Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • Replies 57
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை மனதில் சிம்மாசனம் இட்டிருக்கும் நடிகை ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள்.
நடிகையைப் பற்றி கவலைப் படும் நாங்கள் சிரிய மக்கள் இன்று கொத்துக் கொத்தாக கொல்லப்படுகிறார்களே . அவர்களுக்காகவும் இறைவனைப் பிராத்திப்போம்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த
அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 திறமையான நடிப்பு தந்தவர்களில் சிறீ தேவியும் ஒருவர் . இவர் நடித்த  மூன்றாம் பிறை எனக்கு பிடித்த படம் .  அனுதாபங்கள் 

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன்?

 
 

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்ரீதேவி

 

மறைந்த ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர, தனி விமானம் ஒன்று துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரது, உடல் இன்று மும்பைக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உடலை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, துபாய் சட்டவிதிமுறைகள்படி வெளிநாட்டவர் யாரவது மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டால், மரணம் குறித்து போலீஸில் வழக்கு பதிந்து தடயவியல் சோதனை நடத்தப்படும். பின்னர் தான் எம்பார்மிங் செய்யப்பட்டு அந்த நாடுகளுக்கு உடல்கள் அனுப்பப்படும். இந்த நடைமுறைதான் தற்போது ஸ்ரீதேவி விவகாரத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

மேலும் அவர் ஒரு நடிகை என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் எடுத்து போலீஸார் செயல்பட்டு வருவதால் உடலை அனுபவத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றிரவு அவரது உடலை இந்தியா கொண்டுவர முடியாது. தடயவியல் சோதனை அறிக்கை கிடைத்த பின்புதான் உடலை கொண்டு வரமுடியும். தடயவியல் சோதனை நடைபெறும் இடத்தில் பத்திரிக்கையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. இதற்கிடையே, அவரின் கழுத்தில் காயம் உள்ளதாக தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. முன்னதாக அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர். தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அஞ்சலி செலுத்த மும்பை விரைந்துள்ளனர். இதற்கிடையே நாளை நண்பகல் 12.30 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

https://www.vikatan.com/news/cinema/117475-delay-in-bringing-sridevis-body-to-india.html

ஸ்ரீதேவி: தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் கோலோச்சி, இந்தி சினிமாவின் ராணியாக உயர்ந்த ஸ்ரீ தேவி, இப்போதும் தமிழ் ரசிக நெஞ்சங்களை ஆட்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவி: தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் முதன்முதலில் அறிமுகமான படம் துணைவன். அதே ஆண்டிலேயே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரம். அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகம். இப்படியாக தமிழில் துவங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் அந்தந்த மொழி நடிகையாகவே பிரபலமான கதாநாயகிகள் இந்தியாவில் வேறு யாருமே இல்லை.

தமிழில் துணைவன் துவங்கி, 2015ல் வெளிவந்த புலி வரை, 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவருக்கு முதல் படம், 1975ல் வெளிவந்த ஜூலி. மரணமடைவதற்கு முன்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்துக்கொடுத்திருக்கும் ஸீரோ திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். ஜூலி முதல் ஸீரோ வரை இந்தியில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் 72தான்.

 

தெலுங்கில்தான் அவர் நடித்த படங்கள் அதைவிட அதிகம். 83 படங்களில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், துபாயில் அவர் மரணமடைந்தபோது, அவரை இந்திய ஊடகங்கள், பாலிவுட் கதாநாயகியாகத்தான் கருதி, துக்கமடைந்தது.

தற்போது அவர் முழுக்க முழுக்க ஒரு இந்தி நடிகையாகப் பார்க்கப்படும் நிலையில், 1975ஆம் ஆண்டிலிருந்து 1986வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மாபெரும் கனவுக் கன்னியாக அவர் வீற்றிருந்தார்.

ஸ்ரீ தேவி: தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"வைஜயந்தி மாலா, ரேகா, ஹேமாமாலினி ஆகியோர்கூட தமிழ்நாட்டிலிருந்து இந்தி சினிமாவுக்குச் சென்றிருந்தாலும் ஸ்ரீ தேவி அடைந்த உயரம் என்பது மிகப் பெரியது. 80களின் மத்தியில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்டவராக ஸ்ரீதேவி இருந்தார்" என்று நினைவுகூர்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான சு. ராஜசேகர். அவர் சுட்டிக்காட்டுவதைப்போல, தென்னிந்தியாவிலிருந்து இந்தி சினிமாவுக்கு வந்தவர்களிலேயே, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பிடித்தவர் ஸ்ரீ தேவி மட்டுமே.

அப்பாவித்தனமும் அழகும்

ஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வந்த காலகட்டத்தில், லதா, மஞ்சுளா, சாரதா, சுஜாதா, ஸ்ரீ பிரியா என பலரும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் யாரிடமும் ஸ்ரீதேவியிடம் இருந்த ஒரு அப்பாவித்தனமும் அழகும் இருந்ததில்லை. அதுவே அவரைத் தனித்துவமானவராகக் காட்டியது என்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி.

16 வயதினிலே படத்தில் மயிலு, மூன்று முடிச்சு படத்தில் செல்வி, சிவப்பு ரோஜாக்கள் சாரதா என ஆரம்பகாலப் படங்களில், ஒரு நெருக்கடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்ணாக அவர் தொடர்ந்து நடித்து வந்தது, அந்த காலகட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது என்கிறார் தேவிபாரதி.

தமிழ்த் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடித்தக்கொண்டிருந்த பல கதாநாயகிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. 75களிலிருந்து 80களின் மத்திவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பல வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீதேவியே கதாநாயகியாக இருந்தார்.

 

மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளையராணி ராஜலட்சுமி, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், லட்சுமி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிகலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவிக்கு வாய்த்த பாத்திரங்கள் அந்த காலகட்ட நடிகைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.

மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த குழந்தை நடத்திரம்

"அந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை. அழகு, அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு என அந்தக் காலத்து தமிழ் ஆண் மனதின் பெண் தேவதையாக ஸ்ரீதேவி திரையில் உருப்பெற்றிருந்தார். ஸ்ரீ பிரியா, சுஜாதா ஆகியோரை அப்படிச் சொல்ல முடியாது" என்கிறார் தேவிபாரதி.

ஸ்ரீ தேவியின் கண்களில் ஒரு அழகும் அப்பாவித்தனமும் இருந்தது. அதனை தமிழ் சினிமா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது என்கிறார் தேவிபாரதி. அதற்கு உதாரணமாக, 16 வயதினேலே படத்தில், துவக்கத்திலேயே ஸ்ரீ தேவியின் கண்களின் க்ளோஸப் நீண்ட நேரத்திற்கு திரையில் காண்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

"ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது பேபி ராணி, பேபி ஷகிலா ஆகியோரும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், ஸ்ரீ தேவி இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெண் குழந்தைகள், பெரும்பாலும் பெரிய நட்சத்திரமாக பிற்காலத்தில் வருவதில்லை. ஸ்ரீ தேவி ஒரு விதிவிலக்கு" என்கிறார் ராஜசேகர்.

 

ஸ்ரீதேவி நடிக்கவந்த காலகட்டமும் அவருக்கு மிக உதவிகரமாக இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரது காலகட்டம் முடிவுக்கு வந்து, ரஜினி - கமல் காலகட்டம் துவங்கியிருந்தது. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை பாரதிராஜாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவராக ஸ்ரீ தேவி மட்டுமே இருந்தார் என்கிறார் ராஜசேகர்.

தெலுங்குப் படங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளே இந்தித் திரையுலகிற்கு அவரை அழைத்துச் சென்றன என்கிறார் ராஜசேகர். தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், இந்திப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்கவைத்தார்கள். ஆனால், வெகுவிரைவிலேயே தனது சொந்த பலத்தில் இந்தித் திரையுலகில் ஆதிக்கம்செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. 1983ல் வெளிவந்த ஹிம்மத்வாலா திரைப்படத்தின் வெற்றி அவரை எங்கோ கொண்டுசென்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த வாரிசு, சந்திப்பு, நான் அடிமை இல்லை என மூன்று தமிழ்ப் படங்களில் மட்டுமே ஸ்ரீ தேவி நடித்தார்.

"அது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகம். அவரது உடல்கூட தமிழகத்திற்கு வராது என்பது இன்னும் பெரிய வருத்தத்தை அளிக்கிறது" என்கிறார் தேவிபாரதி.

ஸ்ரீ தேவிக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்கள், 70களின் ஸ்ரீ தேவியை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

http://www.bbc.com/tamil/india-43193761

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆழ்ந்த  அனுதாபங்கள்.

மறக்க முடியாத காட்சி/ பாடல்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன், தாய் ராஜேஸ்வரி, தங்கை ஸ்ரீலதாவுடன் அவர் காணப்படும் நிழற்படம்

 

28277367_10155075337586822_3420404353935

நடிகை ஸ்ரீதேவியின் சொந்த ஊரில் மக்கள் சோகம்

 

26-MA-MANSridevi%20Photo-2

மீனம்பட்டி கிராமத்தில் உள்ள நடிகை ஸ்ரீதேவியின் வீடு.

26-MA-MANSridevi%20Photo-1

பெற்றோருடன் ஸ்ரீதேவி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு 13.8.1963-ம் தேதி மகளாகப் பிறந்தவர் ஸ்ரீதேவி. இவரது உடன் பிறந்த சகோதரி லதா.

ஸ்ரீதேவி நான்கு வயதில் துணைவன், கொலை வழக்கு, கந்தன் கருணை ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இதில் முதலில் கந்தன் கருணை திரைப்படம் வெளியானது.

தந்தை ஐயப்பன் கடந்த 1989-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக ஸ்ரீதேவி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இருப்பினும் அந்த தேர்தலில் ஐயப்பன் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்தால் அவர் பிறந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22854956.ece?homepage=true

 

 

மனிதாபிமானமுள்ளவர் ஸ்ரீதேவி: வீட்டு வாட்ச்மேன் நெகிழ்ச்சி

 

 
download%2010

ஸ்ரீதேவி, வாட்ச்மேன் மாலைராஜா மனைவியுடன்

ஸ்ரீதேவி மனிதாபிமானத்துடன், எளிமையாக பழகக்கூடியவர் என்று அவரது வீட்டு முன்னாள் வாட்ச்மேன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ்த்திரையுலகம் தாண்டி இந்திய திரையுலகிலும் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தியவர். குழந்தை நட்சத்திரமாய் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகளுடன் நடித்த ஸ்ரீதேவி பின்னர் கதாநாயகியாக ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வlலம் வந்தார்.

தென் இந்திய மொழிகள் கடந்து இந்திப்படத்திலும் கால் பதித்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். 1980 களில் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி சென்னையில் வசித்தார்.

அப்போது அவரது வீட்டில் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் தேவை என்பதால் நெல்லையை சேர்ந்த மாலைராஜா என்பவரை ஸ்ரீதேவி வேலைக்கு அமர்த்தினார். மாலைராஜா இன்றும் ஸ்ரீதேவி வீட்டுக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேனாக உள்ளார்.

அவர் ஸ்ரீதேவி மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஸ்ரீதேவிப்பற்றி அவரது நினைவை பதிவு செய்தார்.

“நெல்லையிலிருந்து வேலைக்கு வந்தேன். மிகப்பெரிய ஸ்டார் வீட்டில் வேலை எப்படி நடத்துவார்களோ என்ற தயக்கத்துடனே போய் நின்றேன்.

என்ன பெயர் என்ன என்று கேட்டார் மாலைராஜா மேடம் என்றேன். மாலை ராஜா எல்லாம் கிடையாது இனி நான் உங்களை ராஜா என்றுதான் கூப்பிடுவேன் சரியா என்று மிக எளிமையாக பெரிய கதாநாயகி என்ற எண்ணம் இல்லாமல் சாதாரணமாக பேசினார். அங்கு சேர்ந்திருந்த நேரத்தில் தான் எனக்கு திருமணமாகி இருந்தது. அவர் என்னை வேலைக்காரனாக பார்க்கவில்லை.

சக மனிதராக மதித்து நடத்துவார். எளிமையானவர் பந்தா அவருக்கு வராத ஒன்று. அவரது வீட்டில் வாட்ச்மேனாக இருந்த நேரத்தில் தான் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. அவர் எனது பிள்ளைகள் படிப்பு மற்ற விஷயங்களில் பெரிய அளவில் உதவி இருக்கிறார்.

சூட்டிங்குக்காக அவர் வெளியே போகும் போதெல்லாம் ராஜா உங்களை நம்பித்தான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லி விட்டுத்தான் செல்வார். பின்னர் அவரது வாழ்வில் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக இருந்தார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடம் இந்தியில் தான் பேசுவேன். அவரும் எளிமையாக பழகுவார்.

நீ வேலையை விட்டு சென்றால் உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் நேரடியாக பேசு என்று ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வார். குடும்ப விபரங்களை கேட்பார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்ததால் இயல்பாகவே அவரிடம் எளிமை இருந்தது. பின்னாளில் அவர் மும்பைக்கு சென்ற பின்னர் தொடர்பு குறைந்துவிட்டது.

நானும் எதிர்புறம் உள்ள பார்ட்மெண்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டேன். அவரது மரணச்செய்தியை காலையில் தான் அறிந்தேன். எனது சகோதரி ஒருவரை இழந்தது போல் உணர்கிறேன், ஸ்ரீதேவி என்றால் மனிதாபிமானத்துடன் இனிமையாக பழகும் அவரது முகம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை.” என்று வருத்தத்துடன் மாலைராஜா தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22850725.ece

Edited by நவீனன்

ஸ்ரீதேவியின் அந்த கடைசி நிமிடங்கள்... : கணவருடன் ‘சர்பிரைஸ்’ விருந்து சாப்பிட முடியாத சோகம்

 

 
latest-photo-of-sridevi-with-boney-kapoo

துபாயில் திருமண நிகழ்ச்சியில் தனது கணவர் போனி கபூருடன் பங்கேற்ற நடிகை ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி தான் இறக்கும் சில நிமிடங்களுக்கு முன், தனது அன்புக் கணவருடன் சர்பிரைஸ் விருந்து சாப்பிடும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பிறந்து, தமிழ் திரை உலகிலும், பாலிவுட்டிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி. 54 வயதான ஸ்ரீதேவி தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு தனது கணவர், மகளுடன் துபாய்க்கு சென்று இருந்தபோது, அங்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு பாலிவுட், தமிழ் திரைஉலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவரின் உடல் இன்று மும்பை கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இதற்காக அனில் அம்பானி ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டுவர தனது தனிப்பட்ட விமானத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஸ்ரீதேவி மாரடைப்பால் இறப்பதற்கு முன் அவருக்கு என்ன நேர்ந்தது?, எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்? என்பது குறித்து குடும்ப வட்டாரங்கள் சில தகவல்களைக் கூறியுள்ளனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், துபாயில் திருமணம் முடிந்தபின் மீண்டும் மும்பைக்கு சென்றுவிட்டார். பின் தனது மனைவி ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு வந்துள்ளார்.

அங்குள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலுக்கு சென்று ஸ்ரீதேவியை போனிகபூர் சந்தித்துள்ளார். அவரைக் கண்டு ஸ்ரீதேவி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஹோட்டல் அறையில் மகிழ்ச்சியா பேசிய ஸ்ரீதேவியை அழைத்துக் கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு விருந்துக்கு அழைத்துச் செல்ல போனி கபூர் திட்டமிட்டு இருந்தார். இதை முன்கூட்டியே ஸ்ரீதேவியிடம் சொல்லாமல் விரைவாக தாயாராகு என்று மட்டும் போனி கபூர் கூறி இருந்தார் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அன்று மாலை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக்கொண்டு இருந்தார். குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமடங்களுக்கு மேல் ஆகியும் அவர் வெளியே வராதது கண்டு போனி கபூருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, குளியல் அறை கதவை தட்டியும், ஸ்ரீதேவி திறக்கவில்லை. இதையடுத்து, கதவை வலுக்கட்டாயமாக திறந்தபோது, ஸ்ரீதேவி குளியல் அறை தொட்டியில் மூர்ச்சையாகி கிடந்துள்ளார்.

இதைக்கண்டு, போனிகபூர் அதிர்ச்சி அடைந்து . ஸ்ரீதேவியை குளியல் தொட்டியில் இருந்து தூக்கி, தனது நண்பருக்கு போனி கபூர் தகவல் தெரிவித்தார். அதன்பின் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், போலீஸார் வருவதற்குள் ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என அவரின் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தனது அன்பு மனைவி ஸ்ரீதேவிக்கு விருந்து அளிக்க நினைத்த போனி கபூரின் ஆசையும், நிறைவேறவில்லை, கணவருடன் வெளியே செல்லப் போகிறோம் என்று ஸ்ரீதேவியின் ஆசையும் நிறைவில்லை.

http://tamil.thehindu.com/india/article22856011.ece?homepage=true

ஸ்ரீதேவி மரணத்தில் துபாய் போலீஸ் வெளியிட்ட புதிய தகவல்!

 

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக `gulf news’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரத்தப்பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது (Traces of alcohol) உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.  

 

ஸ்ரீதேவி
 

கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்றுள்ளனர்.  திருமணம் முடிந்த பின், போனி கபூரும்  மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். 

மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24-ம் தேதி மீண்டும் துபாய் சென்றுள்ளார். மாலை 5.30 மணியளவில், திடீரென்று மனைவியின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளார். பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். மனைவியை டின்னருக்கு அழைத்துள்ளார் போனி கபூர்.

ரெடியாகி வருவதாகச் சொல்லிவிட்டு ஸ்ரீதேவி பாத்ரூமுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கையைத் துபாய் போலீஸ், அவரின் குடும்பத்தினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில், ஸ்ரீதேவி தற்செயலாகக் குளியல் தொட்டியில் மூழ்கி (accidental drowning) உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/india/117552-sridevi-died-from-accidental-drowning-says-forensics-report.html

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சுளா அவர்களின் மரணம்போல நடந்திருக்கலாம் 
இவர்கள் மாரடைப்பு என்று கூறியிருக்கலாம்.

பணமிருந்தும் புகழ் இருந்தும் மரணம் 
இலகுவாக வந்து வீட்டு கதவை தட்டி விடுகிறது.

சிறீதேவியின் மரணம் தனிப்பட எனக்கு 
வாழ்க்கையை வாழ் கூறுவதுபோல் இருக்கிறது.

ஆடம்பரம் அலம்பல் எல்லாம் பொடியை எரித்து 
ஒரு மூன்று நான்கு நாள்களுடன் காணாமல் போய்விடும் 

ஊர் உலகத்துக்கு ஏதும் செய்திருந்தால் மட்டுமே 
நிலையாக நிலைத்து இருக்கும்.

என்ன செய்ய போகிறேன் ..... எதை செய்ய முடியும் ...??
என்ற பல கேள்விகளை (ஏற்கனவே இருந்தது என்றாலும்) 
சிறீதேவியின்  மரணமும் தற்செயலாக எனக்கு நடந்த ஒரு விபத்தும் 
தூண்டி கொண்டு இருக்கிறது.

பணம் சொத்து சேர்த்து வைப்பது என்பதை 
முன்னோர் சமூகம் போன்றவை சொல்லிக்கொடுத்து வருகின்றன 
எவ்வளவு ? என்பதிலும்  .... ஏன்? என்பதிலும் தான் 
எமது சொந்த புத்தியையும் அனுபவத்தையும் கொண்டு 
செயல்பட வேண்டிய கட்டாயம் வருகிறது.
மரணம் எனக்கு தனிப்படத்தான் வர போகிறது 
ஊருக்கும் சமூகத்துக்கு அல்ல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த  அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பணக்காரர்கள் குடித்துவிட்டு தொட்டிக்குள் விழுந்து இறந்துபோனால் கிடைக்கும் இரக்கம், உடல் நோக உழைத்துவிட்டு ஒருவன் குடித்துவிட்டு விழுந்து இறந்துபோனால் அவனுக்கு கிடைப்பதில்லை. tw_anguished:

நடிகை ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதைவிட எப்படி வாழ்ந்தார் என்பதையே சரித்தரம் பேசும்! ஒரு ரசிகனின் பார்வை!!

 

 
sri_writing

 

இந்திய சினிமாவில் இன்றளவும் கதாநாயகர்களே முன்னணியில் இருந்து வருகிறார்கள். கதாநாயகி இரண்டாம் பட்சமாகவும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். விதிவிலக்காக ஒருசில நடிகைகள் தங்களுடைய அபாரமான திறமையாலும், பேரழகாலும் திரையுலகில் ஜொலித்ததுண்டு. அத்தகையவர்களுள் இந்திய சினிமாவையே தன் மயக்கும் வசீகரத்தால் கட்டுண்டு இருக்கச் செய்தவர் நடிகை ஸ்ரீதேவி எனலாம். 

இயல்பான நடிப்பும், மென் குரலும், அதிராத பாங்குடனும் ஸ்ரீதேவி ஒரு கதாபாத்திரத்திற்கு உயிரோவியமாய் பொருந்திப் போய்விடுவார். ஒவ்வொரு நடிகருடனும் அவர் நடிக்கும் போதும் வித்யாசப்படுத்தி தன்னுடைய பங்களிப்பை வெகு சிறப்பாய் செய்துவிடுவார். எண்பது தொண்ணூறுகளில் திருமணத்துக்குத் தயாராகும் ஆண்கள் ஸ்ரீதேவியைப் போல அழகான பெண் வேண்டும் என்று அவரை அடைமொழியாக்கும் அளவுக்கு அக்காலத் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார்.

kamal_sri.jpg

இயக்குநர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தை யாராலும் மறக்க முடியாது. ஸ்ரீதேவியின் முகபாவனைகள், அப்பாவியான குழந்தைத்தனமான சிரிப்பு, சுப்ரமணி என்று நாய்க்குட்டியை கொஞ்சும் அழகு என ஒவ்வொரு ப்ரேமிலும் ஸ்ரீதேவியின் கொள்ளை அழகையும் நடிப்பாற்றலையும் செதுக்கியிருப்பார் பாலு மகேந்திரா. கண்ணே கலைமானே என்ற பாடல் இளையராஜாவின் என்றென்றும் இனிய கீதமாக பலரின் மனத்துக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். கெமிஸ்ட்ரி என்று இப்போது பிரயோகிக்கப்படும் வார்த்தைக்கு அப்போதே உதாரணமாகத் திகழ்ந்த ஜோடி கமல் ஸ்ரீதேவிதான். திரைப் பயணத்தில் கமல் ஸ்ரீதேவி இருவரின் மிக முக்கியமான படம் அது. இவர்கள் இருவரின் மிகச் சிறந்த படங்களில் வறுமையின் நிறம் சிகப்பு தவிர்க்க முடியாத ஒன்று. 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' என இன்று வரை அந்தப் பாடலின் அழகான கம்போஸிங்கில் உள்ளத்தைப் பறி கொடுப்பவர்கள் பலர். அந்த காட்சிக்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி. எவர்க்ரீன் சினிமா ஜோடிகளில் கமல் ஸ்ரீதேவி ஜோடியே ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டுள்ளனர். 

இந்தியத் திரையின் பிரபல நடிகர்களான எம்ஜிஆர், கமல், ரஜினி, ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், ஷாருக் கான் என அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. தற்கால நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோருடனும் நடித்தார். பல பிரச்னைகளுக்கு இடையே 1996-ம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளரான் போனி கபூரை மணந்தார் ஸ்ரீதேவி. சொந்த வாழ்க்கையிலும் சரி திரைப்பட வாழ்க்கையிலும் சரி  ஸ்ரீதேவி அனைவராலும் விரும்பப்படும் ஒருவராகவே இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் கொடுத்த விலை சற்று அதிகம்தான். புகழின் உச்சியில் வாழ்ந்தவர்களுக்கு எப்பாடுபட்டாவது அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் தன் குடும்ப வாழ்க்கைக்காகவும், குழந்தைகளுக்காக தன்னுடைய புகழை விட்டு விலகினார் ஸ்ரீதேவி. அதன்பின் அவருடைய மறு பிரவேசமும் வெற்றிகரமாக அமைந்தது அவரது திறமைக்கான சாட்சியன்றி வேறில்லை.

sri_devi_new.jpeg

அவரது வாழ்க்கையில் சந்தித்த மேடு பள்ளங்கள், சிக்கல்கள், உடல் நலத்துக்காகவும், அழகுக்காகவும் அவர் செய்த மருத்துவங்கள் என பலவிஷயங்கள் விமரிசிக்கப்பட்டாலும் அவர் அதை எல்லாம் கடந்து தன்னியல்புப் படி மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார். இந்நிலையில் திடீரென்று அவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் மாரடைப்பு என்ற செய்தியே வந்தது. அதன்பிறகு பிரேத பரிசோதனைக்குப் பிறகு மது அருந்திய நிலையில் குளியலறை தொட்டி நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிர் இழந்தார் என்று தெரிய வந்தது. அதுவரை அவரைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் குடி போதையில் மயங்கி விழுந்தார் என்று எதிர்மறையாக எழுதத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வடையச் செய்த ஒரு அற்புதமான நடிகை இன்று உயிருடன் இல்லை. அவருக்காக அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவதூறு பரப்பாதீர்கள் என்பதே ஸ்ரீதேவியின் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும். 

மனித வாழ்க்கை திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் போலத்தான். அடுத்த காட்சி என்னவென்று யாருக்கும் தெரியாது. பாத்ரூமுக்குச் சென்றவர் பின் ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று அவர் அதற்கு முந்தையை கணத்தில் நினைத்திருப்பாரா? ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தின் தலைப்பான ‘வாழ்வே மாயம்’ என்பது எத்தனை பெரிய உண்மை!

முடிவினை நோக்கிய
பயணத்தில்
எவர் கதவு அகலத் 
திறந்திருக்குமோ 
அந்த இடத்திற்கு
எந்த நொடியிலும்
தேவன் வரக் கூடும்
அவனுடைய பெயரை
மரணம் என்றும் இருக்கக் கூடும்!

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/26/it-does-not-matter-how-she-died-it-is-how-she-lived-a-period-as-a-legend-sridevi-last-days-2870619.html

  • கருத்துக்கள உறவுகள்

043621ef-7c46-449b-b694-d37d38c7787d_162

மேலேயுள்ள ..மரணச் சான்றிதழில்.....Drowning பிழையாக எழுதப்பட்டிருக்கின்றதே?

இது உண்மையாக ஒரு திணைக்களத்தில் இருந்து தான் வெளி வந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

043621ef-7c46-449b-b694-d37d38c7787d_162

மேலேயுள்ள ..மரணச் சான்றிதழில்.....Drowning பிழையாக எழுதப்பட்டிருக்கின்றதே?

இது உண்மையாக ஒரு திணைக்களத்தில் இருந்து தான் வெளி வந்ததா?

இம்மாதிரி எழுத்துப்பிழைகள் சாதாரணம்தான்.. திணைக்களக்தின் அலுவலக முத்திரை இருக்கிறதே..

இவர்கள் அரபு மொழியில் எழுதி மொழிமாற்றம் செய்திருக்கலாம். எனது 'பதாக்கா' (ID card)வில் இம்மாதிரி பிழையும் உண்டு. தட்டச்சு செய்பவரின் கவனக்குறைவாகவும் இருக்க வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மாலை 5:45 மணியளவில்.. குளியலறைக்கு சென்றவரை இன்னும் காணவில்லை என்று...
அவரது கணவர் போனி கபூர்  6:00 மணிக்கு கதவை உடைத்து உள்ளே போய் பார்க்க, ஸ்ரீதேவி  இறந்திருந்தாராம்.
இரவு 9 மணிக்குத்தான் காவல் துறையினருக்கு அறிவித்துள்ளதை பார்க்க....
சந்தேகம்... அவரின் கணவரின் பக்கமே திரும்புகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

மாலை 5:45 மணியளவில்.. குளியலறைக்கு சென்றவரை இன்னும் காணவில்லை என்று...
அவரது கணவர் போனி கபூர்  6:00 மணிக்கு கதவை உடைத்து உள்ளே போய் பார்க்க, ஸ்ரீதேவி  இறந்திருந்தாராம்.
இரவு 9 மணிக்குத்தான் காவல் துறையினருக்கு அறிவித்துள்ளதை பார்க்க....
சந்தேகம்... அவரின் கணவரின் பக்கமே திரும்புகின்றது. 

கவனம் ரசிகர்கள் சினம் கொள்ள போகிறார்கள்....tw_blush:

ஸ்ரீதேவியின் உடல் எம்போமிங் செய்வதில் தாமதம் : போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை!!!

 

 

மறைந்த  நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

online_New_Slide__3_.jpg

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று பிற்பகல் வெளியானது. விடுதி அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது உடலில் அல்கஹோல் கலந்திருந்ததாகவும், மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, அவரது உடல் எம்போமிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீராததால் உடல் எம்போமிங் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய்  பொலிஸார்  விசாரணையை பதிவு செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/31055

  • கருத்துக்கள உறவுகள்

துபையில் ஒருவர் இயற்கை மரணமடைந்தால் உடலை உள்ளூரிலேயே நல்லடக்கம் செய்யவோ அல்லது உடலை சொந்த நாட்டிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லவோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைக்கள் மிக மிக நீண்ட அலுவல் நடைமுறையாகும். பல அரச அலுவலகங்களுக்கு சென்று சான்றிதழ்கள் பெற வேண்டியிருக்கும்.

இதுவே சந்தேகப்படும்படியான மரணமாக இருந்தால் சொல்லவே வேணாம், படுத்தியெடுத்துவிடுவார்கள்..

இயற்கை மரணமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளின் படம் கீழே..

 

total.jpg

 

கல்ஃப் நியூஸ்

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் இப்படியான mysterious death அடிக்கடி நடக்கும். சமீபத்தில் Fujaira எனும் இடத்தில்  நடந்த ஓர் சம்பவத்தின்படி 7 குழந்தைகள்  இரவில் நித்திரைக்கு போகும்போது  ஏசி    போட்டு விட்டு படுத்துள்ளார்கள் தாயர் அடுத்த அறையில் தூங்கியுள்ளார். விடிந்ததும் வழமை போல் மருந்து குளிசை எடுக்க அத்தாயர் தன்னுடைய குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்த‌ அறையை திறந்துள்ளார். 7 குழந்தைகளும் இறந்து காணப்பட்டுள்ளனர்.


ஏசியில் இருந்து வெளியேறிய ஒருவகை நச்சுவாயு அவர்கள் அனைவரையும் கொன்றுள்ளது.

`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத விபத்தே' - துபாய் அரசு அதிகாரபூர்வத் தகவல்

ஶ்ரீதேவியின், தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வறிக்கைகளைக் கொண்டு விசாரணை செய்து வந்த துபாய் அரசு வழக்கு தரப்பு ஶ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான `நோ அப்ஜெக்‌ஷன்' முன்னதாக இன்று வழங்கியிருந்தது. 

ஶ்ரீதேவி

 

இதைத் தொடர்ந்து துபாய் ப்ராஸிக்கியுஷன் தரப்பில் பதியப்பட்ட வழக்கின் விசாரணையை முடித்து அதில் ஶ்ரீதேவியின் மரணம் விபத்து என வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பாகத் துபாய் ஊடக அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், துபாயின் அனைத்து சட்டத்திட்டங்களுக்குட்பட்டு இப்படிப்பட்ட மரண சம்பவங்களில் மேற்கொள்ளப்படும் எல்லாவித வழிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பதாகவும் தடயவியல் சோதனை அறிக்கையில் கூறியபடி ஶ்ரீதேவியின் மரணம் நீரில் மூழ்கிய விபத்தாலேயே நடந்துள்ளதாகவும் இந்த வழக்கின் அனைத்து விதமான விசாரணைகளும் இத்துடன் முடிக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஶ்ரீதேவி உடல் எம்பாமிங் செய்தவுடன் இந்திய நேரப்படி 6.30 மணியளவில் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்படவுள்ளது. மும்பை நகரிலுள்ள பவன் ஹான்ஸ் என்ற இடத்தில் ஶ்ரீதேவியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் ஶ்ரீதேவியின் மரணத்தைச் சூழ்ந்திருந்த பல விதமான கேள்விகளும் யூகங்களும் முடிவுக்கு வந்துள்ளன.

Dubai Public Prosecution has approved the release of the body of the Indian actress Sridevi to her family following the completion of a comprehensive investigation into the circumstances of her death.

 

Dubai Public Prosecution stressed that all regular procedures followed in such cases have been completed. As per the forensic report, the death of the Indian actress occurred due to accidental drowning following loss of consciousness. The case has now been closed.

 

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/117680-sridevis-death-is-accident-dubai-media-office-tweeted.html

நடிகை ஸ்ரீதேவி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: வழக்கை முடித்துவிட்டதாக துபாய் போலீஸார் அறிவிப்பு

 

 
devi

நடிகை ஸ்ரீதேவி   -  படம்உதவி: ராய்டர்ஸ்

பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது என்று கூறி வழக்கின் விசாரணையை முடித்துக் கொள்வதாக துபாய் போலீஸார் அறிவித்தனர். இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக தனது கணவர் போனிகபூர், இளைய மகள், ஆகியோருடன் நடிகை ஸ்ரீதேவி(வயது 54) துபாய்க்கு கடந்த வாரம் சென்றார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவர் அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, துபாய் போலீஸார் நடத்திய விசாரணையில், திருமணம் முடிந்து போனிகபூர் மும்பை திரும்பிய நிலையில், நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜூமைரா எமிரட்ஸ் டவர் ஹோட்டலில் அறை எண் 2201ல் தங்கியுள்ளார். மும்பையில் இருந்து துபாய் திரும்பிய போனி கபூர், சனிக்கிழமை மாலை ஸ்ரீதேவியுடன் வெளியே செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அதன்பின் குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் வராத காரணத்தால், அறைக்கதவை உடைத்து திறந்தனர். அப்போது, குளியல் அறை தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். முதலில் மரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வு, தடயவியல் விசாரணையின் முடிவில் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை, அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், ஸ்ரீதேவி கணவர் போனி கபூரிடம் துபாய் புலன் விசாரணைப் பிரிவினர் இன்று காலையில் 3 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் துபாய் போலீஸார் ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை, அவரின் மரணம் குளியல்தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டதுதான் எனத் தெரிவித்து வழக்கை முடித்துவிட்டனர்.

இது தொடர்பாக துபாய் போலீஸின் ஊடக அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய நடிகை ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் போலீஸார் ஒப்புதல் அளித்துவிட்டனர். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை அனைத்தும் முடிந்துவிட்டது, அனைத்துவிதமான தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது,

இந்த வழக்கில் பின்பற்றப்படும் அனைத்து விதமான வழக்கமான முறைகளும் கடைபிடிக்கப்பட்டு முடிக்கப்பட்டன. தடயவியல் அறிக்கையின்படி, நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த வழக்கை முடிக்கப்பட்டுவிட்டது. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்படுவதற்காக அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக துபாய் உள்ளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

http://tamil.thehindu.com/india/article22867848.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.