Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice

Featured Replies

ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice

'ஒரு பெண் அச்சமின்றி தன விருப்பம் போல வாழ்ந்து, பாலியல் தொழிலாளி, மனைவி, காதலி ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் தனது அடையாளத்தை தேடுவது மனைவிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளிகளையும், காதலிகளிடம் இருந்து மனைவிகளையும் வேறுபடுத்தி பார்க்கும் உங்களுக்கு கோபம் வரலாம்.'

Her Choice

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் 'பாகி ஹூ லடுக்கியா' (ஓடிச்சென்ற பெண்கள்) எனும் கவிதையில் மேற்கண்ட வரிகளை உங்களையும், என்னையும் பற்றிதான் இந்தி கவிஞர் அலோக் தன்வா எழுதியுள்ளார்.

ஏனெனில், அச்சமின்றி பெண்கள் உலவுவது கோபத்தை உண்டாக்குகிறது. எனினும், அது இன்றும் தொடர்கிறது. ஆனால், நீங்கள்தான் உங்களை கண்களை மூடிக்கொண்டீர்கள் அல்லது வேறு பக்கம் திரும்பிக்கொண்டீர்கள்.

அப்படி மறைந்திருக்கும் அந்த எதிர்வினை மீது சிறிது வெளிச்சம் பாய்ச்ச விரும்பினோம்.

சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவே விரும்புகிறோம்.

அவர்கள் நம்மிடையேதான் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கிறார்கள்.

அவர்களின் கதைகள் உங்களை அதிர்ச்சி அடையச் செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இந்திய பெண்கள் பற்றிய உங்கள் புரிதலை அது கேள்வி கேட்கும்.

திருமணத்துக்குப் பிறகு தனது கணவர் ஆண்மையற்றவர் என்பதை அறிந்த பெண்ணின் கதையை உங்களிடம் பகிர்வோம்.

Her Choiceபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் ரீதியாக அப்பெண்ணை திருப்தி அடையச் செய்ய முடியாத அந்த ஆண், அவரது உளவியல் தேவைகளையும் பொருட்படுத்தவில்லை.

சமூகத்தின் அழுத்தத்தால் அந்த ஆண் பொய் சொல்லித் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த முழுமையடையாத உறவிலிருந்த அப்பெண் என்ன செய்தார் தெரியுமா?

ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருக்கிறாள். அவள் பிறந்ததும், தாங்கள் விரும்பும் ஆண் மற்றும் பெண்ணுடன் வாழ அவளது தாயும் தந்தையும் சென்று விட்டனர்.

பெற்றோர் உயிருடன் இருந்தும் அனாதையாக்கப்பட்ட அந்த சிறுமி எதை விரும்புவாள்?

ஒருபால் உறவு குறித்து நிறைய விவாதிக்கப்பட்டுவிட்டது. எனினும் பல தசாப்தங்களாக ஈர்ப்பும் பாலுறவும் இல்லாமல் இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா?

அப்படி சுதந்திர உணர்வு மிக்க பெண்களுடன் நீங்கள் நட்பு கொள்ள விரும்புவீர்களா?

Her Choice

மணமுறிவு ஆன பெண்கள் ஆதரவற்றவர்கள் என்று பார்க்கப்படும் நிலையில், தனது திருமண உறவு முறிந்த பிறகு தன்னைத் தானே நேசிக்காத தொடங்கிய பெண் ஒருவர் உள்ளார்.

நாங்கள் பின்தொடர்ந்த பெண்களின் கதைகள் சுவாரசியமானவை. அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர்.

ஒருவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து, அக்குழந்தையை வளர்ப்பதில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

'லிவ்-இன்' உறவு மூலம் பிறந்த குழந்தையை கருவிலேயே கலைக்காமல் அதை வளர்க்க அவர் முடிவு செய்தார். அந்த உறவு முறிந்த பிறகுதான் அவர் கருவுற்று இருந்தது அவருக்குத் தெரிந்தது.

குடும்பத்தின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்ட பெண், தனது கொடுமைக்கார கணவரை எவ்வாறு எதிர்கொண்டார்?

தன்னை நேசிக்காத கணவரை மனைவி எவ்வாறு எதிர்கொண்டார்?

Her Choice

மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது குடும்பம் மற்றும் கணவர் முன்பு தன்னை எவ்வாறு நிரூபித்தார்?

குறைவான கல்வியறிவுடைய, தன் சொந்தக் காலில் நிற்கும் பெண் ஒருவர் பொறுப்பற்ற ஆண் ஒருவருடன் வாழ்ந்தார். அவர் அலைக்கும் நேரத்தில் பாலுறவுக்கு சம்மதிக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் அந்தப் பெண் என்ன செய்தார்?

இத்தகைய 12 பெண்களின் கதைகளை, வரும் வார இறுதி (சனி, ஞாயிறு) முதல் பிபிசி பதிப்பிக்கவுள்ளது.

அவர்களை பற்றி படிப்பதே அவர்களை பிரதிபலிக்கும். அந்த பிரதிபலிப்பே அதன் சாரத்தை உணர்த்தும்.

அந்தப் பெண்களுக்குள்ளும் மகிழ்ச்சி இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பிறராலும் செயல்பட முடியும் என்று அந்தப் பெண்கள் நம்புகின்றனர். அதற்கு அவர்களை புரிந்துகொள்வது ஒரு வாய்ப்பாக இருக்கும்

http://www.bbc.com/tamil/india-42724849

தொடரும்....

இந்த தொடர் எப்படி வருமோ தெரியாது..:rolleyes: அதனால் பாதுகாப்பாக பேசாப்பொருளில் இணைத்து உள்ளேன்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியவரால் கைவிடப்படும்போது , குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டுமென்ற நிலையில் விபச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் நிலையில் 

 ஒரு விலைமாது........நல்ல தாயாக இருக்க வாய்ப்புண்டு, ஆனால் கண்டிப்பாக நல்ல மனைவியாக,காதலியாக இருக்க வாய்ப்பேயில்லை.

நல்ல மனைவியாக நல்ல காதலியாக இருக்க நல்ல கணவன், நல்ல காதலன் அவசியம்

நல்ல கணவன், காதலன் அமைந்துவிட்டால் ஒரு பெண் எதற்காக விபச்சாரத்தில் இறங்கபோகிறாள்?

32 minutes ago, நவீனன் said:

இந்த தொடர் எப்படி வருமோ தெரியாது..:rolleyes: அதனால் பாதுகாப்பாக பேசாப்பொருளில் இணைத்து உள்ளேன்.tw_blush:

பேசா பொருளில் இணைத்திருந்தாலும், இது பேசப்படவேண்டிய பொருள்தான், அதனால் பாதுகாப்பைபற்றி அதிகம் கவலைபட்டு நவீனன் உடம்பை கெடுத்துகொள்ளக்கூடாது<_<

  • தொடங்கியவர்

வளவன், முதலில் சமூகச் சாளரம் பகுதியில்தான் இணைக்க இருந்தேன்..

பிறகும் ஏன் வீணாக நிர்வாகத்துக்கு பிரச்சனையை கொடுப்பான் என்றுதான் இங்கு இணைத்தேன்.:grin: அதைத்தான் பாதுகாப்பு என்று குறிப்பிட்டேன்.<_<

16 minutes ago, valavan said:

பேசா பொருளில் இணைத்திருந்தாலும், இது பேசப்படவேண்டிய பொருள்தான், அதனால் பாதுகாப்பைபற்றி அதிகம் கவலைபட்டு நவீனன் உடம்பை கெடுத்துகொள்ளக்கூடாது<_<

#HerChoice என்ற தலைப்பில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த பிரத்யேகத் தொடரை வெளியிடுகிறது பிபிசி தமிழ்.

ஆண்மையற்ற ஆண் ஒருவரை மணக்க நேர்ந்த ஒரு பெண்ணின் கதை முதல் கட்டுரையாக நாளை சனிக்கிழமை வெளியாகிறது.

இக்கட்டுரையை எழுதிய பிபிசி தமிழின் ஐஸ்வர்யா ரவிசங்கருடன் கட்டுரைத் தொடரின் தொகுப்பாளர் திவ்யா ஆர்யா புது டில்லியில் நடத்தும் உரையாடல்

54 minutes ago, ஈழப்பிரியன் said:

திருமணத்திற்கு முன் எப்படி இருக்கிறாள் என்பது பிரச்சனையல்ல

அதற்கு பின எப்படி இருக்கிறாள் எப்பதே பிரச்சனை.

ஒரு காலத்தில் பெண் திருமணத்துக்கு முன்பும்  கற்புகரசியாக இருந்து கணவன் மாதவியை தேடிப் போகின்றவனாக அமைந்தாலும் கூட  தன் கற்பு நெறியை விட்டு இம்மியளவும் பிசக கூடாது என எதிர்ப்பார்த்தனர்

பின் இப்ப கொஞ்ச காலமாக திருமணத்துக்கு முன் எப்படியும் இருந்து விட்டு போகட்டும் திருமணத்தின் பின் ஒழுங்காக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்

இனி வரும் காலத்தில் இதுவும் மாறும்.

பாலியல் / பாலுறவு என்பதை சார்ந்து ஒரு பெண்ணை மதிப்பிடும் அளவீடுகளும் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

திருமணத்திற்கு முன் எப்படி இருக்கிறாள் என்பது பிரச்சனையல்ல

அதற்கு பின எப்படி இருக்கிறாள் எப்பதே பிரச்சனை.

திருமணத்திற்குமுன் பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்துதானே திருமணம் செய்யும் கலாச்சாரத்தில் நாங்கள் வாழ்கிறோம், பெண் பிரச்சனையானவளா இருந்தால் யாரும் பெண் எடுக்க விரும்புவதில்லையே ஈழபிரியன் அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்களில் பெண் இனம் என்பது ஒரு விசித்திரமான படைப்பு!

அதனால் இயற்கை..அவளுக்குப் பல அனுகூலங்களைக் கொடுத்திருக்கின்றது!

பூவுலகில் உயிரினங்களின் இருப்பின் தொடர்ச்சியே...பெண் இனத்தில் தான் தங்கியுள்ளது!

ஆண் இனத்தை நம்பி...இயற்கை இல்லை! இயற்கை அதற்கும் மாற்று வைத்திருக்கின்றது!

'அவக்காடோ' போன்ற தாவரங்களின் பூக்கள் பகலில் ஆண் பூக்களாகவும்...இரவில் பெண் பூக்களாகவும் மாறும் இயல்புடையவை!

'ஹயினா' போன்ற சில விலங்கினங்கள்...தேவைகேற்ப ஆணாகவோ...அல்லது பெண்ணாகவோ மாறும் குணமுடையவை!

ஒரு பெண் நினைத்தால்...ஒரு தெய்வமாகவோ...அல்லது ஒரு பேயாகவோ கூட ஆகக் கூடிய வலிமை அவளிடம் உள்ளது!

அதனால் தான்...மதங்களும்...கலாச்சாரங்களும்...அவள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன!

ஒரு பெண்...விலைமாதாக மாறுவதோ...ஒரு நல்ல மனைவியாக அமைவதோ..அல்லது ஒரு காதலியாக அமைவதோ...அவள் வாழும் சூழலில் தான் தங்கியுள்ளது!

சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவள் மாறித் தான் ஆக வேண்டும்!

அது தான் இயற்கை!

எனவே....ஆண் சிங்கங்களே...உங்கள்ஈகோக்களைப் பத்திரமாக உங்களுடனேயே வைத்திருங்கள்!

நீங்கள் இல்லாமல் பெண் சிங்கங்கள் வாழ முடியும்! எனினும் பெண் சிங்கங்கள் வேட்டையாடாமல் விட்டால்.....நீங்கள் அன்றைய நாள் பட்டினி!

ஏனெனில் உங்களுக்கு வேட்டையாடத் தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

புங்கை அவுசில் திருமணத்திற்கு முன்னர் இருபாலரும் டாக்ரரிடம் போய் இரத்த சோதனைகள் செய்து இருவரும் ஆளையாள் வருத்தம்(பாலியல்)எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்களாமே?

இந்த செய்தி உண்மையா?அங்கேயுள்ளவர்கள் தான் அறியத்தர வேண்டும்.

4 hours ago, புங்கையூரன் said:

உயிரினங்களில் பெண் இனம் என்பது ஒரு விசித்திரமான படைப்பு!

உண்மைதான்..

கணவன் மனைவி , காதலன் காதலி உறவில் கணவன் மனைவியை புரிந்துகொள்வது என்பதும் முழுமையற்ற ஒன்றாகவே அவர்கள் வாழ்வு முடிந்துபோகின்றது. புரிந்த அளவை வைத்து ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள் என்று சொல்வார்கள். அதே போல் தாய்க்கும் மகனுக்குமான உறவுகூட முழுமையான புரிதலுக்கு உட்பட்டதில்லை. இவ்வுலகில் வாழ்வதற்கு தாயால் வழங்கப்படும் பாதுகாப்பு என்னும் ஒன்றைச் சுற்றியே பாசம் தாய்மை என்ற உணர்வுகள் கட்டமைக்கப்படுகின்றது. தாய்நிலம் என்பார்கள் அதேபோல் கடலம்மா என்பார்கள் தகப்பன் நிலம் கடலப்பா என்று இயல்பாகவே வராது. பூமி பெண்ணாகவே உணரப்படுகின்றது. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள். மகன் கணவன் காதலன் கள்ளக் காதலன் என எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஆண் கற்றது கட்டையில் போறவரை கையளவுதான்.  பிரபஞ்சத்தின் உணர்வு மனிதன் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை பிரபஞ்சத்தின் உணர்வு பெண்ணே, பெண் ஊடாகவே ஆணும் பிரபஞ்சத்தின் உணர்வாகின்றான் தவிர நேரடியாக இல்லை. இயற்கையில் ஆணும் பெண்ணும் சமமானவார்கள் இல்லை. ஆண் கீழனவனே. அதனால் தான் அவன் தானே மேலானவன் என்கின்றான். அதற்கக ஏராளமான வித்தை காட்டுகின்றான். (இது ஒரு உணர்வு, ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்)

  • தொடங்கியவர்

புதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் #HerChoice

சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் தொடர் இது. நம்மிடையே வாழும் அவர்களின் கதைகள் உங்களை அதிர்ச்சி அடையச் செய்து இந்திய பெண்கள் பற்றிய உங்கள் புரிதலை கேள்வி கேட்கும்.

புனைவு படம்படத்தின் காப்புரிமைALAMY

அன்று எங்களின் முதல் இரவு. ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடனும் கனவுகளுடனும் எங்கள் படுக்கை அறைக்குச் சென்றேன். பதின் பருவத்தில் உடலுறவு பற்றி தோழிகள் வட்டத்தில் நாங்கள் பேசிக்கொண்டதும் இது தொடர்பான வீடியோக்களை அவர்கள் கட்டாயப்படுத்தியதால் பார்த்ததும் கண்கள் முன் வந்து வந்து போயின.

கையில் பால் சொம்புடன் தலை குனிந்தபடி அறைக்குள் சென்றேன். மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லவேண்டும்.

படுக்கையில் என்னைக் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்து, விடிய விடிய கண்ணுறக்கம் பாராமல் காமத்தில் ஈடுபடுவோம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் வருவதற்கு முன்பே அவர் நன்றாக தூங்கிகொண்டிருந்தார்.

நான் 35 வயது நிரம்பிய கன்னி. அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை.

கல்லூரி நாட்களிலும் பணிபுரிந்த இடங்களிலும் என் சக தோழிகளெல்லாம் தங்களுக்கு பிடித்த துணையை தேடிக்கொண்டு அவர்களின் தோளில் சாய்ந்துகொண்டும் கரத்தை பற்றிக்கொண்டும் நடப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். எனக்கும் இப்படி ஒரு துணை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன?

நான்கு அண்ணன்கள் ஒரு தங்கை, வயதான பெற்றோர் என எங்கள் குடும்பம் பெரியது. இருப்பினும் நான் எப்போதும் தனிமையாகவே உணர்ந்தேன்.

புனைவு படம்

என் அண்ணன்களுக்கும் தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் குடும்பத்தை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் என் திருமணம் குறித்து அவர்களுக்கு நினைவிருக்கவா போகிறது. இத்தனை ஆண்டுகளாய் நான் அனுபவித்த தனிமையை போக்க, நான் சேமித்து வைத்திருக்கும் அன்பையெல்லாம் வெளிப்படுத்த ஒரு துணையை தேடிகொண்டிருந்தது மனம்.

உடல் எடை அதிகம் கொண்ட பெண்களை ஆண்கள் விரும்பமாட்டார்களோ? நான் குண்டாக இருப்பதால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ? நான் இறுதிவரை இப்படியே இருந்துவிடுவேனா? என் பெண்மை அர்த்தமற்று போய்விடுமா? இவையெல்லாம் அடிக்கடி என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் விடைதெரியா கேள்விகள்.

எனது 35 வயதில் இதற்கான விடை கிடைத்தது. எப்படியோ என்னையும் திருமணம் செய்துகொள்ள ஒருவர் வந்தார். என்னை பெண் பார்க்க வந்தபோதே என் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் அவரிடம் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் பேசச் சென்றேன்.

ஆனால் அவர் நான் பேசுவதையெல்லாம் சரியாக கவனிக்கவில்லை; பதில் கூட பேசவில்லை; பதற்றமாகவே இருந்தார். எல்லாவற்றிற்கும் தலை குனிந்தபடி "ம்ம்" என்று மட்டுமே சொன்னார். இந்த காலத்தில் ஆண்கள் தான் பெண்களைக் கண்டு வெட்கப்படுகிறார்கள். இதில் என் வருங்கால கணவர் மட்டும் விதி விலக்கா என்ன என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

புனைவு படம்

21 ஜூலை 2007, நான் இத்தனை ஆண்டுகளாய் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நாள் வந்தது. அனைவரின் ஆசியுடனும் நல்லபடியாக எங்கள் திருமணம் நடந்தது.

அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை. அடுத்த நாள் இதுபற்றி கேட்டபோது, உடல் நிலை சரியில்லை என்று மழுப்பிவிட்டார். அதன் பிறகு எங்களுடைய இரண்டாவது இரவு மூன்றாவது இரவு என எல்லாமே இப்படித்தான் முடிந்தது.

எனது மாமியாரிடம் இது பற்றி கேட்டேன். "அவனுக்கு கூச்ச சுபாவம். சிறுவயதிலிருந்தே பெண்களிடம் பேசத் தயங்குவான். படிச்சதெல்லாம் ஆண்கள் பள்ளியில். அக்கா தங்கை-ன்னு யாரும் இல்ல. போகப் போக சரியாகிடுவான்" என்று ஒரு சராசரி மாமியாரைப் போல் கூறினார்.

கேட்பதற்கு ஆறுதலாக இருந்தாலும் மனதிற்கு நெருடலாகவே இருந்தது. நாளுக்கு நாள் என்னுடைய எதிர்பார்ப்பு உடைக்கபட்டுக்கொண்டே வருவதை என்னால் உணர முடிந்தது. காமம் மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசியதில்லை. என் கையைக் கூட பிடித்ததில்லை.

உடன் பணிபுரியும் பெண்ணொருத்தி தன் ஆடையை சற்று சரி செய்தாலே அண்ணாந்து பார்க்கின்ற ஆண்கள் மத்தியில், தான் தாலி கட்டிய மனைவி உடை மாற்றும்போது கூட அவர் கண்டுகொள்ளவில்லை.

Her Choice

இதையெல்லாம் யாரிடம் சொல்வதென்று தெரியாமல் தவித்தேன். என்னை கரை சேர்த்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் என் பெற்றோரும் உடன் பிறந்தோரும் இருக்க, அவர்களிடம் இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தேன்.

"ஒருவேளை அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டார்களோ? இல்லை என்னுடைய உடல் எடைதான் அவருக்கு பிடிக்கவில்லையோ?" என்று மீண்டும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. இதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன்.

அன்று அவருக்கு விடுமுறை. பொதுவாக விடுமுறை நாட்களில் கூட வீட்டிலிருக்கமாட்டார்; நண்பர்கள் இல்லத்திற்கோ பெற்றோரை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கோ சென்றுவிடுவார். அன்று என்னவோ அதிசயமாக வீட்டிலிருந்தார். எனது மாமனாரும் மாமியாரும் ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தனர். இதை விட்டால் வேறு வாய்ப்பு அமையாது என்ற எண்ணத்தில் அவரிடம் சென்றேன்.

தனது மடிக்கணினியில் அலுவல் வேலை செய்துகொண்டிருந்தார். அவரின் அறைக் கதவை சாத்தி தாழ்பாள் இடுவதைக்கண்டு படுக்கையிலிருந்து எழுந்தார். அவரிடம் சற்று நிதானமாகவே கேட்டேன், "என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நமக்கு முதல் இரவு கூட இன்னும் நடக்கவில்லை. அது கூட பரவாயில்லை; என்னிடம் நீங்கள் சரியாகப் பேசுவதில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?" என்றேன் ஆழ்ந்த வருத்ததுடன்.

Her Choice

அவர், "அப்படியெல்லாம் ஒன்றும் இல்ல" என்று சொல்ல, எனக்கு திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அவரை வலுக்கட்டாயமாக படுக்கையில் தள்ளி அவருக்கு என்மீது மோகம் ஏற்படும் வகையில் அவரைக் கட்டி அணைத்தேன். இதன் உச்சமாக அவரது ஆணுறுப்பை தொட்டுப் பார்க்கலாம் என்ற முயற்சியில் ஈடுபடும்போதுதான் தெரிந்தது அவருடைய ஆணுறுப்பு மிகவும் சிறியது என்று.

இதைச் சொல்ல பெண்ணாக எனக்கு கூச்சமாக இருந்தாலும், பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என அனைவரும் அறிய இதை கூறுகிறேன். முதன்முதலில் ஆணுறுப்பை தீண்டப்போகி்றேன், என் கரம் பட்டதும் ஆணுறுப்பு விரியும் என் பெண்மை முழுதாய் மலரும் என எண்ணற்ற கற்பனையில் இருந்த எனக்கு என் சுண்டுவிரலில் பாதி கூட இல்லாத அவரின் உறுப்பு பெருத்த இடியாய் அமைந்தது.

தோழிகள் பலர் சொல்லகேட்டும் பல வீடியோக்கள் பார்த்தும் ஒரு பெரிய வாழைப்பழம் போன்று இருக்கும் என பொங்கிவந்த என் உணர்ச்சிகள் திராட்சைபழ அளவே இருந்த அதை தொட்டவுடன் புஸ்வானமாகிப் போனது. என் மனதில் மீண்டும் குழப்பம். உண்மையில் ஆண்குறி இந்த அளவு தான் இருக்குமா, வலைத்தளங்களில் பார்த்ததெல்லாம் கிராபிக்ஸ் தானா, யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

இந்த சமயத்தில் நான் தீண்டியதில், உண்மை வெளியான அதிர்ச்சியில் அவர் நாணிக் குருகிப் போனார். மெல்ல மெல்ல உண்மை வெளிவரத் தொடங்கியது. எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் திருமண வாழ்வுக்கு தகுதியற்றவர், ஆண்மையற்றவர் என்பது அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தெரிந்திருக்கிறது.

ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டது. ஒரு பெண்ணிடம் சிறுகுறை இருந்தாலும் அதை பூதக்கண்ணாடியில் பார்த்து அவளை தண்டிக்கும் இந்த சமுகம், ஒரு ஆணின் பெரிய குறைக்கும் பெண்ணையே தண்டிக்கிறது. இது வெளியே தெரிந்தால் நம் குடும்பத்துக்கு தான் அவமானம் என்றனர் என் கணவர் குடும்பத்தினர். உன் விதி அவ்வளவு தான் என்ன செய்வது என வருந்தினர் என் குடும்பத்தினர்.

Her Choice

குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக்கொள்ளலாமே; உடல் சுகம் மட்டுமா வாழ்க்கை என அறிவுரை கூறினர், அறுபதிலும் ஆசை அடங்காமல் மறுமணம் செய்த பெரிய மனிதர்கள். 35 வயதிற்கு மேலும் திருமணம் ஆகியும் கன்னி கழியா என் மனக்குமுறல் யாருக்கும் புரியவில்லை.

என் கணவன் எனது காலில் விழுந்து அழுதான். ''என் நிலையை வெளியே சொல்லிவிடாதே, என்னை விவாகரத்தும் செய்து விடாதே. என் மானமே போய்விடும். உன் விருப்பப்படி இருக்கலாம். யாரிடம் வேண்டுமானால் செல். எதையும் நான் கேட்கமாட்டேன். வேறு யாரிடமோ சேர்ந்து உனக்கு குழந்தை பிறந்தாலும் நானே அதற்கு தந்தை என சொல்லிகொள்கிறேன்'' என்றான்.

காதில் ஈயம் கொட்டியது போல் இருந்தது. கட்டிய கணவனிடமிருந்து எந்த பெண்ணும் கேட்கக் கூடாத அந்த சொற்கள். ஊருக்கு நல்லவளாக வெளிவேடம் போடவா? உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து விவாகரத்து நாடவா? என் மனதில் பெரும் போராட்டம்.. இறுதியில் என் உணர்ச்சிகளே வென்றது.

ஆண்மையற்ற ஒருவனுக்காக என் ஆசைகளை துறக்க நான் தயாரில்லை. கணவன் வீட்டை விட்டு வெளியேறினேன். பிறந்த வீட்டிலும் என்னை ஏற்கவில்லை. தோழிகள் உதவியுடன் மகளிர் விடுதியில் சேர்ந்தேன். வேலையும் தேடிக்கொண்டேன். நண்பர்கள் சிலர் துணையுடன் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன்.

கணவன் வீட்டில் என்மீதே பழி சுமத்தினர். நான் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறேன். அதனால் தான் விவாகரத்து கேட்கிறேன் என்றெல்லாம் கதை கட்டினர்.

நீதிமன்றத்தில் நான் போராடி மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தேன். உண்மை வெட்ட வெளிச்சமாகியது. மூன்றாண்டுகள் போராட்டத்திற்கு பின் விடிவு பிறந்தது; விவாகரத்து கிடைத்தது. புதிதாய் பிறந்தது போன்ற மகிழ்ச்சி என் எண்ணத்தில்.

40ஐ நெருங்கியிருந்தாலும் நான் இன்னும் கன்னிதான். கணவனை பிரிந்தவள், உடலுறவுக்காக ஏங்குபவள் என எண்ணி ஆண்கள் கூட்டம் என் மேல் வலை வீசத் தொடங்கியது. அவர்கள் என்னுடன் மஞ்சத்தைப் பகிர விரும்பினார்களே தவிர மனைவியாக்க விரும்பவில்லை. கெட்ட எண்ணங்களுடன் வந்தவர்களை சுட்டெரித்தேன் பார்வையினால்.

எனக்கு ஆசையுண்டு, உணர்ச்சியுண்டு. அதை கணவனுடன் பகிரவே விரும்புகிறேன். ஆணினத்தை நான் வெறுத்துவிடவில்லை. எனக்கு நம்பிக்கையுண்டு, என் ஆசைக்கேற்ற, என் உணர்ச்சிகளைத் திருப்திபடுத்த ஒருவன் வந்து என்னை மணப்பான். அவனுடன் சேர்ந்து என் உடல், மன இச்சைகளை தீர்த்துக்கொள்வேன்.

அதுவரை நண்பர்களுடன் அந்தரங்க விஷயங்கள் பேசுவதிலும் , வலைதளங்கள் மூலமும் திருப்தியடைந்து கொள்கிறேன். என்னை விமர்சிப்பவர்களே ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், பெண்கள் உயிரற்ற ஜடமல்ல, உணர்ச்சிகள் நிறைந்த ஜீவன்!

http://www.bbc.com/tamil/india-42752878

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அவள் உத்தமமானவளா என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

கேட்டு மற்றவர் சொன்னதை நம்பி வாழ்கிறோம்.

இதே மாதிரி உணர்வு, எதிர்பார்ப்பு  கணவனைப் பற்றி பெண்ணிடமும் இருக்குமே..?

அவளுக்கு யார் பதில் சொல்வது..?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

கணவன் மனைவி , காதலன் காதலி உறவில் கணவன் மனைவியை புரிந்துகொள்வது என்பதும் முழுமையற்ற ஒன்றாகவே அவர்கள் வாழ்வு முடிந்துபோகின்றது. புரிந்த அளவை வைத்து ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள் என்று சொல்வார்கள்.

இதில் எந்தளவிற்கு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதிலேயே இல்வாழ்க்கையின் தொடர்ச்சி இருக்கிறது..

பெரும்பாலும் ஆணின் வக்கிரபுத்திக்கு காலப்போக்கில் பெண் பலியிடப்படுகிறாள் அல்லது தன் வருங்கால பாதுகாப்பு, சமூக அவச்சொல், குழந்தைகளின் நலன் கருதி, விதியே என இல்வாழ்க்கையில் 'காம்ரமஸ்' செய்துகொண்டு வாழ்கிறாள்..

பெண், எவ்வளவுக்களவு தன் சுயமரியாதையை, தன்மானத்தை விட்டொழித்து, கணவனின் ஆணாதிக்கத்தை ஏற்கிறாளோ, அவளே வெற்றிபெற்றதாக இன்றளவும் அளவிடப்படுகிறது.

1 hour ago, சண்டமாருதன் said:

...என்னைப்பொறுத்தவரை பிரபஞ்சத்தின் உணர்வு பெண்ணே, பெண் ஊடாகவே ஆணும் பிரபஞ்சத்தின் உணர்வாகின்றான் தவிர நேரடியாக இல்லை. இயற்கையில் ஆணும் பெண்ணும் சமமானவார்கள் இல்லை. ஆண் கீழனவனே. அதனால் தான் அவன் தானே மேலானவன் என்கின்றான். அதற்கக ஏராளமான வித்தை காட்டுகின்றான். (இது ஒரு உணர்வு, ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்)

சாமிகளே, எங்கேயோ போயிட்டீங்க..!  sgentil.gif

இதை உணர்ந்தெழுத அனுபவம் பத்தாது..!!  vil-oui.gif

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவனின்றி சக்தியில்லை சக்தியின்றி சிவனில்லை. பிரபஞ்சம் இயங்க இருவரும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

புங்கை அவுசில் திருமணத்திற்கு முன்னர் இருபாலரும் டாக்ரரிடம் போய் இரத்த சோதனைகள் செய்து இருவரும் ஆளையாள் வருத்தம்(பாலியல்)எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்களாமே?

இந்த செய்தி உண்மையா?அங்கேயுள்ளவர்கள் தான் அறியத்தர வேண்டும்.

வணக்கம், ஈழப்பிரியன்!

உங்களுக்காக ...ஒரு கலியாணப் புறோக்கரைச் சந்தித்து..இது பற்றிக் கேட்டேன்!

அவர் சொன்னது.....தம்பி....கலியாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் போல!

இப்படியான வேண்டு கோள்கள் தன்னிடம் நேரடியாக இதுவரை வைக்கப்படவில்லை!

ஆனாலும்....இப்படி நடப்பது பற்றி...நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புங்கையூரன் said:

ஆனாலும்....இப்படி நடப்பது பற்றி...நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!

நன்றி புங்கை ஆக எல்லோருக்கும் காதுவழி வந்த சேதி தான்.

  • தொடங்கியவர்

ஒரு பெண்ணான நான் இன்னொரு பெண்ணுடன் வாழ ஏன் முடிவு செய்தேன்? #HerChoice

நாற்பது ஆண்டுகளாக பாலியல் எண்ணங்களற்ற உறவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு பெண்களின் கதை. பிபிசியின் #அவள் விருப்பம் (#HerChoice) சிறப்புத் தொடரில் இடம்பெறும் பன்னிரெண்டு 'நவீன இந்திய பெண்களின்' கதைகளைப் படியுங்கள்.

கார்ட்டூன் பெண்கள் இருவர்

நானும் எனது தோழியும் லெஸ்பியன் (பெண் ஒருபாலுறவுகாரர்கள்) அல்ல. எங்களுக்கு இடையில் எந்தவித பாலியல் ஈர்ப்பும் இல்லை. எங்களது கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

அதனால்தான் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் நாற்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் இருவரும் இப்போது எங்களது எழுபதுகளில் இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக வாழலாம் என்று முடிவு செய்தபோது எங்களுக்கு முப்பது வயதுதான்.

அந்த இளம் வயதில் கூட, இருவரும் சாகசத்தை விட வாழ்க்கையில் அமைதிக்காகவும் ஸ்திரத்தன்மைக்காகவும்தான் ஏங்கினோம். நாங்கள் ஒன்றாக வாழலாம் என்று முடிவு செய்ததற்கு இதுவே மிகப்பெரிய காரணம். நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். எனக்கு ஒளிரும் நிறங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்; இந்த வயதில் கூட உதட்டுச்சாயம் பூசுவதை நான் விரும்புகிறேன்.

ஆனால் என் தோழிக்கோ லேசான நிறங்கள் தான் பிடிக்கும். நான் எப்போதும் ஹீல்ஸ் செருப்பு அணிவேன். ஆனால் அவளோ தட்டையான செருப்பைத்தான் எப்போதும் அணிவாள். நான் தொலைக்காட்சி பார்க்கும்போதெல்லாம், அவளது கைபேசியை பயன்படுத்தியபடி என்னை மிரட்டுவாள், 'இந்த வயதிலும் என்ன இது புது ஃபேஷன்?' என்று.

இது நமது வாழ்க்கை, சில சுவாரஸ்யமான வேடிக்கைகள் மற்றும் நம் வாழ்க்கையை நம் விருப்பப்படி வாழ்வதற்கான முழு சுதந்திரமும் நமக்கு உள்ளது.

நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். ஆனால் ஒருவர் மற்றவரின் தனிப்பட்ட உலகத்தில் ஒருபோதும் தலையிடுவதில்லை.

நவீனகால திருமணங்களில் எந்தவித வெளிப்படை தன்மையும் இல்லை. உறவுகளுக்கு இடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன; அந்த எதிர்பார்ப்புகளின் பளு தாங்கமுடியாமல் உறவுகள் முறிந்து விடுகின்றன.

அப்படி முறிந்தபோன திருமணம்தான் என்னுடையதும்; ஆனால் அது முடிந்து போன கதை, அதன் பக்கங்களை நான் மீண்டும் புரட்ட விரும்பவில்லை. என் குழந்தைகளெல்லாம் வளர்ந்து, தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.

எனது தோழி தனிமையில் வாழ்வதையே எப்போதும் விரும்புவாள்; அதனால்தான் இப்போதும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

ஏனென்றால் ஒரு வகையில் நாங்கள் ஒன்றாக இருந்தாலும் தனியாகவே வாழ்கிறோம். நாங்கள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தபோதிலும் கூட, அடிக்கடி ஒருவருக்கொருவரின் புதிய பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்கிறோம்.

எங்கள் உறவின் அழகே என்னவென்றால் இப்போது வரை ஒருவரைப் பற்றி மற்றவருக்கு முழுமையாகத் தெரியாது. இந்த உறவு இன்னமும் அழகாக இருப்பதற்கு இதுவே காரணம்.

ஒருவருக்கொருவர் மட்டுமே சேர்ந்து வாழும் வாழ்க்கை சலித்துபோகாதா? என்று பலர் எங்களிடம் கேட்பார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதே அரிது. நாங்கள் ஒரு வீட்டில் வாழ்ந்தாலும் பல நேரங்களில் உணவருந்தும் மேசையில்தான் சந்திப்போம்; பின்னர் அவரவர் வேலைகளில் பிஸியாகிவிடுவோம்.

நாங்கள் வேலை செய்த காலத்தில் எங்களுக்கு இருந்த இந்தப் பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் எங்கள் வீட்டு பணிப்பெண் முற்றிலும் குழம்பிப்போனாள். எங்களுக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? இளைய நபர் யாராவது எங்களுடன் வந்து இருக்கமாட்டார்களா? என்று அவள் அடிக்கடி கேட்பாள்.

தொலை்ககாட்சி பார்க்கும் கார்ட்டூன் பெண்கள் இருவர்

அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. எங்களுக்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழும் வாழக்கையைத்தான் நாங்களே விரும்பி தேர்ந்தெடுத்தோம் என்றெல்லாம் விளக்கம் அளிக்க விரும்பவில்லை.

ஓர் ஆண் இல்லாமல் வீட்டில் தனியாக வாழ்ந்தால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக அவள் எங்களை அச்சுறுத்துவாள். அவளது வார்த்தைகளைக் கேட்டால் எனக்கு சிரிப்புதான் வரும். ஒரு திருடன் திருட நினைக்கும் ஒரு பொருள் கூட எங்கள் வீட்டில் இல்லை என்று ஒரு நாள் அவளிடம் விளக்கமும் அளித்துவிட்டேன்.

இருண்ட வர்ணம் பூசப்பட்ட எங்கள் வீட்டுச் சுவர்களைப் பார்த்தாலே எந்த மாதிரியான ஆட்கள் இங்கு வசிக்கிறார்கள் என்பது அவனுக்கே தெரிந்துவிடும். அவள் என்னை புரிந்துகொள்ள முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது எங்கள் வாழ்க்கை குறித்து அவளது கவலையும், மறுப்பும் தெரிவிப்பாள்.

முரண் என்னவென்றால், நாங்கள் ஒன்றாக எப்படி வாழவேண்டும் என்று கற்பனை செய்திருந்தோமோ அத்தகைய வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நான் அமைதியான சிந்தையுடன் காலையில் எழுவேன். எங்கள் வாழ்க்கையில் எந்த அவசரமும் கிடையாது. எனது நாளை மன அழுத்தத்தோடு துவங்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை; மாறாக ஒவ்வொரு காலையும் என்னைப் பற்றி கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

உறவுகளின் பொறுப்பில் இருந்து விலகி ஓடவே இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தோம் என்று இதற்கு அர்த்தமில்லை. பலர் எங்களைச் சந்தித்தாலோ அல்லது பார்க்க வந்தாலோ, எங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை, கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவரின் சொந்த வாழ்க்கையை அவரே நிர்வகிப்பது பொறுப்பில்லையா என்ன? எங்களது தேவைகளுக்கு வேறு எவரையும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை.

முதலில், நாங்கள் ஒன்றாக இருப்பதைப் பார்த்து பலரும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவும், எங்கள் இருவருக்கிடையில் ஏதோ இருப்பதாகவும் நினைத்தார்கள். ஆனால், மக்களின் பார்வையில் எங்களைப் பற்றிய அபிப்ராயத்தைத் திருத்துவது அல்லது அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பது எனக்கு முக்கியம் இல்லை.

நான் குங்குமம் வைத்துக்கொள்வேன், மெட்டி அணிவேன், தங்க மூக்குத்தியும் அணிவேன். என் மனதில் ஆசைகள் உள்ளவரை இதையெல்லாம் அணிவேன், இவையெல்லாம் அலுத்து போன பிறகு இதை நானே நிறுத்திவிடுவேன்.

இந்த உறவிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை யாருடன் வேண்டுமானாலும் கழிக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் அதிகமாக தலையிடாதவர்களுடன் தான் உங்களால் உங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும்.

மக்கள் எங்களது சீரான வாழ்க்கையை விநோதமாகப் பார்க்கிறார்கள். ஆனால், இது ஏன் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் எங்களது வாழ்க்கையை நாங்களே வாழ்ந்துகொண்டிருக்கும் இரு தோழிகள்.

நான் அவளிடம் அதிகமாக எதுவும் கேட்கமாட்டேன், சொல்லவும் மாட்டேன்; அவளும் அப்படித்தான். எங்கள் வாழ்க்கையின் பக்கத்தில் நாங்கள் மட்டுமே உள்ளடக்கம்….. இதில் என்ன வினோதம் இருக்கிறது?

(பிபிசி செய்தியாளர் பூமிகாவிடம் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)

http://www.bbc.com/tamil/india-42761300

  • தொடங்கியவர்

பெண்களை மட்டுமே அவமதிக்கும் 'கெட்ட' வார்த்தைகள்! #HerChoice

அந்த வசைச் சொற்கள் மிகவும் ஆபாசமானவை. அவற்றை இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை. நான் சொல்லாவிட்டாலும் கூட அவை என்னவென்று உங்களுக்குத் தெரியும்.

#HerChoice

இந்த இந்திய நாட்டில், அந்த வசைச் சொற்களின் பொருள் இடத்துக்கு இடம் மாறுபடலாம். ஆனால், அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு.

அந்த வார்த்தைகள் அனைத்தும் பெண்கள், அவர்களின் உடல் பாகங்கள், அவர்களது உறவுகள் ஆகியவற்றை இகழும் வன்முறை மற்றும் பாலியல் பொருள் பொதிந்தவையாகவே உள்ளன. அவை எந்தத் தடையும் இன்றி மிகவும் இயல்பாக அனைவரின் வாழ்விலும் கலந்துவிட்டன.

அந்தக் 'கெட்ட' வார்த்தைகள் கூட பெண்களையே அவமதிக்கும் வகையில் உள்ளன. அவற்றை கேட்பதுகூட பெண்களுக்குப் பிடிக்கவில்லை. பெண்கள் தங்கள் விருப்பம்போல வாழவும், சுதந்திரமாகச் சிந்திக்கவும் தேர்வு செய்தது பற்றிய தொடர் அதனால்தான் சிலருக்கு ஒரு அசௌகரியத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்.

தங்கள் உறவுகளையும் தங்கள் வாழ்வையும் தங்கள் விருப்பம்போல்அமைத்துக்கொண்ட பெண்களை பற்றிய தொடர்தான் #HerChoice.

#HerChoice

அதைப் படித்த சீமா எனும் வாசகர் ஒருவர், அக்கட்டுரையைப் படித்தவர்கள் அதை திட்டும்போது 'பெண்கள்' எனும் சொல்லையும் பயன்படுத்தியது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

கணவன் ஆண்மையற்றவர் என்பதை அறிந்துகொண்ட ஒரு புது மணப்பெண்ணின் வெளிப்படையான பாலியல் விருப்பங்கள் பற்றிய கட்டுரை அது.

இத்தகைய விவகாரங்களில் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதையும் கடந்து, இவை ஆண்களுக்கான விருப்பங்கள் என்று மட்டுமே கருதப்படுகிறது.

அந்தப் புதுமணப்பெண் யார் என்று தெரியா விட்டாலும், அது இந்த சமூகத்துக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது என்று கூறியிருந்தார் விராசினி எனும் வாசகர்.

"தவறு எப்போதும் பெண்களிடம் மட்டுமே இருக்காது. அது ஆண்களிடமும் இருக்கலாம். இந்த சமூகம் தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு, பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று அவர் கருதுகிறார்.

தங்கள் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரிடம் இருந்து மோசமான எதிர்வினைகளை அப்பெண்கள் சந்திப்பதைத் தவிர்க்கவே, அக்கதைகள் உண்மையாக உள்ளபோதிலும், அவர்களின் அடையாளங்களை நாங்கள் வெளியிடவில்லை.

#HerChoice

இந்தக் கதைகள் ஒரு வேளை இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்றாமல் போகலாம். ஆனால், பெண்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்த உதவும் என்று பூனம் குமாரி எனும் வாசகர் தெரிவித்துள்ளார்.

இவை பெண்கள் தங்கள் குறைகளையும் புகார்களையும் கூறுவதற்கான தொடர் அல்ல. குடும்பம் போட்ட கோடு, சமூகம் தந்த அழுத்தம், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலம் காலமாக பணிக்கப்பட்ட கட்டளைகளையும் தகர்த்த பெண்களை பற்றிய கதைகளே இந்தத் தொடர்.

அதனால் தான் சிலருக்கு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும், சிலருக்கு மன வலிமையைத் தருவதாகவும் இந்தத் தொடர் அமைந்துள்ளது.

#HerChoice

ஒன்றாக வாழ முடிவெடுத்த இரு பெண்கள் குறித்த இத்தொடரின் இரண்டாவது கட்டுரை பற்றிக்கூறியுள்ள மீனாட்சி எனும் வாசகர், "தங்கள் விருப்பப்படி வாழப் பல பெண்களுக்கு துணிச்சல் உள்ளது. எனினும் இவர்கள்தான் அதைச் செய்து காட்டியுள்ளனர்," என்று கூறியுள்ளார்.

"நீங்கள் ஏன் செய்கிறீர்கள், எதைச் செய்கிறீர்கள் என்பதை உண்மையாகவே அறிந்தது வைத்திருக்கும்போது இத்தகைய கதைகள் நிகழ்கின்றன," என்று ஆதியா ரெஹ்மான் எனும் வாசகர் கூறியுள்ளார்.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் வகையிலோ, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலோ பெண்கள் வளர்க்கப்படுவதில்லை.

தங்களைப் பற்றி பெண்கள் அறிந்துகொள்ளவும், பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்துகொள்ளவும் இந்தத் தொடர் உதவியாக இருக்கும்.

இந்த வார இறுதியிலும் கலகக்காரப் பெண்களை பற்றிய இரு கதைகள் வரவுள்ளன. அவற்றையும் படித்துவிட்டு, அவை உங்களை அதிர்ச்சியடையச் செய்தனவா, ஊக்குவித்தனவா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

http://www.bbc.com/tamil/india-42800103

  • கருத்துக்கள உறவுகள்
On 20/01/2018 at 4:21 AM, சண்டமாருதன் said:

உண்மைதான்..

கணவன் மனைவி , காதலன் காதலி உறவில் கணவன் மனைவியை புரிந்துகொள்வது என்பதும் முழுமையற்ற ஒன்றாகவே அவர்கள் வாழ்வு முடிந்துபோகின்றது. புரிந்த அளவை வைத்து ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள் என்று சொல்வார்கள். அதே போல் தாய்க்கும் மகனுக்குமான உறவுகூட முழுமையான புரிதலுக்கு உட்பட்டதில்லை. இவ்வுலகில் வாழ்வதற்கு தாயால் வழங்கப்படும் பாதுகாப்பு என்னும் ஒன்றைச் சுற்றியே பாசம் தாய்மை என்ற உணர்வுகள் கட்டமைக்கப்படுகின்றது. தாய்நிலம் என்பார்கள் அதேபோல் கடலம்மா என்பார்கள் தகப்பன் நிலம் கடலப்பா என்று இயல்பாகவே வராது. பூமி பெண்ணாகவே உணரப்படுகின்றது. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள். மகன் கணவன் காதலன் கள்ளக் காதலன் என எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஆண் கற்றது கட்டையில் போறவரை கையளவுதான்.  பிரபஞ்சத்தின் உணர்வு மனிதன் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை பிரபஞ்சத்தின் உணர்வு பெண்ணே, பெண் ஊடாகவே ஆணும் பிரபஞ்சத்தின் உணர்வாகின்றான் தவிர நேரடியாக இல்லை. இயற்கையில் ஆணும் பெண்ணும் சமமானவார்கள் இல்லை. ஆண் கீழனவனே. அதனால் தான் அவன் தானே மேலானவன் என்கின்றான். அதற்கக ஏராளமான வித்தை காட்டுகின்றான். (இது ஒரு உணர்வு, ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்)

மிகத் தெளிந்த சிந்தனைச ண்டமாருதன்.

On 19/01/2018 at 11:34 PM, புங்கையூரன் said:

உயிரினங்களில் பெண் இனம் என்பது ஒரு விசித்திரமான படைப்பு!

அதனால் இயற்கை..அவளுக்குப் பல அனுகூலங்களைக் கொடுத்திருக்கின்றது!

பூவுலகில் உயிரினங்களின் இருப்பின் தொடர்ச்சியே...பெண் இனத்தில் தான் தங்கியுள்ளது!

ஆண் இனத்தை நம்பி...இயற்கை இல்லை! இயற்கை அதற்கும் மாற்று வைத்திருக்கின்றது!

'அவக்காடோ' போன்ற தாவரங்களின் பூக்கள் பகலில் ஆண் பூக்களாகவும்...இரவில் பெண் பூக்களாகவும் மாறும் இயல்புடையவை!

'ஹயினா' போன்ற சில விலங்கினங்கள்...தேவைகேற்ப ஆணாகவோ...அல்லது பெண்ணாகவோ மாறும் குணமுடையவை!

ஒரு பெண் நினைத்தால்...ஒரு தெய்வமாகவோ...அல்லது ஒரு பேயாகவோ கூட ஆகக் கூடிய வலிமை அவளிடம் உள்ளது!

அதனால் தான்...மதங்களும்...கலாச்சாரங்களும்...அவள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன!

ஒரு பெண்...விலைமாதாக மாறுவதோ...ஒரு நல்ல மனைவியாக அமைவதோ..அல்லது ஒரு காதலியாக அமைவதோ...அவள் வாழும் சூழலில் தான் தங்கியுள்ளது!

சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவள் மாறித் தான் ஆக வேண்டும்!

அது தான் இயற்கை!

எனவே....ஆண் சிங்கங்களே...உங்கள்ஈகோக்களைப் பத்திரமாக உங்களுடனேயே வைத்திருங்கள்!

நீங்கள் இல்லாமல் பெண் சிங்கங்கள் வாழ முடியும்! எனினும் பெண் சிங்கங்கள் வேட்டையாடாமல் விட்டால்.....நீங்கள் அன்றைய நாள் பட்டினி!

ஏனெனில் உங்களுக்கு வேட்டையாடத் தெரியாது!

முகநூலில் இருப்பதுபோல் ஸ்டிக்கர் வேணும் உங்களுக்குப் போட.

On 1/19/2018 at 11:21 PM, சண்டமாருதன் said:

உண்மைதான்..

கணவன் மனைவி , காதலன் காதலி உறவில் கணவன் மனைவியை புரிந்துகொள்வது என்பதும் முழுமையற்ற ஒன்றாகவே அவர்கள் வாழ்வு முடிந்துபோகின்றது. புரிந்த அளவை வைத்து ஒற்றுமையாய் வாழ்ந்த தம்பதிகள் என்று சொல்வார்கள். அதே போல் தாய்க்கும் மகனுக்குமான உறவுகூட முழுமையான புரிதலுக்கு உட்பட்டதில்லை. இவ்வுலகில் வாழ்வதற்கு தாயால் வழங்கப்படும் பாதுகாப்பு என்னும் ஒன்றைச் சுற்றியே பாசம் தாய்மை என்ற உணர்வுகள் கட்டமைக்கப்படுகின்றது. தாய்நிலம் என்பார்கள் அதேபோல் கடலம்மா என்பார்கள் தகப்பன் நிலம் கடலப்பா என்று இயல்பாகவே வராது. பூமி பெண்ணாகவே உணரப்படுகின்றது. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள். மகன் கணவன் காதலன் கள்ளக் காதலன் என எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஆண் கற்றது கட்டையில் போறவரை கையளவுதான்.  பிரபஞ்சத்தின் உணர்வு மனிதன் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை பிரபஞ்சத்தின் உணர்வு பெண்ணே, பெண் ஊடாகவே ஆணும் பிரபஞ்சத்தின் உணர்வாகின்றான் தவிர நேரடியாக இல்லை. இயற்கையில் ஆணும் பெண்ணும் சமமானவார்கள் இல்லை. ஆண் கீழனவனே. அதனால் தான் அவன் தானே மேலானவன் என்கின்றான். அதற்கக ஏராளமான வித்தை காட்டுகின்றான். (இது ஒரு உணர்வு, ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்)

நிறைய கேள்விகள் சண்டமாருதன். ஏனெனில் உங்கள் பதில் அபத்தங்களின் உச்சம் என நினைக்கின்றேன்.

1. ஏன் ஆண் பிரபஞ்சத்தை உணர வேண்டும்? பக்கத்திலே நடக்கும் அத்தனை அநியாயங்களையும் உணர்ந்தால் காணாதா?

2. தாய் மகனுக்கு இடையில் எப்படிப்பட்ட புரிதல் தேவை / அந்த தேவை எப்ப பூர்த்தியாகும் எனும் அளவு கோல்கள் உங்களிடம் உள்ளதா

3. ஒரு மனுசனால் தன்னையே முழுதுமாக புரிய முடிகின்றதா? அப்படி இல்லையென்றால் ஏன் சக மனிதர்களும் உறவுகளும் 100 வீதம் புரிந்து உறவு வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்

4. ஆன்மீகம் எனும் மக்களை தம் வாழ்வாதார பிரச்சனைகளில் இருந்து மூழ்கடித்து "எது வாழ்வு" எனும் பயனற்ற தேடல்களை செய்யும் ஒரு 'இசத்தில்' நீங்கள் மூழ்கி விட்டதாக நினைக்கின்றேன்

------------------

இந்த இடத்தில் இன்னுமொருவனை தேடுகின்றேன்

57 minutes ago, நிழலி said:

முதலில் விவாதக் கருத்தாக நான் இதை எழுதவில்லை, இது ஒரு உணர்வு, இவ்வுணர்வு ஓவ்வொருவருக்கும் மாறுபடும் என்று குறிப்பிட்டுள்ளேன்.அதனால் கீழ்வரும் எனது பதிலை ஒருவனின் தனிப்பட்ட உணர்வாகவே அணுகவும்.

1. மனிதன் பிரபஞ்சத்தை உணர்வது என்றில்லை.. இந்த பிரபஞ்சத்தில் பூமி அதில் உயிரினங்கள் மேலும் மனிதன் ஒரு அற்புதம் என்று உணர்வதுண்டு. அதனால் பிரபஞ்சத்தின் உணர்வு மனிதன் என்று ஒரு எண்ணம் ஏனெனில் மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு கூறு பிரபஞ்சப் படைப்பில் திரும்ப பிரபஞ்சத்தை உணரக் கூடியது மனிதனே. இதில் ஆணிடம் இருந்து ஒரு உயிரணுவை பெண் பெற்றாலும் ஒரு பெண்ணாலே ஆண் உருவாக்கப்படுகின்றான். பெண் ஊடகவே இவ் உலகை அல்லது பிரபஞ்த்தை காண்கின்றேன் மேலும் என்னை உருவாக்கிய ஒரு சக்தியை விட ஆணாகியதால் நான் மேலே என்பது எனது உணர்வால் சாத்தியமில்லை. 

2 தாயக்கும் மகனுக்கும் இடையே உள்ள புரிதல் எப்போதும் முழுமை பெறுவதில்லை. முழுமை பெறவும் முடியாது. அது ஒரு தொடர்ச்சி.. 

3 அப்படி எதிர்பார்ப்பில்லை. புரிந்துகொள்வது சாத்தியம் இல்லை என்பதையே நானும் சொல்லியுள்ளேன். 

4 "கடவுளின் மகத்தான சிருஷ்டி மனிதன் மனிதனின் மகத்தான சிருஷ்டி கடவுள்" என்று முன்பு படித்ததில் பதிந்துபோன வசனம். ஆன்மீகம் மதம் வியாபாரம் அரசியல்- இவைகள் என்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. போரும் சமாதானமும் தேசீயமும் மனிதபிமானமும் கூட இந்த இணைப்புக்குள்ளகவே தீர்மானிக்கப்படுகின்றது. எது வாழ்வு என்று தேடினாலும் இந்த இணைப்புக்குள்ளகவே தேட முடியும்.
 
'

  • கருத்துக்கள உறவுகள்
On 20/01/2018 at 12:04 PM, ஈழப்பிரியன் said:

புங்கை அவுசில் திருமணத்திற்கு முன்னர் இருபாலரும் டாக்ரரிடம் போய் இரத்த சோதனைகள் செய்து இருவரும் ஆளையாள் வருத்தம்(பாலியல்)எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்களாமே?

இந்த செய்தி உண்மையா?அங்கேயுள்ளவர்கள் தான் அறியத்தர வேண்டும்.

எங்கன்ட ஆட்களோ மற்றவையளோ.....நான் அறிய எங்கன்ட ஆட்கள் அப்படி நடந்த மாதிரி தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் என்பது ஆண் பெண்ணை விடக் கீழானாவனாக இருப்பதால் வரும் தாழ்வுச் சிக்கலால் உருவானதா?

இப்போது பிரித்தானியாவை உலுக்கும் செய்தி ஆண்கள் மட்டுமே அழைக்கப்பட்ட விருந்து ஒன்றில் பெண்கள் குறுகிய ஆடைகளோடு ஆண்களுக்கு பணிவிடை செய்த நிகழ்வு வெளியே கசிந்ததுதான்.

பணம் எவ்வளவுதான் இருந்தாலும் ஆண்கள் பெண்களை அதிகாரம் செய்வதனால் கிடைக்கும் சந்தோஷத்தைத்தான் முக்கியமாகக் கருதுகின்றார்கள்.

48895F9F00000578-5304655-image-a-20_1516

14 hours ago, சண்டமாருதன் said:

முதலில் விவாதக் கருத்தாக நான் இதை எழுதவில்லை, இது ஒரு உணர்வு, இவ்வுணர்வு ஓவ்வொருவருக்கும் மாறுபடும் என்று குறிப்பிட்டுள்ளேன்.அதனால் கீழ்வரும் எனது பதிலை ஒருவனின் தனிப்பட்ட உணர்வாகவே அணுகவும்.

1. மனிதன் பிரபஞ்சத்தை உணர்வது என்றில்லை.. இந்த பிரபஞ்சத்தில் பூமி அதில் உயிரினங்கள் மேலும் மனிதன் ஒரு அற்புதம் என்று உணர்வதுண்டு. அதனால் பிரபஞ்சத்தின் உணர்வு மனிதன் என்று ஒரு எண்ணம் ஏனெனில் மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு கூறு பிரபஞ்சப் படைப்பில் திரும்ப பிரபஞ்சத்தை உணரக் கூடியது மனிதனே. இதில் ஆணிடம் இருந்து ஒரு உயிரணுவை பெண் பெற்றாலும் ஒரு பெண்ணாலே ஆண் உருவாக்கப்படுகின்றான். பெண் ஊடகவே இவ் உலகை அல்லது பிரபஞ்த்தை காண்கின்றேன் மேலும் என்னை உருவாக்கிய ஒரு சக்தியை விட ஆணாகியதால் நான் மேலே என்பது எனது உணர்வால் சாத்தியமில்லை. 

2 தாயக்கும் மகனுக்கும் இடையே உள்ள புரிதல் எப்போதும் முழுமை பெறுவதில்லை. முழுமை பெறவும் முடியாது. அது ஒரு தொடர்ச்சி.. 

3 அப்படி எதிர்பார்ப்பில்லை. புரிந்துகொள்வது சாத்தியம் இல்லை என்பதையே நானும் சொல்லியுள்ளேன். 

4 "கடவுளின் மகத்தான சிருஷ்டி மனிதன் மனிதனின் மகத்தான சிருஷ்டி கடவுள்" என்று முன்பு படித்ததில் பதிந்துபோன வசனம். ஆன்மீகம் மதம் வியாபாரம் அரசியல்- இவைகள் என்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. போரும் சமாதானமும் தேசீயமும் மனிதபிமானமும் கூட இந்த இணைப்புக்குள்ளகவே தீர்மானிக்கப்படுகின்றது. எது வாழ்வு என்று தேடினாலும் இந்த இணைப்புக்குள்ளகவே தேட முடியும்.

இது விவாதத்துக்கு உரிய ஒன்றில்லை; உணர்வு சார்ந்த கருத்து என நீங்கள் குறிப்பிட்டு உள்ளதால் இது தொடர்பாக மேலும் எழுத விரும்பவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆணாதிக்கம் என்பது ஆண் பெண்ணை விடக் கீழானாவனாக இருப்பதால் வரும் தாழ்வுச் சிக்கலால் உருவானதா?

இப்போது பிரித்தானியாவை உலுக்கும் செய்தி ஆண்கள் மட்டுமே அழைக்கப்பட்ட விருந்து ஒன்றில் பெண்கள் குறுகிய ஆடைகளோடு ஆண்களுக்கு பணிவிடை செய்த நிகழ்வு வெளியே கசிந்ததுதான்.

பணம் எவ்வளவுதான் இருந்தாலும் ஆண்கள் பெண்களை அதிகாரம் செய்வதனால் கிடைக்கும் சந்தோஷத்தைத்தான் முக்கியமாகக் கருதுகின்றார்கள்.

48895F9F00000578-5304655-image-a-20_1516

பூமியைப் படைத்தான், இறைவன்...!

பொங்கி வழிந்தது அழகு..!

ஆணைப் படைத்தான் இறைவன்..!

அழியத் தோடங்கியது, அழகு!

குழம்பிப் போனான்...கடவுள்!

கொஞ்சம் யோசித்தான்.!

ஆ.....?

பெண்ணைப் படைத்தான், இறைவன்..!

மீண்டும் கொழித்தது...அழகு!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

பூமியைப் படைத்தான், இறைவன்...!

பொங்கி வழிந்தது அழகு..!

ஆணைப் படைத்தான் இறைவன்..!

அழியத் தோடங்கியது, அழகு!

குழம்பிப் போனான்...கடவுள்!

கொஞ்சம் யோசித்தான்.!

ஆ.....?

பெண்ணைப் படைத்தான், இறைவன்..!

மீண்டும் கொழித்தது...அழகு!

செவ்வாய் பார்வையில் எழுதிய கவிதை போலக் கிடக்கு....உங்களுக்கே ஓவராய் தெரியேல்ல....!  tw_blush:

Image associée

  • தொடங்கியவர்

#HerChoice தொடர் குறித்து பிபிசி தமிழின் ஐஸ்வர்யா மற்றும் கிருத்திகா இடையயேயான கலந்துரையாடல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.