Jump to content

பிச்சைக்காறனின் வெட்கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை)

ஒரு நாள் மனைவியுடன்  புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன்

கைத்தொலைபேசியில்  முகநூலில் ஒன்றிப்போயிருந்த  என்னை

 ஒரு  தரிப்பிடத்தில்  ஏறி 

பிச்சை  கேட்கத்தொடங்கிய ஒருவரின்  குரல் இடை மறித்தது

அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால்

வாகனத்தில்  என்றால் ஐன்னல்களை  மூடிவிடுவேன்

புகையிரதத்தில்   என்றால்  தோழிலிருக்கும் துண்டால் 

மூக்கை மூடிக்கொள்வது தான்  எனது  வழமை

புகையிரதத்தில்  ஏறி  பிச்சை  கேட்பவர்கள்

ஏதாவது ஒரு கதை  சொல்வார்கள்

இது  வழமையானது தான்

ஆனால் இவர்  தனது வாழ்வு  பற்றி  சொல்லத்தொடங்கியது

வித்தியாசமாக  இருந்தது

அவர்  ஒவ்வொரு வார்த்தையையும்  சொல்லும்போதும்

அதன் வலியை  உணர்ந்தது

அதை  சொல்ல  மிகவும் சிரமப்பட்டது

ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி  வெட்கப்பட்டது

அவர் இதை  விரும்பவில்லை

ஆனால்  வேறு வழி இன்று  தெரியவில்லை என்ற  போது  உடல் முழுவதும் கூசியது

அந்த  வலியை  நானும்   உணர்ந்தேன்

இந்த  நிலை  எவருக்கும்  வரக்கூடாது என்பதை  

வாழ்வில் முதன்முதலாக  உணர்ந்தேன்

பொக்கற்றுக்குள் கை  வைத்த  என்னை

மனைவி  கேட்டார்

திடகாத்திரமான  எவருக்கும்  பிச்சை  போடமாட்டீர்களே

இன்று என்னாச்சு  என்று?

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எவருக்கும்   இந்த  நிலை  வரக்கூடாது என்று

காசு  போடும் போது தான் பார்த்தேன்

நான்  மட்டுமல்ல

பலரும்  கண்களில் ஒருவித கனிவுடன்  பணம் போட்டபடி  இருந்தனர்.

(இந்தக்கதையை எழுதத்தூண்டிய  தம்பி  நிழலிக்கு  நன்றிகள்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

 ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை)

என்ன எல்லோரும் தொடங்கும் போதே சிறுகதை என்ற எச்சரிக்கையுடன் !

எனக்கும் யாருக்கும் பிச்சை போட மனம் வருவதில்லை.

ஆனாலும் சில பேர் நடித்து காட்டி கதைகள் சொல்லி பாத்திரம் ஏந்தும் போது ஏதோ ஒரு வித கவர்ச்சியில் கொடுத்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிச்சைபோட மறுப்பவர்கள் மனதில்கூட ஒரு இரக்க சுபாவத்தை உண்டுபண்ணி, அவர்களை பிச்சைபோட வைப்பதுகூட ஒருவித தொழில் யுக்திதான்!

திடகாத்திரமான உடம்பு இருக்கும்போதும் பிச்சை தொழிலில் இறங்குவது உலகம் முழுவதுமே ஏற்கமுடியாத ஒன்று,

அதுவும் ஐரோப்பா, அமெரிக்காவில் என்றால் மன்னிக்கவே முடியாத குற்றம், நேற்றுவந்தவர்களே ஆஹா .,ஓஹோனு என்று சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள்.

இந்த கதையை படிக்கும்போது, ஊரில்

’ இந்த காதல் அது இது என்னும் விஷயத்தில் என்னை விழுத்தவே முடியாது’என்று..

வீராப்பாக திரிபவர்களை, பந்தயம் பண்ணி சிலர் தமது வலையில் விழுத்தி காட்டுவார்களே அந்த ஞாபகம் வந்திச்சு, ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணாவிற்கும் பிச்சைபோட்ட ஏனைய பிரெஞ்சுக்காரர்களுக்கும் <_< 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, valavan said:

அது  ஒரு புது  அனுபவம் ராசா

அந்தக்கண்களின் வலி

இத்தனை  வருடங்களாகியும்

இன்றும் என்னை  கண்  கலங்க  வைக்கிறது  என்றால்...??

சிலவற்றை  தான் நாம் நடிக்கமுடியும்

ஆனால்  உணர வைப்பது என்பது

நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

அது  ஒரு புது  அனுபவம் ராசா

அந்தக்கண்களின் வலி

இத்தனை  வருடங்களாகியும்

இன்றும் என்னை  கண்  கலங்க  வைக்கிறது  என்றால்...??

சிலவற்றை  தான் நாம் நடிக்கமுடியும்

ஆனால்  உணர வைப்பது என்பது

நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும் 

உங்கள் உணர்வை குறைகூற என்று சொல்லபட்டதல்ல அந்த கருத்து, ஒரு புலம்பெயர் தேசத்திற்கு வந்து சுய முயற்சியில் எழுந்து நிற்கும் உங்களை போன்றவர்கள், எப்படி இந்த சுயமுயற்சியற்ற தொழிலினை, ஏதோ ஒரு இடத்தில் நம்பிவிடுகிறீர்கள் என்ற அர்த்ததில் மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பொதுவாகவே இரப்பவர்களுக்கு பணமாக கொடுக்க விரும்புவதில்லை.

இலண்டனிலும் முன்னர் ரோமா ஜிப்ஸிகள் இரந்துகேட்டு தொந்தரவு செய்தார்கள். இப்போது பிச்சையெடுப்பதை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

விசுகு ஐயா ஏமாந்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. எதுவும் கொடுக்காமல் இருப்பதைவிட ஏமாறுவது பரவாயில்லை. ஆனால் பணமாக கொடுக்காமல் விடுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா?  பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர்
விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

Posted

பிரான்சில் இதுவரை பிச்சை கேட்பவர்களுக்கு ஓரிரு தடவைகள் தவிர்ந்து ஒருபோதும் பிச்சை போட்டதில்லை. ஏனென்றால் பசி ஏழ்மை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் பசியால் யாராவது இறந்தார்கள் என்று கேள்விப் படுவது அபூர்வம். பல்லாயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச கட்டுமானங்களும் ஏழ்மையில் இருப்போருக்கு உதவ இங்கு உள்ளன.

நான் பிரான்சில் உள்ள சில அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளேன். விசுகு அண்ணா இக் கதையினூடாகக் கூறிய கருத்து மனதை உறுத்தியது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று வசதியற்றவர்களுக்கு உணவு வழங்குவது. உணவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு நிலையில் ஏழ்மையாக உள்ளவர்கள் வருவார்கள். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் பாரிய செல்வந்தர்களாகவும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் ஆடம்பர வாழ்விலிருந்து எவ்வாறு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. சிலர் வர்த்தகத்தில் திடீரென நட்டமடைந்து ஏழயானவர்கள். சிலர் குடும்பத்தி ஏற்பட்ட பிழவினால் தெருவுக்கு வந்தவர்கள். சிலர் தாம் விட்ட தவறினால் எல்லாவற்றையும் தொலைத்து ஏழையானவர்கள்.

இவர்கள் நாம் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் வெட்கத்தையும் தயக்கத்தையும் காணும்போது நாம் ஒருபோது இந்த நிலமைக்கு வரக் கூடாது என்றே தோன்றும்.

Posted
10 hours ago, விசுகு said:

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எல்லோரையும் நாம் நம்புவதில்லை. சிலரை நம்புகின்றோம். ஒரு சில சந்தர்ப்ங்களில் சிலரை நம்பும் போது நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை அதை ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவை எடுத்து நம்ப வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அதே போல் இந்தக் கதையில் எல்லாவற்றையும் கடந்து மனதை உறுத்தும் போது பிச்சைபோட்டது உங்களுக்கு ஆரோக்கியமே. சில நேரம் கடும் குளிரில் சிலர் நடுரோட்டில் மட்டை பித்துக்கொண்டு காசை எதிர்பார்த்து நிற்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் சாராயத்துக்கோ அல்லது கஞ்சா பவுடருக்கோ தான் பிச்சை எடுக்கின்றர்கள் என்று தெரிந்தாலும் நான் காசு போடுவதுண்டு.. அவர்களை சந்தோசப்படுத்தவா இல்லை என்னைத் திருப்பதிப்படுத்தவா என்ற கேள்விக்கெல்லாம் போவதில்லை.. 

பகிர்வுக்கு நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன எல்லோரும் தொடங்கும் போதே சிறுகதை என்ற எச்சரிக்கையுடன் !

எனக்கும் யாருக்கும் பிச்சை போட மனம் வருவதில்லை.

ஆனாலும் சில பேர் நடித்து காட்டி கதைகள் சொல்லி பாத்திரம் ஏந்தும் போது ஏதோ ஒரு வித கவர்ச்சியில் கொடுத்துவிடுவோம்.

எனது மனைவி  கேட்ட  கேள்வியையும்  

பதிந்ததற்கு காரணம்

நானும்  கொடுப்பதில்லை  அண்ணா

ஆனால்  அவன்  எனக்கொரு வேறு  பக்கத்தை ஞாபகப்படுத்தினான்

அதை  கீழே இணையவன்  எழுதியிருக்கிறார்

நன்றியண்ணா  கருத்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருமாளே பிச்சை எடுக்கும் போது மனுசன் பிச்சை எடுப்பதில் எங்கிருக்கிறது. வெட்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, valavan said:

உங்கள் உணர்வை குறைகூற என்று சொல்லபட்டதல்ல அந்த கருத்து, ஒரு புலம்பெயர் தேசத்திற்கு வந்து சுய முயற்சியில் எழுந்து நிற்கும் உங்களை போன்றவர்கள், எப்படி இந்த சுயமுயற்சியற்ற தொழிலினை, ஏதோ ஒரு இடத்தில் நம்பிவிடுகிறீர்கள் என்ற அர்த்ததில் மட்டுமே!

உண்மைதான்

புலத்தில்  மட்டுமல்ல

தாயகத்திலும்  நம்பி  கெட்டு  மிகவும் பலவீனமாக  இருந்த  என்னையே

மீண்டும் தர்மம் செய் என அவன் என்னுள் விதத்ததை  உணர்ந்தேன் ராசா

அது தான் எழுதினேன்

இன்று நினைத்தாலும்  அந்தக்கண்களை

என் கண்கள்  கலங்குகின்றன  ...

எவருக்கும் இந்தநிலை  வரலாம்

ஆனால் பகைவனுக்குக்கூட  இது வரக்கூடாது என்பார்களே

அது  தான் இது.

நன்றி  தம்பி  கருத்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, கிருபன் said:

நான் பொதுவாகவே இரப்பவர்களுக்கு பணமாக கொடுக்க விரும்புவதில்லை.

இலண்டனிலும் முன்னர் ரோமா ஜிப்ஸிகள் இரந்துகேட்டு தொந்தரவு செய்தார்கள். இப்போது பிச்சையெடுப்பதை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

விசுகு ஐயா ஏமாந்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. எதுவும் கொடுக்காமல் இருப்பதைவிட ஏமாறுவது பரவாயில்லை. ஆனால் பணமாக கொடுக்காமல் விடுவது நல்லது.

இந்த  எண்ணத்துக்குள்  பல கருக்கள்   உள்ளன கிருபன்

நீங்கள் குறிப்பிடும்  காசு கொடுக்கலாமா?

இவரை  அதே   தொழிலை  செய்ய  நாமே தூண்டலாமா?

போன்ற  எண்ணங்கள்  என்னுள்ளும் வந்தே சென்றன

எனக்கு  முன்னாலிருந்த ஒரு இளம்  பெண் ஒரு தோடம்பழத்தை  கொடுத்தார்

என்னிடம் பணம் மட்டுமே இருந்தது

நன்றி  ராசா

நேரத்துக்கும் கருத்துக்கும்

Posted

ஒரு அவசரத்துக்கு கடனோ அல்லது உதவியோ இன்னொருவரிடம்  கேட்கும் நிலை எமக்கு வரும் போது மனசுக்குள் எவ்வளவு வெட்கப்படுகின்றோம், குறுகிக் கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது ஆட்களிடம் இரந்து பிச்சை கேட்கும் ஒரு நிலை ஒருவருக்கு வருகின்றதென்றால் அந்த நபர் எந்தளவுக்கு எதனாலோ பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கேட்பது போதை பொருளுக்காகவோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவோ, அல்லது எதுக்காகவோ என்றாலும், அந்த நிலைக்கு ஒரு மனிதன் / மனுசி வருவது என்பது எல்லாம் இழந்த ஒரு மனநிலையில் தான். அவர் விரும்பி வந்த நிலையாக இருக்காது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சோகம். என்னிடம் சில்லறை இருந்தால் கொடுப்பதுண்டு, இல்லாவிடின் கையாலேயே சைகை செய்து அடுத்த முறை தாறன் என்று சொல்வதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, புங்கையூரன் said:

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

அதே

உங்களை நினைக்க  பெருமையாக  இருக்கிறது

வாழ்த்துக்கள் அண்ணா

நன்றியண்ணா

நேரத்துக்கும் கருத்துக்கும்

18 hours ago, Kavallur Kanmani said:

தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா?  பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர்
விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

உண்மை  தானக்கா

ஐரோப்பிய நாடுகளில் சாப்பாட்டுக்கு  வழியற்றுஒரு போதும் வீதியில்  விடமாட்டார்கள்

அந்தவகையில் தான் நான்  எவருக்கும் பிச்சை  போடுவது  அரிது

ஆனால் இது அன்றொரு  நாள் மட்டும்  அவர்  இக்கட்டில் இருந்தது போலிருந்தது

நன்றியக்கா

நேரத்துக்கும்  கருத்துக்கும்  ஆலோசனைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிச்சை கேட்பவரின் உடல் நிலையை பார்த்து நான் வழங்குவேன் உடலில் சகல அங்கங்களும் இயங்குமாக இருந்தால் க்கொடுக்க மாட்டேன்  மாறாக  இருந்தால் என்னிடம் இருப்பதை கொடுப்பேன்   ஏனென்றால் இல்லாத நிலையை அறிந்தவன் நான்  அவன் என்னை ஏமாற்றினாலும் பராவியில்லை  கையில் இல்லாத நேரத்தில் நான் கூட உதவியென்று கையேந்தி இருக்கிறேன்  10 கதவு தட்டினால் ஒரு கதவு திறக்கிறது

கொழும்பில் பஸ்ஸில் ஒரு பாட்டு பாடினால் காசு கொடுக்க வேணும் பாட்டு பிச்சைக்காரர்கள் தற்போது ஓரளவு குறைவு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்குப் பிச்சை எடுத்து...  இரண்டு, மூண்டு..  கோடி ரூபாய் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை விட,
தெருவில் நின்று... பிச்சை   எடுப்பவன் திறமானவன்.    
(இது...  சம்பந்தன், சுமந்திரனை குறிப்பிட்டு... பதியப்  பட்ட கருத்து அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு முறை... நான்  வீட்டு வாசலில் உள்ள வீதியை....  கூட்டிக்  கொண்டு இருந்த போது, 
60,000 ஐரோ  பெறுமதியான காரில், வந்த ஒருவர்...
நான்... வேறு மாநிலத்தில் வசிப்பவன்,
எனது... அம்மா, இந்த ஊரில் தான்... வசிக்கின்றார். 

ஒரு,  பூங்  கொத்து வாங்க    20  ஐரோ  ....  தர முடியுமா?  
வரும் போது... தனது  பணத்தை எடுத்து வர மறந்து விட்டேன்.  உன்னால் முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அத்தாட்சியாக தனது, அடையாள அட்டையை... தந்து விட்டுப் போய்...
திரும்ப... அந்தப் பணத்தை தரும்,  போது ....  அடையாள அட்டையை   திரும்ப பெற்றுக்  கொள்கின்றேன் என்ற மனிதனின் சோகம் புதைந்த  முகம், இன்றும் கண் முன் நிற்கின்றது.

Posted

தெருவில் ஆங்காங்கே சந்திகளில், கடுகதிபாதை முடிவடையும் இடங்களில் உதவுமாறு கேட்டு எழுதப்பட்ட மட்டைகளை பிடித்துக்கொண்டு ஆட்கள் நிற்பார்கள். நான் சில்லறை காசு இருந்தால் ஒரு டொலரோ இரண்டு டொலரோ எனக்கு விருப்பம் என்றால் கொடுப்பேன்.

நான் ஒருமுறை அமெரிக்காவில் நின்றபோது மிகப்பெரியதொரு பாதையில் ஓர் பெண் சுமார் முப்பது வயது இருக்கும் அழுக்கடைந்த உடை, மிகவும் வெட்கத்துடன் வாகனத்தில் வருபவர்களை பார்த்துகொண்டு இருந்தார் ஏதும் தருவார்களா என்று. எனது வாகனம் 75 நீளமான பாரவூர்தி. என்னை கிட்ட அணுகவும் இயலாது. ஆனால், எனக்கென்னவோ அந்தப்பெண்ணை தூரத்தில் கண்டதும் எனது உள்ளுணர்வு கூறியது அவளுக்கு சிறுதொகை கொடுக்கவேண்டும் என்று. நான் கோனை அடித்து சைகைகாட்டி கூப்பிட்டேன். சிரமப்பட்டு எனக்கு கிட்டவாக வந்தாள் பாதைகள கடந்து; நான் பத்து அமெரிக்க டொலர்களை கொடுத்தேன். அவள் விறுக்கென்று வாங்கிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தாள். கண்களில் பிரகாசம், ஒரு ஒளி; இருவருக்குமிடையிலான கண்தொடர்பு அந்த உரையாடல் ஒரு செக்கனே, நான் எனது மார்க்கத்தில் பயணிக்க அவள் தன்வழியில் சென்றாள். அது ஆத்மார்த்தமான ஒரு வினாடி.

நான் ஆட்கள் தெருவில் உதவி கேட்டு நிற்கும்போது அவர்களை மதிப்பீடு Judge பண்ணுவது இல்லை. நான் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கொடுக்கப்போவது இல்லை, உதவி கொடுப்பதும் எப்போதாவது. ஒரு நாளைக்கு எத்தனைவிதமாக எல்லாம் நான் காசை செலவளிக்கின்றேன். என்னைப்போன்ற ஒரு ஜீவன் தெருவில் வந்து வெட்கத்தைவிட்டு உதவி கேட்கின்றது. அதற்கு ஒரு டொலரோ இரண்டு டொலரோ கொடுத்தால் எனது குடிமூழ்கிவிடாது. அதேசமயம் எம்மிடம் எத்தனை கோடீஸ்வரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பகல்கொள்ளை அடிக்கின்றார்கள். அவர்களை எண்ணி பார்க்கையில் ஒருவனுக்கு சில ரூபாய்களை கொடுப்பது ஒன்றும் பெரிய பாரதூரமான விடயம் இல்லை. 

உங்கள் காசு, உங்கள் உழைப்பு, கொடுப்பது கொடுக்காதது உங்கள் விருப்பம். ஆனால், நான் உங்களுக்கு கூறக்கூடிய ஒருவிடயம் அடுத்ததடவை யாருக்காவது உதவி செய்யும்போது அவர்களின் கண்களை பாருங்கள். கண்களினூடு அந்த ஆத்மனுடன் உறவாடுங்கள். Eyes are the windows to the soul. இந்த வாழ்க்கை குறுகியது. நான் சாகும்போது ஒன்றையும் கொண்டுபோகப்போவது இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/02/2018 at 12:36 AM, இணையவன் said:

பிரான்சில் இதுவரை பிச்சை கேட்பவர்களுக்கு ஓரிரு தடவைகள் தவிர்ந்து ஒருபோதும் பிச்சை போட்டதில்லை. ஏனென்றால் பசி ஏழ்மை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் பசியால் யாராவது இறந்தார்கள் என்று கேள்விப் படுவது அபூர்வம். பல்லாயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச கட்டுமானங்களும் ஏழ்மையில் இருப்போருக்கு உதவ இங்கு உள்ளன.

நான் பிரான்சில் உள்ள சில அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளேன். விசுகு அண்ணா இக் கதையினூடாகக் கூறிய கருத்து மனதை உறுத்தியது. இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று வசதியற்றவர்களுக்கு உணவு வழங்குவது. உணவைப் பெற்றுக் கொள்ள பல்வேறு நிலையில் ஏழ்மையாக உள்ளவர்கள் வருவார்கள். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் பாரிய செல்வந்தர்களாகவும் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் ஆடம்பர வாழ்விலிருந்து எவ்வாறு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. சிலர் வர்த்தகத்தில் திடீரென நட்டமடைந்து ஏழயானவர்கள். சிலர் குடும்பத்தி ஏற்பட்ட பிழவினால் தெருவுக்கு வந்தவர்கள். சிலர் தாம் விட்ட தவறினால் எல்லாவற்றையும் தொலைத்து ஏழையானவர்கள்.

இவர்கள் நாம் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் வெட்கத்தையும் தயக்கத்தையும் காணும்போது நாம் ஒருபோது இந்த நிலமைக்கு வரக் கூடாது என்றே தோன்றும்.

அந்த  நிமிடத்தில்  என்  மனதில் தோன்றிய

பயமுறுத்திய விடயங்கள் இவை

நம்மில் பலரும்  நினைக்கின்றோம்

எல்லாவற்றையும் நாமே தீர்மானிக்கின்றோம்

எமது எதிர்காலம் நாம் நினைத்தபடி தான் இருக்கப்போகின்றது என்று

இல்லை

நீங்கள்  மேலே  எழுதியது போல  பலரை

மலையிலிருந்து  ஒரு சில நாட்களுக்குள்

குழிக்குள்  வந்தவர்களை  நான்  சந்தித்திருக்கின்றேன்

நன்றி  தம்பி  இணையவன்

நேரத்துக்கும் கருத்துக்கும் அனுபவங்களை பகிர்ந்ததற்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/02/2018 at 5:21 AM, சண்டமாருதன் said:

எல்லோரையும் நாம் நம்புவதில்லை. சிலரை நம்புகின்றோம். ஒரு சில சந்தர்ப்ங்களில் சிலரை நம்பும் போது நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் பரவாயில்லை அதை ஏற்றுக்கொள்வோம் என்ற முடிவை எடுத்து நம்ப வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அதே போல் இந்தக் கதையில் எல்லாவற்றையும் கடந்து மனதை உறுத்தும் போது பிச்சைபோட்டது உங்களுக்கு ஆரோக்கியமே. சில நேரம் கடும் குளிரில் சிலர் நடுரோட்டில் மட்டை பித்துக்கொண்டு காசை எதிர்பார்த்து நிற்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் சாராயத்துக்கோ அல்லது கஞ்சா பவுடருக்கோ தான் பிச்சை எடுக்கின்றர்கள் என்று தெரிந்தாலும் நான் காசு போடுவதுண்டு.. அவர்களை சந்தோசப்படுத்தவா இல்லை என்னைத் திருப்பதிப்படுத்தவா என்ற கேள்விக்கெல்லாம் போவதில்லை.. 

பகிர்வுக்கு நன்றிகள்...

உண்மைதான்

சிலரை  நம்புகின்றோம்

நடிக்கிறார்களா?

ஏமாற்றுகிறார்களா?  என்பதையும் கடந்து

பொக்கற்றுக்குள் கை போகிறது..

இன்னொரு பக்கத்தால் பார்த்தால்

அன்று கொடுக்காமல் வந்திருந்தால்.....???

நன்றி சகோதரா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

23 hours ago, Kavi arunasalam said:

பெருமாளே பிச்சை எடுக்கும் போது மனுசன் பிச்சை எடுப்பதில் எங்கிருக்கிறது. வெட்கம்?

பெருமாளை  கல் என்பேன்  நான்

அப்படியானால் பிச்சை  எடுப்பது மனுசனுக்கு  தானே  கடினம்??

அதை  பார்த்த  எனக்கே  கடினமென்றால்??

ஒவ்வொருவருக்கும்  அந்த நிலை வரவேண்டுமென்பதில்லை  அனுபவங்களைப்பெற  ராசா...

நன்றி சகோதரா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் யார் கேட்டாலும் என்னால் முடிந்தால் உடனேயே கொடுத்து விடுவேன். தர்மம் தலைகாக்கும் என்பது எனது நம்பிக்கை. அதேபோல் நான் செய்த பல தர்மங்கள் கஷ்டமான பல நேரத்தில் எனக்கு உதவியிருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, நிழலி said:

ஒரு அவசரத்துக்கு கடனோ அல்லது உதவியோ இன்னொருவரிடம்  கேட்கும் நிலை எமக்கு வரும் போது மனசுக்குள் எவ்வளவு வெட்கப்படுகின்றோம், குறுகிக் கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது ஆட்களிடம் இரந்து பிச்சை கேட்கும் ஒரு நிலை ஒருவருக்கு வருகின்றதென்றால் அந்த நபர் எந்தளவுக்கு எதனாலோ பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கேட்பது போதை பொருளுக்காகவோ அல்லது ஒரு வேளை உணவுக்காகவோ, அல்லது எதுக்காகவோ என்றாலும், அந்த நிலைக்கு ஒரு மனிதன் / மனுசி வருவது என்பது எல்லாம் இழந்த ஒரு மனநிலையில் தான். அவர் விரும்பி வந்த நிலையாக இருக்காது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சோகம். என்னிடம் சில்லறை இருந்தால் கொடுப்பதுண்டு, இல்லாவிடின் கையாலேயே சைகை செய்து அடுத்த முறை தாறன் என்று சொல்வதுண்டு.

அதே

இந்தக்கரு  ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து போயிருக்கிறது  என்பதை  உங்கள்  பதிவுகள்  சொல்கின்றன

இதை எழுதத்தூண்டியவரே  நீங்க  தானே ராசா

நன்றி நிழலி

நேரத்துக்கும் கருத்துக்கும் 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிச்சை கேட்பவரின் உடல் நிலையை பார்த்து நான் வழங்குவேன் உடலில் சகல அங்கங்களும் இயங்குமாக இருந்தால் க்கொடுக்க மாட்டேன்  மாறாக  இருந்தால் என்னிடம் இருப்பதை கொடுப்பேன்   ஏனென்றால் இல்லாத நிலையை அறிந்தவன் நான்  அவன் என்னை ஏமாற்றினாலும் பராவியில்லை  கையில் இல்லாத நேரத்தில் நான் கூட உதவியென்று கையேந்தி இருக்கிறேன்  10 கதவு தட்டினால் ஒரு கதவு திறக்கிறது

கொழும்பில் பஸ்ஸில் ஒரு பாட்டு பாடினால் காசு கொடுக்க வேணும் பாட்டு பிச்சைக்காரர்கள் தற்போது ஓரளவு குறைவு 

அதே

கொழும்பில் கொடுக்காதுவிட்டு

அடி  வாங்கிய  தமிழருண்டு...tw_angry:

நன்றி ராசா

நேரத்துக்கும் கருத்துக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது தர்மம்
தர்மம் தலைகாக்கும்
ஆனாலும் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முயற்சி இல்லாதவர்கள் அல்லது சோம்பேறிகள் என்பது எனது பொதுவான கருத்து.

இக்கதையின் கருவிற்கான  தீர்வு ஆராயப்படவேண்டியது 

On 15.2.2018 at 6:25 PM, விசுகு said:

அவன்  ரொம்ப  வெட்கப்பட்டு பிச்சை  கேட்கின்றான்

எவருக்கும்   இந்த  நிலை  வரக்கூடாது என்று

காசு  போடும் போது தான் பார்த்தேன்

நான்  மட்டுமல்ல

பலரும்  கண்களில் ஒருவித கனிவுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.