Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த ஏழு வருடங்கள் (2010 °முதல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

சரி மியாவ்.. தொடருங்கள்.

1 hour ago, மியாவ் said:

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மியாவ் said:

நல்லது, ஆனால் இங்கு நீங்கள் “முழுங்காமல்” எழுதலாம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 hours ago, கிருபன் said:

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

போனதென்னவோ "அமேரிக்கன் மிலிட்டரி பேசில் (Military Base) வேலை செய்வதற்க்கு "தான். அதனால் பாதுகாப்பை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

வாட்டி எடுத்தது பனிப் பொழிவும் (Snow Fall), வெயிலும் தான். 

20 hours ago, நவீனன் said:

சரி மியாவ்.. தொடருங்கள்.

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

முயற்ச்சிக்கிறேன்.:cool:

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

விளங்குது .

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

தமிழ்நாட்டை தாண்டி கேராளவிற்க்கு போனாலே மனிதாபிமானம் என்ன விலை என்று கேட்ப்பார்கள்.

ஆப்கானிஸ்தான் மலிட்டரி பேசில் பல நாட்டு மக்களான போஸ்னியன்ஸ், இத்தாலி போன்ற மக்களை காண நேர்ந்தது.

அங்கு இரண்டாவதாக எங்களுக்கு மேலாளராக வந்த அமெரிக்க கறுப்பரினத்தை (நம்மினம் தான்) சேர்ந்தவர் " (Stephen Fears)ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்றார். அதுவும் கூட உண்மை தானே.

இதில் ஒரு இத்தாலி பெண் (Daniela Scordia) தான் மிக உதவியாக இருந்தார். அவரும் நானும் அடிக்கடி புகைத்துக் கொண்டு பேசிக் கொள்வோம். அங்கு சக ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்பொழுது டெக்சாசில் இருக்கிறார்.

அவர் இருப்பு தனித் தமிழனாக வலம் வந்த சமையத்தில் சற்று ஆருதலாக இருந்தது.

I'm going out of my mind என்ற பொழுது Norbert (Philippino settled in america) and Daniela Scordia அதற்க்கு காரணமானவரான முதலாம் மேலாளரை (Jason Anderson....(வெள்ளைகாரன் "ஜார்ஜியா")..) இடமாற்றம் செய்ய வைத்தார்கள் என்பதை "ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்ற பொழுது யூகித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

படங்களை இணைக்க இயல வில்லை. Upload failed என்று வருகிறது. அங்கு ஒரு வருடம் மட்டும் தான் இருந்தேன். 

மேலும் புகை படம் எடுப்பவதற்க்கு அங்கு தடை என்பதால் சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

உண்மை என்னமோ அது தான். ஆனால் நேட்டோவுடன் சேர்ந்து போகவில்லை.

அவர்களுக்கு வேலை செய்ய சென்றோம். அங்கு குவாலிட்டி கன்ட்ரோல் டிப்பார்ட்மென்ட்டில்லை வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு மியாவ், உங்களின் அனுபவங்களை பகிருங்கள் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செயலை ஆரம்பித்தற்க்கு பிறகு தான் அதன் நிறை குறைகளை உணர முடிகிறது. 

இந்த அளவிற்க்கு வரவேற்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. 

இதை ஆரமபிப்பதற்க்கு என்னை தயார்படுத்திக் கொண்டு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு வருட காண்ட்ராக்டில் சென்று மிலிட்டரி போலிசால் கைது செய்யப் பட்டு ஒரு வருட முடிவிலேயே தமிழ் நாட்டிற்க்கு அனுப்பப் பட்டேன்.

ஏன் எதற்க்கு என்பதை ஆஃப்கானிஸ்தான் எப்படி சென்றேன், ஒரு வருடம் என்ன நடந்தது என்ற பதிவுகளுக்குப் பிறகு தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

16 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

9 hours ago, Maruthankerny said:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றும், முறையான தமிழெழுத்தறிவு இல்லாமலும் உணர்வுகளால் மட்டுமே கடந்த ஏழு வருடங்களில் அறிந்துணர்ந்ததை எப்படி வார்த்தைகளால் வடிவுபடுத்துவது என்ற குழப்பத்தில் நேற்றே மன்னிப்பு கேட்டு திரிக்கு முற்றுப்பள்ளி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.

ஆனால் நேற்று நடந்தது வேறாகிவிட்டது.

இத்தனை பேர் எதிபார்ப்பை எப்படி என் தமிழைக் கொண்டு பூர்த்தி செய்வது என்ற ஐயம் வருகிது.

ஈசன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பித்து தொடர்கிகிறேன். 

என்னுடைய பதிவு இந்திய நேரப்படி 8 மணிக்கு மேல் பதியப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிப்பில் சராசரியான மாணவனுக்கும் கீழ் தான். வெளிநாடு போகும் ஆசையில் BSC Catering and Hotel Management படித்தேன். படிக்கும் பொழுதே ஹோட்டல் இன்டஸ்ட்ரி பிடிக்காமல் போய்விட்டது. 

பிறகு எனது கரியரை சிட்டி பேங்கில் தொடங்கி ஐசிஐசிஐ எச்டிஎஃப்சி என்று 2009 டிசம்பர் மாதம் வரை சென்னையில் வேலை.

ஐசிஐசிஐ ல் வேலை செய்த பொழுது அலுவலக நண்பர் ஏழு பேர் உல்லாச பயணமாக ஒரு வாரம் கேரளா சென்றிருந்தோம். அதில் ஒரு நாள் ஒன்பது மணி அளவில் இரவு உணவிற்காக வெளியில் ஒரு சிறிய ஹோட்டலலுக்கு சென்று 

அண்ணா ஒரு இருபது தோசை தேவை

தோசைலாம் இல்ல போ

இதோ இருக்கேனா

அது எல்லாத்தையும் உங்க கிட்ட குடுத்துட்டா வரவங்களுக்கு என்ன சொல்றது 

எனது நண்பன் ஒருவன், நாங்க சும்மா ஒண்ணும் கேக்கல

தரமுடியாது போ

சரி பக்கத்துல வேர ஏதாவது ஹோட்டல் இருக்கா

இடது கையை வீசிய படி அங்க இருக்கு போ

சிறிது தூரம் நடந்தோம், இரண்டு நபர் பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணா இங்க பக்கத்துல ஏதாவது ஹொட்டல் இருக்கா

அங்க இருக்கு போ

எங்கணா

பேச்சு தொடர்கிறது

அண்ணா  

அண்ணா

அங்க இருக்கு போ

அன்று என்ன சாப்பிட்டோம் என்பது நியாபகம் இல்லை.

மறு நாள் வீகா லேண்டிர்க்கு (Amusement park) செல்வதற்க்கு பேருந்து நிறுத்தத்தில்

பேருந்து வந்த உடன் 

என் நண்பன் ஒருவன்,  இந்த பஸ் வீகாலேண்ட் போகுமா?

நடத்துனர் சொல்கிறார், போடா பட்டி

Gods Own Land ஐ மிகவும் ரசித்தோம்.

மக்கள் தான் அப்பாவிகளாக இருக்கின்றனர். அன்பானவர்களாகவும் இருக்கின்றனர்

பிறகு எச்டிஎஃப்சி யில் வேலை, ஒன்றரை ஆண்டிற்கு பிறகு என் நண்பன் (சுதாகர்) மூலம் ஒரு ஏஜன்சியின் மூலம் நானும் என் நண்பனும் (செந்தமிழ் செல்வன்) துபாயில் இறங்கினோம். அங்கிருந்து கள்ள ஃப்ளைட்டில் (ராணுவ விமானம்)ஆஃப்கானிஸ்தானில் பக்ராம் தலைமை தளத்தில் இறங்கினேன். என் நண்பன் ஈராக்கிற்க்கு அனுப்பப்பட்டான்.

ஆஃப்கானிஸ்தானில் இறங்கிய சமையத்திலேயே குளிரை உணர துடங்கியாகி விட்டது. நடைபாதையின் ஓரத்தில் பனி வெள்ள வெளீர் என்று படர்ந்து கிடந்ததை அதிசையமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஃபிலிப்பினோஸ், வட இந்தியர்கள், நைஜுரியன்ஸ் என்று வரிசையாக கணக்கெடுப்பதற்க்காக நின்று கொண்டிருந்தோம்....

..........

39 minutes ago, suvy said:

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

வீசிய காற்றில் உங்கள் நெல்லையும் தூற்றி விட்டுள்ளீர்கள். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல் தாண்டி பணமீட்ட

அடிமைப் பட்டம் பெற்று

அடிமையை விலக்கி 

பட்டத்தை வைத்து

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி

பெருநிறுவன முதலைகளின் வாய்க்கு

தீனி போட முடியாமல், மண்டை

வெடிக்கும் அழுத்தத்தில் உத்யோகத்தை

விட்டொழித்து, வல்லரசை ஆட்டிப் பார்த்த

பெருந்தாடியின் மசுறை வளிக்க

ட்ரில்லியன் கணக்கில் முதலீடு செய்து

போர் தொடுக்க சகல சௌகரியத்துடன்

ஏற்படுத்திய தளத்திற்க்கு பணம் காண சென்று

தரம் பார்க்கும் துறையில் அமர்ந்து

பூவோடு நாரும் மணக்கும் என்பதாக

ராணுவ வீரர்களுக்கு ஏற்படுத்திய

உணவு வசதிக்கான இடத்தில்

காணுமிடமெங்கும் உலகிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர தீனிகளைக் கண்டு

பூரித்து மலைத்து சுயநினைவுக்கு வருவதற்க்கு வினாடிகள் தாண்டி

கரும்புக் காட்டுக்குள் யானை பகுந்ததது போல் புகுந்து

அனைத்தைதையும் ருசித்து கபளீகரம் செய்து

12/7 வேலையில் தினம் ஒரு மணி நேர அலுவலில் மிச்சம் 11 மணி நேரத்தில் புகைப்பதும், களத்தில் கருத்துக்கள் பதிவதுமாய் நகர்ந்த பொழுது

உணவு வசதிக்கான இடத்தில் தினமும் காலை "ஃபோர் எக் ஸ்க்ராம்பில்ட் வித் ஆனியன், பெப்பர், அலப்பீனியோஸ் ஆன்ட் ச்சீஸ்" என்பதையே வாடிக்கையாக கொண்டு தின்ற

சில நாட்கள் கழித்து உணவின் அளவு குறைய துடங்க, கவனிக்க சில நாள் படித்து, உத்தரவை பின்பற்றி உணவை தயார் செய்து தரும் வெள்ளை இனத்தை சேர்ந்த போஸ்னியன் இரண்டு முட்டைகளை மட்டுமே உடைத்ததை பார்த்து "ஐ செட் ஃபோர் எக்ஸ், yeah ஃபோர் எக்ஸ், எஸ் எஸ் போர் எக்ஸ் என்று சிறிது கடினமாக சொல்லிய பொழுது பின் நின்று பலமாக சிரித்து கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை கவனிக்க முடிந்தது. எனது உணவை பெற்றுக்கொண்டு "ஃபக்கர்" என்று சொல்லி விட்டு திரும்பிய பொழுது வலது புறம் ஒரு வெள்ளையின ராணுவ வீரன் முறைத்து பார்த்த படி நின்று கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.

கருத்து களத்தில்

நேர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், ராணுவ வீரர்களிடமிருந்து நேர்மறையான அசைவுகளை உணர

எதிர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், எதிர்மறையான அசைவுகளை உணர முடிந்தது.........................

2 hours ago, வல்வை சகாறா said:

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

நானும் வேண்டிக் கொள்கிறேன்...

Edited by மியாவ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.