Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விட்டுவந்த கணத்தில் காலம் உறைந்திருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் இப்படித்தான் இருக்கும். எனக்கும் சொந்த இடம் அந்நியமான இடமாகத்தான் தெரிந்தது. அதுதான் திரும்பவும் இன்னுமொருமுறை போக மனமில்லாமல் உள்ளது.  மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களின் மனா உளைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் சகோதரி......!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

உண்மைதான். நாம் நாடோடிகளின் நிலையில் தான் இப்போது. மீண்டும் இங்கு வரவே கூடாது என்னும் நிலையோடுதான் நானும் வந்தேன். ஆனாலும் நினைக்கும் போது எஞ்சியிருக்கும் எச்சங்களின் மீது இன்னும் கொண்டிருக்கும் அழியா ஆசை போக வேண்டும் என்று தான் எண்ண வைக்கிறது.

1 minute ago, suvy said:

புலம்பெயர்ந்தவர்களின் மனா உளைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் சகோதரி......!  tw_blush:

போய் வந்த பலரின் நிலை இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்கு....ஒரு எருது ...செக்கு ஒன்றைச் சுத்திச் சுத்தி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்!

ஊரெல்லாம் நல்லெண்ணைக்கு நல்ல தேவை இருந்தது! 

எருதுக்கும்...இரவும் ...பகலும் நல்ல வேலையும் இருந்தது!

திடீரென ..அந்த ஊருக்கு ஒரு மில்..வருகின்றது!

அங்கு நல்லெண்ணெய் மலிவான படியால்...எருதுக்கு... வேலை இல்லாது போய்விட...அந்த எருது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள், சுமே?

பழக்க தோஷத்தால்...கொஞ்ச நாளைக்கு...அந்தச் செக்கைச் சுற்றி வரும்! பின்னர்...வேறு ஏதாவது சூழலுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்!

அதைப் போலத் தான்....மனிதர்களும்!

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான் 

நீங்கள் அந்நியள் ஆகவில்லை, சுமே!

ஐரோப்பா உங்களைத் தன்னவள் ஆக்கி விட்டது என்பது தான் ..உண்மை!

உங்கள் அனுபவம்...என்னையும் பாதித்து விட்டது என்பது.....வேறு கதை!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

ம் விடை சொல்ல முடியாத நிலைதான் இது கன பேருக்கு ................................ 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம் விடை சொல்ல முடியாத நிலைதான் இது கன பேருக்கு ................................ 

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலை நடைமுறைக்கு ஒத்துவருமா..?

புலம்பி ஒன்னும் ஆகப்போவது இல்லைதானே? :)

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது.  

 உடலில்  உயிர் உள்ளவரை ஓடும் இந்த வாழ்க்கை.  

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இந்த வலி இருக்கத்தான் செய்யும்.

அடுத்த தலைமுறைக்கு இதை சொன்னாலும் விழங்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

ஒரு உதாரணத்துக்கு....ஒரு எருது ...செக்கு ஒன்றைச் சுத்திச் சுத்தி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்!

ஊரெல்லாம் நல்லெண்ணைக்கு நல்ல தேவை இருந்தது! 

எருதுக்கும்...இரவும் ...பகலும் நல்ல வேலையும் இருந்தது!

திடீரென ..அந்த ஊருக்கு ஒரு மில்..வருகின்றது!

அங்கு நல்லெண்ணெய் மலிவான படியால்...எருதுக்கு... வேலை இல்லாது போய்விட...அந்த எருது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள், சுமே?

பழக்க தோஷத்தால்...கொஞ்ச நாளைக்கு...அந்தச் செக்கைச் சுற்றி வரும்! பின்னர்...வேறு ஏதாவது சூழலுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்!

அதைப் போலத் தான்....மனிதர்களும்!

நீங்கள் அந்நியள் ஆகவில்லை, சுமே!

ஐரோப்பா உங்களைத் தன்னவள் ஆக்கி விட்டது என்பது தான் ..உண்மை!

உங்கள் அனுபவம்...என்னையும் பாதித்து விட்டது என்பது.....வேறு கதை!

அப்படியும் இருக்குமோ ???

16 hours ago, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரியாக இருப்பினும் ஊரில் வாழ்ந்த காலத்திலும் அதிக காலம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தும் நான் மட்டுமல்ல பலரும் மாறவில்லை. அதனால்த்தான் அவர்களின் போக்கைக் கண்டு வேதனை. இன்னுமந்த நாட்டில் நின்மதியாக வாழும்நிலை வரவில்லை. அறுபது கடந்த சிலர்போய் இருக்கிறார்கள் தான். சிலர் மனைவி பிள்ளைகளை வெளிநாட்டில் விட்டுவிட்டு தாம் மட்டும் அங்கு போயிருக்கின்றனர். ஏதும் நடந்தால் மனைவி பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்னும்  எண்ணம் தான்.

1 hour ago, நிலாமதி said:

மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது.  

 உடலில்  உயிர் உள்ளவரை ஓடும் இந்த வாழ்க்கை.  

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாம் நாடோடிகள் தான் இன்னும்.

47 minutes ago, ஈழப்பிரியன் said:

எமக்கு இந்த வலி இருக்கத்தான் செய்யும்.

அடுத்த தலைமுறைக்கு இதை சொன்னாலும் விழங்காது.

எங்கிருக்கும் அடுத்த தலைமுறைக்கு ?????

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிதறி ஓடி பூமி பந்தில் வெவ்வேறு திசைகளில் வாழ்கிறோம். சிலர் மாறிவிட்டார்கள் . சிலர் முன்புபோல நட்புடன் பழகுகிறார்கள். எனது ஊர் உயர் பாதுகாப்பு வலயத்தின் அருகில் இருந்த ஊர். பெரும்பாலோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். சிலர் ஊர் கோவில்திருவிழாவின் போது வெவ்வேறுநாடுகளில் இருந்துவந்து கலந்து ஒன்றுகூடல் செய்கிறார்கள். கனடா ,இலண்டன் சென்றால் தாயகத்திலும் பார்க்க அதிகம் தெரிந்தவர்களைப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

,இதில புலம்பிறதுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன்.நான் அறிய சிலர் தாயகத்தை முற்றாக வெறுக்கிறார்கள்.சிலர் சுமே சொன்ன மாதிரி வயதானோர்
தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று வசதி வாய்பபை கொஞ்சம் இழந்தால் ஆயுளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இக் கவிதைக்குப் பதில் எழுத முடியாமல் மனம் கனத்துக் கிடக்கிறது. மதில்மேல் பூனைகளாய் நாம். இருமுறை சென்று வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் செக்குமாடுகளாய் மனம் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதைத் தடுக்க முடியவில்லை. கவிதைக்கு நன்றிகள் சுமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/03/2018 at 10:02 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

வலிகள்  மிகுந்த  வரிகள்

நன்றி  சுமே

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2018 at 5:13 AM, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

On 15/03/2018 at 7:02 PM, ராசவன்னியன் said:

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலை நடைமுறைக்கு ஒத்துவருமா..?

புலம்பி ஒன்னும் ஆகப்போவது இல்லைதானே? :)

உங்களது  முதல் கேள்விக்கும்

இரண்டாவது  முடிவுக்கும் நிறைய இடைவெளியும்  முரணும்  சகோதரா

எந்த  ஒரு   போராட்டமும் 

அதிக  காலமும்  அதிக சுமையையும்

தோல்வியையும் தரும்  போது 

இவை  தவிர்க்கமுடியாதன

அவற்றோடு தான் பயணிக்கணும்

தாயகத்துக்கு போகணும்

ஊருக்கு போகணும்  என்பது மட்டுமே  கனவாகக்கொண்டு

உழைத்தவர்கள் 

தாயகமுமற்று  இங்கும்  காலூன்றாது  வாழ்வது தான் நிஐம்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2018 at 7:50 AM, கந்தப்பு said:

எல்லோரும் சிதறி ஓடி பூமி பந்தில் வெவ்வேறு திசைகளில் வாழ்கிறோம். சிலர் மாறிவிட்டார்கள் . சிலர் முன்புபோல நட்புடன் பழகுகிறார்கள். எனது ஊர் உயர் பாதுகாப்பு வலயத்தின் அருகில் இருந்த ஊர். பெரும்பாலோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். சிலர் ஊர் கோவில்திருவிழாவின் போது வெவ்வேறுநாடுகளில் இருந்துவந்து கலந்து ஒன்றுகூடல் செய்கிறார்கள். கனடா ,இலண்டன் சென்றால் தாயகத்திலும் பார்க்க அதிகம் தெரிந்தவர்களைப் பார்க்கலாம்.

நீங்கள் சொல்வதும் கொஞ்சம் நடக்கிறதுதான். ஆனாலும் மனிதர்கள் அங்கு மாறிவிட்டார்கள்.

On 07/04/2018 at 3:01 PM, சுவைப்பிரியன் said:

,இதில புலம்பிறதுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன்.நான் அறிய சிலர் தாயகத்தை முற்றாக வெறுக்கிறார்கள்.சிலர் சுமே சொன்ன மாதிரி வயதானோர்
தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று வசதி வாய்பபை கொஞ்சம் இழந்தால் ஆயுளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

அங்கு போய் இருந்தால் சனங்களின் செயலே எமக்கு விரைவில் நோயை வரவழைத்துவிடும்.

On 07/04/2018 at 4:46 PM, விசுகு said:

வலிகள்  மிகுந்த  வரிகள்

நன்றி  சுமே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

On 07/04/2018 at 3:48 PM, Kavallur Kanmani said:

இக் கவிதைக்குப் பதில் எழுத முடியாமல் மனம் கனத்துக் கிடக்கிறது. மதில்மேல் பூனைகளாய் நாம். இருமுறை சென்று வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் செக்குமாடுகளாய் மனம் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதைத் தடுக்க முடியவில்லை. கவிதைக்கு நன்றிகள் சுமே.

அனுபவித்தவர்களுக்கு நன்றாக விளங்கும் அக்கா. அதுவும் பெண்களாலேயே அனைத்தையும் புரிந்துகொள்ள முடிவதனாலேயே அதிக வலி. அங்கள் எதையும் மேம்போக்காகப் பார்பதனால் அவர்களை எதுவும் பெரிதாகப் பாதிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அங்கு போய் இருந்தால் சனங்களின் செயலே எமக்கு விரைவில் நோயை வரவழைத்துவிடும்.

அது அவரவர் மன நிலமையைப் பொறுத்தது.நான் கடந்த கிழமை தான் அங்கிருந்து வந்தனான்.வருடத்திற்க்கு இரன்டு முறை போய் வருகிறேன்.திரும்பி வரும் போது மனது கசக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

அது அவரவர் மன நிலமையைப் பொறுத்தது.நான் கடந்த கிழமை தான் அங்கிருந்து வந்தனான்.வருடத்திற்க்கு இரன்டு முறை போய் வருகிறேன்.திரும்பி வரும் போது மனது கசக்கிறது.

என் கணவர் கூடத் தான் அங்கு சென்று வசிக்க முடியும் என்றுதான் கூறுகிறார். ஏன் எல்லாத்தையும் நீ பெரிதாக எண்ணுகிறாய். என்னைப்போல் எதையும் சட்டை செய்யாது இருந்தால் பிரச்சனை இல்லை. கவலையும் இல்லை என்கிறார். இது ஆண்கள் எல்லோருக்கும் பொருத்தமானது. ஆனால் பெண்களால் இப்படி இருக்க முடியாது சுவைப்பிரியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.