Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள் தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை

Featured Replies

ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள்

sivaji-P27-4ad82dbd8ce8e21c1f8a9ba87842a8ac1ed0db6f.jpg

தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை  

(எம்.நியூட்டன்)

ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண  சபை வழங்கும் என்று வடக்­கு­ மா­காணசபையில் நேற்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன்  அது தொடர்  பில் வேண்­டு­கோளும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

வடக்­கு­ மா­கா­ண­ச­பையின் 106 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் நேற்று நடை­பெற்­றது.  இதன்­போது வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் எம்.கே சிவா­ஜி­லிங்கம் உரை­யாற்­று­கையில்   மியன்­மா­ரி­லி­ருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் இலங்கைக் கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­த­போது கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு மல்­லாகம் நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யுடன் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் கல்­கிசைப் பொலிஸ் பிரிவில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஒரு சில இன­வாத பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் அவர்­களை நாடு கடத்­து­மாறு கோரி துவே­ச­மாக நடந்­து­கொண்­டனர். இந்­நி­லையில் அந்த அக­திகள் தற்­ச­மயம் பூசாவில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  

பாது­காப்­புத்­தேடி வந்த இவர்கள் விட­யத்தில் குறித்த குழு­வினர் நடந்­து­கொண்­ட­விதம் கண்­டிக்கத் தக்­கது. குறித்த மக்கள் மீதான இனப்­ப­டு­கொலை நிறுத்­தப்­பட வேண்டும். அந்த மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­வைப்­ப­தற்­காக அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண­சபை வழங்கும். இம் மக்கள் மீதான இன­வாதம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்தார். இக் கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-29#page-1

  • கருத்துக்கள உறவுகள்

அல்லல் படுத்தியவர்களுக்கு அகதிகளின் அவலம் புரியாது. அல்லல் பட்டவர்களுக்கு அந்த அவலம் புரியும். அவர்களுக்கு தேவை அடைக்கலம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ஆகாசத்தில் ..............................இந்த பழமொழி தான் நினவு வருது அண்ணையின் மச்சான் எனும் ஒரே பிடியை வச்சுக்கொண்டு இந்த ராசா கோமாளி ஆடும் கோமாளி ஆடும் ஆட்டம் கொஞ்ச நல்ல மல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிங்யா அகதிகளின் அவலம் புரிகிறது. ஆயினும் வடக்கில் எத்தனையோ தமிழர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் இந்நிலையில் வடமாகாணசபை அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரபலமற்ற அமைப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிவாஜிலிங்கம் வேண்டுமானால் அவரின் வீட்டில் வைத்து அவரின் விருந்தினர்களை உபசரிக்கலாம். வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பதற்கு எத்தனையோ செல்வந்த நாடுகள் இருக்கின்றன. உலகளவில் அதற்கான சர்வதேச கட்டமைப்புகளும் உள்ளன. அகதிகளை வடபகுதியில் தங்கவைப்பது என்பதை அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடித்துவிடமுடியாது. அதற்கான உதவிகளை வடமாகாண சபை செய்யும் என்பது சிரிப்புக்கிடம். அறிவேயில்லாத தமிழ் அரசியல்வாதிகள். சிங்களப் பகுதியில் குடியமர்த்த சிங்களமக்களுக்கு மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை  வைத்து சிவாஜிலிங்கம் எந்தவித சமிக்ஜையையும் புரிந்து கொள்ளவில்லை போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை எப்படி விமர்ச்சனம் செய்தாலும் அவர்களிடம் நல்ல பண்புகள் இருப்பது வெளிப்படை. தான் அழிந்தாலும் பிறரை வாழவைக்கவே கரும்புலிகள் தோன்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ஆகாசத்தில் ..............................இந்த பழமொழி தான் நினவு வருது அண்ணையின் மச்சான் எனும் ஒரே பிடியை வச்சுக்கொண்டு இந்த ராசா கோமாளி ஆடும் கோமாளி ஆடும் ஆட்டம் கொஞ்ச நல்ல மல்ல .

3 hours ago, vanangaamudi said:

ரோஹிங்யா அகதிகளின் அவலம் புரிகிறது. ஆயினும் வடக்கில் எத்தனையோ தமிழர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் இந்நிலையில் வடமாகாணசபை அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரபலமற்ற அமைப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிவாஜிலிங்கம் வேண்டுமானால் அவரின் வீட்டில் வைத்து அவரின் விருந்தினர்களை உபசரிக்கலாம். வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பதற்கு எத்தனையோ செல்வந்த நாடுகள் இருக்கின்றன. உலகளவில் அதற்கான சர்வதேச கட்டமைப்புகளும் உள்ளன. அகதிகளை வடபகுதியில் தங்கவைப்பது என்பதை அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடித்துவிடமுடியாது. அதற்கான உதவிகளை வடமாகாண சபை செய்யும் என்பது சிரிப்புக்கிடம். அறிவேயில்லாத தமிழ் அரசியல்வாதிகள். சிங்களப் பகுதியில் குடியமர்த்த சிங்களமக்களுக்கு மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை  வைத்து சிவாஜிலிங்கம் எந்தவித சமிக்ஜையையும் புரிந்து கொள்ளவில்லை போல் உள்ளது.

அருமையான கருத்துக்கள்.  நன்றி பெருமாள் & வணங்காமுடி. 
சிவாஜிலிங்கம்... தேசியத் தலைவரின் மச்சான் என்று,  இன்றுதான் அறிந்து கொண்டேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அருமையான கருத்துக்கள்.  நன்றி பெருமாள் & வணங்காமுடி. 
சிவாஜிலிங்கம்... தேசியத் தலைவரின் மச்சான் என்று,  இன்றுதான் அறிந்து கொண்டேன்.

சொந்தம் என்று இந்தாள் தான் பறையடிக்குது .

இதுவரை  சிவாஜிலிங்கம் மச்சான் என்று சொன்னதில்லை.  ஊரினால் பெருமைப்ப்டுவராக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்தியாவில் தமிழ்நாடு ஆந்திரா மாநிலங்களிலிருந்து தொழிலுக்காக கொண்டுவரப்பட்டு குடியேறியவர்களும் தாமாக குடிபெயர்ந்தவர்களும் இலங்கையில் இன்றுவரை சொல்லொணா துன்பங்களை அனுபவிப்பதை காண்கிறோம். பூர்வீக குடிமக்கள் காட்டும் காழ்ப்புணர்வு தொழில் வாய்ப்பு உயர் கல்வி பிரஜாவுரிமைக்கான தடை மற்றும் நிரந்தர வாழ்வாதரங்களை அமைத்துக்கொள்வதிலுள்ள சிக்கல்கள் என்பவற்றை குறிப்பிடலாம். நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள் குடியேற்றவாசிகளை உள்ளுர்வாசிகளுடன் இணைத்து உள்வாங்குவதையே விரும்புகிறார்கள். தனியான கட்டமைப்புகளை உருவாக்கி தமது பட்ஜட்டில் கணிசமான தொகையை இதற்காக செலவிடுகிறார்கள். ஆசிய இனத்தவரின் குறிப்பாக தமிழரின் வாழ்க்கைமுறை இதற்கு முற்றிலும் மாறானது.  எமது சாதிய முறையையும் சமுதாய படிமுறைகளையும் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.  இவை அனைத்தும் களையப்பட்டாலன்றி மாற்று இனத்தவரை தனக்குள் உள்வாங்குதலை தமிழினம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வேறு சக்திகளின் தூண்டுதலால் அல்லது தான்தோன்றித்தனமாக அரசியல் செய்யும் சில அரசியல் தொழிலாளிகளால்  அல்லது இந்தவிடயத்தில் பணம்பண்ணி செல்வந்தராக எண்ணும் சில நயவஞ்சகர்களால் அகதிகளைக்  குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்படுமானால் ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ்மக்களை பாழும் கிணற்றில் தள்ளுவதற்கு சமம்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vanangaamudi said:

ரோஹிங்யா அகதிகளின் அவலம் புரிகிறது. ஆயினும் வடக்கில் எத்தனையோ தமிழர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் இந்நிலையில் வடமாகாணசபை அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரபலமற்ற அமைப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிவாஜிலிங்கம் வேண்டுமானால் அவரின் வீட்டில் வைத்து அவரின் விருந்தினர்களை உபசரிக்கலாம். வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பதற்கு எத்தனையோ செல்வந்த நாடுகள் இருக்கின்றன. உலகளவில் அதற்கான சர்வதேச கட்டமைப்புகளும் உள்ளன. அகதிகளை வடபகுதியில் தங்கவைப்பது என்பதை அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடித்துவிடமுடியாது. அதற்கான உதவிகளை வடமாகாண சபை செய்யும் என்பது சிரிப்புக்கிடம். அறிவேயில்லாத தமிழ் அரசியல்வாதிகள். சிங்களப் பகுதியில் குடியமர்த்த சிங்களமக்களுக்கு மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை  வைத்து சிவாஜிலிங்கம் எந்தவித சமிக்ஜையையும் புரிந்து கொள்ளவில்லை போல் உள்ளது.

அதே தான். தான் போக காணேலை மூஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். எண்டதுபோலதான் இவரின் கதை.

  • கருத்துக்கள உறவுகள்

கீழே ரோஹிங்யா முஸ்லிம்களின் இந்துகளை நோக்கிய கோரமுகம் ஏன் இவர்களால் பாகிஸ்த்தானிலும்,வங்காளமும் ஏற்க்க மறுக்கின்றன ?

https://www.japantimes.co.jp/news/2017/09/26/asia-pacific/myanmar-officials-say-muslim-rohingya-insurgents-killed-least-45-hindu-villagers/#.Wc9pKjPyBXg

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுகளுக்கும்  வெளிநாட்டு சக்திகளுக்கும் சோரம்போன  அரசியல்வாதிகளை தமிழினம்  காலங்காலமாக கண்டுதான் வந்துள்ளது. முக்கிய காலகட்டங்களில் தமிழரின் காலை வாரிவிடுவதும் நம்பிக்கைத்துரோகம் செய்வதும் இந்த அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அரசியலில் தூரநோக்கற்ற தன்மை, தான்தோன்றித்தனம், சுயநலம் என்பன இவர்களின் அடையாளம். அரசியல்வாதிகளாக இருந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்குப்பதிலாக  சம்பளத்துக்கு வேலைசெய்யும் அரசியல்தொழிலாளர்களாக தமது சீவனத்தை ஓட்டுபவர்கள். வெளிநாட்டு அகதிகள் விடயத்தில் அதன் உண்மையான பரிமாணத்தை அதன்தாக்கங்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு உசிதமான நடவடிக்கை எடுப்பதுதான் தமிழினத்திற்கு இவர்கள் செய்யக்கூடிய நன்மையாகும். அதைவிடுத்து வெளிநாட்டு அரசுகளுக்கும் இஸ்தாபனங்களுக்கும் ஒற்றர்வேலை பார்ப்பதும் அல்லது ஊதுகுழலாக வேலை செய்வதும் இவர்களது கடமையல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏறி நிற்க கெப்பு இல்லையாம் இறங்கி நில்லு ஏறி  போறன் என்று சொல்லிச்சாம் என்ற  ........... இருக்கிற மக்களை குடியமர்த்த திரணியற்றவர்கள் ரோகாங்கிய மக்களுக்கு பேசுது 

நீங்க தேவையில்லை அவங்களை காத்தான்குடிக்கு கேட்டு இருக்குறார்கள் அசரசாங்கள் கொடுத்தால் அவர்களை முஸ்லீம் அரசியல் வாதிகள் இங்கே குடியேற்றுவ்வார்கள்  வடமாகாணத்தில் நீங்கள் பல்டி அடிக்க தேவையில்லை 

சிவாஜிலிங்கம் ஒரு விகடகவி அரசியல்வாதி. அவரில் விவேகமும் இல்லாமல் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Rajesh said:

சிவாஜிலிங்கம் ஒரு விகடகவி அரசியல்வாதி. அவரில் விவேகமும் இல்லாமல் இல்லை!

விகடகவி இன்றுதான் கேள்விபட்டன் கவி பாடுவாரோ ?

சிதம்பரா கல்லூரியில் சுவர் ஏறி குதித்து இரவு இரவாய் மரம் வெட்டி குழப்பம் விளைவித்தவர் வடமராட்சி வீதி திருத்தல் பணிக்கு வந்த நிதியை இவரும் அன்ந்தராஜாவும் கொள்ளுபட்டு அவ்வளவு நிதியும் திறைசேரிக்கு திரும்பி போக செய்தவர் எனக்கு தெரிய ஒரு விவேகமான செயற்பாட்டை இவரிடம் நான் காணவில்லை அப்படி அவர் செய்து இருந்தால் என் முடிவை மாற்றிக்கொள்கிரன்.

Edited by பெருமாள்

4 minutes ago, பெருமாள் said:

விகடகவி இன்றுதான் கேள்விபட்டன் கவி பாடுவாரோ ?

சிதம்பரா கல்லூரியில் சுவர் ஏறி குதித்து இரவு இரவாய் மரம் வெட்டி குழப்பம் விளைவித்தவர் வடமராட்சி வீதி திருத்தல் பணிக்கு வந்த நிதியை இவரும் அன்ந்தராஜாவும் கொள்ளுபட்டு அவ்வளவு நிதியும் திறைசேரிக்கு திரும்பி போக செய்தவர் எனக்கு தெரிய ஒரு விவேகமான செயற்பாட்டை இவரிடம் நான் காணவில்லை அப்படி அவர் செய்து இருந்தால் என் முடிவை மாற்றிக்கொள்கிரன்.

விகடகவி என்றால் கவிபாடோணும் என்றில்லை என்பது தமிழ்ப் புலவர்களுக்கு விளங்கும்.

விரைவில் முடிவை மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

விகடகவி என்றால் கவிபாடோணும் என்றில்லை என்பது தமிழ்ப் புலவர்களுக்கு விளங்கும்.

விரைவில் முடிவை மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்!

அப்ப நீங்கள் புலவரோ ?

முடிவை மாற்றிக்கொள்ள நான் ஒன்றும் ஜால்ரா கூட்டம் அல்ல திரு ராஜேஷ் அவர்களே .

2 minutes ago, பெருமாள் said:

அப்ப நீங்கள் புலவரோ ?

அதை நீங்கள் தான் முடிவு செய்யோணும்.

3 minutes ago, பெருமாள் said:

முடிவை மாற்றிக்கொள்ள நான் ஒன்றும் ஜால்ரா கூட்டம் அல்ல திரு ராஜேஷ் அவர்களே .

11 minutes ago, பெருமாள் said:

என் முடிவை மாற்றிக்கொள்கிரன்.

சில நிமிடங்களுக்குள் திருவாளர் பெருமாளிடம் இவ்வளவு தள்ளாட்டம் ஏனோ?
திருவாளர் பெருமாள் I'm steady..., I'm steady... என்று இப்பவே சொல்லிடுவார் என்ற நம்பிக்கை உண்டு.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏறி நிற்க கெப்பு இல்லையாம் இறங்கி நில்லு ஏறி  போறன் என்று சொல்லிச்சாம் என்ற  ........... இருக்கிற மக்களை குடியமர்த்த திரணியற்றவர்கள் ரோகாங்கிய மக்களுக்கு பேசுது 

நீங்க தேவையில்லை அவங்களை காத்தான்குடிக்கு கேட்டு இருக்குறார்கள் அசரசாங்கள் கொடுத்தால் அவர்களை முஸ்லீம் அரசியல் வாதிகள் இங்கே குடியேற்றுவ்வார்கள்  வடமாகாணத்தில் நீங்கள் பல்டி அடிக்க தேவையில்லை 

நீங்கள் வேற நிலைமை தெரியாமல் கதைக்கிறியள், இப்ப இருக்கிற நிலையில் சிவாஜிலிங்கம் அவர்களை வடக்கில் குடியமர்த்த தேவையில்லை, அவர்களாகவே வந்து வடக்கில் குடியேறுவார்கள்.???

  • கருத்துக்கள உறவுகள்

ரோகிங்கியா முஸ்லீம்களை அரவணைத்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இலங்கை வாழ் முஸ்லீம்களுக்குத்தான் உண்டு. அவர்கள்தான் தங்களை தமிழராக அடையாளம் காணாது முஸ்லீம் இனமாக அடையாளம் காணுபவர்கள். அவர்களுக்கும், ரோகிங்கிய இன மக்களுக்கும் உள்ள இணைப்பு இரு தரப்பினரும் முஸ்லீம்கள்  என்பது. 

சரி, சகமனிதன் எனும் அடிப்படையில் பார்க்கலாம் என்றால் தமிழர்கள் இறந்தபோது இவர்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் எனும் கேள்வி எழுகிறது.

சரி, மறப்போம் மன்னிப்போம் என்று போகலாம் என்றால் இப்படியே இளித்தவாயர்களாக இருக்க வைத்துவிடுவார்களோ என்கிற குழப்பம் ஏற்படுகிறது. :unsure:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

அதை நீங்கள் தான் முடிவு செய்யோணும்.

சில நிமிடங்களுக்குள் திருவாளர் பெருமாளிடம் இவ்வளவு தள்ளாட்டம் ஏனோ?
திருவாளர் பெருமாள் I'm steady..., I'm steady... என்று இப்பவே சொல்லிடுவார் என்ற நம்பிக்கை உண்டு.

உங்களால் சிவாஜி லிங்கம் செய்த ஒரு நல்ல விடயம் சொல்லமுடியவில்லை என்னை மாற சொல்லி  வாழ்த்து சொல்லுகிறீர்

ஒன்றுமே செய்யாமல் குழப்பம் விளைவிப்பவருக்கு உங்களை போல் நாலு பேர் ஜால்ரா அடிப்பதால் தான் நாங்கள் இன்னும் இந்த நிலையில் இருக்கிறம் புரிந்துகொள்ளுங்கள் .

14 minutes ago, பெருமாள் said:

ஒன்றுமே செய்யாமல் குழப்பம் விளைவிப்பவருக்கு உங்களை போல் நாலு பேர் ஜால்ரா அடிப்பதால் தான் நாங்கள் இன்னும் இந்த நிலையில் இருக்கிறம் புரிந்துகொள்ளுங்கள் .

மொத்தத்தில் நீங்கள், உங்களைப் போன்றவர்கள் குழப்பநிலையில் இருப்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள். இது வளர்ச்சியின் முக்கியபடி.

உங்கள் குழப்பநிலைக்கு வேறொருவர் காரணமாக இருக்கிறார் என்றால் அது உங்கள் பலவீனம் தான்.
உங்கள் பலவீனங்களை திருத்த முயலுங்கள் திருவாளர் பெருமாள் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

ரோகிங்கா முஸ்லீம்களை பலர் கருணையுடனே கண்ணோக்குகின்றனர். நிச்சய‌மாக இவர்கள் கருணையுடன் நடத்தபட வேண்டும். 

பிரச்சினை என்னவென்றால் பல செல்வந்த முஸ்லீம் நாடுகள் உண்டு அவைகளில் ஒன்றும் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. சிரியாவில் /ஈராக்கில் /யெமானில் பல முஸ்லீகள் கொல்லப்படுகின்றார்கள். இவர்களை பற்றி இலங்கை முஸ்லீம்கள் வாய் திறப்பதில்லை. அவர்களை யஹூதிகள் என கூறி கொல்கின்றனர். 

இலங்கை முஸ்லீம்கள் ஏன் இவர்ககளுக்கா இவ்வளவு பரிதாபப்படுகின்றார்கள்? இவர்களினது மதவெறிதான் இதற்கு காரணம். 20 , 30 வருடங்களுக்கு முன்பு இருந்த முஸ்லீம்கள் போல் அல்ல. இப்போதிருக்கும் முஸ்லீம்கள் மிகவும் அடிப்படைவாதம் மிக்கவர்கள். Happy New Year என்று கூட சொல்ல மாட்டர்கள். (குறிப்பாக கிழக்கு முஸ்லீம்கள்) அல்கா கோவித்து கொள்ளுவானாம். 

இலங்கை முஸ்லீம்கள் மனிதத்திற்காக இரக்கப்படவில்லை, மதவெறியினாலேயே, அவர்களின் முஸ்லீம் உம்மத்திற்காகவே. 

இதற்கு முன் பல ரோகின்யா அகதிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள் பலர் அகதிகளாக‌ பதிந்து அமெரிக்கா / கனடா போன்ற பல நாடுகளுக்கி சென்றுள்ளார்கள். 

இலங்கை முஸ்லீம்களின் மதவெறியினாலேயே இத்தகைய கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றன.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

மொத்தத்தில் நீங்கள், உங்களைப் போன்றவர்கள் குழப்பநிலையில் இருப்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள். இது வளர்ச்சியின் முக்கியபடி.

உங்கள் குழப்பநிலைக்கு வேறொருவர் காரணமாக இருக்கிறார் என்றால் அது உங்கள் பலவீனம் தான்.
உங்கள் பலவீனங்களை திருத்த முயலுங்கள் திருவாளர் பெருமாள் அவர்களே.

கருத்துக்கு கருத்து வைக்க தெரியாமல் ஏதோ எல்லாம் சொல்றீங்க முதலில் கருத்துக்கு பதில் கருத்து எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.