற்கு உள்ளான நாடு, அதன் உடைவு மகிழ்ச்சியான செய்தியே. ஆனால் பல இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் இருக்கும் இந்து நாடு பிளவு படுவதை இப்போதைய  வல்லரசுகள் விரும்பாது. எதிர் காலத்தில் யார் வல்லரசு என்பதை பொறுத்து விளைவுகள் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர்களாக இருந்த... நேரு, இந்திரா காந்தி முதல்.... 
இதுவரை யாரும் இஸ்ரேல்  நாட்டுடன் நடப்புறவு கொள்ளவில்லை.
சென்ற கிழமை மோடி, இஸ்ரேலுக்கு பயணம் செய்ததன்  மூலம், நட்பு  புதிப்பிக்கப் பட்டுள்ளது.
அதனை வைத்து... பாகிஸ்தானின் சீண்டல்களுக்கு, போர் மூலம்  பதிலடி கொடுக்க, இந்தியா ஆயத்தப் படுத்துகின்றது  என்று கருதுகின்றேன். அந்த நேரம் பாகிஸ்தானுக்கு சார்பாக, சீனா நிச்சயம்   வரும்.

மோடிக்கும், அவரது கட்சிக்கும்... அடுத்த தேர்தலில்,  இந்திய  மக்களின் மனதை வசப்படுத்த....  
ஒரு இராணுவ வெற்றி அவசியமாக உள்ளது. அது விரைவில்... நடை பெறலாம்.

நாங்கள்... ஜாலியாக  "பொப் கோன்" Bildergebnis für popcorn smiley சாப்பிட்டுக் கொண்டு,  "பிரேக்கிங் நியூஸ்"  பார்க்கலாம்.  :grin: :D:   Bildergebnis für television smiley

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

:grin: :grin: :grin:

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen und Text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎07‎/‎2017 at 5:02 PM, தனி ஒருவன் said:

என்னை போல் உங்களுக்கும் ஆங்கிலம் தெரியதாக்கும்  நம்ம இனம் போல் இருக்கே:10_wink::10_wink:

எப்படி முனி இப்படி:cool:

On ‎11‎/‎07‎/‎2017 at 5:11 PM, Maruthankerny said:

அவர் எழுதுவது சரியென்றுதான் தெரிகிறது ...........
அதுதான் நிர்வாகம் எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அவர் தமிழில்தான் கருத்தை எழுதுகிறார் ...
ஆங்கிலம் எக்ஸ்ட்ரா சப்போர்ட் ... அதை தமிழில் மாற்றினால் அர்த்தம் வேறு ஆகிவிடும்.
அது அப்படியே இருப்பது அன்று என்றுதான் நான் எண்ணுகிறேன்.

அவர் முக்கியமான பொயிண்ட்களையே அப்படியே 
குழப்பாமல் எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.

ரதி 
எல்லோருக்கும் எல்லா திறமையும் இல்லை.
எனக்கும் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மாற்ற தெரியாது 
ஆனால் நெடுக்கரிடம் அந்த திறமை இருப்பதை பார்த்து இருக்கிறேன்.
நாம் எழுதலாம் ஆனால் அர்த்தம் மாறிவிடும்.

காவோலையை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் 
அனால் அதை காவோலைதான் என்று புரிந்துகொள்ள முடியாது.
தமிழர் நாட்டில் குளிர் இல்லை அதனால் பனி இல்லை 
எல்லா விதமான பனியையும் பனி என்றுதான் தமிழில் எழுத முடியும் 
இங்கு ஒவ்வரு நிலையிலும் ஒரு பெயர் உண்டு .... அதை எப்படி எழுதுவது ? 

இந்தியா ஒருபோதும் சீனாவுடன் சண்டைக்கு போகாது 
அமெரிக்க பழிதீர்க்க வேண்டுமானால் அப்போதைய 
இந்திய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி 
இந்தியாவை தூண்டி விடலாம்.

தவிர சீனா ஒரு போதும் போரை விரும்பாது சீனாவின் இராஜ தந்திரம் 
தொலைநோக்கு பார்வை கொண்டது. போரில் பொருள் இழப்பை செய்வதை 
சீனா விரும்புவதில்லை தனது ஆயுதங்களை நட்பு நாடுகளிடம் கொடுத்து 
அவர்கள் மூலமே சண்டையை செய்து வருகிறது.

அமெரிக்கவிட்கு ஒரு இஸ்ரேல் என்றால் 
சீனாவுக்கு பாகிஸ்தான் என்பது 60-70 களிலேயே 
நிரூபணமான ஒன்று.
அப்படி இருக்கும்போதே ..... பாகிஸ்தானை அமெரிக்க சார்பு நாடாக்கி 
அனைத்து அமெரிக்க உதவிகளையும் பாகிஸ்தானுக்கு பின்புலத்தில் இருந்து 
பெற்று கொடுத்தது சீனாதான். 

மருதர்,எல்லோரும் இப்படி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பேசும் மொழிப் புலமையை காட்டத் தொடங்கினால் எப்படி இருக்கும்...அவருக்கு நல்லாய் தமிழ் எழுதத் தெரியும் போது பிற்கு எதற்கு இடைச் செருகலாய் ஆங்கிலம்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் உள்ள விஜயகாந்தும் அர்ஜுனும் மற்றும் சில ஜெய் ஹிந்த் நடிகர்கள் இருக்கும் வரைக்கும் அது நடக்காது tw_dissapointed_relieved:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

எப்படி முனி இப்படி:cool:

மருதர்,எல்லோரும் இப்படி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பேசும் மொழிப் புலமையை காட்டத் தொடங்கினால் எப்படி இருக்கும்...அவருக்கு நல்லாய் தமிழ் எழுதத் தெரியும் போது பிற்கு எதற்கு இடைச் செருகலாய் ஆங்கிலம்?

ஆங்கிலம் பொதுவாக எல்லோருக்கும் இரண்டாம் மொழியாக 
இருக்கிறது. தமிழர்களுக்கு இரண்டாம் மொழி என்றால் அது ஆங்கிலம்தானே ?

சில விடயங்களை மொழி பெயர்க்க போனால் சிக்கல் இருக்கிறது 
அதை அப்படியே போட்டுவிட்டால் பிரச்சனை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். 

அது இடை செருக்கலாகத்தானே இருக்கிறது?
மூல கருத்து தமிழிலும் ..... ஒரு சப்போர்ட் ஆங்கிலத்திலும் இருப்பதில் 
அப்படி என்ன தவறு இருக்க போகிறது ?

சொல்லவந்த விடயத்தை நடைமுறையில் விளங்கி கொள்ள 
அது உதவியாகத்தானே இருக்க போகிறது.

தமிழில் உரையாடினால் சிறப்பு 
எமக்கு அந்த அளவில் தமிழ் அறிவும் வேண்டுமே ?

மொழிபெயர்ப்பில் நிறைய விஷயம் உண்டு ....
முன்பு தமிழ்நெட் வாசித்தீர்களோ தெரியவில்லை .... வாசித்திருந்தால் 
மற்றவர்களின் மொழி பெயர்ப்புக்கும் தமிழ்நெட்டின் மொழிபெயர்ப்புக்கு 
உள்ள வித்தியாசம் தெரியும்.

லண்டனில் ஜெகோவா காரர்களை கண்டால் அவர்கள் விழித்தெழு என்று ஒரு மாத சஞ்சிகை 
வெளியிடுவார்கள் அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் வேண்டி வாசித்து பாருங்கள் 
இரண்டிலுமே அர்த்தம் புரளாது ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பாக இருக்கும்.
நான் அதை ஆரம்ப நாட்களில் ஆங்கிலம் பயிலவே வாசித்து வந்தேன். 
உங்களுக்கு தொடர்பு வேண்டும் என்றால் ஏற்படுத்தி தருகிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Maruthankerny said:

லண்டனில் ஜெகோவா காரர்களை கண்டால் அவர்கள் விழித்தெழு என்று ஒரு மாத சஞ்சிகை 
வெளியிடுவார்கள் அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் வேண்டி வாசித்து பாருங்கள் 
இரண்டிலுமே அர்த்தம் புரளாது ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பாக இருக்கும்.
நான் அதை ஆரம்ப நாட்களில் ஆங்கிலம் பயிலவே வாசித்து வந்தேன். 
உங்களுக்கு தொடர்பு வேண்டும் என்றால் ஏற்படுத்தி தருகிறேன். 

அவையள் சொல்லாமலே வீட்டு வாசல்லை வந்து நிண்டு பெல் அடிப்பினம்.....இதுக்கு என்னத்துக்கு தரகர்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

எப்படி முனி இப்படி:cool:

மருதர்,எல்லோரும் இப்படி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பேசும் மொழிப் புலமையை காட்டத் தொடங்கினால் எப்படி இருக்கும்...அவருக்கு நல்லாய் தமிழ் எழுதத் தெரியும் போது பிற்கு எதற்கு இடைச் செருகலாய் ஆங்கிலம்?

நிச்சயமாக நான் தமிழன். எது விதமான கேள்வியும் அதில் இல்லை.

ஆனால் தமிழை நான் நன்றாக கற்று தமிழில் நன்கு தேர்ச்சி உடையவர் என்ற முடிவை எவ்வாறு அடைந்தீர்கள்?

நீங்கள் கூறுவது சரியானால், நான் ஏன் எனது தமிழ் மதி வெளியில் சொற்களையும் வசன அமைப்புகளையும் எப்போதும் தேடி ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது?

நான் இங்கு பிரயோகித்த "தமிழ் மதி வெளியில்" என்பதன் பொருள் உங்களுக்கு உடனடியாகப் தெரிகிறதா?

தனி ஒருவனுடன் அன்று நான் குடியுரிமை பற்றி கதைப்பதத்திற்கு வேறு ஓர் பதிவு வேண்டும் என்று  கூறியிருந்தேன்.

அதற்கு காரணம் ஆங்கிலத்தில் விளம்பின்னால் தான்  குடியுரிமையின் விளக்கத்தை இலகுவாகவும் தெளிவாகவும் கூறமுடியும்.

இங்கு தனி ஒருவனுக்கு தனி ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியுமா அல்லது தெரியாத என்பது கேள்வியல்ல.  

குடியுரிமை பற்றி என்னால் தமிழில் உணர்ந்து முடியவில்லை. அதை முற்றாக ஆங்கிலத்தில் யாழில் எழுதுவது முறையல்ல என்ற உணர்வினால் நான் அதை அன்று தவிர்த்துக்கொண்டேன்.

ஏனெனில் ஐரோப்பாப்பாவில் குடி புகுந்தவர்கள்,  இதை புலம்பெயர்ந்தவர் களும்  உள்ளடக்கம், அந்தந்த நாடுகளில் உள்ள சொந்த மக்கட்தன்மையை சட்டபூர்வமாக  எடுக்கும்போதே  அந்நாடுகளின் குடியானவர்களாக சட்ட அங்கீகாரம் பெறுகிறார்கள்.

நான் மேலே எழுதிய விளக்கம் ஆங்கிலத்தில் உள்ள naturalisation என்ற சொல்லை தமிழில் விளக்கவே.

ஆயினும் naturalisation என்ற சொல்லிற்கு தமிழில் ஓர் பொருத்தமான சொல்ல இல்லை. அப்படி இருந்தால் நான் அறியவில்லை. உங்களுத் தெரிந்தால் நான் அறிய ஆவலாக இருக்கிறேன்.

சிலவேளைகளில் நீங்கள் இயைபாக்கம் என்ற தமிழ் பதம் naturalisation என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமானது  கூறலாம்.

அனால்  naturalisation என்பது  சட்ட அடிப்படையிலான செயலாக்கம், இயைபாக்கம் என்பது உயிரியல் பூர்வமான  செயலாக்கம்.

இவற்றை கூட  சிந்தித்து சிரமப்பட்டே எழுதினேன்.

ஓர் கருத்தை முற்றாக  தமிழில் சரியாகவும் தெளிவாகவும் ஏனையோருக்கு இலகுவாகப் புரியும் படியும் எழுதுவது எவ்வளவு கடினம் என்று இப்பொது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆயினும் முற்றாக தமிழில் எழுதிவதற்கு முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அவையள் சொல்லாமலே வீட்டு வாசல்லை வந்து நிண்டு பெல் அடிப்பினம்.....இதுக்கு என்னத்துக்கு தரகர்? :grin:

தட்டி தவறி அதனால் ஏதும் புண்ணியம் கிடைக்கும் என்றால் 
சேர்த்துவிட்ட புண்ணியம் என்னை சேரும் இல்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நிச்சயமாக நான் தமிழன். எது விதமான கேள்வியும் அதில் இல்லை.

ஆனால் தமிழை நான் நன்றாக கற்று தமிழில் நன்கு தேர்ச்சி உடையவர் என்ற முடிவை எவ்வாறு அடைந்தீர்கள்?

நீங்கள் கூறுவது சரியானால், நான் ஏன் எனது தமிழ் மதி வெளியில் சொற்களையும் வசன அமைப்புகளையும் எப்போதும் தேடி ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது?

நான் இங்கு பிரயோகித்த "தமிழ் மதி வெளியில்" என்பதன் பொருள் உங்களுக்கு உடனடியாகப் தெரிகிறதா?

தனி ஒருவனுடன் அன்று நான் குடியுரிமை பற்றி கதைப்பதத்திற்கு வேறு ஓர் பதிவு வேண்டும் என்று  கூறியிருந்தேன்.

அதற்கு காரணம் ஆங்கிலத்தில் விளம்பின்னால் தான்  குடியுரிமையின் விளக்கத்தை இலகுவாகவும் தெளிவாகவும் கூறமுடியும்.

இங்கு தனி ஒருவனுக்கு தனி ஒருவனுக்கு ஆங்கிலம் தெரியுமா அல்லது தெரியாத என்பது கேள்வியல்ல.  

குடியுரிமை பற்றி என்னால் தமிழில் உணர்ந்து முடியவில்லை. அதை முற்றாக ஆங்கிலத்தில் யாழில் எழுதுவது முறையல்ல என்ற உணர்வினால் நான் அதை அன்று தவிர்த்துக்கொண்டேன்.

ஏனெனில் ஐரோப்பாப்பாவில் குடி புகுந்தவர்கள்,  இதை புலம்பெயர்ந்தவர் களும்  உள்ளடக்கம், அந்தந்த நாடுகளில் உள்ள சொந்த மக்கட்தன்மையை சட்டபூர்வமாக  எடுக்கும்போதே  அந்நாடுகளின் குடியானவர்களாக சட்ட அங்கீகாரம் பெறுகிறார்கள்.

நான் மேலே எழுதிய விளக்கம் ஆங்கிலத்தில் உள்ள naturalisation என்ற சொல்லை தமிழில் விளக்கவே.

ஆயினும் naturalisation என்ற சொல்லிற்கு தமிழில் ஓர் பொருத்தமான சொல்ல இல்லை. அப்படி இருந்தால் நான் அறியவில்லை. உங்களுத் தெரிந்தால் நான் அறிய ஆவலாக இருக்கிறேன்.

சிலவேளைகளில் நீங்கள் இயைபாக்கம் என்ற தமிழ் பதம் naturalisation என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமானது  கூறலாம்.

அனால்  naturalisation என்பது  சட்ட அடிப்படையிலான செயலாக்கம், இயைபாக்கம் என்பது உயிரியல் பூர்வமான  செயலாக்கம்.

இவற்றை கூட  சிந்தித்து சிரமப்பட்டே எழுதினேன்.

ஓர் கருத்தை முற்றாக  தமிழில் சரியாகவும் தெளிவாகவும் ஏனையோருக்கு இலகுவாகப் புரியும் படியும் எழுதுவது எவ்வளவு கடினம் என்று இப்பொது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆயினும் முற்றாக தமிழில் எழுதிவதற்கு முயற்சிக்கிறேன்.

கடன்சா,

எண்ட அக்கா இப்படித்தான், கண்டிப்பு ஆனால் அன்பானவர். ஆனாலும் மருதர் சொல்வதே சரி.

நீங்கள் உங்கள் பாணியில் தொடருங்கள். உங்கள் ஆழமான கருத்துக்கள் நீங்கள் நன்கு வாசிக்கிறீர்கள் என புரிகிறது.

சில விடயங்களை மொழி பெயர்க்க நேரம் கிடையாது. அதனாலேயே பதிய சோம்பலாவோம். அதிலும் பார்க்க இப்படியாவது பதிவது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.