Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யுத்தம் முடிவடைந்த பின்னர் நம்பிக்கை ஒளி என்னும் நிறுவனம் மூலம் அறிமுகம் ஆனாள் அவள். பிரடேனியாப் பல்கலைக் கழகத்தில் BSE செய்வதாக அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அங்கிருப்பவர்களுக்கு பண உதவி மட்டும் செய்தால் போதாது. அவர்களை அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாரத்தில் ஒரு முறை அவளுடன் போன் செய்து கதைப்பேன்.  போரினால் தாயாருக்கு  புத்தி சிறிது பிசகிவிட்டதாகவும் தமையனுக்கு காலில் சிறு காயம் என்றும் தானும் தம்பியும் படித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினாள். தந்தையைப் பற்றிக் கேட்டபோது தந்தை போரின் பின் தம்முடன் இல்லை. தனியாக வாழ்கிறார் என்றும் கூறினாள்.

நீர் பிரடேனியா வந்துவிட்டால் யார் அம்மாவைப் பார்ப்பார்கள் என்றதற்கு அண்ணன் தான் பார்க்கிறார். அவருக்கும் கோழி வளர்ப்புக்கு உதவுகிறீர்களா?? என்றாள். சரி என்று அதற்கும் தேவையான பணத்தை அனுப்பினேன். கோழிக் குஞ்சுகள்  கூட்டுக்குள் நிற்பதுபோல் படம் ஒன்று அனுப்பினாள். மாதா மாதம் இலங்கைப் பணம் 6000 ரூபாய்கள் ஒரு ஆண்டாக அனுப்பிக்கொண்டு இருந்தேன். அடுத்த ஆண்டு கோழி வளர்ப்புப் பற்றிக் கேட்டதற்கு கோழிகள் பலவும்  நோயினால் செத்துவிட்டது  அன்ரி. அண்ணாவும் கால் ஏலாததில் கவனிக்கிறார் இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் தானே. அதுக்குப் பிறகு நான் வேலை செய்து குடும்பத்தைப் பார்ப்பேன் என்றும் உங்களை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் எனக்கு அம்மா போல் என்றெல்லாம் கூறி என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டாள்  அவள்.

இடையில் ஒருமுறை பணமனுப்ப வேண்டாம் என்றாள். ஏன் என்று கேட்டதற்கு இம்மாதம் ஸ்ரைக் நடக்குது. அதனால் வீட்டில் நிக்கிறன் என்றவுடன் நான் உருகித்தான் போனன். பரவாயில்லை நான் மூன்று வருடம் முடியும் மட்டும் அனுப்பிக்கொண்டுதான் இருப்பன் என்றுவிட்டு அம்மாதமும் பணத்தை அனுப்பினன். ஒரு வாரம் என்னால் போன் எடுக்கமுடியவில்லை. அவளிடமிருந்து போன். என்ன அன்ரி பிரச்சனை?? உங்கள் போன் வரவில்லை நான் தவிச்சுப் போனன் என்றவுடன் யாரோ பெத்த பிள்ளை என்னில் இத்தனை அன்பாக இருக்கே என்று நான் பூரித்துப் போனேன்.  

மூன்று வருடம் முடிவதற்கு ஒருமாதம் இருக்கும்போது அவளிடமிருந்து போன். "அன்ரி உங்களிட்டை ஒண்டு கேட்கப்போறன். உங்களை விட்டால் எனக்கு ஒருத்தரும் இல்லை.மாட்டன் என்று மாத்திரம் சொல்லிப் போடாதேங்கோ" என்ற பீடிகை. "சரி என்ன என்று நீர் சொன்னால் தானே தெரியும்" என்று நான்கூற, "மூன்று வருஷம் உதவி செய்து போட்டியள் இன்னும் ஒருவருடம் செய்தியள் எண்டால் நான் MA செய்யலாம். நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் நான் செய்யிறதும் விடுறதும் உங்கட கையில்தான்" என்றவுடன் எனக்கோ என்ன செய்வது என்ற தடுமாற்றம். சரி நாளை சொல்கிறேன் என்றுவிட்டு கணவருடன் கதைக்க கணவரோ மூண்டுவருசம் செய்தது காணும் பேசாமல் இரு என்றார்.

இரண்டு நாள் முடிய அவளுக்குத் தொலைபேசி எடுத்து MAசெய்யுங்கோ என்றதும் அவளிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியில் எனக்கு ஒரு நின்மதி ஏற்பட்டது. கணவர் உனக்கு விசர் என்று புறுபுறுத்ததை சட்டை செய்யாது நான் என்பாட்டுக்கு பணம் அனுப்பினேன். அந்த ஆண்டும் முடிய அப்பாடா இனி நின்மதி என்று எண்ண முதல் "தம்பி AL எடுக்கிறான் அன்ரி. அவனுக்கு டியூசனுக்கு கொஞ்சம் தந்து உதவமுடியுமா அன்ரி. எனக்கும் இன்னும் வேலை கிடைக்குதில்லை. எனக்கு என்ன செய்யிறது என்று தெரியேல்ல" என்று அவள் அழுதபோது எனக்கு வேறு வழியே இருக்கவில்லை.

அந்த ஆண்டு முழுதும் நான் பணமனுப்பினாலும் முன்னர்போல் போனில் உரையாடுவதை நிறுத்தியிருந்தேன். பணம் கிடைத்ததும் அவள்போனில் அல்லது மின்னஞ்சலில் கிடைத்ததாகப் பதில் போடுவாள். அவ்வளவே. ஆனாலும் அவள் விடாது  மின்னஞ்சல் அனுப்புவாள். ஏன் அன்ரி என்னுடன் கதைப்பதில்லை. என்மேல் வெறுப்பா என்றெல்லாம் எழுதுவாள். என் மனம் குற்ற உணர்வில் தவித்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்தியபடி எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்றுவிட்டு இருந்துவிடுவேன்.

அந்தன்று AL ரிசல்ட் வந்துவிட்டது என்று தெரியும். ஆனாலும் நான் போன் செய்து கேட்கவில்லை. அடுத்தநாள் காலை அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "தம்பி நல்லாப் பாஸ் பண்ணீட்டான் அன்டி, உங்களுக்குத்தான் தாங்க்ஸ் சொல்லோணும்" என்றவுடன் "எனக்கு எதுக்கு நன்றி எல்லாம். அவர் தானே படிச்சது" என்றேன் நான். "என்னைப் படிப்பிச்ச மாதிரி தம்பியையும் நீங்கள் தான் படிப்பிக்கவேணும்" என்றாள் கூலாக. எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி "உமக்கு நாலு வருடமும் உமது தம்பிக்கு ஒரு வருடமும் உதவி செய்திட்டன். இனி நீர் தான் உம்மட தம்பியைப் படிப்பிக்க வேணும்"  என்றவுடன் சன்னதம் வந்தவள் போல் "நீங்கள் உதவி செய்யாட்டி என்ர தம்பி படிக்காமல் வீட்டை இருக்கட்டும்" என்றாள் கிரீச்சிட்டபடி. எனக்கு ஒரு நிமிடம் ஏதேதோ உணர்வுகள் வந்து மோத "நல்லது" என்று மட்டும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன மனநிலை இது..?

கொடுத்துக்கொடுத்து பழக்கினால் இதுதான், நிலைமை. :unsure:

என்னிடமும் சில அனுபவங்கள் உண்டு.. காரியம் ஆகும்வரை மட்டுமே நினைக்கும் இயல்பான மனித குணம்.

உதவ கடன்பட்டீர்கள், முடிந்தது, இனி அவற்றை மறந்து விடுவது நல்லது. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கற்பனையெனில் நல்லது.... உண்மையென்றால் உங்களுக்கு தெரிந்தவரை அனுப்பி அவர்களது சேர்டிபிக்கேட்டுகளையும் வீட்டு நிலைமைகளையும் பார்த்து வர சொல்லுங்கள் நேரில்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கொண்டு ஏதாவது செய்ய விரும்பினால் விபரங்கள் அறிந்த பின் செய்வது நல்லது.இத்தனை ஆண்டுகளாக செய்த உதவி ஒரு நொடியில் நோகடிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டது ஆனால் அது சற்று வித்தியாசமானது. 'நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பதுபோல் உதவிபெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் குடும்பம் ஏமாற்றிப் பறிப்பதில் குறியாக இருப்பது தெரியவந்தது. இன்னொருபிள்ளை மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறியதால் பரிசுப் பொருட்களும், பணமும் கூடக் கிடைத்ததாம். எங்கள் உதவிகள் ஊரிலிருக்கும் எனது மைத்துணண் மூலமாகவே வழங்கப்பட்டடது. பரிசுபெற்ற அந்தப் பிள்ளையின் குடும்பம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மைத்துணனிடம் திரும்பச் செலுத்த முயன்ற செயல் மனதை நெகிழவைத்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் சிரிக்கிற சிமைலி போட்டிருக்கிறன்  வேற எதுவும் சொல்ல இல்லtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாத்திரம்   அறிந்துபிச்சை இடு... இவ்வளவு நாளும்படிச்ச   பிள்ளை   ஒரு வேலை எடுத்து  தம்பியாரைக் கவனிக்க வேண்டுமென்று தோன்றவில்லையே  . நன்றாக வாங்கி  சொகுசாக வாழ்ந்திருக்கிறா போல ..உண்மையில் பேராதெனியாவில் படித்தாளா தெரியவில்லை.  ஏதும் வகுப்பு அறிக்கை ..மறுமொழி ஏதும் சாடசி இருக்கா .. இப்போதாவது தெளிந்தீர்களே என்று ஆறுதல்படுங்கள்.   அவள் மட்டுமல்ல எத்தனயோ பேர்வழிகள் இருக்க கூடும். 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ராசவன்னியன் said:

என்ன மனநிலை இது..?

கொடுத்துக்கொடுத்து பழக்கினால் இதுதான், நிலைமை. :unsure:

என்னிடமும் சில அனுபவங்கள் உண்டு.. காரியம் ஆகும்வரை மட்டுமே நினைக்கும் இயல்பான மனித குணம்.

உதவ கடன்பட்டீர்கள், முடிந்தது, இனி அவற்றை மறந்து விடுவது நல்லது. :mellow:

நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான் எனினும் சில விடயங்களை மறப்பது கடினம் அண்ணா.

9 hours ago, suvy said:

இது கற்பனையெனில் நல்லது.... உண்மையென்றால் உங்களுக்கு தெரிந்தவரை அனுப்பி அவர்களது சேர்டிபிக்கேட்டுகளையும் வீட்டு நிலைமைகளையும் பார்த்து வர சொல்லுங்கள் நேரில்....! tw_blush:

நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணியிருந்தேன். கடைசி நேரத்தில் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். விசாரித்தபோது அவள் வேலை  செய்வதாகவும் மிகுதி நேரத்தில் ரியூசன் கொடுத்து உழைப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

மேற்கொண்டு ஏதாவது செய்ய விரும்பினால் விபரங்கள் அறிந்த பின் செய்வது நல்லது.இத்தனை ஆண்டுகளாக செய்த உதவி ஒரு நொடியில் நோகடிக்கப்பட்டுள்ளது.

என்னதான் விபரம் அறிந்தாலும் சில வேளைகளில் எல்லாமே மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Paanch said:

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டது ஆனால் அது சற்று வித்தியாசமானது. 'நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பதுபோல் உதவிபெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் குடும்பம் ஏமாற்றிப் பறிப்பதில் குறியாக இருப்பது தெரியவந்தது. இன்னொருபிள்ளை மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறியதால் பரிசுப் பொருட்களும், பணமும் கூடக் கிடைத்ததாம். எங்கள் உதவிகள் ஊரிலிருக்கும் எனது மைத்துணண் மூலமாகவே வழங்கப்பட்டடது. பரிசுபெற்ற அந்தப் பிள்ளையின் குடும்பம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மைத்துணனிடம் திரும்பச் செலுத்த முயன்ற செயல் மனதை நெகிழவைத்தது.  

எனக்கும் உப்பிடியான ஒரு அனுபவமும் இருக்கு. சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் சிரிக்கிற சிமைலி போட்டிருக்கிறன்  வேற எதுவும் சொல்ல இல்லtw_blush:

:unsure:

1 hour ago, Kavi arunasalam said:

ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடணும்

உண்மைதான்

1 hour ago, நிலாமதி said:

பாத்திரம்   அறிந்துபிச்சை இடு... இவ்வளவு நாளும்படிச்ச   பிள்ளை   ஒரு வேலை எடுத்து  தம்பியாரைக் கவனிக்க வேண்டுமென்று தோன்றவில்லையே  . நன்றாக வாங்கி  சொகுசாக வாழ்ந்திருக்கிறா போல ..உண்மையில் பேராதெனியாவில் படித்தாளா தெரியவில்லை.  ஏதும் வகுப்பு அறிக்கை ..மறுமொழி ஏதும் சாடசி இருக்கா .. இப்போதாவது தெளிந்தீர்களே என்று ஆறுதல்படுங்கள்.   அவள் மட்டுமல்ல எத்தனயோ பேர்வழிகள் இருக்க கூடும். 
 
பட்டமளிப்புப் படம் எல்லாம் அனுப்பினாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலின் பின் நிறைய பேருக்கு இதே நிலை தான்...நாமளும் தான் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளோம்..பெண் பிள்ளைகளும்;பெற்றோரின் தூண்டுதலினால் நிறைய எதிர் பார்ப்பவர்களுமேஅதிகம்..இப்போ ஒதுங்கி இருக்கிறேன்.வேணாம் என்று போச்சு அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொடுக்கின்ற நாங்களும் கொஞ்சம் யோசித்துதான் கொடுக்க வேணும் 

Posted

நிறையபேரின் மன ஆதங்கத்தை நன்றாக உங்கள் பாணியில் எழுதி இருக்கிறீகள் அக்கா.

சமுதாய முரண்களை கதைகளினூடு எழுதுவதில் உங்கள் பணி முக்கியமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/03/2018 at 11:45 PM, யாயினி said:

முள்ளிவாய்க்காலின் பின் நிறைய பேருக்கு இதே நிலை தான்...நாமளும் தான் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளோம்..பெண் பிள்ளைகளும்;பெற்றோரின் தூண்டுதலினால் நிறைய எதிர் பார்ப்பவர்களுமேஅதிகம்..இப்போ ஒதுங்கி இருக்கிறேன்.வேணாம் என்று போச்சு அக்கா.

இப்பிடியானவர்களினால் பலர் ஒதுங்கித்தான் இருக்கினம்.

On 16/03/2018 at 8:18 AM, putthan said:

கொடுக்கின்ற நாங்களும் கொஞ்சம் யோசித்துதான் கொடுக்க வேணும் 

ம் :mellow:

On 16/03/2018 at 8:52 AM, பகலவன் said:

நிறையபேரின் மன ஆதங்கத்தை நன்றாக உங்கள் பாணியில் எழுதி இருக்கிறீகள் அக்கா.

சமுதாய முரண்களை கதைகளினூடு எழுதுவதில் உங்கள் பணி முக்கியமானது. 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். ஆனால் ஒருபக்கம்தான் இந்தப் பதிவில் உள்ளது. 

ஏன் அந்தப் பிள்ளை உங்களை மிகவும் அன்புக்குரியவராகக் கருதியிருக்கலாம்தானே. தொடர்ந்தும் கடிதங்களை எழுதி உண்மையான அன்பைக் காட்டியமாதிரித்தான் தெரிகின்றது. ஆனால் எதையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பதால் வறுகத்தான் அப்படி பழகியமாதிரித் தோன்றியிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

"நீங்கள் உதவி செய்யாட்டி என்ர தம்பி படிக்காமல் வீட்டை இருக்கட்டும்" என்றாள் கிரீச்சிட்டபடி.

இதை நீங்கள் வாசிக்கேல்லையோ ??? இன்றும் வன்மைத்துடம் அவள் கூறிய வார்த்தைகள் என் காதில் ஒலித்தபடிதான் இருக்கு கிருபன். அவள் நல்லவளாக இருந்திருந்தால் எனது மின்னஞ்சலுக்கு தான் கதைத்ததுக்கு மன்னிப்புக் கேட்டிருப்பாள். இதுவரை அவளிடமிருந்து எதுவும் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

இல்லண்ணா நாங்கள் நினைத்து உதவுவது ஒரு விதமாக இருக்கும் அவர்களது எண்ணப்பாடுகள் வேறாக இருக்கும்.
பல தரப்பட்ட விடையங்களில் காலை வைச்சுட்டு எங்களைத் தான் நம்பியிருப்பதாக சற்றும் தயங்காமல் சொல்வார்கள்: இப்படி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்..அவர்களைப் பொறுத்த வரையில் காசு காய்க்கும் மரங்கள் நாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

"நீங்கள் உதவி செய்யாட்டி என்ர தம்பி படிக்காமல் வீட்டை இருக்கட்டும்" என்றாள் கிரீச்சிட்டபடி.

இதை நீங்கள் வாசிக்கேல்லையோ ??? இன்றும் வன்மைத்துடம் அவள் கூறிய வார்த்தைகள் என் காதில் ஒலித்தபடிதான் இருக்கு கிருபன். அவள் நல்லவளாக இருந்திருந்தால் எனது மின்னஞ்சலுக்கு தான் கதைத்ததுக்கு மன்னிப்புக் கேட்டிருப்பாள். இதுவரை அவளிடமிருந்து எதுவும் வரவில்லை.

வாசிக்காமல் விடவில்லை. ஆனால் அவை வன்மம் என்பது உங்களின் கருத்தாகத்தானே உள்ளது.

அப்பெண் நல்லவரா, இல்லையா என்பது முக்கியமில்லை. உதவி என்று கேட்பவர்கள் எல்லோரையும் ஏமாற்றக்கூடியவர்கள் என்று பொதுமைப்படுத்துவதில் உள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இது உதவக்கூடியவர்களையும் உதவாமல் தடுக்கும். உண்மையான ஆதரவு தேவையானவர்களும் உதவி கேட்டு வருவதையும் தடுக்கும். உதவிகளை எதிர்பார்க்காமல் குடும்பத்தோடு வாழ்வை முடித்தவர்களின் கதைகளும் உள்ளனதானே.

9 hours ago, யாயினி said:

இல்லண்ணா நாங்கள் நினைத்து உதவுவது ஒரு விதமாக இருக்கும் அவர்களது எண்ணப்பாடுகள் வேறாக இருக்கும்.
பல தரப்பட்ட விடையங்களில் காலை வைச்சுட்டு எங்களைத் தான் நம்பியிருப்பதாக சற்றும் தயங்காமல் சொல்வார்கள்: இப்படி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்..அவர்களைப் பொறுத்த வரையில் காசு காய்க்கும் மரங்கள் நாங்கள்!

யாயினி, சிலர் அப்படி இருப்பதால் எல்லோரையும் அப்படித்தான் என்று பொதுமைப்படுத்தக்கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் உதவி பெற்றிருக்கிறார்கள்.  சிலர் கிடைக்கும் உதவியில் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்.  சிலர் உதவியே கிடைக்காமல் மிகவும் வறுமைக்கோட்டின் கீழே வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/03/2018 at 7:43 AM, கிருபன் said:

வாசிக்காமல் விடவில்லை. ஆனால் அவை வன்மம் என்பது உங்களின் கருத்தாகத்தானே உள்ளது.

அப்பெண் நல்லவரா, இல்லையா என்பது முக்கியமில்லை. உதவி என்று கேட்பவர்கள் எல்லோரையும் ஏமாற்றக்கூடியவர்கள் என்று பொதுமைப்படுத்துவதில் உள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இது உதவக்கூடியவர்களையும் உதவாமல் தடுக்கும். உண்மையான ஆதரவு தேவையானவர்களும் உதவி கேட்டு வருவதையும் தடுக்கும். உதவிகளை எதிர்பார்க்காமல் குடும்பத்தோடு வாழ்வை முடித்தவர்களின் கதைகளும் உள்ளனதானே.

யாயினி, சிலர் அப்படி இருப்பதால் எல்லோரையும் அப்படித்தான் என்று பொதுமைப்படுத்தக்கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்.

நான் உதவி செய்தவர்களில் ஒரே ஒருவர் மட்டும் நல்லவர். மிகுதிப்பேர் எல்லோருமே எதோ ஒரு வகையில் என்னை ஏமாற்றினார்கள். ஏன் யாழ் இணையத்தில் அறிமுகமாகி கோழி வளர்ப்புக்கு உதவி செய்யுங்கோ கொஞ்சம் கொஞ்சமா ஒரு வருடம் முடியத் திரும்பத் தாறன் என்றவர் இரண்டு வருடம் முடிந்து இன்னும் கோழி வளர்க்கத் தொடங்கவில்லை. இதுதான் இன்றைய நிலைமை.

15 hours ago, கந்தப்பு said:

ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் உதவி பெற்றிருக்கிறார்கள்.  சிலர் கிடைக்கும் உதவியில் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்.  சிலர் உதவியே கிடைக்காமல் மிகவும் வறுமைக்கோட்டின் கீழே வாழ்கிறார்கள்.

அதுதான் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.