Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபாதாசன் said:

கண்ட கண்ட தமிழின விரோதிகளை ஆதரிக்கும் உங்களை போன்றவர் அல்ல நான் . ஒரு பெரும் தலைவனை அன்பால் ஆராதிப்பவன் ... கஞ்சா விக்குகின்ற  பொறுக்கிகளை ஆதரிப்பவன் அல்ல

நன்றி! இதன் அர்த்தம் உங்களுக்கும் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு தரும் தகவல்களைக் கண்டறிய முடியவில்லை! காழ்ப்புணர்வு தவிர ஒன்றும் இல்லை! நன்றி எல்லாருக்கும் அறியத் தந்தமைக்கு!

2 hours ago, ragunathan said:

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

ரகு, பிரபாதசனிடமும் கேட்டேன், இப்ப உங்களிடம் கேட்கிறேன்! சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியான தடை எதுவும் போட்டதாக நான் அறியவில்லை. மத்திய அரசின் அமைச்சர்களூடாக ஏதும்செய்திருக்கலாம். இதுகூட ஊகம்தான். மற்றும்படி தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்மூலம் விக்கிமீது தொடர்ச்சியான அழுத்தங்களை கூட்டமைப்பின் தலைமை பிரயோகித்தது என்பதை நான் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ரகு போலவே நீங்களும் நடந்திருக்கலாம், வெளியே தெரியாமல்  என்று தான் சொல்கிறீர்கள்! ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே. இதற்கு சும் மட்டுமல்ல, மற்ற பா.உக்களும் ஒன்றும் செய்திருக்க இயலாது என நான் நம்புகிறேன்! விக்கியருக்கு இருந்த பிரச்சினை, தன் வால்கள் தன்னை ஆட்டுவிக்க அனுமதித்தது தான் என நினைக்கிறேன். கூரே, முன்னைய ஆளுனர்கள் போலன்றி நல்ல ஊக்கமாக இருந்த ஒருவர். சிங்கள ரத்தம் என்ற மோட்டுப் பேச்சுகளை புறம் தள்ளி விட்டு அவரோடு நல்லுறவைப் பேணி மாகாணத்தில் இருந்த முன்னாள் போராளிகளுக்காவது ஏதாவது செய்திருக்கலாம்.

மற்றபடி, பனிப்போர் எங்கு தான் இல்லை?  

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண அரசு ஆரம்பித்தபோது மகிந்த அரசாங்கத்தில் இருந்தார். அனுபவம் இல்லாத  அரச அதிகாரிகள் இருந்தார்கள். அத்துடன் உள்ளுக்குள் குடுமிபிடி சண்டை நடந்தது. இடைநடுவில் கலைக்கப்படாமல் இறுதிவரை “இயங்கியதற்கு” மாகாணசபை உறுப்பினருக்கான பென்சன் எடுக்கவேண்டும் என்ற சுயநலம்தான் உண்மையான காரணம்! எவர்தான் உண்மையான அபிவிருத்தியையோ, கைதிகளின் விடுதலையையோ, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதில் அக்கறை காட்டி முழுவேகமாக உழைத்தார்கள்?

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைவராக உள்ளார். சம்பந்தன் பேருக்குத்தான் தலைவராக இருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்கூட சுமந்திரனோடு நல்லுறவுடன் இல்லை. இவையெல்லாம் சொல்லுவது என்ன? சுமந்திரனும் விக்கியர் தலைதூக்க விரும்பவில்லை. அதுதான் இப்போது தமிழ் மக்கள் கூட்டணி என்று கட்சியை தோற்றுவிக்க காரணமானது. ஆனால் தமிழர்கள் உதிரிகளாகப் பிரிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே.

சொறி இலங்கை தடை போடவில்லை என்பது வெளித்தோற்றமே தவிர உண்மையான நிலை ஒருவ்ருஜ்ஜுமே தெரியாது.

எத்தனையோ விதத்தில் சொறி லங்கா நினைத்தால் தடுக்கமுடியும், ஒரேயொரு வார்த்தை 13ம் திருத்தத்தில், consultation.

அது தவிர, விக்கி அவர்கள் சட்டம் தெரிந்த படியால், ஆளுநரை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்து, ஆ கக்குறைந்தது ஒத்துழைக்காமல், அதே நேரத்தில் சட்ட வரம்பையும் மீறாமல், அதிகார பரவலாக்கலை நடைமுறைக்கு கொண்டுவர முயதர்சி செய்தார்.

அதனால், சொறி லங்காவாலும், விக்கியை கையாள முடியாமல் போய்விட்டது.

வேறு யாராயினும்,  சொறி லங்காவிற்க்கு ஆட, சொறி லங்கா அதை காட்டி பிரச்சனையே இல்லை என்று படம் விட்டிருக்கும். 

இது எல்லா அதிகார மட்டங்களிலும் நடைபெறுவது.

நரி அணில், விக்கியின் முதலிமைச்சர் நித்தியத்திற்கு கனடா செல்ல அனுமதித்து ஒத்துழைப்பது போல் நடித்து, அதை கிடப்பில் போட்டது உங்களுக்கு தெரியவில்லை. 

விக்கி அவர்கள் வந்ததும், செய்ததும் காலத்தால் செய்யப்படவேண்டிய சேவை. 

விக்கி அவர்கள் திறந்து வைத்த தமிழ் மரபுரிமை காப்பகம், பிக்கு குரேயால்   மூடப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.

  • தொடங்கியவர்
On 1/8/2019 at 6:43 PM, Rajesh said:

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

உண்மையான கருத்து!

விக்னேஸ்வரன் மீது காழ்புணர்ச்சியாலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவரது தலைமையில் மாகாணசபைகள் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள், போன்றவற்றை அறியாமையாலும் பலர் இங்கே தவறான கருத்துக்களை விதைக்கின்றனர்.  

ரணில், மைத்திரியுடன் இணைந்து கொண்டு விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் பல முட்டுக் கட்டைகளை சுமந்திரன், மாவை, சரவணபவன் போன்றவர்களும், ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து கொண்டு சத்தியலிங்கம் தவராசா போன்றவர்களும், சிவஞானம் போன்ற தமிழரசுக் கட்சியினரும், சில மதவெறிக்கும்பல்களும் செயற்பட்டத்தை தெரியாதது போல சிலர் இங்கு நடிக்கின்றனர். இவர்கள் எப்படிப்பட்ட நோக்கங்களையும், யாருடன் செயற்படுபவர்கள் என்பதுவும் பலரும் அறிந்துள்ளதே.  

ஜனநாயகம், ஊடகம், சமத்துவம் என்று அவற்றின் கருத்துக்களை அறியாமல் துள்ளிக் குதிப்பவர்கள் மிக மிக சிறுபிள்ளைத் தனமாக பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஒரு ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் முட்டையில் மயிர் புடுங்குவது போன்று குறைகளை கண்டு பிடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சுயரூபங்கள் தெளிவாக வெளிப்படுகின்றது. 

சுமந்திரன் எப்படி மாகாணசபையை இயங்க விடாமல் ரணிலின் உதவியுடன் செய்தது இந்த ஊர் அறிந்த விடயம் இதனை பட்டியல் போட தேவை இல்லை . இதனை தெரியாதவர்கள் விக்னேஸ்வரனை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணிலின் உதவியுடன் உடைத்தவர் இந்த விரோதி சுமந்திரன் .
வேறென்ன ஆதாரம் வேண்டும் .

தமிழ் மக்கள் எப்பவுமே இணையக்கூடாது என்பதில் சிங்களம் எப்பவுமே தெளிவாக உள்ளது , இப்ப இதனை நடத்தி முடித்தவர் தான் சுமந்திரன் என்கின்ற துரத்த வேண்டிய அரசியல்வாதி , இதனை ஆதரித்த சம்பந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் .

10 வருடத்தில் சுமந்திரன் செய்ததை விட இனி என்ன செயவர் . எங்களின் கோவணத்தை உருவாததுதான் மிச்சம் .
அடுத்த தமிழ் ஏமாளி பட்டியலில் சேரவேண்டியவர் . இப்ப உள்ள தலைவர்களில் விக்கினேஸ்வரன் மட்டுமே கொஞ்சமாவது செய்ய கூடியவர் .

இப்ப உள்ள மாகாணசபையால் என்னத்த செய்யமுடியும் எது முடியாது , ஆளுநரின் அதிகாரம் எப்படி 13 வது திருத்தத்தில் உள்ளது என்பதை தெளிவாக வெளிக்கொணர்த்தவர் . இதட்கு முதலமைச்சர் நிதியத்தை எவ்வாறு ஆளுநர் தடுத்தார் என்பது எல்லருக்கும் தெரியும் .

1987 சுதுமலையில் வைத்து தேசிய தலைவர் இதனை மக்கள் முன் தெரிவித்து இருந்தார் . அதனை விக்னேஸ்வரன் என்ற சட்ட மேதை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்தார் செயலில் .

சுமந்திரன் என்கின்ற ******* *******. ஆதரிப்பது எங்களுக்கு நாம் வைக்கும் பொறி .

Edited by நியானி
தணிக்கை

விக்னேஸ்வரனை பதவியில் இருந்து வெளியேற்ற சுமந்திரன் வெளிப்படையவே செயல்பட்டார் , அது ஏன் என்று கூற முடியுமா ? இதன் பின்னணி ரணில் மைத்திரி . அவர்களை அனுசரித்து போகாத கொள்கை கொண்டதால் .
இப்ப உள்ள தலைமைகளில் சிங்களத்தை வெளிப்படையாகவே எதிர்ப்பது விக்னேசவ்ரன் , கஜேந்திரகுமார் .
அதனால் சிங்களம் இவர்களை எதிர்க்கின்றது .

சிங்களத்துடன் ஒட்டி உறவாடி என்னத்த சாதிக்க முடியும் என்பதை எங்கள் வரலாறு சொல்லும் . இனியும் இது முடியும் என்றால் அதனை விட முட்டாள் வேறு யார் . 

சுமந்திரன் சொன்ன அரசியல் திருத்தம் பாராளுமன்த்தில் நிறைவேற்ற முடியாது , மஹிந்த , மக்கள் முன்னணி இதனை தெளிவாக சொல்லி விடடார்கள் . வேறென்ன வேண்டும் சுமந்திரனின் திறமையை புகழ்வதட்கு .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 
ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

On 1/8/2019 at 7:54 PM, நிழலி said:

பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த காலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் அரச ரீதியாக ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கிய சட்ட அந்தஸ்துடைய ஆவணங்களே தலையாய காரணம். இந்த விடயம் நேரடியாக அவரது ஆட்சிப் பகுதியில் நடந்ததால், அவர் சந்தர்ப்பத்தை தவற விடாமல் காரியத்தை சாதித்துக் கொண்டார். அது இல்லை என்றால் மற்ற முயற்சிகளும் பலதை போல  வெறும் பூச்சியங்கள் ஆகியிருக்கும். அந்த பூச்சியங்களின் முன்னர் விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய இலக்கம் தான் பெறுமதியை வலுவுடையதாகியிருந்தது.

அந்தப் பூச்சியங்கள் இல்லையென்றால் விக்னேஸ்வரன் அவர்களின் இலக்கத்தின் பெறுமதி வெகுவாக குறைந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே இரண்டும் இணைந்தால் தான் தேவையான பெறுமதி கிடைக்கும். அதைவிட்டு பிரித்துப் பார்த்து கதைப்பது அறிவுடைமை இல்லை.

சம்மந்தன், சுமந்திரன் பூச்சியத்தையும் தாண்டி மறை பெறுமானங்கள். இருப்பதையும் இல்லது செய்வது தான் அவர்கள் இதுவரை சாதித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

 நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

கடந்த பத்து வருடங்களில் சம் சும்மில்  என்ன செயல் திறனை கண்டீர்கள் அவர்களை ஆதரிக்க?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

முன்னாள் நிற்கும் எதிரியைவிட கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை சமாளிப்பது மிகக்கடினம் என்று உங்களுக்கு தெரியாதா? கூடவே அவர் கூட்டமைப்பு தலைவரின் வலது கை  அத்துடன் கூத்தமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும்கூட. சொல்லவா வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  • தொடங்கியவர்
On 1/9/2019 at 11:38 PM, விசுகு said:

நான்

மாவையா  விக்கியரா என்ற  நிலை  வந்தபோது

விக்கியரையே  விரும்பினேன்

அவரிடம்  எதிர்பார்த்தது

வடகிழக்கு  அபிவிருத்தி

தாயகம்  புலத்துக்கிடையிலான ஒன்றிணைந்த பலத்தை கட்டியெழுப்புதல்

சிறீலங்காவுடன் மோதல் தவிர்ப்பு..

இதைத்தவிர மாவீரருக்கான அஞ்சலியைக்கூட நான்  அவரிடம்  எதிர்பார்க்கவில்லை

ஆனால் .......????

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

ஒவொரு மாகாண சபையையும், சொறி இலங்கை தான் விரும்பியவாறு நடத்தலாம். 

நியாயமான முறையில் நடத்துவதான தோற்றப்பாட்டுடன் முடக்கலாம்.

கிழக்கு  முஸ்லிம்களின் அல்லது பிள்ளையானின் காலத்தில் நன்றாக நடத்தப்பட்டததிற்கான காரணம்,

சொறி இலங்கை கிழக்கில் முஸ்லீம் பெரும்பான்மையை ஏற்றப்படுத்த  ஏதுவாக இருப்பதால், அதாவது இயற்கையாக முஸ்லீம் சனத்தொகை வளரும்வந்து என்ற தோற்றப்பாடுடன்.

பிள்ளையான் தனிப்பட்ட அபிவிருத்தியை சொறி லங்கா கொடுத்தது. அப்படி இல்லாவிட்டாலும் விக்கியை மாதிரி ஒரு போதுமே பிள்ளையானால் செயற்றப்படமுடியது.

சொறி லங்காவை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா அந்தந்த சொறி லங்கா  அரசாங்களின்  காலத்தில் சட்டவிலக்கு அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை. அதுவும் அரசாங்கம் விரும்பும் வரைக்கும்.

சொறி லங்கா அரசை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா எப்போதுமே பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை.

அதனால், சொறி லங்கா அரசாங்களின் விருப்பமே  பிள்ளையான், கருணா வின் தலைவிதி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

நன்றி  சகோ

இதுக்கு மேல  நான் உங்களுக்கு  எழுதினால் .......???

நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, போல் said:

மாவையோ அல்லது டக்ளசோ முதலமைச்சராய் வந்து இப்படித் தான் சீவி மாதிரி டம்மியாய் இருந்திட்டுப் போவினம்...தப்பித் தவறி இதே யாழில் வந்து அவர்கள் அது செய்யவில்லை,இது செய்யவில்லை என்று புலம்பித் தள்ளாதீங்கோ சரியா?...அவர்களையும் அரசு இப்படித் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்…

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖
 
12 hours ago, MEERA said:

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 
  • தொடங்கியவர்
3 hours ago, ரதி said:

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 
2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

நான் அரசியலில் சுத்த சூனியமாய் இருந்திட்டுப் போறேன்...நீங்கள் கணக்க குனியாதீங்கோ...பிறகு எழும்பேலாமல் போய் விடும்...சீ விக்கு ஒரு நியாயம் சுமத்திரனுக்கு ஒரு நியாயம் 
 
19 hours ago, MEERA said:

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

இப்போதெல்லாம் , இந்த இணையத்தமிழ் வந்த பின் .. எம்மவர்கள் தமிழில் புகுந்து விளையாடுகின்றனர், ... வினைத்திறன், அது இது என்று!!!... அந்த மனுசன் வந்து இருந்து நாலு வருசம் இல்லை! அதுக்குள் சம்சும் பாட்டி, அவன் இவனை கொண்டு அந்தாளை போட்டு திப்பிலி அடித்தது உலகே அறியும்!!! 

முதலில், நீங்கள் வெள்ளைக்காரன் வெளிக்கிட்டு இன்று வரை 40 வருசம், 50 வருசம், 60 வருடம்??? செய்தவைகளை பட்டியல் இடுங்கள், அதன் பின் அந்த விக்கியரின் வினைத்திறனை விவாதிப்போம்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

அக்கா, 2010 இல் போன போது நகராட்சி வசமிருந்தது, 2012 இல் சிங்களவரின் அடாத்து அதிகரித்திருந்தது (பிக்கு ஒருவர் ஒலி பெரிக்கியினூடாக ஓதிக் கொண்டிருந்தார்) 2014 இல் முழுதும் அவர்களிடம்.

முதலமைச்சர் சந்திரகாந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.