Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி!

Featured Replies

அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி!

அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சூடைகுடா கிராமத்தில் காணப்படும் குன்றத்தூர் மத்தளமலை திருக்குரமன் ஆலயத்திற்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியான தீப்தி போகொல்லாகம, அங்கிருந்த மக்களுடன் முறுகலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிகிழமை இடம்பெற்றுள்ளது. மத்தளமலை திருக்குரமன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், பௌத்த விகாரை இருந்ததாகத் தெரிவித்தே ஆளுநரின் மனைவி பிரச்சினைப்படுத்தியிருக்கின்றார்.

இதன்போது குறித்த பிரதேசம் தமிழ் பிரதேசம் என்றும் இங்கு நீண்டகாலமாக தாங்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்து எதிர்ப்பை வெளியிட்ட கிழக்கு மாகாண ஆளுநருடன் சென்றிருந்த ஆளுநரின் மனைவி மக்களை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன், மக்களை அடிக்கவும் முயன்றுள்ளார்.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அங்கிருந்த பொங்கல் பானைக்கு முன்பு போடப்பட்டிருந்த கோலத்தை செருப்பால் மிதித்து பொங்கல் பானையையும் உதைத்துத் தள்ள முற்பட்டார். ஆனால் அடுப்பில் இருந்த பொங்கல் பானையை காலால் உதைக்க முடியாதவாறு மக்கள் தடுத்தனர்.

கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை போகும் போகும் மக்கள் இந்த கோவிலில் வழிப்பாட்ட பின்னரே போய்வந்ததாக தெரிவிக்கும் சூடைகுடா கிராம மக்கள் இந்த நிலையில் திடீரென பௌத்த பிக்குகள் இருவர் கடந்தவாரம் கோயிலுக்கு வந்துசென்றத அடுத்து பிரச்சனை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சூடைகுடா கிராமத்தில் காணப்படும் குன்றத்தூர் மத்தளமலை திருக்குரமன் ஆலயம் மற்றும் அதனை ஒட்டியதாக இருக்கம் பாதாள வைரவர் ஆலயம் என்பன 1974 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே இருப்பதாகவும், அங்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ஆலய பரிபாலன சபை பொருளாளர் சந்திரமோகன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இந்த கோவிலை பதிவு செய்யவில்லை என்ற போதிலும் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த கோவிலை பதிவுசெய்து, அதன்பின்னர் அரச நிதி உதவிகளுடன் கட்டுமாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவில் வளாகம் போதுமானதாக இல்லை என்பதால் கோயில் வளாகத்தை சூழ அமைந்துள்ள 10 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகள் டிசெம்பர் 6 ஆம் திகதி துப்புரவுசெய்து, மூதூர் பிரதேச சபையின் உதவியுடன் கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கிணறு தோண்டப்பட்டதாகவும் ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளன.

அதேவேளை ஆலயத்திற்கு வருவதற்காக 81 படிகளும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய் அன்று பௌத்த பிக்குமார் இருவர் அங்கு வந்து சென்றதை அடுத்து அன்றைய தினம் மாலை அங்கு வந்த பொலிஸார் கிணறை தோண்டுவதற்கும், ஆலயத்தை துப்புரவு செய்வதற்கம் தடை விதித்துள்ளனர்.

இதற்காக மூதூர் நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவொன்றையும் பொலிசார் பெற்றிருந்ததாகவும் சூடைக்காடு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இந்த சம்பவத்தை அடுத்து, கல்வி, வனஇலாகா, தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் வந்து ஆலயம் அமைந்துள்ள பகுதி தங்களுக்குரியது என்று உரிமை கோரியும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் அங்கு வந்த கிழக்கு மாகாண ஆளுந ரோஹித்த போகொல்லாகம ஆலய வளாகத்தில் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமாணப் பணிகளை நிறுத்தமாறு கேட்டுக்கொண்டதுடன் தொல்பொருள் திணைக்களத்துடன் கதைத்து பிரச்சனைக்கு முடிவு காண்பதாகக் கூறியுள்ளார்.

ஆளுநர் இவ்வாறு ஆலய பரிபாலசபை மற்றும் கிராம மக்களுடன் கதைத்துக்கொண்டிருக்கையில், அங்கு வந்திருந்த ஆளுநரின் மனை கிராம மக்களை அச்சுறுத்திச் சென்றிருக்கின்றார்.

இதற்கு எதிராக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/eastern-province-GA-wife

  • தொடங்கியவர்

அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அட்டகாசம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடாவடிச் சேட்டைகளால்  நாட்டின் நல்லிணக்கம் கெடாது. சுகாதாரப் பிரச்சனை எழுப்பினால், எங்களின் காணிகளை  திரும்ப கேட்டால், உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்தால், ஆக்கிரமிப்புகளை தட்டிக்கேட்டால் நல்லிணக்கம் கெட்டுவிடுமாமில்லே.  ஒரு பழமொழி நினைவுக்கு வருது "இருக்கிறவன் சரியாய் இருந்தால் சிரைக்கிறவன் சரியாய் சிரைப்பான்."  இருக்கிறவர்கள் இருக்கும்போது எல்லாரும் சரியாத்தான் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அட போங்கப்பா நீங்க....

அந்தாளின்ட வைப்பை, தேடிப் போய் கத்தியால் குத்தின மனிசி...

மகிந்த அரசில் வெளிவிகார  அமைச்சர் எண்ட படியால், விசயம் பெரிசாகாமல் மூடி மறைச்சாலும்...  பேப்பர்ல கசிந்து ஊரே சிரிச்சது... உள்விவகாரம் சரியில்லை... பாவம். அந்தாள் சிரிச்சு யாரும் பார்க்கவில்லையாம்.tw_cry:

இந்தாளுக்கு சாத்தோ, சாத்து.... டெய்லி.... நீங்க வேற... :grin: 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

அடங்கியிருந்த தீப்தி போகொல்லாகம மீண்டும் களமாட கிழக்கை தேரந்தெடுத்தாரா?

Deepti01.jpg?resize=600%2C450
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகமவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். காலணித்துவ ஆளுனர் ஒருவரின் மனைவியைப் போன்று தீப்தி செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலையில் இந்து பக்தர்களை தீப்தி கடந்த வாரம் தூற்றிய சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். தீப்தியின் செயற்பாடு நாட்டின் சகவாழ்விற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர்கள் கூட பாதணிகளை கழற்றிவிட்டு கோயிலுக்கு பிரவேசித்துள்ளனர் எனவும், தீப்தி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு அமைச்சர் பதவியையும் வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்த றோகிதபோகொல்லாகம, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தார். இவரது குடும்பத்தினர் மீதும், குறிப்பாக தீப்தி போகொல்லாகம மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரை நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் அரசியல் மேடையில் வீற்றிருக்கச்செய்து, கிழக்கின் ஆளுநராக நியமித்திருந்த நிலையில் மீண்டும் தீப்தி களமாடப் புறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கொழும்பின் பிரபல வைத்தியர் ஒருவரை தீப்தி தாக்கியிருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Deepti2.png?resize=702%2C800 Deepti3.png?resize=613%2C800Deepti1.jpg?resize=400%2C381Deepti01.jpg?resize=600%2C450Deepti.jpg?resize=260%2C194Rohitha-wife1.jpg?resize=191%2C264Rohitha-wife.jpg?resize=300%2C235

http://globaltamilnews.net/2017/58226/

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற சம்பவங்களும் சேர்ந்தே தமிழினத்தை சுயநிர்ணய உரிமையற்ற தீர்வுநோக்கியும் ஏக்கிய ராஜ்ய நோக்கியும் வெறுப்போடு பார்க்கவைக்கிறது. தமிழரது வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இடங்களை மிகவும் தந்திரமாகச் சிங்களமயமாக்கல் செய்துவரும் இந்தநிலமை மாறவேண்டும் மற்றும் தமிழர் பாதுகாக்கப்படவேண்டுமெனில்  ஒரு தீரவுக்கான ஆரம்பநிலையை நோக்கித் தமிழினம் நகரவேண்டுமாயின்காணி மற்றும்  காவற்றுறை அதிகாரங்கள் மாகாண அரசுக்குக் கையளிக்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அட போங்கப்பா நீங்க....

அந்தாளின்ட வைப்பை, தேடிப் போய் கத்தியால் குத்தின மனிசி...

மகிந்த அரசில் வெளிவிகார  அமைச்சர் எண்ட படியால், விசயம் பெரிசாகாமல் மூடி மறைச்சாலும்...  பேப்பர்ல கசிந்து ஊரே சிரிச்சது... உள்விவகாரம் சரியில்லை... பாவம். அந்தாள் சிரிச்சு யாரும் பார்க்கவில்லையாம்.tw_cry:

இந்தாளுக்கு சாத்தோ, சாத்து.... டெய்லி.... நீங்க வேற... :grin: 

பொம்பிளை ரவுடி எண்டு சொல்லுங்கோ. பாத்தா நித்திரையில பாதி வெறி முறியாமல் ஆடுற மாதிரி தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

நாக விகாரையின் தேரரின் உடலை முற்றவெளியில் எரிப்பதை தடுக்க சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல முற்பட்டதால் இவர்களுடன் எப்படி இன நல்லிணக்கம் வரும் என்று கேட்ட சிங்கள கட்சிகளை, தமிழர்களின் கோவில் பொங்கல் பானையை அடாவடியாக செருப்புக்காலால் உதைக்க முற்படும் சிங்களவர்களால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படாதா என்று  திருப்பி கேட்க தமிழ்கட்சிகள் யாரும் இல்லையா?

புரியுது  இப்போது அவர்களுக்கு நேரமில்லை, விக்கினேஸ்வரன் என்ன பேசுவார், அவருக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பதில் பிஸியாக இருக்கிறார்கள்!

On 12/28/2017 at 1:22 AM, நவீனன் said:

அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அட்டகாசம்

அந்த அம்மா தானும் தனது கைத்தொலைபேசியில் மற்ற ஆட்களையும் பதிவு செய்கின்றா. வெளியில் இப்படி ரவுடீசம் செய்கின்றா என்றால் வீட்டில் மனுசன் என்னபாடு படுகிதோ இவவை வைத்துக்கொண்டு. :5_smiley::5_smiley:  மகிந்த ஐயாவின் சீமாட்டியே இப்படி ஒருநாளும் நடந்துகொண்டதுமாதிரி ஒன்றும் பார்க்கவில்லை. தமிழ் அரசியல் பிரமுகர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நிலமைகளை கண்டறியலாம், அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவாக நிற்கலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தன்னாலே தான் அழியும்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வல்வை சகாறா said:

தன்னாலே தான் அழியும்

யாரை சொல்கிறீர்கள் இப்படி நடந்தும் ஒருவர்  தமிழ் அரசியல் வாதி வந்து அந்த மக்களையும் இடத்தையும் பார்க்க வில்லையே என்பதுதான் இதில் கைலைட் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கலைஞன் said:

அந்த அம்மா தானும் தனது கைத்தொலைபேசியில் மற்ற ஆட்களையும் பதிவு செய்கின்றா. வெளியில் இப்படி ரவுடீசம் செய்கின்றா என்றால் வீட்டில் மனுசன் என்னபாடு படுகிதோ இவவை வைத்துக்கொண்டு. :5_smiley::5_smiley:  மகிந்த ஐயாவின் சீமாட்டியே இப்படி ஒருநாளும் நடந்துகொண்டதுமாதிரி ஒன்றும் பார்க்கவில்லை. தமிழ் அரசியல் பிரமுகர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நிலமைகளை கண்டறியலாம், அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவாக நிற்கலாம்.

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாரை சொல்கிறீர்கள் இப்படி நடந்தும் ஒருவர்  தமிழ் அரசியல் வாதி வந்து அந்த மக்களையும் இடத்தையும் பார்க்க வில்லையே என்பதுதான் இதில் கைலைட் 

மூதூர் பிரதேசத்தை சேர்ந்த வயதான தேசியபட்டியல் எம்.பி இருக்கிறார் ஆனால் வரமாட்டார். அதேபோல் மாகாணசபை உறுப்பினர் இருக்கிறார் அவரும் வரமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

மூதூர் பிரதேசத்தை சேர்ந்த வயதான தேசியபட்டியல் எம்.பி இருக்கிறார் ஆனால் வரமாட்டார். அதேபோல் மாகாணசபை உறுப்பினர் இருக்கிறார் அவரும் வரமாட்டார்.

ம்ம் வரமாட்டார்கள் இப்படி எத்தனை விடயங்கள் நடந்து விட்டது அவர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையே தங்களுக்கு எங்கு லாபம் கிட்டுகிற்தோ அங்கே முதல் ஆளாக நிற்பார்கள் 

Image may contain: tree, sky, cloud, outdoor and nature

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தின் நிலையை காட்ட இதைவிட  வேறு  ஒரு  உதாரணம்  தேவையற்றதுtw_cry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் வரமாட்டார்கள் இப்படி எத்தனை விடயங்கள் நடந்து விட்டது அவர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையே தங்களுக்கு எங்கு லாபம் கிட்டுகிற்தோ அங்கே முதல் ஆளாக நிற்பார்கள் 

Image may contain: tree, sky, cloud, outdoor and nature

ஆபத்து அங்கே தான் உருவாச்சு....

அதுதான் வெள்ளரசு  மரம்...

அது அங்கே இல்லாவிடில் பிக்கர்கள்  வந்து இருக்க  மாடடார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆபத்து அங்கே தான் உருவாச்சு....

அதுதான் வெள்ளரசு  மரம்...

அது அங்கே இல்லாவிடில் பிக்கர்கள்  வந்து இருக்க  மாடடார்கள்.....

உந்த மரம் வைக்கப்பட்டதே 2006 ற்கு பிறகு. 2006 இலிருந்து படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த போது 

தலைவருக்கு பிறகு தமிழன் ஒரு அடிமை இனம்.  யாரும் அடிக்கலாம்.  யாரும் பேசலாம், எதையும் செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த.... அன்ரியின்,  ஆவேசத்தில்......
அந்த மக்களை, காப்பாற்ற வேண்டிய கடமை?  கருணை...
இரண்டும்... இல்லாத, சம்பந்தன், சுமந்திரன்  எமக்கு  ஏன்?

அடுத்த... தேர்தலில், சைக்கிளுக்கு... ஒட்டுப் போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தாயகத்தின் நிலையை காட்ட இதைவிட  வேறு  ஒரு  உதாரணம்  தேவையற்றதுtw_cry:

அப்படி சொல்ல ஏலாது அண்ண..

இது அரசாங்க காணி எண்டால்..... எனக்கும் இல்ல.... உனக்கும் இல்ல எண்டால் ஓகேதான். நீதிமன்ற தீர்ப்பும் அப்படி தானே சொல்லுது.

போகொல்லாகம....ஆளுநர்... அதிகாரம் உள்ள நிலைமையில் மக்களுடன்.... சட்டத்தை விபரித்து.... காணி உரிமையாளருடன்... தொல்பொருள் திணைக்களம்.... ஆலோசித்து.... ஆவன செய்வதாக சொல்லி சென்றுள்ளார்.

மனிசி தண்ணிப் பாட்டி... அது பாவத்தை விடுங்கோ...

இது சரி எண்டால், வில்பத்து காடழிப்பும் சரிதானே... முல்லைத்தீவு அழிப்பும் சரியாகி விடுமே. 

தீவில் உள்ள அனைவருக்கும் உள்ள ஒரு வியாதி, புலம் பெயர் தேசம் எங்கும் வரை பரவி இருக்கும் அந்த வியாதி... ஒரு பொறுத்த இடம் ஆப்பிடடால்..... வேற என்ன.... கோவிலை வைத்தமா.... நாலு துட்டு பார்த்தமா எண்டது தானே..

யாழில் எனது உறவினர் காணியில் அடாத்தாக குந்தி இருந்தவர், 2003 ல் எழுப்புவேன் எண்டவர்.... இப்ப 2010ல் போனபோது வசதியா.... கோயிலைக் கட்டி.... துட்டும் பார்த்துக் கொண்டு.... பூசையும் செய்து கொண்டு.... குறி வேற சொல்கிறாராம்... அவர் ஐயரும் இல்லை.

இவர் காணியை எடுக்கலாம் என்று போனால்.... 'மகனே வா.... அம்மன் கனவில் வந்தா..... உனக்கு கோடி புண்ணியம்'.... என்று துன்னூறு அடித்து அனுப்பி விடடார்....

அவ்வளவு தான்.... 3 கோடி மதிப்பான காணி சொத்து... tw_cry:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, பிள்ளையான்...  போன்ற   ஆட்களும்,
இதை... தடுக்க முடியாதா?
பிறகு... என்ன, இழவுக்கு... புலியை... காட்டிக்  கொடுத்த  நீங்கள், அங்கிள்.   tw_warning:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நேசன் said:

தலைவருக்கு பிறகு தமிழன் ஒரு அடிமை இனம்.  யாரும் அடிக்கலாம்.  யாரும் பேசலாம், எதையும் செய்யலாம்

tw_thumbsup:

முற்றிலும் உண்மை....

புரியாதவர்கள் புரிந்து கொண்டால் சரி.

இனி புரிந்து கொண்டாலும் எல்லாமே ரூ லேட்......

அழிந்து சாக வேண்டியதுதான்.

இலங்கையில் தமிழினம் போராடக்கூடாது என்பதில் கிந்தியும் சிங்களமும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

கிந்தியின் உள்ளடக்கம் தெரியாமல் புலிகளை எதிர்த்தவர்களுக்கு இன்றைய செய்திகள் சமர்ப்பணம்.

நாளைய செய்திகள் நல்லடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்பத்திரியில்... படுத்திருந்த, சம்பந்தனையும்,
பதுங்கி இருந்த.. சுமந்திரனையும்.... முன்னுக்கு தள்ளி விடுங்கள்.

அப்போ.....  உண்மை.... வெளி வரும்.

கரும் புலிகள் வாழ்ந்த நாட்டில்,  இவர்கள்.... சாட் சியமாக  இருக்கட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கருணா, பிள்ளையான்...  போன்ற   ஆட்களும்,
இதை... தடுக்க முடியாதா?
பிறகு... என்ன, இழவுக்கு... புலியை... காட்டிக்  கொடுத்த  நீங்கள், அங்கிள்.   tw_warning:

எதிர்கட்சி தலைவரின் மாவட்டம்  என்று கூறுகிறேன் அவரே கண்டுகொள்ளவில்லையே  கர்ணா  வேலைக்காகாது பிள்ளையான் ஆட்சியில் சில இ டங்களை அரசுக்கும் விட்டு கொடுக்க வில்லை முஸ்லீம்களுக்கும் விட்டு கொடுக்க வில்லை  ஆனால் கோட்டபாய பாலாத்காரமா பிடித்தார் சில இடங்களை

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முன்புதானே அம்மான் சிங்கம் கிழக்கை காப்பாத்த போறன் எண்டு கிளம்பினவர் . இப்ப எந்த குகைக்கில் ஓடி ஒளிந்து கிடக்கோ ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அப்படி சொல்ல ஏலாது அண்ண..

இது அரசாங்க காணி எண்டால்..... எனக்கும் இல்ல.... உனக்கும் இல்ல எண்டால் ஓகேதான். நீதிமன்ற தீர்ப்பும் அப்படி தானே சொல்லுது.

போகொல்லாகம....ஆளுநர்... அதிகாரம் உள்ள நிலைமையில் மக்களுடன்.... சட்டத்தை விபரித்து.... காணி உரிமையாளருடன்... தொல்பொருள் திணைக்களம்.... ஆலோசித்து.... ஆவன செய்வதாக சொல்லி சென்றுள்ளார்.

மனிசி தண்ணிப் பாட்டி... அது பாவத்தை விடுங்கோ...

இது சரி எண்டால், வில்பத்து காடழிப்பும் சரிதானே... முல்லைத்தீவு அழிப்பும் சரியாகி விடுமே. 

தீவில் உள்ள அனைவருக்கும் உள்ள ஒரு வியாதி, புலம் பெயர் தேசம் எங்கும் வரை பரவி இருக்கும் அந்த வியாதி... ஒரு பொறுத்த இடம் ஆப்பிடடால்..... வேற என்ன.... கோவிலை வைத்தமா.... நாலு துட்டு பார்த்தமா எண்டது தானே..

யாழில் எனது உறவினர் காணியில் அடாத்தாக குந்தி இருந்தவர், 2003 ல் எழுப்புவேன் எண்டவர்.... இப்ப 2010ல் போனபோது வசதியா.... கோயிலைக் கட்டி.... துட்டும் பார்த்துக் கொண்டு.... பூசையும் செய்து கொண்டு.... குறி வேற சொல்கிறாராம்... அவர் ஐயரும் இல்லை.

இவர் காணியை எடுக்கலாம் என்று போனால்.... 'மகனே வா.... அம்மன் கனவில் வந்தா..... உனக்கு கோடி புண்ணியம்'.... என்று துன்னூறு அடித்து அனுப்பி விடடார்....

அவ்வளவு தான்.... 3 கோடி மதிப்பான காணி சொத்து... tw_cry:

உண்மைதான் நாதர்

ஆனால்  எனது பார்வை இவை  பற்றியல்ல

ஆளுநரின் மனைவியாக  அவர்  நடந்து கொள்ளவில்லை என்பதையும் தாண்டி

ஒரு பெரும்பான்மை  சிங்கள  மனப்பமையோடு தான் தமிழர்களை  அணுகுகிறார்

அதைத்தான் குறிப்பிட்டேன்

நீதிமன்றத  தீர்ப்பையெல்லாம் யார்  மதிக்கிறார்கள்  சிறீலங்காவில்???

ஆளுநரின் மனைவியே மதிக்காமல்....?

கொலை  செய்வேன்  என்பதையே  பகிரங்கமாக கமெராவில்  வீடீயோ பிடித்தபடி சொல்கிறார்

1977 இல் இவ்வாறான ஒரு நிகழ்வு எனக்கு வந்தது

எனது அண்ணரின் நண்பர் ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கடை  வைத்திருந்தார்

நான் லீவுக்கு போயிருந்தபோது

ஒருவர்  களவெடுத்து  தனது  கைப்பையுக்குள்  வைத்தார்

அதை  நான் கடை  நண்பரிடம்  காட்டி  கொடுத்ததால் கோபமுற்ற  நபர்

என்னை தேய்காயால்  அடிக்க துரத்தினார்

எனது அண்ணரின்  நண்பர் உட்பட எவருமே என்னை  காப்பாற்றமுடியவில்லை

ஓடி  தப்பித்துக்கொண்டேன்

இன்றும் அதே  நிலை தான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.