Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியின் நாடகத்தை கஜேந்திரகுமார் இயக்குகிறார்?

Featured Replies

விக்கியின் நாடகத்தை கஜேந்திரகுமார் இயக்குகிறார்?

chandrasegaran-wikki.jpg?resize=780%2C51

வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறாயின் அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்கினேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு மணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்டு இங்கே வந்து நாடகமாடுகிறார். அந்த நாடகத்திற்குப் பின் கஜேந்திரகுமார் செயற்படுகிறார். அதற்குள் சுமந்திரன், சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியோர் சித்து விளையாட்டு விளையாடுகிறார்கள் எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொருளாதார வளம் இல்லாத ஊவா மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் வட மாகாணம் 1.2 வீத பங்களிப்பையே வழங்குகிறது எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/92930/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

chandrasegaran-wikki.jpg?resize=780%2C51

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் மக்களுக்காக உழைத்து ஓடாகத் தேய்ந்து போயுள்ளார். இவர் முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தார்?? அதனையும் குளோபல்தமிழ்புதினம் வெளியிட்டிருக்கலாமே.!! 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

இதேவேளை, பொருளாதார வளம் இல்லாத ஊவா மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் வட மாகாணம் 1.2 வீத பங்களிப்பையே வழங்குகிறது.

இவரு பார்த்தாரு...

அய்யா , யோவ்... வெளிநாட்டு பணம்... 105 பில்லியன் ரூபாய்கள்... இலங்கையிலே அதிகளவு... யாழ்பாணம் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்று சொல்கிறார், பரதமர் ரணில்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறாயின் அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்கினேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அந்தாள் முதலமைச்சர் அகுமுன்னமே கட்டிக்குடுத்து பூட்டபிள்ளையும் கண்டுவிட்டுது .இவர் இப்பத்தான் நித்திரையால் எழும்பி நின்று சவுண்டு விடுறார் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு மணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்டு இங்கே வந்து நாடகமாடுகிறார். அந்த நாடகத்திற்குப் பின் கஜேந்திரகுமார் செயற்படுகிறார். அதற்குள் சுமந்திரன், சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியோர் சித்து விளையாட்டு விளையாடுகிறார்கள் எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் தமிழ்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாது.எல்லோரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணையுங்கோ.

இதைத் தான் சொல்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாதான்.அதுக்காக விக்கி அய்யா மாற்று இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

தமிழ்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாதான்.அதுக்காக விக்கி அய்யா மாற்று இல்லை.

இப்ப ஆர் திறமெண்டு சொல்ல வாறியள்?:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிற விழையாட்டு ஒன்றும் பத்தாம் பழய விழையாட்டல்ல. விடுதலைப் புலிகளை தேர்தலை பகிஸ்கரியுங்கள். மகிந்த வந்ததும் தீர்வு வரும் என மேற்குலகத்துக்கு எதிராக முடிவெடுக்க வைத்து  அழித்த சக்திகள் மீண்டும் விழையாடுகின்றன. மகிந்த வந்தால் இனப்பிரச்சினைக்கு தீவு வரும் என வாசுதேவ நாணயக்கார ஆடும் நாடகத்தை உண்மையென நம்புகிற தீவிரவாதிகள் தமிழரின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலமும் அதிதீவிர வாதம்பேசியும் மீண்டும் தேர்தல் பகிஸ்கரிப்பை கோருவதன் மூலமும் அல்லது ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன்மூலமும் தமிழர் வாக்கு வங்கியை முடக்கி மகிந்தவை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இது சர்வதேச ரீதியாக நம்மைத் தனிமைப்படுத்தி அரசியல் ரீதியான முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுக்கும்,  நிர்வாகம் செய்யத்தெரிது ஊழல் ராச்சியத்தை நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறவர், ------------  அல்லது வடமாகாணத்துக்குத் தந்த நிதியை  திருப்பித்தர  அரசை நான் சந்திக்கலாம் ஆனால் சம்பந்தர் தமிழர் அரசியல் ரீதியாக அரசைச் சந்தித்துப் பேசக்கூடாது என்பதுதான்  வேடிக்கை.   சம்பந்தி அரசியலா சம்பந்தர் அரசியலா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 

Edited by poet

8 hours ago, சுவைப்பிரியன் said:

தமிழ்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாதான்.அதுக்காக விக்கி அய்யா மாற்று இல்லை.

சீ வீ மேல் என்ன விமர்சனம் இருந்தாலும், இஸ்லாமிய மத வாதிகளிடன் இருந்து தமிழ் மக்களை காக்க கூடிய ஒரே சக்தி இவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்ப ஆர் திறமெண்டு சொல்ல வாறியள்?:rolleyes:

உதிலென்ன சந்தேகம்? எங்கள் யாழ்கள குமாரசாமி ஐயாவை விட திறமான யாரும் இருக்கினமோ? இல்லையே? ?

3 hours ago, Dash said:

சீ வீ மேல் என்ன விமர்சனம் இருந்தாலும், இஸ்லாமிய மத வாதிகளிடன் இருந்து தமிழ் மக்களை காக்க கூடிய ஒரே சக்தி இவர் தான்.

யார் தமிழ் மக்களை கிறீஸ்தவ மதவாதிகளிடம் இருந்து காப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Jude said:

யார் தமிழ் மக்களை கிறீஸ்தவ மதவாதிகளிடம் இருந்து காப்பது?

தமிழர் என்றால் அவர்கள் இந்துக்கள் என்று தற்போது பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சைவர்கள் என்று ஆராச்சியாளர்களின் முடிவும் காணப்படுகிறது. தமிழருக்கு ஆட்சியுரிமை பூரணமாகக் கிடைத்து......! சைவ சமயத்தவருக்கு அரச பதவிகளில் முதலிடம் என சலுகைகள் வருமானால்....! எல்லாமே மாறிவிடும். மதம்பற்றிய கவலை தமிழரிடம் மறைந்துவிடும். உங்கள் மூதாதையர்கள் சைவ சமயத்தவர்களாக இருந்திருந்தால் உங்கள் கவலையும் தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Jude said:

உதிலென்ன சந்தேகம்? எங்கள் யாழ்கள குமாரசாமி ஐயாவை விட திறமான யாரும் இருக்கினமோ? இல்லையே? ?

வரவர இவருக்கு என்னோடை சொறியாட்டில் பத்தியப்படுறேல்லை போலை கிடக்கு tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, poet said:

நடக்கிற விழையாட்டு ஒன்றும் பத்தாம் பழய விழையாட்டல்ல. விடுதலைப் புலிகளை தேர்தலை பகிஸ்கரியுங்கள். மகிந்த வந்ததும் தீர்வு வரும் என மேற்குலகத்துக்கு எதிராக முடிவெடுக்க வைத்து  அழித்த சக்திகள் மீண்டும் விழையாடுகின்றன. மகிந்த வந்தால் இனப்பிரச்சினைக்கு தீவு வரும் என வாசுதேவ நாணயக்கார ஆடும் நாடகத்தை உண்மையென நம்புகிற தீவிரவாதிகள் தமிழரின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலமும் அதிதீவிர வாதம்பேசியும் மீண்டும் தேர்தல் பகிஸ்கரிப்பை கோருவதன் மூலமும் அல்லது ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன்மூலமும் தமிழர் வாக்கு வங்கியை முடக்கி மகிந்தவை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இது சர்வதேச ரீதியாக நம்மைத் தனிமைப்படுத்தி அரசியல் ரீதியான முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுக்கும்,  நிர்வாகம் செய்யத்தெரிது ஊழல் ராச்சியத்தை நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறவர், ------------  அல்லது வடமாகாணத்துக்குத் தந்த நிதியை  திருப்பித்தர  அரசை நான் சந்திக்கலாம் ஆனால் சம்பந்தர் தமிழர் அரசியல் ரீதியாக அரசைச் சந்தித்துப் பேசக்கூடாது என்பதுதான்  வேடிக்கை.   சம்பந்தி அரசியலா சம்பந்தர் அரசியலா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 

மூடிய கதவுக்குள் மகிந்தவுடன்  சம்பந்தர் பேசியவை எவை என கூற முடியுமா??
நடேசன் அவர்களும் சிங்களவர் ஒருவரை மணந்தவர். அப்போ  அதனையும் சம்பந்தி அரசியல் என்கிறீர்களா அல்லது சி.வியில் உள்ள வெறுப்பு காரணமாக சம்பந்தி அரசியல் என நாமம் சூட்டுகிறீர்களா??
இப்போ ரனிலும் மகிந்தவும் வந்து என்ன பெரிய விடயங்களை செய்து விட்டார்கள்?? நாசூக்காக சிங்கள குடியேற்றத்தையும், புத்தர் சிலையை நிறுவுவதையும் தவிர??

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட ஆயுதபோராட்டம் தோற்றுபோன நிலையில் போராட்டத்தை பயன்படுத்தி போராடக்கூடிய பலர் புலம்பெயர்ந்துவிட்ட நிலையில் வயோதிபர்களையும் அச்சுறுத்தப்பட்ட இளைஜர்களையும் வைத்து களத்தில் விழுந்துகிடக்கிறவர்களையும் வைத்து வடகிழக்கை இணைத்து செயல்படும் சம்பந்தரை நான் புரிந்து கொள்கிறேன். வடக்கு மட்டுமல்ல கிழக்கையும் இணைக்கும் தலைவர் ஒரே தலைவர் என்பதுதேர்தல்களில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களை இணைத்து வைத்திருக்கும் வல்லமையும் மட்டும்தான் சர்வதேச சமூகத்தின் அரங்கில் தமிழர் தனித்தரப்பாக நீடிப்பதற்க்கு காரணம்.   இல்லாவிட்டால் சர்வதேச சமுகம் இனப்பிரச்சினை தொடர்பாக  அரசாங்கத்துடன் தான் பேசும் சூழல்.  புலம்பெயர்ந்த தமிழர்கள் சம்பந்தருக்கு பலமாக இல்லையென்பது கவலை. சர்வதேச அழுத்ததையும் போரில் இழந்த 80% காணிகள் தமிழரதும் எதிர்க்கட்சியினதும் தலைவர் என்கிற தனது சிறிய அரசியல் பலத்தையும் சர்வதேச உறவையும் பயன்படுத்தியே அவரால் போரில் இழந்த 80% நிலங்கள் மீட்க்கபட்டுள்ளன. இது வெற்றி. அரசியல் கைதிகளை மீட்க்க முடியவில்லை. இது தோல்வி. புலம்பெயர்ந்த தமிழர்களால் வடகிழக்கு போராளிகளுக்கு அவர்கள் அனாதைகளாக விட்டுசென்ற குடும்பங்களுக்கே ஒருவேளை கஞ்சிக்கு வழிசெய்ய பெரிய அளவில்  முன்வராதா சுழல் துயரமாக உள்ளது. அவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடற்ச்சியாக போராடக்கூட இயலவில்லை. இந்த சூழலில் உள்ளதையும் கெடுத்தான்களுக்கு ஆதரவாக செயல்படுவது தர்மமற்ற பாவச் செயலாகும்.  ’சம்பந்தி’ என்ற சொற்தொடர் தொடர்பாக உங்கள் எதிர்ப்பு நியாயமானது. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை போராட்டம் தோற்றதால் தான் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது. ஆகவே 30 வருட ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல அனைத்து அகிம்சை போராட்டங்களும் கூட தோல்வியில் தான் முடிந்து இருக்கின்றன.

Quote

அவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடற்ச்சியாக போராடக்கூட இயலவில்லை. 

சிறையில் இருந்து போராடிய கைதிகளையும் போராட விடாமல் அரசின் பொய் வாக்குறுதிகளுக்கு மயங்கி கூட்டமைப்பு அவர்களின் போராட்டத்தை கைவிடச் செய்தது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

தமிழர் என்றால் அவர்கள் இந்துக்கள் என்று தற்போது பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சைவர்கள் என்று ஆராச்சியாளர்களின் முடிவும் காணப்படுகிறது. தமிழருக்கு ஆட்சியுரிமை பூரணமாகக் கிடைத்து......! சைவ சமயத்தவருக்கு அரச பதவிகளில் முதலிடம் என சலுகைகள் வருமானால்....! எல்லாமே மாறிவிடும். மதம்பற்றிய கவலை தமிழரிடம் மறைந்துவிடும். உங்கள் மூதாதையர்கள் சைவ சமயத்தவர்களாக இருந்திருந்தால் உங்கள் கவலையும் தீர்ந்துவிடும்.

என்னுடைய மூதாதையர்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் - அவர்கள் காலத்தில் தான் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களும் உருவாக்கப்பட்டன. இலங்கை மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டு இங்கு மணிமேகலை வந்தது கூட அந்த காலத்தில் தான். யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள பௌத்த விகாரைகள் எனது மூதாதையர் வழிபட்ட இடங்களே அன்றி சிங்கள பௌத்தர்களின் விகாரைகள் அல்ல. உங்கள் மூததையர் அந்த காலத்தில் இருக்கவில்லையா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

பொயட்

தீர்க்கமாகப் பேசக்கூடிய அரசியல்வாதியாக சம்பந்தர் இருப்பாராகவிருந்தால் இரண்டாயிரத்துப்பதினாறுக்குள் தீர்வு வந்துவிடும் எனக்கூறி எங்களை முட்டாளாக்கமாட்டார். நாம் தமிழர்களது உரிமைகளுக்காகப்போராடுகிறோம் அவ்வுரிமை முழுமையானது தாயகம் தேசியம் சுயநிர்ணயம் இவைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் அப்படியான உரிமையை அடைந்திடும்வரைக்கும் நாம் தொடர்ந்து போராடத்தயாராக இருத்தல்வேண்டும் இடைக்காலத்தில் கிடைக்கும் எந்தவொரு அரைகுறைத்தீர்வுகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது அப்படி ஏற்றுக்கொண்டாலும் எமது மேற்கூறிய தீர்வைநோக்கி நாம் சென்றடையும்வரைக்கும் எமது போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கைவிடமுடியாது இதை மனதில்கொண்டு எம்முடன் பயணம் செய்ய வருபவர்கள் எம்முடன் வாருங்கள் ஆனால் எம்முடன் வருபவர்கள் எதுவித சலுகைகளியுமோ பதிவிகளையுமோ இடைக்காலத்தில் எதிபார்க்கமுடியாது சங்கடங்களையும் தற்காலிக தோல்விகளையுமே எதிர்பார்த்துவரலாம் என சம்பந்தன் கூறட்டும் அதன்பின்பு நாம் சம்பந்தனுடன் சேருகிறோம்  தலைவர்கள் எனக்கூறுபவரையும் அவருடன் ஒன்றிணையவைக்கிறோம் அதைவிடுத்துப்போய்காட்டக்கூடாது. 

சிங்களவன் ஏதாவது தனக்குத்தோன்றிய சலுகைகளையும் நிவாரணங்களையும் வேலைவாய்ப்புகளையும் அபிவிருத்திகளையும் காணிவிடுவிப்புகளையும் செய்தால் அதை தங்களது கிறடிற்ரில் சேர்க்கக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

என்னுடைய மூதாதையர்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் - அவர்கள் காலத்தில் தான் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களும் உருவாக்கப்பட்டன. இலங்கை மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டு இங்கு மணிமேகலை வந்தது கூட அந்த காலத்தில் தான். யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள பௌத்த விகாரைகள் எனது மூதாதையர் வழிபட்ட இடங்களே அன்றி சிங்கள பௌத்தர்களின் விகாரைகள் அல்ல. உங்கள் மூததையர் அந்த காலத்தில் இருக்கவில்லையா?

உங்கள் பரம்பரை ஒரு கடவுளைக் கும்பிடும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்!!

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் செய்யும் அரசியல் என்பது எமது விடுதலைப் போராட்டம் ஆயுதப் பரிணாமத்தை அடையுமுன்னரே இருந்ததுதான். அவரது அரசியலின் தோல்வியே போராட்டம் இன்னொரு வடிவத்தை எடுக்கும்படி ஆக்கியது. ஆனால், அதுகூட வெற்றியளிக்காமல்ப் போனது துரதிஷட்டம்தான்.

ஆக, ஏற்கனவே பரீட்சிக்கப்பட்டு, அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு அரசியல்ப் பொறிமுறையை சம்பந்தன் அவர்கள் மீண்டும் தூசிதட்டிக் கடை பரப்பியிருக்கிறார்.

அவர் செய்யும் அரசியல், ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு இனத்திற்கு உசிதமானதல்ல. தமிழ்நாட்டைப்போன்ற, நன்கு ஸ்தாபிக்கப்பட்ட, ஓரளவு அதிகாரங்களைக் கொண்ட அரசியல் சமூகத்துக்கு, தாம் செய்யும் அரசியலினால் சமூகத்திற்கு எந்தவித நண்மையும் இல்லாத, தீமையும் இல்லாத அரசியலுக்குப் (அரசியல்வாதிக்கு) பொருத்தமானது.

இது அவருக்கும் புரிவதில்லை, அவரின் அரசியலில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் சிலருக்கும் புரிவதில்லை.

இப்படியான சமூகத்தில் விக்கியின் புதிய அரசியல் வழி நாடகமாகத்தான் தெரியும்.

Edited by ragunathan
சொல் மாற்றம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

இப்ப என்ன ஐயா
சொல்ல வாறீர்கள்?
மீண்டும் ஆயுதப் போராட்டமா?

அஹிம்சை முறையில் போராடினோம்
வெற்றியளிக்கவில்லை என்று
சொல்லும் அளவுக்கு நாம்
அதாவது
சம்பந்தர், அமிர்தலிங்கம் போன்றவர்களின்
போராட்டம் ஒன்றும் தீவிரமாக
அமையவில்லை

சும்மா கோல்பேசில் உண்ணாவிரதம்
இருந்து அடி வாங்கியதும்
இரத்த திலகமிட்டு வீரவசனம் பேசியதும்
தமிழீழ கோரிக்கையை முன்வைத்து
தேர்தலில் வெல்வதும்
தீவிர அஹிம்சை போராட்டமாக
ஆகிவிடாது

மக்களின் பேரெழுச்சியுடன்
நிகழ்ந்திருக்க வேண்டிய
அஹிம்சை போராட்டம்
முன்னால் தமிழ் தலைவர்களால்
வெற்று உணர்ச்சி போராட்டமாக
மட்டுமே கையாளப்பட்டது
பின் இந்தியாவின்
ஆயுதப் பயிற்சி மூலம்
முறியடிக்கப்பட்டது

நாம் ஆயுதப் போராட்டத்தில்
ஈடுபட்ட அளவில் 10 சதவீதமேனும்
அஹிம்சை முறையில்
ஈடுபடவில்லை என்பதுதான்
உண்மை

எமக்கு இப்ப
தேவையாக இருப்பது
மக்களின் தன்னெழுச்சி
போராட்டங்களுக்கு தலமை ஏற்று
சரியான விதத்தில்
நடத்த வேண்டிய
ஒரு தலமை

அந்த தலைமை பண்பும்
ஆற்றலும்
விக்கிலூஸ்வரனிடமும் இல்லை
மகிந்த சுமந்திரன் பஜனை
கோஷ்டியிடமும் இல்லை
கஜேந்திர குபீர்
கும்பலிடமும் இல்லை

விஞ்ஞானம் வெற்றிடத்தை
விடுவதில்லை என்ற
நம்பிக்கை மட்டுமே இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

Quote

அந்த தலைமை பண்பும்
ஆற்றலும்
விக்கிலூஸ்வரனிடமும் இல்லை
மகிந்த சுமந்திரன் பஜனை
கோஷ்டியிடமும் இல்லை
கஜேந்திர குபீர்
கும்பலிடமும் இல்லை

சம்பந்தரை தந்திரமாக சொல்லாமல் விட்டு விட்டீர்கள் என நம்பலாமா??
சம்பந்தருக்கும் ஒரு பட்டப்பெயர் சொல்ல மனம் வரவில்லை போல.☺️

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டம் சாத்தியமில்லை என்று நிரூபிக்கப்பட்டதன் பின்னர்தானே சம்பந்தனின் அரசியல் இன்னும் எடுபடுகிறது? ஆகவே நான் இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியம் என்று சிறிதும் நம்பவில்லை.

நான் சொல்லவருவது, சிங்கள அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அரசின் ஏதோ ஒரு வடிவ நிர்வாகத்தில் இருந்துகொண்டு ஒருவரால் தமது மக்களுக்கு எதையுமே செய்யமுடியாது என்பதைத்தான்.

நீங்கள் எழுதியபடி மக்களின் எழுச்சியே இப்போது தேவையானது. முல்லைத்தீவில் இப்போது நடைபெறும் திட்டமிட்ட அரச முன்னெடுப்புடனான சிங்களக் குடியேற்றங்களுக்கெதிரான தமிழர்களின் சாத்வீகப் போராட்டம் என்பது தமிழர் தாயகத்தின் மற்றைய பகுதிகளிலும் நடைபெறுதல் வேண்டும்.

இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்தும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடைபெறுவதற்கு எமக்கொரு தலைமை வேண்டும். அது நிச்சயமாக சம்பந்தனாலோ அல்லது சுமந்திரனாலோ வழங்க முடியாது. போராளிக் குழுக்களின் தலைமைகள் களைத்து விட்டார்கள், அவர்களுக்கான மக்கள் ஆதரவென்பதும் வரையறைக்குற்பட்டதுதான்.

ஆகவே எமக்குமுன் உள்ள ஒரே தெரிவு, திரு விக்கினேஸ்வரன் அவர்கள் மட்டும்தான். ஆனால், அவர் அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டு இன்று இருக்கும் ஆசனத்திலிருந்து மக்களின் தன்னார்வ எழுச்சிக்கு ஒரு தலைமையை வழங்கமுடியாது.

சிங்கள அரசியலமைப்பினையும், அது கொடுக்கும் வெற்று ஆசன அதிகாரங்களையும் தூக்கியெறிந்துவிட்டு வரவேண்டும். ஆனால், அதை அவர் செய்வாரா என்பது அடுத்த கேள்வி.

அவரும் இல்லையென்றால், இப்போதைக்கு எமக்கு எவருமில்லை என்பதுதான் உண்மை.

இவை எல்லாவற்றையும் விட, புலம் பெயர்ந்து வாழும் எனக்கு தாயகத்தின் அரசியல் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லையென்பதும், அதனை தாயகத்தில் வாழும், சிங்கள ஆக்கிரமிப்பினை நாள்தோறும் ஏதோ ஒரு வடிவில் எதிர்கொள்ளும் மக்களே தீர்மானிக்கவேண்டும் என்பதும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.