Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொல்ல  வார்த்தைகள்  வரவில்லை  அண்ணா

இன்று  தான்  கவனித்தேன்

இன்றே  அத்தனை சான்றிழையும் வாசித்து முடித்தேன்

தொடருங்கள்

உடல்  நலத்திலும்  அக்கறை  கொள்ளுங்கள்

 

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....! ( 18 ).

 அன்று மாலை நேரம்.வானொலியில் "சாகறயகி  ஆதரே" போய்க்கொண்டிருக்கு.எங்கும் அமைதி.முழுமையாய் பாட்டை ரசித்தபடி ஹேமா கல்லாவிலும், இராகவன் முன்னால் வாங்கிலும் இருக்கிறார்கள்.விமல் கடைக்கு வருகிறான். உள்ளே வந்த விமல் அவன் இருந்த அதே வாங்கில் அடுத்த ஓரத்தில் அமர்கின்றான்.அந்த மௌனமான அமைதியை ஹேமாதான் கலைக்கிறாள். என்ன விமல் தேநீர்  ஒன்று போடவா....!  ஓம் அக்கே ஒரு தேநீர் தாங்கோ என்று சொல்லிவிட்டு இராகவனைப் பார்க்கிறான்.அவன் பேசாமல் இருக்கிறான். மெதுவாக அவனருகே எழுந்து சென்று அவன் முதுகில் முகம் புதைத்து கட்டிப் பிடித்து என்னை மன்னித்து விடு இராகவ்.நான் தவறு செய்து விட்டேன். நான் எப்போதும் உன்கூடவே இருக்கிறேன்.ஏதாவது பேசு இராகவ் என்று அழுகிறான். இராகவனிடமும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை உடைந்துவிட திரும்பி விமலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்புகிறான்.அவள் இருப்பதையும் மறந்து முகம் முழுதும் எச்சில் படுத்திக் கொள்கிறார்கள்.பின் இருவரும் ஒருவாறு சமாதானமாகிறார்கள். நான் காலையில் உன்னிடம் சண்டை போட்டதை மனதில் வைத்திருக்காதை விமல். ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேன்.என்னையும் நீ மன்னித்து கொள் என்று சொல்ல, நான் அதைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை மச்சான். ஒரு ஆசையில் தடுமாறி விட்டேன்.

இல்லடா விமல் நீ சரியாகத்தான் போய் இருக்கிறாய்.உனக்கு பிடித்திருந்தால் நீ அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள். நான் ஒரு அண்ணன் போல இருந்து உனக்கு எல்லா உதவியும் செய்கிறன். ஏக்க அத்தத இராகவ். (நிஜமாவா) மம ம ஹெனம தறகா யன்னே நெகே.(என் மீது கோபம் இல்லையே). இராகவனும் அப்போது இருந்தது. ஆனால் இப்ப இல்லை. தாங்ஸ் டா..... அதை நீ அவளுக்கு சொல்லு.அவள்தான் உண்மையை புரிய வைத்தவள்.அவன் எழுந்து சென்று அவளின் கையைப் பிடித்து நன்றி சொல்கிறான்.பின் பிள்ளையை வாங்கி முத்தமிடுகிறான்.பெயர் என்ன என்று கேட்க ரகுவரன் என்கிறாள்.நம ஹொந்தாய்(நல்ல பெயர்). அவள் தந்த தேநீரை இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள்.பின் விமல் இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியே போய் பக்கத்து கடையில் இருந்து போனில் சினேகாவுக்கு தகவல் சொல்கிறான்.  

சோதனை தொடரும்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....! (19 ).

காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது.ரகுவரன் இருந்து, தவழ்ந்து, இப்போ தளிர்நடையில்....! பசித்தால் தாய் எங்கிருந்தாலும் ஓடிப்போய் இழுத்துப்பிடித்து மடியில் படுத்து பால் குடித்து விட்டுத்தான் வருவான்.ஹேமாவும் செல்லக் கோபத்துடன் அவனை திட்டிக் கொண்டே பால் தருவாள்.மற்றும்படி இராகவனை விட்டு அவன் விலகுவதே இல்லை.கட்டில் கயிற்றை இறுக்கிக் கட்ட  இராகவன் செல்ல, குழப்படி செய்து தாயிடம் அடி வாங்கி அழுது கொண்டு அப்பா என்று ஓடிவருகிறான் ரகுவரன். அவன் ஹேமாவை ஏசி விட்டு அவனை தூக்கிக் கொண்டு பின்னால் வந்து வாழையிலை சாப்பிடும் யானையை வேடிக்கை காட்டுகிறான்......!

அன்று பின்னேரம் வேலையாட்கள் வரவில்லை.அவனும் அவளும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.கன நாட்களுக்கு பின் அவன் மா குழைக்க  அவள் முன்பு அவன் தைத்து தந்த சுடிதாரை அணிந்து மாவின்மேல் நடந்து உழக்குகின்றாள்.இருவரும் கதைத்தபடியே வேலை செய்யும்போது பேச்சு விமலைப் பற்றி வருகின்றது.விமல் ஸ்னேகாவின் பதிவுத் திருமணத்துக்கு இவர்கள் இருவரும் கையொப்பம் இட்டதும், பின் அவர்களின் திருமணத்துக்கு இந்த "ஹேமமாலினி கபே"யில் எல்லோருக்கும் கலியாணச் சாப்பாடு போட்டதும், எல்லாம் கனவுபோல் இருக்கு. அந் நினைவுகள் அவனையே அதிகம் பாதிக்குது.கண்கள் கலங்குகின்றன.அதை அவள் கவனித்த போதும் அவனை சங்கடப்படுத்த விரும்பாமல் கவனிக்காததுபோல் இருக்கிறாள். வேலையை முடித்து விட்டு இருவரும் குளத்தில் குளித்து விட்டு வந்து இரவு உணவை முடிக்கிறார்கள்.ரகுவரனும் பால் குடித்தபடியே உறங்கி விட்டான். அவளும் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டு எழுந்தபோது அவன் தூங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.டிரான்சிஸ்டரில் "தேன்சிந்துதே" வானம்  சிந்திக் கொண்டிருக்கு. இங்கிருந்தே கேட்கிறாள் என்ன இராகவ் இன்னும் நீ தூங்க வில்லையா....,கோப்பி ஏதாவது போட்டுத் தரவா. இல்லை ஹேமா, என்னமோ மனசு சரியில்லை.அவன் மல்லாந்து படுத்து கால்களுக்கு நேரே வானத்தில் தெரியும் நிலவையும் நீந்தும் முகில்களையும் பார்க்கிறான்.

ஹேமா: ஏன் இராகவ் நீ ஒரு திருமணம் செய்யக்கூடாது.யாரையாவது நினைத்திருக்கிறாயா....!

இராகவ்: இல்லை ஹேமா, அவன் கூட இருந்திட்டன். அதெல்லாம் இனி சரிவரும் என்று தோனலை.....!

அவன் மாலையில் இருந்தே ஒரு மாதிரி இருக்கின்றான்.அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அவளுக்கு தோன்ற மெதுவாய் அவள் எழும்ப குழந்தை சிணுங்குகின்றது. தூக்கி தொட்டிலில் விட்டு ஆட்டிவிட அது கிர்ர்ரீச்....கிர்ர்ரீச் எனச் சத்தத்துடன் ஆடுகிறது. எட்டி குந்தில் இருந்த பவுடர் சிறிது எடுத்து முகத்தில் பூசிக்கொன்டு அவன் அருகில் சென்று பக்கத்தில் ஒருக்களித்து படுத்து கொள்கிறாள். அவளின் அருகாமையை உணர்ந்த இராகவன் சற்று திரும்பி, என்ன ஹேமா நான் உன்னை டிஸ்ட்டர்ப் பண்ணிட்டேனா...., ம்கூம் அப்படி ஒன்றும் இல்லை.கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்தால் நீ தூங்குவாய் என நினைத்தேன். உனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் போய் விடுகிறேன். அவன் என்ன சொல்வது என யோசிக்கும் பொழுது அவனது கையை எடுத்து தன் இடையை சுற்றிப் போட்டு பற்றிக் கொள்கிறாள்.

இராகவ்: ஹேமா நீ வசதியான இடத்தில் வாழ்ந்திருக்கிறாய் உன் கணவன் எல்லாம் படித்து பட்டங்கள் பெற்றவர்கள்.நீயும் அப்படியே. நான் சிறையிலேயே பெரும் பகுதியை கழித்தவன். எனக்காக நீ கவலைப் படுகிறாய் புரிகிறது.இதையெல்லாம் நீ யோசிக்க வேண்டும்.எனக்காக பரிதாபப் பட்டு வரவேண்டாம். என்னால் இனியும் ஒரு இழப்பை தாங்க முடியாது.

ஹேமா: நானும் நன்றாக யோசித்துதான் வந்திருக்கிறேன் இராகவ். நீ இவ்வளவு காலமும் என்னுடன் கண்ணியமாகத்தான் நடந்திருக்கிறாய்.ரகுவரனிடம் அளவிடமுடியாத அன்பும் எனக்கு பாதுகாப்புமாய் இருக்கிறாய். மேலும் சித்தார்த் படித்தவர், பட்டங்கள் பெற்றவர் ஆனால் அவரது அத்தனை கல்வி சாண்றிதழ்களிலும் ஒழுக்கம் திருப்தி இல்லை என்றுதான் பதிவாகி இருக்கு. அதைவிட உன்னிடம் ஒரேயொரு சான்றிதழ்தான் இருக்கு.அன்று அதையும் பார்த்தேன்.அதில் உன் நன்னடத்தை திருப்தி என்றும்,அதற்காக இரு வருடங்களுக்கு முன்பே உனக்கு விடுதலை தந்திருக்கிறார்கள். அதுவும் அரசாங்கமே தனது முத்திரையுடன்....இதைவிட வேறென்ன தகுதி வேண்டும்.

அவன் பேசவில்லை, கைகள் மட்டும் அங்கும் இங்குமா இடைமீது அலைந்து கொண்டிருக்கு.

ஹேமா: ஏன் இராகவ் உனக்கே உனக்கென்று ஒரு பிள்ளை உன் வாரிசாக வர வேண்டும் என்று நீ விரும்பவில்லையா.

இராகவ்: ஆசைதான் ஹேமா,அதுவும் அன்று நீ சொன்னதற்கப்புறம்தான்.

ஹேமா: ரகுவரன் போல் ஒரு ஆண்பிள்ளை நான் உனக்கு பெற்றுத் தருகிறேன்.

இராகவ்: பிள்ளை வேணும்தான்,ஆனால் முதலில் எனக்கு பெண்பிள்ளைதான் வேண்டும். பெயர்கூட தயார்....

ஹேமா: என்ன சொல்கிறாய்....இவ்வளவு நாளும் சொல்லவே இல்லை.

இராகவ்:உனக்கு தெரியும் ஹேமா, இந்தக் கடைதான் எனது சொத்து.அம்மாவுக்கு பின் என் வாழ்க்கையில் வந்த ஒரேயொரு பெண்ணென்றால் அது நீதான். அன்று அந்தத் தாத்தா கடைக்கு "ஹேமமாலினி"என்று பெயர் வைத்து விட்டார். இப்பொழுது ஹேமா என் கைகளுக்குள் இனியொரு மாலினி கிடைத்தால் போதும்.

ஹேமா: எப்போதும் உம் என்றிருக்கும் உன்னிடம் இவ்வளவு ஆசைகளா. ஐ லவ் யு இராகவ்.நீ ரொம்ப நல்லவன்.

இராகவ்: நாங்கள் திருமணம் செய்வோமா, முதலில் பதிவுத்திருமணம். ஓகேயா....!

ஹேமா: அவசியமில்லை இராகவ்.பதிவுத்திருமணம் பணக்காரனுக்கு பகடை ஆட்டம் போன்றது. வேண்டியபோது கலைத்து ஆடலாம்.  நீ விரும்பினால் நாங்கள் திருமணம் செய்யலாம்.எங்களுக்குள் அன்பும் நம்பிக்கையும் இருக்கும் காலம்வரை அதுவும் வாழட்டும். அந்த சிவன் கோயிலில். யானை மீது கூடை நிறைய பூக்கள் கொண்டுபோய் எல்லா தெய்வத்துக்கும் போட வேண்டும். பின் யானைமேல் இருவரும் பிள்ளையுடன் ஊர்வலமாய் வரவேண்டும்...... டிரான்சிஸ்டரில் "காதல் தேவன் கல்யாண வீட்டில்" t m s சும் p s சும் குழைந்து குழைந்து பாடுகிறார்கள்.

பேச்சுவாக்கில் அந்த கயிற்றுக்கட்டிலின் குழிவு அவர்களை மிக நெருக்கமாக்கி இருந்தது.அவனது கைகள் வேறு சும்மாயில்லாமல்.... அவளது சிறு அசைவும் அவனை உசுப்பேத்துகிறது என்பதை அவளும் உணர்கிறாள்.அவனோ இனிமேல் இந்தக் கட்டில் கயிற்றை இறுக்காமல் இப்படியே விடுவம் என்று நினைக்கிறான். அவளது நாலுமுழ சீலை கூட அந்தக் கைகளை தடுக்க திராணியற்று விலகிக் கொண்டு போகுது.முதுகுப் பக்கமாய் குறு குறு வென்று எதோ ஊர்வதுபோல், மேலும் பொறுக்க மாட்டாதவளாய்.சிணுங்கிக் கொண்டு ......,

ஒவ்வொவ்வே ஹொந்த நே.... (அது கூடாது).

அங்கட்ட குண நே. (உடலுக்கு கேடு).

இசரட்ட  எண்ட இராகவ்....( முன்னால வா).

என்று திரும்பியவளை அவன் தன் மார்பில் ஏந்திக் கொள்கிறான். தொட்டிலில் ஆட்டம் நின்று விட்டது. ஆனாலும் சத்தம் தொடர்கிறது .கிர்ர்ரீச்....கீர்ர்ரீச்.....!

சுபம் .........!

சோதனைகள் எழுதி விட்டேன்..... சான்றிதழை அனுப்பி வையுங்கள்.....!

யாழ் 20 அகவைக்காக....!

ஆக்கம் சுவி.....!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒட்டாமல் சென்ற தண்டவாளம் தடம் மாறி ஏறினாலும் இறுதி பயணம் இலக்கை அடைகிறது அது பல சோதனைகளை தாண்டிய சான்றிதழ் அழக்காக ஒவ்வொரு பந்திக்கும் சான்றிதழ் உங்களுக்கு சுவி அண்ணை 

வாழ்த்துக்கள் 

Posted

சான்றிதழ் எனும் தலைப்பை சுவி அண்ணா இந்த குறு நாவலுக்கு ஏன் இட்டார் என்ற கேள்வி கடைசி அத்தியாயம் வரும் வரைக்கும் இருந்தது. ஆனால் கடைசி அத்தியாயத்தில் கச்சிதமாக பொருத்தி விட்டார்.  ஒரு மனுசனுக்கு எத்தனை படிப்புச் சான்றிதழ்கள் இருந்தால் என்ன, நன்னடைத்தை இல்லா விட்டால் அத்தனையும் வாழ்வில் பெறுமதி இழந்து விடும் என்பதை காட்டி விட்டார். புங்கை சொன்ன மாதிரி இக் கதையின் மைய கரு ஹேமா அல்ல, இராகவனே

இந்த குறுநாவல் தன்பாலின சேர்க்கை, பாலியல் தொழிலாளியுடன் திருமணம், கலியாணம் கட்டாமல் இணைந்து வாழ்தல், இன்னொருவரது குழந்தைக்கு தன்னை அப்பாவாக்குதல் என்று பல மரபு மீறல்களை அதன் இயல்பிலேயே கடந்து சென்றுள்ளது.

நன்றி (இப்பவெல்லாம் நன்றி என்று சொல்லவே பயமாக இருக்கு)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணனித் திரையில் ....கதை தெரிகின்றது!

வாசித்துக் கொண்டே போகின்றேன்! ஹேமா...தனது படுக்கையை இடம் மாற்றுகிறாள்!

பின்னர்...ராகவுக்கும்...ஹேமாவுக்கும்...இடையே நடக்கும் உரையாடலை வாசித்துக் கொண்டு போகும் போது...கணனியின் திரை மங்கலாகிக் கொண்டு போகின்றது!

அட....நான் அழுகிறேனா?

 

அப்பா.....தேத்தண்ணி வேணுமெண்டால் வந்து எடுங்கோ......கொண்டு வந்து தர எல்லாம் ஏலாது!

மனைவியின் அதட்டல் கேட்கிறது!

கண்களை விரைவாகத் துடைத்துக் கொண்டு......உங்களுக்கும்...நிழலிக்கும் பச்சை குத்தப் பச்சைப் பொத்தானை அழுத்துகிறேன்!

யாழ் வழக்கம் போல.......சதுரப் பட்டிக்குள்...என்ன்னவோ சொல்கிறது!

சுவியர்.......மானிடம்  மரணித்துப்  போனதாக நம்பும் எனக்கு ..மானிடத்தை ..மீண்டும் ஒரு முறை...தரிசிக்க வைத்திருக்கிறீர்கள்!

 

நன்றி...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 யாழ்  கள   உறவுகள் ஏற்கனவே தந்துவிட்டார்கள்  சான்றிதழ் ..சுவி ஒரு சிறந்த  சுவையான கதை சொல்லி ..

என்று . தொடரட்டும் உங்கள்  எழுத்துப் பணி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இக்கதை மூலம் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று அடையாளம் காட்டிவிட்டீர்கள். உங்கள் திறமைகளை முன்னரே சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தால் ஒரு சிறந்த எழுத்தாளராக அடையாளங் காணப்பட்டிருப்பீர்கள் ஈழத் தமிழர்கள் மத்தியில். இன்னும் காலம் போய்விடவில்லை. நேரம் இருக்கும் போது எழுதுங்கள் அண்ணா.

Posted

பொதுவான கலாச்சார இறுக்கம் கொண்ட யாழ்ப்பாணத்தை பதினெட்டு வயதுவரை பின்னணியாகக் கொண்ட ஒருவன் தனது சமூகக் கட்டுகளுக்கு அப்பால் இயல்பாக வாழுதல் என்பதே ஒரு புதுமை. ஓர்பால் உறவாக இருந்தாலும் சரி ஒரு பணக்காரனுக்கு உருவான குழந்தைக்கு என்னுமொருவன் தந்தையாக இருப்பதுக்கு சம்மதிப்பதானாலும் சரி எலலாமே இன்றுவரை நடமுறைக்கு சாத்தியமற்ற சமூக இறுக்கம் தான் உள்ளது. இக்கதை கலாச்சார இறுக்கங்களுக்குள் உள்ள விரிசல்களில் தென்னிலங்கையில் பயணிக்கின்றது. நிறைய இடங்களில் அடக்கிவாசிக்கப்பட்டுள்ளது.. புறநிலை அழுத்தம் அல்லது அதுசார்ந்த பயம் இதற்கு காரணமாக இருக்கலாம்.. 80 களில் நடந்த சம்பவத்தை 2018 ல்  அடக்கிவாசிக்கவேண்டிய நிலையில் தான் உள்ளதென்றால் இக்கதைக்கும் எமது கலாச்சார சமூக இறுக்கம் தூய்மைவாதம் சார்ந்த மனநிலையை இலகுவாக புரிந்துகொள்ள முடிகின்றது. கதை 2018 ல் எழுதியிருந்தாலும் எழுத்து நடை கதையின் காலத்திலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக நான் ஊரில் அவதானித்த ஒரு விசயம் என்னவெனில் சமூக இறுக்கம் சார்ந்து எழுதப்படாத , வரையறுக்கப்படாத சட்டங்கள் பல ஊரில் உண்டு. அவைகள் ஒரு பார்வையால், முகபாவனைகள் முகச் சுழிப்புகளால், அன்றாட உரையாடல்களால் அமுல்படுத்தப்படும்.. இவற்றை முதலில் உடைத்தெறிபவர்கள் இந்த வீடி இழுப்பவர்கள் தான். இக்காலத்தில் இதன் தன்மைகள் தெரியவில்லை ஆனால் 80 களில் இதை அவதானிக்க முடியும். வீடி இழுப்பது  சமூக அழுத்ததிற்கு நடுவிரலைக் காட்டுவதுபோல் அமைந்துவிடும். அவர்களில் பலர் சதீய இறுக்கங்களை கடந்து திருமணம் செய்வதையும் கண்டிருக்கின்றேன். உங்கள் கதையில் வீடி வலிப்பதை வாசிக்கும் போது அது ஞாபகத்துக்கு வந்தது. 

ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணாவின் கதையில் பல அடுக்குகளும், இடுக்குகளும் நிறைந்துள்ளன. நிழலி முன்னரே சொன்னமாதிரி ஆரம்பித்தில் இருந்த நிதான நடை பின்னர் கடுகதி வேகத்திற்கு மாறிவிட்டது. சுவி அண்ணா எங்கேயோ நேர்திக்கடன் வைக்க அவசரப் பயணம் போகின்றாரோ தெரியவில்லை. 

ஆனாலும் ஹேமாவுடன் சிங்கள ஊருக்கு கூடவே பயணித்த உணர்வைத் தந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவிக்கு ஏற்கனவே பலர் சான்றிதழ் கொடுத்து விட்டனர். அத்தனை திறமைகளையும் ஒளித்து வைத்து இப்பதான் முடிச்சை அவிழ்க்கத் தொடங்கி இருக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த கதைசொல்லி என்று முன்னைய எழுத்துக்களிலேயே முத்திரை குத்தி இருந்தாலும் இக்கதை சான்றிதழ் உங்கள் எழுத்திற்கு ஒரு திருப்பு முனைஎன்று சொல்லலாம். படைப்புக்கள் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சுவியர்.

ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது பொறாமையாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு ஜீவனைக் கண்டேன்.ஆபாசமாக வரும் கட்டங்களிலெல்லாம் மிகவும் அவதானமாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள்.

நண்பர்களை சேர்த்து வைத்து பின்னர் பிரித்து வைத்து இருவருக்கும் மனம் போல் மாங்கல்யம் அமைத்து கொடுத்தது தனி அழகு.

கடைசியில் ஹமமாலினி என்பதற்கு அர்த்தமாக அணைக்க ஹமா மாலினி என்று இருவர்.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சுவியர்.

ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது பொறாமையாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு ஜீவனைக் கண்டேன்.ஆபாசமாக வரும் கட்டங்களிலெல்லாம் மிகவும் அவதானமாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள்.

நண்பர்களை சேர்த்து வைத்து பின்னர் பிரித்து வைத்து இருவருக்கும் மனம் போல் மாங்கல்யம் அமைத்து கொடுத்தது தனி அழகு.

கடைசியில் ஹமமாலினி என்பதற்கு அர்த்தமாக அணைக்க ஹமா மாலினி என்று இருவர்.

வாழ்த்துக்கள்.

அந்தக் காலத்தில்...எனதும்...பல ஆபிரக்கக் கருப்பர்களினதும்  ( இதைக்க கண்டு  நானே ஆச்சரியப் பட்டுள்ளேன்)கனவுத் தேவதையாக இருந்தவர் இந்தக் ஹேம மாலினி! அவரின் பெயரைப் போய்...ஹம மாலினி என மாற்றியதை...மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

hema-malini-perfoms-radha-krishna-dance-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, புங்கையூரன் said:

அந்தக் காலத்தில்...எனதும்...பல ஆபிரக்கக் கருப்பர்களினதும்  ( இதைக்க கண்டு  நானே ஆச்சரியப் பட்டுள்ளேன்)கனவுத் தேவதையாக இருந்தவர் இந்தக் ஹேம மாலினி! அவரின் பெயரைப் போய்...ஹம மாலினி என மாற்றியதை...மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

புங்கை நான் இப்போதும் பாமினி முறையில் எழுதுவதால் சில எழுத்துக்கள் எங்கே ஒழிந்திருக்கின்றன என்று இன்னமும் தேடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றுதான் முதன் முறையாக சுவி அவர்களின் ஆக்கமொன்றை வாசிதேன். நேரம் போவது தெரியவில்லை. விறு விறுப்பாக  எழுதியிருக்கிறீர்கள்.   அடுத்த புதிய தொடரை வாசிக்க  ஆவலாக இருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கந்தப்பு said:

இன்றுதான் முதன் முறையாக சுவி அவர்களின் ஆக்கமொன்றை வாசிதேன். நேரம் போவது தெரியவில்லை. விறு விறுப்பாக  எழுதியிருக்கிறீர்கள்.   அடுத்த புதிய தொடரை வாசிக்க  ஆவலாக இருக்கிறேன்

வா

www.yarl.com/forum3/topic/190395-வாந்தி/றது பிடிக்காது . வந்தால் தடுக்க முடியாது .

 

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கந்தப்பு....!  tw_blush:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/02/2018 at 3:36 PM, ஈழப்பிரியன் said:

சுவியர் வழமை போல தொடர் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.இம் முறை நான் சிங்களத்திலும் குறைந்தவனல்ல என்று மார்தட்டி நிற்கிறது தெரிகிறது.  

மிகுதிக்கும் ஆவலாக இருக்கிறோம்.

 

On 21/02/2018 at 3:54 PM, Kavallur Kanmani said:
  1. விறுவிறுப்பான தொடர் கதை ஆரம்பித்துள்ளார் சுவி. என்ன  சிங்களத்திலும் புலமை மிக்கவரா நீங்கள்?  தொடருங்கள் காத்திருக்கிறோம்

 

On 21/02/2018 at 6:50 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட நீங்கள் முதலே கதையை ஆரம்பிச்சாச்சா????நான் தான் கவனிக்கவில்லை. ஆவலுடன் மிகுதிக்காக காத்ருக்கிறோம். 

புலமை என்பதெல்லாம் ரெம்ப ஓவர். கொஞ்சம் பேச்சு வழக்கு மட்டும், அதுவும் இப்ப அதிகம் மறந்திட்டுது........! உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிகவும் நன்றி......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.