Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

Featured Replies

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

sumanthiran-1.jpg

சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமனது.

மேலும், சிங்கள பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொண்டு, பிற மக்களின் சீர்திருத்தம் மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சிங்கள-பெரும்பான்மையினர/

  • தொடங்கியவர்

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியமில்லை - காலியில் சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ma.jpg

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது. 

எனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாகவே காணப்படும். புதிய அரசியலமைப்பினை முன்வைப்பதனூடாக பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். 

சம்ஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமில்லை. மாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர் என்றார்.

http://www.virakesari.lk/article/39488

’புதிய அரசமைப்பே தமிழர்களுக்கான தீர்வு’
 
image_de2052d9b9.jpgஇந்நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, புதிய அரசமைப்பின் ஊடாகவே உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில், பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று, காலியில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமஷ்டி முறைமையிலான தீர்வொன்றைக் கோரவில்லை என்றும் தனி நாடு என்ற எதிர்ப்பார்ப்பொன்று, தமிழ் மக்களிடம் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை, ஒரே பாதைக்குள் கொண்டுவர வேண்டுமாயின், அதற்கு புதிய அரசமைப்பொன்று அவசியமொன்றும் வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி, சிறுபான்மையின மக்களின் கருத்துகளுக்கு இடமளிக்காமை காரணமாகவே, யுத்தமொன்றை இந்த நாடு எதிர்நோக்க வேண்டியிருந்ததென்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டின் அமுலில் உள்ள மாகாண சபைகள் முறைமையில் சிறு மாற்றத்தைக் கொண்டுவருவதாயின், அதனை ஏற்றுக்கொள்ள, தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனரென்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-அரசமைப்பே-தமிழர்களுக்கான-தீர்வு/175-221062

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக்கொள்ளுவினம்.... பொறுத்துருங்கோவன்:grin:

  • கருத்துக்கள உறவுகள்

A1_FC5_C28-43_BC-4786-_BDC4-123_FB0_CE0_

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்... தமிழர்களுக்கு,  செய்த  அநீதிகள்  பட்டியல், மிகவும்  நீளமானது.
சமூக நீதி:   "முதலில் உன்னை திருத்திக் கொள்.  அதன் பின் தான்.... மற்றவர் மேல் குற்றம்  சாட்டலாம்"   

Edited by தமிழ் சிறி

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, hasan said:

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

அந்தாள் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லவர் இல்லை ஒளிநாடா பதிவில இருந்தாலும் ஓம் சொன்னன் அது நாடகத்துக்கு பழகிறத்துக்கு அப்படி சொன்னன் என்று மழுப்பும் இப்ப காலியில் நின்று சமஸ்ட்டி வேண்டாம் என்றும் நாளை வடமராட்சியில் வந்து நாங்கள் ஈழத்துக்கு ஒப்பான தீர்வுக்கு முயற்ச்ச்சி பண்றம் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாய் அமைதி காக்கணும் என்று பீலா விடும் அப்ப காலியில் நின்று சமஸ்ட்டியை காலி பண்ணியது அது சிங்களவருக்கு எதிரான ராஜதந்திரம் என்று புளுகும் .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல  தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.

18 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... தமிழர்களுக்கு,  செய்த  அநீதிகள்  பட்டியல், மிகவும்  நீளமானது.
சமூக நீதி:   "முதலில் உன்னை திருத்திக் கொள்.  அதன் பின் தான்.... மற்றவர் மேல் குற்றம்  சாட்டலாம்"   

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல  தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.

அடுத்தவர் பிரச்சனையை நாம் உணர முடியாது என்பது நிதர்சனம். ஏனெனில் மனிதன் அடிப்படையில் சுயநல விலங்கு.

எமக்கு வேறு வகையில் பிரச்னை ஒன்று வராவிடில், நாம் எமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றை விடப் போவதில்லை. இதுதான் இன்று சிங்களவர் நிலை.

போர்த்துக்கேயர் 138 வருடங்கள் ஆண்டார்கள். ஒல்லாந்தர் வருவார்கள் என்று நினைக்காததால், கோவிலை இடித்து, மாடுகளை கொன்று தின்று, எதிர்த்த மக்களை கொலை செய்து அட்டகாசம் செய்தார்கள். ஒல்லாந்தர் வந்தார்கள், அவர்கள் கிளம்ப வேண்டியதாயிற்று. 

ஆங்கிலேயர் வரும் வரை ஒல்லாந்தர் ஆட்டம். உலகின் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தினை ஆளும் தம்மை  அசைக்க முடியாது என்று ஆங்கிலேயர் நினைத்து இருந்தனர்.

ஒரு ஹிட்லர் வந்தார். இன்று அந்த நாட்டிலிலேயே ஸ்காட்லாந்து பிரிந்து போக விரும்புகிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக ஒரு விசயத்தினை கவனித்திருப்பீர்கள். தமிழ் மக்கள் துணிந்து போராட வருகிறார்கள்.
 
யுத்த காலத்தில், புலிகள் என்று கூறி அடக்கி ஒடுக்கிய சிங்களம், இப்போது செய்வது அறியாது திகைக்கிறது. 

முல்லைதீவில் தமிழ் மீனவர் படகுகளை எரித்ததன் மூலம் அவர்களை அடக்க முனைந்தார்கள். ஆனால் எரியும் போதே, உலகம் முளுவதும் செய்தி பரவியதால், எரித்தவர் மூவர் கைதாகியதுடன், ஏனையோர் கிளம்பிப் போக வேண்டியதாகி விட்டது. 

மக்களின் இந்த அகிம்சைப்  போராட்டமும், தீவின் மீதான சீன, இந்திய, மேற்கு ஆர்வமுமே எமக்கு ஒரு  முடிவை தரும்.   

Edited by Nathamuni

3 minutes ago, Nathamuni said:

மக்களின் இந்த அகிம்சைப்  போராட்டமும், தீவின் மீதான சீன, இந்திய, மேற்கு ஆர்வமுமே எமக்கு ஒரு  முடிவை தரும்.  

ஆ மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா

சீ சீ இந்தப் பழமும் புளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆ மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா

சீ சீ இந்தப் பழமும் புளிக்கும்.

ஓமோம்.

1958ல் முதல் போராட்டம் நடந்தபோது சிங்களவர்கள் தாக்கினர். அப்போது இலங்கைத் தீவுக்கு வெளியே தெரியவில்லை. ஆகவே சிங்களவர்கள் சந்தோசமாக தொடர்ந்தார்கள். 

இப்போது நிலைமை அப்படி இல்லை நண்பரே. ஆயுத போராடடம் வேண்டாமே என்று உபதேசம் செய்த நாடுகள்... கவனிக்கின்றன. அவர்களுக்கும் ஒரு கடப்பாடு உள்ளது.

சும்மா, முன்னர் மாதிரி மக்களை தாக்கி விரட்டிட முடியாது. இது தெரிந்து மக்கள் துணிவுடன் போராட வருகின்றனர்.

மகாவலி வலய குடியேட்ட முயல்வுக்கு எதிராக மக்கள் திரண்டது ஒரு சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

தமிழரின்  பட்டியலுக்காக  காத்திருக்கின்றோம்  -  சிங்களம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு தமிழர்களின் அரசியல் விருப்பு எல்லாத்தையும் அகிம்சை வழியில் புகட்ட முனைந்து தோற்றதன் வெளிப்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்பதை சம் சும்முக்கு இன்னும் புகட்டவில்லைப் போலும்.

தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது எப்படி என்பதைப் பற்றி மட்டும் சம் சும்முக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார் போல் தான் தெரிகிறது. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/30/2018 at 7:42 PM, நவீனன் said:

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

எருமைமாட்டிலை மழை பெய்ஞ்சமாதிரி திரியுற இனத்துக்கு இவர் பாடம் எடுக்கப்போறாராம்...tw_blush:

ஏலாக்கட்டத்திலை தான் துவக்கு தூக்க வெளிக்கிட்டது எண்டது ஒருத்தருக்கும் விளங்குதில்லையப்பா tw_worried:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

எருமைமாட்டிலை மழை பெய்ஞ்சமாதிரி திரியுற இனத்துக்கு இவர் பாடம் எடுக்கப்போறாராம்...tw_blush:

ஏலாக்கட்டத்திலை தான் துவக்கு தூக்க வெளிக்கிட்டது எண்டது ஒருத்தருக்கும் விளங்குதில்லையப்பா tw_worried:

துவக்கு தூக்கி கோவணத்தையும் பறிகொடுத்ததை அதுக்குள்ள மறந்துட்டிங்களா?
ஓ.எல். சோதினையில தோத்து போனாலும் ஏலாக்கட்டம் எண்டு மருந்து குடிக்கிறவையும் இருக்கினம் கண்டியளோ?
ஏலாக்கட்டம் எண்டு இனி என்ன எல்லாரும் மருந்து குடியுங்கோ எண்டா சொல்லுறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Jude said:

துவக்கு தூக்கி கோவணத்தையும் பறிகொடுத்ததை அதுக்குள்ள மறந்துட்டிங்களா?
ஓ.எல். சோதினையில தோத்து போனாலும் ஏலாக்கட்டம் எண்டு மருந்து குடிக்கிறவையும் இருக்கினம் கண்டியளோ?
ஏலாக்கட்டம் எண்டு இனி என்ன எல்லாரும் மருந்து குடியுங்கோ எண்டா சொல்லுறியள்?

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் இப்பவும் தினாவெட்டாய் ரோசம் மானம் இல்லாமல் திரியினம்....

அவையிட்டை போய் உந்த நாதாரிக்கேள்வியை கேளுங்கோ.

எப்பிடியும் பேப்பர் படிச்சுக்கொண்டுதான் பதில் சொல்லுவினம் எண்டது என்ரை நம்பிக்கை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அந்தாள் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லவர் இல்லை ஒளிநாடா பதிவில இருந்தாலும் ஓம் சொன்னன் அது நாடகத்துக்கு பழகிறத்துக்கு அப்படி சொன்னன் என்று மழுப்பும் இப்ப காலியில் நின்று சமஸ்ட்டி வேண்டாம் என்றும் நாளை வடமராட்சியில் வந்து நாங்கள் ஈழத்துக்கு ஒப்பான தீர்வுக்கு முயற்ச்ச்சி பண்றம் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாய் அமைதி காக்கணும் என்று பீலா விடும் அப்ப காலியில் நின்று சமஸ்ட்டியை காலி பண்ணியது அது சிங்களவருக்கு எதிரான ராஜதந்திரம் என்று புளுகும் .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

சொல்லி வாய் மூடுமுன் 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் இப்பவும் தினாவெட்டாய் ரோசம் மானம் இல்லாமல் திரியினம்....

அவையிட்டை போய் உந்த நாதாரிக்கேள்வியை கேளுங்கோ.

எப்பிடியும் பேப்பர் படிச்சுக்கொண்டுதான் பதில் சொல்லுவினம் எண்டது என்ரை நம்பிக்கை :cool:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

 .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

என்ன சொல்லுறியள்? இந்த ஆளை இல்லாமல் போக செய்த முயற்சி உங்களிட ஆலோசனையில.நடந்ததா? இவர் இல்லாவிட்டால். தீர்வு திட்டம் உருவாகியிடுமா?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Jude said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

நீங்கள் கேள்விப்படேல்லை...:(

.நாங்கள் மேடைக்கு மேடை இவையின்ரை அதிரடி அனல் பறக்கும் வார்த்தைகளை காதால் கேட்டிருக்கிறம்....

அதிலையும் தமிழீழ தலைநகர தலைவனின் கனல்சொல் அருவியின் அளவு/அழகு சொல்லி வேலையில்லை.

அந்த ஆள் ஆயுத போராட்டத்துக்கும் ஆதரவில்லை.....பனங்கொட்டை தாக்கிறதுக்கும் லாயக்கில்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, hasan said:

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

முதலில் தமிழில் எழுத பழகுங்கோ. பச்சை அடித்து விட்டு ஓடுபவர்களில்  நீங்கள் தான் முதல்வர்.ரவிராஜ் போன்றவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் உண்மையை உரக்க சொன்னதால் தான் சிங்கள இனவாதிகளால் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

Quote

எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று

ஓகோ அவர் ஒரு சிங்கள் புண்ணாக்கு என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

16 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

Mohan Sundaram முள்ளிவாய்க்காலில் எத்தனை வன்புணர்வு கொடூரக் கொலைகளை நடத்தியது இலங்கை இராணுவம்?

அத்தனையும் Channel 4 அம்பலப்படுத்தியதே ஐயா! எத்தனை இராணுவத்தினர் அதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.அதன் மீதான தங்களின் குற்றப்பத்திரிகை என்ன?

எப்பவுமே பந்துக்கு ஏற்ப அடிப்பதில்லை சிங்சர் என்பது தான் கொள்கை.அது தான் நிஜமும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு சிங்களவன் கும்மினது காணாது 
என்பதையே மேலே இருக்கும் சில கருத்த்துக்கள் 
சொல்கின்றன .........

இதுக்கு மேலேயும் எப்படி அடிப்பது என்பதுதான் புரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

இரத்தப்பொட்டு வைக்கும் போது நீங்கள் சின்ன ஒரு பன்றியாக இருந்த நினைவு. tw_tounge_xd:tw_tounge_xd:tw_tounge_xd:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.